Hindu Samayam News

  • Home
  • Hindu Samayam News

Hindu Samayam News இந்து சமயம்
(1)

22/01/2024
12/05/2023
09/05/2023

உங்க விகடன்ல கிறிஸ்துவ மதத்துல சேரச் சொல்லி வாரா வாரம் ஒரு விளம்பரம் வரதே, நீ அதை பாத்திருக்கியோ?”

(எழுத்தாளர் சாவியைப் பார்த்து -பெரியவா)

காஞ்சி மாமுனிவர் அப்போது இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார்.

சாவியும், மணியனும் பெரியாரைப் பேட்டி கண்டு விகடனில் எழுதுவதற்காக திருச்சிக்குப் போயிருந்தார்கள். அங்கே பெரியார் மாளிகையில் பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து இளையாத்தங்குடிக்குப் போனார்கள். இவர்கள் போன போது ஸ்வாமிகள் ஒரு மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

சாவியைக் கண்டதும், ‘நேரே மெட்ராசிலிருந்து வரயா ? இல்ல வழில எங்கேயாவது தங்கிட்டு வரயா ?’ என்று கேட்டார்.

‘திருச்சியில் பெரியாரைச் சந்தித்து விட்டு வருகிறோம்’ என்ற உண்மையைச் சொல்ல அப்போது சாவிக்கு தைரியம் வரவில்லை. அதனால், ‘மெட்ராஸ்லேர்ந்து வரோம்’ என்று பொய்யும் சொல்லாமல் மெய்யும் சொல்லாமல் பொதுவாகச் சொல்லி விட்டார்.

ஸ்வாமிகள் அமர்ந்திருந்த அந்தச் சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது. சற்று தூரத்தில் யாரோ ஒரு வயசான வெள்ளைக்கார பெண்மணி ஒருத்தி உட்கார்ந்திருந்தார். அந்தப் பெண்மணி அங்கிருந்தபடியே மஹா பெரியவரைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘நீ என்ன சொன்னாலும் வாசன் கேப்பாராமே’ என்று திடீரென ஸ்வாமிகள் பேச்சை ஆரம்பித்தார்.

‘பெரியவா நினைக்கிற மாதிரி அப்படியெல்லாம் இல்லை. பெரியவா ஏதாவது சொல்லச் சொன்னா அதை அப்படியே வாசன் அவர்களிடம் சொல்லத் தயாராக இருக்கிறேன்’ என்றார் சாவி.

‘உங்க விகடன்ல கிறிஸ்துவ மதத்துல சேரச் சொல்லி வாரா வாரம் ஒரு விளம்பரம் வரதே, நீ அதை பாத்திருக்கியோ?’

‘பாத்திருக்கேன்’

‘அந்த விளம்பரத்தை நிறுத்திடணும்னு ஆனந்த விகடன்லேர்ந்து வரவா கிட்டேயெல்லாம் சொல்லிப் பார்த்துட்டேன். அவா எல்லாரும் உன் பேரைச் சொல்லி சாவி சொன்னா வாசன் கேட்பார்னு சொல்றா. அதனால நீ அதை வாசன் கிட்டச் சொல்லி உடனே நிறுத்திடு’ என்றார்.

‘சரி.. சொல்கிறேன்’ என்று சாவி உடனே பதில் சொல்லி விடவில்லை. பெரியவரிடம் கொஞ்சம் வாதாடிப் பார்த்தார்.

‘இந்து மதம் கடல் போன்றது. பெரும் சிறப்புகளை உள்ளடக்கியது. அது அவ்வளவு எளிதில் அழிந்து விடக் கூடியதல்ல. ஒரு வேளை இந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொஞ்சம் பேர் கிறிஸ்துவ மதத்துக்குப் போய் விடுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் ஹிந்து மதத்துக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடப் போவதில்லை.அது அத்தனை பலஹீனமான மதமும் அல்ல’ என்று ஒரு துணிச்சலோடு சொல்லி விட்டார் சாவி.

சாவி இப்படிப் பேசுவதைக் கேட்டு பெரியவர் கோபம் அடையவில்லை.

”அப்படியா சொல்கிறாய் நீ ? இத பார், 1920-லிருந்து எவ்வளவு பேர் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மாறியிருக்கிறார்கள்’ என்ற புள்ளி விவரங்களை எடுத்துச் சொல்லி ‘வர வர இந்து மதத்திலிருந்து வேறு மதம் மாறுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. இப்படியே போனால் ‘எறும்பு ஊறக் கல்லும் தேயும்‘ என்கிற மாதிரி ஆயிடும்” என்றார் மஹா பெரியவர்.

