Natureshadow.com

Natureshadow.com We try to bring people under the shade of Mother Nature
(9)

மகளின் புதிய நண்பர்களில் ஒருவர்..
29/06/2024

மகளின் புதிய நண்பர்களில் ஒருவர்..

மலை மக்கள் உத்தரவு வந்தது இந்த வருட காட்டு தேன் வேட்டைக்கு.. இயற்கையின் அழைப்பு..
29/06/2024

மலை மக்கள் உத்தரவு வந்தது இந்த வருட காட்டு தேன் வேட்டைக்கு..

இயற்கையின் அழைப்பு..

27/06/2024

டென்னிஸ் வட்டார நண்பர் லடாக் சென்ற போது திடீரென சின்ன நிலச்சரிவில் கெதி கலங்கிய போது

❤️
26/06/2024

❤️

மிக்க நன்றி நன்மதிப்பு கொண்ட சகோதர சகோதரிகளே.. Big shout out to my newest top fans! 💎 Big shout out to my newest top fan...
26/06/2024

மிக்க நன்றி நன்மதிப்பு கொண்ட சகோதர சகோதரிகளே..

Big shout out to my newest top fans! 💎 Big shout out to my newest top fans! 💎 Arunkumar Pandian, Jaseer Asam, சதீஸ் பாண்டியன், Al Azeem Mohamed M, Raja Sekara Manikandan, Vetri Kondan, Venkatesan, Subramanian Ramesh Sivathanu, Saravanan Ramalingam, பார்க்கவன் பார்க், Shãlìq Áhméd, Sham Sathu, Juber Zafy, Tak Annadurai AK Annadurai, Gnana Sekar, Sasikumar Palanisamy, Krishna, Jafarsadiq, Kopperuncholan Gopalsamy, Sultan Sultan, Imran Samsudeen, Chithravel Vell, Lak Dls

Drop a comment to welcome them to our community,

25/06/2024

இவ்வளவு வயசு ல யாரும் இருக்க முடியாது ன்னு உதவி தொகையை நிறுத்திட்டாங்க !

Whats App : https://wa.me/message/F7YMDHFEJNKZL1

Whats App : 9361462379

Order Pure Raw Forest Honey : https://www.natureshadow.com/collections/honey-and-hive

Garlic In Honey : https://www.natureshadow.com/collections/soaked-in-wild-forest-honey

Bamboo Rice And Bamboo Shoots : https://www.natureshadow.com/collections/bamboo-products

Sandalwood With ISI Seal :

https://www.natureshadow.com/collections/5-sandalwood-with-isi-seal-sandalwood-powder-sandal-wood-oil

Camel Milk / Pure Ghee And More From Cattles : https://www.natureshadow.com/collections/grocery

Beat The Heat With Floral Waters :

https://www.natureshadow.com/collections/floral-waters

Red Reishi Mushroom For Good Sleep :

https://www.natureshadow.com/collections/wild-mushrooms

Sexual Well Being :

https://www.natureshadow.com/collections/sexual-well-being

Almond Oil / Walnut Oil / H**p Oil And More :

https://www.natureshadow.com/collections/edible-oils

Natural Bath Powders :

https://www.natureshadow.com/collections/natural-face-packs-and-body-baths

Don't Miss These Palm Products :

https://www.natureshadow.com/collections/palmyra-palm-tree-products

Cloth Bags :

https://www.natureshadow.com/collections/eco-friendly-products

Peacock Feather Oil For Bones And Joints :

https://www.natureshadow.com/collections/7-strengthen-the-bones

காலைல முழிச்சு பால் பாக்கிட் எடுக்க வெளிய வரிங்க..உங்க கதவுக்கு முன்னாடி இப்படி ஒரு உருவம் தொங்கிட்டு இருக்கு..என்ன பண்ண...
25/06/2024

காலைல முழிச்சு பால் பாக்கிட் எடுக்க வெளிய வரிங்க..

உங்க கதவுக்கு முன்னாடி இப்படி ஒரு உருவம் தொங்கிட்டு இருக்கு..

என்ன பண்ணுவீங்க? 😄

இது பிலிப்பைன்ஸ் நாட்டில் சில பகுதிகளில் சாத்தியம்..

உலகில் மிக பெரிய வவ்வால் வகையை சார்ந்த The Giant Golden Headed Fox என்று பெயர்..

Fox - நரி.. பெயரில் மட்டும் தான்..

முகம் நரியை போல இருப்பதால்..

ரெக்கைகள் 5.5 அடி விரியும்..

அதாவது..

இந்த ரெக்கைகுள் உங்களை மறைத்து வைக்க முடியும்..

ஒருத்தனை பார்த்தாலே இப்படி என்றால், சில நேரம் கூட்டமாக காட்சி தருவானுங்க..

வாவ்வாலை கண்டால் பயம் என்றால் அல்லு விட்டு விடும்..

இந்த வவ்வாலில் மூன்று கிளை இனம் உண்டு..

இரண்டு தான் இருக்கு..

ஒன்று அழிந்து விட்டது..

இதனை வேட்டை ஆடி உண்ணும் விலங்குகள் மூன்று..

Philipine Eagle - பாக்க செம்ம மாஸ் - comment இல் படம்

மலை பாம்பு

மூன்றாவதாக மனிதன்..

ஆம் மனிதர்கள் இந்த வவ்வாலை வேட்டை ஆடி உண்பார்கள்..

இவன் சைவம்.. வெறும் அத்தி பழம் தான் சாப்பிடுவான்.. மற்றும் சில இலை தழைகள்..

1900 களில் லட்ச கணக்கில் இருந்தன..

படங்கள் comment இல்..

- இயற்கையின் நிழல்

Natureshadow.com

டென்னிஸ் வட்டார நண்பர் ladakh சென்று திரும்பி உள்ளார்..படங்கள் பகிர்ந்தார்.. இந்த படத்தின் பிரமாண்டத்தை உணர..இதில் பல 20...
24/06/2024

டென்னிஸ் வட்டார நண்பர் ladakh சென்று திரும்பி உள்ளார்..

