Beerok Media

Beerok Media BEEROK MEDIA

🔍 வெற்றியாளர்களின் அனுபவங்களை பகிர்ந்து, வாழ்க்கையின் *TURNING POINT* இனை கண்டறிந்து கற்றல் ஆர்வத்தை தூண்டவும்,⌛  *SMART...
13/04/2024

🔍 வெற்றியாளர்களின் அனுபவங்களை பகிர்ந்து, வாழ்க்கையின் *TURNING POINT* இனை கண்டறிந்து கற்றல் ஆர்வத்தை தூண்டவும்,

⌛ *SMART STUDY HOURS TIME TABLE* இனூடாக குறுகிய காலத்தில் சிறந்த அடைவை பெற்றுக்கொள்ளவும்,

👏 O/L Result இனை உயர்த்தி வாழ்க்கையில் வெற்றிபெற தரமான அடித்தளத்தை அமைத்துக்கொள்ளவும்,

📅 Impel Awarding Body Pvt Ltd இனால் நடாத்தப்படவிருக்கும் விஷேட MOTIVATION நிகழ்ச்சியில், *2024* ```(2025)``` *O/L* எழுதவிருக்கும் மாணவ மாணவிகள் முற்றிலும் இலவசமாக கலந்து பயன்பெற தவறாதீர்கள்.

🖇 *Elevate O/L Result -2024 (2025)* நிகழ்ச்சியில் நீங்களும் தெரிவுசெய்யப்பட, Group -01 அல்லது Group -02 இரண்டில் ஒரு குழுவில் மாத்திரம் இணைந்துகொள்ளவும்.

```Group -01```

*https://chat.whatsapp.com/LmvBwtX5sQgEsuoOUyC0Gg*

```Group -02```

*https://chat.whatsapp.com/IHTEw2hlBRjDd6NhV3BXLS*

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

🌎   🇱🇰103% increase in tourism earnings with USD 1 Bn earned in Q1 2024. Sri Lanka has welcomed over 635,000 visitors so...
12/04/2024

🌎 🇱🇰

103% increase in tourism earnings with USD 1 Bn earned in Q1 2024. Sri Lanka has welcomed over 635,000 visitors so far this year. Targets 2.3 million visitors and USD 4 Bn in earnings for 2024

BEEROK MEDIA ENGLISH
WhatsApp Group

https://chat.whatsapp.com/Cta6NV6guJJABgqheKxOb0

🎉  #இலங்கையில்_இன்று   #தலைப்பிறை  #தென்பட்டது_நாளை  #புதன்_நோன்பு  #பெருநாள்09 April 2024 ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் புனித...
09/04/2024

🎉 #இலங்கையில்_இன்று #தலைப்பிறை #தென்பட்டது_நாளை #புதன்_நோன்பு #பெருநாள்

09 April 2024 ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலை பிறை நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (09) செவ்வாய் மாலை தென்பட்டமையினால் நாளை புதன் (10) நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார விவகார திணைக்களம் ஆகியன இணைந்து அறிவித்தன.

புனித ஷவ்வால் மாத தலை பிறையினை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இந்த தலை பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
Eid Al-Fitr Mubarak

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

 #மலையக இந்து குருமார் சம்மேளனம் தோழர் அநுரவை சந்தித்ததுமலையக இந்து குருமார் சம்மேளனத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் இன்...
31/03/2024

#மலையக இந்து குருமார் சம்மேளனம் தோழர் அநுரவை சந்தித்தது

மலையக இந்து குருமார் சம்மேளனத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் இன்று (31) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

இதன்போது மலையக மக்களின் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள், மலையகத்தில் இந்து சமயத்தையும் கலாச்சாரத்தையும் மேம்படுத்துதல் பற்றிய விடயங்களையும் மலையக இந்து குருமார்கள் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.

நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த உரையாடலில் மலையக மக்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைளுக்கு எவ்வாறான அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது மற்றும் நடப்பு அரசியல், பொருளாதார நிலைமைகள் குறித்தும் தோழர் அநுர குமார திசாநாயக்க தெளிவுப்படுத்தினார்.

