கோவை இளைஞர்கள் குழு

கோவை இளைஞர்கள் குழு videos

12/07/2023

பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்திய BJP எம்பி பிரிஜ் பூஷன் சிங் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்.கையை கார் கதவில் வைத்து நசுக்கினார்.

07/07/2023

#ரயில்_மறியல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் கூறிய தீர்ப்பை எதிர்த்து கோவையில் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் அவர்களது தலைமையில் ரயில் மறியல் இன்று நடத்தப்பட்டது இதில் கலந்துகொண்ட கட்சியினரை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்

21/11/2022
இந்த பையனை உங்களுக்கு யாருக்காவது தெரியுமா... கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் உள்ளான். எதுவும் பேசுவது இல்லை. இவனு...
06/11/2022

இந்த பையனை உங்களுக்கு யாருக்காவது தெரியுமா... கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் உள்ளான். எதுவும் பேசுவது இல்லை. இவனுடைய உறவினர் பற்றி தெரிந்தால் உடனடியாக +919791263234, 9080131500 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சொல்லுங்கள்

06/11/22 6:00pm

18/09/2022

சமுதாயத்தில் மாற்றபட வேண்டியது எது?

28/08/2022

IPC Section 10 தினம் ஒரு சட்டம்

28/08/2022

IPC - 10 தினம் ஒரு சட்டம்

27/08/2022

IPC - 9 #தினம்_ஒரு_சட்டம்

 #பிடித்திருந்தால்_பகிரவும்பூக்கள் கொண்டு வந்தால்இது புண்ணிய தேசமடா... வாட்கள் கொண்டு வந்தால்தலை வாங்கிடும் தேசமடா..    ...
15/08/2022

#பிடித்திருந்தால்_பகிரவும்
பூக்கள் கொண்டு வந்தால்
இது புண்ணிய தேசமடா...
வாட்கள் கொண்டு வந்தால்
தலை வாங்கிடும் தேசமடா..

10/08/2022

இந்ந இடம் எங்கே தெரியுமா?

03/06/2022

திருநங்கைகளின் வழிப்பறிகள் பொது மக்கள் பெரும் அவதி - கோவையில் பெருகிவரும் அட்டகாசங்கள்.
Give your commands about misbehaving transgenders

01/03/2022
தாலி கட்டிய அன்றிரவோஇல்லை மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்புஆடை கலைப்பு எனசுகமாக அரங்கேற...
17/10/2021

தாலி கட்டிய அன்றிரவோ
இல்லை
மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ
அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு
ஆடை கலைப்பு என
சுகமாக அரங்கேறும்
பல நிகழ்வுகள்

உனக்கு எப்படியோ தெரியவில்லை
எனக்கு மிகுந்த வலி இருப்பினும்
சுகமாக அனுபவித்தேன்

அன்றிலிருந்து
நிகழும் நிகழ்வுகளை அடுக்குகின்றேன் பார்

அதிகாலை எழுந்து
குளித்து சமைத்து
முத்தத்தோடு உனக்கு
உணவை கொடுத்து அனுப்பிய பின்பு
துணி துவைத்து
வீடு சுத்தம் செய்து
ஆடைகள் சமன் செய்து
அழகாக மடித்து வைத்து
உன் அம்மாவுக்கு இல்லை நம் அம்மாவுக்கு
பணிவிடை செய்து
மகனையும் மகளையும் பாடசாலை
அனுப்பி வைத்து
மறுபடியும் சமைத்து
நமது பிள்ளைகளை
பாசத்தோடும் கண்டிப்போடும் கண்காணித்து
ஓடிக்கொண்டே இருக்கிறேன் நான்

இன்னும் ஒன்று
சொல்கிறேன் கேள்

முதல் முறை கூடலின் போது
ஒரு வலி உணர்ந்தேனே
அதை விடவும் ரணம் என்றார்கள்
மகப்பேறு
பயந்து நடுங்கி நகர்ந்து கொண்டிருந்தேன்
பெருமையோடு நம் பிள்ளையை
வயிற்றில் சுமந்து
பெறுமாதம் வந்தவுடன் சொன்னார்கள்
குழந்தை வலம் மாறியதால்
வயிற்றை வெட்டி தான் எடுக்க வேண்டும்
என்று

