Digital Press - Sri Lanka

Digital Press - Sri Lanka 24/7 - Stay Connect!
(2)

   இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இன்று முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக என அமைச...
12/02/2024



இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இன்று முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

   ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான தடை அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என உறுதியாக நம்புவதாக விளையாட்டுதுறை அமைச்சர் ஹரின் ...
28/01/2024



ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான தடை அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என உறுதியாக நம்புவதாக விளையாட்டுதுறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

BREAKINGகட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உ...
24/01/2024

BREAKING
கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.அதன்படி, சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள...
23/01/2024

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் அடுத்த மாதம் 15 திகதி வரை ஒன்லைன் ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளபடும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, சகல பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறைமையிலும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Application - www.doenets.lk or www.onlineexams.gov.lk

   சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் 16 ஆயிரத்து 146 பேருக்கு ஜனவரி மாதம் முதல் 2000 ரூபா கொடுப்பனவை மாவட்ட செயலாளர்கள் ஊ...
23/01/2024



சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் 16 ஆயிரத்து 146 பேருக்கு ஜனவரி மாதம் முதல் 2000 ரூபா கொடுப்பனவை மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரிவெனாக்களில் உள்ள மதகுருமார்கள் மற்றும் சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என பதில் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

   யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்...
22/01/2024



யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் கடந்த 9 ஆம் திகதி அழைக்கப்பட்டது.

அதன்போது, இந்த வழக்கு தொடர்பான சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனையடுத்து, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்றைய தினத்தில் எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் குழு உத்தரவிட்டது.

2015 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில், தமக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள விதம் சட்டத்துக்கு முரணானது என குறித்த பிரதிவாதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, குற்றச்சாட்டில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

   முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் நேற்று...
21/01/2024



முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று மாலை வீட்டில் இருந்த ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஊஞ்சல் கயிறு கழுத்தைச் சுற்றி இறுக்கியுள்ளது.

அதனையடுத்து, சிறுவனை மீட்டு, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும், ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

       இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.தலைவர்ப் பத...
21/01/2024



இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

தலைவர்ப் பதவிக்கு போட்டியிடும் 3 வேட்பாளர்களும் தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்புக்கத் தயாராக இருக்காததால், புதிய தலைவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தமிழரசுக் கட்சி அண்மையில் தீர்மானித்தது.

அதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் 72 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர்ப் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழு மற்றும் மத்திய செயற்குழு என்பன இன்று திருகோணமலையில் கூடவுள்ளது.

அதன்படி, பொதுக்குழுவில் இருந்து 325 பேரும், மத்திய செயற்குழுவில் இருந்து 50 பேரும் இணைந்து இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று தென்ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது.இதில் பங்கேற்...
19/01/2024



19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று தென்ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 'A' பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும் 'B' பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும், 'C' பிரிவில் அவுஸ்திரேலியா, இலங்கை, சிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய அணிகளும் 'D' பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்பதுடன், லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும்.

அதையடுத்து சூப்பர் 6 சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தலா ஒரு முறை மோதும் என்பதுடன், இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், முதல் நாளான இன்று இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதற்கமைய, தென்னாப்பிரிக்காவின் புளோம்பாண்டீனில் ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில், அயர்லாந்து மற்றும் அமெரிக்கா அணிகளும், போட்செப்ஸ்ட்ரூமில் ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளும் மோதவுள்ளன.

இவ்விரு போட்டிகளும், இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் முன்னர், இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஐ.சி.சி. இடைக்கால தடை விதித்தது.

ஆதைத் தொடர்ந்து இந்தப் போட்டித் தொடர் தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

   பெப்ரவரி முதலாம் திகதி முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க சுகாதாரத் தொழிற்சங்கங்கள் தீர்மா...
19/01/2024



பெப்ரவரி முதலாம் திகதி முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க சுகாதாரத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

   அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.உலளாவிய கூட்டு செழுமைக்கான ஒத்துழைப்ப...
19/01/2024



அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.

உலளாவிய கூட்டு செழுமைக்கான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல் என்ற தலைப்பில் இந்த மாநாடு இன்றும், நாளையும் உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறவுள்ளது.

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு, பு77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் (லுழறநசi ஆரளநஎநni) அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்ற உள்ளார்.

அத்துடன், ஆபிரிக்க வலயத்தில் காணப்படும் உலக தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

அணிசேரா நாடுகளின் அமைப்பில் 120 நாடுகள் அங்கம் வகிப்பதோடு, பெண்டூன்க் கொள்கையை மையப்படுத்தி அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன் இவை செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவை...
18/01/2024



தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமை போன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

   அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி ந...
18/01/2024



அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயர்தர விவசாய விஞ்ஞானப் பாடப் பரீட்சையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நடத்தத் திட்டப்பட்டுள்ளது.

