கெலிஓய அம்பரப்பொல பகுதியில் 11.01.2025அன்று நடந்த கடத்தல் சம்பவம்...
அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ..,
அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்த தீயை கட்டுப்படுத்தும் விமானங்கள்..
பாம்பு முட்டையில் இருந்து வெளிவரும் அரிய காட்சி...
மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி அனுர அஞ்சலி
மட்டக்களப்பில் வீட்டுக்கூரை மீதேறி உயிரை காப்பாற்ற போராடிய நபரை மீட்ட விமானப்படையினர்
மட்டக்களப்பு மாவடிஓடை பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்டு வீட்டுக் கூரை மீது ஏறி உயிருக்கு போராடிய நபரை விமானப்படையினர் உலங்கு வானூர்தி ஊடாக மீட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட வாய்ப்பு..!
கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி.மீ.இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது.
சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கிடைக்கவுள்ள கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம்.
விவசாயிகளும் இக்கனமழையை கருத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் குறிப்பாக நெற் செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
எதிர்வர
அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்...
தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
070 211 71 17
011 366 80 32
011 366 80 87
011 366 80 25
011366 80 26 மற்றும் 011 366 80 19 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடரும் என இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.