இலங்கையில் இன்று

இலங்கையில் இன்று news collecting and promoting
(13)

பொலன்னறுவையின் முதற்தர உணவுகளின் சாம்ராஜியம் ZOMOTO FAMILY RESTAURANT ல் உங்களை மகிழ்விக்க 15% விலைக்கழிவுடன் பெப்ரவரி 0...
02/02/2024

பொலன்னறுவையின் முதற்தர உணவுகளின் சாம்ராஜியம்
ZOMOTO FAMILY RESTAURANT ல் உங்களை மகிழ்விக்க
15% விலைக்கழிவுடன்
பெப்ரவரி 01 முதல் ஏப்ரல் 31 வரை
( நிபந்தனைக்கு உட்பட்டது)

27/11/2023
இந்திய பிரஜையான ஹஸ்னா மீரான் என்பவரின் கடவுச் சீட்டு விமான நிலையத்திலிருந்து வரும் போது காணாமல் போய்விட்டதுகிடைக்கப்பெற்...
06/08/2023

இந்திய பிரஜையான ஹஸ்னா மீரான் என்பவரின் கடவுச் சீட்டு விமான நிலையத்திலிருந்து வரும் போது காணாமல் போய்விட்டது
கிடைக்கப்பெற்றவர்கள் கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்

0760003720

பொலன்னறுவை மண்ணின் ஓர் புதிய மையிற்கல் அரசறிவியல் பாடத்தின்  முதல் பரீட்சை வழிகாட்டி நூல் பொலன்னறுவையில் அரசறிவியல் பாடத...
19/03/2023

பொலன்னறுவை மண்ணின் ஓர் புதிய மையிற்கல்
அரசறிவியல் பாடத்தின் முதல் பரீட்சை வழிகாட்டி நூல்

பொலன்னறுவையில் அரசறிவியல் பாடத்தின் முதல் நூலை எழுதி வெளியிட்டுள்ளார் MSM.நசீம் ஆசிரியர்

இவர்
பொலன்னறுவை மாவட்டத்தின் கதுருவெல பிரதேசத்தைச் சேர்ந்த இப்புத்தக ஆசிரியரான .MSM.நஸீம் அவர்கள் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை பொ/ முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் (தேசியப் பாடசாலை) தனது உயர்கல்வியை மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் தனது இளமானிப் பட்டத்தினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திலும்,அரசறிவியல் துறையில் முதுமானிப் பட்டத்தினை இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும்ää பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறியினை இலங்கை திறந்த பல்கலைக் கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார்.

இவற்றிற்கு மேலதிகமாக அரசறிவியல் துறையுடன் தொடர்பான மனித உரிமைகள் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மோதல் முகாமைத்துவம் மற்றும் மோதல் இணக்கப்படுத்தல் போன்றவற்றிலும் சான்றிதழ் கற்கைகளைப் பூர்த்தி செய்துள்ளார்.

இவர் கடந்தகாலங்களில் மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் அரசறிவியல் பாடம் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆக்கங்கள்ää வினாப்பத்திரங்களை மற்றும் காணொளிகளை தனது இணையத்தளத்தினூடாகவும் சமூக வலைத்தளங்களினூடகவும் வெளியிட்டுள்ளார். அத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசறிவியல் கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு இலங்கையில் இன்று பக்கம் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

17/09/2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ தலைமையிலான ஆளும் தரப்பின் புதிய இடைக்கால கபினட் அமைச்சர்கள் நியமனம்!கல்வி அமைச்சர் – சுசில் ப...
22/07/2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ தலைமையிலான ஆளும் தரப்பின் புதிய இடைக்கால கபினட் அமைச்சர்கள் நியமனம்!

கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த

கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா

சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன

விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மஹிந்த அமரவீர

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் – விஜயதாஸ ராஜபக்‌ஷ

சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சர் – ஹரீன் பெர்னாண்டோ

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன

நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க

வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி

பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்கிரமநாயக

வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – காஞ்சன விஜேசேகர

சுற்றாடற்துறை அமைச்சர் – நஸீர் அஹகமட்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ்
22.07.2022

நாளை
14/07/2022

நாளை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதம் மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகள் பரீட்சிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின...
14/07/2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதம் மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகள் பரீட்சிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Speaker Mahinda Yapa Abeywardena says the official announcement of President Gotabaya Rajapaksa’s resignation will be done tomorrow (Friday) once the legal vertification of President Gotabaya Rajapaksa’s letter and other legal procedures are followed.

     ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமசந்திர சற்றுமுன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்...
06/07/2022


ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமசந்திர சற்றுமுன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Police arrested Hirunika Premachandra and eight others who were protesting in front of President's House in Fort.

