19/12/2024
15 வயது சிறுமியை அவளுடைய காதலன் மற்றும் அவளுடைய சித்தப்பா ஆகியோர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தனமல்வில போதாகம பிரதெசத்தில் இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறுமி, தாய், சித்தப்பா, தங்கை மற்றும்
தம்பி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமி காதலிக்கும் இளைஞனுடன், டிசெம்பர்
மாதம் 2 ஆம் திகதியன்று சித்தப்பா முரண் பட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில், தன்னுடைய சிறிய தந்தை, தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை இரண்டு தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய உள்ளார் என சிறுமி கூறிவிட்டார்.
அப்போது, சிறுமியை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தாய், முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணையின் போது, தாய், தம்பி மற்றும் தங்கை மேலதிக வகுப்புக்குச் சென்றிருந்த வேளையில், காதலனை வீட்டிற்கு அழைத்த சிறுமி, கணவன் மனைவி போல் வாழ்ந்தமையும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 16 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னர் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட சித்தப்பா,
யாழ்ப்பாணத்தில் கராஜ் ஒன்றில் வேலை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.