இப்பொழுது
சொல்கிறேன் கேளுங்கள்

ஆடை சற்று விலகியவுடன்
எட்டி எட்டி பார்ப்பீர்களே
மறைவான பகுதி தெரிகிறதா என்று
முழுதாக உரித்து சுவையாக சுவைத்து
சூட்டைத் தணிப்பீர்களே
அப்போதெல்லாம் காம விருந்தாக
தெரிந்தவளை இப்போது பாருங்கள்

நன்றாக பாருங்கள்
விழிகளை விழித்துப் பாருங்கள்

நீங்கள் அடைய துடிக்கும்
மறைவான பகுதிக்கு மேல்
சதையை வெட்டி தைத்துள்ளார்களே
இதை நன்றாக பாருங்கள்

என்னை வெட்டியேனும்
என் குழந்தையை பத்திரமாக
வெளியில் எடுங்கள் என்று
ஒரு பெண் சொல்கிறாளே
உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா?

இச்சை கொண்டு
நோக்கும் ஆண்கள்
இதை நன்றாக பார்த்து
பிறிதொரு பெண்ணை நோக்குங்கள்
கண்டிப்பாக காமம் கலக்காது
உங்கள் கண்களில்
தாய்மையின் மகத்துவம்
மட்டுமே தென்படும்
என்பேன் நான்!!

கூடலின் வலி
மகப்பேறின் வலி
வயிற்றை வெட்டித்
தைத்ததன் வலி
இவையெல்லாம்
மறந்து போகும்
இந்த மழலையின் முகம் பார்க்கையில்

ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு அதிசயம் !!!!!!!!

கண்கண்ட தெய்வம். 🙏🙏🙏

தயவுசெய்து கீழிருக்கும் புகைப்படத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டாம்...🙏🙏🙏

 #இதோ_வந்துவிட்டது_தனித்தமிழ்நாடு கோரிக்கை...உங்கள் வாக்கு?
12/07/2021

#இதோ_வந்துவிட்டது_தனித்தமிழ்நாடு கோரிக்கை...
உங்கள் வாக்கு?

Let's follow the poll GrabPoll ID10762 தனித்தமிழ்நாடு கோரிக்கை சரியா தவறா ? - சரி or தவறு, Which one is your choice?

11/07/2021

#தமிழ்நாடு எங்கள் #அடையாளம் 💪
is our identity

08/07/2021

கோவை.. கரும்பு கடை பகுதியில்...
போதை ஊசி?

08/07/2021
02/07/2021

காவல்துறை நடவடிக்கை எடுக்குமா.....
கோவை குனியமுத்தூர் பகுதிகளில் வெட்டவெளியாக தைரியமாக திருடிச் செல்லும் நபர்கள்..... கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தை திருட முயன்ற ஒரு நபரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கையும் களவுமாக பிடித்தார்கள்.... அப்பொழுது அவனிடம் விசாரிக்கும் பொழுது எடுக்கப்பட்ட காணொளி உங்களுக்காக.....

30/06/2021

’கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட கோவிஷீல்டு மணமகன் தேவை’
என்ற விளம்பரம் கடந்த வாரம் வைரல்.

இந்த நியூஸ் ஒரு வாரமாக என் மண்டைக்குள் ஓடி, நியூ நார்மல் வாழ்க்கை இப்படி இருக்குமோ எனக் கற்பனைக்குதிரை தறிகெட்டு ஓடியது.
இதோ இப்படித்தான்...