படங்கள் பகிர்ந்தார்..

இந்த படத்தின் பிரமாண்டத்தை உணர..

இதில் பல 20 அடி மின் கம்பங்கள் உள்ளதை zoom செய்து பாருங்கள்..

அதை எவ்வளவு சிறியதாக இந்த படத்தில் உணர்கிறீர்களோ..

அவ்வளவு பிரம்மாண்டம் இந்த மலைகளில் தெரியும்..

மேலும் படங்கள் comment இல்..

குறிப்பு : அவருக்கு பெண் பார்க்கிறோம்.. proposal இருந்தா சொல்லுங்க 😄

- இயற்கையின் நிழல்

Natureshadow.com

24/06/2024
ஒருவர் மரணத்தை கேலி செய்ய கூடாது..ஆதலால் இங்கே கேலி கிண்டல் இல்லை.. விழிப்புணர்வு தான்..
22/06/2024

ஒருவர் மரணத்தை கேலி செய்ய கூடாது..

ஆதலால் இங்கே கேலி கிண்டல் இல்லை..

விழிப்புணர்வு தான்..

AI படம் எல்லாம் கிடையாது..நூறு சதவிகிதம் ஒரிஜினல் படம்..இந்த மின்னல் Venezuela நாட்டில் படம் பிடிக்க பட்டது..Catatumbo L...
21/06/2024

AI படம் எல்லாம் கிடையாது..

நூறு சதவிகிதம் ஒரிஜினல் படம்..

இந்த மின்னல் Venezuela நாட்டில் படம் பிடிக்க பட்டது..

Catatumbo Lightening இந்த நிகழ்வின் பெயர்..

Catatumbo ஆறு Maracaibo ஏரியில் கலக்கும் இடத்தில் இது அடிக்கடி நடக்கும்..

மின்னலை பார்க்காத கண்ணு போய்டும் என்று தான் சொல்லி வளர்த்தார்கள்.. நானும் பார்த்ததில்லை பெரிதாக..

ஆனால் 7 ஆம் வகுப்பு குன்னூரில் ஒரு பள்ளியில் படித்தேன்..

ஹாஸ்டல்..

மாலை 6:30 மணி முதல் 9 மணி வரை prep time..

படிக்க வகுப்பறைக்கு சென்று லோலாயம் செய்து கொண்டு இருந்த பொற்காலம்..

இந்த நிலையில் பள்ளி வகுப்பறை கட்டிடம் மிக உயரமாக இருக்கும்..

பள்ளியே ஒரு பெரும் குன்றின் மீது அமைந்தவாரு தான் இருக்கும்..

பள்ளி படம் பகிர்கிறேன் பாருங்கள்..

இதில் 3 வது மாடியில் கடைசி ஓரமான வகுப்பறை தான் எனது ஏழாம் வகுப்பறை..

7 மணிக்கு பனி பெய்யும்.. பள்ளியில் prep time ..

ஆதலால் அமைதி நிலவும்..

யோசித்தாலும் இப்போதே போய் உட்கார தோன்றுகிறது..

Rounds இல் இருக்கும் prep master அனைத்து வகுப்புகளுக்கும் நடந்து கொண்டே இருப்பார்..

அவர் நகர்ந்ததும் மௌனமாக பேசி கொள்வோம்..

சில நாட்கள் மலை பெய்யும்..

அப்போது தான் நண்பன் கமல் சொன்னான்..

மின்னலை பாக்க பிடிக்குமா.. அங்க பாரு என்ன அழகு..

அந்த உச்சியில் வகுப்பறையில் பாதுகாப்பாக உட்கார்ந்து தொலைவில் மின்னல் கோடுகள் செல்வதை பார்த்தேன்..

வழக்கமே ஆகி விட்டது..

சனிக்கிழமை prep time இல்லை..

பயத்துடன் ஒரு சனி கிழமை நானும் சில நண்பர்களும் மின்னலை பார்க்க தனியே இருளாக இருந்த மூன்றாம் மாடிக்கு சென்று பார்த்தோம்..

அதில் எல்லா பள்ளிகளிலும் இருக்கும் பேய் கதைகள்.. எங்கள் பள்ளியிலும் இருந்தது..

பிரிட்டிஷ் காலத்தில் இது சுடுகாடு என்ற கதை தான்..

ஆனாலும் மின்னலை ரசிக்க அந்த பயம் விறுவிறுப்புடன் சென்றோம்..

மின்னலை சம நேர் உயரத்தில் பார்ப்போம்..

அதிலிருந்து பாதுகாப்பாக தொலைவில் தோன்றும் மின்னலை பார்க்க பிடிக்கும்..

மகளுக்கு இப்படி ஒரு நிகழ்வை காட்ட ஆசை..

எப்போது மழை பெய்தாலும் அச்சா இப்படி காமிச்சா என்று என்னை நினைக்கும் என் பாப்பா..

இது போன்ற மின்னல் ரசிகர்களுக்கு ஜாக்பாட் தான் Catatumbo Lightening.

இது ஒரு முறை நிகழும் நிகழ்வல்ல..

வருடத்தில் 140 முதல் 160 இரவுகள் இப்படி தான்..

ஒவ்வொரு இரவும் 9 மணி நேரம் இந்த மின்னல் ஷோ நிகழும்..

ஒரு சதுர கிலோமீட்டர் இடத்தில், 250 மின்னல்கள் வெட்டும்..

ஒவ்வொரு வருடமும் மின்னல் வித்யாசம் காட்டும்..

இந்த மின்னல்கள் தூய்மையான ozone காற்றை தயாரித்து தருகிறதாம்..

Maracaibo நகரத்தில் ஏகப்பட்ட விடுதிகள் உண்டு ..

