08/04/2024
சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு
காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு கடற்கரை காவா சாய் ஹட்டில் 7.4.2024 அன்று இடம்பெற்றது.
சுயாதீன ஊடகவியலாளர் போரத்தி்ன் தலைவர் எம்.எச் எம் அன்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட உரையினை கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ் எம். நஷ்மல் (பலாஹி) ஊடகத்தின் முக்கியத்துவம் ஊடகவியலாளர்கள் சமூகத்திற்காக ஆற்றிவரும் பணிகள் தொடர்பாக விரிவுரையாற்றினார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர் கே.எம் சலீம் , சிரேஷ்ட ஊடகவியலாளர்களான டீ. எல். ஜவ்பர்கான், எம். அப்துல் லத்தீப், மஜீட் (மதியன்பன்) உட்பட பிரதேச ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் செயலாளர் எம். ஏ. சி.எம். ஜலீஸ் பொருளாளர் என். எம். பாயிஸ் மற்றும் உறுப்பினர்களான பஹத் ,ரஹ்மான்,ஹிசாம், பிரதேச செயலக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் அஸ்மி தாஜுதீன்
மற்றும் ஜுவலிகாஸ் உரிமையாளர் எம். காலித், அப்பிள் கெயார் எம். பைஸர் மற்றும் அறிவிப்பாளர்களான நஸீம், வபி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.