Vaiharai Media

Vaiharai Media இது உங்கள் உணர்வுகளின் அடையாளம்

பலஸ்தீனம் குறித்து ஈரான் ஜனாதிபதி, இலங்கையில் ஆற்றிய உரை - மஹ்ரிப் தொழுகையையும் இமாம் செய்தார்ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்...
25/04/2024

பலஸ்தீனம் குறித்து ஈரான் ஜனாதிபதி, இலங்கையில் ஆற்றிய உரை - மஹ்ரிப் தொழுகையையும் இமாம் செய்தார்

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியி கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கு அவர் உரையில்,

ஈரான் நாட்டின் புரட்சித் தலைவர் தனது தலைவர் காலம் சென்ற இமாம் கொமெயினி அவர்கள் காலத்தில் 45 வருடங்களுக்கு முன்பே பலஸ்தீன் நாடு விடுவிக்கப்பட வேண்டும் என அன்றே அவர் பலஸ்தீன் பூமிக்கும் அந்த மக்களுக்காக குரல் கொடுத்திருந்தார்

இந்த உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்களாக இஸ்ரவேலர்களான சியோனிஸ்ச வாதிகள் செயல்படுகின்றார்கள் இவர்களது செயற்பாடுகளை உலகில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குழந்தைகள் வயதானவர்களை கொலை செய்து வருகின்றனர். .இதற்காக அமெரிக்கா துனை நிற்கிறது. இஸ்லாம் உலக நாடுகளில் வளர்ச்சி அடைவதை இவர்களினால் பொறுத்துக் கொள்ள முடியாது

ஆனால் எங்களது நாடான ஈரான் இந்த உலகில் நவீன விஞ்ஞான தொழில்நுட்பம் ,பொறியியல், நீர் மின்சாரம் போன்ற துறைகளில் உலகின் மேலோங்கி நிற்கும் நாடாக நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.

உலகில் 20 நாடுகளுக்கு மேல் எமது நீர் மின்சாரம், பொறியியல் மற்றும் விஞ்ஞானத்துறைகளில் எமது திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஓர் அங்கமாகவே உங்களது நாட்டில் நட்புறவாக இத் திட்டத்தினை அங்குராப்பணம் செய்த திட்டமாகும்.அத்துடன் எங்களது விஞ்ஞான வளர்ச்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளோம்.

இந்த உலகில் உள்ள முஸ்லிம் நாடுகள் சுதந்திரமாகவும் அவரவர்களது இறையாண்மைக்கு பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இந் நாடுகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எத்தனிக்கின்றன அதற்காக சில யுக்திகளை கையாண்டு யுத்தங்களையும் நாடுகளுக்கிடையே பிணக்குகளும் ஏற்படுத்துகின்றனர்.

பலஸ்தீன் நாட்டுக்கு அந்த மக்களுக்கு நடைபெறும் அநியாயங்கள் அழிவுகளை அமேரிக்கா ஆதரவளித்து உதவியும் வருகிறது.

ஈரானின் அபிவிருத்திகளையும் ஏனைய நாடுகளுடன் ஈரான் நட்பாக இருப்பது நமது எதிரிகள் வேறு கோணத்தில் அவதானிக்கினறனர்.

8 வருடங்களாக ஈரான்- ஈராக் யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்த்தினால் பலர் அழிந்தார்கள் அத் யுத்தினால் அவர்கள் வெற்றியடையவில்லை.

ஈரான் ஜனாதிபதி புதன்கிழமை 24 மஹ்ரிப் தொழுகைக்காக கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு வருகை தந்திருந்தார்.. அவர் பள்ளிவாசலில் மக்களோடு மக்களாக சகலருக்கும் கைகொடுத்து சலாம் சொல்லிக் கொண்டார்.

அத்துடன் அவர் இமாமாக நின்று மஹ்ரிப் தொழுகையை அங்கு நிறைவேற்றினார் அவர் பின் நின்று அவருடன் வருகை தந்த பாதுகாப்பு மற்றும் அதிகாரிகள், ஈரான் துாதுவர் உட்பட தொழுகையை நிறைவேற்றினார்கள்.

மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸி.!!Arrival of the President of the Islamic Republi...
24/04/2024

மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸி.!!

