TN 75 memes

TN 75 memes குமரி பக்கம்
(22)

கனிம வளம் கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு. . .__கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்   ஸ்ரீதர் அவர்களின் செய்திக்...
18/02/2024

கனிம வளம் கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு. . .
__
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்களின் செய்திக் குறிப்பில் இருந்து . . .


செவ்வாய்க்கிழமை 20.02.2024 காலை முதல்...

கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கனிம வள சரக்கு காலி வாகனங்கள் (Empty Vehicles) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் (Load vehicles) காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர பிற நேரங்களில் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

அதிவேகமாக மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர் மீதும் அவரை அனுமதிக்கும் உரிமையாளர் மீதும் மோட்டார் வாகன சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி வாகனங்களை கைப்பற்றி தேவைப்படின் சிறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கனிமவளத்துறையால் வழங்கப்படும் அனுமதிச்சீட்டை (Pass) முறையாக பயன்படுத்தாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- என அறிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகன ஓட்டுநர்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு.

நடப்பார்களா?

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் அன்பு அண்ணன்  ராக்கெட் ராஜா அவர்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை இன்று அவர் சட்டரீதியாக...
25/01/2024

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் அன்பு அண்ணன் ராக்கெட் ராஜா அவர்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை இன்று அவர் சட்டரீதியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்று அவர்கள் வீட்டில் இருந்து துப்பாக்கி எடுத்துள்ளதாக கூறப்படும் தகவலில் உள்ள உண்மைத்தன்மை சந்தேகத்தை உண்டாக்குகிறது சட்ட ரீதியாக ஒருவர் தனது வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது எப்படி சட்டத்துக்கு புறம்பாக ஆயுதங்களை வைத்துக் கொள்வார் மேலும் சில ஊடகங்கள் இந்த செய்திகளை போடும் பொழுது ரவுடி ராக்கெட் ராஜா என்ற அடைமொழியுடன் போடுகிறார்கள் இவர்களால் இன்று கைதாகி சிறையில் இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தற்பொழுது முன்னாள் அமைச்சர் பொன்முடி போன்றவர்களை சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்த திருடர்கள் என்று சொல்ல முடியுமா அந்த தைரியம் இன்றைய ஊடகத்துறைக்கு இருக்கிறதா நாடார் சமுதாய இளைஞர்களால் போற்றப்படக்கூடிய அன்பு அண்ணன் ராக்கெட் ராஜா அவர்களுக்கு ரவுடி என்ற முத்திரையை குத்தும் சமூக ஊடகங்களை செய்தி சேனல்களையும் பத்திரிகைகளையும் வன்மையாக கண்டிக்கிறேன். அன்பு அண்ணன் ராக்கெட் ராஜா அவர்களை நேசிக்கும் கோடி சகோதரர்களில் நானும் ஒருவன்

கட்டப்பஞ்சாயத்து பண்ணுவோம் வங்க! தமிழ்நாடு வருவாய் துறையினர் சங்கம் நடத்தும் அழகான நியாயமான சூப்பரான போராட்டம் !அமைச்சர்...
21/01/2024

கட்டப்பஞ்சாயத்து பண்ணுவோம் வங்க! தமிழ்நாடு வருவாய் துறையினர் சங்கம் நடத்தும் அழகான நியாயமான சூப்பரான போராட்டம் !

அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் உதவியாளருக்கு வருவாய்துறைக்கும் என்ன பிரச்சனை?

பரபரப்பான முழு விவரம் இதோ!

ஒஹோ இதான் பிரச்சனையா ?

தமிழ்நாடு வருவாய் துறையினர் சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக இன்று மாலை நான்கு மணிக்கு மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு. ஜஸ்டின் அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அப்படி என்ன தான் பிரச்சனை என்று களத்தில் இறங்கி அலசி பார்க்க முடிவு செய்தோம், அப்படி அலசி பார்த்தபோது கிடைக்கப்பெற்ற செய்தி சற்று அதிர்ச்சிகரமாகவும் இருந்தது.

