Human kekirawa

Human  kekirawa தமிழ் செய்திகள் ,like our page !!!!
(12)

🇵🇸🇲🇽 | மெக்சிகோ நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். -மெக்சிகோ தலைநகரில்...
31/05/2024

🇵🇸🇲🇽 | மெக்சிகோ நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

-மெக்சிகோ தலைநகரில் நடந்த 'Action for Rafah' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களுடன் போலீசார் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையிலே இவ்வாறு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

MOLOTOV கொக்கடெயில்ஸ் வெடி பொருள் மற்றும் கற்கள் கொண்டும் எறிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

31/05/2024

.💔
We will NEVER stop sharing
ᖴᖇᗴᗴ ᑭᗩᒪᗴSTIᑎᗴ !!🇵🇸

நேற்று முன்தினம் காணாமல்போன பாத்திமா  #பஸ்னாவின் ஜனாஸா இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.திஹாரிய தூல்மலை (அத்தனகல்ல ஓயாவில்) ...
04/07/2023

நேற்று முன்தினம் காணாமல்போன பாத்திமா #பஸ்னாவின் ஜனாஸா இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திஹாரிய தூல்மலை (அத்தனகல்ல ஓயாவில்) நீரில் மூழ்கிய 21வயது பாத்திமா பஸ்னாவின் ஜனாஸா இன்றைய (04) தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (02) மாலை நேரத்தில் ஆற்றில் காணாமல்போன பஸ்னாவே ஜனாஸாவாக மிக நீண்ட தேடலுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யா அல்லாஹ்!
அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவாயாக! மேலும் அவரது குடும்பத்திற்கு மன ஆறுதலையும் கொடுப்பாயாக ஆமீன்!

உலகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி உலகளாவிய அளவில் முஸ்லிம் பெண்கள் சா...
19/06/2023

உலகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி உலகளாவிய அளவில் முஸ்லிம் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
அரபுலகின் முஸ்லிம் பெண்மணி விண்வெளியில் இதுவரை கால் வைக்கவில்லை என்றிருந்த குறையும் தற்போது பூர்த்தியாகிவிட்டது
மே மாதம் 21ம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கென்னடி ஆய்வு மையத்திலிருந்து "Space X Falcon 9" என்ற ராக்கெட் மூலம் விண்வெளி பயணம் மேற்கொண்ட நான்கு பேரில் சவூதி அரேபியாவின் றையானத் பர்னாவியும் ஒருவர்.

சவூதி அரேபியா அரசின் அறிவியல் துறை மூலம் தேர்வு செய்யப்பட்டு ஆறு மாத கடுமையான பயிற்சிக்கு பின்னர் விண்வெளிக்கு பயணமாகிய 33 வயதான றையானத் பயோ மெடிக்கல் அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கடந்த 9 வருடங்களாக மார்பக புற்றுநோய் குறித்தும், ஸ்டெம் செல் சிகிச்சை பிரிவிலும் ஆராய்ச்சி செய்து சவூதி அரேபியா மருத்துவ துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர்.

இவருடன் சவூதி அரேபியா சேர்ந்த அலி அல்கர்னி எனும் விமானியும் விண்வெளி பயணம் மேற்கொண்டார். இருவரும் 15 தினங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து சவுதி அரேபியா அரசின் "விஷன் 2030" திட்டத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சாத்தியங்களை கண்டறிவது இவர்களின் பயணத்தின் நோக்கமாகும்..
அத்துடன் விண்வெளிக்கு பயணம் சென்ற முதல் முஸ்லிம் பெண்மணி எனும் சாதனை பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்...
விண்வெளியில் தங்கி தங்களது ஆராய்ச்சி பயணத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து நேற்றைய தினம் சவூதி அரேபியா வந்து சேர்ந்தனர் இருவரும்..
Colachel Azheem

ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
18/06/2023

ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

இதுவொரு பாடசாலை மாணவியொருவரின் முள்ளந்தண்டு வடத்தின் x ray படம் இவ்வாறான நிறைய மாணவர்கள் தொடர்பில் பல தரவுகள் கிடைத்த வண...
12/06/2023

இதுவொரு பாடசாலை மாணவியொருவரின் முள்ளந்தண்டு வடத்தின் x ray படம் இவ்வாறான நிறைய மாணவர்கள் தொடர்பில் பல தரவுகள் கிடைத்த வண்ணமே 🥲🥲
இது எதனால் இப்படியான பாதிப்புகள் அதிகம் என்பதை கவனிக்கும் போது மாணவர்களின் புத்தக பைகளின் நிறையும் ஒரு காரணியாக இருக்கலாம் என்பதாக சில அவதானிப்புகள் 😳ஆகவே இப்படியான மிகச் சுமையான புத்தகபைகளை மாணவர்கள் அதிக தூரம் சுமப்பதை விட்டு அவர்களை விழிப்புணர்வூட்ட வேண்டும் அத்தோடு இப்படியான சுமைகளுக்களுக்கான தீர்வுகளை கல்வியலாளர்களும் முன்வைப்பது காலத்தின் கட்டாயமானதாகும்.

Thanks Chanaka

 #அல்ஹம்துலில்லாஹ்!ஆபிரிக்க நாடான கானாவில் இருந்து இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்பவர்களை ஏற்றிய முதலாவது விமா...
11/06/2023

#அல்ஹம்துலில்லாஹ்!
ஆபிரிக்க நாடான கானாவில் இருந்து இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்பவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நேற்று சனிக்கிழமை சவூதி அரேபியாவை சென்றடைந்துள்ளது.

பாடசாலையில் 11 வருசங்கள் படிச்சாயே, படிச்சி என்னத்த கிழிச்சாய் என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக....
11/06/2023

பாடசாலையில் 11 வருசங்கள் படிச்சாயே, படிச்சி என்னத்த கிழிச்சாய் என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக....

say !!Allahu akbar !"❤
17/04/2023

say !!Allahu akbar !"❤

புத்தாண்டு தினத்தை நோயாளர்களுடன் கொண்டாடிய தாதியர்கள்
15/04/2023

புத்தாண்டு தினத்தை நோயாளர்களுடன் கொண்டாடிய தாதியர்கள்

Safe travel !!!!
13/04/2023

Safe travel !!!!

Musnad Ahamed 25168!ஆதாரபூர்வமான ஹதீத் !றமழானின் இறுதிப் பத்தின் ஒற்றைப்பட்ட இரவுகளில் ஓதவேண்டிய துஆ.!ஒரு நாள் பிந்தி ( ...
12/04/2023

Musnad Ahamed 25168
!
ஆதாரபூர்வமான ஹதீத்
!
றமழானின் இறுதிப் பத்தின் ஒற்றைப்பட்ட இரவுகளில் ஓதவேண்டிய துஆ.
!
ஒரு நாள் பிந்தி ( இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் etc ) நோன்பு மாதத்தை ஆரம்பித்தவர்கள்..!!
11/04/2023 Tuesday
இன்றிரவிலிருந்து
அதாவது உங்களுடைய இரட்டைப்பட்ட இரவுகளில் ஓதவேண்டிய துஆ
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
!
!

யா அல்லாஹ்!தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்கை மழையாக பொழிவாயாக!நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையாக பொழிவாயாக!பாவம...
09/04/2023

யா அல்லாஹ்!
தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்கை மழையாக பொழிவாயாக!
நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையாக பொழிவாயாக!
பாவமன்னிப்புத் தேடுவோரின் மீது உனது மன்னிப்பை மழையாக பொழிவாயாக!
அநீதி இழைக்கப்படுவோரின் மீது உனது உதவியை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டு எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தையும் விட்டும் என்னைத் தேவையற்றவனாக ஆக்குவாயாக.

யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.
ஆமீன்.

06/04/2023

Good News!அரிசிமலை பௌத்த மதகுருவின் பாதுகாப்பு அதிகாரிகள்
(MSD) இருவரும் மதகுருவின் கடமையிலிருந்து உடன் நீக்கம்.

05/04/2023

❤❤❤❤

"ஓர் அடியான் அல்லாஹ்வின் பாதையில் செலவிடுகின்ற மாலை அல்லது காலை நேரம் இந்த உலகம் மற்றும் அதில் உள்ளவற்றை விடவும் சிறந்ததாகும்!" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் (ரலியல்லாஹு அன்ஹு) புகாரி - 2892

 #மாஷா_அல்லாஹ்!கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் மற்றும் ஹலீமா முஸ்தபா தம்பதியர் பணி நிமித்தமாக ...
31/03/2023

#மாஷா_அல்லாஹ்!
கேரளாவில் உள்ள கண்ணூர்
மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் கரீம்
மற்றும் ஹலீமா முஸ்தபா தம்பதியர் பணி
நிமித்தமாக அபுதாபியில் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உண்டு அந்த மூன்று குழந்தைகளும் சரியாக மார்ச் பதினான்காம் திகதி பிறந்துள்ளது.

இந்த ஆச்சர்யமான ஒற்றுமை எப்படி என
இவர்களிடம் கேட்டால் புன்னகையுடன்
அவர்கள் கூறும் பதில்...
"இதில் திட்டமிடல் எல்லாம் ஒன்றுமில்லை
எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே இப்படி ஒரே திகதிகளில் பிறந்துள்ளது"

அன்பான பள்ளிவாசல் நிருவாகிகளே...!கம்புகளையும் பிரம்புகளையும் கொண்டு பள்ளிவாசல் வரும் குழந்தைகளின் சந்தோஷத்தை  கட்டுப்படு...
28/03/2023

அன்பான பள்ளிவாசல் நிருவாகிகளே...!

கம்புகளையும் பிரம்புகளையும் கொண்டு பள்ளிவாசல் வரும் குழந்தைகளின் சந்தோஷத்தை கட்டுப்படுத்த நினைக்கும் உறவுகளே!

உங்களோடு ஒரு நிமிடம்...

பெரியவர்களாக நாம் வளந்தவுடன் அனைவருக்கும் ஆசை திரும்ப எப்போது கிடைக்கும் அந்த கள்ளம் கபடம் இல்லா குழந்தைப்பருவ சிரிப்பும், விளையாட்டும்.

எவ்வளவுதான் தவறு செய்தாலும் நாம் கடுமையாக நடந்து கொண்டாலும் அவர்களின் புன்சிரிப்பில் அனைத்தும் புஷ்வானமாகிவிடும்.

மரண வாசல் காண்பித்து...
மகிழ்ச்சி தந்த ஒரு உறவு என்றால்
அது குழந்தைகள்தான்.

வீதிகளிலும், விளையாட்டுகளிலும் ஏராளமான பிள்ளைகள் வீணாக நேரத்தை கழிக்கும்போது அதான் சொல்ல முன்பே ஆசையோடு ஓடோடி வந்து பள்ளியினுள்ளே முன்சfபில் அமர்ந்திருக்கும் சிறார்களை நீங்கள் பின்வரிசைக்கு விரட்டாதீர்கள்.

தராவீஹ் வரை தொழும் அவர்களை தேனீர் வேளையில் புறக்கணிக்காதீர்கள், விரட்டாதீர்கள், மிக கருணையுடன் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.

