World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம்

World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம், News & Media Website, Kodambakkam, Chennai.
(102)

சங்கர்
08/11/2024

சங்கர்

01/11/2024

ஒரியர்களைப் போலவே மராத்தியரும் தமக்கான மொழிசார்ந்த புவி அடையாளத்தை கண்டடைவதில் பின்தங்கியிருக்கவில்லை. 1906 இல் பால கங்காதர திலகர் முதன் முதலில் மகாராஷ்ட்டிரா என்கிற மராத்திய தேசத்தைப் பற்றி கனவுகண்டார்.

1919 இல் அவர் மகாராஷ்ட்டிர மாநிலம் குறித்த கோரிக்கையை காங்கிரஸ் ஜனநாயக கட்சியின் கோரிக்கைகளில் ஒன்றாக்கினார்.

1938 இல் மத்திய மாகாணம் இருமொழி பேசும் பம்பாய் மாகாணத்திலிருந்து விதர்பாவை தனி மாநிலமாக ஆக்க தீர்மானம் நிறைவேற்றியது.

அதே ஆண்டு விதர்ப்பாவையும் பிற மராத்தி பேசும் பகுதிகளையும் உள்ளடக்கி தனி மராத்தி மாநில கோரிக்கைக்கு அறைகூவல் விடுத்தவர் வேறு யாருமல்ல, வீர சவர்க்கர் என்று இந்துத்துவவாதிகளால் அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சவர்க்கர்!

ஆனால் மராத்திய அடையாளம் என்பது வெறுமனே இந்துத்துவ அடையாளம் மட்டுமல்ல. அது பெருவாரியான மக்களின் ஏற்பு பெற்றிருந்தது. அதனால்தான் 1948 அக்டோபர் 14 ஆம் தேதி பம்பாயை தலைநகராக கொண்ட மராத்திய மாநிலம் வேண்டும் என தர் கமிஷனிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார் அண்ணல் அம்பேத்கர்.

01/11/2024

சுதந்திரத்திற்கு பிறகே மொழிவழி மாநில கோரிக்கை எழுந்தது என பலரும் நினைக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே இக்கோரிக்கை பெரும் போராட்டமாக எழுந்தது. அதற்கு காரணியாக இருந்தது ஹிந்தி திணிப்பு தான் என்பதும் வரலாறு.

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கைகளின் வரலாறு மிக நீண்டது. தனி மாநிலம், தனி நாடு கோரிக்கைகள் எல்லாம் ஏதோ 1947க்குப் பிறகுதான் எழுந்தன என இன்று ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் பிரிட்டிஷ் காலத்திலேயே அவை தொடங்கிவிட்டன. அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது!

தனி மாநில/மாகாண கோரிக்கைகளின் தொடக்கம் ஒரிசாதான் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 1895 இல் சம்பல்பூரில் உருவான ஒரு மொழிக்கிளர்ச்சியைத் தொடர்ந்து ஒரிசா மாநில கோரிக்கை எழுந்தது. அப்போது சம்பல்பூர் பகுதி மத்திய மாகாணத்துடன் இணைந்திருந்தது.

ஆங்கிலேயே அரசு சம்பல்பூரில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்க முயற்சி செய்தபோது, ஒரிய மொழியினர் அதை எதிர்த்து போராடினார்கள். இந்தியாவின் முதல் பெரும் மொழிப்போராட்டமான அதில் ஒரிய மக்கள் தோற்றுப்போனார்கள். இந்தி, ஒரியமொழியை (தற்காலிகமாக) அதிகார பீடத்திலிருந்து ஒழித்துக்கட்டியது. வரலாற்றுப் புகழ்பெற்ற கலிங்க நாட்டவர்கள் அந்த கிளர்ச்சியைத் தொடர்ந்து ஒரியர்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பினார்கள்.

அப்போது ஒரிய மக்கள் வாழும் பெரும் பகுதிகள் மத்திய மாகாணத்திலும் பிஹாருடனும் இருந்தன. சென்னை, கல்கத்தா மாகாணங்களிலும் கலிங்கம் துண்டாடப்பட்டுக்கிடந்தது. பல சமஸ்தானங்களிலும் ஒரிய மக்கள் வாழ்ந்தார்கள்.

ஒரிய தேசியத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மதுசூதன் தாஸ் உள்ளிட்டோர் ஒருபுறம் இந்திய விடுதலைக்கான போராட்டங்களில் மகாத்மா காந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டுக்கொண்டே மறுபுறம் ஒரிய மாநிலத்துக்கான போராட்டத்தையும் நடத்தினார்கள். 1912 இல் வங்கத்திலிருந்து பிஹாரும் ஒரிசாவும் பிரிக்கப்பட்டு பிஹார்-ஒரிசா மாகாணம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகும் ஒரிய மக்கள் தொடர்ந்து போராடினார்கள்.

சைமன் கமிஷன், லண்டன் வட்டமேஜை மாநாடு போன்ற களங்களிலும் இது எதிரொலித்தது. இறுதியில் 1935 இல் பிஹார்-ஒரிசா மாகாணத்திலிருந்து பிரிந்து ஒரிசா தனி மாகாணமாக ஆனது.