தெற்காசியாவின் வேகமான மனிதர் யுபுன் அபேகோன் புதிய சாதனை படைத்துள்ளார் முதற்தடவையாக 10செக்கன்களுக்குள் 100 மீற்றர்களை ஓடி...
03/07/2022

தெற்காசியாவின் வேகமான மனிதர் யுபுன் அபேகோன் புதிய சாதனை படைத்துள்ளார்
முதற்தடவையாக 10
செக்கன்களுக்குள் 100 மீற்றர்களை ஓடிக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
9.96 செக்கன் - புதிய சாதனை

நாளை முதல் ஜூலை 8 ம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
03/07/2022

நாளை முதல் ஜூலை 8 ம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

பாடசாலைகள் இனி  3 நாட்கள்கடந்த வாரம் மூடப்பட்ட பிரதான நகரங்களின் பாடசாலைகள் இனி வாரத்திற்கு 3 நாட்கள் ( செவ்வாய் ,புதன்,...
25/06/2022

பாடசாலைகள் இனி 3 நாட்கள்

கடந்த வாரம் மூடப்பட்ட பிரதான நகரங்களின் பாடசாலைகள் இனி வாரத்திற்கு 3 நாட்கள் ( செவ்வாய் ,புதன்,வியாழன் )மட்டும் இயங்கும். ஏனைய பாடசாலைகள் கடந்த வாரத்தில் செயற்பட்டமை போன்று தொடர்ந்து செயற்படலாம்.

- கல்வியமைச்சு அறிவிப்பு

ஹிருணிகா பதிலடி"எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்! அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ...
23/06/2022

ஹிருணிகா பதிலடி

"எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!
அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!"

- ஹிருணிகா பிரேமச்சந்திர

அருகிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்புதற்போதுள்ள போக்குவரத்து சிரமங்கள் காரணமாக ஆசிரியர்களுக்கு சலுக...
17/06/2022

அருகிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு

தற்போதுள்ள போக்குவரத்து சிரமங்கள் காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகைகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆசிரியர்களால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய, அவர்களுக்கு வசதியான பாடசாலைகளுக்கு தற்காலிக நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு சம்பந்தப்பட்ட இரு பாடசாலைகளின் அதிபர்களின் எழுத்து மூல அனுமதியின் அடிப்படையின் கீழ் மாத்திரம் குறித்த நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த நியமனங்கள் இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரை மாத்திரம் செல்லுபடியாகுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு பின்வரும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஒரே மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு இடையில் மற்றும் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்களை இணைப்பதற்கான அதிகாரம் உரிய மாகாண கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்படும்.
மாகாணங்கள் இரண்டிற்கு இடையே மாகாண சபை பாடசாலைகளின் ஆசிரியர்களை இணைப்பதற்கு, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் அனுமதியின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான தேசிய பாடசாலைகளில் இணைத்தல், கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்படும்.
கோரிக்கை விடுக்கும் ஆசிரியர், உரிய பாடசாலையில் மிகை எண்ணிக்கையில் உள்ளவராயின், அவர் சார்பாக ஒரு ஆசிரியரை அப்பாடசாலைக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை.
கோரிக்கை விடுக்கும் ஆசிரியர், பாடசாலையின் மிகை எண்ணிக்கையில் இல்லாவிட்டால், உரிய பதில் ஆசிரியரை வழங்கிய பின் இணைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதிபர்களின் அனுமதியுடன் சுமுகமான இடமாற்றங்கள் செய்யப்படுவதைப் போன்ற, அதே அடிப்படையில் இவ்வாறு இணைக்கப்படும் நியமனங்களும் கருதப்பட வேண்டும்.
கர்ப்பிணி மற்றும் மருத்துவ பரிந்துரைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் இணைப்புகள், குறித்த மருத்துவ ரீதியான காரணங்கள் அடங்கிய சான்றிதழ்களின் உறுதிப்படுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். (2007/20 சுற்றறிக்கையின் 3.4.ii இன் படி)
தேசிய பாடசாலைகள் தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்படும் இணைப்புக் கடிதங்களின் பிரதிகள் கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றங்கள் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.
இது தொடர்பில் அனைத்து மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுக்கள் மற்றும் செயலாளர்கள், அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள், அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் நிலவும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு, ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதும், மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதும் இந்த செயற்பாட்டின் நோக்கமாகும் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, இது குறித்த பாடசாலைக்கான இடமாற்றத்தை பெறுவதற்கான உரித்துடைமை அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பாம்புக்கடியால் அநுராதபுரத்தில் ஒரு மாதத்தில் 6 சிறுவர்கள் பலிகடந்த ஒரு மாத காலத்தினுள் அநுராதபுரம் மாவட்டத்தில் பாம்பு ...
15/06/2022

பாம்புக்கடியால் அநுராதபுரத்தில் ஒரு மாதத்தில் 6 சிறுவர்கள் பலி

கடந்த ஒரு மாத காலத்தினுள் அநுராதபுரம் மாவட்டத்தில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் ஆறு சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் துலன் சமரவீர தெரிவித்தார்.