இதனால், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாக இருந்த, 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 3 ஆம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே, 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 3 ஆம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவு செய்து, 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

     2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர விவசாய விஞ்ஞானப் பாட  பரீட்சையின் 2 ஆம் பகுதி இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதலாம் ப...
17/01/2024



2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சையின் 2 ஆம் பகுதி இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதலாம் பகுதியும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற, உயர்தர விவசாய விஞ்ஞானப் பாடத்தின் 2 ஆம் பகுதியை பரீட்சைகள் திணைக்களம் இரத்து செய்வதாக கடந்த 12 ஆம் திகதி அறிவித்திருந்தது.

குறித்த வினாத்தாளின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

அதற்கமைய, விவசாய விஞ்ஞான பாடத்திற்கான 2 ஆம் பகுதி வினாத்தாளை இரத்து செய்து, மீண்டும் அப்பரீட்சைக்கான 2
ஆம் பகுதியை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்தது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும், அலுவலக உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில், உயர்தர விவசாய விஞ்ஞானப் பாடத்தின் முதலாம் வினாத்தாளில் இருந்தும் பல கேள்விகள் கசிந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, குறித்த பரீட்சையின் இரு பகுதி வினாத்தாள்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டு புதிய பரீட்சை திகதியும், நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்தர விவசாய விஞ்ஞானப் பாடத்திற்கான 2 ஆம் பகுதி எதிர்வரும் பெப்வரி மாதம் முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரையும், முதலாம் பகுதி அன்றைய தினம் பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரையும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தப் பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள், அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

     பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வைத்தியர்களுக...
16/01/2024



பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்கத் தீர்மானித்துள்ள 35 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியே இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், மருந்தாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், மருந்துக் கலவையாளர்கள் மற்றும் பூச்சியியல் அதிகாரிகள் உள்ளிட்ட 72 சுகாதார சங்கங்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிப்பபுறக்கணிப்புப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதனால், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகளை வழங்குவதைத் தவிர ஏனைய சேவைகள் இன்று தடைப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை காலை 7 மணி முதல் 24 மணித்தியாலப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுடவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

   தைத்திருநாளை முன்னிட்டு பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இன்று மூடுவதற்கு மத...
15/01/2024



தைத்திருநாளை முன்னிட்டு பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இன்று மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இருப்பினும், பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை, ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் மதுபானசாலைகள் மூடப்படாது என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

     உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாட வினாத்தாளை சமூக வலைதளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைத...
15/01/2024



உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாட வினாத்தாளை சமூக வலைதளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றின் உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

15/01/2024

   பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன்,...
12/01/2024



பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பாடசாலைகளில் காலைக் கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிவலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையக் கூடும் என வளிமண்டலவியல்...
12/01/2024



கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிவலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

   2024 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இல...
11/01/2024



2024 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு ரோயல் கல்லூரியின் சினெத் ஜெயவர்தன இந்த இளையோர் அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.

     வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வைத்தியசாலை ...
11/01/2024



வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட நிலை சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று காலை 6 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டடம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், இலங்கை கண் வைத்திய நிபுணர்கள் சங்கம், அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம், அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட 10 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று காலை 8 மணி முதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக...
11/01/2024



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராயச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அம்பாறை - இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கீழே உள்ள கல் ஓயா தாழ்நிலத்தை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொல்வத்தை, பஹலந்த, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இவ்விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் புகையிரத பாதையில் மண் மேடு சரிந்து வீழ்ந்தால், மலையக மலையக மார்க்கத்திலான புகையிரத சேவை நேற்று மலை தடைப்பட்டு இருந்தது.

இருப்பினும், தியத்தலாவ இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் புகையிரத ஊழியர்கள் இணைந்து மேற்கொண்ட சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில் குறித்த புகையிரதப் பாதையில் புகையிரதப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேநேரம், நேற்று மட்டக்களப்பு புகையிரத நிலையம் வெள்ளத்தில் மூழ்கியதால், புகையிரத சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக மட்டக்களப்புக்கான இரவு தபால் புகையிரத சேவை இரத்துச் செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

    மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி உயிர் துறந்தவர்களை நினைவு கூறும், மலையக தியாகிகள் தினம் இன்று கொட்டகலை ...
10/01/2024



மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி உயிர் துறந்தவர்களை நினைவு கூறும், மலையக தியாகிகள் தினம் இன்று கொட்டகலை கொமர்சல் லேக்கில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

எமது உரிமைக்காக இன்னுயிரை தியாகம் செய்த மலையக தியாகிகளை நினைவுகூறுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

   பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.வைத்தியர்களுக்கான DAT கொடுப்பனவை 35,000...
10/01/2024



பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

வைத்தியர்களுக்கான DAT கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரசாயன ஆய்வாளர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க வல்லுநர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நேற்று அரச வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்து இருந்தனர்.

இதனால் நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

இந்நிலையில், இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவாக இன்று காலை 8 மணி முதல் 48 மணித்தியாலப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், இலங்கை கண் வைத்தியர்கள் சங்கம், சுகாதார பூச்சியியல் வல்லுநர்கள் சங்கம், பாடசாலை பல் சிகிச்சை சங்கம், பொதுச் சுகாதார ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Address

Messenger Street, Colombo/12
Colombo

Telephone

+94757706369

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Press - Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Press - Sri Lanka:

Videos

Share


Other News & Media Websites in Colombo

Show All