(இதைப் போலவே பம்பாய் மாகாணத்திலிருந்து சிந்தி பேசும் மக்களின் பகுதி தனியாக பிரிக்கப்பட்டு சிந்து மாகாணம் உருவாக்கப்பட்டது). இந்தித் திணிப்பு எதிர்ப்பும் மொழி அடையாளத்துக்கான போராட்டமும் ஏதோ தமிழ்நாட்டுச் சரக்கென்றும் தேசவிரோதம் என்றும் நினைப்பவர்களுக்காக இந்த ஒரிய வரலாற்றை நினைத்துப்பார்க்கவேண்டும்.

*இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்* 💐🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹 *உறவுகளுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்!... 🌹🌹🌹 .🌹🌹
31/10/2024

*இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்* 💐
🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹
*உறவுகளுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்!...
🌹🌹🌹 .🌹🌹

30/10/2024

இந்த வருசம் பட்டாசு வாணவேடிக்கைலாம் கொஞ்சம் கம்மியா இருக்குற மாதிரி தெரியுது.

ஒலிமாசு காற்றுமாசு குறித்த சிந்தனைலாம் இல்ல .விலைவாசி உயர்வு & மழை தான் காரணமா இருக்குமோ

30/10/2024
ஒரு பறவை கூண்டில் இருப்பதற்கும், கூட்டில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் தான்...........மணமான பெண் அம்மா வீட்டில் இரு...
30/10/2024

ஒரு பறவை கூண்டில் இருப்பதற்கும், கூட்டில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் தான்...........

மணமான பெண் அம்மா வீட்டில் இருப்பதற்கும்
மாமியார் வீட்டில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள்..............!!

காய்கறி, பால்,பெட்ரோல், பால், தங்கம் விலைஏறுதோ இல்லையோ.............சந்தோஷம், நிம்மதி இவற்றின் விலை ஏறிக்கிட்டே போகுது......
30/10/2024

காய்கறி, பால்,பெட்ரோல், பால், தங்கம் விலை
ஏறுதோ இல்லையோ.............

சந்தோஷம், நிம்மதி இவற்றின் விலை ஏறிக்கிட்டே போகுது..................!!

ஒரு நாள் பாத்தா நிறையா லைக் போடுறீங்க ஒரு நாளைக்கி கண்டுக்கவே மாட்றீங்க.....உங்களை நம்பி நான் எப்படி கடனை கட்றது குடும்ப...
30/10/2024

ஒரு நாள் பாத்தா நிறையா லைக் போடுறீங்க ஒரு நாளைக்கி கண்டுக்கவே மாட்றீங்க.....

உங்களை நம்பி நான் எப்படி கடனை கட்றது குடும்பத்தை எப்படி நடத்துறது ஒன்னும் புரியல. உங்களையெல்லாம்...........

இது தான் முடிவென தெரிந்த பின் வெளிப் படுகிறது........." சுயரூபங்கள் "
30/10/2024

இது தான் முடிவென தெரிந்த பின் வெளிப் படுகிறது.........

" சுயரூபங்கள் "

ஒரு நூலகத்தையும், தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை .
30/10/2024

ஒரு நூலகத்தையும், தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை .

நிம்மதி என்பது இருப்பதை தக்க வைப்பதே........இல்லாததை தேடுவதல்ல..............!!
30/10/2024

நிம்மதி என்பது இருப்பதை தக்க வைப்பதே........

இல்லாததை தேடுவதல்ல..............!!

கல்யாணம் பண்ற வரைக்கும் எப்ப கல்யாணம்னு கேட்கிற சொந்தக்காரர்களை சமாளிக்கணும்............கல்யாணம் பண்ணினா பிறகு ஏன்டா கல்...
30/10/2024

கல்யாணம் பண்ற வரைக்கும் எப்ப கல்யாணம்னு கேட்கிற சொந்தக்காரர்களை சமாளிக்கணும்............

கல்யாணம் பண்ணினா பிறகு ஏன்டா கல்யாணம் பண்ணுனன்னு கேட்கிற பொண்டாட்டியை சமாளிக்கணும்......................!!

யார் மீது வேண்டுமானாலும் கோபம் வரலாம்...........அது எத்தனை நேரம் நீடிக்கிறது என்பதைப் பொருத்ததே அன்பின் அழுத்தம்...........
30/10/2024

யார் மீது வேண்டுமானாலும் கோபம் வரலாம்...........

அது எத்தனை நேரம் நீடிக்கிறது என்பதைப் பொருத்ததே அன்பின் அழுத்தம்...............!!

Address

Kodambakkam
Chennai
600024

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World Tamil Sangam - உலகத் தமிழ்ச் சங்கம்:

Share

WORLD TAMIL SANGAM - உலகத் தமிழ்ச் சங்கம்

உலகிலுள்ள அனைத்து தமிழர்களின் உரிமைக் குரல்! வாழ்க தமிழ்! வெல்க தமிழனம்! தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் மொழி, கலாச்சாரம், தமிழர் பண்பாடு பற்றிய பெருமையை பறை சாற்றும் தளம்! Popularize Yourself Worldwide by Your Wisdom, Life Skills, Health, Wealth, Humour, Happiness, Success and Humanitarian Welfare! A Forum of Eminent Tamil Intellectuals and Intelligentsia!

Nearby media companies


Other News & Media Websites in Chennai

Show All