குமாரி மாவட்டத்தில் ESI மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் ESI மருத்துவமனை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முயற்ச்சிகளையும் எடுத்தார். இதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து தகுந்த இடத்தை கண்டுபிடிக்குமாறு தன்னுடைய நேர்முக உதவியாளர் ஜஸ்டின் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். திரு. ஜஸ்டின் அவர்களும் அரசு அதிகாரிகளுடன் ESI மருத்துவமனை கட்டுவதற்கு இடம் கண்டுபிடிக்க களத்தில் இறங்கியுள்ளார். முதலில் கிள்ளியூர் தாலுகாவில் ஒரு இடம் கண்டறியப்பட்டது, பின்னர் அந்த இடம் மலை மற்றும் மேடும் பள்ளவுமாக இருந்ததால் அந்த இடம் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் இடம் தேடும் பணி ஆரம்பமானது, இதற்காக அப்போதைய சார் ஆட்சியர் திரு கௌஷிக் அவர்கள் ஒரு இடத்தை தேர்வு செய்து அதனை மாண்பு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களை அழைத்து நேரில் காண்பிக்கலாம் என்று ஜஸ்டின் அவர்களிடம் தெரிவிக்க, இதற்கான ஏற்பாடுகளை செய்து அமைச்சர் சென்னையில் இருந்து துறை ரீதியான பணிகளை முடித்து விட்டு குமரி மாவட்டம் வந்த போது 23/0ct/2023 அன்று அழைத்து சென்று இடத்தை காண்பித்தனர். இந்த இடம் திருவட்டார் தாலுகாவிற்கு உட்பட்ட மணக்காவிளை என்னும் இடம் என்று கூறப்படுகிறது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ESI மருத்துவமனை கட்டுவதற்கு இந்த இடத்தை தேர்வு செய்து REGIONAL DIRECTOR ESI அவர்களுக்கு கடிதம் அனுப்ப மாவட்ட ஆட்சியரை கேட்டு கொண்டார், மாவட்ட ஆட்சியர் தன்னுடைய அலுவலர்களை கடிதம் எழுத ஆணையிட்டார். ஆய்வு செய்து ஆணையிட்ட பின்னர் ஒரு மாதம் கடந்தது இது குறித்து அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் உதவியாளர் திரு ஜஸ்டின் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர்களை அழைத்து கடிதம் எழுத அமைச்சர் கூறியிருந்தாரே, என்ன ஆனது என்று கேட்டபோது எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது, இறுதியாக அந்த கடிதத்தை கையாண்டது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் M Section அதிகாரி திரு மகேஷ் மாரியப்பன் என்று தெரிய வர , திரு ஜஸ்டின் அவர்கள் மாரியப்பனை தொடர்பு கொண்டு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறிய மருத்துவமனை கடித்த விவகாரம் என்ன ஆனது என்று கேட்க, தனக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரித்துள்ளார், உதவியாளர் ஜஸ்டின் குமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ESI மருத்துவமனை வருவது தொடர்பாக அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முயற்சி எடுக்கிறார்கள் அவர்களின் உத்தரவை உதாசீனப்படுத்தி தனக்கு தெரியாது என்று கூறுவது அரசு அதிகாரிக்கு ஒரு அழகா என்று வினவியுள்ளார், இதனை கேட்ட அந்த அதிகாரி என்னை கேள்வி கேட்க நீ யார் என்று முறைப்பான பதிலை கூறி இணைப்பை துண்டித்துள்ளார், இதனை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்தில் கொண்டு செல்லவே கடிதம் என்ன ஆனது என்று மீண்டும் கேட்க, கடிதம் அனுப்பிவிட்டேன் என்று மாரியப்பன் கூற, அந்த கடிதத்தின் நகலை அமைச்சர் அலுவலகத்தில் அளிக்கும் படி ஜஸ்டின் ராஜ் கேட்க கடிதத்தை அனுப்பாமல் இழுத்தடித்துள்ளார் மாரியப்பன், மீண்டும் மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று கடிதத்தின் நகலை அமைச்சர் அலுவலகத்தில் அளிக்கும் படி கேட்டு கொண்டதன் விளைவாக கடிதத்தின் நகலை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார் மாரியப்பன், கடிதத்தை திறந்து படித்து பார்த்த ஜஸ்டின் அவர்களுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறிய மணக்காவிளை பகுதியை மாரியப்பன் நிராகரித்து விட்டு தனக்கு தோன்றிய இடமான அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள ஏற்கனவே ஒரு நிராகரிக்கப்பட்ட இடத்தை தேர்வு செய்து எழுதி கடிதம் அனுப்பியது தெரியவந்துள்ளது, இதனை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாமல் , மக்கள் பணியை ஏன் நீங்கள் ஒழுங்காக செய்யாமல் உங்களுக்கு தோன்றியவற்றை செய்கிறீர்கள் ? மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறிய இடத்தை தேர்வு செய்யாமல் மாரியப்பன் தனக்கு தோன்றிய இடத்தை தேர்வு செய்தது ஏன் ? மாவட்ட ஆட்சியர் சார்பாக எழுதப்பட்ட கடிதத்தை மாவட்ட ஆட்சியரையே ஏமாற்றி கடிதத்தில் கையெழுத்து போட வைத்து அனுப்ப யார் அதிகாரம் கொடுத்தது ? மாரியப்பன் மாவட்ட ஆட்சியரா? மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரையே ஏமாற்றும் அளவிற்கு வல்லமை படைத்தவரா? என்று அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார். மிகவும் அலட்சியமாக பேசிய மாரியப்பன் என்னை ஒன்றும் செய்ய முடியாது சங்கத்தை வைத்து உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் உதவியாளர் ஜஸ்டின் அவர்களை தர குறைவாக பேசி மிரட்டியுள்ளார். ஜஸ்டின் என்பவர் பற்றி கூற வேண்டுமானால்! இயற்கை சமூகம் மீதான அக்கரை கொண்டவர். மரம் நடுதல், குளங்கள் சுத்தம் செய்வது போன்ற பல வேலைகளை செய்து வருபவர், ஒரு துளி லஞ்சம் வாங்காதவர் இது அங்கு அமைச்சர் அலுவலகம் வரும் அனைவருக்கும் தெரியும். நிறைய மக்கள் கொண்டு வரும் நியாயமான பிரச்சனைகளுக்கு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு நியாயத்தை கேட்டு கண்டித்து ஏழைகளுக்கு நியாயத்தை செய்து கொடுத்துள்ளார். சட்டத்திற்கு புறம்பான எந்த விஷயங்களிலும் தலை இட மாட்டார். இது அனைவருக்கும் தெரிந்ததே ! ஒரு அதிகாரி தனக்கென்று கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்யாமல் அமைச்சர் அலுவலகத்தையே மிரட்டி சங்கத்தை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருப்பார் என்பதை பொதுமக்கள் சிந்தித்து பாருங்கள். இது பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையோ, கட்ட பஞ்சாயத்து பிரச்சனையோ இல்லை வேறு ஏதோ ஒரு பிரச்சனையோ கிடையாது. முழுக்க முழுக்க மக்கள் சார்ந்த ஒரு பிரச்சனை, குமரி மக்கள் நீண்ட காலமாக கேட்டு கொண்டிருக்கும் ஒரு மகத்தான திட்டம், இதனை ஒரு அதிகாரி முழு மனதோடு மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறியபடி கேட்டு செய்யாமல் தான் தோன்றி தனமாக செய்ததன் விளைவாக ESI மருத்துவமனை திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டு திட்டம் தள்ளி போகியுள்ளது. இதனை தட்டி கேட்ட அமைச்சரின் உதவியாளருக்கு சங்கத்தை கூட்டி ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் நேரடியாக மிரட்டல் அளித்துள்ளார் மாரியப்பன். ஒரு VAO அலுவலகத்தில் மக்கள் சென்றால் தெரியும், எவ்வளவு நேரம் வயதானவர்களை காக்க வைக்கிறார்கள் என்று, 100 ரூபாய்க்காக திருப்பி வீட்டிற்கு அனுப்புவது அவர்களை அலைய வைப்பது போன்ற பல வேலைகளில் ஈடுபடுவது தொடர்ந்து தொடர் கதையாகி வருகிறது, ஜாதி , பிறப்பு , இறப்பு , போன்ற சான்றிதழ்கள் கூட தராமல் அலைக்கழித்து அது அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் பார்வைக்கு வந்து அதனை சரி செய்து கொடுக்கும் படலம் தினம் தினம் நடைபெறுகிறது. ஒரு சான்றிதழ் வழங்க அமைச்சர் அலுவலகம் நேரடியாக தலையிட வேண்டிய நிலை இருக்கிறது என்றால் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கி வேலை செய்யும் அதிகாரிகள் என்ன லட்சணத்தில் வேலை செய்கிறார்கள் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அமைச்சர் அலுவலகத்தையே சங்கத்தை வைத்து மிரட்டி பார்க்கும் துணிச்சல் உடைய மாரியப்பன் போன்ற அரசு அதிகாரிகள் பொதுமக்களை என்ன பாடு படுத்துவார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் ? வருவாய் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து பல அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தது மாரியப்பன் போன்றவர்களுக்கு நினைவில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மாரியப்பன் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கும் தில்லுமுல்லுகள் சமூதாயத்தில் பேச வைப்பதற்கு நேரம் ஆகாது என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் அலுவலகம் தொடர்ந்து அநியாயங்களை தட்டி கேட்கும், சட்டத்திற்கு உட்பட்டு ஊழல் அதிகாரிகளிடம் சண்டையிட்டு பொதுமக்களுக்கு நியாயத்தை பெற்று கொடுக்கும், தங்களின் நியாயமான கோரிக்கைகள் நிலுவையில் இருந்தால் அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் அலுவலகத்தில் நேரடியாக வந்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு செல்லலாம், “Illegal” பிரச்சனைகளுக்கு இங்கு இடமில்லை என்று அமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். எத்தன்னை போராட்டம் செய்தாலும், எத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாலும் சரி, பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு வளர்ச்சி பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் அலுவலகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

