Vaishnava World Tv

Vaishnava World Tv இந்த உலகில் எங்கெல்லாம் வைணவக் கோவில்கள் உள்ளதோ அவற்றை உங்களிடம் சேர்ப்பதே எங்கள் பணி �
(1)

அஹோபிலம் நவநரசிம்மர் சன்னதி 🙏சத்ரவடா நரசிம்மர் கோவில் தரிசனம் 🙏
06/01/2024

அஹோபிலம் நவநரசிம்மர் சன்னதி 🙏

சத்ரவடா நரசிம்மர் கோவில் தரிசனம் 🙏

ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது அஹோபிலம் நவநரசிம்மர் சன்னதி 🙏 இந்த கோவிலில் வெவ்வ.....

உலகின் ஆபத்தான இடங்களில் உள்ள ஒரு சில கோவில்களில் இந்த அஹோபிலம் கோவிலும் ஒன்று 🙏
13/10/2023

உலகின் ஆபத்தான இடங்களில் உள்ள ஒரு சில கோவில்களில் இந்த அஹோபிலம் கோவிலும் ஒன்று 🙏

உலகில் உள்ள ஆபத்தான சில கோவில்களில் இந்த அஹோபிலம் நவ நரசிம்மர் கோவிலும் ஒன்றாகும்... இந்த கோவில் ஆந்திரப் பிரதே....

28/12/2022
ஓம் நமோ நாராயணாய 🙏108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஶ்ரீ வீரராகவ பெருமாள் சன்னதியில் 🙏 இப்போது... திருவள்ளூர் ( சென்னை)
25/12/2022

ஓம் நமோ நாராயணாய 🙏
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஶ்ரீ வீரராகவ பெருமாள் சன்னதியில் 🙏

இப்போது...

திருவள்ளூர் ( சென்னை)

அஹோபிலம் ஸ்ரீ பிரகலாத வரதர் சன்னதியின் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட அற்புதமான காட்சி 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏
12/12/2022

அஹோபிலம் ஸ்ரீ பிரகலாத வரதர் சன்னதியின் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட அற்புதமான காட்சி 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏

அஹோபிலம் ஸ்ரீ பிரகலாத வரதர் சன்னதியின் அற்புதமான காட்சி 🙏 ( long shot)
11/12/2022

அஹோபிலம் ஸ்ரீ பிரகலாத வரதர் சன்னதியின் அற்புதமான காட்சி 🙏 ( long shot)

அஹோபிலம் ஸ்ரீ பிரகலாத வரதர் சன்னதி மேலிருந்து ஒரு புகைப்படம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏
10/12/2022

அஹோபிலம் ஸ்ரீ பிரகலாத வரதர் சன்னதி மேலிருந்து ஒரு புகைப்படம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏

ஓம் நமோ நாராயணாய 🙏
09/12/2022

ஓம் நமோ நாராயணாய 🙏

08/12/2022

108 - திவ்ய தேசங்கள்

முதல் பயணம் - அஹோபிலம்

Vaishnava World வாசகர்களுக்கு வணக்கம்....

108 திவ்ய தேசங்களில் முதலில் எங்கே இருந்து தொடங்குவது? எப்படி ஆரம்பிப்பது? என்ன செய்யலாம் என்று யோசனைகளில் இருந்தேன் அப்பொழுது என் நண்பர் மற்றும் இந்த Vaishnava World -ன் பங்குதாரருமான திரு கிரண் பாபு அவர்கள் ஒரு யோசனை சொன்னார் அதாவது நாம் ஏதாவது தொடங்கும் பொழுது அதை ஆந்திராவில் உள்ள அகோபிலம் கோவிளில் தொடங்கினால் அந்த காரியம் மிகப்பெரிய வெற்றியடையும். இதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் ஆகவே நீங்களும் செய்து பாருங்கள் என்று கூறினார் அவர் வெறும் நண்பர் மட்டுமல்ல நம்முடைய யூடியூப் சேனலில் பார்ட்னரும் கூட ஆக அவர் சாதாரணமாக எதுவும் சொல்ல மாட்டார் அவர் நம் நலம் விரும்பி என்பதால் அவர் சொன்ன விஷயத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு முதல் பயணமாக ஆந்திர மாநிலம் அகோபிலம் நோக்கி பயணமானோம். அகோபிலம் செல்வதற்கு முன்பு அகோபில த்தை பற்றி சில விஷயங்களை தேடிப் படித்தேன் அவற்றை உங்களுடன் பகிர்கிறேன் அடுத்த பதிவில் அகோபிலம் பற்றி என் அனுபவத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

108 திவ்யதேசங்கள் என்றால் என்ன ?

திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

இப்படி வைணவர்கள் கொண்டாடும் 108 வைணவ கோயில்களை திவ்ய தேசங்கள் என்று அழைக்கிறோம் அந்த 108 திவ்யதேசங்கள் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் அதிக அளவில் அதாவது 84 கோயில்கள் உள்ளது நமது அண்டை மாநிலமான கேரளாவில் 11 கோயில்கள் இருக்கிறது
ஆந்திராவில் 2 திருத்தலங்கள் இருக்கிறது குஜராத்தில் 1 திருத்தலம் இருக்கிறது உத்திரப்பிரதேசத்தில் 4 திருத்தலங்கள் இருக்கின்றது உத்தராஞ்சல் மாநிலத்தில் 3 திருத்தலங்கள் இருக்கின்றது நமது அண்டை நாடான நேபாளத்தில் 1 திருத்தலம் இருக்கிறது ஆகமொத்தம் பூமியில் 106 திவ்ய தேசங்கள் இருக்கின்றது மீதமுள்ள இரண்டு திவ்ய தேசங்கள் திருப்பாற்கடல் 1 திருபரமபதம் 1 இவை இரண்டும் ஆகாயத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது ...

நம்முடைய முதல் பயணம் முதல் வீடியோ தொடர்பான பயணம் எங்கே என்றால் நம்முடைய பக்கத்து மாநிலமான ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள அகோபிலம் என்னும் இடத்தை நோக்கி... இந்த அகோபிலம் என்ற ஊரில் அப்படி என்னதான் இருக்கிறது? எதற்காக தமிழ்நாட்டில் இவ்வளவு இடங்கள் இருக்கும் பொழுது அஹோபிலத்தை நோக்கி நாங்கள் செல்வதன் நோக்கம் என்ன? என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சென்னையில் இருந்து சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவில் அகோபிலம்
அமைந்துள்ளது இந்த அகோபிலம் என்பது வைணவ சமயத்தை வழிபடுபவர்கள் அனைவரும் குறைந்தது அறிந்து இருப்பார்கள் அதுமட்டுமில்லாமல் வைணவத்தில் தீவிர பக்தி உடையவர்கள் அதாவது பெருமாள், நாராயணன், ராமர், கிருஷ்ணர், நரசிங்க பெருமாள் போன்றவர்களை வணங்குபவர்கள் நிச்சயமாக தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த அகோபிலம் ஷேத்திரத்திற்கு செல்லவேண்டும் என்பதை மனதார நினைப்பார்கள் என்பது உறுதி. அகோபிலம் என்றால் "அஹோ" என்பது "சிங்கம்"... "பிலம்" என்றால் "குகை" அகோபிலம் என்பதின் பொருள் "சிங்க குகை" என்பதே ஆகும். 108 திவ்யதேசங்களில் மிக முக்கியமான ஒரு திவ்ய தேசமாக இந்த அகோபிலம் ஷேத்திரத்தை பார்க்கிறோம் ஏனென்றால் இந்தியாவில் மிக ஆபத்தான கோவிலாக இந்த அகோபிலம் நவ நரசிம்மர் சன்னதி காணப்படுகிறது இங்கே ஒன்பது இடங்களில் நரசிம்மர் அவதாரமெடுத்து
கருட பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார் அந்த 9 இடங்களும் மலை, காடு, ஆட்கள் நடமாட்டமில்லாத காடுகளில் அமைந்துள்ளது மேலும் இந்த ஒன்பது கோயில்களில் 4 கோயில்கள் மட்டுமே வாகனத்தில் சென்று சுலபமாக நரசிம்மரை தரிசிக்கும் வகையில் உள்ளது மீதி ஐந்து கோயில்கள் மிக மிக கடினமான பாதைகள் மிகமிக ஆபத்தான காடுகளில் மலை மேலே அமைந்துள்ளது ஆகவே இந்த கோவில் மிக மிக ஆபத்தான கோவிலாக பார்க்கப்படுகிறது.
அஹோபிலத்தின் சுருக்கமான வரலாறு என்னவென்றால் இரணியகசிபு என்ற அசுரன் பிரம்ம தேவரை நோக்கி கடுமையான தவம் செய்கிறான். இவனது தவ வலிமையை பார்த்து மெச்சி பிரம்மதேவர் மெய் மறந்து அவன் முன் தோன்றி காட்சி அளிக்கிறார் "மகனே உன் தவத்தை கண்டு மெச்சினோம் உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்க அவனோ அனைத்து அரக்கர்களும் முதலில் கேட்கும் சாகா வரத்தை கொடு என்பது போல் இவனும் கேட்கிறான் அதற்கு எப்போதும் போல் சாகாவரம் என்பது மனிதர்களுக்கு எப்போதும் இல்லை மனிதனாகப் பிறந்தவன் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் அதை தவிர்த்து வேறு ஏதாவது ஒரு வரத்தை கேளப்பா கொடுக்கிறோம் என்று பிரம்மர் கூற அதை கேட்டு சிறிது நேரம் யோசித்த இரண்யகசிபு எனக்கு
மனிதர்கலாலோ, தேவர்கலாலோ, மிருகங்களாலும், ஆயுதங்களாலும், பகலிலோ, இரவிலோ, பூமியிலும் ஆகாயத்திலும் மரணம் நேரக்கூடாது என்பது போன்ற ஒரு மிகப்பெரிய உள்ளடக்கத்தை கொண்ட ஒரு வார்த்தை கேட்கிறான் பிரம்மனும் எதிர்காலத்தை நினைத்து... ஏனென்றால் அவர்களுக்கு தெரியாத விஷயம் என்பது ஒன்று இல்லை அல்லவா! வரம் கொடுப்பவர்கள் வரம் கொடுக்கும் போதே அந்த வாரத்திற்கு உண்டான பரிகாரம் என்னவென்று தெரிந்து தான் வரம் கொடுப்பார்கள். அவர் நரசிம்ம பெருமாள் அவதாரத்தை மனதில் நினைத்துக்கொண்டு சிரித்தபடி இந்த வரத்தைக் கொடுத்துவிட்டு நீ நினைத்தபடியே வரத்தை கொடுத்து விட்டோம் மகிழ்ச்சி என்று அவர் மறைகிறார்....