காதலிகளுக்குப் பிரிவதற்கு இன்னொரு காரணம் கிடைத்திருக்கும்.
“கோபி... எங்க குடும்பமே ஸ்புட்னிக்-வி. கோவாக்சினுக்கு வேணும்னா செட் ஆகும். ஆனா, நீங்க கோவி ஷீல்டு... நிச்சயமா எங்க அப்பா நம்ம காதலுக்கு ஒத்துக்க மாட்டாரு. என்னை மறந்துடுங்க ப்ளீஸ்!” என கண்ணீரோடு குட்பை சொல்வாள். கோவிஷீல்டு கோபி கேவிக் கேவி அழுவான்.

கல்யாண புரோக்கர்கள் வித்தியாசமாக உருமாறியிருப்பார்கள். கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி என தனித்தனி ஆல்பங்கள் கைவசம் வைத்திருப்பார்கள்.

“பையன் வீடு இந்தியால கொரோனா இரண்டாவது அலை உச்சத்துல இருந்தப்போ ஸ்புட்னிக் வி-க்காக வெயிட் பண்ணிப் போட்டுக்கிட்ட வசதியான குடும்பம். அதனால அவங்க எதிர்பார்க்குறதை செஞ்சிடுங்கோ!” என்று டிமாண்ட் பண்ணுவார்கள்.

“ஆஹா... மாப்பிள்ளை கோவாக்சின் கோத்ரம்... பொண்ணு ஸ்புட்னிக் நட்சத்திரம்... கோடியில ஒரு ஜோடிக்கு அமையிற அமோகமான ஜாதகப் பொருத்தம்..!” என்பார் பிரபல ஜோதிடர்.

“எங்க பெண் முதல் அலையில கொரோனா அறிகுறி இருந்தப்போ வீட்லயே பத்து நாள் குவாரன்டீன்ல நல்லா சமைக்கக் கத்துக்கிட்டா. பத்துக்குப் பத்துல சிம்பிளான ரூம்ல ஓ.டி.டி-ல மட்டும் படம் பார்த்து சிக்கனமா வாழப் பழகிட்டா. நம்பிக் கொடுத்தீங்கன்னா உங்க பையனைப் பார்த்துக்குவா!” என்று பெண் வீட்டாரே மாப்பிள்ளை வீட்டாரிடம் நிச்சயதார்த்தத்தின் போது சொல்வார்கள்.

வீட்டின் ஷோகேஸ்களில் ஷீல்டுக்குப் பக்கத்தில் கோவிஷீல்டு போடும்போது எடுத்த குடும்ப உறுப்பினர்களின் தடுப்பூசிப் புகைப்படங்களை ஃபிரேம் பண்ணி அடுக்கி வைத்திருப்பார்கள். “நாங்க கோவிஷீல்டு பரம்பரை!” என தூக்குத்துரை கணக்காக மீசையை நீவிவிட்டுக் கொள்வார்கள் பெருசுகள்.

சீர்வரிசையில் அரை அண்டா ஹேண்ட் சானிட்டைசர், பீரோவில் ஐந்நூறு பண்டல் சர்ஜிக்கல் மாஸ்க் வைத்து கெத்து காட்டுவார்கள். தாய் மாமன் சீராக தாம்பூலப் பையில் N95 மாஸ்க் போட்டுக் கொடுப்பார். திருமண நிகழ்வுக்கு யார் வந்தா, யார் போனா என்று கண்டுபிடிக்கவே முடியாது. கல்யாணத்துக்கு வராத மாமணி மாமா மணிகூட, “என்ன ஒரு தடபுடல் செஞ்சீட்டீங்க போங்க. மாஸ்க் போட்டிருந்ததால நீங்க என்னை கவனிக்கல. கல்யாணம்னா இப்படித்தான் நடத்தணும்!” என போனில் கப்சா விடுவார்.

கல்யாண ஆல்பத்தைப் புரட்டினால் எல்லோரும் மாஸ்க் மயமாக இருப்பார்கள். “மாப்பிள்ளை ஏன் கல்யாண ஆல்பத்துல கோச்சுட்டு ஒதுங்கி நிக்கிறாரு?” என்று புரியாமல் கேட்டால், “கோவிக்கலைங்க. சமூக இடைவெளிய அத்தனை துல்லியமா ஃபாலோ பண்ணியிருக்காரு..!” என்று விளக்கம் சொல்ல வேண்டி யிருக்கும்.

