Oluvil - Media

Oluvil - Media © The Official page of Oluvil
(1)

🌙 நாளை  ஜும்ஆ விபரம் 🌙        --------- 24/11/2023 -------- ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் :அஷ்ஷேஃக்: AL. கலீலுர்ரஹ்மான்...
23/11/2023

🌙 நாளை ஜும்ஆ விபரம் 🌙
--------- 24/11/2023 --------

ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக்: AL. கலீலுர்ரஹ்மான் (ஸலபி) (கல்முனை)

அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக்: IlM. யாஸீன் (காஷ்பி)

ஆலிம் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக்: MHM. நழீம் (ஸஹ்வி)

ஒலுவில், அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷெய்க் : M. முஹம்மட் ஜிப்றான் (கௌசி)

_________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀

02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

🌙 இறை இல்லத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு Oluvil - Media | 22 - 11 - 2023எமது ஒலுவில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின் ...
22/11/2023

🌙 இறை இல்லத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு

Oluvil - Media | 22 - 11 - 2023

எமது ஒலுவில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின் இணைச் சபைகளான பைத்துல் மால், பைத்துஸ் ஸக்காத், கட்டிடக் குழு மற்றும் வழிகாட்டல் ஆலோசனை சபை உடன் இனைந்து செயற்பட விருப்பமுள்ள தன்னார்வலர்களிம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

எனவே இதற்கான விண்ணப்ப படிவத்தினை எமது பள்ளிவாசல் காரியாலயத்தில் பெற்று அதனை பூர்த்தி செய்து எதிர்வரும் 2023.11.30 ஆம் திகதிக்கு முன்னர் மீள ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம்
நம்பிக்கையாளர் சபை
பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல்,
ஒலுவில்.

ஊடகப் பிரிவு
பெரிய பள்ளிவாசல்,
அதன் உப பிரிவுகள்

© SM31 | OLUVIL NEWS
_________________________
✨ ஒலுவிலூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை
02 வது குழு👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

மானிடரின் பிராத்தனைகளுக்காக🤲🏻🤲🏻
21/11/2023

மானிடரின் பிராத்தனைகளுக்காக🤲🏻🤲🏻

🛑 ஜனாஸா அறிவித்தல் 🔘 Oluvil - Media | 21-11-2023ஒலுவில் 02 ம் பிரிவைச் சேர்ந்த பிச்சைத்தம்பி சீனிம்மா என்பவர் இன்று வபாத...
21/11/2023

🛑 ஜனாஸா அறிவித்தல்

🔘 Oluvil - Media | 21-11-2023

ஒலுவில் 02 ம் பிரிவைச் சேர்ந்த பிச்சைத்தம்பி சீனிம்மா என்பவர் இன்று வபாத்தாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்

அன்னார், மர்ஹும் சின்னலெப்பை ஆதம்பாவா என்பவரின் மனைவியும் ரூபியா, லத்தீப், ரபியுடீன், பஷீர், ஜிப்ரி ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மைய்ய வாடியில் இடம்பெறும்.

தகவல்,
அன்னாரின் குடும்பம்

_________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀

02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

34 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா; தங்கம் வென்ற ஒலுவில் வீரன்(எம்.ஜே.எம்.வலீத்)🔘 Oluvil - Media | 20.11.20232023 ஆம் ஆ...
20/11/2023

34 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா; தங்கம் வென்ற ஒலுவில் வீரன்

(எம்.ஜே.எம்.வலீத்)

🔘 Oluvil - Media | 20.11.2023

2023 ஆம் ஆண்டுக்கான 34வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கொழும்பு சுகததாச வெளியரங்கில் இடம்பெற்றது.

இவ்விளையாட்டு நிகழ்வில் ஒலுவிலைச் சேர்ந்த இலங்கை இராணுவப் படையணி வீரர் முஹம்மது நெளசாத், 400 மீட்டர் தடைதாண்டல் போட்டியில் 53.14 செக்கன்களில் முதலிடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார். அதுமட்டுமல்லாது 4×400 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் தக்கவைத்து ஒலுவில் ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிகழ்வுகள் கடந்த 16ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

_________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀

02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

மனதால் மாற வேண்டிய மாற்றம்.
18/11/2023

மனதால் மாற வேண்டிய மாற்றம்.

அக் / அல் - ஜாயிஷா மகளிர் கல்லூரியின் தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - 2023Oluvil - Media  | 17 - 11 - 2023☄️...
17/11/2023

அக் / அல் - ஜாயிஷா மகளிர் கல்லூரியின் தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - 2023

Oluvil - Media | 17 - 11 - 2023

☄️ A. யூசுப் ஸயான் - 167
☄️ R. ஷஹ்மத் ஹிமா - 163
☄️ ML. அஸ்லி ஹஸீப் - 150
☄️ MN. சேகா மரியம் - 149
☄️ MF. பாத்திமா நபீஸா - 146

சித்தி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபருக்கு ஊர் சார்பான ஒலுவில் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்

மாணவர்களின் முயற்சி தொடர பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்

© SM31 | OLUVIL NEWS
_________________________
✨ ஒலுவிலூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை
02 வது குழு👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

ஒலுவில் அல்-மினாறா வித்யாலயத்தின் தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - 2023Oluvil - Media | 17-11-2023☄️முகம்மது ...
17/11/2023

ஒலுவில் அல்-மினாறா வித்யாலயத்தின் தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - 2023

Oluvil - Media | 17-11-2023

☄️முகம்மது றாபி சஹானின் மரியம் - 160.

☄️முகம்மது சமீம் இஃப்பத் சதா - 151.

