SL Latest News

SL Latest News 💯நம்பகமான செய்திகளின் அடையாளம்🔥 News

✅Full Details👇🏻அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றி!2024 T20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகள...
12/06/2024

✅Full Details👇🏻

அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றி!

2024 T20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டில் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட நமீபியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் ஹெகார்ட் எராஸ்மஸ் அதிகபட்சமாக 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் எடம் சம்பா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், 73 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 5.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில், ட்ரவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

போட்டியின் ஆட்டநாயகனாக எடம் சம்பா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலியா அணி பீ குழுவில் 6 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

12/06/2024

🔅நாளும் ஒரு சிந்தனை🪶"முயற்சியின் பாதைகள் கடினமானவை ஆனால் முடிவுகள் இனிமையானவை, தொடர்ந்து முயலுங்கள் கனவுகள் நனவாகும் வரை...
12/06/2024

🔅நாளும் ஒரு சிந்தனை

🪶"முயற்சியின் பாதைகள் கடினமானவை ஆனால் முடிவுகள் இனிமையானவை, தொடர்ந்து முயலுங்கள் கனவுகள் நனவாகும் வரை..!"

✅Full Details👇🏻டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் டெங்கு அபாய வலயங்களின் எண்...
11/06/2024

✅Full Details👇🏻

டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் கடந்த 11 நாட்களில் மாத்திரம் 971 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, இதுவரை நாடளாவிய ரீதியில் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 9 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் 14 ஆக அதிகரித்துள்ளது.

அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், 5,624 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர், அதிக டெங்கு நோயாளர்கள் யாழ்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், 3,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 2,487 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,986 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,441 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,372 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்புக.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்...
11/06/2024

✅Full Details👇🏻

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை செப்டெம்பர் மாதம் நடத்த முடியும்.

பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்க பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து, பல்கலைக்கழக நுழைவை விரைவுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻நாட்டின் கணினி அறிவாற்றல் அதிகரிப்பு!இந்த நாட்டில் கணினி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொக...
11/06/2024

✅Full Details👇🏻

நாட்டின் கணினி அறிவாற்றல் அதிகரிப்பு!

இந்த நாட்டில் கணினி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு கணினி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 05 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட ஐந்தில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐந்தில் மூன்று பேருக்கு டிஜிட்டல் கல்வியறிவு உள்ள நிலையில், அது 63.5 சதவீதமாகும் என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 20.2 வீதமான குடும்பங்கள் டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினிகளைப் பயன்படுத்துகின்ற நிலையில், நகர்ப்புற மக்களின் கணினி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டளவில், கணினி கல்வியறிவு 4.7 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், நகர்ப்புறங்களில் அதிகபட்ச கணினி கல்வியறிவு 52.9 சதவிகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் அதிக கணினி அறிவைப் பெற்றுள்ள அதேவேளை கிழக்கு மாகாணம் மிகக் குறைந்த கணினி அறிவைக் கொண்டுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுர பாடசாலைகளுக்கு விடுமுறை!பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்...
11/06/2024

✅Full Details👇🏻

பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுர பாடசாலைகளுக்கு விடுமுறை!

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி அனுராதபுரம் உயர்தரப் பாடசாலை, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர உயர் பாடசாலை,
நிவட்டகச்சேதிய தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய உயர் பாடசாலை, தேவனம்பியதிஸ்ஸ புர உயர் பாடசாலை,
மகாபோதி உயர் பாடசாலை, மிஹிந்தலை உயர் பாடசாலை, மிஹிந்தலை கம்மலக்குளம கல்லூரி மற்றும் தந்திரிமலை ஆகிய கல்லூரிகள் மூடப்படவுள்ளன.

விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அந்த பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அநுராதபுரம் தேசிய பொசன் விழா குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன ஆகியோர் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பாடசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவுள்ளோர் கவனத்திற்குகடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடைய...
11/06/2024

✅Full Details👇🏻

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவுள்ளோர் கவனத்திற்கு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டையை கொண்டு வருமாறு குடிவரவுத் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

பழைய தேசிய அடையாள அட்டைகளை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் தமது பணிகளை மேற்கொள்ள வரும் போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

“தற்போதுள்ள அடையாள அட்டை பத்து வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தால் அப்போதைய புகைப்படத்திற்கும் இப்போதைய புகைப்படத்திற்கும் மாற்றங்கள் நிறையவே உண்டு. அதில் பல சிக்கல்கள் உள்ளன. அதனால்தான் நாம் கோருகிறோம். கடவுச்சீட்டினை பெறவுள்ள நபர் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள தேசிய அடையாள அட்டையினை பாவிக்கிறோம். 2025ம் ஆண்டுக்கு பின்னர் கைவிரல் ரேகைகள் தான் முதலிடம் பெரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்..”