Arrival of the President of the Islamic Republic of Iran, Dr. Ebrahim Raisi, at the Mattala Airport

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த புகைப்படக் கலைஞராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அனைவருக்கும் மிக்க நன்றி, இந்தச் செய்தியைக் க...
20/04/2024

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த புகைப்படக் கலைஞராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அனைவருக்கும் மிக்க நன்றி, இந்தச் செய்தியைக் கேட்டவுடன் நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினேன், ஆனால் எல்லாவற்றிலும் என் ஆர்வத்தை இழந்துவிட்டேன்.

IPL தொடர் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்கள் பெற்ற அணியாக  சாதனை நிகழ்த்தியது......SRH
27/03/2024

IPL தொடர் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்கள் பெற்ற அணியாக சாதனை நிகழ்த்தியது......SRH

சற்று முன் கொழும்பில் வெள்ளவத்தை பகுதியில் உள்ள Nolimit ஆடையகத்தில் தீப்பரவல்!
24/03/2024

சற்று முன் கொழும்பில் வெள்ளவத்தை பகுதியில் உள்ள Nolimit ஆடையகத்தில் தீப்பரவல்!

24/03/2024

வடக்கு காஸாவில் தொடரும் கொடூரம்…..

கடந்த 4 நாட்களாக வடக்கு காஸாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையினை இஸ்ரேல் படை முற்றுகையிட்டு தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.

இதுவரையில் அல்-ஷிபா மருத்துவமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள பலஸ்தீனர்கள் 180 இற்கு மேற்பட்டவர்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளது. இதில் 600 இற்கு மேற்பட்டவர்களை பணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இதில் அல்-ஷிபா மருத்துவமனையின் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் தன்னர்வலர்கள் என பலர் பணையக் கைதகளாக உள்ளனர்.

அல்-ஷிபா வைத்தியசாலையின் உள்ளே நீர், உணவு மற்றும் மருந்து பொருட்கள் செல்வதை தொடர்ந்து தடை செய்து வருகின்றது இஸ்ரேலிய படை. இதனால் சிகிச்சை பெறும் மக்கள் பட்டினாயால் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மருந்து பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பெறும் பலர் இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலிய இராணுவம் அல்-ஷிபா மருத்துவமனையில் உள்ள பெண்கள் பலரை கற்பழித்தும் கொலை செய்தும் உள்ளதாக இன்று அல்-ஜஸீராக ஊடகம் ஆதார பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஒலுவில் அக்கரை பாலம் உடையும் நிலையில் .....
11/01/2024

ஒலுவில் அக்கரை பாலம் உடையும் நிலையில் .....

11/01/2024

ஒலுவில் பாலம் ஆபத்தான நிலையில்

11/01/2024

ஒலுவில் அக்கரை பாலம் மிக ஆபத்தான நிலையில்

தென்கிழக்கு பல்கலைக்கழக  அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்!சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று முத...
10/01/2024

தென்கிழக்கு பல்கலைக்கழக அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்!

சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்

தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்த பிறகு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

அதேவேளை சம்மாந்துறை வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ள அனர்த்தம் தொடர்பில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதோடு பல்கலைகழக தாழ்நில பிரதேசத்தில் காணப்படுகின்ற அசையும் சொத்துக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடக பிரிவு
தென்கிழக்கு பல்கலைக்கழகம்தென்கிழக்கு பல்கலைக்கழக அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்!

சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்

தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்த பிறகு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

அதேவேளை சம்மாந்துறை வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ள அனர்த்தம் தொடர்பில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதோடு பல்கலைகழக தாழ்நில பிரதேசத்தில் காணப்படுகின்ற அசையும் சொத்துக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடக பிரிவு
தென்கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கை கிரிக்கெட் நடுவருக்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட ஒலுவில் சியான்...இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப...
25/12/2023

இலங்கை கிரிக்கெட் நடுவருக்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட ஒலுவில் சியான்...