இது ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.
31/03/2024

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

வருமானம் குறைந்த பள்ளிவாசல்களுக்கு இலவச Solar Power Project...விபரங்கள் அனைத்தும் உள்ளே👇மின்சார கட்டணங்கள் கட்டுவதற்கு வ...
25/03/2024

வருமானம் குறைந்த பள்ளிவாசல்களுக்கு இலவச Solar Power Project...விபரங்கள் அனைத்தும் உள்ளே👇

மின்சார கட்டணங்கள் கட்டுவதற்கு வருமானம் குறைந்த பள்ளி வாயில்களுக்கு Solar Power Projector ஏற்பாடு செய்து தருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே உங்களுடைய பள்ளிவாயில்கள் வருமானங்கள் இன்றி மின்சார கட்டணங்கள் கட்டுவதற்கு கஷ்டப்படுகின்ற நிலையில் இருந்தால் கீழ் வரக்கூடிய தகவல்களை பதிவில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ் அப் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

1. அனுப்ப வேண்டிய தொலைபேசி இலக்கம்: 0770609600

2. அனுப்பப்பட வேண்டிய தகவல்கள்
1. பள்ளிவாயல் பெயர் :
2. முகவரி :
3. பள்ளிவாயல் கூரை நீளம் அகலம் :
4. தலைவர் மற்றும் செயலாளர் தொலைபேசி இலக்கங்கள் :
5. ஆறு மாத கரண்ட் பில் பட்டியல் :

3. அனுப்பப்பட வேண்டிய முகவரி :
Babes Cute Mart, 63/1, Mosque Road, Gorakana, Panadura.

மேற்கூறப்பட்ட தகவல்களை இம் முகவரிக்கு (பதிவு) ரெஜிஸ்டர் போஸ்ட் பண்ணவும்.

குறிப்பு:
இவ் உதவி பள்ளி வாயில்களுக்கு மாத்திரம் செய்து கொடுக்கப்படும் வேறு வகையான மத்ரஸாக்கள் அல்லது அகடமிகள் போன்ற நிறுவனங்களுக்கு செய்து கொடுக்கப்பட மாட்டாது.
25/03/2024

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

“23  #முஸ்­லிம்­களும்  #உயிர்த்தஞாயிறு  #­தாக்­கு­தலின்  #பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளார்கள்”  #கர்­தினால்23 Mar 2024 ...
23/03/2024

“23 #முஸ்­லிம்­களும் #உயிர்த்தஞாயிறு #­தாக்­கு­தலின் #பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளார்கள்” #கர்­தினால்

23 Mar 2024 அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் 1500 பக்­கங்­களை மறைத்து விட்­டது. எமக்கு வழங்­கிய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட 1500 பக்­கங்­களும் காணப்­ப­ட­வில்லை.

இதே­வேளை அரசு சஹ்ரான் மற்றும் சஹ்ரான் குழு­வி­ன­ருடன் தொடர்­பி­லி­ருந்­தார்கள் எனக் குற்றம் சுமத்தி 23 முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­துள்­ளது. இந்த 23 முஸ்­லிம்­களும் இத்­தாக்­கு­தலின் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளார்கள் என கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­வித்­துள்ளார்.

கொழும்பு திருச்­ச­பையின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது,

"அர­சாங்கம் எமது கோரிக்­கைக்கு இணங்க ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை ஆறு சிடிக்­களில் எமக்கு வழங்­கி­யது. எமது சட்­டத்­த­ர­ணிகள் அந்த அறிக்­கையை கவ­ன­மாக ஆராய்ந்­தார்கள். அதில் 70 ஆயிரம் பக்­கங்கள் உள்­ளன. என்­றாலும் அறிக்­கையின் 1500 பக்­கங்­களை அரசு எமக்கு வழங்­க­வில்லை. இந்த 1500 பக்­கங்­க­ளையும் அர­சாங்கம் சூட்­சு­ம­மாக தன்­னி­டமே வைத்­துக்­கொண்­டுள்­ளது என்றும் கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், சஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் சாரா ஜெஸ்மின் ஆகிய முக்­கி­ய­மான சாட்­சி­களால் வழங்­கப்­பட்ட சாட்­சி­யங்­க­ளையே அர­சாங்கம் எம்­மிடம் கைய­ளிக்­க­வில்லை. இது பாரிய சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தாகும். தற்­கொலை தாக்­கு­தலில் ஈடு­பட்ட சஹ்ரான் குழு­வி­ன­ருடன் நெருங்­கிய தொடர்­பி­லி­ருந்­தவர் சாரா ஜெஸ்மின் எனும் பெண்­ணாகும். அவ­ரது சாட்­சி­யங்கள் எமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ரணை ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யினை முழு­மை­யாக எமக்கு வழங்­கும்­படி நாங்கள் பல கடி­தங்கள் எழு­திய பின்பே அறிக்கை எமக்கு வழங்­கப்­பட்­டது. இதே­வேளை முழு­மை­யான அறிக்கை எமக்கு வழங்­கப்­பட்­ட­தாக அரசு ஊட­கங்­க­ளுக்கு பொய் கூறி­யுள்­ளது.