டெய்லி சிலோன் உடனான கலந்துரையாடலில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் கூறுகையில், அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் கடவுச்சீட்டை வழங்குவதே தமது திணைக்களத்தின் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்திருந்தார்.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻பதவி விலகினார் பெல்ஜியம் பிரதமர்!பெல்ஜியம் நாட்டின் பிரதமராக இருந்த அலெக்சாண்டர் டி குரூ தனது பதவியை இராஜ...
10/06/2024

✅Full Details👇🏻

பதவி விலகினார் பெல்ஜியம் பிரதமர்!

பெல்ஜியம் நாட்டின் பிரதமராக இருந்த அலெக்சாண்டர் டி குரூ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் நான் முக்கிய தலைவராக இருந்தேன் இது நான் எதிர்பாராத முடிவு எனவே இதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என பெல்ஜியம் நாட்டின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻நாளை முதல் சகல ரயில் சேவைகளும் வழமைக்குரயில் சாரதிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்ற...
10/06/2024

✅Full Details👇🏻

நாளை முதல் சகல ரயில் சேவைகளும் வழமைக்கு

ரயில் சாரதிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை(11) காலை முதல் சகல ரயில் சேவைகளும் வழமை போல் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻இலங்கையில் அதிகரித்துள்ள முட்டை உற்பத்தி!இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி ஐந்து முதல் ஆறு இலட்சம் வரை அ...
10/06/2024

✅Full Details👇🏻

இலங்கையில் அதிகரித்துள்ள முட்டை உற்பத்தி!

இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி ஐந்து முதல் ஆறு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்எம்பிஆர் அழககோன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நாட்டின் மாதாந்த முட்டை நுகர்வு சுமார் ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது சந்தையில் பல விலைகளில் முட்டை விற்பனைக்கு வருவதால் மக்கள் எளிதில் வாங்கிச் செல்கின்றனர் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻தரமற்ற சவர்க்காரத்தினை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு சிக்கல்கள்!தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் சிச...
10/06/2024

✅Full Details👇🏻

தரமற்ற சவர்க்காரத்தினை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு சிக்கல்கள்!

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் இன்று குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அதன் பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார்.

“இந்நாட்களில் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகள் நிலவுவதாக எமக்கு அறியக்கூடியதாக உள்ளது.

இதை ஆராய்ந்தபோது ஒரு விஷயம் புரிந்தது, தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக, தாய்மார்கள் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தினை பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய விடயம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழுடன் கூடிய குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதேயாகும்.

குழந்தையின் தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்த இடம் எனவே இன்றல்ல பல வருடங்களில் இதன் பலன் தெரியும் எனவே, குறிப்பாக பொருளாதார சூழ்நிலையில், இதில் கவனமாக இருங்கள்”.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻தொடரும் ரயில் பணிப்புறக்கணிப்பு – 20 அலுவலக ரயில்கள் இரத்து!ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள...
10/06/2024

✅Full Details👇🏻

தொடரும் ரயில் பணிப்புறக்கணிப்பு – 20 அலுவலக ரயில்கள் இரத்து!

ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று(10) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளின் அடிப்படையில் கடந்த 06ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த தொழில் நடவடிக்கையை தொடங்கினர்.

ஐந்து ரயில் நிலையங்களில் இரண்டு ரயில் நிலையங்களின் சாரதிகள் மாத்திரம் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இன்ஜின் ரயில்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 05 தொழிற்சங்கங்களுக்கு இன்று தமது பிரச்சினைகளை முன்வைக்க கலந்துரையாடல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சில் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இது வரையில் அவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெறும் என தமக்கு தெரியாது என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவிக்கிறார்.

புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தவிடம் வினவியபோது, ​​இது தொடர்பான கலந்துரையாடல் தொடர்பில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று காலை 47 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று காலை 20 அலுவலக ரயில்கள் இயங்காது என லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிரதான பாதையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு 11 புகையிரதங்களும், சிலாபம் மற்றும் வடக்கு பாதையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு தலா 04 புகையிரதங்களும்,கரையோர பாதையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு 18 புகையிரதங்களும், களனிவெளியில் இருந்து கொழும்பு நோக்கி 03 புகையிரதங்களும் இயங்கு என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து கரையோர பாதையில் 07 சேவை புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும் எனவும் நீண்ட தூர சேவை புகையிரதங்கள் வழமை போன்று இயங்கும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

🔅நாளும் ஒரு சிந்தனை🪶"வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதே, பின் வாங்காமல் செல்கிறாய் என்பதை நினைத்து சந்தோஷப்படு..!"
10/06/2024

🔅நாளும் ஒரு சிந்தனை

🪶"வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதே, பின் வாங்காமல் செல்கிறாய் என்பதை நினைத்து சந்தோஷப்படு..!"

