Fastlanka.lk

Fastlanka.lk Fast News in Sri Lanka
www.fastlanka.lk

பொத்துவில் றொட்டைக் கிராம மாணவி ரியோன்சியா வரலாற்று சாதனை.பொத்துவில் றொட்டைக் கிராமத்தில் வரலாற்றில் முதல் தடவையாக 3 ஏ ச...
13/09/2023

பொத்துவில் றொட்டைக் கிராம மாணவி ரியோன்சியா வரலாற்று சாதனை.

பொத்துவில் றொட்டைக் கிராமத்தில் வரலாற்றில் முதல் தடவையாக 3 ஏ சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் செல்வி சாந்தலிங்கம் றியோன்சியா என்ற மாணவி.
அதுமட்டுமின்றி பொத்துவில் தமிழ் மகா வித்தியாலய வரலாற்றில் முதல் 3 ஏ பெற்ற முதல் மாணவியும் இவரே.

ஆகவே மாணவி சாந்தலிங்கம் றியோன்சியா இரட்டை வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள றொட்டைக் கிராமம் அடிப்படை வசதிகளற்ற பின் தங்கிய குக் கிராமமாகும்.அங்கு சுமார் 78 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொத்துவில் தமிழ் மகாவித்தியாலயத்திற்கு மாணவர்கள் சென்று கற்பது வழக்கம்.

றொட்டைக் கிராமத்திலிருந்து சுமார் 20 மாணவர்கள் பிரதான வீதி வரை இரண்டு கிலோ மீட்டர் கால் நடையாக நடந்து சென்று பின்னர் பொத்துவிலுக்கு ஐந்து கிலோ மீட்டர் பஸ்ஸில் பயணிப்பது வழமை.

றொட்டையைச் சேர்ந்த சாந்தலிங்கம் கிருஷ்ணகுமாரி தம்பதிகளின் மூன்றாவது புதல்வி ரியோன்சியா.

இம் மாணவி காலையில் வீட்டிலிருந்து நடந்து பிரதான வீதியை அடைந்து பின் பேரூந்தினூடாக பாடசாலையை அடைவதும் மீண்டும் பேரூந்தினூடாக பிரதான வீதி அடைந்து மீண்டும் நடந்து வீட்டை அடையும் போது 2.30 மணியாகி விடும்.

சிலவேளைகளில் பிரத்தியேக வகுப்பிற்காகபொத்துவிலில் கழித்தால் வீடு வரும் போது நேரம் 6.30 மணியாகி விடும். சில நேரங்களில் யானைகளின் ஆபத்தும் இருக்கும் .இது ஒரு நாள் செயற்பாடு இல்லை 3வருட செயற்பாடு. இவர் இனிமேல் இப்பிராந்தியத்திற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்வார்.

தந்தையார் சாந்தலிங்கம். ஒரு மீனவராக இருக்கின்றார் .ஒரு வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அவர் வரலாற்று இரட்டை சாதனையை புரிந்து இருக்கின்றார்.

சாதனை மாணவி சாந்தலிங்கம் றியோன்சியாவிடம் கேட்ட பொழுது .
'எனது ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை பொத்துவில் தமிழ் மகாவித்தியாலயத்தில் பயின்றேன் .

நான் புலமைப் பரிசில் பரீட்சையில் 140 புள்ளிகளை பெற்றேன். சித்தி அடையவில்லை. சாதாரண தர பரீட்சையில் 5A 2B 1C 1S பெற்றேன்.

உயர்தரத்தில் கலை பிரிவில் பயின்றேன்.தமிழ், விவசாயம், புவியியல் பாடங்கள் படித்தேன்.

நான் எதிர்பார்த்த மூன்று ஏ சித்திகள் கிடைக்கப்பெற்றது. மாவட்டத்தில் 25வது நிலை.1.9 இசட் புள்ளி கிடைக்கப் பெற்றது.

எனது லட்சியம் விவசாயத் துறையில் ஒரு நிபுணராக வருவது என்றார்.