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்பட்ட நடுவர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 24.12 .2023 கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர்கூடத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற நிகழ்வில் கிழக்குமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவுசெய்யப்பட்ட 54 நடுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நடுவர் குழு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் தவிசாளர் பந்துல திசாநாயக்க மற்றும் செயலாளர் டில்ரான் வி எம் அபேயஷேக்கர அதே போன்று நடுவர் பயிற்சி இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முகாமையாளர் TH. விஜேயவர்த்தன உறுப்பினர்களான ஜிஹான் வீரசிங்க,சம்மி குணசேகர மற்றும் குருநாகல் சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபரும் இலங்கை கிரிக்கெட் நடுவர் குழாமின் உறுப்பினருமான ஜனாப் முஹம்மட் சித்திக் மற்றும் கிழக்குமாகாண கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் V.பிரதீபன் ,கிரிக்கெட் Level 3 நடுவரும் சட்டத்தரணியுமான முஹம்மட் ஹம்மாத் , இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் உறுப்பினர் ரபிய்யுடீன் மற்றும் அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் இலங்கை கிரிக்கெட் நடுவர் குழாமின் உறுப்பினருமான ஆசிரியர் SM. ஆரிப் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

இவர் ஒலுவில் இலவென் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரரும் அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் காரியாலய உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது

விளையாட்டுத்துறையில் பல உயர்வுகளை அடைய வைகறை ஊடகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏசியன் கிரிக்கெட் லீக்கில் ஒலுவில் சிபான்... கட்டாரில் இம்முறை நடைபெறவுள்ள ASIAN CRICKET LEAGUE - 2023 ஆண்டுக்கான இரண்டா...
01/12/2023

ஏசியன் கிரிக்கெட் லீக்கில் ஒலுவில் சிபான்...

கட்டாரில் இம்முறை நடைபெறவுள்ள ASIAN CRICKET LEAGUE - 2023 ஆண்டுக்கான இரண்டாவது பருவகாலத் தொடரில் இலங்கை, இந்தியா ,பாகிஸ்தான், நேபாளம்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சுமார் 500 வீரர்கள் பங்குபற்றிய ஏலத்தில் ஒலுவி்ல் இலவென் ஸ்டார் கழகத்தின் சிரேஷ்ட வீரர் சகலதுறை ஆட்டக்காரர் AH. சிபான் இரண்டாவது அதிகூடிய 750 புள்ளிகளை பெற்றதோடு MARBU QYYC அணி ஏலத்தில் அவரை தக்கவைத்துக் கொண்டது .

நாடுகடந்து பல போட்டிகளில் ஆடிவரும் எமது ஊரின் சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வரும் சிபான் இந்த போட்டியில் பங்குபற்றி சாதனைகளையும் வெற்றிகளையும் பெற வைகறை ஊடகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

2023 கிரிக்கெட் உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானது2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தனதாக்கிக் கொண்டது.43 ஓ...
19/11/2023

2023 கிரிக்கெட் உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானது

2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தனதாக்கிக் கொண்டது.

43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்று 06 விக்கெட்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா கிண்ணத்தை தனதாக்கியது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் 137 ஓட்டங்களை பெற்று, அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வலுச் சேர்த்தார்.

அவுஸ்திரேலி அணிக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியின் இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் KL ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

 #ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் புகைப்படக்கலைஞர்   #அத்னான்_ஆபிதி எடுத்த இந்த படம்  ஊடக உலகில் மிகச்சிறந்த பாராட்டை பெற்...
18/11/2023

#ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் புகைப்படக்கலைஞர் #அத்னான்_ஆபிதி எடுத்த இந்த படம் ஊடக உலகில் மிகச்சிறந்த பாராட்டை பெற்றுள்ளது.

பவுண்டரி அருகே சூர்ய குமார் துல்லியமாக கேட்ச் பிடித்துவிட்டு பந்தை வான் நோக்கி வீச முற்பட.

அபாரமாக பந்தை வீசிய முஹம்மத் ஷமி இரு கைகளையும் வான் நோக்கி உயர்த்தி மகிழ்ச்சியில் நிற்க...

அவுட் ஆன விரக்தியில் தன் உடலை வான் நோக்கி வில்லாய் வளைத்தபடி வில்லியம்சன் நிற்க...

அந்த கண்ணிமைக்கும் காலரைக்கால் நொடி நேரப்படம் இது..!

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இப்படம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, இவர் தனது புகைப்பட கலைக்காக புலிட்ஸர் விருது பெற்றவர்.

நன்றி முகமது ஆஷீக்.

