Vasippu

Vasippu தமிழில் பொழுதுபோக்கு வாசிப்புக்குரிய சிறுகதைகளும் உடல்நல கட்டுரைகளும்

04/02/2024

TNPSC Group 4 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி
விவரங்களுக்கு வாட்ஸ்அப்: 7845064509
#டிஎன்பிஎஸ்சி

                 #டிஎன்பிஎஸ்சி
01/02/2024

#டிஎன்பிஎஸ்சி

அது யார்?இது கிரிக்கெட்டை மட்டும் பற்றிய பதிவல்ல. ஆகவே, அனைவரும் வாசியுங்கள்!சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது என்று ...
29/01/2024

அது யார்?

இது கிரிக்கெட்டை மட்டும் பற்றிய பதிவல்ல. ஆகவே, அனைவரும் வாசியுங்கள்!

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது என்று கூறுவார்கள். அதேபோன்ற வீரதீர பராக்கிரம செயலை நிகழ்த்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி.

ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டில் கோலோச்சியது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைகளை முதல் இரண்டு தடவையும் வென்றது வெஸ்ட் இண்டீஸ். அதன் வேகப்பந்து வீச்சாளர்களை எந்த அணியினராலும் சமாளிக்க முடியாது என்ற நிலையும் இருந்தது.

பின்னர் புகழின் உச்சியிலிருந்து சரிந்தது அந்த அணி. பொருளாதார சிக்கல் உள்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் டெஸ்ட் விளையாடும் தரத்தை கூட இழக்கக்கூடிய அவலநிலையில் இருந்தது.

அந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடர் ஆடச் சென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. யாருக்கும் பெரிய நம்பிக்கை இல்லாத நிலைதான்! அதுவும் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கும் போட்டி.

முதல் போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி, 2024 ஜனவரி 25 முதல் 29 வரை நடைபெற இருந்தது. அந்தப் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்றது. அது முக்கியமான மைதானம். அதிலும் வெற்றி பெறும் முனைப்பில் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணிக்கு எமனாக மாறினார் வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதிய பந்துவீச்சாளர் ஷாமர் ஜோசப்.

கயானா பகுதியில் பராகரா என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜோசப். 2018ம் ஆண்டு வரைக்கும் அந்த ஊருக்கு இணைய இணைப்பே கிடையாதாம். பழங்களையும் பின்னர் பிளாஸ்டிக்கை உருக்கி செய்த பந்தை கொண்டும்தான் அவர் விளையாடி பயிற்சி எடுத்துள்ளார்.

வேலைதேடி நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற துறைமுக நகருக்கு வந்த அவர், கட்டுமான தொழிலாளியாகவும், 12 மணி நேரம் உழைக்கும் செக்யூரிட்டியாகவும் வேலை செய்துள்ளார். ஜோசப்பின் கிரிக்கெட் தாகத்தை அறிந்த அவரது வருங்கால மனைவி டிரிஷ், வேலையை விட்டுவிட்டு பயிற்சிக்கு செல்வதற்கு உதவியுள்ளார்.

அங்குதான் மாறியுள்ளது ஷாமர் ஜோசப்பின் வாழ்க்கையும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் விதியும்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற காரணமானார்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

இந்த ஆச்சரியமான, நம்ப இயலாத வெற்றியைக் கண்டு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரரை எக்ஸ் ஃபேக்டர் என்று அழைப்பர். அவ்வாறு செயல்பட்டு, இழந்த பெருமையை ஈட்டித் தந்த ஷாமர் ஜோசப்பை கொண்டாடுகின்றனர் வெஸ்ட் இண்டீஸ் மக்கள்.

வாழ்ந்து கெட்ட குடும்பம் போன்ற கதைதான்! அந்தக் குடும்பத்தின் பெருமையை திரும்ப கட்டியெழுப்ப ஒருவன் பிறந்த கதை போன்றதுதான் ஷாமர் ஜோசப்பின் வருகையும்...

உங்கள் குடும்பத்திற்கு அப்படி எக்ஸ் ஃபேக்டராக விளங்கி இழந்த பெருமையை மீட்டது யார் என்று எண்ணிப் பாருங்கள்.. அதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்...

உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் ஷாமர் ஜோசப்பாக, எக்ஸ் ஃபேக்டராக இருக்கலாம்...

இதுபோன்ற சிந்தனைகளை உடனுக்குடன் வாசிக்க இந்தப் பக்கத்தை லைக் செய்யுங்கள்....