அவ்வளவுதான் ..... வரம் கிடைத்தவுடன் அவன் என்ன செய்வான்? உடனடியாக கீழே உள்ள மனிதர்கள், ரிஷிகள், முனிவர்கள், மேலும் தேவலோகத்தில் தேவர்கள் போன்ற மூன்று உலகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தில் உட்காருகிறான் தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற ஆணவம் நாளுக்குநாள் அவனை கொடிய மிருகம் ஆக்குகிறது... மிருகமாணவன் ஒரு கட்டத்தில் சர்வாதிகாரியாக மாறுகிறான் சர்வாதிகாரியாகவும் இருக்கப் பிடிக்காமல் அடுத்தது நானே கடவுள் என்ற இடத்தை நோக்கி நகர்கிறான்🤭 அதே போல் அவனை வணங்குபவர்கள் அதாவது அவனை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள் இந்த பூமியில் வாழலாம் அப்படி யாராவது "நீ கடவுள் இல்லை" என்றால் அவர்களுக்கு மரணம் இப்படியாக ஒரு கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறான் இரணியகசிபு... இதற்கிடையில் அவனுக்கு ஒரு மகன் பிறக்கிறான் அந்த மகன்தான் பிரகலாதன் என்றழைக்கப்படும் பக்தபிரகலாதன் பிறந்ததிலிருந்தே நாராயணா, நாராயண, நாராயண என்று அழைக்க என்னடா இந்த உலகமே நம்மை கடவுளாக ஏற்றுக் கொண்டது ஆனால் நமது பிள்ளையோ நம்மை கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லையே நம்மை வணங்க மறுக்கிறானே! இவன் யாரோ நாராயண, நாராயண என்று நம்மை சங்கடப் படுத்துகிறான் என்று வெறுப்பாகி அவனை மிரட்டி பார்க்கிறவன், அடித்து பார்க்கிறான், ஒருகட்டத்தில் அவனை கொலை செய்யவும் முயற்சிக்கிறான் ஆனால் அவன் எவ்வித தண்டனையும் அனுபவிக்காமல் பகவான் அவனை காத்தருள்கிறார் ஒரு கட்டத்தில் இவனை இதற்குமேல் விடக்கூடாது என்ற ஒரு தோரணையில் "என்னடா எப்பொழுது பார்த்தாலும் நாராயணன், நாராயணன் என்று கூறுகிறாய் உன் நாராயணன் எங்கே இருக்கிறான்" என்று இரணியகசிபு கேட்க அதற்கு பிரகலாதன் "நாராயணன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்று பக்தியுடன் கூற இதை இதைக்கேட்ட இரணியகசிபு மீண்டும் ஆக்ரோஷமாக தன்னுடைய கதையால் இதோ "இந்தத் தூணில் உன்னுடைய நாராயணன் இருக்கிறானா?" என்று அருகில் உள்ள துணை காட்டி கேட்க "ஆம் அந்த தூணிலும் என் நாராயணன் இருக்கிறார்" என்று பிரகலாதன் பக்தியுடன் மறுபடியும் கூற உடனடியாக தன் கதையால் அந்த
தூணை அடித்து நொறுக்குகிறார் அடித்து நொறுக்கிய அடுத்த நொடி அதிலிருந்து சிங்க முகம், மனித உடல், கை விரல்களில் நீளமான நகங்கள், கூரிய நகங்கள் போன்ற ஒரு அகோரகமான உருவத்துடன் நாராயணன் உள்ளே இருந்து வருகிறார் வந்து இவனை அடித்து உதைத்து அவன் கேட்ட வரம் போலவே ஒரு சிங்க முகம் மனித உடல் தன்னுடைய கூரிய நகங்களால் இரண்யகசிபுவை தன் மடிமீது வைத்து அதாவது ஆகாயத்திலும் இல்லை பூமியில் இல்லாமல் இடைப்பட்ட பகுதியில் வைத்து காலையும் இல்லை இரவும் இல்லை ஈவினிங் டைம் அதாவது சாயங்காலம் நேரத்திலே தன்னுடைய கூரிய நகங்களால் கொன்று குடலை உருவி அவனை வதம் செய்கிறார். இந்த அகோபிலத்தில் தான் நரசிங்கபெருமாள் தோன்றினார் என்பது வரலாறு . விஷ்ணு பகவான் எடுத்த பத்து அவதாரங்களில் மிகவும் ஆக்ரோஷமான, கோபமான, குரூரமான ஒரு அவதாரம் என்றால் அது நரசிம்ம அவதாரம் தான் .

