News line Sri Lanka

News line  Sri Lanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News line Sri Lanka, Media/News Company, Kandy.

அநுராதபுரம் பெண் வைத்தியருக்கு நடந்தது இதுதான்…. முழு விபரம் வெளியானதுஅநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்திய நி...
11/03/2025

அநுராதபுரம் பெண் வைத்தியருக்கு நடந்தது இதுதான்…. முழு விபரம் வெளியானது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணராக பயிற்சி பெற்று வரும் பெண் வைத்தியர் ஒருவர், நேற்று இரவு (11) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவரைக் கண்டுபிடிக்க ஐந்து பொலிஸ் குழுக்கள் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த சம்பவத்தின் அடிப்படையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணராகப் பயிற்சி பெற்று வரும் 32 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர், நேற்று இரவு வழக்கம்போல் பணிக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தார்.

குறித்த வைத்தியர், தனது கடமையை முடித்துவிட்டு, இரவு 7 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்திய நிபுணர்கள் மட்டுமே வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளார்.

வைத்தியர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தபோது, பின்னால் இருந்து வந்த ஒரு நபர் திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், வைத்தியரின் வாயை இறுக்கமாகக் கட்டி, அவர் கத்த முடியாதபடி கட்டிய சந்தேக நபர், உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவைத் திறக்கச் சொல்லி, வைத்தியரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, சத்தம் யாருக்கும் கேட்காதபடி கதவை மூடியுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் குறித்த பெண் வைத்தியரின் கைகளைக் கட்டி, கண்களைக் கட்டி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில், வைத்தியரின் கைப்பேசியையும் திருடிச் சென்றுள்ளார்.

சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், வைத்தியசாலை வார்டுக்கு வந்த வைத்தியர், தான் முகங்கொடுத்த சம்பவத்தைப் பற்றி அவரது தந்தைக்கு தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அநுராதபுரம் மாவட்ட அதிகாரிகள் இன்று அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.

இது குறித்து நாம் விசாரித்தபோது, சந்தேக நபரைத் தேடி அப்பகுதி முழுவதும் சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அநுராதபுரம் பொலிஸின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த சம்பவத்தின் அடிப்படையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அனைத்து வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் இன்று பிற்பகல் முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர், மேலும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், தவறினால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், சந்தேக நபர் ஏற்கனவே இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் !! 🫡❤️ உலகளாவிய பெண்களின் நம்பமுடியாத பங்களிப்புகளை நாங்கள் மதிக்கிறோம்..🖤 இன்று, பத்தி...
08/03/2025

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் !! 🫡❤️

உலகளாவிய பெண்களின் நம்பமுடியாத பங்களிப்புகளை நாங்கள் மதிக்கிறோம்..🖤

இன்று, பத்திரிகை முதல் தலைமை வரை, அறிவியல் முதல் கலை வரை, மற்றும் அதற்கு அப்பால் - சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும் பெண்களின் வலிமை, மீள்தன்மை மற்றும் சாதனைகளை நாங்கள் கொண்டாடுகிறோம்..✨🥳

ஒரு செய்தி ஊடக நிறுவனமாக, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும், அவர்களின் குரல்களை விரிவுபடுத்தும் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கதைகளைச் சொல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்..💪🚺

முன்னேற்றத்திற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம், தடைகளை சவால் செய்வோம், மேலும் ஒவ்வொரு பெண்ணும் செழிக்க வாய்ப்புள்ள ஒரு உலகத்தை உருவாக்குவோம்..🚺💕

ஒன்றாக, நாம் எழுவோம்..🙌🤝

Wishes From, 📰NEWS LINE📌Sri Lanka🇱🇰 Management

07/03/2025

தமிழ் மாணவர்களை பலவந்தமாக இறக்கும் நடத்துனர்_ ஹட்டன் டிபோ

தமிழ் மாணவர்களை பலவந்தமாக இறக்கும் நடத்துனர்
ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் அரச பேருந்து ஒன்றின் நடத்துனர் தமிழ் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக பேருந்தில் இருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் ஒன்று நேற்று (06) காலை இடம் பெற்றுள்ளது.

