![நினைவுகள் பின்னோக்கிச் செல்ல கண்ணீர் கரை புரண்டு கன்னத்தில் கடகடவென்று வழிந்தது. சுண்டுவிரலால் கண்ணீரைத்துடைத்தவள் ...](https://img3.medioq.com/445/193/843718064451937.jpg)
19/06/2024
நினைவுகள் பின்னோக்கிச் செல்ல கண்ணீர் கரை புரண்டு கன்னத்தில் கடகடவென்று வழிந்தது. சுண்டுவிரலால் கண்ணீரைத்துடைத்தவள் அக்கண்ணீரை தரையில் சேரவிடக்கூடாதென்ற வைராக்கியம் கொழுந்து விட்டு நெஞ்செங்கும் தீயாய் பற்றி எரிய முகத்தினை கையில் இருந்த கர்ச்சீப்பால் அழுந்த துடைத்து தன்னை நிதானப்படுத்தி கடந்தகால நினைவுகள் ஏதும் தன்னை பாதிக்கவிடாமல் நிகழ்காலத்திற்குள் புகுந்தாள்.
இனியா தன் பக்கத்து சீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் வயதான அம்மாவை கண்டவள் சற்றே நிம்மதியாய் பாதுகாப்பாய் உணர்ந்தாள் ..அந்த வயதான அம்மாதான் தேனியில் பஸ் கிளம்பியதிலிருந்து கோவை அருகில் பஸ் வரும்வரை தொணதொணவென்று பேசிக்கொண்டிருந்துவிட்டு அரைமணிநேரம் முன்னர்தான் தூங்கினார். தூக்கம் வரவில்லை போலும். அவர் இனியாவுடன் பேசிக்கொண்டே பொழுது புலரும் வேளையில் தூங்கிப்போனார். ஆனால் அதற்குள் கோவையே வந்துவிட்டது.
இவர்கள் இருவரும் அப்படி என்னதான் தேனியிலிருந்து கோவை வரை பேசி இருப்பார்கள் ?? இனியாவிற்கு இந்த சின்ன வயதிலேயே வந்த மனக்காயம் தான் என்ன ??
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்
இரவின் ஒளியில் மிதக்கும் நிலவை தான் பயணிக்கும் பேருந்தின் கம்பிகளின் வழியே பார்த்து இரசித்துக்கொண்டே வந்தாள....