சுற்றுலா பயணிகள் வந்து இதனை கண்டு செல்வதுண்டு ..

நகரமும் அழகாக தான் இருக்கும் ..

பர்கர் போன்ற உணவை விரும்பும் மக்களுக்கு உணவு வேட்டை காத்து இருக்கிறது..

விண்வெளியில் இருந்து செயற்கை கோல் மூலமும் இந்த நிகழ்வை படம் எடுத்து உள்ளனர்.. படம் comment இல்..

Maracaibo வில் மிக பெரிய பாலமும் உண்டு

பிரமாண்டமும் காணலாம்

விசா எடுத்து தருகிறேன்

ஸ்பான்ஸர் செய்து கூட்டி செல்லுங்கள் என்னையும் மகளையும்

உங்களுக்கு ஒரு ப்ரோமோ செய்து விடுகிறோம் .. 😁

போலாமா ?

இயற்கையின் நிழல்

Natureshadow.com

21/06/2024

18+ Content தான். ஆனாலும் பாருங்க!! ஓரின சேர்க்கை இயற்கையானதா?

ச்ச்சா.. இந்த தீவு பார்க்க எவ்வளவு அழகாக இருக்கு பாருங்க..போகலாம் ன்னு ஆசையா இருக்கு ல?இருக்கும் இருக்கும்..Comment ல பட...
20/06/2024

ச்ச்சா.. இந்த தீவு பார்க்க எவ்வளவு அழகாக இருக்கு பாருங்க..

போகலாம் ன்னு ஆசையா இருக்கு ல?

இருக்கும் இருக்கும்..

Comment ல படங்கள் போட்டு இருக்கேன்.. போய் பாத்துட்டு வந்து தொடர்ந்து படிங்க..

இது Snake Island..

Brazil நாட்டை சார்ந்தது..

உள்ளே செல்ல அனுமதி கிடையாது..

இந்த தீவின் அளவு 106 Acre தான்..

அதாவது.. 4711064 சதுர அடி..

இதில் 4000 Golden Lancehead பாம்புகள் உள்ளன..

உடனே ஒரு கேள்வி வரும்.. விஷமா?

ஆமாங்க.. ஆமாம்..

அந்த விஷம் நம் சதையை உருக்கி விடுமாம்.. அப்படி பட்ட விஷமாம்..

இந்த வகை பாம்பு உலகில் வேறு எங்குமே இல்லை..

10000 வருடங்களுக்கு முன்பு இந்த தீவு இன்றைய பிரேசில் நாட்டுடன் சேர்ந்து இருந்து உள்ளது..

பாதை இருந்து உள்ளது..

பின் கடல் மட்டம் ஏறி தீவாக மாறி உள்ளது..

தீவு தனிமை பெற்று விட்டது..

இந்த தீவில் இந்த பாம்புகளும் பிரிந்து வந்து விட்டது..

நிலத்துடன் சேர்ந்து இருந்த போது, அவற்றை வேட்டையாட வேறு விலங்குகள் இருந்தனவாம்..

இந்த தீவில் மட்டும் தான் இப்போது இந்த பாம்புகள் உள்ளனவாம்..

4711064 சதுர அடியில் 4000 இந்த வகை கொடிய விஷமுள்ள பாம்பு..

கிட்ட தட்ட 1000 அடி க்கு ஒரு பாம்பு Conform..

ஒரு Hall, Kitchen, 2 Bed Room அளவு இடத்துக்குள்ள ஒரு Golden Lancehead பாம்பு..

இங்கே பாம்புகளை ஆராயும் ஆராய்ச்சி செய்ய மட்டும் சிலருக்கு பிரேசில் அரசு அனுமதி தந்தது உண்டு..

அது போக வருடம் ஒரு முறை பிரேசில் கப்பல் படையை சார்ந்த சிலர் இங்கே சென்று வர வேண்டும்..

எதுக்கா?

அங்க ஒரு light house கட்டி வச்சு இருக்காங்க..

அதை service பண்ணனும்..

அதுக்காக கூடுதல் சம்பளம் எல்லாம் கெடையாது..

கடமை கண்ணியம் கட்டுப்பாடு தான்..

இந்த light house 1909 இல் கட்டி முடிக்க பட்டது..

1920 வரை அங்கே ஒரு குடும்பம் தங்கி light house ஐ பராமரித்து வந்துள்ளது..

அவர்கள் தங்கிய வீடு கூட அங்கே இடிந்த நிலையில் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்..

தானியங்கி முறை வந்து விட்டதால் இப்போது வருடம் ஒரு முறை போனால் போதுமாம்..

இறுதியாக தங்கி இருந்தவர் குடும்பம் பாம்பு கடித்து அங்கேயே மடிந்ததாக பேச்சுகளும் உண்டு..

இந்த பாம்பு வகை அழிந்து வருவதால், பாதுகாக்க பட வேண்டும் என்று பிரேசில் அரசாங்கம் முயற்சி செய்கிறது..

ஆனாலும் இங்கு சிலர் சென்று இந்த பாம்புகளை பிடித்து இதன் விஷத்தை black market இல் நிறைய விலைக்கு விற்பதாக கூற படுகிறது..

இத எதுக்கு வாங்கராங்க ன்னு தெரியவில்லை..

கடல் கொள்ளையர்கள் இங்கே புதையல் பதுக்கி வைத்து உள்ளதாக கூட கூற்று உண்டு .. இந்த பாம்புகளை அவர்கள் தான் புதையலை பாதுகாக்க விட்டார்கள் என்றும் கதைகள் உண்டு..

டேய் கடல் கொள்ளையா..

இப்ப நீ மட்டும் போய் எடுத்து வந்துட முடியுமா டா அந்த புதயல?

இந்த பாம்புகளுக்கு இரை ஆவது கடல் பறவைகள் சில.. பல்லிகள்.. மற்றும் தன் இனத்தையே சாப்பிடும்..

பாம்பு பிடிக்கும் ன்னா snake island போங்க..

