10/04/2024
அன்பான உறவுகள் அனைவருக்கும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருளாசிகளோடு, எங்களுடைய நெஞ்சார்ந்த வணக்கங்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னலமற்ற சமய, சமூக சேவைகளிளை ஆற்றி வருகின்ற, மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் ஒரு புதிய முயற்சியாக மாற்றுவலுவுடைய மக்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு Inclusive Resources And Training Center எனும் பெயரில் பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு, இலங்கையில் தமிழ் மொழி மூலமாகப் பாடசாலைக் கல்வியினைத் தொடர்ந்து வருகின்ற விழிப்புல வலுவிழந்த, பார்வைக் குறைபாடுடைய மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை கருத்திற் கொண்டு, இலங்கை கல்வி அமைச்சினால் இலவசமாக வழங்கப்படுகின்ற பாடப் புத்தகங்களினை ஒலி வடிவப் புத்தகங்களாக உருவாக்கி, அத்தகைய மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் உதவும் முகமாக, முதலாவதாக க. பொ. த சாதாரண தரப் பரீட்சையினைக் கருத்தில் கொண்டு, தரம் 11 இல் கல்வி கற்கும் விழிப்புல வலுவிழந்த, பார்வைக் குறைபாடுடைய மாணவர்கள் பயன்படுத்தும் நோக்கில், பாடப் புத்தகங்கள் ஒலி வடிவப் புத்தகங்களாக உருவாக்கப்பட்டு, மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் உத்தியோகபூர்வ YouTube தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளன👇🏻 https://youtube.com/?si=BaVv7JZROsKAqu6b இவ் ஒலி வடிவப் புத்தகங்களினை விழிப்புல வலுவிழந்த, பார்வைக் குறைபாடுடைய மாணவர்கள் மாத்திரமின்றி, எந்த ஒரு மாணவனோ/ மாணவியோ பயன்படுத்த முடியும். அத்துடன், ஏனைய தரங்களில் பாடசாலைக் கல்வியினைத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கான இலவசப் பாடப் புத்தகங்கள் ஒலி வடிவப் புத்தகங்களாக, மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் உத்தியோகபூர்வ YouTube தளத்தில் மிக விரைவில் பதிவேற்றப்படும்.
https://youtube.com/playlist?list=PLq8iR6cLJOAbrYcUTftPBOcr14de4akSe&si=4fZUJtzAiZ6Ujldn எம்முடைய எதிர்கால சந்ததியினரின் கல்வி வளர்ச்சியினை முழுமையான நோக்கமாகக் கொண்டு, எம்மால் வழங்கப்படுகின்ற இச் சேவைத் திட்டத்தினை அனைவருக்கும் பகிர்ந்து வழிப்படுத்துவதுடன்,மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் இக் கைங்கரியத்தில் இணைந்து, பகவானின் அருட்கடாட்சத்தினையும் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.