சிறிது நேரம் மௌனம்.

பிறகு தொடர்ந்தார் மஹா பெரியவர்…

“ஆர்தர் கொய்ஸ்ட்லர்னு ஒரு கம்யூனிஸ்ட் ரைட்டர் என்னை வந்து சந்திச்சான். பல கேள்விகள் கேட்டான். கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்யும் சர்ச்சுகளில் எப்பவும் அமைதி நிலவுகிறது. ஆனா உங்க கோயில்களில் எப்பவும் வாத்தியங்களின் சத்தம், குழந்தைகளின் கூச்சல், மக்களின் இரைச்சல் என்று ஒரே சத்தமாயிருக்கிறதே. பிரார்த்தனை செய்யும் இடம் அமைதியா இருக்க வேண்டாமா ?” என்று என்னைக் கேட்டான்.

“சர்ச்சுகள் நீங்க பிரார்த்தனை செய்கிற இடமாக இருப்பதால் அங்கே அமைதி காக்கப்படுகிறது. இந்துக்கள் பிரார்த்தனை செய்வது கோயில்களில் அல்ல. ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிற இடமாகத்தான் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்று ஒரு அறை இருக்கும். அங்கேதான் பிரார்த்தனை பண்ணுவோம். அதை விட்டால் நதிக் கரையில் பிரார்த்தனை செய்வோம். கோயிலுக்குப் போய் நைவேத்தியங்கள் வைத்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்துவோம். விவசாயிகள் அறுவடை முடிந்ததும் பொங்கல் படைத்து ஆண்டவனுக்கு ‘நன்றி’ செலுத்துவதற்காகவே பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். ராஜாக்களுக்குக் கப்பம் கட்டி நன்றி செலுத்துவது போல் ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதனால் இந்துக்கள் நன்றி செலுத்துகிற இடம் சப்தமாகத்தான் இருக்கும். மேள தாளங்களுடன் மகிழ்ச்சி பொங்கும்” என்று நான் சொன்ன பதிலில் அவன் ரொம்ப ‘கன்வின்ஸ்’ ஆயிட்டான்.

“என்னைப் பார்க்கும் போது ஏசுநாதரைப் பார்ப்பது போல் இருப்பதாக (I saw Christ in him) அவன் எழுதிய ‘Lotus and Wheel‘ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளான். உனக்கு டாக்டர் ராகவன் தெரியுமோல்லியோ? மியூசிக் அகாடமி செக்ரட்டரி, அவனிடம் அந்தப் புத்தகத்தோட காப்பி இருக்கு. நீ மெட்ராஸ் போனதும் அதை வாங்கிப் படி” என்று கூறிய பெரியவர் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. “அதோ அங்கே உட்கார்ந்திருக்கிறாளே அந்தப் பெண்மணி, அந்த ரைட்டர் – அவர்கள் இரண்டு பேருமே கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் பெண்மணியும் என்னிடம் ஏசுநாதரைக் காண்பதாகச் சொல்கிறாள். ஆனா இந்து மதத்தைச் சேர்ந்த நாம் இந்துக்களை கிறிஸ்துவ மதத்தில் சேரச் சொல்லி விளம்பரப்படுத்தறோம், இது சரியா ?” என்று கேட்டார்.

இதையெல்லாம் கேட்கக் கேட்க சாவிக்குப் பெரியவர் பேச்சில் இருந்த நியாயம் விளங்கியது. அவரை வணங்கி ஆசி பெற்று, “நான் வாசன் அவர்களிடம் உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்” என்று மட்டும் சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டார்.

சாவி சென்னை திரும்பியதும் முதலில் இது பற்றி வாசன் அவர்களைப் பார்த்துப் பேசத் தான் எண்ணியிருந்தார். ஆனாலும் பாலு அவர்களிடமே முதலில் தெரிவித்து அவர் அபிப்பிராயம் அறிந்து கொள்வது தான் முறை என்று தீர்மானித்து பாலு அவர்களிடம் விஷயத்தை எடுத்துச் சொன்னார்.

“இது ஒரு விளம்பரம்தான். நம்ம கருத்து இல்லையே… இதெல்லாம் வியாபாரம்… இது காஞ்சிப் பெரியவருக்கு நன்றாக விளங்குமே!” என்றார் பாலு.

“அதென்னவோ, எப்படியானாலும் விளம்பரத்தை நிறுத்தி விடுங்கள். பெரியவர் வார்த்தைக்கு நாம் மதிப்புத் தர வேண்டியது அவசியம்” என்றார் சாவி.

