22/05/2023
*தமிழ்நாட்டில் பணக்கார ஊர்களில் முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?*
தமிழ்நாட்டில் பணக்கார ஊர் என்றால் பலருக்கு உடனே தோன்றுவது சென்னையா? கோயமுத்தூரா என்று தான்,ஆனால் இவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருப்பது எந்த ஊர் தெரியுமா?
*கன்னியாகுமரி* மாவட்டத்தில் வாழும் மக்கள் தான் அதிக வசதியாக வாழும் தமிழ்நாடு மாவட்டங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றனர்.அவர்களின்,வருமானம்,வாழ்க்கைமுறையைப் பற்றி பார்ப்போம்,
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் அதிகம் இருப்பது இந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தான்,அதே மாதிரி கேரள அரசுப்பணிகளிலும் இங்குள்ள நிறைய பேர் பணிபுரிகிறார்கள்,தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பதும் அதிகம் இந்த ஊர் மக்கள் தான்.
ரப்பர் ஏற்றுமதியில் இந்த மாவட்டம் முன்னணியில் உள்ளது,அதைப்போல இங்கு அதிக மீன்வளம் உள்ள அரபிக்கடல் இருக்கிறது,விவசாயம் செய்வது இங்கு குறைவு,விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் வேறு வேலை செய்து குடும்பத்தை சமாளிக்கும் திறமையானவர்கள் இங்கு இருக்கிறார்கள்.அது மட்டுமின்றி கூலி வேலைகளுக்கு கூட தமிழ்நாட்டில் வேறு இடங்களை விட இங்கு ஊதியம் அதிகம்.
இந்த மாவட்டத்தில் 95%-க்கு மேல் காங்கிரீட் வீடுகள் தான் உள்ளன,தமிழ்நாட்டில் மீனவ கிராமங்கள் என்றாலே ஓலைக்குடிசை,சிறிய வீடுகள் என்று காட்சியளிக்கும் அதில் இந்த மாவட்டம் ஒரு விதிவிலக்கு,இங்குள்ள கடற்கரை கிராமங்களை கிராமங்கள் என்று சொல்வதற்கு பதிலாக கடற்கரை நகரங்கள் என்று சொல்லலாம்.முன்னேறுவதற்கு ஜாதியோ நமது வாழ்விடமோ தடையில்லை என்பதற்கு இந்த மாவட்ட மீனவ மக்கள் ஒரு எடுத்துக்காட்டு.
இங்குள்ள மக்கள் அதிகம் ஆடம்பர வாழ்க்கையை விரும்பக்கூடியவர்கள்,சொந்த தொழில் துவங்குவதில் ஆர்வம்
இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை,எல்லோராலும் பெரிய உயரத்தை எட்ட முடியும்,அதற்கு கல்வியும்,உழைப்பும்,தன்னம்பிக்கையும் அவசியம்
அந்த தன்னம்பிக்கையும்,கல்வியும்,உழைப்பும் இங்குள்ள மக்களிடமும் தானாகவே வந்து இருக்கிறது,அதுவே இங்குள்ள அனைத்து மக்களும் நல்ல நிலைமையை அடைய உந்துகோலாக இருக்கிறது.படித்தால்,உழைத்தால் எல்லோராலும் நல்ல நிலைமையை அடையலாம் என்பதற்கு *கன்னியாகுமரி* ஒரு சிறந்த உதாரணம்.