இலங்கை நியூசிலாந்தை தோற்கடித்தால் 15 கோடி பரிசுத் தொகையை பாக்கிஸ்தானை சேர்ந்த பெஷாவர் ஜால்மி உரிமையாளர் ஜாவேத் அப்ரிடி அ...
08/11/2023

இலங்கை நியூசிலாந்தை தோற்கடித்தால் 15 கோடி பரிசுத் தொகையை பாக்கிஸ்தானை சேர்ந்த பெஷாவர் ஜால்மி உரிமையாளர் ஜாவேத் அப்ரிடி அறிவித்துள்ளார். SL வெற்றி பெற்றால் ஆட்ட நாயகனுக்கு உலகச் சுற்றுப்பயணம் வழங்கப்படும்.💰



ஆதாரம் (ட்விட்டரில்)

27/09/2023

ஒலுவிலுக்கு பெருமை சேர்த்த இளம் வீர ,வீராங்கனைகளை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு மிக பிரமாண்டமாக இடம் பெற்றது .

இவர்கள் தேசிய ரீதியாகவும் விருதுகளையும் வெற்றிகளையும் பெற வைகறை ஊடகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

ஈரான் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானர் இஜாஸ் (ஸஹ்வி)ஈராக்கில் உள்ள ஜாமிய்யத்துல் அன்பார் பல்கலைக்கழகத்திற்க்கு தேர்வு செய்ய...
21/08/2023

ஈரான் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானர் இஜாஸ் (ஸஹ்வி)

ஈராக்கில் உள்ள ஜாமிய்யத்துல் அன்பார் பல்கலைக்கழகத்திற்க்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் இவ் வருடம் இலங்கையில் இருந்து ஒருவர்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

ஒலுவில் ஊரை சேர்ந்த ஆதம் லெவ்வை மற்றும் சித்தி ரஷீனா ஆகியோரின் இரண்டாவது புதல்வர் AL.Mohamed இஜாஸ் {ஸஹ்வி} தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவின் முதல் தர அணியான அல் ஹிலால் அணியில் நெய்மர் உத்தியோக பூர்வமாக இனைந்து கொண்டார். அல்-ஹிலாலுடன் நெய்மார் ...
16/08/2023

சவுதி அரேபியாவின் முதல் தர அணியான அல் ஹிலால் அணியில் நெய்மர் உத்தியோக பூர்வமாக இனைந்து கொண்டார்.

அல்-ஹிலாலுடன் நெய்மார் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
- ஆண்டுக்கு 100 மில்லியன் யூரோக்கள் 💵

புனித கவ்பத்துல்லாஹ் புதன்  02-08-2023 (Ghusl Ka’bah) கழுவப்பட்டது. இதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள்• 40 லிட்டர் ஜம்ஜா...
04/08/2023

புனித கவ்பத்துல்லாஹ் புதன் 02-08-2023 (Ghusl Ka’bah) கழுவப்பட்டது. இதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள்

• 40 லிட்டர் ஜம்ஜாம் தண்ணீர் இரண்டு கேலன் வெள்ளியாக பிரிக்கப்பட்டது

• 540 மில்லி தைஃப் ரோஸ் வாட்டருடன் ஜம்ஜாம் தண்ணீர்

• உயர்தர தைஃப் ரோஸ் ஆயில் 24 மில்லி

• 24 மிலி சரணாலயம் Oud எண்ணெய்

• காபாவின் சுவர்கள் மற்றும் தரையை நறுமணப் படுத்துவதற்கு 3 மில்லி கஸ்தூரி

• 5 லிட்டர் காபா வாசனை திரவிய கலவை

• அரை கிலோ நுண்ணிய மர அகர்வுட்

• ஆடம்பரமான பருத்தி துணி துண்டுகள்

Equipments used for Ghusl Ka’bah!
• 40 liters of Zamzam water divided into two gallons of silver
• Mix Zamzam water with 540 ml of Taif rose water
• 24 ml of high quality Taif rose oil
•24 ml of the sanctuary Oud oil
• 3 ml of musk to perfume the walls and floor of the Kaaba
• 5 liters of the Kaaba perfuming mixture
• Half a kilo of fine wood agarwood
• Pieces of luxurious cotton cloth

உலக சாதனையுடன் பெருந்தொகை பணத்துடன், சவூதி கிளப்புக்காக ஆடப்போகும் எம்பாப்பேபிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கிலியன் எ...
25/07/2023

உலக சாதனையுடன் பெருந்தொகை பணத்துடன், சவூதி கிளப்புக்காக ஆடப்போகும் எம்பாப்பே

பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கிலியன் எம்பாப்பேவை சுமார் 332 மில்லியன் டாலருக்கு வாங்க சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த அல் ஹிலால் (Al Hilal) கால்பந்தாட்ட கிளப் அணி முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை பிஎஸ்ஜி கிளப் அணி உறுதி செய்துள்ளது.

