12/06/2024
12 ஆண்டு காலமாக நிரந்திர விடுதி இல்லாது தாய்களும் சேய்களும் படும் இன்னலுக்கு முற்றுபுள்ளி வைப்போம்.எல்லோரும் ஒன்றிணைந்து 2025 இல் யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியை கட்ட முன்வருவோம்.
மகப்பேற்று வைத்தியநிபுணர் சரவணபவ sir இனுடைய உருக்கமான கோரிக்கையை தொடரந்து அவரது தடத்தில் இன்னுமோரு மகப்பெற்று நிபுணர்
நண்பர் சிவச்சந்திரனின் செம்மைப்படுபடுத்தப்பட்ட பதிவு கீழே..
மிக முக்கிய செய்தி . கடைசி வரை வாசியுங்கள்!
அண்மையில் ஒரு நாள் நான் இங்கிலாந்தில் கடமையில் இருந்த போது விடுதி கடும் பிஸி ஆனது.
விடுதியில் இருந்த பொறுப்பு மிட் வைfப் சமாளிக்க முடியாமல் மேலதிக சீனியர் மிட் வைfப் யைக் கூப்பிடுமளவு பிஸியானது.
எனனிடம் பலமுறை வந்து டிஸ்கஸ் பண்ணி கொண்டே இருந்தார்கள்.
அப்படி என்ன பிஸி?
எனது விடுதியில் ஐந்து தனியறைகள் மகப்பேற்றுக்காக இருக்கும்.
பிரசவ வலியில் இருக்கும் தாய்மார்கள், உறவினரோடு அந்த அறையிலேயே குழந்தை பிறக்கும் வரை தங்கியிருந்து குழந்தை பெறுவார்கள்.
பிரசவ வலி இல்லாத தாய்மார்கள் மற்றும் குழந்தை பிறந்த தாய்மார்கள் தங்கியிருக்க வேறு விடுதிகள் உள்ளன.
அன்று பிரசவ அறைகள் நான்கில் தாய்மார்கள் பிரசவ வலியில் இருந்தனர். மிஞ்சிய ஒரு அறையில் மிக அவசியமான , அவசர நிலமை தாயை மட்டும் அனுமதிப்பதென அந்த அறை வெறுமையாக இருந்தது.
இப்போது பொறுப்பு மிட் வைfப் பிஸி ஆனதுக்கான காரணம், அவசரமில்லாத கர்ப்பிணிகளின் பிரசவத்தை ஆரம்பிப்பபதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்?
விடுதி நிரம்பியதால் அவசரமில்லாத கர்ப்பிணிகளை வேறு வைத்தியசாலைக்கு அனுப்புவதா என்று முடிவெடுக்க வேண்டும்.
சில கர்பிணிகளை வீட்டுக்கு திரும்ப அனுப்பலாமா என்று முடிவெடுக்க வேண்டும்.
அனைத்து முடிவுகளையும் துல்லியமாக எடுக்க வேண்டும். பிழையாக முடிவெடுத்து குழந்தை பிறப்பைப் பின் போட்டு குழந்தைக்கோ தாய்க்கோ ஏதும் பிரச்சனை வந்தால் அது வைத்தியசாலைக்கு சிக்கலாகி விடும். அதற்காக ஒவ்வொரு முடிவெடுத்தலுக்காகவும் சீனியர் மருத்துவ மாது என்னை ஆலோசித்துக்கொண்டே இருந்தார். அதுதான் பிஸி ஆனதுக்கான காரணம்.
இது ஏன் நடந்தது?
ஒரு பெண் பிரசவத்தின் போது தனி அறையில் கணவன், அம்மா, தங்கை, மாமி என உறவினர்களோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக.
சரி இதை ஏன் இப்போது சொல்கிறேன்?
மறுபுறம், பிரசவத்திற்காகக் காத்திருக்கும் தாய்மார்கள் ஜெயில் போல இன்னொரு அறையில் பாயில் படுப்பார்கள்.
குழந்தை பிறந்தபின் மட்டும் கட்டில் கிடைக்கும். சிலவேளை மூன்று அம்மாக்களுக்கு ஒரு கட்டில் கிடைக்கும். மூன்று பேரும் பிள்ளைகளை கட்டிலில் வளர்த்தி விட்டு அருகே தம்ரோ கதிரையில் இரவு முழுக்க இருப்பார்கள்.
குழந்தை பிறந்த முதல்நாளே இரவு முழுக்க தம்ரோ கதிரையில் இருக்கும் நிலமையை யோசித்து பாருங்கள்.