வளைகாப்பு வைபோகத்தில் கூட கன்னத்தில் தடவாமல் சந்தனத்துக்குப் பதில் சானிட்டைசரை எடுத்துக் கைகளில் தடவி வாழ்த்திவிட்டு வருவதை வாடிக்கை ஆக்கியிருப்பார்கள்.

இரண்டுபேர் எதிர்காலத்தில் சந்திக்கும்போது:

“நான் முதல் அலைல கொரோனா வந்த பேட்ச்... நீங்க?”

“ஓ... கபசுரக்குடிநீரா? நான்லாம் இரண்டாம் அலை சர்வைவர்..!
வேக்சின் வேணுகோபால்னு பேரை மாத்திக்கிட்டேன்!” எனப் பேசிக் கொள்வார்கள்.

ப்ப்பா... பயங்கரம்! 😢😢

நான் பெண் 🔥மூச்சடக்கிமுத்தமிட்டுமார்பை கசக்கி எச்சில் பட்டுஊடல் பிடியில்தொப்புள் தொட்டுஉசுப்பும் கடியில்முனகல் இட்டுயோனி...
30/06/2021

நான் பெண் 🔥

மூச்சடக்கி
முத்தமிட்டு

மார்பை கசக்கி
எச்சில் பட்டு

ஊடல் பிடியில்
தொப்புள் தொட்டு

உசுப்பும் கடியில்
முனகல் இட்டு

யோனி நுழைத்து
இன்பம் கொண்டு

கசியும் திரவம்
பிசிறியடித்து

நீட்டி நிமிர்ந்து
அயர்ந்து உறங்கினால்

முடிந்து போகும்
ஆணின் மோகம் ஆனால்..

உன் உணர்வு கடியில்
உதடு வலித்து

முரட்டு பிடியில்
மார்பு வலித்து

உருட்டும் அசைவில்
வயிறு வலித்து

சொருகும் அதிர்வில்
கருப்பை வலித்து

சுமக்கும் கனத்தில்
உடல் வலித்து

உணரும் வலியை
வெளியே சொல்லாமல்

வேண்டும் நேரமெல்லாம்
உடல்பசிக்கு விருந்தாகி

புணரும் சலுகையாக
பிள்ளை வலியும் பெறுக்கிறாளே

அவளுக்காக என்ன
செய்ய இயலும் உன்னால்..

வேறொன்றும் செய்யாதே
பெண்ணும் உயிரென்று மதி..

உயிர் கொண்டு நேசி......
உள்ளார்ந்து யாசி...

பெண்மையை கையாளும்
மென்மை உனக்கே புரிந்துவிடும்

பெண் என்பவள் பூவானவள்
அதை கசக்கி எறிந்து விடாதே

அதை நுகர்ந்துவிட்டு
அரவணைத்துக்கொள்

தேவதையாக
இருப்பாள் அவள்
உன் மனதில்!!!

- post

Construction history of pillur dam.. Small description    Subscribe and share for more videoshttps://youtu.be/jOLn2XPqK3...
07/06/2021

Construction history of pillur dam.. Small description

Subscribe and share for more videos
https://youtu.be/jOLn2XPqK3o

mini construction history of pillur dam, coimbatore district.. it is located in Western Ghats dam

🤣🤣🤣🤣🤣
09/05/2021

🤣🤣🤣🤣🤣

கருப்பன் குறும்புக்காரன்😂😂😂😂
09/05/2021

கருப்பன் குறும்புக்காரன்😂😂😂😂

சமர்ப்பணம்.அன்று சென்னை புறநகர் பகுதி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திவாகரன் தனது செல்போனில் பேசி கொண்டு இருந்தார்.பேசி...
07/05/2021

சமர்ப்பணம்.