சாவி நீண்ட நேரம் விவாதித்துப் பார்த்தார். பாலு அவர்கள் சம்மதிக்கவில்லை.

சாவியும் விடாக் கண்டனாயிருந்து மேலும் மேலும் வாதாடிக் கொண்டிருந்தார். கடைசியில் பாலு சற்று நேரம் யோசித்து விட்டு விளம்பரத்துறை மேலாளரை அழைத்து அந்த விளம்பரம் பற்றிய விவரங்களைத் தெளிவாக விசாரித்துத் தெரிந்து கொண்டார்.

‘ஒரு வருட ஒப்பந்தம். இன்னும் ஆறு வாரம் பாக்கியிருக்கிறது’ என்றார் மேலாளர்.

‘பரவாயில்லை. இந்த வாரமே அதை நிறுத்தி விடுங்கள். அந்த விளம்பரம் தந்தவர்களுக்கு கன்வின்சிங்கா ஒரு லெட்டர் எழுதி விடுங்கள்’ என்று சொல்லி அனுப்பி விட்டார். சாவி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

‘இப்போது திருப்திதானே ?’ என்று கேட்டார் பாலு.

‘ரொம்ப ரொம்ப…’ என்று சாவி நன்றி உணர்வோடு அவரைப் பார்த்தார்.

Jaya Jaya Shankara hare hare Shankara

நன்றி-பால ஹனுமான்.

02/05/2023
31/03/2023

pic of the day ❤

18/03/2023

நடிகை காஞ்சனாவும்..சென்னை TTD பத்மாவதி தாயாரும்.. பல கோடி நிலத்தை தானம் அளித்தது இதற்குத்தான்!

சென்னையில் நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில்,
ஜி.என்.செட்டி சாலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற காஞ்சனா திருப்பதி ஏழுமலையான் பக்தையாக மாறி தனது பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை தானமாக அளித்துள்ளார். அவர் அளித்த நிலத்தில்தான் இன்று திருச்சானூரில் இருந்து பத்மாவதி தாயார் சென்னைக்கு எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பத்மாவதி தாயாருக்கும் நடிகை காஞ்சனாவிற்கும் என்ன தொடர்பு..அவர் தனது நிலத்தை தானமாக அளிக்க காரணம் என்ன என்று பார்க்கலாம்.

விமானப் பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் துவங்கிய வசுந்தரா தேவியை தனது 'காதலிக்க நேரமில்லை' படத்தின் மூலம் 1964 ம் ஆண்டு காஞ்சனா என்று பெயர்சூட்டி அவரது வாழ்க்கையில் ஒளியேற்றினார் இயக்குனர் ஸ்ரீதர்.

அவரது பெயர் மாற்றத்திற்குக் காரணம் நடிகை வைஜயந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக்கொண்டு இருந்ததால் காஞ்சனா என்று இயக்குநர் ஸ்ரீதர் மாற்றினார். 1964ஆம் ஆண்டில் அந்த படம் வெளியான பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் படங்கள் குவிந்தன.

நடிகை காஞ்சனா
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் 60-70 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை காஞ்சனா. 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தார். சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தில் பாட்டியாக நடித்திருந்தார் காஞ்சனா.

காஞ்சனாவின் சொத்துக்கள் :

அவர் சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயநகரில் சொத்துக்கள் வாங்கினார். அந்த சொத்துக்களை காஞ்சனாவின் உறவினர்கள் அபகரித்துக் கொண்டனர். அவற்றை மீட்க நீதிமன்றம் வழக்கு என்று பெற்றோர்களுடன் அலைந்தேன். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டார். ஆண்டவன் அருளால் வழக்கில் வென்று சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு கிடைக்கவே, ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு எழுதி வைத்தார்.

திருமணமே செய்யவில்லை :

படத்தில் பிஸியாக நடித்து சம்பாதித்த காரணத்தால் எனக்கு திருமணம் செய்துவைப்பதைக்கூட பெற்றோர்கள் மறந்துவிட்டனர். நானும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துவிட்டேன். இப்போது எனது தங்கை ஆதரவில் இருக்கிறேன். நான் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனது தங்கை நன்றாக கவனித்துக்கொள்கிறார். இப்போது ஆன்மிக ஈடுபாடுகளில் தீவிரமாக இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து ஏழுமலையானை தியானம் செய்வதும், யோகா பயிற்சிகளில் ஈடுபடுவதுமாக எனது பொழுதுகள் கழிகின்றன. இன்னொரு பிறவி வேண்டாம் என்று கடவுளிடம் கேட்டு இருக்கிறேன் என்று சமீபத்தில் வெளியான பேட்டியில் கூறியிருந்தார் நடிகை காஞ்சனா.

