Velli Velichcham TV

Velli Velichcham TV கலை,இலக்கியம்,திறமை,செய்தி, விளையாட்டு மற்றும் தேடல்கள் இவைகளை உள்ளடக்கியதான பயணம் *வெள்ளி வெளிச்சம்

எதிர்காலத்தில் மின்சாரமின்றி நாடு இருளில் மூழ்கக்கூடும்எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்...
15/12/2022

எதிர்காலத்தில் மின்சாரமின்றி நாடு இருளில் மூழ்கக்கூடும்

எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
நிலக்கரியை தாங்கிய 5ஆவது கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அது நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு இருளில் மூழ்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் நிலக்கரியுடனான 24 கப்பல்கள் நாட்டை வந்தடைந்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர், அதனை அரசாங்கம் தவறவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் மழை வீழ்ச்சி குறைவடைந்தமையினால் எதிர்காலத்தில் நீர் மட்டம் குறைவடைவதற்கான ஏதுநிலைகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் மட்டம் 75 சதவீதம் என கணிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Daily Ceylon

இலங்கையின் மூலோபாய திட்டத்தை (CSP) உலக உணவுத் திட்டத்தின் (WFP) நிறைவேற்றுச் சபை அங்கீகரித்துள்ளது.இலங்கையின் மூலோபாயத் ...
15/12/2022

இலங்கையின் மூலோபாய திட்டத்தை (CSP) உலக உணவுத் திட்டத்தின் (WFP) நிறைவேற்றுச் சபை அங்கீகரித்துள்ளது.

இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு, உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இம்மூலோபாய திட்டம் 2023 முதல் 2027 டிசம்பர் வரைக்குட்பட்ட காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டதுடன் அதற்கான பெறுமதி 74.87 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இலங்கையின் மூலோபாயத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது, இலங்கையின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் 2023-2027 க்கான ஐக்கிய நாடுகளின் நிலைபேண்தகு அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு (UNSDCF) ஆகியவற்றுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும்.

மேலும் இத்திட்டமானது, நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்கு(SGD)2 இற்கிணங்க, 2030 ஆம் ஆண்டளவில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போஷாக்கு எனும் இலக்கை அடைவதற்கேற்ப நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்மூலோபாயத் திட்டம் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளான 1, 5, 10 மற்றும் 13 ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கும் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்கு 17 இற்கமைய தேசிய மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி பதில் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் உதவும்.

இதேவேளை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போஷாக்கை அடைவதற்கும் 2030 ஆம் ஆண்டளவில் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அதன் நிகழ்ச்சி நிரலுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும், இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை உலக உணவுத் திட்டம் வரவேற்றுள்ளது.

உணவுப் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய மோசமான நிலையை குறுகிய காலத்தில் குறைப்பதற்காகவும் நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலைமையை முன்னேற்றுவதற்காகவும் இலங்கை முன்னெடுத்துவரும் தேசிய மட்டத்திலான முயற்சிக்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது கூட்டத்தொடரின்போதே இலங்கையின் மூலோபாய திட்டத்திற்கு உலக உணவு திட்டம் அங்கீகாரம் அளித்ததாக ரோமிலுள்ள அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் எம். பீஸ்லி தெரிவித்துள்ளார்.

அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உணவு பாதுகாப்பு மற்றம் போஷாக்கிற்காக அரசாங்கம் செய்துள்ள முதலீட்டின் மூலம் கிடைக்கும் பலனை பன்மடங்கு அதிகரிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்கைரீதியான ஆலோசனைகளை வழங்க உலக உணவு திட்டம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக உணவுத் திட்டத்திற்கு தன்னார்வ நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்படுகிறது. எனவே, இலங்கையின் மூலோபாய திட்டங்களுக்காக உலக உணவு திட்டத்தினால் வழங்கப்படும் பங்களிப்பானது நன்கொடையாளர்களால் உலக உணவு திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி மூலமாகும் என்பது குறிப்பிடதக்கது.