 #குலசேகரம்_மூகாம்பிகா  #மருத்துவ_கல்லூரி_பேராசிரியர்  #பாலியல்_தொல்லை_கொடுத்ததால்  #அக்கல்லூரியில்_முதுகலை_மருத்துவம்  ...
07/10/2023

#குலசேகரம்_மூகாம்பிகா
#மருத்துவ_கல்லூரி_பேராசிரியர்
#பாலியல்_தொல்லை_கொடுத்ததால் #அக்கல்லூரியில்_முதுகலை_மருத்துவம் #படித்து_வந்த_தூத்துக்குடி_மாவட்டத்தை #சேர்ந்த_சுகிர்தா_என்ற_மாணவி_கடிதம் #எழுதி_வைத்துவிட்டு_தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் பெயரில் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா(27) என்பவர் முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் நேற்று (06.10.23) வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் இருந்துள்ளார். அவர் கல்லூரிக்குச் செல்லாதது குறித்து தகவல் அறிந்த சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதியம் 2 மணி அளவில் ஹாஸ்டலில் சென்று பார்த்தபோது சுகிர்தா இருந்த அறை உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து குலசேகரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் அறை கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுகிர்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார். அறுவைச் சிகிச்சையின் போது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்தை தனக்குத் தானே ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அவரது அறையில் தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஆங்கில கடிதம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுகையில், "தனது தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம் என மருத்துவ மாணவி கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளது. அதில் ஒரு ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கல்லூரி நிர்வாகம் அரசியல் பின்பலத்துடனும் காவல்துறை துணையுடனும் தனது கல்லூரி பேராசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதவாறு இந்த விவகாரத்தை மூடி மறைத்துள்ளது.

தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு தற்கொலைக்கு காரணமான கல்லூரி பேராசிரியர்களை கைது செய்து பேராசிரியர்களுக்கு துனை போகும் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

தமிழ்நாட்டில் இருந்து கட்டுமான பொருட்கள்  கேரளாவிற்கு  ரயிலில் கொண்டு செல்லப்படுகிறதுஇடம் : இரணியல் இரயில் நிலையம்
06/06/2023

தமிழ்நாட்டில் இருந்து கட்டுமான பொருட்கள் கேரளாவிற்கு ரயிலில் கொண்டு செல்லப்படுகிறது

இடம் : இரணியல் இரயில் நிலையம்

இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் கேரள மாநிலம் பட்டணம் திட்டையில் இருந்து 14 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி , சிற...
31/05/2023

இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் கேரள மாநிலம் பட்டணம் திட்டையில் இருந்து 14 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி , சிறுமியை மார்த்தாண்டம் பகுதிக்கு அழைத்து வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது ...
எனவே இந்த புகைப்படத்தில் இருக்கும் நபரை குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழே கொடுத்திருக்கும் மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்

9961076756

03/04/2023

நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய காங்கிரஸ்!!
பாஜக-காங்கிரஸ் இரு தரப்பினரும் மோதல்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் கடன்காரர்களை ஏமாற்றுவதற்காக தனக்குத்தானே உடம்பில் ஆசிட் ஊற்ற  வாலிபர்களை ஏற்பாடு செய...
03/04/2023

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் கடன்காரர்களை ஏமாற்றுவதற்காக தனக்குத்தானே உடம்பில் ஆசிட் ஊற்ற வாலிபர்களை ஏற்பாடு செய்த பெண். 4 பேர் கைது.

31/03/2023

சீருடையில் செல்லாமல் கலர் டிரஸ் ல போனா வாத்தியார் அடிக்காம என்ன பண்ணுவாங்க. அவங்க அடிச்சா தான் புள்ளைகள் நல்லா இருப்பாங்க என்ற அடிப்படை விசயம் தெரியாத அம்மா வ இருக்காங்க..

மருத்துவ உதவிக்கான உறுதி செய்யப்பட்ட பதிவு...குளச்சல் பக்கத்தில் உள்ள பெரியவளை ஊரில் சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்ட...
11/02/2023

மருத்துவ உதவிக்கான உறுதி செய்யப்பட்ட பதிவு...

குளச்சல் பக்கத்தில் உள்ள பெரியவளை ஊரில் சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இவரது தந்தை மீனவர்.

சிகிச்சைக்காக பணம் இன்றி தவித்து வருகிறார்.

எனவே உங்களால் முடிந்த பணம் உதவியை செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உதவும் கரங்களுக்கு இந்த பதிவை பகிருங்கள்...
மேலும் விவரங்களுக்கு...

Please contact 9443842731 (his mother)

Bank account details:-
Bank name: State bank of India
Account name: Mariasevi
Account number: 67155036668
Ifsc code: SBIN0070333
Gpay - 9443842731
Phone pay - 9443842731

அதெப்படிடா காத்தே வராம ஃபேனை உருவாக்க முடியும்னு சின்ன வயசுல இருந்து யோசிப்பேன். இதுக்கெட்டகேடுக்கு இது சுத்துனா குளிருத...
09/01/2023

அதெப்படிடா காத்தே வராம ஃபேனை உருவாக்க முடியும்னு சின்ன வயசுல இருந்து யோசிப்பேன். இதுக்கெட்டகேடுக்கு இது சுத்துனா குளிருது… Good nite frandsssss

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிமலை பகுதியில் ரப்பர் பால்வடிக்க சென்ற அரசு பாலிடெக்னிக் மாணவரை கூட்டமாக நின்ற க...
11/12/2022

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிமலை பகுதியில் ரப்பர் பால்வடிக்க சென்ற அரசு பாலிடெக்னிக் மாணவரை கூட்டமாக நின்ற காட்டு பன்றிகள் தாக்கியது இதில் மாணவர் படுகாயமடைந்தனர் , வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்

வணக்கம்..... குளச்சல் இல் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் TN 75 AB 5946 என்ற எண்ணின் வாகன பதிவு சான்றிதழ் தொலைந்து ...
08/12/2022

வணக்கம்..... குளச்சல் இல் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் TN 75 AB 5946 என்ற எண்ணின் வாகன பதிவு சான்றிதழ் தொலைந்து விட்டது.யாருக்காவது கிடைத்து இருந்தால் 7418174618 இந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்
நாள்..06.12.2022.
No.9944999935
7418174618

புராணங்கள் , தொன்மங்கள் , கதைபாடல்கள் செவி வழிச் செய்திகள் அனைத்தயும் வரலாறாக எடுத்து கொள்ளாமல் நிராகரிக்கணுமா.....?இல்ல...
05/12/2022

புராணங்கள் , தொன்மங்கள் , கதைபாடல்கள் செவி வழிச் செய்திகள் அனைத்தயும் வரலாறாக எடுத்து கொள்ளாமல் நிராகரிக்கணுமா.....?

இல்லை இல்லவேயில்லை ....

ஒரு நல்ல வரலாற்று பார்வையென்பது இருக்கும் கதைப்பாடல்கள் செவி வழிச்செய்திகள் புராணங்கள் தொன்மங்கள் இவற்றுள் எது சரியானது எது தவறானது எது எப்படி மறுவியிருக்கிறது அல்லது மாற்றியமைக்க பட்டிருக்கிறது என்பதை ஆய்வுத்தன்மையுடன் பார்ப்பதேயாகும் ..............

ஆய்வுத்தன்மையில்லாமல் எல்லா கதைபாடல்களயும் செவி வழிச்செய்திகளயும் நம்பி தொலைக்க வேண்டிய இடத்துக்கு தள்ளபடுவீர்களாயின்...

கோகர்னம் முதல் குமரி வரை நம்பூதிரி நாடு என்று பரசுராமன் எறிந்த கோடரியை நீங்கள் நம்ப வேண்டும்...

பத்மாவதி அலாவுதீன் கில்ஜி மலையில் இருந்து விழுந்த செத்தா பத்தாயிரம் படை வீரர்களை நம்பவேண்டும்......

ராமர் பாலத்தை நம்பி ராமர் பாலம் கட்ட வேண்டும்

இப்படி இந்தியா முழுவதும் இருக்கும் உடான்ஸ் கதைகளை செவி வழி செய்திகள அத்தனயும் நம்ப வேண்டிவரும்......