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட கினிகத்தனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களான இவர்களைப் பேருந்து நடத்துனர் பேருந்தில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு என்று இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச் சீட்டை, பேருந்து நடத்துனரிடம் காண்பித்த போதும், பருவச் சீட்டை வைத்திருக்கும் மாணவர்களைப் பேருந்திலிருந்து வெளியேறுமாறு நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாவலபிட்டியிலிருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரசப் பேருந்தில், அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

'இது அரசப் பேருந்து நடத்துனரின் சொந்த பேருந்து அல்ல. பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் செலுத்தி பருவச் சீட்டைப் பெற்றுள்ளோம். எங்களால் பேருந்தை விட்டு வெளியேற முடியாது' என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த பேருந்து நடத்துனர், 'ஆம், இது என்னுடைய பேருந்து; நீங்கள் அனைவரும் பேருந்தை விட்டு இறங்குங்கள்' எனக் கூறும் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, அந்தக் காணொளியை மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு இதுபோன்ற அநீதிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவது தொடர்பாக, ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் தொடர்புகொண்டு, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பழனி திகாம்பரம் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஹட்டன் ​டிப்போவின் முகாமையாளர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.

ரயில் நேர அட்டவணையில் மாற்றம்ரயில் நேர அட்டவணையில் மாற்றம்இரவு நேரங்களில் ஓடும் ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதைத் தடுப...
03/03/2025

ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

ரயில் நேர அட்டவணையில் மாற்றம்
இரவு நேரங்களில் ஓடும் ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதைத் தடுப்பதற்காக மேலதிக வேக வரம்புகளை அமுல்படுத்தவும், ரயில் சேவை நேர அட்டவணைகளை மாற்றியமைக்கவும் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காட்டு யானைகள் அதிகளவு நடமாடும் பகுதிகளில் இந்த வேக வரம்புகளை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மட்டக்களப்பு மார்க்கத்தில் பலுகஸ்வெவயிலிருந்து ஹிங்குராக்கொட வரையும், வெலிகந்தையிலிருந்து புனானை வரையும், திருகோணமலை மார்க்கத்தில் கல்லோயாவிலிருந்து கந்தளாய் பகுதியையும் உள்ளடக்கியவாறு இந்த ரயில் சேவை நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் இந்த நேர அட்டவணை அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

16 வயதுடைய சிறுமி மாயம்!16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாத்தளை, கந்தேநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய...
24/02/2025

16 வயதுடைய சிறுமி மாயம்!

16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாத்தளை, கந்தேநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி டிசம்பர் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை காணவில்லை என அவரது பாட்டி அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போன சிறுமி சுமார் 05 அடி உயரம் மற்றும் நீண்ட முடி மற்றும் மெல்லிய உடல் அமைப்பை கொண்டவர்.

காணாமல் போன சிறுமியின் பெயர் லமங்கெதர தருஷி சம்பிகா என்பதாகும்.

அவர் இலக்கம் 85, கந்தேநுவர, அல்வத்தை என்ற முகவரியில் வசிப்பவர்.

காணாமல் போன சிறுமி பற்றி மேலும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்கள் மூலமாக தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தேநுவர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி :- 071 – 8592943

கந்தேநுவர பொலிஸ் நிலையம் :- 066-3060954

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰கனேமுல்ல சஞ்சீவ கொலை : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்*கனேமுல்ல சஞ்சீவ கொலை : பொதுமக்களிடம் உதவ...
20/02/2025

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰

கனேமுல்ல சஞ்சீவ கொலை : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்*

கனேமுல்ல சஞ்சீவ கொலை : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல்கள் கீழே காட்டப்பட்டுள்ளன

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰கனேமுல்ல சஞ்சீவவைக் கொன்ற துப்பாக்கிதாரியின் படம் வௌியானதுகனேமுல்ல சஞ்சீவவைக் கொன்ற துப்பாக்கிதாரி...
19/02/2025

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰

கனேமுல்ல சஞ்சீவவைக் கொன்ற துப்பாக்கிதாரியின் படம் வௌியானது

கனேமுல்ல சஞ்சீவவைக் கொன்ற துப்பாக்கிதாரியின் படம் வௌியானது
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார்.