எத்தனை வசதியீனங்கள் சவால்கள் வந்தாலும் படிப்பை ஒருபோதும் கைவிடக் கூடாது என்றார்.

-வி.ரி.சகாதேவராஜா-

இவர்களை போல் கடை வைத்திருப்பவரை கண்டால் கூச்ச படாமல் வாங்குங்கள் நாம் வாங்கும் ஒரு பொருளில் அவர்கள் பசியாரட்டும் . நான் ...
22/08/2023

இவர்களை போல் கடை வைத்திருப்பவரை கண்டால் கூச்ச படாமல் வாங்குங்கள் நாம் வாங்கும் ஒரு பொருளில் அவர்கள் பசியாரட்டும் . நான் வாங்குவேன் எனக்கு பழக்கம் உண்டு.🖐️💖💖

16/08/2023
அபலோன் என்று ஒரு உயிரினம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை. Sea Food பிரியர்கள் விரும்பி உண்ணும் தனித்துவமான கடல் மொல்லஸ்க்...
20/07/2023

அபலோன் என்று ஒரு உயிரினம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை.

Sea Food பிரியர்கள் விரும்பி உண்ணும் தனித்துவமான கடல் மொல்லஸ்க் இதுவாகும்.

உணவுக்கு மேலதிகமாக நீலம், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற ஓடுகளின் பன்முகத்தன்மை, அவற்றை நகைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது.

அவற்றின் அழகியல் கவர்ச்சிக்கு அப்பால், அபலோன்கள் பல நாடுகளில், குறிப்பாக ஆசிய உணவு வகைகளில், அவற்றின் மென்மையான இறைச்சி மற்றும் தனித்துவமான சுவைக்காக விரும்பப்படுகின்றன.

இவ்வுயிரினத்தை பண்ணைச் செய்கை மேற்கொள்வதற்கு எமது இலங்கைக் கடலினஃ தட்ப வெப்ப நிலை அதிகம் பொருத்தமானது, எனினும் வழக்கம்போல இங்கு யாரும் அபலோன் பண்ணைகள் செய்வது கிடையாது. மிக விலையுயர்ந்த அபலோன் உணவுகள் உலகின் பல இடங்களிலும் விற்கப்படுவதோடு அபலோன்களுக்கான கேள்வியும் சந்தையில் அதிகரித்துள்ளது.

-ஆஹாஸ்

சடுதியாக குறைந்த இறைச்சி கோழியின் விலை-சந்தோசத்தில் மக்கள்ஜனாதிபதிக்கு நன்றியும் தெரிவிப்பு
17/07/2023

சடுதியாக குறைந்த இறைச்சி கோழியின் விலை-சந்தோசத்தில் மக்கள்

ஜனாதிபதிக்கு நன்றியும் தெரிவிப்பு

இந்த ஏழைச்சிறுவனின் பழுதடைந்த சிறுநீரகம் ஒன்றை மாத்திரம் அகற்றுவதற்கு பதிலாக இரண்டு சிறுநீரகங்களையும் தவறுதலாக அகற்றியுள...
17/07/2023

இந்த ஏழைச்சிறுவனின் பழுதடைந்த சிறுநீரகம் ஒன்றை மாத்திரம் அகற்றுவதற்கு பதிலாக இரண்டு சிறுநீரகங்களையும் தவறுதலாக அகற்றியுள்ளனர் லேடி ரிச்வே வைத்திய குழு.

சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதுவரைக்கும் எந்த ஒரு தீர்வும் வைத்தியசாலை நிருவாகத்தால் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறான் இந்த சிறுவன்.

உரிய அதிகாரிகள் சட்டத்தரணிகள் முன் வந்து உடனடி தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள் (share)

நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தார் இலங்கை ஊடாக வேறு நாடு ஒன்றுக்...
14/07/2023

நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தார்

இலங்கை ஊடாக வேறு நாடு ஒன்றுக்கு செல்வதற்காக சில மணி நேரம் ரஜினிகாந்த் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கி இருந்தார்.

இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் இன்று முற்பகல் 11.30 அளவில் கட்டுநாயக்கவுக்கு வந்த ரஜினிகாந்தை விமான நிலையத்தின் சிறப்பு அதிதிகள் முனையத்திற்கு (VIP Gold Route Service) அழைத்து விசேட வரவேற்பும் அளிக்கப்பட்டது.

He is feeling bad because nobody appreciates his work🥹💔
14/07/2023

He is feeling bad because nobody appreciates his work🥹💔

05/07/2023

Zee Tamil APAC சரிகமபா பாடல் போட்டியில் இலங்கையில் இருந்து ஒரு இளங்குயில் கூவுகிறது...

ஒற்றைப்பாடலால் நடுவர்களையே மெய்சிலிர்க்க வைத்த இந்தக்குயிலுக்கு எமது வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰

🤣
05/07/2023

🤣

05/07/2023

எல்லை மீறும் மட்டக்களப்பு விஹாராதிபதி-பொலிஸ் ஒருவர் மீதும் தாக்குதல்.

கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சைகளை உண்டாக்கி வரும் குறித்த மதகுரு அண்மையில் பொலிஸ் ஒருவரை கடமையில் உள்ள போது தாக்கிவிட்டு அதனை வீடியோ எடுத்து முகநூலிலும் பதிவு செய்துள்ளார்.

உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு குறித்த மதகுரு சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்.

உரிய அதிகாரிகள் கண்களில் படும் வரை அதிகம் share செய்யுங்கள்.

13/06/2023
"மீன்பிடி முறைகள்:கல்முனை கடற்றொழில் மாவட்டம்"நூல் வெளியீட்டு நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கல...
21/01/2022

"மீன்பிடி முறைகள்:கல்முனை கடற்றொழில் மாவட்டம்"நூல் வெளியீட்டு நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றபீக்கா அமீர்தீன் அவர்கள் எழுதிய "மீன்பிடி முறைகள்:கல்முனை கடற்றொழில் மாவட்டம்" எனும் நூல் 19.01.2022 அன்று ஆசிரியர் சஃபற் அவர்களின் தலைமையில் ஒலுவில் Green Villa கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு, யாழ் பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் சூசை ஆனந்தன் அவர்களும் முதன்மை விருந்தினராக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத்தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. ஏ. எம் நுபைல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக புவியியற்றுறை தலைவர், விரிவுரையாளர் எம். எச். எம். றினோஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ. எல். அமானுல்லாஹ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்நூலிற்கான நயவுரையினை கவிஞரும் விரிவுரையாளுமான எஸ். டி. ஜலால்டீன் அவர்கள் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நூல் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலை மானவர்கள் மற்றும் துறைசார்ந்த ஆய்வாளர்கள் போன்றோருக்கு சிறந்த உசாத்துனையாக அமையும் என விருந்தினர்களால் கருத்துரைக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய இளைஞர் சக்தியின் ஏற்பாட்டில் கௌரவ தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆசி வேண்டி விசேட துஆ பிரார்த்த...
12/01/2022

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய இளைஞர் சக்தியின் ஏற்பாட்டில் கௌரவ தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆசி வேண்டி விசேட துஆ பிரார்த்தனை-பொத்துவிலில்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் இளைஞர் பிரிவான ஐக்கிய இளைஞர் சக்தியின் ஏற்பாட்டில் கட்சியின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் 55வது பிறந்த நாளை முன்னிட்டு பொத்துவில் தொகுதி இளைஞர் அமைப்பாளரும் தேசிய இளைஞர் செயற்குழு உறுப்பினருமான கபூர் நிப்றாஸ் தலைமையில் விசேட துஆ பிரார்த்தனை ஒன்று இன்று 2022.01.12 நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பொத்துவில் தொகுதியின் பிரதான அமைப்பாளர் ஏ எச் அப்துல் ரகுமான் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

