30/06/2024
மட்டக்களிப்பில் அமைச்சர் மனுச நாணயக்காரவினால் வெல்வோம் ஸ்ரீ லங்கா நிகழ்வை ஆரம்பித்துவைப்பு!!
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார புலம் பெயர் தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செத்தில் தொண்டமான், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தனர்.
புலம் பெயர் தொழிலார்களின் பிள்ளைகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் புத்தகப்பைகள், காசோலைகள் மற்றும் ஸ்மார்ட் பலகை என்பன வழங்கி வைக்கப்பட்டது.
புராதன காலத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டமான தனித்துவமான பெயர் கொண்ட ஒர் பிரதேசமாக உள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் இப் பிரதேச மக்களின் சுறுசுறுப்பு தன்மையை எமது நாட்டின் அபிவிருத்தியில் உள்ளீர்த்து சர்வதேச ரீதியிலான வணிகத்தினை நோக்கி முன்நகர்த்த வேண்டும் என்றார். மேலும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு கட்சி இனம் பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும். நாடு பொருளாதார விழ்ச்சியடைந்த காலத்தில் வெளிநாட்டில் உள்ளவர்கள் அனுப்பும் பணம் அபிவிருத்தி செய்வதற்கு பாரிய உதவியாக உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 40 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சேவைகள் இலவசமாக இதன் போது வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந், உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.