தி பாரோடாக்சிக்கல் ப்ரைம் மினிஸ்டர் என்று நம்ம சசி தரூர் எழுதிய புத்தகத்தில் பத்மாவதி கதை எப்படி ஒரு சுபி பாட்டில் இருந்து உருவானது பின்னர் அது எப்படி உரு பெற்று கிர்னி சேனா என்ற வண்முறை கும்பலை உருவாக்கியது என்றும மிக தெளிவாக எழுதியிருப்பார்........

ரொம்ப காலமாக திருமலை நாயக்கர் திருவாங்கூரில் பிறந்தார்னு ஒரு உருட்டு உண்டு அஸ்வதி ராணியின் ஐந்து பிள்ளைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டார்கள்னு ஒரு உருட்டு அப்படி உருட்டுகள் அனைத்தும் செவி வழி செய்தி அதனால் உண்மையிருக்கலாம் என்று நாளை அச்சிலேறினால் அது அபத்தமாகிவிடும்..........

அப்ப எப்பதான் கதைபாடல் செவிவழிசெய்திகளை ஏற்று கொள்ளவேண்டும்.....?

இந்த கதைகள் சொல்லப்படும் காலத்தோடு ரியலிஸ்டிக்கலி பொருந்த வேண்டும் அந்த கதையில் வரும் மன்னரோ மக்களோ வருடமோ அங்கேயிருந்திருக்க வேண்டும் அல்லது அதே சமகாலத்தில் வெளியான எதாவதொரு நிகழ்வுகள் இந்த கதையில் வெளிப்பட வேண்டும் இப்படி நிறைய விடயங்கள் இருக்கிறது.கதைபாடல்கள் செவி வழிச்செய்திகளை முழுவதுமாக புறந்தள்ள முடியாது ஆனால் புறந்தள்ள வேண்டியதை புறந்தள்ளிதானாக வேண்டும்.........

திருவாங்கூர் நிலத்தை பொறுத்தவரை நிறைய கதைப்பாடல் உண்டு தம்பிமார் கதைகள், எட்டுவீட்டு பிள்ளைமார் பற்றிய கதைகள், மண்டைக்காடு கோவில் பற்றிய செவிவழி கதைகள், திப்புவை தோற்கடித்த கதைபாடல் இப்படி எக்கசக்கம் இது எல்லாம் வரலாறாக பொருந்தும் ஆனால் அதற்காக அங்கே சொல்லப்படும் அனைத்து கதைகளயும் உண்மையில் நடந்தவகையாக மாற்ற முடியாது உதாரணத்திற்கு அஸ்வதி திருநாளும் அஞ்சி ஆண்மக்களும் கதை.........

திருவாஙகூரில் மட்டும் ஏன் கதைப்பாடல்களை விட வரலாற்று குறிப்புகளை அதிகமாடக்ஷநம்ப வேண்டும்...? காரணம் திருவாங்கூரை போன்று well documented வரலாறு இந்தியா முழுவதைம் வேறெங்கும் இல்லையென்பேன். ஐயோ வரலாற்றை எழுதியவர்கள் மன்னர்கள் என்று உடனே தீர்பிடவேண்டாம் திருவாங்கூரில் வரலாற்றை எழுதியவர்கள் மன்னர்கள் என்றால் நீங்கள் ஸ்டேட் மேனுவலை வாசித்தவராக இருக்க வேண்டும். திருவாங்கூர் வரலாற்றை சரியாக மக்கள் பார்வையில் புரிய நீங்கள்

டச்சி
ப்ரெஞ்சி
ப்ரிட்டீஷ்
போர்ச்சுக்யுஸ்
மிசனரி
கதைப்பாடல்கள்
மற்றும் அந்த காலத்தில் நிலத்திற்கு வந்து போன பயணிகள்

இப்படி நிறைய வாசிக்க வேண்டும் ஸ்டேட் மேனுவலில் திருவாங்கூரில் இருந்ததாக சொல்லப்படும் முலைவரியும் நங்கேலி கதையும் மறைக்கபட்டதாகவே இருக்கட்டும் மிசனறிகள் ஏன் அதை மறைக்க வேண்டும்....?

மீட்டும் மட்டீரும் ஏன் எளிய மக்களின் வரலாற்றை மறைக்க வேண்டும்...? மல்லன் மல்லனின் மனைவியை , மண்டைக்காட்டை எழுதிய மற்றீருக்கு நங்கேலியை எழுதுவதில் என்ன கைசுழுக்கு......?

புலிப்பனம் இசக்கி மாடன் நாயர்களை அடித்து ஓடவிட்ட வரலாற்றை பதிந்த வரலாற்றாளர்களுக்கு நங்கேலி மற்றும் முலைவரியை ஏன் பதியாமல் விட்டார்கள்......?

1690 மன்னாப்பேடி புலப்பேடி என்ற கேவவமான நடைமுறை ஒழிக்கபட்டதற்கு ஆதாரம் இருக்கு....

அஞ்சிதெங்கு கலவரத்திற்கு ஆதாரம் இருக்கு.....

அரமணையில் முலை சிதைக்கபட்ட நாயர் பெண்ணை பற்றிய கதைக்கு ஆதாரம் இருக்கிறது.......

கல்குளத்து சந்தையில் தோள்சீலை போராட்டத்தில் சூத்திரர்களை ஓடவிட்டு அடித்த பெண்களை பற்றி வரலாறு இருக்கு.......