சிறுவர்கள் உயிரிழப்பிற்கு காரணம் பாம்பு தீண்டியதன் பின்பு ஏற்படுகின்ற தொற்றுநோய் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்துவதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

அதற்கு இடையில் பாம்பு கடிக்குள்ளாகும் நோயாளர்களுக்கு வழங்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லாத காரணமாக அநுராதபுரம் கலத்தாவ பகுதியைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடந்த (08) பதிவாகியிருந்தது.

அவ்வாறு உயிரிழந்துள்ளவர் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய எம்.ஏ. ஜீ.சினுக் தெஷனாத் என்ற மாணவனாவர்.

குறித்த மாணவன் கடந்த 07 ஆம் திகதி மாலை தனது வீட்டுக்கு முன்னால் இன்னும் சில சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அயலிலுள்ள தோட்டத்தில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற வேளையில் பாம்பு தீண்டியுள்ளது. பின்பு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் நிலை மிக மோசமாக இருந்ததனால் மேலதிக சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பதற்கு வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

போதனா வைத்தியசாலையில் ஆரம்பகட்ட சிகிச்சை வழங்கியதன் பின்பு மேலதிக சிகிச்சை வழங்குவதற்கு வைத்தியசாலையில் போதுமானளவு மருந்து இல்லை என தெரிவித்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

வைத்தியசாலையில் சில மருந்து களை எழுதிக் கொடுத்தார்கள் வெளியில் இருந்து கொண்டு வரச் சொல்லி அனுராதபுரம் நகரில் உள்ள அனைத்து மருந்துச் சாலைகளையும் தேடிய போதும் மருந்து கிடைக்கவில்லை.மருந்து இல்லாத காரணத்தால் எனது பிள்ளையை காப்பாற்ற முடியவில்லை என சிறுவனின் தந்தை தெரிவித்தார்.அதனால் கடந்த 08 தனது மகன் அவரது வாழ்க்கைக்கு விடைபெற வேண்டியிருந்தது.

நானும் எனது மகனும் இந்நாட்டில் ஒரு டொலரைக்கூட திருடவில்லை. எங்களுக்கு இலவசமாக மருந்து கிடைக்காவிட்டாலும் பிரச்சினை இல்லை.குறைந்த பட்சம் காசி கொடுத்தாவது மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாத இந்நாட்டில் எனது மகன் பிறந்ததையிட்டு கவலைப்படுகின்றேன்.முடிந்தளவு கவனமாக இருங்கள் என சமூகத்திடம் லேண்டிக்கொள்கின்றேன்.பாம்பு தீண்டினாலும் மருந்து இல்லை, நாய் கடித்தாலும் மருந்து இல்லை பிள்ளைகளினதும் உங்களினதும் பாதுகாப்பு தொடர்பில் கொள்கை ரீதியில் பின்பற்றுமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொள்கின்றேன் என சிறுவனின் தந்தை மேலும் தெரிவித்தார்.

அது தொடர்பில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் துலான் சமரவீர விடம் வினவியபோது பாம்பு கடித்த பிறகு அதற்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இருப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார்

இந்த வாரம் முதல் அரச துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வ...
14/06/2022

இந்த வாரம் முதல் அரச துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இருப்பினும், இதில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு, துறைமுகம், விமான சேவைகள் ஆகிய துறைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை இல்லை.

Cabinet has approved the proposal to declare Fridays as holidays for Government sector employees from this week. However, this will NOT include the health, power & energy, education, port, defence sectors & other essential services.

👇
The current shortage of fuel has disrupted passenger transport, making it difficult for public
sector workers to access their own transportation.

Due to this situation, it seems appropriate
to grant government officials leave for one (01) working day of the week and provide them
with the necessary facilities to engage in agricultural activities in their backyards or
elsewhere as a solution to the food shortage that is expected to occur in the future.

Therefore the Cabinet of Ministers approved the proposal presented by the Minister of
Public Administration, Home Affairs and Provincial Council to close all government
institutions except agencies providing essential services such as water, electricity, health,
defense, education, transport, port and air services on Fridays for the next 3 months.