✅Full Details👇🏻பொசன் தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்திற்கு விசேட பஸ் சேவை!மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை பு...
09/06/2024

✅Full Details👇🏻

பொசன் தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்திற்கு விசேட பஸ் சேவை!

மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை புதுப்பிக்கப்படுவதால் பொசன் காலத்தில் அதிக பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித அல்விஸ் தெரிவித்தார்.

இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை, அநுராதபுரம் ஆகிய நகரங்களுக்கு வரும் மக்களின் வசதிக்காக உரிய பஸ் சேவை அமுல்படுத்தப்படுவதாக தலைவர் தெரிவித்தார்.

வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட பஸ்கள் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து விசேட பஸ் சேவையும் உள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

சாதாரண போக்குவரத்து சேவைக்கு மேலதிகமாக இந்த பஸ்கள் பயன்படுத்தப்படும் எனவும், தேவைக்கு ஏற்ப அதிக பஸ்களை பயன்படுத்துமாறு டிப்போ முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻வெள்ளம் காரணமாக முட்டை உற்பத்திக்கு பாதிப்பு!நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் சில பண்ணைகளில் ஏற்பட்ட வெ...
09/06/2024

✅Full Details👇🏻

வெள்ளம் காரணமாக முட்டை உற்பத்திக்கு பாதிப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் சில பண்ணைகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் சில விலங்குகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் மேலும் பல பண்ணைகளை மூட வேண்டியுள்ளது என்று முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்எம்பிஆர் அழககோன் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை அவிசாவளை மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக முட்டை உற்பத்தியில் தற்காலிகவீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻இலங்கை ECOSOCக்கு தெரிவானதுஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு (ECOSOC) இலங்கை தெரிவு செய்யப்...
09/06/2024

✅Full Details👇🏻

இலங்கை ECOSOCக்கு தெரிவானது

ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு (ECOSOC) இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மூன்று வருட பதவிக் காலம் கிடைக்கும்.

இலங்கை பெற்ற இந்த வாக்குகள் பிராந்தியத்தில் நாடொன்று பெற்ற இரண்டாவது அதிகபடியான வாக்குகளாகும்.

இலங்கை இதற்கு முன்னர் 1985 - 1989 மற்றும் 2006-2008 வரை ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻கீழ் கடுகன்னாவ வீதி மீண்டும் திறப்பு!கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ வீதி போக்குவரத்துக்க...
09/06/2024

✅Full Details👇🏻

கீழ் கடுகன்னாவ வீதி மீண்டும் திறப்பு!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்று(08) இரவு 7.30 மணி முதல் இன்று(09) அதிகாலை 01.00 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது.

மழையுடனான வானிலையுடன் கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் வீதியின் இருபுறங்களிலும் உள்ள ஆபத்தான கற்கள் மற்றும் மரங்கள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம்!இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி ர...
09/06/2024

✅Full Details👇🏻

ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி இந்தியா நோக்கி பயணித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அடுத்தே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லி நோக்கி பயணித்துள்ளார்.

இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வின் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

🔅நாளும் ஒரு சிந்தனை🪶"வாழ்க்கை உன்னை பின்னோக்கி இழுக்கும் போது மனம் தளராதே, பின்னோக்கி அம்பு தான் வேகத்துடன் முன்னோக்கிப்...
09/06/2024

🔅நாளும் ஒரு சிந்தனை

🪶"வாழ்க்கை உன்னை பின்னோக்கி இழுக்கும் போது மனம் தளராதே, பின்னோக்கி அம்பு தான் வேகத்துடன் முன்னோக்கிப் பாய்கிறது..!"

✅Full Details👇🏻நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக...
08/06/2024

✅Full Details👇🏻

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!

மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமே இவ்வாறு நிரம்பியுள்ளது.

இன்றைய(08) நிலவரப்படி, காசல்ரி நீர்த்தேக்கத்தின் (Castlery Reservoir) நீர்மட்டம் வான்வெளி மட்டத்திலிருந்து 12 அடிக்கு உயர்ந்துள்ளது.

இதேவேளை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் (Maussakalle Reservoir) நீர்மட்டம் 11 அடிக்கும் மேல் நிரம்பியுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பதன் மூலம் 5 நீர்மின் உற்பத்தி நிலையங்களில் அதிகபட்ச கொள்ளளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி விமலசுரேந்திர, லக்சபான, நியூ லக்சபான, கனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்களில் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என நீர்மின் நிலைய பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் குறித்து மத்திய வங்கி முக்கிய அறிக்கைவெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் அதிகரித்து...
08/06/2024

✅Full Details👇🏻

வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் குறித்து மத்திய வங்கி முக்கிய அறிக்கை

வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த மாதம், வெளிநாட்டுப் பணம் 544 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் கடைசி மாதம் வரை திரட்டப்பட்ட மதிப்பு 2,624 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

2023 ஜனவரி மற்றும் மே மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 11.8 வீதம் அதிகரித்துள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பால் 10 ரயில் சேவைகள் இரத்து!பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் ஆரம...
08/06/2024

✅Full Details👇🏻

ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பால் 10 ரயில் சேவைகள் இரத்து!