ஹஜ்ரத் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துளேன் .அவர்கள் கூறினார்கள் :மென்மையை யார் இழந்து விடுகிறாரோ அவர் அனைத்து நன்மைகளையும் இழந்து விடுவார் .(முஸ்லிம்)

இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் சிறுவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்துவரும் பெற்றோர்கள் தொழும் போது அவர்களை தங்களுக்கு அருகில் வைத்து தொழப்பழக்குவதும், பெரியவர்கள் சப்தமாக சொல்ல வேண்டிய ஆமீன் சப்தத்தினை மழலைக் குரலில் அவர்கள் சப்தமாக சொல்வதும் தனி ஒரு சிறப்பு.

Copy

நோன்பு நோற்பதால் மூளை ஷார்ப் ஆகுமா? இன்று ஒரு பதிவைப் பார்த்தேன். நம்முடைய மக்களும் மானாவாரியாக மாஷா அல்லாஹ், சுப்ஹானல்ல...
27/03/2023

நோன்பு நோற்பதால் மூளை ஷார்ப் ஆகுமா?

இன்று ஒரு பதிவைப் பார்த்தேன். நம்முடைய மக்களும் மானாவாரியாக மாஷா அல்லாஹ், சுப்ஹானல்லாஹ் சொல்லி ஆர்ப்பரித்திருந்தார்கள்.

நோன்பு நோற்பதால் மூளை ஷார்ப் ஆகுமாம். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அறிவியல் உண்மையாம்!

இதே போன்று ஒரு முறை....
.....ஒரு முறை ஒரு மருத்துவர் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி அவர்களிடம் வந்தார். நோன்பு நோற்பது கல்லீரலுக்கு நல்லது. சீரண சிஸ்டம் சீரடையும் என்கிற ரீதியில் நோன்பினால் கிடைக்கின்ற மருத்துவ நன்மைகளை விவரித்தார். எனவே இத்துணை மருத்துவ பலன்கள் இருப்பதால் நாம் அனைவரும் அவசியம் நோன்பு நோற்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

மௌலானா வினவினார் : ‘சரி. நோன்பு நோற்பதால் இத்துணை மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். இறைவனின் வழியில் இன்னுயிரிரைக் கொடுத்து ஷஹீதாவதால் கிடைக்கின்ற மருத்துவ நன்மைகள் என்ன?’

அந்த மருத்துவரோ வாயடைத்துப் போனார். சொல்வதறியாமல் திகைத்து நின்றார்.

மௌலானா மௌதூதி தொடர்ந்து சொன்னார் : ‘திண்ணமாக நோன்பு நோற்பதால் உடல்நலத்துக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. மருத்துவ பலன்களும் ஏராளமாக கிடைக்கின்றன. அதில் சந்தேகமில்லை. ஆனால் உடல்நலம் சீர் பெறுவதற்காகவோ, மருத்துவ நன்மைகள் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனோ நாங்கள் நோன்பு நோற்பதில்லை. அதற்கு மாறாக இறைவனுடைய கட்டளையைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் நோன்பு நோற்கின்றோம். நோன்பு நோற்பதால் எங்களுக்கு மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றன எனில், அது எங்களின் அதிபதி எங்களுக்குத் தருகின்ற உடனடி வெகுமதி ஆகும். மறுமையில் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் நாங்கள் நோன்பு நோற்கின்றோம்.

இறைவனின் வழியில் இன்னுயிரை அர்ப்பணித்து ஷஹீதாகிவிடுவதால் எந்த மருத்துவ நன்மையும் கிடைக்காது. என்றாலும் மறுமையில் நன்மைகளை ஈட்டி விட வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனின் வழியில் பாடுபடுவதற்கும் உயிர், உடைமை என அனைத்தையும் அர்ப்பணித்து விட ஆயத்தமாகிவிடுகின்றார்.’

படத்தில்: மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான். எண்பது வயது. இந்த ஆண்டும் தினமும் மதியம் பத்து நிமிடம் குர்ஆன் தரும் செய்தியை சுவையாகப் பகிர்கிற காட்சி. (காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படம்)

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அல்லாஹ் மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் அவர்களுக்கு நல்ல உடல் நலத்தையும் வலிமையையும் நீண்ட ஆயுளையும் தந்தருள்வானாக! மேன்மேலும் மார்க்கச் சேவையாற்றுகிற நற்பேற்றை அருள்வானாக! ஆமீன்.