கோட்டாறு சந்தையை கையகபடுத்தி சாணார்கள் நடத்திய தோள் சீலை கலகத்திற்கு ஆதாரம் இருக்கு.....

ஆனால் நங்கேலிகக்கோ முலைவரிக்கோ ஆதாரம் இல்லை..... அது மட்டும் வரலாற்றுக்கு தெரியாமல் யார் கண்ணிலும் படாமல் நடந்ததா....?

மகாராணி கவுரி பார்வதி பாயின் 1816 ஆம் ஆண்டின் வரிவிலக்கை பற்றி விரிவாக அரச குறிப்பு இருக்கு ஆனால் முலை வரி இருந்ததாகவோ அதை விலக்கியதாகவோ ஏன் ஆதாரங்கள் இல்லை.....?

1816 வரிவிலக்கபட்டதற்கு பின்பு சூடு பிடிக்க தொடங்கி 1820 பிறகு மக்கள் மத்தியில் பரவி 1829ல் உச்சம்பெற்று 1865இல் முற்று பெற்ற தோள்சீலை கலகத்திற்கு தியதி வாரியாக ஆதாரத்தை தேடி எடுக்க முடிகிறது ஆனால் முல வரிக்கு மட்டும் ஆதாரமில்லையாம் இதை என்ன கணக்கில் எழுதுவது.......?

திடீரென பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்ததாக இருபதாம் நூற்றாண்டு மத்திமத்தில் ஒரு கதை அச்சிலேற்றபடும்போது அதன் அரசியல் காரணங்களை ஆராய வேண்டும் அதை தொடர்ந்து அச்சிலேற்றுபவர்கள் யார் அவர்கள் ஏன் தொடர்ந்து ஆதாரமில்லாதவற்றை அச்சிலேற்றுகிறார்கள் என்ற ரீதியில் ஆராய வேண்டும்.......

முப்பது ஜாதிகள் அவர்ணர்கள் என்று எழுதி வைக்கபட்டிருக்க தோள்சீலை கலகம், மூக்குத்தி சமரம், கோவில் நுழைவு போர் என்று வரலாற்றில் அனைத்து சனாதன கூறுகளையும் வெல்லு விழித்து வெளுத்து வாங்கி வெற்றி பெற்ற இரு சாதிகளை மட்டுமே முலை வரி கட்டினார்கள் என்று புரட்டை சுற்ற விடுபவர்கள் யார் அதனால் அவர்கள் பெற விரும்பும் ஆதாயம் என்று ஆராய வேண்டும்..........

அப்படி ஆராய தொடங்கினால் எந்த செவிவழி செய்தியை நம்ப வேண்டும் எதை நம்பக்கூடாது என்ற தெளிவு பிறக்கும்......

இறுதியாக தோள்சீலை கலகத்தை சரியாக புரிந்தகொள்ள திருவாங்கூரின் நிலவுரிமை கோயில அதிகாரம் சாதிய கட்டமைப்பு மற்றும் வணிகம் பற்றிய ஆழ்ந்த புரிதல் வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் சாணார்கள் முலைவரி கட்டினார்கள் ஈழவர்கள் முலை வரி கட்டிணார்கள் என்று வாயடித்து பொழைக்கவேண்டியதுதான்..........

நாகர்கோவில்லில் உள்ள ஒரு ATM ல் யாரோ ஒரு நபர் பணத்தை( withdrawal) வித்டிராவல் செய்துவிட்டு மெஷின்ல இருந்து பணத்தை எடுக்க...
04/12/2022

நாகர்கோவில்லில் உள்ள ஒரு ATM ல் யாரோ ஒரு நபர் பணத்தை( withdrawal) வித்டிராவல் செய்துவிட்டு மெஷின்ல இருந்து பணத்தை எடுக்காமல் சென்று விட்டார் அந்த பணம் தொலைத்தவர் சரியாக ரூபாய் எவ்வளவு என்று சொல்லி இந்த நம்பரில் கால் செய்து பணத்தை பெற்று கொள்ளலாம் 8248311030

தயவு செய்து அதிகமாக பகிரவும்

(ஏடிஎம்மில் செக்யூரிட்டி இல்லை இருந்தால் அவரிடம் கொடுத்திருப்பேன் )

காணவில்லைதேசியக்கொடியைக் காணவில்லை.மனம் கனக்கிறது.கன்னியாகுமரி மகாதானபுரம் நால்வழிச்சாலை ரவுண்டானாவில்  உயரமான கம்பத்தில...
26/11/2022

காணவில்லை

தேசியக்கொடியைக் காணவில்லை.
மனம் கனக்கிறது.

கன்னியாகுமரி மகாதானபுரம் நால்வழிச்சாலை ரவுண்டானாவில் உயரமான கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.

பறக்க விடப்பட்ட மறுநாளே கொடி கிழிந்து தொங்கியது. பின்னர் மறு சீரமைத்து மீண்டும் புதுக்கொடியினை பறக்க செய்தனர். ஆனால் அந்தக் கொடி இப்போதும் காணப்படவில்லை. கொடி இல்லாத கம்பத்திற்கு செட்செய்யப்பட்ட லைட் மட்டும் வீணாக ஒளிர்கிறது.

எம். பி யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து என்பது கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் கூத்தாக இந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியினை பறக்கவிட்டு விளம்பரம் செய்து பீத்திக் கொண்டது மலிவான அரசியல்.

தாயின் மணிக்கொடி பாரீர்; அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்......

கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது
25/11/2022

கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது

24/11/2022

Brasil vs Serbia fifa world cup...