சுத்தமா பிடிக்காது ன்னா நியூஸிலாந்து போங்க.. அந்த நாடு முழுக்க பாம்பு இல்லை..

இயற்கையின் நிழல்

Natureshadow.com

Big shout out to my newest top fans! 💎 Jaseer Asam, Al Azeem Mohamed M, Raja Sekara Manikandan, Vetri Kondan, Venkatesan...
19/06/2024

Big shout out to my newest top fans! 💎 Jaseer Asam, Al Azeem Mohamed M, Raja Sekara Manikandan, Vetri Kondan, Venkatesan, Subramanian Ramesh Sivathanu, Saravanan Ramalingam, பார்க்கவன் பார்க், Shãlìq Áhméd, Sham Sathu, Juber Zafy, Tak Annadurai AK Annadurai, Sasikumar Palanisamy, Jafarsadiq, Kopperuncholan Gopalsamy, Sultan Sultan, Imran Samsudeen, Js Js, Lak Dls

Drop a comment to welcome them to our community,

19/06/2024

:-D

நீங்கள் பார்க்கும் இடம் ஒரு இடுகாடு..அந்த மலையை சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா?இல்லை..கடலை தான் சொல்கிறேன்..கப்பல்களின...
19/06/2024

நீங்கள் பார்க்கும் இடம் ஒரு இடுகாடு..

அந்த மலையை சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா?

இல்லை..

கடலை தான் சொல்கிறேன்..

கப்பல்களின் மாலுமிகளின் இடுகாடு என்று அழைக்க படும் Cape Horn.

800 க்கும் மேல் கப்பல்கள் இங்கே மூழ்கி உள்ளன..

10000 அதிகமான மாலுமிகள் இறந்துள்ளனர்..

Chille நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ளது Cape Horn

Atlantic பெருங்கடலும் பிரேசில் கடல் தண்ணீர் மின்னோடம்மும் மோதி கொள்ளும் இடம் தான் Cape Horn.

கடலை பார்த்தாலே அதன் பிரம்மாண்டம் பயத்தை கொடுக்கும்..

இரண்டு கடல் மோதி கொண்டால்?

அது தான் Cape Horn

இப்போது கப்பல்கள் நவீனமாக தொழில் நுட்பம் மேம்படுத்த பட்டு தயார் செய்ய படுகின்றன..

1900 களில் அப்படி இல்லை..

1905 இல் Susanna என்ற கப்பலில் இந்த கடலை கடந்த போது .. கப்பல் திரும்ப வராது என்ற முடிவுக்கே கரையில் செய்தி பரவி விட்டது..

99 நாட்கள் கப்பல் எங்கே என்றே தெரியவில்லை..

8 மாலுமிகள் தான்.. உயிர் சேதம் இல்லை என்றாலும் எலும்புகள் உடைந்து கரை வந்து சேர்ந்தார்கள்..

1938 இல் ஒரு பனி பாறையில் மோதி இருக்கலாம் என்று நம்ப பட்ட ஒரு கப்பல், எங்கே சென்றது என்றே தெரியவில்லை..

சில கட்டைகளும் ஒரு கதவும் மட்டும் கரை தட்டியது..

60 மாலுமிகள் எங்கே என்றே தெரியவில்லை..

பனி பாறை.. எதிர்பாராத நேரத்தில் புயல் காற்று.. காற்று மற்றும் தண்ணீரின் ஓட்டம் திசை திடீர் மாற்றம்.. இப்படி பல காரணங்கள் இந்த கடல் இடுகாட்டை இன்று வரை மாலுமிகள் விரும்பாத கடலாக வைத்து இருக்கிறது..

பனி பாறையில் நாம் சென்று கப்பலை முட்ட வேண்டியது இல்லை..

பனி பாறை மிதந்து வந்து கப்பலில் மோதும்.. புயல் நேரத்தில்..

1914 இல் பனாமா கால்வாய் திறந்த பின்புதான் இந்த Cape Horn ஐ கடக்க வேண்டிய தேவை குறைந்தது..

நீங்கள் கடலுக்குள் சென்றுள்ளீர்களா?

சுமாவே அமைதியான கடலில் கூட ஒரு மணி நேரம் இருக்க முடியாது முதல் முறை..

ஒரு எறும்பை பிடித்து உப்பு ஜாடியில் போட்டதை போல ஆகிடுவோம்..

அலையில் தத்தலிப்போம்.. வாந்தி எடுப்போம்..

இப்படி இருக்க .. உலகின் மிக ஆபத்தான கடலில் இரவில் பயணம் செய்தால் எப்படி இருக்கும்?

கற்பனை தான் 🙂

மீனவர்களுடன் நண்பர் கடலுக்குள் சென்று வந்த அனுபவம் பகிர்ந்தார்..

அதன் இணைப்பும் Cape Horn இன் சில படங்களும் comment இல் பகிர்கிறேன்..

https://www.facebook.com/share/v/Zu4otVPhg6gpEdwn/?mibextid=w8EBqM

இயற்கையின் நிழல்

Natureshadow.com

இது வரை 11996 முறை எவரெஸ்ட் மலை உச்சிக்கு மனிதன் சென்று வந்து விட்டான் ..6664 நபர்கள் தான்.. இந்த 11996 முறை எவரெஸ்ட் உச...
18/06/2024

இது வரை 11996 முறை எவரெஸ்ட் மலை உச்சிக்கு மனிதன் சென்று வந்து விட்டான் ..

6664 நபர்கள் தான்.. இந்த 11996 முறை எவரெஸ்ட் உச்சி தொட்டு வந்தவர்கள்..

மீண்டும் மீண்டும் செல்ல கூடியவர்கள் உண்டு..

முதன் முதலில் Tenzing தான் 1953 இல் நோர்வே நாட்டை சேர்ந்தவரை அழைத்து சென்று இமய மலை உச்சியை தொட்டார்..