விளக்­க­ம­ளித்­துள்ளார். உறுதி செய்­துள்ளார். இதில் பிள்­ளையான் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தா­கவும் கூறி­யுள்ளார். இரா­ணுவ புல­னாய்வு பிரி­வினர் வழங்­கிய நிதியை பிள்­ளையான் ஊடாக சஹ்ரான் குழு­வினர் பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் ஆசாத் மெள­லானா தெரி­வித்­துள்ளார்.

இரா­ணுவ புல­னாய்வு பிரிவின் தலை­வ­ராக செயற்­பட்ட சுரேஷ் சாலே­வுக்கும் சஹ்ரான் ஹாசிம் குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் சந்­திப்­புகள் இடம் பெற்­ற­தா­கவும் புதிய தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. தென்­ப­குதி அதி­வேக நெடுஞ்­சா­லையில் ஜெல­னி­க­மயில் சந்­தே­கத்­துக்­கி­ட­மான பொருட்­க­ளுடன் காணப்­பட்ட லொறி­யொன்­றினை சோதனை செய்­யாது விடு­விக்­கு­மாறு தற்போதைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறிப்பிட்ட லொறி முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமான அவன்ட் கார்டே பாதுகாப்புச் சேவைக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட லொறியின் வெடி மருந்துகள் காணப்பட்டிருக்கலாம் என ஆசாத் மெளலானா தெரிவித்துள்ளார் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.!!5ஆவது முறையாகவும் அதிபராக பதவியேற்றதன் மூலம், ஜோசப் ...
19/03/2024

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.!!

5ஆவது முறையாகவும் அதிபராக பதவியேற்றதன் மூலம், ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு அதிக காலம் பதவி வகித்த ரஷ்யத் தலைவர் என்ற பெருமையை புடின் பெற்றுள்ளார்.

ரஷ்ய அதிபர் தேர்தல் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.

இந்த மூன்று நாட்களில், 87 சதவீத வாக்குகள் பெற்ற புடின் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய புடின் ரஷ்ய ஜனநாயகத்தை பாராட்டினார்.

மேலும் ரஷ்யாவில் உள்ள ஜனநாயகம் மேற்கு நாடுகளை விட மிகவும் வெளிப்படையானது என்றும் கூறினார்.
19/03/2024

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

💔 கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கையர்கள் உயிரிழப்பு!ஒரே...
08/03/2024

💔 கனடாவின் தலைநகர்
ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில்
துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த இலங்கையர்கள் உயிரிழப்பு!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அவர்களது
வீட்டு மாடியில் கொலையாளியுடன் தங்கி
இருந்த (40) வயதானவரும் உயிரிழந்துள்ளனர்.

இதன் போது, தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(35) வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான தர்ஷினி டிலாந்திய ஏக்கநாயக்க
(7) இனுக்கா விக்ரமசிங்க
(4)வயதுடைய அஸ்வினி விக்ரமசிங்க
(2)வயதுடைய ரிஞ்ஞானா விக்ரமசிங்க
(2)மாதமான கேலி விக்ரமசிங்க
(40) வயதுடைய காமினி அமரக் கோன்

ஸ்டுடென்ட் விசாவில் புதிதாக கனடா வந்த (19) வயது மாணவன் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்த குடும்பம் வசித்த வீட்டின் மேல் வசித்து வந்தவர் ஆவார் இச்சம்பவத்தில் கணவர் காயங்களுடன் தப்பியுள்ளார்.
08/03/2024

BEEROK MEDIA TAMIL

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

🇱🇰     வட மாகாணம் என்றால் வடக்கில் சிறிய மாவட்டம் – யாழ்ப்பாணம்.வடக்கில் பெரிய மாவட்டம் – முல்லைத்தீவு.வடக்கில் கடல்பரப்...
08/03/2024

🇱🇰
வட மாகாணம் என்றால் வடக்கில் சிறிய மாவட்டம் – யாழ்ப்பாணம்.

வடக்கில் பெரிய மாவட்டம் – முல்லைத்தீவு.

வடக்கில் கடல்பரப்பில்லாத மாவட்டம் – வவுனியா.

வடக்கில் குளங்கள் அதிகமாக காணப்படும் மாவட்டம் – முல்லைத்தீவு.