குறித்த நிகழ்வில் தலைவருடைய உடல் உள நலனுக்காகவும் நாட்டில் மக்களுக்கு நிம்மதியான வாழ்வை வாழ பொருத்தமான ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய இளைஞர் அமைப்பாளர் கபூர் நிப்றாஸ் நாட்டின் ஆட்சியாளர்களின் பிழையான கொள்கைகளினால் மக்கள் படும் இன்னல்கள் பற்றியும் சர்வதேசத்தின் பிடிக்குள் சிக்கியுள்ள இலங்கை நாட்டின் நிலைமை பற்றியும் பேசியதுடன் இந்த நெருக்கடியை மாற்ற ஆட்சி மாற்றம் ஒன்று கட்டாயம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன் போது உரையாற்றிய பொத்துவில் தொகுதியின் பிரதான அமைப்பாளர் ஏ எச் அப்துல் ரகுமான் மக்கள் இன்று உணவு பஞ்சத்தால் படும் அவஸ்தைகளை பற்றியும் பேசி ஆட்சி மாற்றத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

குறித்த நிகழ்வில் இளைஞர்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Fastlanka.lk

அரசின் அராஜக ஆட்சிக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம்-பொத்துவிலில்..ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மகிந்...
02/01/2022

அரசின் அராஜக ஆட்சிக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம்-பொத்துவிலில்..

ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து காணப்படுவதால் ஏழை மக்கள் வாழ முடியாத சூழ்நிலைக்கு எமது நாடு சென்றிருப்பதை சுட்டிக்காட்டியும் அநியாய விலை ஏற்றத்தை உடனே நிறுத்தி மக்களுக்கு ஏற்ற வகையில் விலைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியும் இன்று பொத்துவில் சந்தையை அண்டிய பகுதியில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி பிரதான அமைப்பாளர் ஏ எச் அப்துல் ரகுமான் தலைமையில் தொகுதியின் சிங்கள பிரதேசங்களுக்கான அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமாகிய திரு.மெத்தானந்த சில்வாவின் பங்குபற்றுதலுடனும் இன்று (2022/01/02) நடைபெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பெட்ரோல் விலை ஏற்றம், உணவு பொருட்களின் விலை ஏற்றம், கேஸ் தட்டுப்பாடு மற்றும் கலப்படம் செய்யப்பட்ட கேஸ், சீமந்து விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாரு போராட்டத்தில் ஈடுபட்டத்தை காணக்கூடியதாக இருந்தது.

நாட்டையும் வளங்களையும் வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய வேண்டாம்,நாட்டை சரியான முறையில் வழிநடத்த முடியாவிட்டால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை கௌரவ சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறும் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராக பொத்துவில் A.H அப்துல் ரகுமான் நியமனம்.2021.11.11 ஆம் திகதி எதிர்க...
11/11/2021

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராக பொத்துவில் A.H அப்துல் ரகுமான் நியமனம்.

2021.11.11 ஆம் திகதி எதிர்க் கட்சி தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் பொத்துவில் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக பொத்துவிலைச் சேர்ந்த A.H அப்துல் ரகுமான் கட்சியின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் யாப்பின் 6.9 முதல் 6.16 வரையிலான பிரிவுகளின் மூலம் கௌரவ தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பொத்துவில் தொகுதி அமைப்பாளராக A.H அப்துல் ரகுமான் அவர்களை நியமித்தத்துள்ளார்.

கட்சியின் வளர்ச்சிக்காகவும், தொகுதி மக்களின் நலனுக்காகவும் தனது செயற்பாடுகள் எதிர்காலத்தில் அமையும் என தெரிவித்த அவர் கடந்த காலங்களில் சிறுபான்மை கட்சிகளின் சில தலைவர்களை நம்பி தற்போது அதிருப்தியில் இருக்கும் பொத்துவில் தொகுதி மக்கள், மற்றும் அனைவரையும் தன்னோடு இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி இளைஞர் அமைப்பாளராகவும், இளைஞர் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் ஊடகவி...
09/11/2021

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி இளைஞர் அமைப்பாளராகவும், இளைஞர் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் ஊடகவியலாளர் கபூர் நிப்றாஸ் நியமனம்.