☄️ முகம்மது ஜிப்ரி சிபா சபாஹத் - 147

இம்முறை மூன்று பேர் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும்

தரம் 05 வகுப்பாசிரியர் AM.நாசர் , பாடசாலை அதிபர் MY.அப்துல் மஜீட் ஆகியோருக்கு ஊர் சார்பான ஒலுவில் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்

மாணவர்கள் முயற்சி தொடர பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்

```© AS31 | OLUVIL NEWS```
___________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀wa.me/+94754744990```|OLUVILNEWS@$m```
*02 வது குழு* 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

ஒலுவில் அல்-மதீனா வித்யாலயத்தின் தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - 2023☄️உதுமாலெவ்வை அப்துல்லா அஸாரிக் - 158☄️...
17/11/2023

ஒலுவில் அல்-மதீனா வித்யாலயத்தின் தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - 2023

☄️உதுமாலெவ்வை அப்துல்லா அஸாரிக் - 158

☄️முகம்மட் அஹ்ஸான் சுதைஸ் அகமட் - 147

☄️முகம்மட் பைறூஸ் உமைர் முர்ஷி - 146

வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி அடைந்த மூன்று மாணவர்கள், சித்தி அடைந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாடசாலையின் அதிபர் ஊர் சார்பான ஒலுவில் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்

மாணவர்களின் முயற்சி தொடர பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்

ஒலுவில் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தின் தரம் _ 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - 2023 Oluvil - Media | 11-17-2023☄...
16/11/2023

ஒலுவில் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தின் தரம் _ 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - 2023

Oluvil - Media | 11-17-2023

☄️Mohamed Nowfal Saini - 151
☄️Nasirudeen Reesath Zarfa - 149
☄️Aliyur Rahman Muhammed Sahi - 148
☄️Ameen Hasni ahamed - 147
☄️Mohamed Harees Fathima Atheera - 147
☄️Mohamed Harees Fathima Aleena - 146

பரீட்சைக்கு தோற்றிய மாணவர் சித்தி வீதம் 85%

அல்ஹம்துலில்லாஹ்

சித்தி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபருக்கு ஊர் சார்பான ஒலுவில் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்.

மாணவர்களின் முயற்சி தொடர பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்

தகவல் : MA.அப்துல் றஊப்
(தரம் - 5 பொறுப்பாசிரியர்)

© AS31 | OLUVIL NEWS
___________________________
✨ ஒலுவிலூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀
02 வது குழு👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

🛑 ஜனாஸா அறிவித்தல்🔘 Oluvil - Media | 16-11-2023ஒலுவில் 02 ம் பிரிவைச் சேர்ந்த அவ்வா உம்மா அதாவது (பூங்கிளி) என்று அழைக்க...
16/11/2023

🛑 ஜனாஸா அறிவித்தல்

🔘 Oluvil - Media | 16-11-2023

ஒலுவில் 02 ம் பிரிவைச் சேர்ந்த அவ்வா உம்மா அதாவது (பூங்கிளி) என்று அழைக்கப்படுபவர் இன்று வபாத்தாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்

அன்னார், மர்ஹூம் முஹம்மது ஹனீபா என்பவரின் மனைவியும் பக்கீர், சைனப், ஆகியோரின் தயாரும் ஜெஸீமா, நூரி, வஜீஹா, முபாஸா, சிபானி, சிபான், சிராஜ், அஜ்மல், அபீல் ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்.

குறிப்பு: அன்னாரின் ஜனாசா அவரின் மகள் பக்கீர் என்பவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகையைத் தொடர்ந்து ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.

தகவல்,
அன்னாரின் பேரன்
அஜ்மல்

_________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀
02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

🌙 நாளை  ஜும்ஆ விபரம் 🌙        --------- 17/11/2023 --------  ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் :அஷ்ஷேஃக்: Al. பைசல் (மதனி) ...
16/11/2023

🌙 நாளை ஜும்ஆ விபரம் 🌙
--------- 17/11/2023 --------

ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக்: Al. பைசல் (மதனி)

அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக்: MCM. ஜப்ரி (சஹ்தி)

ஆலிம் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக்: MHM. நழீம் (ஸஹ்வி)


தகவல் :தலைவர்,
குத்பா குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - ஒலுவில் கிளை

ஒலுவில், அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷெய்க் : AMM. மனாஸ் (அல் ஜாமீயி)
பொலன்னறுவை

_________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀

02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

💥 தேசிய விருது பெற்றார் பல்துறைக் கலைஞர் அதிபர் ஜமால்டீன் வஹாப்தீன் ✨️🔘 Oluvil - Media | 15.11.2023👉🏻 2022 ஆம் ஆண்டு நடத...
15/11/2023

💥 தேசிய விருது பெற்றார் பல்துறைக் கலைஞர் அதிபர் ஜமால்டீன் வஹாப்தீன் ✨️

🔘 Oluvil - Media | 15.11.2023

👉🏻 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கொடகே தேசிய ஆக்க இலக்கியப் பிரதிப் போட்டியில் சிறந்த சிறுகதை தொகுப்பு பிரதியாக தேர்வு செய்யப்பட்டது ஒலுவில் பல்துறைக் கலைஞர் J.வஹாப்தீனுடைய அவனுக்கும் சிறகுகள் உண்டு எனும் நூல்