வடக்கில் காணப்படும் பெரிய தீவு – நெடுந்தீவு.

வடக்கில் சிலிக்கன் மணல் காணப்படும் இடம் - நாகர்கோவில்.

வடக்கு மாகாணசபை அமைந்துள்ள இடம் – கைதடி.

வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி கூடிய மாவட்டம் - யாழ்ப்பாணம்.

வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டம் - முல்லைத்தீவு.

வடமாகாணத்தின் பரப்பளவு – 8884 சதுர கிலோமீட்டர்.

வடமாகாணத்தின் நிலப்பரப்பு 8290 சதுர கிலோமீட்டர்.

வடக்கில் எண்ணெய் வளம் உள்ள மாவட்டம் – மன்னார்.

வடக்கில் சிறுவர் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் – குருநகர், யாழ்ப்பாணம்.

வடக்கில் அல்லது இலங்கையில் நீளமான பாலம் – வேலணை – புங்குடுதீவு.

வடக்கில் காணப்படும் முனை – பருத்தித்துறை (பேதுறு).

வடக்கில் காணப்படும் நீரேரிகள் - கச்சாய் அல்லது கிளாலி, சுண்டிக்குளம், தொண்டமானாறு.

இலங்கையின் வடக்கின் புராதனபெயர் - நயினாதீவு (நாகதீவு).

வடக்கில் இருந்து பாராளுமன்றம் சென்ற முதலாவது பெண் - 15 February 1989 - 24 June 1994 – திருமதி புலேந்திரன் ராஜமனோகரி – வன்னி.

வடக்கில் ஓட்டு தொழிற்சாலை ஒட்டுசுட்டானிலும் உப்பளம் ஆனையிறவிலும் சீமேந்து தொழிற்சாலை காங்கேசன்துறையிலும் இரசாயன தொழிற்சாலை பரந்தனிலும் காணப்படுகிறது.

வட மாகாணத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் விலங்குகள் காப்பகம் என அறிவிக்கப்ட்ட இடம் - சுண்டிக்குளம் (கிளிநொச்சி மாவட்டம்).

வேலணை தீவு அல்லது லைடன் தீவுகள் எனப்படுவது வடக்கில் பெரிய கூட்டிணைக்கப்பட்ட தீவாகும்.

யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஒரே ஆறு – வழுக்கை ஆறு (பருவகால ஆறு).

இலங்கையில் காணப்படும் குளங்களில் மூன்றாவது பெரிய குளம் - இரணைமடுக் குளம்.

"செங்கையாழியன்" என அழைக்கப்படும் வடமாகாணத்தின் எழுத்தாளர் - கலாநிதி க.குணராசா.

அண்மையில் வடக்கில் தொடங்கப்பட்ட கைத்தொழில் பேட்டை - அச்சுவேலி.

வவுனிக்குளத்தை கட்டுவித்தவன் - எல்லாளன்.

பனைமரத்தின் விஞ்ஞான பெயர் - Borassus flabellifer.

வடக்கிற்கான ரயில் சேவை 1989.01.19 பின் 13.10.2014 உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு ரயில் பாதையை புனரமைத்த இந்திய நிறுவனம் – இர்கொன்.

இரணைமடு நீர் விநியோக திட்டத்திற்கு உதவி வழங்குவது - ஆசிய அபிவிருத்தி வங்கி.

இரணமடு நீர் விநியோக திட்டத்திற்கு மாற்றீடான மற்றுமொரு திட்டம் - ஆறுமுகம் திட்டம்.

யாழ்ப்பான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது - ஆகஸ்ட் 1, 1974

வடமாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் மரம் நடுகை தினம் நவம்பர் 01 – 30 வரை கொண்டாடப்படுகிறது.

மருத மரத்தின் விஞ்ஞான பெயர் – Terminalia elliptica.

வெண்டாமரை பூவின் விஞ்ஞான பெயர் – Nelumbo nucifera.

ஆண் மானின் விஞ்ஞான பெயர் – Axis axis.

சுன்னாகம் கழிவு ஒயில் தொடர்பான நிறுவனம் - நொதேர்ன் பவெர்.

யாழ்ப்பான நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஆண்டு - 31.05.1981.

யாழ்ப்பாண வரலாற்றை கூறும் நூல்கள் - வையாபாடல், யாழ் வைபவ மாலை.

யாழ்ப்பான பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் – சேர் பொன் இராமநாதன்.

முறிந்த பனை என்ற நூலை எழுதியவர்கள் – ராஜினி திராணகம, ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம்.