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது, 2023 ஆம் ஆண்டு ​​செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி கனேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, சந்தேக நபர் இன்று (19) காலை பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குவழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கனேமுல்ல சஞ்சீவ மீது 19 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் பாதாள உலகக்குழு உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவின் முக்கிய போட்டியாளராவார்.

கெஹல்பத்தர பத்மேவின் தந்தையைக் கொலை செய்ததாக கணேமுல்லா சஞ்சீவ மீது குற்றம் சாட்டப்பட்டது.


இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நீதிமன்றத்திற்குள் நுழைந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰மின் துண்டிப்பு நேர அட்டவணை வௌியீடுமின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலை முகாமை செய்வதற்கா...
10/02/2025

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰

மின் துண்டிப்பு நேர அட்டவணை வௌியீடு

மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலை முகாமை செய்வதற்காக, இன்று (10) மற்றும் நாளையும் (11) ஒன்றரை மணி நேரம் மின் விநியோக துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளது.

அதன்படி, மின் விநியோக துண்டிப்பு நேர அட்டவணையை அந்த சபை தற்போது அறிவித்துள்ளது

20/01/2025

https://chat.whatsapp.com/DuymUtHYRbpAzvGE0TQvgO

𝐖𝐞 𝐚𝐫𝐞 𝐬𝐡𝐢𝐩𝐩𝐢𝐧𝐠 𝐚𝐥𝐥 𝐨𝐯𝐞𝐫 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚 🇱🇰🚚

உங்கள் அன்பானவர்களுக்காக உங்களுக்குத் தேவையான விதத்தில், உங்கள் கையில் இருக்கும் தொகைக்கு 💸 GIFT MIND இடமிருந்து அழகான Gift ஒன்று வேண்டுமா ?
எங்களிடமிருந்து உங்களுக்கு 👇🏻

💸 𝐑𝐞𝐬𝐞𝐥𝐥𝐞𝐫𝐬 𝐦𝐨𝐬𝐭 𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 💸

🤝 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭 𝐃𝐞𝐚𝐥𝐞𝐫 🤝

🛒 *ᴍᴜɢ ᴘʀɪɴᴛɪɴɢ*
(ᴡʜɪᴛᴇ ᴍᴜɢ , ᴍᴀɢɪᴄ
ᴍᴜɢ , ʙʟᴀᴄᴋ ᴍᴜɢ)
🛒 *ᴘɪʟʟᴏᴡ ᴘʀɪɴᴛɪɴɢ*
(ᴡʜɪᴛᴇ ᴘɪʟʟᴏᴡ,
ᴍᴀɢɪᴄ ᴘɪʟʟᴏᴡ, ʙʟᴀᴄᴋ
ᴘɪʟʟᴏᴡ)
🛒 *ғʀᴀᴍᴇs*
(ʟɪɢʜᴛ ᴘʜᴏᴛᴏ, ɢʟᴀss,
ɴɪᴋᴋᴀʜ)
🛒 *ᴘʀɪɴᴛᴇᴅ &*
*ᴄᴜsᴛᴏᴍɪᴢᴇᴅ*
*ᴛ-sʜɪʀᴛs*
🛒 *ɢɪғᴛ ᴘᴀᴄᴋ & ᴄʜᴏᴄᴏ*
*ʙᴏx*
🛒 *ᴄᴏᴜᴘʟᴇ ɪᴛᴇᴍs*
(ʀɪɴɢ,ᴡᴀᴛᴄʜ,ᴅʀᴇss)

🛒🚚 நாடு முழுவதும் 6 நாட்களுக்குள் உங்கள் கையில் கிடைக்கும் வண்ணம் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் 🇱🇰🛒🚚

Paid Advirtisment ✔️

நீங்கள் Whatsapp, Facebook, Tiktok பாவிக்கும் நேரத்தை பணம் உழைப்பதற்கு💸பயன்படுத்த விரும்புபவரா?  வீட்டில் இருந்து கொண்டே...
19/01/2025

நீங்கள் Whatsapp, Facebook, Tiktok பாவிக்கும் நேரத்தை பணம் உழைப்பதற்கு💸பயன்படுத்த விரும்புபவரா?