அதனடிப்படையில் இந் நூலுக்கான கொடகே தேசிய சாகித்ய பரிசளிப்பு விழா (2023.11.15) இன்று பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பு 7ல் அமைந்துள்ள தேசிய நூலக சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

♦️ இவ் விருது பெற்ற எமது ஊரின் பல்துறைக் கலைஞர் J. Whahabdeen அவர்களுக்கு ஊர் ரீதியான ஒலுவில் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள். 🥳

_________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀

02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

நீண்ட நாட்களுக்கு பின்னர்🎆புதுப்பொலிவு பலரின் அபிமானம் பெற்ற        🔸அக்கறை டேஸ்ட் கடை 🔸இன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்பட...
14/11/2023

நீண்ட நாட்களுக்கு பின்னர்

🎆புதுப்பொலிவு பலரின் அபிமானம் பெற்ற
🔸அக்கறை டேஸ்ட் கடை 🔸

இன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளது.

சீவல்
கிழங்கு
வடை
கீரைவடை

பல்கலைக்கழக வீதி,
ஒலுவில் 04

குறிப்பு: வாடிக்கையாளர்களின் வேண்டுகோளிற்கிணங்க திங்கள் முதல் ஞாயிறு வரை திறக்கப்படவுள்ளது.

______________________________________________
கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் உங்கள் விளம்பரங்களையும் பதிவிட Oluvil News, Oluvil - Media : 075 86 18 184

✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀

02 வது குழு 👇🏻

✨️ தேசியம் செல்லும் ஒலுவில் லைட் ரூக் அகடமி 🥳🔘 Oluvil - Media | 12.11.2023👉🏻 கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று முடிந்த இலங...
12/11/2023

✨️ தேசியம் செல்லும் ஒலுவில் லைட் ரூக் அகடமி 🥳

🔘 Oluvil - Media | 12.11.2023

👉🏻 கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று முடிந்த இலங்கை இளையோர் சதுரங்க தொடர் -2023/24 (அம்பாறை மாவட்டம்) ஒலுவில் லைட் ரூக் அகடமி சார்பாக 13 மாணவர்கள் பங்குபற்றியதோடு அதில்

♦️ ஒரு தங்கம்
♦️ ஒரு வெள்ளி
♦️ இரண்டு வெண்கலம்

அடங்கலாக மொத்தம் ஐந்து மாணவர்கள் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அல்ஹம்துலில்லாஹ்

⭕️ தேசியம் செல்லும் வீரர்கள்...

01. எம்.ஆர்.அர்கம் ஷைனி - சாம்பியன் (07 வயது)
அல்- தெற்கு பாத்திமா வித்தியாலயம்-ஒலுவில்

02. என்.நைரா - 2ம் இடம் (11 வயது)
அல்- ஹிதாயா மகளீர் கல்லூரி- பாலமுனை

03. எம்.எப்.சமி யுஸ்ரி - 3ம் இடம் (09 வயது)
அல்-மதீனா வித்தியாலயம்-ஒலுவில்

04. எம்.ஏ.ஏ.யூசுப் மிக்தாம் - 03ம் இடம் (11 வயது)
அல்- ஹம்றா தேசிய பாடசாலை- ஒலுவில்

05. என்.எம்.நப்ஹான் - 4ம் இடம் (11 வயது)
அல்- ஹம்றா தேசிய பாடசாலை- ஒலுவில்

👉🏻 மேலும் இப்போட்டியில் பங்கபற்றிய ஏனைய வீரர்களையும் வாழ்த்துகிறோம்.
இவர்களை அழைத்து சென்று ஒருங்கினணப்பு செய்த லைட் ரூக் அகடமி முகாமையாளர் NG.Nufail அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்...

_________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀

02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

✨️ மதிப்புக்குரிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு  நற்செய்தி.... 💫       ⭕️ இன்ஷா அல்லாஹ் இன்று முதல் உங்கள் நாவுக்கு சுவையான ந...
11/11/2023

✨️ மதிப்புக்குரிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.... 💫




⭕️ இன்ஷா அல்லாஹ் இன்று முதல் உங்கள் நாவுக்கு சுவையான நீங்கள் விரும்பும் அளவுகளில் பெற்றுக்கொள்ள கூடிய வகையில் நமது...

💥 கிழக்கிலங்கையின் மண்வாசனையுடன்...
கூடிய பகல் போசனத்தை
இயற்கை எழில் மிகுந்த #ரிவர்கார்டனில் பெற்றுக்கொள்ளலாம்
என்பதனை பெரும் மகிழ்ச்சியுடன் எமது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு அறிய தருகின்றோம்....

எனவே
வழமை போன்று உங்கள் வருகையை உறுதிப்படுத்தி கொள்ளுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

♦️ Rice and Curry Menu

👉🏻 மீன் - 300/-
👉🏻 மரக்கறி -250/-
👉🏻 முட்டை-280/-
👉🏻 இறைச்சி-350/-
👉🏻 கோழி-350/-
👉🏻 நண்டு-450/-
👉🏻 கணவாய்-500/-
👉🏻 பாபத்-350/-
👉🏻 நாட்டுக்கோழி-700/-
👉🏻 BBQ CHICKEN
👉🏻 BBQ FISH
👉🏻 Normal பிரியாணி
👉🏻 சகன்-4000/
👉🏻 பார்சல்-650/-
👉🏻விசேட பிரியாணி (மஜ்பூஸ்) -7500/-

என இன்னும்
பல வகை நாவுக்கு ருசியான உணவுகளை பெற்றுக் கொள்ள உடன் நாடுங்கள்...

குறிப்பு: வெள்ளிக்கிழமைகளில் விசேட பிரியாணி ஒர்டர்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.


RIVER GARDEN

மேலதிக தகவல்களுக்கு,

📲 0765484636

_________________________
Paid ad கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் உங்கள் விளம்பரங்களையும் பதிவிட
075 86 18 184
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀

02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

⭕ தயவுசெய்து 🛑🔘 Oluvil - Media 10.11.2023மீராலெப்பை இபான் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை(NIC), வா...
10/11/2023

⭕ தயவுசெய்து 🛑

🔘 Oluvil - Media 10.11.2023

மீராலெப்பை இபான் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை(NIC), வாகன சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் ஒரு தொகைப் பணம் உள்ளடங்கலான பணப்பை இன்று மாலை 03 மணியளவில் நிந்தவூர் தொடக்கம் ஒலுவில் வரையான பகுதியில் தவறவிடப்பட்டுள்ளது.