தானமாக கொடுத்த நிலம் :

நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், ஜி.என் செட்டி சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான காலி இடமும் அடக்கம். இந்த இடத்தில் தான் 14,880 சதுர அடியில், ரூ.7 கோடி மதிப்பீட்டில், பத்மாவதித் தாயாருக்கு கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவெடுத்தது. ராஜகோபுரம், பிரகாரம் மற்றும் முகாம் மண்டபம் என கோயில் மிகப் பிரமாண்டமாகக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, நிதியானது திருப்பதி தேவஸ்தான விதிகளின் படி நன்கொடை பெறப்பட்டது.

பத்மாவதி தாயார் கோவில்
கடந்த 22.02.2021அன்று, காஞ்சி காமகோடி பீடாதிபதி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு, கோயில் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்றது. மொத்தமுள்ள 6 கிரவுண்டு நிலத்தில் 3 கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. தற்போது கட்டப்படும் கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்று தாயார் சிலையே பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

01/12/2022

இப்போது பிரகாரம் சுற்றி வருவதற்கு முன் ஒரு கதவு இருக்கும்.. அது தான் வைகுந்த வாசல். உள்ளே நுழைந்து சுற்றி வந்தால் உண்டியல் அருகில் வெளியே வருவோம்.

திருமலையில்
02-01-2023 முதல் 11-01-2023 வரை வைகுந்த வாசல் திறந்திருக்கும்.

இந்த வாசல் இந்த 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்.

அடியேன் ராமானுஜ தாசன்.

22/10/2022

கோவில்கள் சக்தியுடன் விளங்குவதன் காரணம்

இரவு அர்த்தசாம பூஜை முடிந்து நடை சார்த்தியதும் திருக்கோயிலில் உள்ள எல்லா இறை மூர்த்திகளும், ரிஷிகளும், நவகிரக தேவதைகளும், திருத்தூணில் குடிகொண்ட தேவதைகளும் உயிர் பெற்று எழுந்து மூலவரான இறைவனை ஆராதிக்கத் தொடங்குகின்றன.

திருவிளக்கு ஏந்திய பாவைகளில் உள்ள விளக்குகளில் தாமாக ஜோதி தோன்றி பிரகாசிக்கத் துவங்கி விடும்.

அதனால்தான் திருப்பாவைகளில் உள்ள விளக்கில் இரவில் எண்ணெய் ஊற்றக் கூடாது என்ற விதியை ஆலயங்களில் விதித்துள்ளார்கள்.

இந்தத் திருப்பாவைகள் தங்களுடைய தூய்மையான ஜோதிப் பிரகாசத்தால் இறைவனை ஆராதிக்கும்போது பகல் நேரத்தில் அக்கோயிலில் விழைந்த மனிதத் தவறுகளால் நிறைந்த எண்ண தோஷங்களும், மந்திர, தந்திர தோஷங்களும், சங்கல்ப குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

எனவேதான் ஒரு கோயில் எவ்வளவுதான் குப்பை கூளத்துடன், எண்ணெய்ப் பிசுக்கு, ஒட்டடையுடன் காட்சி அளித்தாலும் இறைவனின் சான்னியத்தியம் என்பது சிறிதளவும் குறையாது.

இரவு நேர தேவ பூஜையே மக்கள் தவறுகளை நிவர்த்தி செய்கிறது. கோவிலின் சக்தியை தக்க வைத்துக் கொள்கிறது.

அதனால் தான் இரவு நேரங்களில் மனிதர்களின் பூஜைகள் நிறுத்தி வைக்க படுகின்றன.

21/10/2022
21/10/2022

இந்த வருடம் சபரிமலைக்கு மாலை போடுபவர்கள் "சுவாமியே சரணம் ஐயப்பா" என்று பதிவிடுங்கள்

18/10/2022

சபரிமலையின் புதிய மேல் சாந்தியாக ஸ்ரீ ஜெயராமன் நம்பூதிரி தேர்வு 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா

இராஜராஜ சோழன் காலத்தில் இந்துமதமே இல்ல ப்ரோஒ.! எனில் இராஜராஜ சோழன் என்ன மதம்?அவரு சைவ மதம் ப்ரோ..எப்படிடா சொல்ற? தன்னை எ...
05/10/2022

இராஜராஜ சோழன் காலத்தில் இந்துமதமே இல்ல ப்ரோ

ஒ.! எனில் இராஜராஜ சோழன் என்ன மதம்?

