சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம்

  • Home
  • Sri Lanka
  • Vavuniya
  • சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம்

சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம், Social Media Agency, Vavuniya.

தொலைந்த மனிதாபிமானத்தை மீட்டெடுக்கும் முயற்சியில்  சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் ஆச்சிபுரம் கிராமத்தில் வசித்து வர...
17/08/2024

தொலைந்த மனிதாபிமானத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் ஆச்சிபுரம் கிராமத்தில் வசித்து வருகின்ற கண் தெரியாத நடக்க முடியா அம்மா ஒருவரின் கோரிக்கைக்கு இனங்க சமளங்குளம் 244 B பொதுநோக்கு மண்டபத்தில் கிராம சேவையாளர் ஊடாக சமளங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் வள்ளுவர் சன சமூக நிலையம் இணைந்து சர்க்கர நாற்காலியினை வழங்கியிருந்தோம்.

ஊர் கூடி நண்டு கணவாய் மீன் என ஒடியல் கூழ் காய்ச்சி பனையின் பயனை தெரிந்து கொள்வோம். நம் வருங்கால சந்ததியினருக்கு பாரம்பரி...
29/06/2024

ஊர் கூடி நண்டு கணவாய் மீன் என ஒடியல் கூழ் காய்ச்சி பனையின் பயனை தெரிந்து கொள்வோம். நம் வருங்கால சந்ததியினருக்கு பாரம்பரிய பண்பாட்டை கடத்துவதற்கான முயற்சி அனைத்து சிறர்களையும் அழைத்து வாருங்கள்.

05/06/2024
இணைந்த கரங்களின் எற்பாட்டில்  #சமளங்குளம் கல்லுமலை ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினை சூழ உள்ள இருந்த பற்றைக்காடினை கிராம இள...
05/05/2024

இணைந்த கரங்களின் எற்பாட்டில் #சமளங்குளம் கல்லுமலை ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினை சூழ உள்ள இருந்த பற்றைக்காடினை கிராம இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களோடு இணைந்து இன்று (2024.05.07) சிரமதானப்பணி மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

*சமளங்குளம் பாடசாலை வீதி, சமளங்குளம் வேல்கபே வீதி,சமளங்குளம்  30 வீட்டுத்திட்டம் 3 ஆம் ஒழுங்கை* என எமது கிராமத்தில் 8 மி...
01/05/2024

*சமளங்குளம் பாடசாலை வீதி, சமளங்குளம் வேல்கபே வீதி,சமளங்குளம் 30 வீட்டுத்திட்டம் 3 ஆம் ஒழுங்கை* என எமது கிராமத்தில் 8 மின் விளக்குகள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் பொருத்தப்பட்டுள்ளது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடைய குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவில்  சமளங்குளம்...
18/04/2024

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடைய குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் வேண்டுகோளுக்கு இனங்கவும் கோரிக்கை கடிதங்களுக்கு ஏற்பவும் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி அந்தந்த கிராமத்தின் சுயாதீன தன்மையினை ஆராய்ந்து முதற்கட்டமாக
1) முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் 0.2 million
2) இத்திக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் 0.15 million
3) மருதங்குளம் பாலர் பாடசாலை (விவசாய கிராமம்) 0.15 million என்பவற்றுக்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
👉 இவர்கள் உடனடியாக திட்டமிடல் பிரிவில் பணியாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தருடன் (DO)தொடர்பு கொண்டு உங்கள் கோரிக்கைகளை பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
14/04/2024

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

👉கடந்த புது வருட தினத்தன்று சிதம்பரபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரிகள்    தங்களுடைய பொறுப்பு வாய்ந்த சேவையினை சமளங்குளம் ...
14/04/2024

👉கடந்த புது வருட தினத்தன்று சிதம்பரபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் தங்களுடைய பொறுப்பு வாய்ந்த சேவையினை சமளங்குளம் கிராமத்திற்கு வழங்கி இருந்ததை இன் நாளில் நினைவு கூற வேண்டிய தருணம்!
👍சமளங்குளம் மூன்று முறிப்பு பாதையில் கிட்டத்தட்ட 3 மில்லியன் பெறுமதியான இரண்டு பாலங்கள் காணப்படுகின்றது . திருடர்கள் குழு அந்த பாலத்தில் உள்ள உலோகத்தினை திருடி விற்பனை செய்வதற்கு தயாராக இருந்தார்கள்.
👍 இதை அறிந்த #சமளங்குளம் இளைஞர்கள் நலன் விரும்பிகள் சிதம்பரபுரம் காவல் நிலைய உத்தியோகத்தர்களுடன் இணைந்து துரிதஹதியில் இரவு பகல் என தங்களுடைய பொறுப்பினை அறிந்து சேவையாற்றி திருட்டு சம்பவத்தினை தடுத்து எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் பொறுப்பு வாய்ந்த சேவையை அங்கு எங்களுக்காக வழங்கி இருந்ததை நாங்கள் ஞாபகப்படுத்த வேண்டிய நாள் இதுவாகும். (முரண்பாடுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் அதனை தீர்க்கமான முடிவுகள் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வினையும் கண்டு இருந்தார்கள்)
✌அந்த வகையில் அவர்களுக்கு சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவு மக்கள் சார்பான மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வன்னி  பாராளுமன்ற உறுப்பினர்களுடைய குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம்  வேண்டுகோளுக...
14/04/2024