அதிலிருந்து இன்று வரை 6664 நபர்கள் இமய மலை உச்சியை தொட்டு விட்டார்கள்..

அதற்கு முன் எப்படி தெரியாது..

1852 இல் தான் எவரெஸ்ட் மலை உச்சியை பற்றி உலகிற்கே தெரிய வந்தது..

அது வரை கஞ்செஞ்சுங்க மலையை தான் மிக உயரமான மலையாக நினைத்து வந்தார்கள்..

1953 முதல் 2023 வரை .. இந்த உச்சத்தை தொட எடுத்த முயற்சியில்.. இது வரை நிகழ்ந்த மரணம் 327..

நீங்கள் இமய மலை ஏறி வர நினைத்தால், ஐம்பது லட்சம் ரூபாய் கட்ட வேண்டும்.. 2024 விலை படி..

20 பாதைகள் உண்டு எவரெஸ்ட் சிகரம் செல்ல..

3 தொடக்க பாதைகள்..

ஒன்று நேபாளத்தில் தொடங்கும்..

மீதம் இரண்டு திபெத்தில் தொடங்கும்..

அதில் kangshung பாதை திபெத்தில் இருந்து போவது.. இருப்பதிலேயே மிக கடினமான மற்றும் ஆபத்தான பாதை..

அதிகம் யாரும் சென்றதில்லை..

நீங்கள் இமயத்தை தொட்டு வருவது ஒரு ஜாலியான பயணம் என்று நினைத்தால், அது தான் இல்லை..

அங்கே 327 நபர்கள் இறந்ததாக சொன்னேன்..

அவர்கள் உடல்கள் இன்னும் அங்கே தான் இருக்கிறது..

குளிரின் காரணமாக இன்னும் மக்காமல் அப்படியே இருக்கிறது..

நீங்கள் அந்த பிணங்களை மிதித்து செல்ல வேண்டியது கூட வரலாம்..

போய் வருபவர்களின் மனித கழிவுகளும் அப்படியே இருக்கும்..

ஒதுங்கி மறைவாக சென்று வர முடியும் என்று நினைக்கிறீர்களா?

அரை அடி தவறினால் மரணம்..

அத்துணை நபர்கள் முன்னாடி அப்படியே உக்கார வேண்டியது தான்..

Death zone என்னும் பகுதியை அடைந்து விட்டால், நீங்கள் அதி விரைவு காட்ட வேண்டும்..

ஆக்சிஜன் இருக்காது.. மூச்சு முட்டி சாகலாம் ..

அதை விட ஆபத்து snow blindness .. அந்த பனி கட்டிகளில் சூரிய ஒளி பட்டு UV Rays உங்களை தாக்கி உங்கள் கண் பார்வை பரி போகலாம்..

மிக அதிக வெப்பத்தில் உங்கள் தேகம் பட்டால், கருகி அழிந்து விடுவது போல, frost bite என்று ஒன்று உண்டு..

அதிக குளிர் மைனஸ் டிகிரி இல் உங்கள் தேகத்தில் பட்டு அந்த பகுதி அழுகி விடும்.. படங்கள் கீழே..

இப்படி பல கொடூரமான ஆபத்துக்கள் உண்டு..

காட்டாற்று வெள்ளம் எப்படி திடீரென அதிகம் ஆகி உங்களை அடித்து செல்லுமோ, அப்படி தான் எவரெஸ்ட் பகுதியில் சீதோசன நிலை..

நொடி பொழுதுகளில், பனி கொட்டும்.. காற்று தூக்கி செல்லும் அளவு அடிக்கும்..

பயணத்தை தொடரலாமா திரும்பி விடலாமா என்ற எண்ணம் நொடிக்கு நொடி மாறும்..

8000 மீட்டர் உயரம் தாண்டி 8848 மீட்டர் வரை தான் இந்த death zone..

இதை கடந்து சென்று திரும்பி வர உங்களுக்கு அதிக பட்சம் 16 மணி நேரம் தான் பாதுகாப்பாக இருக்கும்..

சில நேரம் 8 நேரம் தான் ..

இந்த பகுதியில் ஆக்சிஜன் குறைபாடு உள்ளதால், நமது உடலில் செல்கள் சாக தொடங்கும்..

Stroke .. மாரடைப்பு .. ஏற்படலாம்..

முடிவு எடுக்க பாதை அறிய தடுமாற்றம் ஏற்படும்..

ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் தான் இந்த முயற்சி க்கு தகுந்த மாதன்கள்..

மற்ற மாதங்களில் அந்த சிகரம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது..

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மிக ஆபத்துக்கள் நிறைந்த மாதங்கள்..

ஏறி திரும்ப வரும்போது, எட்டு கிலோ குப்பைகளை நீங்கள் திரும்ப கொண்டு வர வேண்டும் என்பது நேபால் அரசின் ஆணை..

போனவன் எல்லாம் நிறைய குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு தான் வருகிறார்கள்..

ஃபிட்னஸ் இல்லாமல் உங்களுக்கு அனுமதி இல்லை..

ஜனவரி, மார்ச், ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் இது வரை யாரும் உச்சம் தொட்டது இல்லை..

இந்த மாதங்களில் காற்றின் வேகம் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்..

350 கிலோ மீட்டர் வேகம் வரை வீசுவதுண்டு..

கடைசியாக தமிழகத்தை புரட்டி போட்ட michaung புயலின் போது காற்று வேகம் 110 கிலோ மீட்டர் வேகம் தான்..

கணக்கு போட்டு கொள்ளுங்கள்..

இதுக்கே இப்படி என்றால், மனிதன் கால் பாதிக்காத மலை உச்சிகள் உண்டு..

வேறு பதிவுகளில் சொல்கிறேன்..

படங்கள் comment இல் பதிகிறேன்..

என் மகளை settle செய்து விட்டு தாய் தந்தை மற்றும் உறவுகளுக்கு கடமைகளை ஆற்றி விட்டு வருகிறேன்..