பேரூந்து ரிக்கட்டினால் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு (பாறுக் ஷிஹான்)சக பயணியினால் காணாமல் ஆக்கப்பட்ட ...
14/12/2022

பேரூந்து ரிக்கட்டினால் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

(பாறுக் ஷிஹான்)

சக பயணியினால் காணாமல் ஆக்கப்பட்ட தங்க சங்கிலியை மீட்டு பொலிஸார் முன்னிலையில் ஒப்படைத்த நபரை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதுடன் காணாமல் போன தங்க சங்கிலி சக பயணியினால் மீட்கப்பட்டு பொலிஸார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(13) மாலை உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,

கல்முனை பேரூந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை(13) காலை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி சென்ற களுவாஞ்சிக்குடி டிப்போவிற்கு சொந்தமான அரச பேருந்து ஒன்றில் ஒலுவில் பகுதியை சேர்ந்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் தனது மகளுடன் பயணம் செய்துள்ளார்.இவ்வாறு பயணம் செய்த நிலையில் அதே பேரூந்தில் பெரிய கல்லாறு பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேச செயலக சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் மற்றுமொரு பயணியும் பயணித்துள்ள நிலையில் 2 பவுண் பெறுமதியான தங்க சங்கிலி அவரை அறியாமல் பேரூந்துக்குள் தவறி விழுந்து விட்டது.

இவ்வாறு தவறவிட்ட தங்க சங்கிலியை சக பயணியாக பயணித்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் கண்டெடுத்து பேரூந்து நடத்தினருக்கு தெரியப்படுத்தியதுடன் உரிய நபரிடம் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இந்நிலையில் தனது கழுத்தில் இருந்த தங்க மாலை காணாமல் சென்றதை அறிந்த காத்தான்குடி பிரதேச செயலக சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் பயணி உடனடியாக அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று தொலைந்த தங்க மாலையை தேடியுள்ளார்.பின்னர் மாலை அங்கும் கிடைக்காமையினால் உடனடியாக தான் பயணம் செய்த பேருந்து நினைவு வரவே பேரூந்தில் வழங்கப்பட்ட ரிக்கட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு குறித்த பேரூந்து நடத்துநரின் தனது நடந்த விடயத்தை தெளிவு படுத்தியுள்ளார்.

இதன் போது பேரூந்து நடத்துநரும் மாலை ஒன்று பேரூந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதை கண்டெடுத்தவர் உரியவரிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் அவரை தொடர்பு கொண்டு உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய காணாமல் போன தங்க மாலையை கண்டெடுத்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற காணாமல் போன தங்க மாலை உரிமையாளர் என குறிப்பிடப்பட்ட பெண் பயணி தான் கொண்டு வந்த ஆதாரங்களை பொலிஸார் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன் போது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில் காணாமல் போன தங்க மாலை தொடர்பான ஆதாரங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் சுமார் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக பெறுமதி கொண்ட தங்க சங்கிலி பொலிஸார் முன்னிலையில் உரிமையாளரான பெண் பயணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பேரூந்தில் தவறவிடப்பட்ட 2 பவுண் பெறுமதியான தங்க மாலையை பொலிஸார் முன்னிலையில் உரிமையாளிடம் ஒப்படைக்க முயற்சி செய்த தங்க சங்கிலியை கண்டெடுத்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மிக நீளமான பாடசாலைக் கொடியைச் சுமந்த ஸஹிரா நடைபவனிமாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்...
14/12/2022

இலங்கையின் மிக நீளமான பாடசாலைக் கொடியைச் சுமந்த ஸஹிரா நடைபவனி

மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு ‘ஸஹிரா நடைபவனி’ கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் கோலாகலமான முறையில் மாவனல்லை நகரை வலம் வந்தது.

பழைய மாணவர்களின் உயரிய ஒத்துழைப்புடன் நடந்தேறிய இந்நடைபவனி பல காத்திரமான படைப்புகளுடன் மாவனல்லை நகரை வலம் வந்து ஸஹிராத்தாயின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது எனலாம்.

நாலா பக்கங்களிலும் வந்து கல்வி கற்ற கல்லூரித்தாயின் மாணவர்கள் ஒன்று சேர கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் அதிநீளமான பாடசாலைக் கொடி என்ற பெருமையைச் சுமந்த ஸஹிராத்தாயின் 244 மீற்றர் நீளமான பாடசாலைக் கொடி கல்லூரியின் 83rd batch (2016 A/L) இனால் தயாரிக்கப்பட்டு 150 ஸஹிரா மாணவர்கள் சுமந்து சென்று வரலாற்றுச் சாதனை படைத்தமை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும்

Thinakkural

14/12/2022

Amazing farm.

13/12/2022

ஆகா! அருமை.

