அமாவாச பெயர்க்காரணம்!!!!!
மணிவண்ணன் அவர்கள் இயக்கிய அமைதிபடை திரைப்படம் ஒரு அரசியல்வாதியின் சுய ரூபத்தை மிகத் தெளிவாக மக்களுக்கு எடுத்து சொன்னது. அந்த அமாவாச கேரக்டர் எங்கள் மனதில் நன்கு பதிந்த்தால் அந்த பெயரை வைத்தோம்.
நண்பர்களே!!!! சகோதர சகோதரிகளே!!! வணக்கம்..
பின்வரும் நோக்கங்களுக்காக இந்த பக்கம்(Channel)
ஆரம்பிக்கபட்டது!!!!
1.சினிமா ரசிகர் பைத்தியம்
(கட் அவுட், பாலாபிஷேகம்) தெளிய வைப்பது,
ரசிகர் மன்றங்களை அடியோடு ஒழிப்பது.
2.விவசாயத்திற்கும் விவசாயிக்கும் குரல் கொடுப்பது.
3.தமிழக பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது.
4.அதிமுக திமுக பாஜக காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு செய்த,
செய்கின்ற துரோகங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது.
5.அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்துவது.
6.அரசியல் அறிவு அனைவருக்கும் கொடுப்பது.
7.ஜாதி, மத, இன அரசியலை எதிர்ப்பது.
8.மூட நம்பிக்கைகளை மக்களுக்கு புரிய வைப்பது.
9.பெண்ணடிமைத்தனம், சிறார்களுக்கு ஆதரவாக, பாதுகாப்பான கருத்துக்கள், திருநங்கையர் நலம், ஆணாதிக்க வேற்றுமைகள் ஆகியன.
10.நம்மை சுற்றி உள்ள உண்மையான செய்திகளையும்,
தகவல்களையும் நகைக்சுவை உணர்வோடு "meme" மூலம் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது.
11.போலி மதவாதிகளையும்,போலி
ஆன்மீக வாதிகளையும் தோலுரிப்பது.
12.வேலை தேடும் நண்பர்களுக்கு உதவி செய்வது.
13.மக்களின் அன்றாட பிரச்சிகளுக்காக குரல் கொடுப்பது.
14.ரியல் எஸ்டேட், பாமரனின் ஏற்ற தாழ்வுகள், வன்முறை, கலாச்சார சீரழிவு எதிராக போராடுவது.
15.தொலைக்காட்சி தொடர்களுக்கும் சென்சார் போர்ட் கொண்டு வர வலியுறுத்துவது.
16. சினிமா கூத்தாடிகளுக்கு கொடுக்கப்படும் வரி விலக்கை ரத்து செய்து, அதை விவசாயிகளுக்கு கொடுக்க வலியுறுத்துவது.
நாங்கள் எந்த கட்சியையும் சார்ந்தவர்கள்
அல்ல ஆனால் நல்லது எந்த கட்சி செய்தாலும்
மனமார பாராட்டுவோம் .
முக்கிய குறிப்புகள்!!!!!!!
1. எங்கள் பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் எனக்கு தனி செய்தி அனுப்பவும் எங்கள் குழுவிடம் பேசி பதிவு நீக்கப்படும்.
2. பாமக,விசிக, புதிய தமிழகம் கட்சி,
ரசிகர் மன்ற அடிபொடிகள்,
ஆர் எஸ் எஸ்,மற்றும் ஜாதி மத வெறியர்கள்,
போலி இஸ்லாமிய மத பைத்தியங்கள், ரத்தத்தின் ரத்தங்கள்,
கழக உடன் பிறப்புகள், கறை படிந்த கரை வேட்டிகள் எங்கள் பக்கத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். இருந்தாலும் எங்கள் பணி தொடரும்.
3. அமாவாச முகநூல் பக்கம் பல பேர் கொண்ட சமூகம் மற்றும் அரசியல் தன்னார்வலர்களை கொண்ட அட்மின் குழுவால் இயக்கப்படுகிறது.
நமக்கு நாமே ஊடகமாய், உண்மையின் உரக்ககுரலாய் அமாவாச குழு. "நீங்கள் மனதில் நினைக்கும் கருத்துக்கள் தான் எங்கள் பதிவுகள்"
"எழுத்துக்கள் எழுச்சியை விளைவுகளை ஏற்படுத்த வேண்டும்"
"கற்றுக்கொள் கற்றுக்கொடு"