2021.11.08 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் பொத்துவில் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பாளராகவும் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் ஊடகவியலாளர் கபூர் நிப்றாஸ் கட்சியின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸ்ஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.

பாஸ்ட் லங்கா செய்தி இணையத்தின் பிரதானியாகவும் அரச அனுமதி பெற்ற கட்டிட பட வரைஞருமான இவர் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மாணவருமாவார்.

கட்சியின் வளர்ச்சிக்காகவும் தலைவருடைய திட்டங்களை நடைமுறைப் படுத்தவும் கடந்த காலங்களில் விசுவாசமாக ஒத்துழைப்பு வழங்கியமையினை கௌரவித்தே இந்த பதவி தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் பல வகையான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை மக்கள்: ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் அந்த மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியினால் மாத்திரமே சாத்தியமாகும் எனவே மக்களுக்கு தேவையான மாற்றம் ஒன்றை நிகழ்த்த இளைஞர்கள் தன்னோடு கை கோர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் இரு வாரங்களில் இலங்கையில் கொரோனா இறப்பு அதிகரிக்கலாம்-பேராசிரியர் சுனத் அகம்போடி எச்சரிக்கை
03/08/2021

எதிர்வரும் இரு வாரங்களில் இலங்கையில் கொரோனா இறப்பு அதிகரிக்கலாம்-பேராசிரியர் சுனத் அகம்போடி எச்சரிக்கை

First & Fast News Website in Sri Lanka. வேகமான செய்தி - புதிய இலங்கை.

தடுப்பூசி ஏற்றிக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
03/08/2021

தடுப்பூசி ஏற்றிக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

First & Fast News Website in Sri Lanka. வேகமான செய்தி - புதிய இலங்கை.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்குக் கொரோனா
03/08/2021

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்குக் கொரோனா

First & Fast News Website in Sri Lanka. வேகமான செய்தி - புதிய இலங்கை.

30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி-இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன
03/08/2021

30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி-இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

First & Fast News Website in Sri Lanka. வேகமான செய்தி - புதிய இலங்கை.

விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்-இலங்கை
03/08/2021

விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்-இலங்கை

First & Fast News Website in Sri Lanka. வேகமான செய்தி - புதிய இலங்கை.

இந்தியாவைத்தொடர்ந்து இலங்கையிலும் ஒட்சிசன் தட்டுப்பாடு??
03/08/2021

இந்தியாவைத்தொடர்ந்து இலங்கையிலும் ஒட்சிசன் தட்டுப்பாடு??

First & Fast News Website in Sri Lanka. வேகமான செய்தி - புதிய இலங்கை.

கம்மன்பில தனிமைப்படுத்தலில்-வலுச் சக்தி அமைச்சுக்கும் பூட்டு
03/08/2021

கம்மன்பில தனிமைப்படுத்தலில்-வலுச் சக்தி அமைச்சுக்கும் பூட்டு

First & Fast News Website in Sri Lanka. வேகமான செய்தி - புதிய இலங்கை.

பொது அமைதியை நிலைநாட்ட ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி கோட்டா அழைப்பு
03/08/2021

பொது அமைதியை நிலைநாட்ட ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி கோட்டா அழைப்பு

First & Fast News Website in Sri Lanka. வேகமான செய்தி - புதிய இலங்கை.

சிறுவனின் மரணத்தில் மர்மம்; நீதி கோரி வீதிக்கு இறங்கிய இரத்தினபுரி மக்கள்
03/08/2021

சிறுவனின் மரணத்தில் மர்மம்; நீதி கோரி வீதிக்கு இறங்கிய இரத்தினபுரி மக்கள்

First & Fast News Website in Sri Lanka. வேகமான செய்தி - புதிய இலங்கை.

Address

Pottuvil

Alerts

Be the first to know and let us send you an email when Fastlanka.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fastlanka.lk:

Videos

Share


Other News & Media Websites in Pottuvil

Show All