வீட்டில் இருந்து கொண்டே🏘️ online platform ஐ பயன்படுத்தி பணம் சம்பதிக்க விரும்பும் நபரா?

தினமும் 3 முதல் 5 மணி நேரம் மட்டுமே...*🕓

*மாதம் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்* 💴💵

*- 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்

💥 *உங்கள் விவரங்களை அனுப்ப ஆர்வமாக உள்ளீர்களா..*
👇
🟢 *பெயர்* :
🟢 *தொலைபேசி எண்* :
🟢 *இடம்* :
🟢 *மொழி* :

Conduct this number WhatsApp only 0768826059

Paid Advirtisment ✔️

*CERTIFICATE COURSE IN ENGLISH LANGUAGE FOR BEGINNERS - CELB 01*--------------------------------------------------------...
18/01/2025

*CERTIFICATE COURSE IN ENGLISH LANGUAGE FOR BEGINNERS - CELB 01*
--------------------------------------------------------------
*_ 🆖️ _ _ _ _ ?* 🤔
🔠🔡ஆங்கில அறிவை ஆரம்பத்திலிருந்து மேம்படுத்த வேண்டுமென நினைக்கும் அனைவருக்குமான பாடநெறி😍

👨🏻‍🎓 *04மாதகால பாடநெறி* 🧑🏻‍🎓
🕗🎥திங்கள் - வெள்ளி வரை இரவு 08:00மணிக்கு வகுப்பு Zoom ஊடாக நடைபெறும்.

💶பதிவுக் கட்டணம்: ரூபா. 1000
💶மாதாந்த கட்டணம்: ரூபா. 2000

*CLOSING DATE:* 🔚 31.January.2025

ஆர்வமுள்ள மாணவர்கள் முழுப்பெயர், NIC இலக்கம், முகவரி மற்றும் *CELB - 01* என்பதை குறிப்பிட்டு WhatsApp மூலம் Message ஒன்றை அனுப்பவும்.

WhatsApp Number:
+94788099599

CELB-01 WhatsApp Group:
https://chat.whatsapp.com/JyadqMtyYZ4KlRP6aclwad

🤷🏻‍♂️வேறெங்குமில்லாத புதுமாதிரியான😎 அனுபவத்தைப் பெற்றிட இன்றே எமது 🏛️கல்லூரியுடன் இணைந்து கொள்ளுங்கள்.✌🏻🤗

Paid Advirtisment ✔️

14/01/2025

🚨🚨Breaking News 🚨🚨

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰

*Kalmunai இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பஸ் RS Express மட்டக்களப்பு வந்தாரமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் சற்று முன் விபத்து.*

*CCTV 👇*

*📰 NEWS LINE 📌 Sri Lanka 🇱🇰 welcomes you with open arms!*

🌟 *Why Choose Us?*
✔️ *21,000+ members* in WhatsApp groups.
✔️ *6.1k+ Facebook followers*.
✔️ *800+ Instagram followers*.
✔️ *5 years of advertising experience*.
✔️ Affordable prices with wide reach and effective promotion.
✔️ Government Approved.

We offer custom ad designs too! 🎨
📋 For your security, we request your identity number and name for verification.

📞 Contact us now to book your slot and grow your business today! 🚀
https://wa.me/94753144838

14/01/2025

💯WHITENING💯
🟣WHITE PINKISH TABLET AVAILABLE
🇲🇾🇱🇰மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
✅30 நாட்களுக்குள் உங்கள் சருமத்தை வெண்மையாக்க...
*🌹இந்த தயாரிப்பின் சிறப்பு என்னவென்றால்,*
👉நிரந்தர வெண்மையாக்கும் சூத்திரம்.
👉200% கர்ப்பம் பாதுகாப்பானது.
👉200% உத்தரவாதம்.
👉தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லை. ❌
👉எந்த பக்க விளைவுகளும் இல்லை .
✅MESTI சான்றளிப்பு .
Join our Group 👇🏻👇🏻👇🏻
https://chat.whatsapp.com/ENaA2bqWHoi28GNK21T8V1

Paid Advirtisment ✅

Happy Pongal ❤️🎊
14/01/2025

Happy Pongal ❤️🎊

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰மலையக பகுதிகளில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!*தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள...
14/01/2025

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰
மலையக பகுதிகளில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!*

தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.

அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை வெகுவிமர்சியாக கொண்டாடிவருகின்றனர்

ஹட்டன் பகுதியில் அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ சந்திரானந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்துடன் மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Invite

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰*ஹபுகஸ்தலாவை அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி - முதலாம், மூன்றாம் இடங்...
10/01/2025

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰

*ஹபுகஸ்தலாவை அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி - முதலாம், மூன்றாம் இடங்களை பெற்ற இரட்டையர்கள்*

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் தலை சிறந்து விளங்கும் ஹபுகஸ்தலாவை அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்றைய தினம் மரதன் ஓட்ட போட்டி (Road Race ) நிகழ்ச்சியுடன் இனிதே ஆரம்பமானது.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டிற்கு பின்னர் குறித்த பாடசாலையில் நடைபெறும் இல்ல விளையாட்டு போட்டி என்பதால் இவ்வில்ல விளையாட்டு போட்டி பெரிதும் பேசு பொருளாக மாறி உள்ளமை குறிப்பிடத் தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலைக்கு புதிய அதிபராக பதவியேற்ற திரு ஹசனுள் பசரி (Bsc,PGDE,PGDEM, SLPS) அவர்களின் தலைமையில் பாடசாலையில் மைதானம் சீரமைக்கப்பட்டு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

அதனடிப்படையில் இன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பமான மரதன் ஓட்ட போட்டி நிகழ்ச்சியில் சுமார் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர்.அதில் முதலாம் இடத்தை Amhar (Munawwara இல்லம்) உம் இரண்டாம் இடத்தினை
Zahran (Makkah இல்லம் )உம் மூன்றாம் இடத்தினை Azhar (Makkah இல்லம் ) உம் பெற்றுக்கொண்டனர். அதில் Amhar மற்றும் Azhar என்ற மாணவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்பதே சிறப்பம்சமாகும்.

மரதன் ஓட்ட போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் 📰NEWS LINE📌Sri Lanka🇱🇰 நிருவாகம் சார்பாக வாழ்த்துக்களையும், ஒழுங்குகளை செய்த பாடசாலை நிருவாகத்துக்கு நன்றிகளையும் எதிர்வரும் போட்டி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களையும் 📰NEWS LINE📌Sri Lanka🇱🇰 நிருவாகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

08/01/2025

*WELCOME TO LUCKY BE A LADY ONLINE FITNESS CENTER (PVT) LTD💪🏋️‍♀️*

*”புதிய மாற்றத்திற்கான ஆரம்பம்!!”*

*📍. 2025 ஆம் ஆண்டின் முதல் வகுப்பு எதிர்வரும் ஜனவரி 15ம் திகதி ஆரம்பமாகிறது. 🗓️*

*❗️❗️இன்னும் 07 நாட்கள் மட்டுமே❗️❗️*

*💥இலங்கையில் முதல் முதலாக பெண்களுக்காக வீட்டில் இருந்தவாறே வெறுமனே 2500/= செலுத்தி சரியான வழிகாட்டலுடன் ஆரோக்கியமாக உடல் இடையை மிக இலகுவாக 21 நாட்களில் குறைக்க ONLINE FITNESS CENTER .💥😱*

*💥L B L Fitness Center (PVT) Ltd இனால் நடாத்தப்படும் 21 நாள் Weight Lost Challenge💪💥.*

_📌. நீங்கள் உங்களது உடல் பருமனை எண்ணி வருந்தும் நபரா….?😖_

_📌. உங்களின் அன்றாட வேலைகளில் ஈடுபடும் போது உங்கள் உடற் பருமன் குறித்து கவனமெடுக்க முடியாமல் உள்ளதா….?⏰⏳_