அன்று சென்னை புறநகர் பகுதி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திவாகரன் தனது செல்போனில் பேசி கொண்டு இருந்தார்.பேசி முடித்ததும் சப்-இன்ஸ்பெக்டர் குமாரை அழைத்து "குமார் நான் கிளம்புறேன் .பண்டிகை காலம் நைட் ரவுண்ட்ஸ் போங்க.எதாவது பிரச்சினைனா எனக்கு கூப்பிடுங்க"என்றதும் குமார் தலையசைத்தார்.ஸ்டேஷனில் அனைவரும் அவரை வழியனுப்பும் போது ஒரு தம்பதியினர் பரபரப்பாக உள்ளே வந்தனர்.

நேராக திவாகரிடம் வந்து "சார் என் குழந்தைய காணோம் சார்."என்று கதறி அழ தொடங்கினர் .திவாகர் அவர்களை அமர வைத்து பொறுமையாக விசாரிக்க தொடங்கினார்.

அப்போது குழந்தையின் தந்தை"சார் என் குழந்தை பேரு அபர்ணா.இரண்டு வயசு தான் ஆகுது.அவளுக்கு துணி எடுக்க தான் கடைக்கு வந்தோம் .கடை தெரு முழுக்க கூட்டம் .அப்போ ஒரு வயசானவர் மயங்கி விழுந்தார் நானும் என் மனைவியும் அவருக்கு உதவி செஞ்சுட்டு இருந்தோம் .அபர்ணா பக்கத்தில் தான் நின்னுட்டு இருந்தா.அவர ஆட்டோல ஏத்தி விட்டுட்டு திரும்புனா அபர்ணாவ காணோம் .கடைத்தெரு பூரா தேடிட்டோம் கிடைக்கல சார்"என்று அவரும் அழத்தொடங்கினார்.

அப்போது குமார் "சார் நீங்க கிளம்புங்க.நாங்க தேடி கண்டு புடிக்கிறோம்.நாங்க பாத்துக்குறோம்"என்றதும் பெற்றவர்கள் திவாகர் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தனர் .அவர்களிடம் வழக்கு பதிவு செய்ய சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றவர்.சிறிது நேரத்திற்கு பிறகு குமாரை அழைத்து "குமார் கிளம்புங்க இந்த கேஸ வேகமா புடிக்கணும்.ஒரு வேளை குழந்தை கடத்தபட்டு இருந்தா நம்ம தாமதம் ஆபத்துல முடிஞ்சிரும்.எனக்கு இது மாதிரி நிறைய கேஸ் பாத்திருக்கேன் எனக்கு அனுபவம் இருக்கு. நானும் வர்றேன்"என்று வேகமாய் கிளம்பி கடைத்தெருவில் விசாரணையை துவக்கினார்.

மொத்த காவல் அதிகாரிகளும் திசைக்கு ஒருவராக மிக துரித நிலையில் விசாரணை நடத்தி கொண்டு இருந்தனர் .சிறிது நேரத்தில் திவாகர் ஒரு தகவலை சேகரித்தார் போன மாதமும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்ததை கண்டு பிடித்தார்.

இரவு 12 மணியை தாண்டியது குழந்தையின் பெற்றோர் பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து கொண்டு இருந்தனர் .

அப்போது திவாகருக்கு போன் வர அவர் தனியாக விலகி சென்று பேசி கொண்டு இருந்தார்.பேசிய பின்பு தன் நிலை மறந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து சிந்தித்து கொண்டு இருந்தார்.

அவரை பார்த்த குழந்தையின் பெற்றோர் மிகவும் பயத்துடன் "சார் என் குழந்தைக்கு என்னாச்சு?"என்று கதறினர்.உடனே திவாகர்"பயபடாதீங்க.இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தை கிடைச்சுரும்"என்று தன்னை வேகப்படுத்தி கொண்டு கிளம்பினார்.