தயவுசெய்து கண்டெடுத்தவர்கள்
தொடர்புகளுக்கு,

📲 075 636 6388

எமது நாட்டின் இப்போதைய  பொருளாதார சூழலில் ❗️❗️❗️👉🏻 குறைந்த வருமானத்தில்  உங்களினது தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடி...
10/11/2023

எமது நாட்டின் இப்போதைய பொருளாதார சூழலில் ❗️❗️❗️

👉🏻 குறைந்த வருமானத்தில் உங்களினது தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் கவலை கொள்பவரா நீங்கள்...⁉️

😇 இதோ உங்களுக்காக தொழில்நுட்ப உதவியுடன் நாளாந்தம் 2000-5000 ரூபா வரை உங்கள் வருமானத்தை அதிகரிக்க ஒரு சிறந்த வழி காட்டல்...💰

✨️ அக்கரைப்பற்று மண்ணில் முற்றிலும் குளிரூட்டிடப்பட்ட ஆடம்பர மண்டபத்தில் உலகத்தரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எமது WORKSHOP இல் கலந்து கொண்டு 33000/- பணப்பொதியினை வென்றிடுங்கள்.

🫵🏻 குறிப்பு : ஆசனங்கள் (200) மட்டுப் படுத்தப்பட்டுள்ளதால் ரூபா 4800/- பதிவுக் கட்டணத்தை கீழுள்ள வங்கிக் கணக்கில் செலுத்தி பற்றுச் சீட்டை வாட்சப் செய்யவும்.

AM. Faris
Ac/No: 8005901926
Commercial Bank
Kalmunai Branch

மேலும் எமது,

WhatsApp Group

https://chat.whatsapp.com/LJCmotGeRFf8DhFQp5MUYO

WhatsApp Chennel

https://whatsapp.com/channel/0029VaDvsLw9hXFBLhBVJf0M

மேலதிக
விபரங்களுக்கு,

📲 071 20 59 404
AM. Faris
Crypto Currency & Block Chain Consultant

_________________________
Paid ad கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் உங்கள் விளம்பரங்களையும் பதிவிட
075 86 18 184
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀

02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

🛑 ஜனாஸா அறிவித்தல்🔘   Oluvil - Media | 09.11.2023ஒலுவில் 5ம் பிரிவைச் சேர்ந்த ஒக்காஸ் லெப்பை சாறா உம்மா என்பவர் இன்று வப...
09/11/2023

🛑 ஜனாஸா அறிவித்தல்

🔘 Oluvil - Media | 09.11.2023

ஒலுவில் 5ம் பிரிவைச் சேர்ந்த ஒக்காஸ் லெப்பை சாறா உம்மா என்பவர் இன்று வபாத்தாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னார், மர்ஹும் முகம்மது காசிம் அவர்களின் மனைவியும் மர்ஹும் அல்ஹாஜ் MCM.இஸ்மாயில் (மௌலவி), மர்ஹும் அல்ஹாஜ் MCM.சைனுத்தீன், அல்ஹாஜ் MCM.ஹுஸைன், MCM.ஹாமீம், MCM.ஹனீப், MC.சித்தி அனீதா, MCM.சுக்கூர், MCM.சித்தீக், MC.சித்தி ஜெஸிலா ஆகியோரின் தாயாரும் NL.பக்கீர் அலி, KL.ஹிதாயத்துல்லாஹ் (SLPA உத்தியோகத்தர்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை காலை 7 மணியளவில் ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.

தகவல்,
அன்னாரின் மகன்
MCM.ஹுஸைன்

_________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀

02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

💥 இயற்கை அழகினை ரசித்து..... ருசியான....உணவுகளுடன் நாள் பொழுதினை கழிக்க... 10 வருடத்திற்குப் பின்❗️ 💫 மீண்டும் புதுப்பொல...
09/11/2023

💥 இயற்கை அழகினை ரசித்து.....
ருசியான....
உணவுகளுடன் நாள் பொழுதினை கழிக்க...

10 வருடத்திற்குப் பின்❗️

💫 மீண்டும் புதுப்பொலிவுடன் கிழக்கில் ஒலுவில் மண்ணில் உதயமாகின்றது.

👨🏻‍🍳 அலீம் ஹோட்டல் 🌟

👇🏻 தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில்
(ஒலுவில் - 01)

✨️ நாளை மாலை 04 மணிக்கு உதயமாகின்றது...

👉🏻 பலவிதமான சுவைகளில்...

♦️ காலை, மாலை உணவுவகைகள்...

👉🏻இடியப்பம்
👉🏻 அப்பம்
👉🏻பரோட்டா
👉🏻கொத்து
👉🏻 றைஸ்
என உங்களுக்கு தேவையான பல வகை உணவுவகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

🇦 🇱 🇪 🇪 🇲 🇭 🇴 🇹 🇪 🇱

📞 மேலதிக தொடர்புகளுக்கு,

📲.....0755021713
📲.....0760533553

_________________________
Paid ad கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் உங்கள் விளம்பரங்களையும் பதிவிட
075 861 8184

✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀

02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

🌙 நாளை  ஜும்ஆ விபரம் 🌙        --------- 10/11/2023 -------- ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் :அஷ்ஷேஃக்: ANM. நவாஸ் (ஷரபி) ...
09/11/2023

🌙 நாளை ஜும்ஆ விபரம் 🌙
--------- 10/11/2023 --------

ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக்: ANM. நவாஸ் (ஷரபி)

அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக்: அப்துல் அஸீஸ் (ஸஹ்வி)

ஆலிம் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக்:
MHM. நழீம் (ஸஹ்வி)

தகவல் : தலைவர்,
குத்பா குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - ஒலுவில் கிளை

அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷெய்க்: MCM. ஜப்ரி (ஸஃதி)

ஒலுவிலூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவைக்கு 👇🏻

02 வது குழு🪀
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

🛑 ஜனாஸா அறிவித்தல்🔘 ```OLUVIL NEWS| 08-11-2023```ஒலுவில் 03 ம் பிரிவைச் சேர்ந்த சாய்வுத்தம்பி காசிம்பாவா அதாவது (மறையன் ...
08/11/2023

🛑 ஜனாஸா அறிவித்தல்

🔘 ```OLUVIL NEWS| 08-11-2023```

ஒலுவில் 03 ம் பிரிவைச் சேர்ந்த சாய்வுத்தம்பி காசிம்பாவா அதாவது (மறையன் ராசா) என்று அழைக்கப்படுபவர் இன்று வபாத்தாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்

