G MNEWS TAMIL

G MNEWS TAMIL G M NEWS

29/03/2024

சாலையோரம் விற்கும் டயர்களை யாரும் வாங்க வேண்டாம் பழைய டயர்களையே ரீசர்கிள் பண்ணி மக்களை எப்படி ஏமாற்றினார்கள் என்பதை நீங்களே பாருங்கள் கண்டிப்பாக அனைவரும் இந்த வீடியோவை ஷேர் பண்ணவும்

நாளைய தீர்ப்பு இதழின் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் நாளைய தீர்ப்பு தலைமை ந...
14/01/2024

நாளைய தீர்ப்பு இதழின் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் நாளைய தீர்ப்பு தலைமை நிருபர் கே வி கணேசன்

17/11/2023

திருச்செந்தூரில் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு ஆயிரம் ரூபாய் பட்டப்பகல் கொள்ளை

24/08/2023

*அரசுப் பள்ளியில் படித்தேன்; ஆவரேஜ் மாணவன்தான். ஆனால்...” - சந்திரயான்-3 விஞ்ஞானி வீரமுத்துவேலின் உத்வேகப் பகிர்வு*

சென்னை: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலை ஒட்டுமொத்த தேசமும் தமிழகம் சற்றே கூடுதல் பெருமிதத்துடனும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் சில மாதங்களுக்கு முன்னர் பேசிய காணொலி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தனது பேஸ்புக் பக்கத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். "மாணவர்களே, சந்திரயான்3 திட்ட இயக்குநர் திரு P. வீர முத்துவேல், விழுப்புரம் அரசு பள்ளியில் படித்தவர். அவரால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்கலாம் என்கிறார்" என்ற அறிமுகக் குறிப்புடன் அவர் அந்தக் காணொலியைப் பகிர்ந்துள்ளார்.

அதில் சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேல் கூறியிருப்பதாவது: ''எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் வீரமுத்துவேல். இந்த வாய்ப்பைக் கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை சாருக்கு நன்றி. தற்போது பெங்களூரு இஸ்ரோ மையத்தில் சயின்டிஸ்ட் இன்ஜினியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் பிறந்தது விழுப்புரத்தில். பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் தான் படித்தேன். பள்ளியில் படித்தவரை நான் ஒரு ஆவரேஜ் ஸ்டூடன்ட் (சராசரி மாணவன்). அடுத்து என்ன படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும் என்று எந்த ஒரு திட்டமும் எனக்கிருந்ததில்லை. பெற்றோர், குடும்பம் தரப்பில் யாருக்கும் கல்வியில் பெரிய பின்புலம் இல்லை. நண்பர்களோடு சேர்ந்து டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (DME) படிப்பில் சேர்ந்தேன்.

படிக்கும்போது இன்ஜினியரிங் மேலே எனக்கொரு விருப்பம் வந்தது. அதனால் என்னால் 90 சதவீதம் மதிப்பெண் பெற இயன்றது. மெரிட்டில் ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ பட்டப்படிப்பில் சேர்ந்தேன். எல்லா செமஸ்டரிலும் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வருவேன்.

அதேவேளையில் இந்த மதிப்பெண்ணுக்காக எல்லா நேரத்திலும் படித்துக் கொண்டே இருக்க மாட்டேன். படிக்கும்போது 100 சதவீத கவனத்துடன் நன்றாகப் புரிந்து படிப்பேன். அதுவே எனக்கு நல்ல மதிப்பெண்ணைப் பெற்றுத் தந்தது. அதன் விளைவாக ஆர்இசி திருச்சி கல்லூரியில் எம்இ முதுநிலை படிப்பில் இணைந்தேன். இளநிலை போல் முதுநிலை படிப்பிலும் நன்றாகப் படித்தேன். 9.17 சிஜிபியுடன் முதுநிலை படிப்பை முடித்தேன்.

கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக கோவை லக்‌ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்தேன். வேலை செய்துகொண்டிருந்த போதே ஏரோஸ்பேஸ் ரிசேர்ச் (விண்வெளி ஆராய்ச்சி) மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டானது. அப்போதுதான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் பெங்களூருவில் ஹெலிகாப்டர் டிவிஷன் எனப்படும் ரோட்டரி விங் டிசைன் அண்ட் ரிசேர்ச் சென்டரில் டிசைன் விங் இன்ஜினியராக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து எனது கணவு மையமான இஸ்ரோவில் பணி புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முதலில் ப்ராஜக்ட் இன்ஜினியர் (திட்ட பொறியாளர்) பின்னர் ப்ராஜக்ட் மேனேஜராக (திட்ட மேலாளர்) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் உள்பட நிறைய ரிமோட் சென்ஸிங் அண்ட் சயின்டிஃபிக் சாட்டிலைட் மிஷன்களில் பணியாற்றியுள்ளேன். இருந்தும் நான் எனது ஆராய்ச்சிக் கனவைக் கைவிடவில்லை. அதற்காக சென்னை ஐஐடியில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் இணைந்தேன். வைப்ரேஷன் செபரேஷன் ஆஃப் எலக்ட்ரானிக் பேக்கேஜ் இன் சாட்டிலைட்ஸ் எனப்படும் தலைப்பில் நவீன ஆராய்ச்சியை மேற்கொண்டேன். எனது ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச புகழ்பெற்ற இதழ்களில் பிரசுரமாகின. பல சர்வதேச அறிவியல் அரங்குகள் பேப்பர் பிரசன்டேஷன் செய்து வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றேன்

இஸ்ரோவின் முதல் நானோ சாட்டிலைட் குழுவை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு கிடைத்தது. அதன்பின்னர் மூன்று நானோ சாட்டிலைட்டுகளை ஏவியுள்ளோம். சந்திரயான்-2 திட்டத்தின் அசோசியேட் ப்ராஜக்ட் டைரக்டராக இருந்தேன். சந்திரயான்-3 திட்டத்தில் எனக்கு திட்ட இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரோவுக்கு மிகப்பெரிய மிஷன்.

நான் ஓர் எளிமையான நபர். என்னால் இவ்வளவு தூரம் வர முடியும் என்றால் எல்லோராலும் முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கின்றன. அதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சுய ஒழுக்கம், 100 சதவீதம் ஈடுபாடு அதுவும் எதிர்பார்ப்புகளற்ற ஈடுபாடு, கடின உழைப்பு மற்றும் நமக்கு இருக்கும் தனித்துவம் ஆகியன நிச்சயமாக வெற்றி தரும். கடின உழைப்பு பலனில்லாமல் போகவேபோகாது. அனைவருக்கும் நல்வாழ்த்துகள். நன்றி'' என்று கூறியுள்ளார்

19/07/2023

படித்ததில்_பிடித்தது...

எனக்கு கல்யாணம் முடிஞ்சு நாலஞ்சுநாள் கழிச்சு, மாமியார் வீட்டு விருந்துக்கு போயிருக்கோம். நானும் மாமனாரும் உக்காந்து பேசிட்டிருந்தோம்.

நான்-வெஜ் விருந்து, சமையக் கட்டுலிருந்து வாசம் தூக்குது. ஒரு மணிக்கு, "எந்திரிச்சு கைய கழுவுங்க மாப்ள" ன்னாங்க. நானும் மாமனாரும் உக்காந்தோம். "நா உங்களுக்கு பரிமாறிட்டு, எங்கம்மாகூட உக்காந்து சாப்டுக்கறேன்"னு, செல்லத்தாயி சொல்லிடுச்சு.

கோரப்பாய் ஸைசுக்கு ஒரு இலைய போட்டாங்க. வழக்கம் போல உப்பு, ஊறுகான்னு வெச்சாங்க. நான்-வெஜ் விருந்துன்னாலும் சம்பிரதாயத்துக்கு ஒரு காய்கறி வெக்கணும்னு, புடலங்கா கூட்டு வெச்சாங்க (புடலங்காவ கண்டாலே, எனக்கு எரிச்சலா வரும்😡).

எங்கிட்ட ஒரு பழக்கம் என்னன்னா... எனக்கு பிடிக்காத ஐட்டத்த இலைல வெச்சா, முதல்ல அதத்தான் காலி பண்ணுவேன். பிடிச்ச ஐட்டத்த, கடைசியா ரசிச்சு சாப்பிடுவேன்😋.