13/12/2022

So nice 😍😍

இறைச்சி கொள்வனவு செய்வோர் கவனத்திற்குதற்போது நிலவும் குளிர் காலநிலையினால் உறுதி செய்யப்படாத நோயினால் கால்நடைகள் உள்ளிட்ட...
13/12/2022

இறைச்சி கொள்வனவு செய்வோர் கவனத்திற்கு

தற்போது நிலவும் குளிர் காலநிலையினால் உறுதி செய்யப்படாத நோயினால் கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இறைச்சி முத்திரை இருந்தால் மாத்திரம் இறைச்சியை கொள்வனவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் கடும் குளிரால் உயிரிழந்ததாக கூறப்படும் விலங்குகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கடந்த இரண்டு நாட்களில், நாட்டின் பல நகரங்களில் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை நாங்கள் கண்காணித்தோம். அங்கு, பல வியாபாரிகள் வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி, ஏதேனும் நோய் தாக்கி இறந்த விலங்கை இறைச்சிக்காக உண்பது மிகவும் ஆபத்தான நிலை என பொதுமக்கள் எச்சரிக்க வேண்டும். இறந்த நோய் ஒரு தீவிரமான கண்டறியப்படாத நோயாக இருக்கலாம், மேலும் இது மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல.

மேலும், விலங்குகளை கொல்பவர்கள் பசு வதை சட்டத்தின்படி விலங்குகளை கொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். சட்டத்தை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இறைச்சி வியாபாரிகள் இறந்த விலங்குகளின் உடல்களை இறைச்சிக்காக தயார் செய்ய வேண்டாம் என்று கடுமையாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் நாட்டின் அனைத்து இடங்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. அந்தச் சட்டங்களை யாராவது மீறினால், பசு வதைச் சட்டம் மற்றும் உணவுச் சட்டத்தின்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்..” என்றார்.
Daily Ceylon

*     சிறுநீரகம் சார்ந்த நோய்களும்        சித்தர்கள் அருளிய வைத்தியமும்தந்தி மேகம் குணமாகதந்தி மேகம் எனும் அனைத்து ஆண்கள...
12/12/2022

* சிறுநீரகம் சார்ந்த நோய்களும்
சித்தர்கள் அருளிய வைத்தியமும்
தந்தி மேகம் குணமாக
தந்தி மேகம் எனும்
அனைத்து ஆண்களுக்கு மே தெரிந்து இருக்க வேண்டிய நோயும் வைத்தியமுறையுமே இது

நோயைப் பற்றிய சிறிய விளக்கம்
🙏 குறிப்பு 🙏சிலருக்கு இந்த மோகம் பிரச்சினைக்கு என்றே ஓரிரு மண்டலங்கள் ( 48 / )தொடர்ச்சியாக வேறு மருந்துகளையும் உபயோகப்படுத்துவது உண்டு
💢தொடர்ந்து படியுங்கள்💢
ஆண் சக்தி எனும் விந்து சிறுநீருடன் கலந்து வெளியேறுவதை தந்தி மேகம் என சித்தர்களால் கூறப்படுகின்றது
அதாவது சிறுநீர் கழிக்கின்ற பொழுது சிறுநீர் கழிப்பதற்கு முன்பும் அல்லது சிறுநீர் கழித்த பின்பும் வெண்மையான பிசுபிசுப்படன் விந்து வெளியேறுவதே இந்த நோயின் அறிகுறியாகும்
உடலில் விந்து கெட்டி இல்லாமல் நீர்த்துப் போனதால் சிறுநீருடன் விந்து கரைந்து வெளியேறி விடுகின்றது

இந்த நோயால் ஏற்படும் சில பாதிப்புகளை பற்றி முதலில் பார்ப்போம்
சிறுநீர் கழிக்கின்றன பொழுது விந்து வெளியேறுவதால் சிறுநீர் பாதையில் எரிச்சலோ அல்லது கடுகடுப்போ ஏற்படுவது ஆனாலும் காலப்போக்கில் உடலின் பலம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து உடல்நிலையில் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு உடல் மெலிந்து மிகவும் மோசமான பலம் குன்றிய நிலையை நம் உடல் அடைந்துவிடும்

சிறுநீருடன் விந்து கலந்து வெளியேறும் நிலையை ஆரம்ப காலகட்டத்திலேயே அறிந்து அதற்கான மருத்துவ முறையை கடைபிடிக்க வேண்டும் இல்லையெனில் நமது உடலின் பலம் குறைந்து கொண்டே வருவதால் உடலில் பலவிதமான நோய்கள் தோன்றி விட இதுவே காரணமாக அமைந்துவிடும்