#வாசிப்பு

     #வாசிப்பு
28/01/2024

#வாசிப்பு

பாரம் சுமக்கிறவன்மதியானந்தாவின் ஆசிரமத்திற்கு நான்கு நாள்களாக ஒருவர் வந்துகொண்டிருந்தார்.வருவதும் தொலைவில் உட்கார்ந்து ம...
25/01/2024

பாரம் சுமக்கிறவன்

மதியானந்தாவின் ஆசிரமத்திற்கு நான்கு நாள்களாக ஒருவர் வந்துகொண்டிருந்தார்.

வருவதும் தொலைவில் உட்கார்ந்து மதியானந்தாவை பார்த்துக்கொண்டே இருப்பதும், சிறிது நேரம் கழித்துச் செல்வதுமாக இருந்தார்.

ஐந்தாவது நாளும் வந்தார். மதியானந்தா தம் சீடனை அனுப்பி அவரை அருகே அழைத்தார்.

"தினமும் வர்றீங்க... ஒண்ணும் சொல்லாம போயிடுறீங்க... என்ன வேணும்?" என்று கேட்டார்.

"தொழில் ரொம்ப நஷ்டமாயிடுச்சு சாமி..." - வந்தவர் கண் கலங்கினார்.

"கடன் பாரம் தாங்க முடியலை... மனசே சரியில்லை.... இங்கே வந்து உட்கார்ந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கிறமாதிரி தோணுது..." தயக்கத்துடன் சொன்னார்.

மதியானந்தா, அவரது தோளின்மேல் கைபோட்டு அணைத்துக் கொண்டு, அவரை ஆசிரமத்தின் வாயிலுக்கு அழைத்துச் சென்றார்.

ஆசிரமத்திற்கு வெளியே இருந்த சாலையில் வண்டிகள், மனிதர்கள் செல்வதும் வருவதுமாய் இருந்தனர்.

தொலைவில் வந்துகொண்டிருந்த ஒருவரை சுட்டிக்காட்டினார் மதியானந்தா.

"அவர் என்ன செய்கிறார்?" என்று கேட்டார்.

"சாமி, நாளைக்கு திங்கள்கிழமை. பக்கத்து ஊரில் சந்தை. அவர் சந்தையில் விற்பதற்கு மூடையில் பொருள்களை கொண்டு செல்கிறார்," என்றார் வந்திருந்தவர்.

"மிகவும் சரியாக கணித்துவிட்டீர்கள்..." என்று மதியானந்தா கூறினார்.

"அநேகமாக அது தேங்காயாக இருக்கும். பாரமும் ஜாஸ்தி," என்றார் அவர்.

"அதிக பாரம்... பாவம்! ஒரே ஆளாக தூக்கிக்கொண்டு போகிறார்," மதியானந்தா, சொல்லிக்கொண்டிருந்தபோதே, சாலையில் வந்துகொண்டிருந்த அந்த நபர், அருகிலிருந்த குளத்தின் கரையில் மூடையை இறக்கி வைத்தார். குளத்தில் இறங்கி முகம், கை, கால்களை கழுவினார். சற்று நீரை கோரியெடுத்து பருகினார். குளத்தின் அருகிலிருந்த மரத்தின் நிழலில் உட்கார்ந்தார்.

"ரொம்பவும் களைச்சுப் போயிருக்கார்," என்றார் ஆசிரமத்துக்கு வந்தவர்.

"பாரம் ஜாஸ்தி," என்றார் மதியானந்தா.

சற்று நேரத்தில், அந்த மனிதர் எழுந்து மீண்டும் மூடையை தலையின்மேல் வைத்துக்கொண்டு நடந்துசென்றார்.

"பாரம்தான்..." என்றார் வந்திருந்தவர்.

"ஆமாம்... ஆனால், அவர் பாரமாக இருக்கிறது என்று தயங்கியிருந்தால்... சுமந்து செல்ல ஏதாவது வண்டி கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தால்...?" கேட்டார் மதியானந்தா.

"அப்படியே உட்கார்ந்திருக்கவேண்டியதுதான்..." என்றார் கடன் இருப்பவர்.

மதியானந்தா புன்னகைத்தார்.

"ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு பாரம் இருக்கும்... அதை அவனே சுமக்கவேண்டிய கட்டாயமும் இருக்கும்... இதோ, கஷ்டப்பட்டு சுமந்துபோகிறார்... சந்தையில் தேங்காயை விற்றதும் கை நிறைய பணம் கிடைக்கும்.... வரும்போது சுமை இருக்காது... பணம்தான் இருக்கும்..." என்றார்.

ஆசிரமத்திற்கு வந்தவர் யோசித்தார்.

"கடன் இருக்கிறது என்று நீங்கள் அதையே நினைத்துக்கொண்டிருந்தால் அது தீராது. இவர் பாரத்தை இறக்கி வைத்து, தண்ணீர் குடித்து இளைப்பாறி சென்றதுபோல, நீங்களும் கடன் பாரத்தை கொஞ்சம் மனதைவிட்டு இறக்கி வைத்துவிட்டு, வேலைகளை செய்யுங்கள். வேலை செய்தால்தான் பணமீட்ட முடியும்... கடனை அடைக்க முடியும். மனதில் கடனை மட்டும் சுமந்து திரிந்தால் கவலைதான் மிஞ்சும்," என்றார் மதியானந்தா.

"சரி சாமி... நான் என்ன செய்யட்டும்...?" அவர் கேட்டார்.

"கடனை பற்றி பெரிதாக கவலைப்படாமல் உங்களுக்கு தெரிந்த தொழிலை செய்யுங்கள்... கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்துவிடலாம்..." என்றார்.

சாமியை கும்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றார் அவர்.

இதுபோன்ற கதைகளை வாசிக்க இந்தப் பக்கத்தை லைக் செய்யுங்கள். உங்கள் கருத்தை கமெண்ட் செக்சனில் பதிவிடுங்கள்

#வாசிப்பு

     #வாசிப்பு
25/01/2024

#வாசிப்பு

     #வாசிப்பு
24/01/2024

#வாசிப்பு

 #தைப்பூசம்
23/01/2024

#தைப்பூசம்

     #வாசிப்பு
23/01/2024

#வாசிப்பு

சிறுவர் கதை: கிரிக்கெட் பிளேயர்அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட ஹரீஷுக்கு ஆச்சரியமாக இருந்தது. புதிதாக டி...
22/01/2024

சிறுவர் கதை: கிரிக்கெட் பிளேயர்

அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட ஹரீஷுக்கு ஆச்சரியமாக இருந்தது. புதிதாக டி20 கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியிருக்கும் சௌந்தர், அம்மாவின் சொந்தக்காரர் என்றே அவனால் நம்ப இயலவில்லை.

#வாசிப்பு #சிறுவர்கதை

சிறுவர் கதை: ஒருநாளாவது கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்துவிடவேண்டும் என் ற ஆசை எத்தனையோ வருடங்களாக அ....

     #வாசிப்பு
22/01/2024

#வாசிப்பு

அவனுக்கு அதிக சம்பளம்!சாமியார் மதியானந்தாவை பார்க்க முப்பது வயது வாலிபன் ஒருவன் வந்திருந்தான். அவன் முகம் கவலையாய் இருந்...
20/01/2024

அவனுக்கு அதிக சம்பளம்!

சாமியார் மதியானந்தாவை பார்க்க முப்பது வயது வாலிபன் ஒருவன் வந்திருந்தான். அவன் முகம் கவலையாய் இருந்தது.

"என்ன விஷயம்?" என்று புன்முறுவலுடன் கேட்டார் நித்தியானந்தா.

"சாமி... என்னோட ஆபீஸ்ல புதுசா சேர்ந்திருக்கிறவருக்கு என்னை விட அதிக சம்பளம் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க... அதுதான் ஒரே வருத்தம்..." என்றான்.

"அப்படியா... நீங்க எத்தனை வருஷம் அங்கே வேலை பார்க்கிறீங்க?" கேட்டார் மதியானந்தா.

"அஞ்சு வருஷம் சாமி... முதல்ல மூணு வருஷம்... கொரோனா காலத்தில ஆபீஸையே மூடிட்டாங்க... ஒரு வருஷம் கழிச்சு திரும்ப கூப்பிட்டு இப்போ ரெண்டு வருஷம்..." என்றான்.

"உங்க ஆபீஸ் மூடின பிறகு வேறு எங்கேயும் முயற்சி பண்ணலையா...?" என்று கேட்டார் சாமியார்.

"பண்ணுனேன் சாமி... ஆனா இந்த ஆபீஸ் மாதிரி நல்ல ஆபீஸா எதுவும் அமையலை..."