14.06.2022

அமரகீர்த்தி அத்துகோரள எம்.பியின் அனுதாபப் பிரேரணை க.பொ.த உயர்தரம்; திறந்த பல்கலையில் ஆங்கில டிப்ளோமா- சதொசவில் 24 வருட ச...
11/06/2022

அமரகீர்த்தி அத்துகோரள எம்.பியின் அனுதாபப் பிரேரணை

க.பொ.த உயர்தரம்; திறந்த பல்கலையில் ஆங்கில டிப்ளோமா
- சதொசவில் 24 வருட சேவை; எழுதுவினைஞராக இருந்து முகாமையாளர்
- 2008 இல் மாகாணசபை உறுப்பினர்; 2020 இல் எம்.பி.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தொடர்பான அனுதாபப் பிரேரணைக்கு நேற்று (10) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஒதுக்கப்பட்டிருந்தது.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அனுதாபப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் தமது அனுதாபத்தை வெளியிட்டனர்.

1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி அளுத்கமவில் பிறந்த அமரகீர்த்தி அத்துகோரள, அலுத்கம மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றதுடன், க.பொ.த உயர்தரத்தை கொழும்பு தேஸ்டன் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.

கணிதப் பிரிவில் உயர்தரத்தைப் பெற்ற பின்னர் சதோச நிறுவனத்தில் எழுது வினைஞராக இணைந்துகொண்ட அவர், அதில் முகாமையாளராகப் பதவியுயர்வு பெறும்வரை பணியாற்றியிருந்தார். சதோச நிறுவனத்தில் 24 வருடங்கள் சேவையாற்றிய பின்னர் அதிலிருந்து விடைபெற்று அப்போது பிரதிக் காணி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த சந்திரசிறி சூரியாராச்சியின் அலுவலகத்தில் இணைந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் பிரவேசித்த அவர் 2008 ஆம் ஆண்டு 13,000 விருப்பு வாக்குகளைப் பெற்று வடமத்திய மாகாண சபைக்கு தெரிவானார். 2012 மாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் தெரிவானார்.

புத்தசாசன அபிவிருத்தி, பிரதேச ரீதியிலான பல்வேறு உட்கட்டுமான வசதிகளின் அபிவிருத்தி, விவசாய மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, உதவிகளை வழங்குதல் போன்றவற்றுக்கு அவர் ஆற்றியது சிறந்த சேவையாகும். குறைந்த வருமானம் பெறுபவர்கள், போர்வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பாகச் செயலாற்றினார் என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தனது உரையில் குறிப்பிட்டார்.

2020 பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான இவர் இறக்கும் போது 58 வயதாகும். இவர் 2,000 ஆம் ஆண்டு மாலனி சில்வாவை மணந்து கொண்டதுடன், இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

இலங்கையில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் இல்லைஅவரவர் விருப்பதிற்கு அமைய அணிவது தடுக்கப்படவில்லை- ஏனைய வழிகாட்டல்களை பின...
09/06/2022

இலங்கையில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் இல்லை

அவரவர் விருப்பதிற்கு அமைய அணிவது தடுக்கப்படவில்லை
- ஏனைய வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம்

நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் உள்ளக ரீதியிலும் வெளியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் குறித்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள 2264/9 எனும் 2022 ஜனவரி 25ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்ட இவ்விடயம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தல் மூலம், முகக்கவசதத்தை அணிவது தடுக்கப்படவில்லை என்பதுடன், முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும் சுவாச நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது உகந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், COVID-19 PCR சோதனை/ ரெபிட் அன்டிஜன் பரிசோதனையை இதற்கான பரிசோதனையாக மேற்கொள்வதும் நிறுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொடர்பில் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டு அமுலில் உள்ள ஏனைய விடயங்கள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு முகக்கவசம் அணிவது இடைநிறுத்தப்பட்டது
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என, அப்போது புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி அறிவித்திருந்தார்.

ஆயினும் பொதுப் போக்குவரத்து மற்றும் மக்கள் ஒன்றுகூடி இடம்பெறும் உள்ளக நிகழ்வுகள் அல்லது செயற்பாடுகளின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவர் அறிவித்திருந்தார்.

ஆயினும் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்பது தொடர்பான அதன் முந்தைய முடிவை சுகாதார அமைச்சு மீண்டும் ஏப்ரல் 21ஆம் திகதி மீளப்பெற்றிருந்தது.

முகக்கவசம் அணிதல்
கொவிட்-19 தொற்றை அடுத்து கடந்த 2020 ஜனவரி 29ஆம் திகதி முதல், அனைத்து மருத்துவ சேவை ஊழியர்களுக்கும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி, அப்போதைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுற்றறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

Address

Kaduruwela
Polonnaruwa

Telephone

0774673731

Website

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கையில் இன்று posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to இலங்கையில் இன்று:

Videos

Share

Nearby media companies