இதற்கான மருந்து
மருதாணி இலையை இடித்து சாறு பிழிந்து இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து இதில் இரண்டு சிட்டிகை நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை வேளையில் பருகி விட்டு சிறிது நேரம் கழித்து கொதிக்க வைத்து ஆறிய பசும் பாலை கால் லிட்டர் குடித்து வர வேண்டும் இப்படி குடித்து வர தந்தி மேகம் எனும் சிறுநீருடன் கலந்து வெளியேறும் இந்திரிய ஒழுக்கு குணமாகும்

💢சிறுநீருடன் இந்திரியம் ஸ்கலிதமாவது குணமாக ஒரு எளிய வைத்தியம்
அம்மான் பச்சரிசி இலையை அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவு எடுத்து இதை பசும்பாலுடன் கலந்து காலை வேளையில் மட்டும் ஒரு வார காலம் சாப்பிட்டுவர சிறுநீருடன் கலந்து இந்திரியம் வெளியேறுவது குணமாகும்

3 அதி மூத்திரம் எனும்
சிறுநீர்ப் பெருக்கு குணமாக
மருதோன்றி இலையை சுத்தம் செய்து மைபோல அரைத்து இதில் ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலை வேளை மட்டும் ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அதிக அளவில் வெளியேறும் சிறுநீர் பெருக்கு எனும் அதிமூத்திர நோய் குணமாகும் 🌺🌻🌼🌷🌺🌷🌷🌺🌷🌺🌺🌷🌺🌼🥀🌼🌹🌼
💯💯 இன்னும் நிறைய இருக்கின்றது நான் ஓரிரண்டு முறைகளிலேயே உங்களுக்கு முன்னிலை படுத்தி உள்ளேன்💯💯
✳️✴️❇️ பகிருங்கள் பலருக்கும் பலன் கிட்டும் ✳️✴️❇️

நன்றி🙏


💐🌿 வளமுடன் வாழ வாழ்த்துக்கள்💐🌿
🌿☘️ கிழக்கு சித்தர் ☘️🌿

வாட்ஸப் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளவும்
+940755243746
நன்றி🙏

காத்தான்குடி நகர சபை பிரிவில் இன்று 12ஆம்திகதி தொடக்கம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை ஆடு மற்றும் மாடு அறுக்க தடை என காத்தா...
12/12/2022

காத்தான்குடி நகர சபை பிரிவில் இன்று 12ஆம்திகதி தொடக்கம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை ஆடு மற்றும் மாடு அறுக்க தடை என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ். எச். எம்.அஸ்பர் தெரிவித்தார்.

கிழக்கில்  இறைச்சிக் கடைகளுக்கு  பூட்டு....மட்டக்களப்பு, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை மாநகரசபைகள்  எல்லைக்குட்பட்ட பகுத...
12/12/2022

கிழக்கில் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு....

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை மாநகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று (12ம் திகதி) முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படுமென ஆளுநரினால் பணிப்புறை விடுக்கப்பட்டுள்ளது.
(தமிழன்)

ஒரு கிலோ  தோடம்பழம் ரூ. 1900!இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ தோடம்பழங்கள்த்தின் விலை ரூ.1,990 ஆக உயர்ந்துள்ளது. இறக்குமத...
12/12/2022

ஒரு கிலோ தோடம்பழம் ரூ. 1900!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ தோடம்பழங்கள்த்தின் விலை ரூ.1,990 ஆக உயர்ந்துள்ளது.

இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக தோடம்பழம் உள்ளிட்ட பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பழ இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன், இறக்குமதி செய்யப்பட்ட மூன்று தோடம்பழங்கள் 100 முதல் 200 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தோடம்பழங்கள்ஏற்றுமதி செய்யப்படுவதால் இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழங்களே இலங்கை சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.
Thinakkural

11/12/2022

டெங்கு நோயிலிருந்து...

மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
10/12/2022

மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகள் திடீரென இறப்பதால், பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Daily Ceylon

தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு (நூருல் ஹுதா உமர்)சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்...
10/12/2022

தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

(நூருல் ஹுதா உமர்)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் இஸ்லாமிய சட்டம் மற்றும் சட்டமியற்றல் பிரிவு இணைந்து ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தது. இந்நிகழ்வானது சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) அப்பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ்வாண்டுக்கான சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளாகிய "I have a voice" என்ற தொனிப்பொருளிலேயே இந்நிகழ்வானது இடம்பெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ. ஸி அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஏ. எம் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தலைமை உரையினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ. ஸி அப்துல் அஸீஸ் நிகழ்த்தினார். இவர் தனது உரையில் அடிப்படை உரிமைகள் தொடர்பாகவும், அவ்வுரிமைகள் மீறப்படும்போது அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மாணவர்கள் செயற்படுத்த வேண்டிய மூலோபாயங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய சட்டம் மற்றும் சட்டமியற்றல் பிரிவின் தகுதிகாண் விரிவுரையாளர் எம். எம் சியானா சிறப்பு உரையினை ஆற்றினார். இவர் இஸ்லாத்தின் பார்வையில் மனித உரிமைகள் எனும் தொனிப்பொருளில் உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து பொறியியலாளர் எம். எம் பழுலுல் ஹக், எதிர்கால சந்ததியினர்க்கான உரிமைகள் தொடர்பாகவும் அதற்காக நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஒரு விசேட உரையினை ஆற்றிச் சென்றார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதி உரையினை தென் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் துறைத்தலைவர் ஏ. எம் முஸ்தபா நிகழ்த்தினார்.

இவர் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும், மனித உரிமை மீறல்களும் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்வின் நன்றியுரையினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்தியத்தில் முகாமைத்துவ உதவியாளர் ஜே. துரைராணி வழங்கினார்.

இந்நிகழ்வில் குறித்த பீடத்தின் விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் ஆதரவளிக்கும்- ஜனாதிபதி.சட்ட பீடம் உட்பட கொழும்பு பல்கலைக்கழகத்தின...
10/12/2022

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் ஆதரவளிக்கும்- ஜனாதிபதி.

சட்ட பீடம் உட்பட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தாராளமான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (10) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Back To the Faculty of Law – Law Faculty சட்ட பீடத்திற்கு மீண்டும் – சட்ட பீடம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர் சட்ட பீட பீடாதிபதி அலுவலகத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற, கொழும்பு சட்ட பீடத்தின் முதலாவது பழைய மாணவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எச்.டி கருணாரத்ன, சட்ட பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சம்பத் புஞ்சிஹேவா, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மதுர விதானகே, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில், கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் பட்டப்பின்படிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கும் நிரந்தர ஊழியர்களை பணியமர்த்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி இங்கு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விட தரத்தை உயர்த்தி கொழும்பு பல்கலைக்கழகத்தை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்குள் கொண்டு செல்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அப்போது, வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைக்கு அழைத்து வர முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தற்போது இருப்பது போன்று வசதிகள் இல்லாத போதும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் கல்வித் தரம் உயர் மட்டத்தில் இருந்ததையும் ஜனாதிபதி மற்றும் குழுவினர் நினைவு கூர்ந்தனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்த ஜனாதிபதி, அதற்காக நான்கு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை உபவேந்தர், சட்ட பீடத்தின் பீடாதிபதி மற்றும் சட்ட பீட சங்கத்தின் செயலாளர் ஆகியோர் வரவேற்றனர்.

மாணவர்களுடன் ஜனாதிபதி சில செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன் குழு புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா, சட்டத்தரணி ஷிரால் லக்திலக மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய கல்வியியலாளர்கள் கலந்துகொண்டனர்.

10/12/2022
புயலால் பாதிக்கப்பட்ட பசறை தன்னுக பிரிவுக்கு விஜயம் மேற்கொண்ட செந்தில் தொண்டமான்!பசறை தன்னுக பிரிவுக்கு விஜயம் மேற்கொண்ட...
10/12/2022

புயலால் பாதிக்கப்பட்ட பசறை தன்னுக பிரிவுக்கு விஜயம் மேற்கொண்ட செந்தில் தொண்டமான்!

பசறை தன்னுக பிரிவுக்கு விஜயம் மேற்கொண்டு பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான பார்வையிட்டார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Thinakkural

Address

65/03 04th Cross Road New Kattankudy/03
Kattankudi

Alerts

Be the first to know and let us send you an email when Velli Velichcham TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Velli Velichcham TV:

Videos

Share