"திரும்பவும் இந்த ஆபீஸ்லேயே வேலை கிடைச்சதும் சந்தோஷப்பட்டீங்களா, இல்லையா?"

"சந்தோஷம்தான் சாமி... இந்த வாரத்தில இவரு சேர்ந்து இவரு சம்பளத்தை கேட்டதுல இருந்துதான் மனசு சரியில்லை"

"என்ன வேலை பார்க்கிறீங்க...?"

"மார்க்கெட்டிங் புரமோஷன் சாமி... ஊர் ஊரா போயி கம்பெனி பொருள்களை அறிமுகம் பண்ணனும்..."

"கொரோனாவுக்கு பிறகு சேரும்போது சம்பளம் வித்தியாசப்பட்டதா?"

"முன்னாடி வாங்குன அதே சம்பளம் கொடுத்தாங்க சாமி... இன்னும் உயர்த்தலை..."

"வெளியூருக்குப் போகும்போது அலவன்ஸ் எதுவும் உண்டா?"

"அதெல்லாம் கொடுத்துருவாங்க சாமி..."

"புதுசா சேர்ந்திருக்கிறவரு என்ன டிபார்ட்மெண்ட்?"

"அவரு டிரைனிங் சாமி... புது ஸ்டாஃப்புக்கும், ஏஜெண்ட்களுக்கும் டிரைனிங் கொடுப்பாரு..."

"அவருக்கு வெளியூர் பயணம் உண்டா?"

"கெடையாது சாமி..."

மதியானந்தா நிமிர்ந்து உட்கார்ந்தார்.

புது ஆளு சேருகிற வரைக்கும் நீங்க சந்தோஷமாக இருந்திருக்கீங்க... அப்போ ஆபீஸ் உங்க சங்கடத்துக்கு காரணமில்லை.... கொரோனாவுக்கு பிறகு உங்களுக்கு வேலை கிடைச்சதுனால சந்தோஷம்தான்...

புது ஆளு கூட உங்க சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறவரைக்கும் உங்களுக்கு மனசுல சங்கடம் இல்லை...

அவரோடே வேலை வேறு... உங்க வேலை வேறு... நீங்க போகிற இடத்தில நிறைய பேர் பழக்கம் ஆகலாம்... அவங்க மூலமாக சில நன்மைகள் கிடைக்கலாம்... வெளியூரு போகும்போது அலவன்ஸ் கிடைக்குது... இதை எல்லாம் கூட்டிக் கழிச்சு பார்த்தா உங்களுக்கு அவரை விட நன்மை ஜாஸ்தின்னு கம்பெனி நினைச்சிருக்கலாம்...

வந்த வாலிபன் இவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"புதியவரை யாரோ என்று நினைத்துக்கொள்ளுங்கள். அவர் சம்பள விவரம் நமக்கு எதற்கு? இதுவரை நீங்கள் சந்தோஷமாக இருந்ததுபோல் தொடர்ந்து இருங்கள். கடவுள் அவர் கொடுக்க தீர்மானித்திருக்கிற நேரத்தில உங்களுக்கு நன்மையை கொடுப்பார்..." என்றார் மதியானந்தா.

வந்தவனுக்கு ஏதோ புரிந்ததுபோல் இருந்தது.

"உங்கள் கையில் கடவுள் கொடுத்திருப்பதை பாருங்கள். மற்றவர்கள் கையில் உள்ளவற்றை பார்க்காமல் இருந்தாலே நிம்மதிதான்..." என்றான் சாமியார்.

அவன் தலையசைத்துவிட்டு எழுந்து நடந்தான். அவன் மனம் தெளிந்திருந்தது.

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? உங்கள் கருத்துகளை கமெண்ட் செக்சனில் தெரிவியுங்கள்.

இதுபோன்ற சிந்தனைகளை வாசிக்க இந்தப் பக்கத்தை லைக் செய்யுங்கள்; இந்தப் பக்கத்தை ஷேர் செய்யுங்கள்.

#வாசிப்பு

     #வாசிப்பு
20/01/2024

#வாசிப்பு

ராமர் கோவில்: ராகுல் காந்தி என்ன கூறினார்?இந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை என்றும், தான் அதன் கொள்கையின்படி வாழ முயற்சி...
19/01/2024

ராமர் கோவில்: ராகுல் காந்தி என்ன கூறினார்?