24 வயதான எம்பாப்பே, சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் பிரான்ஸ் நாட்டுக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் பிரதான ஸ்ட்ரைக்கராக அவர் உள்ளார். ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற வீரர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறையை சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரராகவும் அறியப்படுகிறார்.

கிளப் அளவிலான போட்டிகளில் விளையாட அவர் தற்போது பிஎஸ்ஜி அணியில் உள்ளார். அவருக்கான ஒப்பந்தம் அடுத்த சீசன் வரை இருப்பதாக தெரிகிறது.

அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி முயன்றுள்ளது. ஆனால், எம்பாப்பே அதை நீட்டிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியானது. அதனால், அந்த அணியின் ஆசிய சுற்றுப் பயணத்துக்கான தொடரில் அவர் இடம்பெறவில்லை என சொல்லப்படுகிறது. அதோடு பிஎஸ்ஜி அணியிலிருந்து அவர் வெளியேறுகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்தச் சூழலில் சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த அல் ஹிலால் கால்பந்தாட்ட அணி அவரை ஒரு சீசனுக்கு சுமார் 332 மில்லியன் டாலருக்கு வாங்க முன்வந்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மொத்த மதிப்பு ரூ.2,716.70 கோடி. இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. போர்ச்சுகல் நாட்டு கால்பந்து வீரர் ரொனால்டோ, சவுதி அரேபியா கால்பந்து அல் நஸர் (Al Nassr) கிளப் அணிக்காக தான் விளையாடி வருகிறார்.

லங்கா சதொச பால் மா விலை குறைப்பு...!அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை லங்கா சதொச வெளியிட்டுள்ளத...
21/07/2023

லங்கா சதொச பால் மா விலை குறைப்பு...!

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை லங்கா சதொச வெளியிட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை சதோசவுடன் கூடிய பால் மா பொதி ஒன்றின் புதிய விலை 999 ரூபாவாகும்.

இதன்படி இன்று (21) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக,

இலங்கை சதொச பால் மாவின் 400 கிராம் பொதியை புதிய விலையில் கொள்வனவு செய்ய முடியும்.

 #கொழும்பில் செயற்கை கடற்கரை திறக்கப்பட்டது... கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை சனி (15...
18/07/2023

#கொழும்பில் செயற்கை கடற்கரை திறக்கப்பட்டது...

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை சனி (15) திறந்து வைக்கப்பட்டது.

சனிக்கிழமை முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, செயற்கைக் கடற்கரையில் நீந்த முடியும் என்பதோடு நீர் விளையாட்டிலும் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடற்கரை சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது.

இந்த செயற்கை கடற்கரைக்கு மேலதிகமாக அதற்கு அருகில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஒலுவிலூரின் முதலாவது நடுவராக சியான் தெரிவு.....இம்முறை இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட நடுவர்களுக்கான...
12/07/2023

ஒலுவிலூரின் முதலாவது நடுவராக சியான் தெரிவு.....

இம்முறை இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட நடுவர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்து நடுவர் குழாம் தரம் 5 இற்கு கிரிக்கெட் நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ள எமது Vaiharai Media வின் ஆலோசகரும் அறிவிப்பாளரும் உதைப்பந்தாட்ட நடுவருமான S. சியான் அவர்களுக்கு வைகறை ஊடகம் மற்றும் ஊர்சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இறக்காமம் மண்ணிலிருந்து  19 வயதில் விமானியாய் பறக்கும் முஹன்னா மௌலானா!இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கிழக்கு மாகாணத்த...
06/07/2023

இறக்காமம் மண்ணிலிருந்து 19 வயதில் விமானியாய் பறக்கும் முஹன்னா மௌலானா!

இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் முதலாவது கப்பல் துறை பொறியியலாளர் செய்யது இஸ்ஹாக் மன்சூர் அவர்களின் புதல்வர் எம். எஸ். முஹன்னா மௌலானா தனது 19 ஆவது வயதில் விமானியாக வேண்டும் என்ற தனது இலக்கை நோக்கி வீறுநடை போட்டு வருகிறார்.