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுடைய குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் வேண்டுகோளுக்கு இனங்க சமூகமட்ட அமைப்புகள் உடைய கோரிக்கைகளுக்கு உரிய நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சிகரமாக தெரிவித்துக் கொள்கின்றோம் . (சமூக நலன் கருதி ஒரு சில கடிதங்களே தர வேற்றியுள்ளோம்)

சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம்  வேண்டுகோளின் அடிப்படையில்  #சமளங்குளம்  கிராமத்தில் நீண்ட காலமாக செப்பண்ணிடப்படாத வ...
12/04/2024

சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் வேண்டுகோளின் அடிப்படையில் #சமளங்குளம் கிராமத்தில் நீண்ட காலமாக செப்பண்ணிடப்படாத வீதிகள் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம்  வேண்டுகோளின் அடிப்படையில் சமளங்குளம்  கிராமத்தில் மின் விளக்குகள் பொருத்தப்படாத இடங...
12/04/2024

சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் வேண்டுகோளின் அடிப்படையில் சமளங்குளம் கிராமத்தில் மின் விளக்குகள் பொருத்தப்படாத இடங்களில் மின்விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவின்  #சமளங்குளம்  கிராமத்தில் இயங்கி வரும்  #அறநெறி பாடசாலையை மேன்மைப் படுத்துவதற்காக அற...
12/04/2024

சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவின் #சமளங்குளம் கிராமத்தில் இயங்கி வரும் #அறநெறி பாடசாலையை மேன்மைப் படுத்துவதற்காக அற நெறி ஆசிரியர், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்த தருணம்.

சமளங்குளம் அரசினர் தமிழ்க் கழவன் பாடசாலையின் (சமளங்குளம் வவுனியா) வருடாந்த இல்ல விளையாட்டு  போட்டி (5/4/2024) நேற்றைய தி...
06/04/2024

சமளங்குளம் அரசினர் தமிழ்க் கழவன் பாடசாலையின் (சமளங்குளம் வவுனியா) வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி (5/4/2024) நேற்றைய தினம் மிக சிறப்பாக இடம் பெற்றது. பாடசாலை அதிபர் தலைமையில் பிரதமர் விருந்தினர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்களுடைய ஒத்துழைப்புடன்இனிதே நிறைவடைந்தது. இதனை திறன்பட நடத்திய பாடசாலை சமூகம் சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவு மக்கள் பழைய மாணவர்களுக்கும் எங்களுடைய அபிவிருத்தி சங்கம் சார்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாங்கள் செய்வது சரியோ பிழையோ என்று கூட தெரியாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தங்களுக்கு சாதகமாக அமையும் போது முறையற்ற  நடைமுறை...
02/04/2024

நாங்கள் செய்வது சரியோ பிழையோ என்று கூட தெரியாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தங்களுக்கு சாதகமாக அமையும் போது முறையற்ற நடைமுறைகளின் ஊடாக அரச நிறுவனங்களை பயன் படுத்தி (அது ஒரு வகையான போலி அவணம் தான்) வெள்ளை தாளில் எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் அரச பதவி முத்திரைகளை பயன்படுத்தி காலத்துக்கு காலம் ஆவணங்களை ஓடி ஓடி தயாரிப்பது, அதை பயன்படுத்தி அதை உண்மை என்று ஒற்றுமையாய் இருக்கிற மக்கள் குழுக்களுக்குள் பிரச்சினையை விதைத்து பிரிவினையினை ஏற்படுத்துவது, பின்னர் வெளியில் மக்கள் ஒற்றுமையை பற்றிக் கதைப்பது; நாங்கள் இவ்வாறான மனிதர்களை கடக்கும் போதுதான் யோசிப்பது இந்த உலகத்தில் மனிதன் சிந்திப்பதை கண்டு பிடிப்பதற்கு ஒரு உபகர்ணம் கண்டு பிடித்தால் அதன் விற்பனை உச்சமாக இருக்கும் என்று. நாங்கள் பிழையான முறைகளை பின்பற்றி சரியானதை செய்வதாக காட்டி #அடித்தட்டுமக்களை நீண்ட காலத்துக்கு ஏமாற்ற முடியாது. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல. மக்கள் விழித்து கொள்கின்றார்கள் என்பதற்கான ஆறாம் கட்ட #சமிக்கைகளே!. கால ஓட்டத்தில் எல்லா தொழில்த் துறையும் வளர்கின்றது ஏமற்றுபவர்களும் வளர வேண்டும் இல்லையேல் அடித்தட்டு மக்களிடம் மாட்டிய உதாரணம் கடந்த காலங்களில் பார்த்து இருக்கின்றோம் . நீங்கள் முறைபாடு அளிக்கும் இடத்து இதற்காக எங்கள் ஊடாக இலவச #சட்ட உதவிகளும் வழங்கப்படும். இது ஒரு #அரசியல் பதிவு கிடையாது. பல்வேறு இடங்களில் அடித்தட்டு மக்களுக்கா உதவியாக இருந்து விழிப்புணர்விணை ஏற்படிடுத்திய அனுபமும் உண்டு.

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! வருந்துகிறோம். கலங்காதீர்கள் காலம் மாறும்...
18/03/2024

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! வருந்துகிறோம். கலங்காதீர்கள் காலம் மாறும்...........இது வார்த்தைகள் இல்லை...
இது எங்கள் ஊர் மக்களின் உறவின் ஆழம்....
உங்கள் துயரத்தில் நாமும் பங்கேற்கின்றோம். ஓம் சாந்தி. 😥😥

Address

Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Social Media Agencies in Vavuniya

Show All