திருகோணமலையைச் சேர்ந்த 13 வயதான ஹரிகரன் தன்வந்த் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து கின்னஸ் சாதனை படைக்கவுள்ளார். அவரின் முழுமையான நேர்காணலைக் காண இணைப்பில் செல்லுங்கள்.
ஈழ - தமிழக தொப்புள்கொடி உறவை தமிழக மீனவர்கள் தவறாகப் பயன்படுத்தினால் இந்த முரண் இன்னும் நீளும் -முழுமையான காணொலிக்கு👇👇👇
களவெடுத்தவர்க்களைக் காப்பாற்றத் இந்திய மீனவர்கள் போராடுகின்றனர்: யாழ்ப்பாண மீனவர்கள் போராட்டம் (முழுமையான வீடியோவுக்கு 👇👇👇)
இந்திய அணிக்கு எதிராக விளையாடி சதம் அடித்த ஈழத்தமிழன்
இந்திய அணிக்கு எதிராக விளையாடி சதம் அடித்த ஈழத்தமிழன்- முழுமையான காணொலிக்கு👇👇👇
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் இலங்கை வாழ் சமூகங்களிடையில் ஏற்படுத்தவுள்ள பாதிப்புகள் குறித்து சட்டத்தரணி V.S.S.தனஞ்சயன் அவர்களின் நேர்காணல். முழுமையான நேர்காணலைக் காண இணைப்பில் செல்லவும்.
முழுமையான காணொலிக்கு👇👇
முழுமையான காணொலிக்கு👇👇
ஆழிப்பேரலையின் கோர நினைவுகள்
ஆழிப்பேரலை நம் மனங்களில் ஆறாவடுவை விட்டுச்சென்றுள்ளது. அந்நாளில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி.
யாழ்ப்பாணத்து துளசிமாடம்
மீளவருகிறோம் நண்பர்களே...!
சில பல தடைகளைத் தாண்டி மீள வருகிறது ஊறுகாய் காணொளிகள். பாருங்கள், பகிருங்கள், கருத்துரையுங்கள். இதுபோன்று சிறுமுயற்சியாளர்கள் யாராவது உங்கள் உற்பத்திகளை வெளிக்கொண்டுவர விரும்பின் இன்பொக்ஸைத் தட்டுங்கள். நம் ஊரும், உறவும் உயர எம்மால் முடிந்த காரியம் இதுவாகும்.
யார் குற்றவாளி?
இயல், இசை நாடகம் இணைந்ததே தமி்ழ் என்பார் அறிஞர். இதில் நாடகம் கற்றறிந்தோர் தொடக்கம் பாமரர் வரை ஈடாட்டம் செய்யும் தொடர்பு ஊடகம் ஆகும். அந்தப் பின்னணியில்தான் சமூக மாற்றத்தையும், அதனை ஒழுங்குபடுத்தும் கருத்துக்களையும் நாடகத்தின் ஊடாக கொண்டுசேர்க்க முடிகிறது. நம் மத்தியில் தற்போது நாடகம் மிக அருகிவிட்டது. அதுவும் கிராமத்து நாடக மன்றங்களையும், அவை மேடையேற்றிய சமூக நாடகங்களும் இனிய நினைவுகளாக மட்டும் இருக்கின்றன. அந்தவகையில் முள்ளியவளையில் பிரபலம் பெற்றிருந்த கலைத்தாய் நாடக மன்றத்தின் தயாரிப்பில் மேடைகள் பல கண்ட “யார் குற்றவாளி?” என்கிற சமூக நாடகத்தின் இயக்குநரும், அறியப்பட்ட நகைச்சுவை நாடக நடிகருமான சின்னத்தம்பி விவேகானந்தன் அந்நாடகக் கதையை நினைவுபடுத்துகிறார்.
மரவள்ளி பயிர்ச்செய்கையில் சாதிக்கும் விவசாயி
மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்பார் நம் கவிஞர் மஹாகவி உருத்திரமூர்த்தி. நம் எல்லைக் கிராமங்களும் தற்போது அப்படித்தான். வறுமை, சுகாதாரப் பிரச்சினைகள், அடிப்படை உட்கட்டுமானமின்மை, பெரும்பான்மையினரது ஆக்கிரமிப்புக்கள் என தமிழர் தாயகத்தின் எல்லைக்கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சொல்லித்தீராதவை. தீர்வையும் எட்டாதவை. இவ்வளவுக்கு மத்தியிலும் இக்கிராங்களின் இருப்பினை ஆழவேர்பதிக்கும் முயற்சியின் பெரும்பங்கை விவசாயிகள் ஆற்றுகின்றனர். ஊரையும், நிலத்தையும் விட்டுவிலகாது எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நிலத்தில் பயிரிட்டு உணவளிக்கின்றனர். அப்படியொரு விவசாயிதான் நெடுங்கேணி, வேலடி கிராமத்தில் வசிக்கும் மதிப்பார்ந்த கி. சந்திரகுமார் அவர்கள். அவரின் விடாமுயற்சியினால் மரவள்ளி பயிர்ச்செய்கையில் சாதித்து வருகின்றார். அவ
கிழக்கு மாகாண சூறாவளி :1978
முல்லைத்தீவு நினைவுகள் | Dr ஜெயகுலராஜா | ஓய்வு நாற்காலி
மருத்துவர் ஜெயக்குலராஜா அவர்களை வன்னியில் வாழ்ந்த பலரும் மறந்திருக்கமாட்டார்கள். காலச்சூழலுக்கேற்ப மக்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கியவர்களில் என்றும் நினைவில் இருப்பவர். அப்படியான ஒருவர் தன் வாழ்நாளில் சந்தித்தவற்றில் நினைவுள்ள சில பக்கங்களை எங்களோடு பகிர்ந்துகொள்கின்றார்.