220 பில்லியன்டாலர் செலவில் கத்தரின்  உலக கால்பந்தாட்ட நிகழ்வு இன்று 7 .30  தொடங்குகிறதுகடந்த முறை ரஷ்யா  19 பில்லியன் டா...
20/11/2022

220 பில்லியன்டாலர் செலவில் கத்தரின் உலக கால்பந்தாட்ட நிகழ்வு இன்று 7 .30 தொடங்குகிறது

கடந்த முறை ரஷ்யா 19 பில்லியன் டாலர் செலவிலும் அதற்கு முன்பு பிரேசில் 16 பில்லியன் டாலர் செலவு செய்தது

கத்தரில் நடைபெறும் இந்த உலக கால்பந்தாட்ட நிகழ்விற்கு பல எதிர்புகளும் உண்டு
Fifa தரவரிசையில் கத்தர் 50 வது இடத்தில் உள்ளது

7 வருடங்களில் ஆடம்பர ஹோட்டல்களும் விமானநிலையங்கள் 8 விளையாட்டு மைதானம் என பல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது

விளையாட்டு நடைபெறும் இடங்களில் மது அருந்ததடையும் மது விரும்புவோர் அதற்கான நட்சத்திர விடுதிகளில் அருந்தலாம் என கூறப்பட்டுள்ளது

சுமார் 12 லட்சம் பேர் கத்தர் வருவார்கள் என கணக்கிடபட்டுள்ளது
இந்திய சார்பாக துனை ஜனாதிபதி கலந்து கொள்கிறார்

19/11/2022

சும்மா வீடியோ எடுத்து பேக்ரவுண்ட் ஒரு மியூசிக் போட்டு போடலாம்னு பார்த்தேன் கடைசில கதி கலங்கி போச்சு 😱😳

19/11/2022
17/11/2022

Green Sea at Periavilai beach

அதிகம் படித்த கன்னியாகுமரி மாவட்ட மக்களே!நம்ம ஊரின் பெயரை கூட சரியாக எழுத தெரியாகல், மீண்டும் மீண்டும் தவறாக எழுதி வருகி...
17/11/2022

அதிகம் படித்த கன்னியாகுமரி மாவட்ட மக்களே!

நம்ம ஊரின் பெயரை கூட சரியாக எழுத தெரியாகல், மீண்டும் மீண்டும் தவறாக எழுதி வருகிறோமே, நாம் திருந்தப்போவது எப்போது..?

கன்னியாகுமரி என்னும் தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் எழுதும்போது Kanniyakumari என்று எழுதுவது தான் சரியென 2016-ம் ஆண்டே நம் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டதுடன், பெயர் பலகையையும் என சரியாக எழுத துவங்கினார்.

ஆனால் ஆண்டுகள் பல உருண்டோடிய பின்பும், நாம் தொடர்ந்து தவறான பெயரை தான் எழுதி வருகிறோம்.

இரண்டு சொற்களின் வேறுபாட்டை பாருங்கள்,
கன்னியாகுமரி = Kanniyakumari
கன்யாகுமரி = Kanyakumari

நாம் அதிகம் படித்த மாவட்டம் என பெருமை பேசுவது ஒன்றும் தவறில்லை, ஆனால் படித்தவர்கள் போல் நடந்துகொள்வோம், சரியான ஆங்கில சொல்லை பயன்படுத்துவோம்...

The magic hour💥Photographs taken in different places at different times....
17/11/2022

The magic hour💥

Photographs taken in different places at different times....

கிறிஸ்து அரசர் ஆலயம் நாகர்கோவில்
13/11/2022

கிறிஸ்து அரசர் ஆலயம்
நாகர்கோவில்

என்ன... குமரி மாவட்டத்துக் குமாரிகள் ஊருல உள்ள பெயக்கள புடிச்சி கசக்கி ஒரே குமுறுவலையா இரிக்கி? ஒரு பக்கம் வெசம் வைப்பு ...
13/11/2022

என்ன... குமரி மாவட்டத்துக் குமாரிகள் ஊருல உள்ள பெயக்கள புடிச்சி கசக்கி ஒரே குமுறுவலையா இரிக்கி? ஒரு பக்கம் வெசம் வைப்பு நடக்கு? இன்னொரு பக்கம் ஆளு வச்சி வெதயள வீக்குகாளுவா? ஸ்லோ பாய்சன் பரிவாடிகள்னு நாகர்கோயில நாக நஞ்சுக் கோயிலா மாத்திருவாளுவ போலுக்கே... கல்வில கூடுன மாவட்டம்லியா? கொஞ்சம் ஃபோர்சு கூடுதலாத்தானிருக்கும்... இனி ஜெயில்ல போயி கு...டியில மூட்டப் பூச்சி கடி வாண்டம்போ சொகுசா இருக்கும்ட்டியளா...

நாகர்கோவில் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் கணவனை விஷம் கொடுத்து கொலை செய்ய மனைவி முயற்சித்ததாக மருத்துவமனையில் சிகிச்ச...
13/11/2022