அன்னார்,
மர்ஹூமா அய்ஸா உம்மா என்பவரின் கணவரும் ஹய்தர், அப்துல் காதர், லாபிர், சபீர், ஜெமீலா, உபைதா, ஜாஹிறா மர்ஹூமா ஜாயிஸா, ஜஹீறா மற்றும் பஸ்மி ஆகியோரின் தந்தையும் யாசீன், அமீர், நளீம், நஜிமுதீன் மற்றும் அஸாம் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

👉🏻 அன்னாரின் ஜனாஸா அவரின் மகள் உபைதாவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்சா அல்லாஹ் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.

தகவல்,
அன்னாரின் பேரன்
பெளஸ்தீன்

_________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀
02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

06/11/2023

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி

மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்

04/11/2023

💥கிழக்கிலங்கையின் முதற் தர ஒலி, ஒளி அமைப்பு வழங்குனர் A.L.M Sound, Oluvil

👇🏻உங்கள்

🎤நிகழ்வுகள்
🎤விழாக்கள்
🎤விளையாட்டு போட்டிகள்
🎤கலாசார நிகழ்வுகள்

💥என அனைத்திற்கும் துல்லியமான நவீன ஒலி அமைப்பிலான ஒலி & ஒளிக்கு

👉🏻 தொடர்புகளுக்கு,
077 22 01 761 | 075 63 63 133

______________________________________________
Paid ad கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் உங்கள் விளம்பரங்களையும் பதிவிட Oluvil - Media

🔴 தரம் 5 புலமைப் பரீட்சையினை எழுதிய மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள் ஆரம்பம்   ✨️🇧 🇷 🇦 🇮 🇳 🇾 🇨 🇴 🇱 🇱 🇪 🇬 🇪 💫பல வருட அனுப...
04/11/2023

🔴 தரம் 5 புலமைப் பரீட்சையினை எழுதிய மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள் ஆரம்பம்

✨️🇧 🇷 🇦 🇮 🇳 🇾
🇨 🇴 🇱 🇱 🇪 🇬 🇪 💫

பல வருட அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டும்...❗️

புதிய நெறியாள்கை உத்திகளுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளோடும்...

எழுத, வாசிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவு தனிப்பட்ட கற்பித்தலின் மூலமும்...

வெற்றிகரமாக ஒலுவில் 03, பழைய தபாலக வீதியில் இயங்கி வருகின்றது.

BRAINY COLLEGE

⭕️ ஆறு மாத கால இவ்வகுப்பானது பின்வரும் விடயங்களை கொண்டு இருக்கின்றது,

👉🏻 Grammar & Vocabulary Building
👉🏻 Spoken English
👉🏻 Zoom With Native English Speakers
👉🏻 Presentation Skills
👉🏻 Public Speaking
👉🏻 Group Discussion
👉🏻 One Teaches The Others

🫵🏻 அனுமதி முடிவுத்திகதி: 10.11.2023

🫵🏻 குறிப்பு: ஒரு வகுப்பில் 16 மாணவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவர்.

மேலதிக விபரங்களுக்கு,
📲 076 89 27 198
🪀 075 72 98 214

BREAKING BARRIERS TO SPEAKING ENGLISH IN PUBLIC SPHERE...

_________________________
Paid ad கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் உங்கள் விளம்பரங்களையும் பதிவிட 075 86 18 184
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀
02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

நாளை ஒலுவில் அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசலில்.....Oluvil - Media | 02 - 11-2023👇🏻நாளை 03.11.2023 வெள்ளிக்கிழமைஒலுவில் அன்சாரி ...
02/11/2023

நாளை ஒலுவில் அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசலில்.....

Oluvil - Media | 02 - 11-2023

👇🏻நாளை 03.11.2023 வெள்ளிக்கிழமை

ஒலுவில் அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்மாவினை தொடர்ந்து கதிரைகள் நன்கொடைக்காக வைக்கப்பட்டிருக்கும் சென்ற வெள்ளிக்கிழமை தவற விட்டவர்கள், முடியுமானவர்கள் உங்களது பங்களிப்பாக ஒரு கதிரையின் தொகையான 1500/- ஐ செலுத்தி அல்லது முன்பதிவு செய்து செய்து எமதூர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் கதிரை தேவையினை நிவர்த்தி செய்ய முடியும்.

மார்க்கப் பணி புரிந்தோர் கூட்டத்தில் அல்லாஹ் எம் அனைவரையும் சேர்ப்பானாக.

நிருவாகம்
ஜனாசா நலன்புரிச்சங்கம்.

Janaza Welfare Society - Oluvil
83368050
BOC

Contact- SMM.Jahan(Treasurer)
0750737248
ASM.Arafath(Secretary)
0755427473

© SM31 | OLUVIL NEWS
___________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை
02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

🌙 வெள்ளிக்கிழமை ஜும்ஆ விபரம் 🌙               --------- 03/11/2023 -------- ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் :அஷ்ஷேஃக் : IL...
02/11/2023

🌙 வெள்ளிக்கிழமை ஜும்ஆ விபரம் 🌙
--------- 03/11/2023 --------

ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக் : ILM. யாஸீன் (காஷ்பி)

அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக்: Dr. MSM. ரஷாத் (ஸஹ்வி,றியாழி)

ஆலிம் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷேஃக் : MHM. நழீம் (ஸஹ்வி)

தகவல் : தலைவர்,
குத்பா குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - ஒலுவில் கிளை

அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசல் :
அஷ்ஷெய்க் மெளலவி : AM. நிப்ராஸ் (முப்தி) (சக்காபி பாசில் இம்தாதி)

© SM31 | OLUVIL NEWS
_________________________
ஒலுவிலூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவைக்கு 👇🏻