போவோமா?

- இயற்கையின் நிழல்..

Natureshadow.com

ஆறு வருடங்கள் நிறைவு பெற்றதாம்.. மிக்க நன்றி சகோதர சகோதரிகளே..Celebrating my 6th year on Facebook. Thank you for your co...
17/06/2024

ஆறு வருடங்கள் நிறைவு பெற்றதாம்..

மிக்க நன்றி சகோதர சகோதரிகளே..

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

விலங்குகள்.. பறவைகள்..  காடுகள்.. மலைகள்.. கடல்கள் .. இப்படி இதை எல்லாம் கான சுற்றுலா சென்று வருவது ஒரு ரகம்..ஆனால் நீங்...
15/06/2024

விலங்குகள்.. பறவைகள்.. காடுகள்.. மலைகள்.. கடல்கள் ..

இப்படி இதை எல்லாம் கான சுற்றுலா சென்று வருவது ஒரு ரகம்..

ஆனால் நீங்கள் இந்த பதிவில் காணும் படத்தில் இருக்கும் அனுபவம் வேற ரகம்..

இதற்கு நீங்கள் மெக்சிகோ செல்ல வேண்டும்..

அங்கு சென்று TLAXCALA மாவட்டம் சென்று..

ஒரு சிறிய கிராமத்திற்கு செல்ல வேண்டும்..

கிராமத்தின் பெயர் - NANACAMILPA..

ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்கள் தான் செல்ல வேண்டும்..

கேக்க கொச்சயாக இருக்கலாம்..

அங்கே சென்றால் லட்ச கணக்கானவர்கள் இன பெருக்கம் செய்வதை இருட்டில் காணலாம்..

அந்த லட்சக்கணக்கானவர்கள் மின்மினி பூச்சிகள்..

NANACAMILPA சென்று தங்கி நீங்கள் காத்திருக்க வேண்டும்..

அதுவரை அந்த ஊருக்கே உரித்தான உணவுகளை சாப்பிடலாம்..

வித்யாசமான மெக்சிகன் கிராமத்தை உலா வரலாம்..

மிக வித்தியாசமாக இருக்கும்.. படங்கள் தருகிறேன்..

குறிப்பாக நம்ம ஊரு பனை மரத்து கள் குடிப்பது போல அந்த ஊரில் உள்ள ஒரு பானத்தை சுவைத்து பார்க்கலாம்..

அந்த பானத்தின் பெயர்.. PULQUE..

மரத்தில் இருந்து கிடைக்காது..

ஒரு வகை கத்தாழை செடியில் இருந்து எடுத்து தருவார்கள்..

அதில் சுண்ணாம்பு சேர்த்து பார்க்க அவர்களுக்கு தோன்றவில்லை போல.. நான் சென்றால் சுண்ணாம்பு வைக்க சொல்லி அதனை பதநீராக்கி குடித்து பார்த்து விடுவேன்..

படங்கள் பகிர்ந்துள்ளேன்..

பெரிய போதை எல்லாம் தராதாம்.. ஆனால் உடலுக்கு நல்லதுன்னு சொல்றாங்க..

இதை எல்லாம் செய்து விட்டு சூரியன் அஸ்தமனம் ஆக தயாராகும் போது நீங்கள் காட்டை நோக்கி நடையை கட்ட வேண்டும்..

எந்த வெளிச்சம் தரும் பொருளும் எடுத்து செல்ல அனுமதி இல்லை..

டார்ச் லைட்.. குறிப்பாக அலைபேசி.. எதற்கும் அனுமதி இல்லை..

முடிந்த வரை பேச கூடாது..

Insect repellent கூடவே கூடாது..

வாசனை திரவியம் கூடாது..

ரேடியம் வைத்த உடை காலணி கூடாது..

Guide சொல்ல கூடிய ஒற்றை அடி பாதையில் மட்டுமே நடக்க வேண்டும்..

ஒரு அடி நகர கூடாது..

மின்மினி பூச்சி யை மிதிக்க கூடாது அல்லவா..

தன் ஜோடியுடன் சிவனே என்று பிள்ளை பெத்து கொண்டு இருக்கிறது..

காட்டை அடைந்ததும் அமைதியாக இருள் சூழும் வரை காத்திருந்தால், லச்டம் மின்மினி பூச்சிகள் மைல் கணக்கில் தூரம் வரை நடனம் ஆடுவதை காணலாம்..

ஐந்து வருடங்கள் முன்பு வரை அந்த கிராம வாசிகள் சிலருக்கே இந்த அற்புதம் நடப்பது தெரியாதாம்..

அந்த ஊரு பெண்கள் துணி காய வைக்க விடாமல் இன்னல் தருவதாக மின்மினி பூச்சிகளை திட்டுவார்களாம்..

இப்போது வருடம் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து அந்த கிராமத்தை செழிப்பாக மாற்றிவிட்டார்கள்..

2 மணி நேரம் மின்மினி பூச்சிகள் உங்களை சூழ்ந்து சம்பவம் செய்யும்..

எங்குமே கிடைக்காத அனுபவம்..

இருளான காடு இயற்கையின் serial bulb களால் அலங்கரிக்க படும்..

Honey moon செல்பவர்கள் சென்று பாருங்கள்..

பணியும் சாரலும் பெய்யுமாம் இந்த தருணத்தில்..

அந்த ஈர பதம் தான் இவர்களை இங்கே கொண்டு வருகிறதாம்.. அந்த ஈரப்பதமும் மண்ணும் ஒரு வகை புழுவை உருவாக்கி, அதை பிள்ளை பெற பயன் படுதுகிறதாம் இத்தனை மின்மினி பூச்சிகளும்..

இறைவன் மிக பெரிய artist..

முற்றிலும் இருட்டான காடு.. அதை அலங்கரிக்க லட்சம் கணக்கில் மின்மினி.. நின்று ரசிக்க சாரல் நிறைந்த பனி துகள்கள்..