_📌. உங்களது உடற் பருமனை வைத்துக் கொண்டு நீங்கள் விரும்பிய உடைகளை அணிய முடியவில்லையா….?👗_

_📌. உடல் பருமனை குறைக்க ஆர்வம் இருந்தும் முறையான வழிகாட்டல் கிடைக்கவில்லையா….?🦯_

*💥இது உங்களுக்கான சிறந்த வாய்ப்பு💥*

*⚡️. உடல் பருமன் என்பது பெண்களின் அன்றாட வாழ்கையில் பாரியதொரு தாக்கத்தை செலுத்திவருகிறது. எனவே இது குறித்த ஒவ்வொரு பெண்களும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்…💬🧐*

*💥எம்மோடு நீங்கள் இணைந்து கொள்வதன் மூலம்💥*👇

*1.மிகவும் குறைந்த கட்டணத்தின் கீழ் இணைய முடியும்.💲📉*

*2.எவ்வித சாதனங்களும் இன்றி பயிற்சியில் கலந்து கொள்ள முடியும்.⚙️🎰*

*3.வீட்டில் இருந்த வாறே ஆன்லைன் மூலம் இணைந்து கொள்ள முடியும்.💻📲*

*4.உங்கள் சந்தேகங்களுக்கான விளக்கங்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள நேரடியாக (Direct Message or Call) மூலம் எம்மை தொடர்பு கொள்ள முடியும்.🗣📱*

*5.மிக இலகுவான முறையில் தொடரக்கூடிய DIET CHART .💹📊*

*6.ஒவ்வொரு பயிலுனர்க்கும் தனித் தனி வழிகாட்டுனர் (Trainer) ஊடாக கண்காணிக்கப்பட்டு பயிலுனர் இடர்பாடுகள் தீர்க்கப்படும்.🤩🫱🏻‍🫲🏼*

*7.உங்களது நேர வசதிகளை கருத்தில் கொண்டு வகுப்புக்கள் ஒழுங்கு செய்து தரப்படும். ⌚️⏱*

*👆எங்களது வழிகாட்டல்களை சரியாக பின்பற்றி எந்த வித மாற்றங்களும் கிடைக்காதவிடத்து உங்களது கட்டணம் மீளத்தரப்படும்.💯*

*💥இன்றே எம்மோடு இணைந்து புதிய மாற்றத்திற்கு தயாராகுங்கள்🫱🏻‍🫲🏼.*

*மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள வாட்சப் குழுமத்தில் இணையுங்கள்👇🏻*
https://chat.whatsapp.com/IyU5KYNKNSAIpbr3BsKShJ

ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் பாடசாலை மாணவன் அப்துல் மலிக்கினால்  உருவாக்கப்பட்ட அதிவலுசக்தி மிக்க ஒலிபிரப்பாக்கி தேசிய மட்டத...
13/12/2024

ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் பாடசாலை மாணவன் அப்துல் மலிக்கினால் உருவாக்கப்பட்ட அதிவலுசக்தி மிக்க ஒலிபிரப்பாக்கி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தது

இலங்கை விஞ்ஞான முன்னேற்ற கழகம்/சங்கம் மற்றும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு இணைந்து நடாத்திய அகில இலங்கை பாடசாலை புத்தாக்குனர் போட்டி மற்றும் கண்காட்சி நேற்றும் இன்றும் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் இடம்பெற்றது

இதில் ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலையின் Al Minhaj National School மாணவர்களான அப்துல் மலிக் மற்றும் சியாஸ் தம் கண்டுபிடிப்புகளை முன்வைத்து இருந்தனர்.

இதில் தரம் 10ல் கற்கும் அப்துல் மலிக்கினால் காண்பிக்கப்பட்ட அதிவலுசக்தி மிக்க ஒலிபிரப்பாக்கி (High power speaker Amp) தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

அவருக்கு எமது 📰NEWS LINE📌Sri Lanka🇱🇰 அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when News line Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share