நாம் எமது பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனும் தோரணையிலே இது எஸ்.ஐ. மன்சூர் அவர்கள் தனது மகனுக்கு இத்துறை சார்ந்த கல்விக்காக வழிகாட்டியமை பாராட்டுக்குரியதாகும். தான் 19 வயதிலேயே கப்பல் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சிறந்த அடைவை எட்டியது போன்று தனது மகனையும் வழிப்படுத்தியுள்ளார்.

இவரைப் போன்று தனது மகனும் தனது 19ஆவது வயதிலேயே விமானிப் பயிலுனராக ஆகாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இப்படி பல வித்தியாசமான துறைகளை தேர்ந்தெடுத்தல் என்பது தற்காலத்தின் தேவையாக உள்ளது. தனக்குள் என்ன இருக்கின்றது என்பதை அறிவது தான் உண்மையான கல்வி அப்போதுதான் தனக்குரிய துறையில் பாண்டித்தியம் பெற்று சிறந்து விளங்க முடியும் என்பது முக்கியமான ஒரு அம்சமாகும். இது பெற்றோர்களினதும் எமது சமூகத்தில் காணப்படும் புத்திஜீவிகளினதும் தலையாயக் கடமையாகும்.

நாம் பாடசாலை கல்வியிலே ஜப்பான் அபிவிருத்தியில் எவ்வாறு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை பற்றி கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இலங்கை அபிவிருத்தியில் எவ்வாறு பின்னோக்கி இருக்கின்றது.

என்பது பற்றி கற்பிக்கப்படுவதில்லை. முன்னேற்றத்துக்கான அடுத்த உந்துதல்கள் என்ன என்பது பற்றிய விடயத்தைத் தேடி அறியாமல் இருப்பதே எமது உறங்கு நிலையாகும்.

நாம் எல்லோரும் நமது பிள்ளைகளை குறிப்பிட்ட ஒரு சில துறைகளுக்கு மாத்திரமே அனுப்புகிறோம் ஆனால் எல்லா வேறு பட்ட துறைகளையும் நாம் தெரிவு செய்வது காலத்தின் தேவையாகும்.

ஸெய்ன்ஸித்தீக்

எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.....லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவ...
03/07/2023

எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.....

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து வகையான சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையினை 3,000 ரூபா வரையில் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் வைகறை ஊடகத்தின்  இனிய ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள்.Vaiharai Media
28/06/2023

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் வைகறை ஊடகத்தின் இனிய ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள்.

Vaiharai Media

சவூதி ப்ரோ லீக்கின் புதிய சூப்பர் ஸ்டாராக கரீம் பென்ஸேமா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
10/06/2023

சவூதி ப்ரோ லீக்கின் புதிய சூப்பர் ஸ்டாராக கரீம் பென்ஸேமா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

திருமண பந்தத்தில் இணைந்த மணமகன் ஒருவர், தனது புதிய மணப்பெண்ணுக்கு தனது அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்தி அவர்களின் தி...
04/06/2023

திருமண பந்தத்தில் இணைந்த மணமகன் ஒருவர், தனது புதிய மணப்பெண்ணுக்கு தனது அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்தி அவர்களின் திருமண விழாவின் போது, மஹராக தனது கையால் எழுதப்பட்ட குர்ஆனை விலைமதிப்பற்ற பரிசாக வழங்கினார்.

சவூதி அரேபியாவில் மார்க்க விழுமிய கல்வியிலும்-உலக கல்வியிலும் உன்னத அடைவுகளை தமதாக்கி கொண்ட சாய்ந்தமருது மைந்தர்கள் பற்ற...
02/06/2023

சவூதி அரேபியாவில் மார்க்க விழுமிய கல்வியிலும்-உலக கல்வியிலும் உன்னத அடைவுகளை தமதாக்கி கொண்ட சாய்ந்தமருது மைந்தர்கள் பற்றி பேசுகிறது இச்சரிதம்..!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் கிருபையால்,

சவூதி அரேபியாவின் அஸீர் மாகாணத்தின் அப்ஹாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் மருதூரை பூர்வீகமாக கொண்ட அஹமட்லெவ்வை ஜாபீர் மற்றும் ஸியானா அப்துர் றஸ்ஸாக் பிரிய தம்பதிகளின் பேரன்பு புதல்வர்களான அப்துல்லாஹ் ஜாபீர், அலி ஜாபீர் ஆகியோரின் கனதியான கல்வி அடைவுகள் கிழக்கு மண்பதி மருதூருக்கும், நமது தேசத்திற்கும் பெருமை சேர்க்கின்றன.