மன்னருக்கான ரயில் சேவைகள் 1914ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது - 14.03.2015.

மன்னார் – நாவற்குழி பிரதான பாதை A32.

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான பாதை A35.

மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான பாதை A34.

முல்லைத்தீவோடு இணைக்கப்பட்ட பிரதேசம் – மணலாறு (வெலிஓயா).

நயினாதீவின் தற்போதைய பெயர் – நாகதீப.

யாழ் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது – 1933 ஆம் ஆண்டு.

இலங்கையில் வறுமை கூடிய மாவட்டம் -கிளிநொச்சி.

மதுபான விற்பனை மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படும் மாவட்டம் - யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது.

யாழ் கோட்டை போர்த்துகேயரால் 1625ல் கட்டப்பட்டது.

தற்போது காணப்படும் யாழ் கோட்டை ஒல்லாந்தரால் உடைக்கப்பட்டு 1658 யூன் 23 ற்கு பின் கட்டப்பட்டதாகும்.

யாழ்ப்பாண அரசின் நாணயம் – சேது நாணயம்.

யாழ்ப்பாண அரசின் பழைய சின்னமாக விளங்குவது – நந்தி.

வன்னி இராட்சியம் வீழ்ச்சியடைந்தது - 1803ம் ஆண்டு.

ஒல்லாந்தரால் சொத்துரிமை தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு மட்டும் உரித்தான சட்டம் – தேசவழமைச் சட்டம்.

யாழ் நூலை எழுதியவர் – சுவாமி விபுலானந்தர் 1947.

சுவாமி விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன் 1892.

சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் - ஆறுமுகநாவலர் (1822 டிசம்பர் 18 ஆறுமுகம்பிள்ளை).

நாவலர் 1872 இல் முதல் உருவாகிய சைவ ஆங்கிலப் பாடசாலை - வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை.

மன்னாரில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்ட நிறுவனம் – கெய்ன் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா......!

BEEROK MEDIA TAMIL

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

கோட்டாபயவின் ‘என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி’ (The conspiracy to oust me from presidency) என்ற புத்...
06/03/2024

கோட்டாபயவின் ‘என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி’ (The conspiracy to oust me from presidency) என்ற புத்தகம் நாளை (07) வெளியாகிறது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற புத்தகத்தை நாளை வெளியிடவுள்ளார்.

சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் தனது நேரடி அனுபவத்தை இந்த புத்தகம் ஆராய்வதாக முன்னாள் ஜனாதிபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நூல் இலங்கையர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டினருக்கும் முக்கியமானது என நான் நம்புகின்றேன்.

முன்னணி புத்தகக் கடைகளில் இருந்து இந்த புத்தகம் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் கிடைக்கும் என்றார்.
06/03/2024

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

06 நாடுகளின் தூதுவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரவிற்கும் இடையிலான சந்திப்புஇன்று (06) பிற்பகலில் ம.வி.மு...
06/03/2024

06 நாடுகளின் தூதுவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரவிற்கும் இடையிலான சந்திப்பு

இன்று (06) பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்கள்.
பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி திரு. Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் திரு. Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி Dewi Gustina Tobing, மேற்படி தூதரகத்தின் பிரதம கொன்சல் திரு. Heru Prayitno, மலேசிய உயர்ஸ்தானிகர் திரு. Badli Hisham Bin Adam மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் திருமதி Fathimath Ghina ஆகிய இராஜதந்திரிகள் அந்நாடுகளைப் பிரதிநிதித்துவம்செய்து இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ்வி சாலி மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகிய தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் இராஜதந்திரிகள் விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை பற்றியும் இந்த சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.
06/03/2024

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

தமிழ் நாட்டின் ரஹ்மத் பதிப்பக உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடிக்கு விஜயம்!கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்...
06/03/2024

தமிழ் நாட்டின் ரஹ்மத் பதிப்பக உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடிக்கு விஜயம்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வின் அழைப்பின் பேரில், தமிழ் நாட்டின் ரஹ்மத் பதிப்பக உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய பள்ளிவாசல் போன்றவற்றிற்கு திங்கட்கிழமை (04) விஜயம் மேற்கொண்டுள்ளனர் .

இதன்போது தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், உலகப்புகழ் தமிழ் மொழி அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்துள்ளனர்.