பத்து வருடம் தாண்டியும் இந்த நிலமை பெரிதாக மாறவில்லை என ஒரு வைத்திய நண்பன் அழைப்பெடுத்து எழுதச் சொல்லி கேட்டான்.
இன்னொரு புறம், பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் அதி தீவிரப் பிரிவு அடிக்கடி இடமாற வேண்டிய தேவை. அது அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்குவதால் தடுக்கக்கூடிய கிருமித்தொற்றுக்கள் போன்றவற்றால்கூட பல குழந்தைகள் இறக்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்காக தனி மகப்பேற்று , பெண்ணோயியல், குழந்தை பராமரிப்பு விடுதியை அமைக்க நிலம் உள்ளதாக அறிய முடிகின்றது. ஆனால் அதற்கான கட்டடத்தை அமைக்க 3000 மில்லியன் ரூபாய்க்கு மேல் தேவைப்படலாம்.
பெரிய தொகைதான். ஆனால் மக்கள் மனது வைத்தால் தமிழருக்கு இது பெரிய தொகை இல்லை. இப்போதைய நிலையில் அரசாங்கத்தை மட்டும் நம்பி இதை செய்ய முடியாது.
தனி அமைப்பு , மனிதானால்கூட இது முடியாது.
சாதி, மத , ஊர் பேதங்களை மறந்து எல்லோரும் இணைந்தால் இது இலகுவாக செய்யப்படலாம்.
என்ன செய்யலாம்?
1.தற்போதைய அரசியல் வாதிகள் இதற்கான முனைப்பை அரசாங்கத்துடன் பேச வேண்டும். அரசிடமிருந்து பெறக்கூடிய உதவியைப் பெற முயற்சிக்க வேண்டும்.
2. இதற்கான சரியான திட்டமிடலை எழுதி அரச சார்பற்ற நிறுவனங்களை அணுக வேண்டும்.
3.
இறுதியாக பொதுமக்கள் நிதி சேகரிப்பு.
யாழ் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு தலைமையில் ஒரு வெளிப்படையான நிதி சேகரிப்பைச் செய்யலாம்.
லைக்கா, IBC போன்ற பெரிய புலம்பெயர் வியாபார நிறுவனங்களை நேரடியாக அனுகி உதவி கேட்க வேண்டும்.
இடைத்தரகர்கள் இல்லாமல் அரச அங்கிகாரத்துடன் நேரடியாக பொதுக் கணக்கு ஒன்றில் வெளிப்படையான நிதிச் சேகரிப்பு செய்தால் நமது மக்கள் கொட்டிக் கொடுப்பார்கள். தனி மனிதனாக நான் 2500$ சிலநாட்களில் சேகரிக்க முடிந்தது. எல்லோரும் சேர்ந்தால் 3000 மில்லியன் சின்ன காசு.
இதற்காக அனைத்து சமூக அமைப்புக்களும் சுயநலம் பார்க்காமல் ஒன்றிணைந்து இதை விளம்பரப்படுத்த வேண்டும்.
எல்லோரும் சுயநலம் மறந்து மனசு வைத்தால் சில வருடங்களில் நமது தாய்மார்களும் கெளரவமான பிரசவத்தை மேற்கொள்ளும் அடிப்படை உரிமை கிடைக்கும்.
இந்தப் பதிவை எந்த தனிநபர்களும் , ஊடகங்களும் எனது பெயர், அனுமதி இல்லாமல் அப்படியே எடுத்து பயன்படுத்தலாம்.
வைத்தியசாலை நிர்வாகம் , பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி , யாழ் மகப்பேற்று நிபுணர்கள் இது பற்றி அவர்களது திட்டங்களை வெளிப்படுத்தி இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க உங்களின் ஆதரவு உதவும்.
இந்த செய்தியை என்ற ஹஷ் tag உடன் பகிருங்கள்.
இந்த ஹஷ் tag 1000 என்ற அளவை தாண்டும் போது இது சர்வதேச அளவில் வைரலாகி உலகமெல்லாம் பரவி இருக்கும் நம் உறவுகள் அனைவரையும் போய்ச் சேரும். சிலவேளை இது சர்வதேச அளவில் ட்ரென்ட் ஆகும்போது வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியும் கிடைக்கும்.
சமூக வலைத்தள பிரபலங்களும் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பகிருங்கள்.
பகிருங்கள்.
எல்லோரும் சேர்ந்து தட்டினால் நிறைய கதவுகள் திறக்கும்.
நன்றி . மகப்பேற்று வைத்திய நிபுணர் Sivachandran Sivagnanam