அவரு சைவ மதம் ப்ரோ..

எப்படிடா சொல்ற? தன்னை எங்காவது சைவன்னு சொல்லிக்கிட்டாரா? என்ன?

இல்ல ப்ரோ "சிவபாத சேகரன்னு" கல்வெட்டு இருக்குல, அதவச்சிதான் சொல்றோம்..

எனில் "சோழ நாராயணன்னு" கூடத்தான் கல்வெட்டு இருக்கு. அப்ப நான் இராஜராஜ சோழன் வைணவர்னு சொல்லட்டா ப்ரோ?

அது வந்து...

என்னடா வந்து போயி..இராஜராஜ சோழன் திருமாலின் அவதாரம் என்று கூறும் செப்பேடுகள் பற்றி தெரியுமாடா?

தெரியாது.

இராஜராஜ சோழன் திருமாலின் சங்குசக்கர ரேகையுடன் பிறந்தது பற்றிக் கூறும் செப்பேட்டு வாசகங்களை படிச்சிருக்கியாடா?

இல்ல ப்ரோ..

அத விடு, இராஜராஜ சோழன் பெருமாள் கோவில்களுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றியாவது தெரியுமா?

தெரியாது😞

அதயும் விடு, இராஜராஜ சோழன் இராமர் கோவிலுக்கு கொடுத்த நிவந்தங்கள் பற்றி தெரியுமாடா?

தெரியாது.

இராஜராஜ சோழன் அக்கால கோவில்களில் இராமாயணம், மகாபாரதம் படிக்க நிதி உதவி கொடுத்தது தெரியுமாடா?

தெரியாது.

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரம்மாவின் சிற்பத்தை வச்சது யாருனு தெரியுமாடா?

தெரியாது

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நரசிம்ம சிற்பத்தை யாரு வச்சதுனாவது தெரியுமா?

தெரியாது.

தஞ்சை பெரிய கோவில் உள்ள இந்திரனின் சிற்பம் பற்றி தெரியுமாடா?

தெரியாது.

அதை விடு, தஞ்சை பெரிய கோவில்ல விநாயகருக்கு சிற்பம் எடுத்தது ராஜராஜன்னு உனக்கு தெரியுமாடா?

தெரியாது.

இதெல்லாம் விடுடா இராஜராஜ சோழன் காலத்தில் இருந்த கல்லூரிகளில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் சொல்லிக் கொடுத்ததாவது தெரியுமாடா?

எதே😳😳😳. தெரியாது ப்ரோ

ஏன்டா...இராஜராஜன் தான் கட்டிய கோவிலில் திருமால், பிரம்மா, இந்திரன், முருகன், விநாயகர், நரசிம்மருக்கெல்லாம் இடம் கொடுத்தவரை எப்படிடா சைவன்னு ஒரு மதத்துக்குள்ள அடுக்குவீங்க?

அதுதான் ப்ரோ எனக்கே சந்தேகமா இருக்கு😴

வேதங்களை ஏற்றிருக்கார், எல்லா தெய்வங்களுக்கும் தஞ்சை பெரிய கோவிலில் இடம் குடுத்திருக்கார், இராமர் கோவிலுக்கு கூட நிவந்தங்கள் கொடுத்திருக்கார்... இப்ப சொல்லு.. அவரு சைவரா இல்லை இந்துவா?

தப்புதான் ப்ரோ.. அவரு இந்துதான். ஆனால் அவர்காலத்தில் இந்துனு ஒரு மதமே இல்லையே ப்ரோ

மேலும் படிக்க https://www.youtrunnews.in/2022/10/Chola-vinayagar-.html

29/09/2022

கன்னியாகுமரி பகவதி அம்மன் நவராத்திரி 4-ம் நாள் தேவி வெள்ளி கலைமான் வாகனத்தில் கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்

21/09/2022

300/- November tickets available 🙏
click 👀

15/09/2022

சபரிமலையில் புதிய கொடிமரம் ஸ்தாபிக்க லட்சணமுள்ள தேக்கு மரம் முறிப்பதற்கு முன்பு அதில் வசிக்கும் ஜீவராசிகளிடம் அனுமதி பெறுவதற்காக நடைபெற்ற பூஜை.(பழைய படம்)

எத்தனை உயா்ந்த கலாச்சாரத்தை கொண்டது நமது பாரத தேசம்..
சுவாமியே சரணம் ஐயப்பா🙏

14/09/2022
11/09/2022
08/09/2022

இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள் 🙏

08/09/2022

Address


Alerts

Be the first to know and let us send you an email when Hindu Samayam News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share