கத்தாழை கள் குடித்து விட்டு மின்மினிகளுடன் உறவாடி வர நினைத்தால் மெக்சிகோ செல்லுங்கள்..

இந்தியா விலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறிய அளவில் இப்படி ஒரு இடம் உண்டு.. ஒரு பண்டிகை போல் நடக்கும்..

ஆனாலும் இந்த விஷயத்தில் NANACAMILPA வை அடித்து கொள்ள முடியாது..

- இயற்கையின் நிழல்

Natureshadow.com

15/06/2024

எப்படியும் 7 அடி உயரம் இருப்பாங்க போல இருக்கு ! ஜெர்மன் லேடி எல்சா மேடம் ..

Whats App : https://wa.me/message/F7YMDHFEJNKZL1

Whats App : 9361462379

Order Pure Raw Forest Honey : https://www.natureshadow.com/collections/honey-and-hive

Garlic In Honey : https://www.natureshadow.com/collections/soaked-in-wild-forest-honey

Bamboo Rice And Bamboo Shoots : https://www.natureshadow.com/collections/bamboo-products

Sandalwood With ISI Seal :

https://www.natureshadow.com/collections/5-sandalwood-with-isi-seal-sandalwood-powder-sandal-wood-oil

Camel Milk / Pure Ghee And More From Cattles : https://www.natureshadow.com/collections/grocery

Beat The Heat With Floral Waters :

https://www.natureshadow.com/collections/floral-waters

Red Reishi Mushroom For Good Sleep :

https://www.natureshadow.com/collections/wild-mushrooms

Sexual Well Being :

https://www.natureshadow.com/collections/sexual-well-being

Almond Oil / Walnut Oil / H**p Oil And More :

https://www.natureshadow.com/collections/edible-oils

Natural Bath Powders :

https://www.natureshadow.com/collections/natural-face-packs-and-body-baths

Don't Miss These Palm Products :

https://www.natureshadow.com/collections/palmyra-palm-tree-products

Cloth Bags :

https://www.natureshadow.com/collections/eco-friendly-products

Peacock Feather Oil For Bones And Joints :

https://www.natureshadow.com/collections/7-strengthen-the-bones

14/06/2024
14/06/2024

ஒரு ஆம்புலன்ஸ் வர மூன்று மணி நேரம் ஆனால் என்ன செய்விங்க? இது தான் இங்கே வாழ்க்கை முறை ! Nepal Roads

Whats App : https://wa.me/message/F7YMDHFEJNKZL1

Whats App : 9361462379

Order Pure Raw Forest Honey : https://www.natureshadow.com/collections/honey-and-hive

Garlic In Honey : https://www.natureshadow.com/collections/soaked-in-wild-forest-honey

Bamboo Rice And Bamboo Shoots : https://www.natureshadow.com/collections/bamboo-products

Sandalwood With ISI Seal :

https://www.natureshadow.com/collections/5-sandalwood-with-isi-seal-sandalwood-powder-sandal-wood-oil

Camel Milk / Pure Ghee And More From Cattles : https://www.natureshadow.com/collections/grocery

Beat The Heat With Floral Waters :

https://www.natureshadow.com/collections/floral-waters

Red Reishi Mushroom For Good Sleep :

https://www.natureshadow.com/collections/wild-mushrooms

Sexual Well Being :

https://www.natureshadow.com/collections/sexual-well-being

Almond Oil / Walnut Oil / H**p Oil And More :

https://www.natureshadow.com/collections/edible-oils

Natural Bath Powders :

https://www.natureshadow.com/collections/natural-face-packs-and-body-baths

Don't Miss These Palm Products :

https://www.natureshadow.com/collections/palmyra-palm-tree-products

Cloth Bags :

https://www.natureshadow.com/collections/eco-friendly-products

Peacock Feather Oil For Bones And Joints :

https://www.natureshadow.com/collections/7-strengthen-the-bones

உலகின் மிக பெரிய மூங்கில் இது தான்..Dendrocalamus Sinicus இதன் அறிவியல் பெயர் சீனாவின் யுன்னான் மாகாணத்தில் மட்டும் தன் ...
14/06/2024

உலகின் மிக பெரிய மூங்கில் இது தான்..

Dendrocalamus Sinicus இதன் அறிவியல் பெயர்

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் மட்டும் தன் இதை பார்க்க முடியும்..

1980 களுக்கு முன் இப்படி ஒரு மூங்கில் இருப்பது வெளி உலகிற்கே தெரியாது..

யுன்னான் மக்களுக்கு மட்டும் தான் தெரியும்..

ஒரு பொருள் அளவில் பெரியதாக இருந்தால் அது நம் கண்களுக்கு சுலபமாக தெரிந்து விடும் தானே..

ஆனால் உலகின் மிக பெரிய மூங்கில் இனம் இது தானாம்..

ஆனாலும் இயற்கை அதை 1980 வரை உலகின் கண்களுக்கு மறைத்தே வைத்துள்ளது..

படத்தில் ஒரு மனிதர் அந்த மூங்கில் மரத்திற்கு அருகில் நிற்கிறார்..

மூங்கில் உள்ளே துளை இருக்கும் தானே.. அந்த துளைக்குள் இவரை உட்கார வைக்க முடியும்.. அவ்வளவு பிரம்மாண்டம் இந்த மூங்கில் மரம்..

துளை போக விளிம்பு இருக்கும் அல்லவா.. அதன் thickness தடிமன்.. உங்கள் ஆட்காட்டி விரல் நீளம் எவ்வளவோ, அவ்வளவு..

நம் சுவர்களுக்கு cement கூட நாம் இந்த தடிமனுக்கு பூசுவது இல்லை..

டிராகன் Baamboo என்றும் இந்த மூங்கில் அழைக்க படுகிறது..

46 மீட்டர் உயரம் வரை வளரும்..