இவர்கள் சாய்ந்தமருது 16 ஆம் பிரிவினைச் சேர்ந்த மர்ஹும்களான அல்ஹாஜ். அப்துர் ரஸ்ஸாக் மௌலவி (ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியர், சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் முன்னாள் நம்பிக்கையாளர் சபைத் தலைவர்)சஹீது ஆமினா உம்மா மற்றும் மர்ஹும் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை, ஆமீனா ஆகியோரின் பேரப் பிள்ளைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இம்மாணவர்கள் தமது ஆரம்பக்கல்வியை தரம் 1- 6வரை (2006 – 2012) அப்ஹா Shamsan school பாடசாலையில் கற்றனர்.

தாம் கற்ற பாடசாலையின் ஒழுக்க விழுமியங்களை பேணியமைக்காகவும், ஆரம்பக் கல்வியில் அவர்கள் சிறந்த அடைவுகளை பெற்றமைக்காகவும் அனைத்துப் பாடசாலை ஆசிரியர்களதும் நன்மதிப்பைப் பெற்றிருந்தமைக்காக அப்பாடசாலையின் நிர்வாகத்தினரால் அவர்கள் இருவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அல்குர்ஆனை தமது அன்புத் தாயார் ஷியானா அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் வழிகாட்டலுடன் கூடிய துணையோடு வீட்டில் இருந்தபடி மிக சீரிய முறையில் கற்றுக்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனூடாக சுமார் 15 'துஸுக்களை' மனனம் செய்திருக்கின்றனர்.

மேலும் இம்மாணவர்கள் 7 ஆம் வகுப்பு தொடக்கம் 9ஆம் வகுப்புவரை (2012 -2015)
தமது அடுத்த கட்ட கல்வியை அப்ஹா Hassan bin Al-Haytham பாடசாலையில் கற்று தேர்ந்தனர்.

இக்கால கட்டத்தில் தாம் கற்ற அனைத்து பாடங்களிலும் மிகச் சிறந்த புள்ளிகளைப் பெற்றமைக்காக அவர்களுக்கு உயர் கல்வியை தொடர அம்மாகாணத்தின் சிறந்த பாடசலையில் கற்கும் வாய்ப்பு கிட்டியது.

குறித்த இம்மாணவர்கள் இருவரும் தமது 13 வது வயதில் இமாம்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மார்க்க பணியாற்றி வருவதுடன் இன்றுவரை அப்புனித கடமையினை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

மிக இளம் வயதில் சவூதி அரேபிய புனித மண்ணில் இறை பொருத்தம் கருதி இமாமத் எனும் உன்னத கடமையாற்றும் இவர்களுக்கு அல்லாஹ்வின் பேரருள் கிட்டட்டும்...

மேலும் சவூதி அரேபியாவில் வசிக்கும் இவர்கள் அதே மண்ணில் ஆரம்பக் கல்வியில் இருந்து,உயர் கல்வி வரை கற்ற முதலாவது இலங்கையர்கள் என்பதும் பெருமைக்குரிய விடயமாகும். அல்ஹம்துலில்லாஹ்!

நேற்று 2023 ஜுன் மாதம் முதலாம் திகதி சவூதி அரேபியா, அப்ஹா King Khalid பல்கலை கழகத்தில் வெகு பிரமாண்டமாய் சுமார் 50,000 முன்னிலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அப்துல்லாஹ் ஜாபீர் Mechanical Engineering, அலி ஜாபீர் Computer Engineering ஆகிய துறைகளில் பாட நெறிகளை பூர்த்தி செய்து உயர் தகைமை பட்டச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வின் போது சவூதி அரேபியாவினைச் சேர்ந்த 15,000 மாணவர்கள் பல்வேறு துறை சார்ந்து இப்பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்

சாய்ந்தமருதூரில் இருந்து சவூதிக்கு புலம் பெயர்ந்தாலும் தமது உயர் இலட்சிய இலக்குகளை வெற்றி கொண்டு இலங்கைக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் பெருமிதம் சேர்த்துள்ள இம்மாணவர்கள் இருவருக்கும், இவர்களுக்கு வழிகாட்டிய பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசான்களுக்கும் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்!

#வியூகம்Tv

Address

Oluvil
32360

Alerts

Be the first to know and let us send you an email when Vaiharai Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaiharai Media:

Videos

Share


Other Media/News Companies in Oluvil

Show All