BEEROK MEDIA TAMIL

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

A/L பரீட்சைக்கு பின் உயர்கல்வியை தொடர்வதற்கான விஷேடமாக ELC இனால் வடிவமைக்கப்பட்ட Computer Studies for Higher Education C...
28/02/2024

A/L பரீட்சைக்கு பின் உயர்கல்வியை தொடர்வதற்கான விஷேடமாக ELC இனால் வடிவமைக்கப்பட்ட Computer Studies for Higher Education Course இன் Batch 01 இற்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 25.02.2024ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.

தொழில் அதிபர் அல் ஹாஜ் S.M. ஜிப்ரி அவர்களின் அனுசரனையில் முற்றிலும் இலவசமாக பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிலையங்களுக்கு தெரிவான 10 மாணவிகள் இப்பயிற்சிநெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்தனர்.

இதன் அடுத்த கட்டமாக இம்முறை 2023 (2024) A/L பரீட்சையை எழுதி பெறுபேறை எதிர்ப்பர்த்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கான மேற்படி Course இன் Batch 02 இற்கான அறிமுக நிகழ்ச்சி எதிர்வரும் 02/March/2024 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 04.30 மணிக்கு துர்ஹம் கல்லூரியில் (Primary) மேல் மாடியில் அமைந்துள்ள ELC நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் தொழில் அதிபர் அல் ஹாஜ் S.M.ஜிப்ரி அவர்களின் அனுசரனையில் முற்றிலும் இலவசமாக Batch 02 ற்கான முதல் 14 மாணவ மாணவிகள் இணைக்கப்படவுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

எனவே தாங்களும் இப்பாடநெறியில் இணைந்துகொள்ள 077 343 6093 அல்லது
077 072 6644 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் எதிர்வரும் 01/March/2024 ஆம் திகதிக்கு முன்பாக தொடர்புகொள்ளவும்.

BEEROK MEDIA TAMIL

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

கடந்த 2024/02/18ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் , நினைவுச...
25/02/2024

கடந்த 2024/02/18ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் , நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை Impel Awarding Body (Pvt) Ltd நிறுவனத்தின் ஏற்பட்டால் மிக சிறப்பாக கொழும்பு BMICH JESMIN மண்டபத்தில்
நடைபெற்ற நிகழ்வின் சில பதிவுகளே இவை
இதன் முக்கிய காணொளிகளை மிக விரைவில் எமது BEEROK MEDIA YouTube தளத்தில் எதிர்பாருங்கள்

BEEROK MEDIA TAMIL

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

❤️ காசாவில் யுத்த நிலையிலும் உயிரைப் பணயம் வைத்து ஆசிரியப்பணிஅஸ்மா முஸ்தபா பாலஸ்தீன ஆங்கில ஆசிரியை தற்போது யுத்த நிலையில...
22/02/2024

❤️ காசாவில் யுத்த நிலையிலும் உயிரைப் பணயம் வைத்து ஆசிரியப்பணி

அஸ்மா முஸ்தபா பாலஸ்தீன ஆங்கில ஆசிரியை தற்போது யுத்த நிலையிலும் காசாவில் சிறுவர்களுக்கு கதைகள் சொல்லி கற்பிக்கிறார்

பல இடங்களில் இடம் பெயர்ந்து கடைசியாக ரபாஹ்வில் முகாமில் தங்கியிருக்கும் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கின்றார்

நான் உயிருடன் இருக்கும் வரை காஸா குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன், என அஸ்மா கூறியது இவரின் அற்பணிப்புக்கு ஒரு எடுத்துகாட்டு

இவரின் அர்ப்பணிப்பான ஆசிரியப் பணி போற்றத்தக்கது

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

𝐑𝐚𝐯𝐚𝐧𝐚 𝐅𝐚𝐥𝐥𝐬, 𝐄𝐥𝐥𝐚 🇱🇰 🌿 💗   The Ravana Falls are located in the misty mountains of Ella, Sri Lanka along the road. The w...
20/02/2024

𝐑𝐚𝐯𝐚𝐧𝐚 𝐅𝐚𝐥𝐥𝐬, 𝐄𝐥𝐥𝐚 🇱🇰 🌿 💗


The Ravana Falls are located in the misty mountains of Ella, Sri Lanka along the road. The water gushes down a height of 25 meters fallen from an oval concave rock. Ravana Falls is a 3-tier cascading waterfall, creating rock pools along its way down. During the wet season the Ravana Falls takes the form of a drooping areca flower, but its wide size is reduced dramatically during the dry season.