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இதன் காரணமாக இன்று காலை 10 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் என்.ஜே. இடிபோலேஜ் குறிப்பிட்டுள்ளார்.

பதவி உயர்வு வழங்கப்படாமை, ஆட்சேர்ப்பில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...
08/06/2024

✅Full Details👇🏻

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻BREAKING NEWS🔥🔥நாளை மூடப்படும் வீதி - சாரதிகளுக்கான அறிவுறுத்தல்!கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கட...
07/06/2024

✅Full Details👇🏻

BREAKING NEWS🔥🔥

நாளை மூடப்படும் வீதி - சாரதிகளுக்கான அறிவுறுத்தல்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நாளை(08) தற்காலிகமாக மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையான காலப்பகுதியில் அவ்வப்போது மூடப்படும் எனவும் கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீதியில் உள்ள ஆபத்தான பாறை கற்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காகவே இவ்வாறு வீதி மூடப்படுவதாகும் தெரிவித்துள்ளார்.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻கிராம அதிகாரிகள் சங்க தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்!தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற...
07/06/2024

✅Full Details👇🏻

கிராம அதிகாரிகள் சங்க தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்!

தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை கிராம அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் வேலை நிறுத்தம் இன்று 36ஆவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻வெள்ளத்தால் இறந்தவர்களுக்கு இரண்டரை இலட்சம் இழப்பீடு!சீரற்ற காலநிலை காரணமாக விபத்தில் உயிரிழந்த ஒருவருக்க...
07/06/2024

✅Full Details👇🏻

வெள்ளத்தால் இறந்தவர்களுக்கு இரண்டரை இலட்சம் இழப்பீடு!

சீரற்ற காலநிலை காரணமாக விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடாக வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கல்வி மற்றும் மக்கள் விழிப்புணர்வு பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

மேலும், வீடுகளை சுத்தம் செய்வதற்கு பத்தாயிரம் ரூபா முன்பணமும் வழங்கப்படும் என பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் மதிப்பீட்டு அறிக்கைகளின் பிரகாரம் வீடு சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வீட்டின் அளவு மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெறுவதற்கு எடுக்கும் நேரத்தைப் பொறுத்து, வீடு சேதத்திற்கான இழப்பீடு வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவும், வெள்ளத்தில் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவும் வழங்கப்படும் என கொடிப்பிலி தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்ட போதிலும் வெள்ளத்தில் குளித்தமையினால் பல உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும், அபாயகரமான பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேறாததன் பிரச்சினை இன்னும் இருப்பதாகவும் பிரதீப் கொடிப்பிப்பிலி மேலும் குறிப்பிட்டார்.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

✅Full Details👇🏻புகையிரத பணிப்புறக்கணிப்பினால் பல ரயில்கள் இரத்து!பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இன்ஜின் சாரதிகள் நேற்று...
07/06/2024

✅Full Details👇🏻

புகையிரத பணிப்புறக்கணிப்பினால் பல ரயில்கள் இரத்து!

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இன்ஜின் சாரதிகள் நேற்று(06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த தொழில் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்து புகையிரத நிலையங்களில் இரண்டின் சாரதிகள் மாத்திரமே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் காரணமாக லோகோமோட்டிவ் ரயில் இயங்காது எனவும் லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்தார்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக காலை வேளையில் இயங்கும் அலுவலக புகையிரதங்கள் அதிகம் பாதிக்கப்படாது எனினும் இன்று பிற்பகல் இயங்கும் அனைத்து புகையிரதங்களும் இரத்து செய்யப்படலாம் என எஸ்.ஆர்.சி.எம் சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 84 ரயில் சாரதிகளின் பதவி உயர்வு பிரச்சினையின் அடிப்படையில் அந்த சாரதிகளே இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தொழில்சார் நடவடிக்கையானது லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் நிர்வாகக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, சங்கத்தின் செயலாளரின் முடிவின்படி வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது என்று சங்கத்தின் தலைவர் சந்தன லால் மேலும் தெரிவித்தார்.

🟨Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/Db8ftlVuDYp0YfVu95dYbx

Address

Kandy
20000

Telephone

+94769955020

Website

Alerts

Be the first to know and let us send you an email when SL Latest News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SL Latest News:

Videos

Share