02 வது குழு
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

🛑 ஜனாஸா அறிவித்தல்🔘  OLUVIL NEWS | 31-10-2023பாலமுனை 03 ம் பிரிவைச் சேர்ந்த ஹாஜியானி ஆதம் லெப்பை லதீபா உம்மா என்பவர் இன்...
31/10/2023

🛑 ஜனாஸா அறிவித்தல்

🔘 OLUVIL NEWS | 31-10-2023

பாலமுனை 03 ம் பிரிவைச் சேர்ந்த ஹாஜியானி ஆதம் லெப்பை லதீபா உம்மா என்பவர் இன்று வபாத்தாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்

அன்னார், மர்ஹும் அல் ஹாஜ் மெளலவி OL.கலந்தர் லெப்பை என்பவரின் மனைவியும்
KL.உபைதுள்ளா (அதிபர்)
KL.ஹிதாயத்துள்ளா (SLPA)
KL.ஹிஸ்புள்ளா (ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று)
KL.ஹினாயத்துள்ளா
KL.தாஜுனிஸா
KL.ஜெமினுனிஸா
ஆகியோரின் தாயாரும் மர்ஹும் MCM.சைனுத்தீன்,STM.றஹ்ம்த்துள்ளா (ஆதார வைத்தியசாலை AKP) ஆகியோரின் மாமியாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் சுபஹ் தொழுகை தொடர்ந்து இடம்பெறும்.

தகவல்,
அன்னாரின் மகன்
KL.உபைதுள்ளா (அதிபர்)

____________________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀
02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

🛑 இலங்கையில் பிறப்புக்களை விட அதிகரித்து வரும் இறப்புக்கள்🔘 Oluvil - Media | 30.10.2023இந்த நாட்டில் உயிரிழப்போரின் எண்ண...
30/10/2023

🛑 இலங்கையில் பிறப்புக்களை விட அதிகரித்து வரும் இறப்புக்கள்

🔘 Oluvil - Media | 30.10.2023

இந்த நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்நிலைமை காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 2012 ஜூலை முதல் 2013 ஜூன் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 125,626 ஆக பதிவாகியுள்ள போதிலும், 2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 190,600 என்று தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் நாட்டின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 144,345 ஆக குறைந்துள்ளதாகவும் அறிக்கைகள் காட்டுகின்றன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, இறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

எவ்வாறாயினும், இந்த மரணங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை, மேலும் இந்த நாட்டில் கொவிட் பரவியதன் பின்னர் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தடுப்பூசி குறித்து பல்வேறு தரப்பினரிடையே பல்வேறு கருத்துகள் இருந்தாலும், இது தொடர்பாக இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

உலகில் சராசரியாக வருடாந்த இறப்பு எண்ணிக்கை 15 முதல் 45 வீதம் வரை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

_________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀
02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

30/10/2023

💥 ஒலுவில் ஊடக வலையமைப்பின்( Oluvil Media, Oluvil News) ஏற்பாட்டில்,

🎙️இலங்கை வானொலி பிறை FM அறிவிப்பாளரும் பல்துறைக்கலைஞருமான ஆசிரியர் ஜே.வஹாப்தீன் எழுதிய,

🕊️அவனுக்கும் சிறகுகள் உண்டு🕊️

நூல் வெளியீட்டு நிகழ்வு

💥 இன்று மாலை 04.00 மணியளவில் ஸஹீட் ஹாஜி இல்லத்தில்...

🎥 நேரடி ஒளிபரப்பு :
Oluvil - மீடியா | 30-10-2023

💥ஒலுவில் ஊடக வலையமைப்பின்( Oluvil Media, Oluvil News) ஏற்பாட்டில், 📍இன்று மாலை 04.00 மணியளவில் ஸஹீட் ஹாஜி இல்லத்தில்இலங்...
30/10/2023

💥ஒலுவில் ஊடக வலையமைப்பின்( Oluvil Media, Oluvil News) ஏற்பாட்டில்,

📍இன்று மாலை 04.00 மணியளவில் ஸஹீட் ஹாஜி இல்லத்தில்

இலங்கை வானொலி பிறை FM அறிவிப்பாளரும் பல்துறைக்கலைஞருமான ஆசிரியர் ஜே.வஹாப்தீன் எழுதிய,

🕊️ அவனுக்கும் சிறகுகள் உண்டு 🕊️
நூல் வெளியீட்டு நிகழ்வு

Oluvil - Media | 30-10-2023

https://m.facebook.com/story.php?story_fbid=314712371187682&id=100079467641070&mibextid=Nif5oz

👎🏻😞
29/10/2023

👎🏻😞

🛑 ஜனாஸா அறிவித்தல்🔘 OLUVIL NEWS | 29- 10-2023ஒலுவில் 07 ம் பிரிவைச் சேர்ந்த ஆதம் லெப்பை அபூபக்கர் என்று அழைக்கப்படுபவர் ...
29/10/2023

🛑 ஜனாஸா அறிவித்தல்

🔘 OLUVIL NEWS | 29- 10-2023

ஒலுவில் 07 ம் பிரிவைச் சேர்ந்த ஆதம் லெப்பை அபூபக்கர் என்று அழைக்கப்படுபவர் இன்று வபாத்தாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்

அன்னார்,
மர்ஹூமா சுலைஹா உம்மாவின் கணவரும் சுபைதா, அனிதா, பௌசியா, லத்தீப், சக்கீனா, ரஹ்மா மற்றும் சபியா ஆகியோரின் தந்தையும்

மர்ஹும் சைனப் முஸ்தபா, ஆப்தீன், ஹசனா, நூஹ்லெப்பை, பக்கீர், சீனத்து ஆகியோரின் சகோதரரும்

மர்ஹும் ஹனீபா, ரபீக், ஜனாப், பைசால், ஜஹான், அஜ்மல்கான், ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்சா அல்லாஹ் இன்று இஷா தொழுகையைத் தொடர்ந்து ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.

தகவல்,
அன்னாரின் மகன்
AL. லத்தீப்

_________________________
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை 🪀
02 வது குழு 👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

மாறாத அவள் மனம் 🎯காலையில் எழுந்து தாய்க்கு உதவியாக வீட்டு வேலைகளை அவசரமாகச் செய்துவிட்டு பாடசாலைக்குச் செல்ல ஆயத்தப்பட்ட...
29/10/2023

மாறாத அவள் மனம் 🎯