அவரது விசாரணையில் இது கடத்தல் என்பதும் முதியவர் மயங்கியது நாடகம் என்பதும் தெரிய வர காவல் துறை வேகமானது திவாகரன் தலைமையில்.குற்றவாளிகள் சென்னையை தாண்டியிருக்க முடியாது இது பண்டிகை சமயம் அதனால் போலிஸ் பாதுகாப்பு பலமாக இருக்கும் .அதனால் நமது வேகம் இன்னும் அதிகரித்தால் அவர்களை பிடித்துவிடலாம் என்பதால் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அபர்ணாவின் அம்மா கடைத்தெருவில் மயங்கியபடி நடித்த முதியவரை பார்த்து திவாகரிடம் காட்ட முதியவரை காவல் துறையினர் பின் தொடர்ந்தனர்.

சென்னைக்கு அருகில் ஒரு பழைய மண்டபத்திற்குள் இருப்பதை கண்டு பிடித்தனர்.நள்ளிரவு 3 மணிக்கு மேல் திவாகரன் தனது அணியுடன் மண்டபத்தை சுற்றி வளைத்து அனைவரையும் கைது செய்தார்.

அவர்களின் பிடியில் அபர்ணா உட்பட எட்டு குழந்தைகள் கடத்தப்பட்டு இருந்தனர் .அபர்ணாவை அவர்களின் பெற்றோர் வசம் ஒப்படைத்தார். அடுத்த நிமிடம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அவர் சென்றதும் அபர்ணாவின் பெற்றோர் குமாரிடம் "இவருக்கு என்ன சார் பிரச்சினை?"என்றதும் குமார் அவர்களிடம் "சாருக்கு உங்க அபர்ணா மாதிரி கயல்ன்னு ஒரு பொண்ணு இருக்கா.சரியான அப்பா செல்லம்.ரோம்ப அழகான குழந்தை .ஆனா அந்த சந்தோசம் ரோம்ப நாள் நீடிக்கல.

கயலுக்கு மூளை புற்றுநோய் அதுவும் கடைசி ஸ்டேஜ்.நீங்க ஸ்டேஷன் வர்றதுக்கு முன்னாடி தான் கயலுக்கு உடல்நிலை மோசமா இருக்குனு அவரு மனைவி போன் பண்ணியிருந் தாங்க.

அவரு தன் குழந்தைய பத்தி நினைக்காம உங்க குழந்தைய கண்டு புடிக்க வந்தாரு."பேசி முடிப்பதற்குள் குமாரின் கண்கள்கலங்கின.

திவாகர் ஆஸ்பத்திரி செல்வதற்கும் கயலின் உடல் வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது .மகளின் உடல் அருகே சிலையாய் நின்றார் .

அப்போது திவாகரின் மனைவி காவ்யா திவாகரை கட்டி அணைத்து"ஏங்க வரல?அவ கடைசி மூச்சு வரை அப்பா அப்பா தான்ங்க சொன்னா.நம்ம செல்லத்த கடைசி நிமிஷம் வரை தவிக்க விட்டுட்டீங்களே?"என்று அழுது அவரின் காக்கி சட்டையை தனது கண்ணீரால் ஈரம் ஆக்கினார்.

திவாகர் தனது மனைவியின் முகம் உயர்த்தி"என் கயல வழியனுப்பி வைக்குறத விட ஒரு குழந்தைய உயிரோட மீட்டு கொடுக்க போயிட்டேன்.என் பொண்ணுக்கு நான் ஒரு நல்ல அப்பாவான்னு தெரியலம்மா ஆனா நான் ஒரு நல்ல போலிஸ் .என் பொண்ணும் அத தான் விரும்புவா எனக்கு தெரியும்.

இந்த காக்கிக்கு இன்னோரு பெருமை இருக்குடா அது தியாகம் "என்றதும் காவ்யா தன் கணவனின் காக்கி உடையை மெதுவாக தடவி பார்த்தாள்.

