FlashNews Kovilpatti

  • Home
  • FlashNews Kovilpatti

FlashNews Kovilpatti கோவில்பட்டி

20/01/2024

கோவில்பட்டியில்
மழை

*உங்கள் பகுதியின் மின் வாரிய பராமரிப்பு பணியை வலைதளத்தில் முன்பே தெரிந்துகொள்வது எப்படி?*சென்னை: மின் வாரியத்தில் மேற்கொ...
07/02/2023

*உங்கள் பகுதியின் மின் வாரிய பராமரிப்பு பணியை வலைதளத்தில் முன்பே தெரிந்துகொள்வது எப்படி?*

சென்னை: மின் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை வலைதளம் மூலம் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம், துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை அனுப்பி, மின் மாற்றி, மின் விநியோகப் பெட்டி உதவியுடன் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. மின் வாரிய சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்த விவரம் பத்திரிகைகள் மூலமாக நுகர்வோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இந்நிலையில், மின் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற வலைதளத்தில் உங்களின் மின் பகிர்மான வட்டத்தை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த உடன் அந்த மாதத்தில் உங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணி தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். இதன்மூலம் மின் தடை தொடர்பான விவரங்களை பல நாட்களுக்கு முன்பாக தெரிந்துகொள்ள முடியும்.

While care has been taken to ensure the accuracy of information, TANGEDCO is not responsible for any damage or loss caused due to action taken on the basis of this information.

02/01/2023

தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த பத்திரிகையாளர் கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் கே.வி.சீனிவாசன் மாரடைப்பால் இறந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் பிரபலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு நிகழ்வை சிறப்பான வகையில் புகைப்படம் எடுக்கும் பணியில், தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் ஈடுபட்டிருந்தனர்.

அச்சமயம் உடல்நிலை பாதிக்கப்பட்டு பணியின் போதே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

புகைப்படம் எடுக்க சென்று உயிரிழந்த மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் மறைவுக்கு செய்தித்துறையினரும், அரசியல்கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

பொங்கலுக்கு தென்மாவட்டங்கள் செல்லுபவர்களுக்கு 5 சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவுகள்.
29/12/2022

பொங்கலுக்கு தென்மாவட்டங்கள் செல்லுபவர்களுக்கு 5 சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவுகள்.


Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when FlashNews Kovilpatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share