சுதந்திர தேவி (Statue Of Liberty) 🗽 சிலை மட்டும் இந்த உயரம்..

ஜீன்ஸ் படத்தில் ஹைராப்பா பாடலில் இந்த சிலையின் உயரம் ஹெலிகப்டரில் இருந்து காமிப்பார்கள் பாருங்கள்..

ஒரே ஒரு புல் நம் தலையில் விழுந்து நாம் இறக்க வாய்ப்பு இருக்கிறதா?

மூங்கில் மரம் புல் இனத்தை சார்ந்தது..

இந்த மூங்கில் மரம்.. அதாவது புல்.. 450 கிலோ எடை இருக்கும்..

புல் விழுந்து மண்டையை போட வாய்ப்பு உள்ளது..

பொதுவாகவே நீங்கள் எந்த மூங்கில் விதையை மண்ணில் போட்டு வைத்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு அந்த விதை என்ன ஆனது என்றே தெரியாது..

மரம் மூன்று ஆண்டுகள் கழித்து தான் மேலே வளர ஆரம்பிக்கும்..

மூன்று வருடங்கள் மேலே வளர ஆரம்பித்த 60 நாட்களில் மொத்த மரமும் வளர்ந்து விடும்..

இந்த மரம் 150 அடியும் 60 நாட்களில் எட்டி விடும்..

ஒரு நாளில் ரெண்டு அடி..

நாள் முழுக்க உட்கார்ந்து பார்த்தால் அது வளர்வதை நம் கண்களால் காணலாம்..

மூன்று வருடங்கள் வரை வேர் மட்டும் தான் வளரும்..

அடித்தளத்தை சரியாக வைத்தால், வானுயர உறுதியாக நிற்கலாம் என்பது மூங்கில் மரத்திற்கும் தெரிந்து இருக்கிறது..

மூங்கில் மரம் இறக்கும் போது நமக்கு மூங்கில் அரிசியை தந்து விட்டு சாகும்..

ஆனால் நீங்கள் விதைத்த மூங்கில் மரத்தின் அரிசியை உங்கள் பேரன் தான் சாப்பிட முடியும்..

60 ஆண்டுகள் முதல் 120 ஆண்டுகள் வரை ஆகும் இந்த மூங்கில் அரிசி ஒரு மரத்தில் இருந்து கிடைக்க.. (மூங்கில் மர இனத்தை பொறுத்து?

நீங்கள் சாப்பிடும் மூங்கில் அரிசி எல்லாம்.. அறை நூற்றாண்டு வாழ்ந்து இறந்த மூங்கில் மரங்களின் அரிசி தான்..

மூங்கில் அரிசி தேவை பட்டால், இணைப்பு தருகிறேன் வாங்கி கொள்ளலாம்..

இந்த குறிப்பிட்ட மூங்கில் மரத்தின் அரிசி எவ்வளவு பெரிதாக இருக்குமோ என்று ஆச்சரியமாக உள்ளது..

இணையத்தில் இந்த குறிப்பிட்ட மூங்கில் மரத்தின் அரிசியை தேடினேன்.. கிடைக்கவில்லை..

ஆனால் இதன் இலைகளை காய வைத்து bamboo tea leaves செய்து விற்கிறார்கள் யுன்னான் மக்கள்..

இதன் வேர் எவ்வளவு ஆழமாக இருக்கும்..

இந்த மரத்தை யாரும் அழிக்க வந்தால், தாராளமாக இந்த மரம்.. "புடுங்க கூட முடியாது" என்று பஞ்ச் dialogue பேசலாம்.. தகும்..

இதன் விதைகள் கூட இணையத்தில் கிடைக்கிறது.. இணைப்பு தருகிறேன்.. ஆனால் நம்ம ஊரில் வளருமா என்று தெரியவில்லை..

ஒரு வேளை இந்த மரம் சரிந்து விழுந்தால், 150 அடி தூரம் தாண்டி சிவனே என்று போய் கொண்டு இருக்கும் நபரின் மண்டையில் விழ வாய்ப்பு உண்டு..

ஆதலால் தான் வேர்கள் இவ்வளவு உறுதியாக இறைவனால் கொடுக்க பட்டு உள்ளது..

கிங் ஆப் Bamboo என்ற பெயரும் இந்த குறிப்பிட்ட மூங்கில் மரத்திற்கு உண்டு..

படங்கள் பகிர்கிறேன் comment இல்..

இந்த குறிப்பிட்ட மூங்கில் மரத்தின் விதை.. மரம்.. கன்று எல்லாவற்றையும் ஒரு யுன்னான் சீனாக்காரன் விக்கிரான்..

இணைப்பு கீழே comment இல்

சும்மா போய் பாருங்க.. அவனிடம் வாங்க வேண்டாம்.. customs தாண்டி இந்தியா விற்குள் வருமோ என்று தெரியாது..

Plant quarantine என்று ஒரு department உண்டு.. வெளி நாட்டு விதைகளை நம் நாட்டிற்குள் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்து தான் அனுப்புவார்கள்.. அது நமக்கு நல்லது தான்..

ஆனால் இந்த இணைதளத்தில் அந்த மரம் வளர்க்க என்ன எல்லாம் தேவை.. சீதோசன நிலை எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள்..

ஒரு புல்லை உங்கள் காலுக்கு கீழ் உள்ள அளவும்.. மற்றொரு புல்லை நீங்கள் எட்ட முடியாத உயரத்திற்கும் வைத்து படைத்த இறைவனுக்கே எல்லா புகழும்..

இந்த மூங்கிலை வைத்து ஒரு கதை சொல்லி அதில் பாடம் சொல்லும் ஒரு காணொளி கூட வெளியிட்டோம்.. பார்ப்பவர் பார்க்கலாம்..

- இயற்கையின் நிழல்

Natureshadow.com

Address

Nature's Shadow
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Natureshadow.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Natureshadow.com:

Videos

Share