இந்த உடைக்கு பின்னால் உடைந்துபோன இதயம் இருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும் . [நம் பார்வையில் நமக்கு காட்டும் காவல் துறைக்கு இன்னோர் முகம் உண்டு அதில் தியாகத்தின் ஈரம் அதிகம்]

பதிவு பிடித்திருந்தால் பகிர்ந்து நம் தோழர்களை பெருமைபடுத்துங்கள்.

 #26ஆம்_புகார் கோவை கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள p&t காலனி அருகில் அதாவது கவுண்டம்பாளையம் மற்றும் இடையர்பாளையத்தை  இணை...
27/04/2021

#26ஆம்_புகார்
கோவை கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள p&t காலனி அருகில் அதாவது கவுண்டம்பாளையம் மற்றும் இடையர்பாளையத்தை இணைக்கும் சாலையில் சுமார் நான்கு நாட்களுக்கு மேலாக இந்த வாகனம் நின்று கொண்டிருக்கிறது.. சாலையின் ஓரத்தில் கேபிள் பதிக்கும் இந்த வாகனமானது சாலையின் வளைவில் சுமார் நான்கு நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருக்கிறது... கேகே நகர், மீனாட்சி நகர் மற்றும் பிஎன்டி காலனியை இணைக்கும் முக்கிய சாலையாக கவுண்டம்பாளையம் மற்றும் இடையர்பாளையத்தை இணைக்கும் பிரதான சாலையாக இது அமைந்து வருகிறது... இந்த வாகனம் வளைவில் நின்று கொண்டு இருப்பதினால் இருளில் பயணம் செய்யும் வாகனங்கள் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகி மற்றும் சிறிய விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது கோவை மாநகராட்சி உடனடியாக இதற்கு தீர்வை கொண்டுவருமாறு அப்பகுதி மக்களின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது...

09/02/2021

அட்டகாசமான கண்டுபிடிப்பு.. நம்ம ஊரு விஞ்ஞானி..
இவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..

இந்த வீட்டின் உரிமையாளர் பத்தி உங்கள் கருத்து...???
26/01/2021

இந்த வீட்டின் உரிமையாளர் பத்தி உங்கள் கருத்து...???

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் நடைபெற்ற அறப்போராட்டத்தில் க...
26/01/2021

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் நடைபெற்ற அறப்போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் போராட்டத்தின் இறுதி வரை களத்தில் இருந்து போராடிய இளைஞர்களால் ஒவ்வொரு ஆண்டும் வெற்றி விழா கொண்டாடப்படுகிறது.

நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு வெற்றி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
#ஜல்லிக்கட்டு

😂😂😂😂😂
06/01/2021

😂😂😂😂😂

06/01/2021

கோவையில் கொட்டித்தீற்கும் கன மழை

04/01/2021

இந்ந வீர சிறுமிக்கு எத்தனை share..

கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி..
24/12/2020

கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி..

உயிர் பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம்; 4 சக்கர வாகனங்களில் பம்பர்களை அகற்றாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்: தமிழகம் முழுவது...
24/12/2020

உயிர் பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம்; 4 சக்கர வாகனங்களில் பம்பர்களை அகற்றாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்: தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை சோதனை தீவிரம்

09/10/2020

ஊர்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்...

கோவை மாவட்ட போலீசாருக்கு உதவியாக, தங்களுடைய ஓய்வு நேரத்தில் பணி செய்ய ஆர்வமுள்ளவர்கள், ஊர்காவல்படையில் சேரலாம்.

விண்ணப்பங்களை வரும், 20ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சம்மந்தப்பட்ட காவல்
நிலையங்கள், அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்க்க வேண்டும்.

18 முதல், 45 வயது நிரம்பிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ் நகல், மதிப்பெண் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் இணைக்க வேண்டும்.

நன்னடத்தை !?, உடற்தகுதி இருக்க வேண்டும்.

Address

Coimbatore

Telephone

+917502771790

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோவை இளைஞர்கள் குழு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கோவை இளைஞர்கள் குழு:

Videos

Share

Category