காலையில் எழுந்து தாய்க்கு உதவியாக வீட்டு வேலைகளை அவசரமாகச் செய்துவிட்டு பாடசாலைக்குச் செல்ல ஆயத்தப்பட்டாள் பரீதா.

சற்று தாமதமானாலும் வந்துசேர்ந்து நண்பி பாத்திமாவுடன் பரீட்சையைப் பற்றி பேசிக்கொண்டு செல்லும் போதே பாடசாலையின் ஆரம்ப மணி கேட்டது. இருவரும் சாதாரண ஏழைப் பிள்ளைகள்.

உயர்தரப் பிரிவில் கல்வி கற்று முன்னணியில் புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடிக்கொடுக்கும் ஏனைய மாணவர்களைப்போல் இருந்ததால் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்.

நல்ல வாட்டசாட்டமானவர்களாக இருந்ததால், இளவல்களுக்கு ஒரு கண். போகும்போதும் வரும்போதும் புரியாத கேள்விகள். இவற்றுக்கெல்லாம் பதில் கொடுக்காமல் தானும் தன் வேலையுமாக இருந்தார்கள்.

செல்வந்த வீட்டுப் பிள்ளைகளிடம் இப்படியான சேட்டைகள் நடந்தால் வேறுவிதமான விளைவுகள் ஏற்படும் என்பதால் அவர்களை விட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

தொடர்ச்சியாக தன்னை இழிவுபடுத்தும் செல்வந்த வீட்டு மாணவனைப் பற்றி எடுத்துக்கூறி தாயிடம் வேதனைப்பட்டுக் கொண்டாள் பாத்திமா. பல தடவைகள் ஆசிரியர்களால் கட்டுப்படுத்தப்பட்டாலும் கட்டுப்படாமல் போய்விட்டான்.

மகளின் எதிர்காலம் பாழாகிப்போய்விடக் கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு செல்வந்தர் வீட்டுக்குச் சென்றாள் பாத்திமாவின் தாய். தலைமுடியை ஒருவகையில் சிலிப்பி வெட்டிக்கொண்டு நின்ற அந்தப் பையனிடம், "வாப்பா இருக்கிறாங்களா ?” என்று ஆவேசத்துடன் கேட்டாள். உள்ளே இருந்து தகப்பன் வந்தபோது அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

நடந்த விடயங்களை அமைதியாக எடுத்துச் சொல்லி கண்ணீர் விட்டாள். அப்போது அவளை அமைதியடையச் சொன்னவர், அருகில் நின்ற மனைவியைப் பார்த்து,
"கேட்டாயா, உன் மகனின் சீத்துவத்தை ?"

"நான் என்ன செய்யலாம். ஒழுங்கா புள்ளயை வளக்காம கண்ட நிண்டபடி அலையவிட்டது நீங்கதானே ?'' தாய் கோபத்தோடு சொன்னாள்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்படப் போகும் நிலையை எண்ணி விடை பெற்றுச் செல்லும் முன்னர்,
“மகளை. நிம்மதியாக வாழ விட வழிவிடச் சொல்லுங்க மகனிடம்." என்று சொல்லி கோபம் தணிந்தவளாக வீட்டை நோக்கிச் சென்றாள்.

வீட்டுக்கு வந்தவள் தன் மகளிடம் எல்லாவற்றையும் விபரமாக எடுத்துச் சொன்னபோது நிம்மதி பெருமூச்சு விட்டாள். யாருடைய பிள்ளையாவது அவமானப்படக் கூடாது என்பதில் வேறு கருத்து அவளிடம் இருக்கவில்லை.

"வாழும் வளரும் பெண்பிள்ளைகளிடத்தில் ஒழுக்கம் இல்லாமல் நடந்துகொண்டதை எண்ணி கவலைப்பட்டான். தன்னுடையை சகோதரியிடம் இப்படியொருவர் நடந்துகொண்டால் அவமானமாக இருக்குமே என்பதை ஒருகணம் எண்ணிப் பார்த்து வெட்கமடைந்தான்.

படிக்கவேண்டிய காலத்தில் பெண்பிள்ளைகளிடம் எதையெதையோ பேசியதுான் மிச்சம்" என்று மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டான்.

யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு உள்ளே இருந்த பாத்திமா வெளியே வந்து பார்த்தாள். செல்வந்த வீட்டுப் பையன் என்று அறிந்துகொண்டு, "வீட்டில யாரும் இல்லாத நேரம் பார்த்து எதற்காக வந்தீங்க" என்று கேட்டாள்.

"என்னை மன்னித்துக்கொள்ளுங்க. நடந்த விடயத்துக்காக மனதில எதையும் வெச்சுக்கொள்ளாதீங்க. நீங்க அழகாக இருக்கிறீங்க என்பதற்காக உங்க விருப்பத்தை அறிந்து கொள்ளத்தான் இப்படி நடந்துகொண்டேன்" என்று வினயமாகச் சொன்னான்.

"நீங்களெல்லாம் செல்வந்த வீட்டுப்பிள்ளைகள். அதை மனதில வெச்சுக்கொண்டு ஏழைப் பிள்ளைகளிடம் முறைகேடாக நடந்துகொள்ளாதீங்க" என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டாள். தான் செய்த தவறை எண்ணி மனம் வருந்தியவன் வெட்கப்பட்டான்.
சிலிப்பிய முடியை பிடித்துக்கொண்டு அழுதான். வெட்கம் ஒருபுறம். காதலில் தோல்வி மறுபுறம். அவனை வருத்தியது. பெற்றோரின் சொல்லை புறக்கணித்துவிட்டு நண்பர்களின் வலைக்குள் 'சிக்கிக்கொண்டதை
எவ்வாறு விலக்கிவிடலாம் என்று சிந்தித்தான்.

சொந்த ஊரை விட்டு வேறு எங்கேயாவது போய்விடலாமா என்று நண்பர்களிடம் கேட்டான். அவர்கள் யாருமே பதில் சொல்லாமல் போய்விட்டார்கள். கையில் பணம் இருந்தபோது நண்பர்களாக இருந்தவர்கள் கூட கை கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

பாத்திமா வைராக்கியம் பிடித்தவளாக இருக்கவில்லை. பெண்பிள்ளைகள் மீது அவதூறு செய்யும் ஆண்களை வெறுத்தாளே தவிர, ஏனைய ஆண்களை கண்ணியப்படுத்தினாள். படித்து முடிக்கும் வரை காதல் பக்கமோ, கல்யாண பக்கமோ கவனம் செலுத்தாமல் இருந்தாள். இதற்கு உடந்தையாக ஏழைப் பெற்றோர்களும் இருந்தார்கள்.

பாத்திமாவின் நண்பி கூட செல்வந்த வீட்டுப் பையனை விரும்பும்படி கேட்டதும், "பரீதா உன்னுடைய வேலையைப் பார்" என்று சொன்னாலும் அவள் விடாப்பிடியாக இருந்தாள்.

"பரீதா ஏழைப் பிள்ளைகளும் செல்வந்தப் பிள்ளைகளும் ஒழுக்கம், மானம், மரியாதை, குல கௌரவம் என்பற்றைப் பேணி பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் சரித்திரம் சும்மாவிடாது. இதை நான் சொல்லாமலே நீ புரிந்தும் ஏன் இப்படி பேசுகிறாய் என்று தெரியவில்லையே."

"பாத்திமா கோபித்துக்கொள்ளாதே. உன்னுடைய மனோநிலையை புரிஞ்சிக்காமல் பேசிவிட்டேன். மாறாத மனம் உனக்கு பெருமையைத்தான் கொடுத்திருக்கிறது. பெண்கள் வாழவேண்டும்தானே" என்றாள்.

இதற்கு ஏற்றாற்போல் வெளியில்
பதாகைகளும் ஏந்திச் சென்றார்கள்.

ஏ.எம்.எம்.பாறுக்