அப்புறம்... பெப்பர் மட்டனும், வஞ்சிரமீனும் ப்ளேட்ல கொண்டாந்து வெச்சாங்க. சாப்பாட்ட போட்டு குழம்ப ஊத்துனாங்க. செல்லத்தாய முறைச்சுகிட்டே... ஒருவாய் சாப்பாடும், ஒருவாய் புடலங்கா கூட்டுமா சாப்ட்டு, குழம்பு முடிஞ்சு ரசத்துக்கு ஷிப்ட் ஆனேன். ஒருவழியா புடலங்கா கூட்டும் காலியாகுற மாதிரி இருந்தது. திடீர்னு கிச்சன்லிருந்து எங்க மாமியார் எட்டிபாத்தாங்க.

என்ன நினச்சாங்களோ தெரில, வேகவேகமா வந்து... "ஆம்பளைக்கு எது புடிக்கும்னு குறிப்பறிஞ்சு பரிமாறணும்டீ" ன்னு சொல்லிட்டே... நாலுகரண்டி புடலங்கா கூட்டெடுத்து, இலைல கொட்டிட்டு, "இன்னும் வேணும்னா கேளுங்க மாப்ள. உள்ள நிறைய இருக்கு" 😢ன்றாங்க.

செல்லத்தாய முறைச்சா, "சாரிங்க, உங்களுக்கு புடலங்கா பிடிக்குனு எனக்கு தெரியாம போச்சு". அப்பெல்லாம் செல்லத்தாயி, ரொம்ப இன்னொசண்ட் & ஒபீடியண்ட் ஸ்டூடெண்ட்.

'இனி ரசத்துக்கும் புடலங்கா கூடத்தான் மல்லுக் கட்டணுமா ?🙄. எப்பதான் மட்டனும், மீனும் சாப்புடுறது' ன்னு, உள்ளுக்குள்ள அழுதுட்டே... திரும்பவும் எங்க மாமியார் எட்டிபாத்து, மெதுவா ஸ்டேப் பை ஸ்டெப்பா பக்கத்துல வந்தாங்க...

"ஐயையோ... இனி புடலங்கா வெச்சா, எந்திரிச்சு ஓடியே போயிடுவேன்" ன்னு, சொல்லி முடிக்கல... "ஆம்பளைக்கு எது புடிக்காதுனு குறிப்பறிஞ்சு, அத பந்திலிருந்து எடுத்துடணும்டீ" ன்னு, சொல்லிட்டே... மட்டனையும், மீனையும் தூக்கிட்டு போகும்போது... "அவருக்கு அசைவம் புடிக்கலன்றத நீதாண்டி தெரிஞ்சுக்கணும். ஒருவாய் கூட எடுத்துக்கல பாரு. சொல்ல கூச்சப்படுறாரு. நாமதாண்டி இதையெல்லாம் தெரிஞ்சு பரிமாறணும். மசமசன்னு நிக்காம, மாப்ளைக்கு அந்த புடலங்கா கூட்ட எடுத்து வெய்யிடீ"😭. பரிதாபமா மாமனார் பக்கம் திரும்பினா...

அவரு எழும்ப கடிச்சுக்கிட்டே, "நானும் எத்தனையோ பேர பாத்திருக்கேன் மாப்ள. 'எந்த சூழ்நிலைலயும், யாருக்காகவும் அசைவம் சாப்ட்ட மாட்டேன்னா, சாப்ட்ட மாட்டேன்' னு, உறுதியா நிக்குற உங்களவு பிடிவாதக்காரர, என்னோட லைப்லயே பாத்ததில்ல" 🤭ன்னு சொல்லிட்டு, செல்லத்தாய பாத்து... "அந்த குடல் ப்ரை ரெடியாயிருந்தா எடுத்துட்டு வாம்மா" ன்றாரு.

குடும்பமாய்யா இது ? !!! 😠😠😠

Address

No 2/16 Munuswamy Street Arunachalam Road Saligramam Chennai
Chennai
600093

Telephone

+918220701567

Website

Alerts

Be the first to know and let us send you an email when G MNEWS TAMIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G MNEWS TAMIL:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Chennai

Show All