இந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை என்றும், தான் அதன் கொள்கையின்படி வாழ முயற்சிப்பதாகவும் கூறிய ராகுல் காந்தி, அதை நம்பாதவர்களே சட்டையில் அதை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

#வாசிப்பு

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை பாரதிய ஜனதாவும் ஆர்எஸ்எஸ்ஸூம் முழு அரசியல் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டதாக ர...

     #வாசிப்பு
16/01/2024

#வாசிப்பு

           #வாசிப்பு  #பொங்கல்
15/01/2024

#வாசிப்பு #பொங்கல்

       #     #வாசிப்பு
14/01/2024

# #வாசிப்பு

             #வாசிப்பு
13/01/2024

#வாசிப்பு

தனயன் பாடம்கதிரவன் குளித்து முடித்து, உடைகளை அணிந்து, அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவன் மகன் ஆகாஷ் வந்தான்...
08/01/2024

தனயன் பாடம்

கதிரவன் குளித்து முடித்து, உடைகளை அணிந்து, அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவன் மகன் ஆகாஷ் வந்தான்.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஆகாஷ் ஒருநாளும் கதிரவன் அலுவலகத்திற்குச் செல்லும் நேரத்தில் எழும்புவதில்லை. அவன் சென்ற பிறகே படுக்கையிலிருந்து எழுந்து பள்ளிக்குப் புறப்படுவான்.

"அப்பா வெள்ளிக்கிழமை ஸ்கூல் டிரிப் போறோம்... இன்னைக்கு கன்ஃபர்ம் பண்ணனும்," என்றான்.

ஒரு மாதத்திற்கு முன்பு இந்த டிரிப்பை பற்றி ஆகாஷ் கூறினான். அப்போது, "போ... முதல்ல நல்லா படி... மழை நேரம் டிரிப் போயிட்டு உடம்பு சரியில்லாம போயிட்டா கஷ்டம்..." என்றான் கதிரவன்.

இவ்வளவு நாள் பேசாமல் இருந்துவிட்டு, கன்ஃபர்ம் செய்யும் நாளன்று காலையில் வந்து கேட்கிறான்.

கிளம்பும்போது நின்று விசாரிக்க நேரமில்லை கதிரவனுக்கு.

"எவ்வளவு?" என்றான்.

"ஐநூறு ரூபா" என்றான் ஆகாஷ்.

கதிரவன், பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டு சென்றான்.

அலுவலகத்திற்குச் சென்றதும் எம்.டி. ஒரு பட்ஜெட் தன்னிடம் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது கதிரவனுக்கு.

அவனது நிறுவனத்தின் தென்மண்டல கிளை ஊழியர்களுக்கு பயிற்சியரங்கம் நடத்துவதற்கான பட்ஜெட் அது. ஏற்கனவே கதிரவன் தயார் செய்து கொண்டு சென்றபோது, பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்பியிருந்தார் எம்.டி. ஆனால், அவரது அனுமதியில்லாமல் பணத்தை செலவழிக்க இயலாது.

அடுத்த வாரம் எம்.டி. மலேசியா செல்ல இருப்பது நினைவுக்கு வந்தது கதிரவனுக்கு. இப்போது சென்றாலும் அவர் திருத்தங்கள் கூறுவார். தன் மகன் ஆகாஷ் செய்தது நினைவுக்கு வந்தது அவனுக்கு.

மூன்று நாள்கள் பொறுத்திருந்தான். எம்.டி. மலேசியா செல்வதற்கு முந்திய தினம் மாலை அவரைப் பார்க்கச் சென்றான்.

"என்ன கதிரவன்?"

"சார் அந்த டிரைனிங் பட்ஜெட் அப்ரூவல்..." இழுத்தான் அவன்.

"ஏதோ கொரி கேட்டிருந்தேனே...?"

"எல்லாம் சரி பண்ணிட்டேன் சார்..." பவ்யமாய் நீட்டினான் கதிரவன்.

"சரி பண்ணிட்டீங்களா...? நான் நாளைக்கு கிளம்பிட்டா வர்றதுக்கு பதினைஞ்சு நாள் ஆகும்... அதுக்குள்ளே டிரைனிங்குக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிருங்க..." என்றபடி கையெழுத்து போட்டு நீட்டினார் எம்.டி.

மனதுக்குள் மகனுக்கு நன்றி கூறினான் கதிரவன்.

#வாசிப்பு

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Vasippu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vasippu:

Videos

Share



You may also like