🥺எப்போது விழித்தெழுவாய்❓❔     .     .🍁அரபு தேசமே !!!எப்போது விழிக்கப் போகிறாய் ⁉️இஸ்ரேல் எனும் அரக்கன் உன் கதவை தட்டியதன...
27/10/2023

🥺எப்போது விழித்தெழுவாய்❓❔
.
.

🍁அரபு தேசமே !!!
எப்போது விழிக்கப் போகிறாய் ⁉️

இஸ்ரேல் எனும் அரக்கன் உன் கதவை தட்டியதன் பிறகும் நீ இன்னும் விழிக்கவில்லையா❔

உன் உடன் பிறப்புக்கள் இரத்த வெள்ளத்தில் அலையுன்ட போதிலும்
இன்னமும் நீ
விழிக்கவில்லையா ⁉️

அக்ஷாவை மீட்கும் பணியில் பலஸ்தீனை தனியே தவிக்க விட்டீர்களே!

தனியாக நின்று உங்களின் மூக்கு நுணியை இஸ்ரேல் தொட்டதன் பிறகுமா வீரமிழந்து நிற்கிறீர்களே ❓

வெற்றி வாகை சூடிய வீரப் பரம்பரையில் உள்ள நீங்கள் திகைத்துக் கொண்டு இருப்பதன் மறுமம் என்ன❓

பிரிவினையால் சீரழிந்து போய் உள்ள உங்கள் தேசத்தில் தனி இராச்சியம் நடாத்தும் இஸ்ரேலின் மிருக வெறியை பார்த்தீர்களா ❔

உலகத்தை இயக்கும் "மெயின் சுவிட்ச்" உங்களிடம் அல்லவா இருக்கிறது ⁉️

உலகத்தில் கடன் வேண்டி இஸ்ரேலுடன் ஒப்பந்தமும் செய்துதானே இருக்கிறீர்கள் ❔❔

பிரிந்தது போதும் வீறு நடை போடுங்கள்.

வேடிக்கை பார்த்து அறிக்கை விடுவதில் நியாயம் இல்லை என்பதை உணருங்கள்.

பாலஸ்தீன மண்ணின்
சுதந்திர தேசத்துக்கு உரமாகுங்கள்

❤️‍🩹🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤍

- எம்.எல்.எப் -
2023/10/18

பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் - 2023/24மூன்று தசாப்த கால கல்விப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடரும் ஒலுவில் ஸஹ்வ...
26/10/2023

பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் - 2023/24

மூன்று தசாப்த கால கல்விப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடரும் ஒலுவில் ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரியில் கீழ் காணும் முழுநேர தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

தகைமையுடையவர்கள் அனைவரும் எதிர்வரும் 2023.10.31ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக தங்களுடைய Bio Data வை கல்லூரிக்கு அல்லது கீழ் காணும் வட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

👉🏻 அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான ஆசிரியர்கள் ஆண்/பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்

👉🏻 காவலாளி
ஆண்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்

👉🏻 விடுதி காப்பாளர்
பெண்கள் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு,
தலைவர் / செயலாளர் முகாமைத்துவ சபை
ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரி ஒலுவில்
👉🏻 0775751732 | 0779583211 | 0740551732

🏷️ விற்பனைக்கு உண்டு 🏷️🏢 வீட்டு நிர்மாண வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் ACRO JACKS (முட்டுக்கள்) அதாவது கொங்ரீட்/கொட்டு வ...
26/10/2023

🏷️ விற்பனைக்கு உண்டு 🏷️

🏢 வீட்டு நிர்மாண வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் ACRO JACKS (முட்டுக்கள்) அதாவது கொங்ரீட்/கொட்டு வேலைகளில் உபயோகிக்கப்படும் முட்டுக்கள் மிகவும் திருப்திகரமான விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

குறிப்பு : வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான முட்டுக்களே (Acro Jacks) உள்ளதால் தொடர்புகளுக்கு முந்திக் கொள்ளவும்.

மேலதிக தொடர்புகளுக்கு
📲 0760981346
📲 0772335090

_____________________________________________
Paid ad கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் உங்கள் விளம்பரங்களையும் பதிவிட 075 86 18 184
✨எமதூரின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை
02 வது குழு👇🏻
https://chat.whatsapp.com/HKsnqbNMx4R9g9j6wyppaA

🍁ஒலுவில் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் (Oluvil Media | Oluvil News)💥 இலங்கை வானொலி  #பிறைFM அறிவிப்பாளரும் பல்துறைக்கலைஞர...
26/10/2023

🍁ஒலுவில் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் (Oluvil Media | Oluvil News)💥

இலங்கை வானொலி #பிறைFM அறிவிப்பாளரும் பல்துறைக்கலைஞருமான ஆசிரியர்
ஜே.வஹாப்தீன் எழுதிய

🕊️ அவனுக்கும் சிறகுகள் உண்டு 🕊️

சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு
( 2022 #கொடகே ஆக்க இலக்கிய போட்டியில் சிறந்த சிறுகதைப் பிரதியாக தேர்வு செய்யப்பட்டது)

🪶 இடம் : ஸஹீட் ஹாஜி இல்லம்
தென்கிழக்கு பல்கலைக்கழக வீதி,
ஒலுவில்

🪶 காலம் : 30.10.2023 திங்கட்கிழமை
🪶 நேரம் : மாலை 04.00 மணி

உரையாற்றுவோர் :

பேராசிரியர் றமீஸ் அப்துல்லா
பாவேந்தல் பாலமுனை பாறுக்
பேராசிரியர் எஸ்.எம்.ஐயூப்
அதிபர், யூ.கே அப்துர்ரஹீம்
கலாநிதி ஹனீபா இஸ்மாயில்
விரிவுரையாளர்,அப்துர் ரஸாக்
எழுத்தாளர் உமா வரதராஜன் இலக்கிய ஆர்வலர், ஏ.எல் முஹிதீன் பாவா
கவிஞர் சோலைக்கிளி
பஷீர் அப்துல் கையூம், பிறை FM - DD

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

ஏற்பாடு,
ஒலுவில் ஊடக வலையமைப்பு
Oluvil News | Oluvil - Media

Address

Light House Road
Oluvil
32360

Alerts

Be the first to know and let us send you an email when Oluvil - Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oluvil - Media:

Videos

Share


Other Oluvil media companies

Show All