BEEROK MEDIA ENGLISH

https://chat.whatsapp.com/Cta6NV6guJJABgqheKxOb0

அகுரனை தாரு ஆஇஷா பெண்கள் அரபிக்கல்லூரிக்கு 2023ம் ஆண்டுக்கான 13,14 வயதை அடைந்த சிறுமிகளுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் வகுப்ப...
16/02/2024

அகுரனை தாரு ஆஇஷா பெண்கள் அரபிக்கல்லூரிக்கு 2023ம் ஆண்டுக்கான 13,14 வயதை அடைந்த சிறுமிகளுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் வகுப்புகள்.

பாட நாட்கள்…..
கிழமையில் மூன்று நாட்கள். செவ்வாய்,புதன்,வியாழன்

நேரம்….
மாலை 3.30 முதல் 5.30 வரை.

இடம்…..
1. பல்லியகொடுவ.
தாரு ஆஇஷா மத்ரஸா.

2. தெலும்புகஹவத்த.
லகி இஸ்டோஸ் கஸ்ஸாலி மௌலவி வீடு.

தொடர்புகளுக்கு….
+94 774524451
+94778066513
+94772000161

வகுப்புகள் 20/02/2024 ஆரம்பமாகும்.

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

பிங்கா ஒயாவை சுத்தமாக்கும்...*மாபெரும் சிரமதானத் தொடர்*பெப்ரவரி 17 2024 l காலை 7.00 மணிக்கு"எமது சூழலை, நாமே பாதுகாப்போம...
15/02/2024

பிங்கா ஒயாவை சுத்தமாக்கும்...
*மாபெரும் சிரமதானத் தொடர்*
பெப்ரவரி 17 2024 l காலை 7.00 மணிக்கு

"எமது சூழலை, நாமே பாதுகாப்போம்" என்ற தொனிப் பொருளின் கீழ்,
பிங்கா ஓயாவை சுத்தமாக்கும் மாபெரும் சிரமதான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அக்குறணை பிரதேச செயலகம் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன், அக்குறணை ஜம்இய்யதுல் உலமா, அக்குறணை மஸ்ஜிதுகள் சம்மேளனம் ஆகியவற்றின் வழிகாட்டலில் அக்குறணை அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இத்திட்டத்தைத முன்னெடுத்துள்ளன.

மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த சிரமதானத்தின் *முதல் கட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (பெப்ரவரி 17, 2024) காலை 7.00 மணிக்கு துனுவில வீதியில் நடைபெறவுள்ளது.*

அஸ்ஹரிய்யா, காதிரிய்யா, ஸாலிஹீன் ஜும்ஆ மஸ்ஜிதுகளின் நிர்வாக சபைகள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள மேற்படி சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டு இந்த முயற்சிக்கு பங்களிக்குமாறு அக்குறணை வாழ் மக்களை அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்!

அக்குறணை அனர்த்த முகாமைத்துவப் பிரிவு
*0775016449, 0772277314, 0772660660*

துனுவில வீதி மஸ்ஜிதுகள்
*0777700187 (அஸ்ஹரிய்யா), 0767397402 (காதிரிய்யா), 0777555296 (ஸாலிஹீன்)*

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

🌎🇱🇰    இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டல் நீர்கொழும்பில் திறக்கப்படவுள்ளது!மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின் பொலகல ...
15/02/2024

🌎🇱🇰
இலங்கையின் முதலாவது
மிதக்கும் ஹோட்டல் நீர்கொழும்பில்
திறக்கப்படவுள்ளது!

மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின்
பொலகல பகுதியில் "அக்ரோ
ஃப்ளோட்டிங் ரிசார்ட் ( Bolagala Agro
Floating Resort )" திறக்கப்படவுள்ளது.

13 ஏக்கர் நீர்பரப்பில், சுற்றுச்சூழலுக்கு
உகந்த (eco friendly) 31 கபனாக்களை
உள்ளடக்கியதாக திறக்கப்படும் இக்
ஹோட்டல் இலங்கையின் முதலாவது
மிதக்கும் ஹோட்டலாகும்.

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

🌎🇱🇰   ஜாமி உல்-அல்பார் பள்ளிவாயல் , 2வது குறுக்குத் தெரு, பெட்டா, கொழும்பு, சிலோன் 1945 இல் ராயல் கனடிய கடற்படையின் HMCS...
07/02/2024

🌎🇱🇰
ஜாமி உல்-அல்பார் பள்ளிவாயல் , 2வது குறுக்குத் தெரு, பெட்டா, கொழும்பு, சிலோன் 1945 இல் ராயல் கனடிய கடற்படையின் HMCS ஒன்டாரியோவின் கென்னத் அந்தோனி ஜான்சன் எடுத்த படம்

புகைப்பட உதவி - கென் ஜான்சன்/ சார்லஸ் டோபி.