பார்த்துப் பகிர்ந்து கருத்திட்டு விருப்பிட்டு எங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தாருங்கள்.
முழுமையாக பார்வையிட https://youtu.be/dNpnf2DiQio
நான் செத்த பிறகு என் பிள்ளையை யார் தேடுவார்?
சர்வதேச மகளிர் தினமான இன்று கடந்த 3 ஆண்டுகளாகக் காணாமலாக்கப்பட்ட தம் உறவுகளைத் தேடி போராட்டம் நடத்திவரும் பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முல்லைத்தீவில் நடத்தியிருந்தனர். அதில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட காணாமலாக்கப்பட்டவர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி கருத்துத் தெரிவிக்கையில்,
'போகர்' எங்கு காணினும் தமிழடா
தமிழ் கொசுவுச்சட்டை | பா. கீர்த்தனன்.
நம் மத்தியில் தமிழ் மொழி குறித்த அதீத ஆர்வத்துடன் வெகுசில இளையோரே செயற்பட்டு வருகின்றனர். அத்தகையோரில் மிக முக்கியமானவர் பாலச்சந்திரன் கீர்த்தனன். அவர் மேற்கொண்டுவரும் தொழிலையே முற்றிலுமாகத் தமிழ்மயப்படுத்தியிருக்கிறார். பாரதியும், திருவள்ளுவரும், சங்கப்பாடல்களும் அவரின் கடை முழுவதும் பரவியிருக்கின்றன. இதுவரை ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கண்டகண்ட வாசகங்களை எல்லாம் நீக்கிவிட்டுத் தூயதமிழ் வாசகங்களை ஆடைகளில் அச்சிடுகிறார். அவற்றுக்கு கொசுவுச்சட்டை என்றே அடையாளமிடுகிறார். இந்த செயற்பாடு இளையோர் மத்தியில் அதிக கவனம் பெறல் வேண்டும். உலக செம்மொழிகளில் மூத்த மொழியாகிய நம் தமிழ் மொழியின் பெருமையை நாமும் சுமக்க வேண்டும். நமது அடையாளமாகத் தமிழைக் கொள்வோம்.
தமிழ் கொசுவுச்சட்டை என பதாகை தாங்கி ந
Tears of Gandhi
அமைதிப்படை என்ற பெயரோடு வந்து ஈழத்தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக யாழ் பொது வைத்தியசாலையில் நடத்திய படுகொலைகள் பற்றிய மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட சாட்சியம்...
"Tears of Ghandi"
நெறியாழ்கை - ஜெரா
எல்லையில் ஊரடிக்குளத்தைக் காணவில்லை
முல்லைத்தீவின் மணலாறு எப்போதோ வெலிஓயாவாக மாற்றப்பட்டு சிங்களவர்களுக்குரிய இடமாக மாற்றப்பட்டுவிட்டாலும், இப்போதும் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கிறது. போர்க்காலத்தில் மக்கள் வெளியேறிவிட இத்தகைய சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளதை அறிவோம்.
நாயாறு | மக்கள் முன்னால் மைக்
நாயாற்றை பூர்வீகமாகக் கொண்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். அதே நாள் இரவு இனந்தெரியாத நபர்கள் அவர்தம் வாடிகளை எரியூட்டினர். பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். ஒருவருடம் கடந்துள்ள நிலையில் இப்போது அப்பகுதியில் வதியும் மீனவர்களின் நிலை எவ்வாறுள்ளது என்பதையே "மக்கள் முன்னால் மைக்" பதிவுசெய்கிறது.
அருட்தந்தை ஜிம் பிறவுண்
அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளும் அவரது உதவியாளரான வி.விமலதாஸ் என்பவரும் 2006.08.20 அன்று , அல்லைப்பிட்டி தேவாலயத்திற்கு வழிபாடுகளுக்கு சென்றபோது காணாமலாக்கப்பட்டனர். இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து காணாமலாக்கப்பட்டு இன்றுடம் 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளோ, பொறுப்புக்கூறலோ இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
செஞ்சோலை
2000 ஆம் வருடங்களுக்கு பிறகு பாடசாலை மாணவிகள் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல்களின் பெயர்ப்பட்டியலை இலங்கை கொண்டிருக்கிறது. கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெருந்தொகையான மாணவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். செஞ்சோலை வளாகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த விமான தாக்குதல் அப்பாவி சிறுவர்கள்.மீதே நடத்தப்பட்டது என ஐநா சிறுவர் அமைப்பு உட்பட பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஆயினும் எவ்வித பொறுப்புக்கூறலுமின்றி மறுக்கப்படுகின்றது. இத்தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் கடுமையா மன அழுத்தத்திலும் வறுமையிலும் நோய்களிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இழந்தவர்கள் மேலும் மேலும் இழப்புக்குள்ளனவர்களாக வாழத்தலைப்பட்டிருக்கின்றனர்.