நாகர்கோவில் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் கணவனை விஷம் கொடுத்து கொலை செய்ய மனைவி முயற்சித்ததாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவன் குற்றம் சாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன். கட்டுமான தொழிலாளியான இவருக்கும் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணத்திற்குப் பின்பு இரண்டு மாதங்கள் வரை புதுமண தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன், திடீரென ஒருநாள் இரவில் வீட்டில் நினைவிழந்து விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இதற்கிடையே, கடந்த ஒருமாத காலமாக சுஜாவின் நடவடிக்கையில் வடிவேல் முருகனுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து வடிவேல் முருகன், தனது மனைவியை கண்காணிக்க தொங்கியுள்ளார். ஏற்கெனவே திருமணமான சில நாட்களுக்கு பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும் அவரோடு தற்போது எவ்வித தொடர்பும் இல்லை எனவும் சுஜா கணவரிடம் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சமீப காலமாக சுஜாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் முன்னாள் காதலனுடன், மனைவிக்கு தற்போதும் தொடர்பு இருக்கிறதா என கணவனுக்கு சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே மனைவி தனது செல்போனை லாக் செய்து வைத்திருப்பதால் அதை திறந்து பார்க்க முடியாமல் வடிவேல் முருகன் குழம்பிய நிலையில், அதை அன்லாக் செய்வது எப்படி என்பதையும் மனைவியின் செல்போன் பயன்பாட்டின் போது மறைமுகமாக கவனித்து தெரிந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து செல்போனை திறந்து பார்த்தபோது தனது மனைவிக்கும் முன்னாள் காதலனுக்கும் இடையே நிகழ்ந்த வாட்ஸ் அப் சாட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனுக்கு அளித்த மருந்தில் ஏதோ கலந்து கொடுத்ததாக முன்னாள் காதலன் மற்றும் சுஜா ஆகியோர் பேசிக்கொண்ட தகவல் வாட்ஸ்-அப்பில் பதிவாகி உள்ளது. கணவனை தனக்கு பிடிக்கவில்லை எனவும் பிடிக்காத கணவனோடு வாழ்க்கை நடத்துவது கஷ்டமாக உள்ளது எனவும் இன்னும் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களை காதலனோடு சுஜா பகிர்ந்ததும் தெரியவந்தது.இந்நிலையில், உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் ஸ்லோ பாய்சன் அளித்திருப்பார் என உறுதி செய்த வடிவேல் முருகன், காவல்துறைக்கு புகார் அளித்த பின்பு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் வடிவேல் முருகனுக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை எனவே போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தனது மனைவியையும் அவரது காதலனையும் கைது செய்து தனக்கு அளித்த மருந்தை அறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்....

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது... வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன். கட்டுமான தொழிலாளியான இவருக்கும் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணத்திற்குப் பின்பு இரண்டு மாதங்கள் வரை புதுமண தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன், திடீரென ஒருநாள் இரவில் வீட்டில் நினைவிழந்து விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
தற்கிடையே, கடந்த ஒருமாத காலமாக சுஜாவின் நடவடிக்கையில் வடிவேல் முருகனுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து வடிவேல் முருகன், தனது மனைவியை கண்காணிக்க தொங்கியுள்ளார். ஏற்கெனவே திருமணமான சில நாட்களுக்கு பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும் அவரோடு தற்போது எவ்வித தொடர்பும் இல்லை எனவும் சுஜா கணவரிடம் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சமீப காலமாக சுஜாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் முன்னாள் காதலனுடன், மனைவிக்கு தற்போதும் தொடர்பு இருக்கிறதா என கணவனுக்கு சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே மனைவி தனது செல்போனை லாக் செய்து வைத்திருப்பதால் அதை திறந்து பார்க்க முடியாமல் வடிவேல் முருகன் குழம்பிய நிலையில், அதை அன்லாக் செய்வது எப்படி என்பதையும் மனைவியின் செல்போன் பயன்பாட்டின் போது மறைமுகமாக கவனித்து தெரிந்து கொண்டுள்ளார்...
இதையடுத்து செல்போனை திறந்து பார்த்தபோது தனது மனைவிக்கும் முன்னாள் காதலனுக்கும் இடையே நிகழ்ந்த வாட்ஸ் அப் சாட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனுக்கு அளித்த மருந்தில் ஏதோ கலந்து கொடுத்ததாக முன்னாள் காதலன் மற்றும் சுஜா ஆகியோர் பேசிக்கொண்ட தகவல் வாட்ஸ்-அப்பில் பதிவாகி உள்ளது. கணவனை தனக்கு பிடிக்கவில்லை எனவும் பிடிக்காத கணவனோடு வாழ்க்கை நடத்துவது கஷ்டமாக உள்ளது எனவும் இன்னும் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களை காதலனோடு சுஜா பகிர்ந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் ஸ்லோ பாய்சன் அளித்திருப்பார் என உறுதி செய்த வடிவேல் முருகன், காவல்துறைக்கு புகார் அளித்த பின்பு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் வடிவேல் முருகனுக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை எனவே போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தனது மனைவியையும் அவரது காதலனையும் கைது செய்து தனக்கு அளித்த மருந்தை அறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்...இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது... வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.

இந்த குழந்தையை திங்கள்நகர் அருகில் உள்ள பெருங்கோடு என்னும் ஊரிலிருந்து காணவில்லை யாராவது இந்த குழந்தையை கண்டால் இரணியல் ...
13/11/2022

இந்த குழந்தையை திங்கள்நகர் அருகில் உள்ள பெருங்கோடு என்னும் ஊரிலிருந்து காணவில்லை யாராவது இந்த குழந்தையை கண்டால் இரணியல் காவல் நிலையத்தை உடனே தொடர்பு கொள்ளவும்.

அதிமுக முன்னாள் M.L.A. நாஞ்சில் முருகேசனுக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்- நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் கும்பல் ஒன்...
13/11/2022

அதிமுக முன்னாள் M.L.A. நாஞ்சில் முருகேசனுக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்-

நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் கும்பல் ஒன்று நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்ததை தொடர்ந்து வடசேரி காவல் நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ புகார்-

சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை.

Address

Marthandam
Marthandam
629165

Alerts

Be the first to know and let us send you an email when TN 75 memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Media in Marthandam

Show All

You may also like