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

Commemoration of the 76th Independence Day with 'Saamaya Karaa...' (Sinhala) Book Launch********************************...
05/02/2024

Commemoration of the 76th Independence Day with 'Saamaya Karaa...' (Sinhala) Book Launch
*****************************************

Naleemiah Institute of Islamic Studies marked the 76th Independence Day today with a significant celebration, featuring the launch of the book 'Saamaya Karaa' (සාමය කරා...සාමය පිලිබඳ ඉස්ලාමීය දැක්ම), authored by the institute's Rector Ustadh A.C. Agar Mohamed. Published by the Salam Centre for Peace and Dialogue, a special wing of Naleemiah dedicated to fostering understanding and harmony, the book delves into the concept of peace from an Islamic perspective.

The celebration included a talk by the rector, discussing the importance of independence in human life from various perspectives. Ash-sheikh Dr. A.J.M. Zihan, a lecturer at Naleemiah, delivered a special talk that added value to the celebration. The book introduction was presented by Mr. Savith Timantaka, former Sinhala lecturer at Naleemiah and current lecturer at the University of Sri Jayawardenepura.

The ceremony concluded with a tree planting event.
05/02/2024

BEEROK MEDIA ENGLISH
WhatsApp Group

https://chat.whatsapp.com/Cta6NV6guJJABgqheKxOb0

🌎🇱🇰     View of the Jami Ul-Alfar Mosque, “Red Masjid”2nd Cross Street, Pettah, Colombo, Ceylon in 1945 taken by Kenneth...
04/02/2024

🌎🇱🇰
View of the Jami Ul-Alfar Mosque, “Red Masjid”
2nd Cross Street, Pettah, Colombo, Ceylon in 1945 taken by Kenneth Anthony Johnson of HMCS Ontario of the Royal Canadian Navy. Photo Credits - Ken Johnson/ Charles Dobie

BEEROK MEDIA ENGLISH
WhatsApp Group

https://chat.whatsapp.com/Cta6NV6guJJABgqheKxOb0

 #உண்மையான  #சுதந்திர  #தினம்...வாய்ச் சவடால்களின்றி உள்ளத்தால் நாட்டையும், மக்களையும் நேசிக்கும் உண்மையான அரசியல்வாதிகள...
04/02/2024

#உண்மையான #சுதந்திர #தினம்...

வாய்ச் சவடால்களின்றி உள்ளத்தால் நாட்டையும், மக்களையும் நேசிக்கும் உண்மையான அரசியல்வாதிகள் உருவாகும் தினமே உண்மையான சுதந்திர தினமாகும்.

பிறர் என்ன நினைப்பார்களோ, ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ, நாமும் போட்டோவிற்கு முகம் காட்ட வேண்டுமே என்றில்லாமல்; நாட்டுப் பற்றுடனும் உள அமைதியுடனும் நாட்டு மக்கள் யாவரும் ஒன்றினைந்து கொண்டாடும் தினமே உண்மையான சுதந்திர தினமாகும்.

இனவாதம் மதவாதங்களில்லாத, மக்களை ஏமாற்றி நாட்டை விற்றுப் பிழைக்கும் கேவலமான தலைவர்களில்லாத, ஒரு தாயின் மக்கள்போல் இத்தீவின் மக்கள் மகிழ்வுடன் வாழ பிறக்கும் தினமே உண்மையான சுதந்திர தினமாகும்.

நான் உண்ணுவதை என் பக்கத்து வீட்டுக் காரனும் உண்ண வேண்டும், எதிலும் நான் ஏமாறவும் கூடாது பிறரை ஏமாற்றவும் கூடாது என ஒவ்வொரு பிரஜையும் திடசங்கட்பம் ஏற்கும் தினமே உண்மையான சுதந்திர தினமாகும்.

அற்பக் கிரயத்துக்காக கல்வி, கலாசாரம், ஆண்மீகம் விற்பனை செய்யப் படாமல் பாதுகாத்து, பேணப்படும் தினமே உண்மையான சுதந்திர தினமாகும்.

இப்படியான உண்மையான சதந்திர தினத்தை வேண்டி பிரார்த்திக்கிறேன்.

அபூ ஸுமையா
04-02-2024

BEEROK MEDIA TAMIL
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when Beerok Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beerok Media:

Share