இதுதான் அகோபிலத்தில் சுருக்கமான வரலாறு அதாவது இரணியகசிபு என்ற அரக்கனை அழிக்க விஷ்ணு பகவான் நரசிங்கப் பெருமாள் அவதாரம் எடுத்து இரணியகசிபுவை வதைத்த இடம்தான் அகோபிலம் .. என்பதை தெரிந்தவுடன் எனக்கு அகோபிலத்தில் மீது ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டது எப்படியாவது அகோபிலம் சென்று விட வேண்டும் என்று முடிவு எடுத்து கிரண் பாபு அவர்களிடம் அகோபிலம் செல்லலாம் என்று கூறி விட்டேன் ஆனால் கிட்டதட்ட முடிவெடுத்து ஒரு மாதம் கழித்தே அங்கே செல்ல முடிந்தது .

அடுத்த பதிவில் அகோபிலத்தில் உள்ள நவ நரசிம்மர் பற்றி பார்க்கலாம் நன்றி...

S.S.இராமச்சந்திரன்
Vaishnava World

07/12/2022

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யுர் ம்ருத்யம் நமாம்யஹம்🙏

இந்த உலகில் வாழும் அனைத்து வைணவ சொந்தங்களுக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள். இந்த வைஷ்ணவா வேர்ல்ட் என்ற PAGE-ல் வைணவம் தொடர்பான தகவல்களும், வைணவ திருக்கோயில்களும், அதிலும் மிக முக்கியமாக 108 திவ்ய தேசங்களை பற்றிய தகவல்களும், திவ்ய தேசங்களுக்கு நேரில் சென்று அந்த வீடியோ தொகுப்புகளும் இடம்பெறும். இது மட்டும் இல்லாமல் வைணவ கோவில்களில் வழிபாடுகள் சிறிய, பெரிய கோயில்கள் என்று பாகுபாடு இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கோவில்களை தொகுத்து மாவட்டம் வாரியாகவும், வட்டம் வாரியாகவும், மாநிலம் வாரியாகவும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். எங்களின் இந்த நல் நோக்கத்திற்கு சொந்தங்கள் அனைவரும் ஆதரவு கொடுத்து எங்களை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ஓம் நமோ நாராயணாய 🙏

இன்னும் பல தகவல்கள் தெரிந்துகொள்ள எங்கள் VAISHNAVA WORLD - PAGE - ஐ follow - செய்யுங்கள் 🙏

S.S.RAMACHANDRAN
VAISHNAVA WORLD 🌎

Address

Chennai
600092

Alerts

Be the first to know and let us send you an email when Vaishnava World Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Chennai

Show All