Quraan ❤❤hadees❤❤
26/03/2023

Quraan ❤❤hadees❤❤

இன்று வானில் தெரிந்த காட்சி
24/03/2023

இன்று வானில் தெரிந்த காட்சி

🇱🇰 இலங்கையில் தேசிய அடையாள அட்டை உருவான கதை......!👉✍️ இலங்கையில் 1968 ஜுன் 22 ஆம் ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டம் பாராளுமன...
24/03/2023

🇱🇰 இலங்கையில் தேசிய அடையாள அட்டை உருவான கதை......!

👉✍️ இலங்கையில் 1968 ஜுன் 22 ஆம் ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

👉✍️இதன்படி 1971 இல் அதற்கான ஒழுங்குவிதிகள் நிறுவப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சட்டமானது. 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது.

👉✍️1971 ஒக்டோபர் 01 ஆம் திகதி ஆட்பதிவு திணைக்களம் நிறுவப்பட்டது.

👉✍️1972 செப்டம்பர் 14 ஆம் திகதியே ஆட்பதிவு திணைக்களத்தால் முதலாவது தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டது.

👉✍️அப்போது பிரதமராக இருந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கே முதலாவது அடையாள அட்டை கையளிக்கப்பட்டது.
பின்னணி......

👉✍️1964 ஒக்டோபர் 30 ஆம் திகதியே ஶ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

👉✍️இலங்கையின் பிரதமராக இருந்த ஶ்ரீமாவும், இந்தியாவின் பிரதமராக பதவிவகித்த லால் பகதூர் சாஸ்திரியும் கைச்சாத்திட்டனர்.

👉✍️இந்த உடன்படிக்கையின் பிரகாரம் 5 இலட்சத்து 25 ஆயிரம் மலையகத் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் 3 இலட்சம் 25 ஆயிரம் பேருக்கு 1964 இற்கும் 79 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எனினும், இவ்வுடன்படிக்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையிலேயே இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை பதிவுசெய்து - அடையாளப்படுத்தும் நோக்கில் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இலங்கைக்கு இந்திய வம்சாவளி மக்கள் சட்டவிரோதமாக வருவதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.

தொகுப்பு - ஆர்.சனத்
தகவல்மூலம் - ஆட்பதிவு திணைக்களம்

லண்டனில் ரமளானே வருக! இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரில் ரமளான் முன்னிட்டு அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்...
24/03/2023

லண்டனில் ரமளானே வருக!

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரில் ரமளான் முன்னிட்டு அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள கண்கொள்ளாக் காட்சி!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

அற்பமான அரசியல் ஆதாயங்களுக்காக வெறுப்பை விதைத்து மதவெறி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் கோரப் பிடியிலிருந்தும்

சில சில்லறைகளுக்காக நாட்டின் வளங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் பொறுப்பற்ற சுயநல பிறவிகளின் கிடுக்கிப்பிடியிலிருந்தும்

பொய்யர்களின் பொய்களிலிருந்தும் அவதூறு பரப்புரைகளிலிருந்தும் நம்முடைய நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவாயாக!

என இந்த புனிதமான மாதத்தில் கருணை மிக்க இறைவனிடம் மன்றாடுவோம்!

அல்லாஹ் நம்முடைய நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவானாக!

ஆமீன்.

கார்கள் மற்றும் 101 வகையான பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி!இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு ...
23/03/2023

கார்கள் மற்றும் 101 வகையான பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி!

இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் உத்தரவிட்டதன் காரணமாக தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கார்கள், உப்பு, பல்வேறு வகையான இறைச்சி, செப்பு, இதர உலோகங்கள், கேக், பிளாஸ்டிக், சீஸ், இறப்பர், மரச்சாமான்கள், சோப்புகள், காய்கறிகள், பழங்கள்....உள்ளிட்ட பொருட்கள் மீண்டும் இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டொலர் நெருக்கடியால் உப்பு இறக்குமதி நிறுத்தப்பட்டு கடந்த காலங்களில் சீனாவிலிருந்து அதிகளவில் உப்பு இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்று புனித தளங்களிலும் துவங்கியது இரவு தொழுகை...  # #மஸ்ஜிதுல்_ஹரம்  #மஸ்ஜிதுந்_நபவீ   #மஸ்ஜிதுல்_அக்ஸா❤❤
23/03/2023

முன்று புனித தளங்களிலும் துவங்கியது இரவு தொழுகை... # #மஸ்ஜிதுல்_ஹரம் #மஸ்ஜிதுந்_நபவீ #மஸ்ஜிதுல்_அக்ஸா❤❤

தங்கத்தில் உருவாக்கப்பட்ட பிறை....மஸ்ஜிதுல் ஹராமில் பாபுல் உம்ரா நுழைவாயிலில் உள்ள பிரமாண்டமான மினாராவில் தங்கத்தில் உரு...
22/03/2023

தங்கத்தில் உருவாக்கப்பட்ட பிறை....

மஸ்ஜிதுல் ஹராமில் பாபுல் உம்ரா நுழைவாயிலில் உள்ள பிரமாண்டமான மினாராவில் தங்கத்தில் உருவான பிறை வடிவம் வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

கீழே பார்க்கும் போது அதன் பிரமாண்டம் வியக்க வைக்கும்.அவ்வளவு உயரமான மினாராவில் அந்த பிறை வைக்கப்பட்டுள்ளது.

💔💔🤲🤲இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்🤲🤲💔💔இன்று 21.03.2023 வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கிகாலமான கல்முன...
21/03/2023

💔💔🤲🤲இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்🤲🤲💔💔

இன்று 21.03.2023 வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி
காலமான கல்முனை மற்றும் சாய்ந்தமருது
இளைஞர்கள்.

அது ஒரு காலம் அழகிய காலம்.
20/03/2023

அது ஒரு காலம் அழகிய காலம்.

புனித ரமலான் மாதத்தைவரவேற்கும் வகையில்பாலஸ்தீனியர்கள்.!மஸ்ஜித் அல்-அக்ஸாபள்ளியினை மற்றும்அதன் முற்றங்களைசுத்தம் செய்துஅல...
20/03/2023

புனித ரமலான் மாதத்தை
வரவேற்கும் வகையில்
பாலஸ்தீனியர்கள்.!
மஸ்ஜித் அல்-அக்ஸா
பள்ளியினை மற்றும்
அதன் முற்றங்களை
சுத்தம் செய்து
அலங்கரிக்கும் காட்சியே இது.!

மாஷா அல்லாஹ்

🔴இன்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரத கழிவறையினுள் வைத்துவிட்டு சென்ற பச்சிளம் குழந்தை😥
10/03/2023

🔴இன்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரத கழிவறையினுள் வைத்துவிட்டு சென்ற பச்சிளம் குழந்தை😥

இவர்கள் இருவரில் உங்கள் ஆதரவு யாருக்கு ஆதரவு வளங்குவதற்கான காரணத்தையும் கமாண்ட்டில் தெரிவிக்கவும்??????
23/02/2023

இவர்கள் இருவரில் உங்கள் ஆதரவு யாருக்கு ஆதரவு வளங்குவதற்கான காரணத்தையும் கமாண்ட்டில் தெரிவிக்கவும்??????

Address

Kekirawa
Rajshahi Division

Telephone

+94711370026

Website

Alerts

Be the first to know and let us send you an email when Human kekirawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Human kekirawa:

Videos

Share

Nearby media companies