Zeestarதமிழ் News - Zeestartamil

Zeestarதமிழ் News - Zeestartamil . Zeestartamil official Facebook
ZEESTARதமிழ் �����
புதுமைகளின் நாயகன்,
(1)

மகளிர் விவகார அமைச்சினால் மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணசபையால் நடத்தப்பட்ட வீதியோர நாடகப்போட்டியில் எமது கலாலயம...
06/03/2024

மகளிர் விவகார அமைச்சினால் மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணசபையால் நடத்தப்பட்ட வீதியோர நாடகப்போட்டியில் எமது கலாலயம் நாடகக்குழுவின் "இருள் ஒளி பெறுகின்றது" நாடகம் மாவட்ட மாட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

30/11/2023

🚨BREAKING NEWS
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.

01.ஒக்டேன் 92 - 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாகும்.

02.ஒக்டேன் 95 - 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாகும்.

03.லங்கா டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 329 ரூபாவாகும்.

04.சுப்பர் டீசல் - 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாகும்.

05. மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 247 ரூபா நிர்ணாயிக்கப்பட்டுள்ளது.

01/09/2023
நீங்கள் இலங்கையின் எந்த பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் எமது நிறுவனத்தின் ஊடாக வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்கு பொருட்க...
26/07/2023

நீங்கள் இலங்கையின் எந்த பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் எமது நிறுவனத்தின் ஊடாக வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்கு பொருட்கள் கடிதங்கள் அனுப்பி வைக்க முடியும் உங்களது இடங்களில் இருந்து எம்மால் பொதிகள் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலதிக விபரங்களுக்கு எமது 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை இலக்கத்தில் தொடர்பபு கொள்ளுங்கள்.

0766819221(வைபர்/வட்ஸ்சப்) கிளிநொச்சி

20/07/2023
வவுனியாவில்  விஷேட விழிப்புணர்வு செயல்திட்டம்  .....உணவு பாதுகாப்பு  தொடர்பான விசேட விளிப்புனர்வு ஒன்று    வவுனியா  மாவட...
26/02/2023

வவுனியாவில் விஷேட விழிப்புணர்வு செயல்திட்டம் .....

உணவு பாதுகாப்பு தொடர்பான விசேட விளிப்புனர்வு ஒன்று வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது

குறித்த நிகழ்வானதுFlan Sri Lanka நிறுவனத்தின் ஏற்பாட்டில் (24 02.2023) சனிக்கிழமை காலை 9.00மணிமுதல் வவுனியா கமநலசேவை கள் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட இளைஞர்கள் யுவதிகள் மற்றும் பலசமூக மட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமகாலத்தில் போசக்கான உணவு உணவு பொதிகளின் தரம் அதன் குறியீடுகள் அனைவருக்கும் கலச்சாரத்துக்கேற்ற சரியான உணவுகள் கிடைத்திட உறுதி செய்தல் நுகர்வோர் பாதுகாப்பு முறைகள் தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் கருத்துறைகள் பகிரப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

12/02/2023
12/02/2023
30/11/2022
வவுனியாவில் கால்நடை களை திருடிய ஒருவர்  கைது...Zeestarதமிழ் News - Zeestartamil வவுனியா பத்தினியார்  மகிழங்குளம் பகுதியி...
30/11/2022

வவுனியாவில் கால்நடை களை திருடிய ஒருவர் கைது...

Zeestarதமிழ் News - Zeestartamil

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில்

கால்நடை களை திருடி இறைச்சிக்காக பயன்படுத்திய ஒருவர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு காவல்த்துறையி்னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

குறித்த சம்பவம்29.11.22 இன்று இரவு இடம் பெற்றுள்ளது

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

குழு ஒன்று பொதுமக்களின கால் நடைகளைதிருடி அதனை இறச்சிகாகாக பயன் படுத்தி வந்த நிலையில்

அதனை அவதானித்த குறித்த கிரம இளஞர்களால் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பிடிக்கப்பட்டு

காவல்துறையினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வவுனியா காவல்துறையினர் மேற் கொன்டு வருகின்றனர்

https://youtu.be/k7adkoUMCSk
24/09/2022

https://youtu.be/k7adkoUMCSk

8 மாதக்குழந்தை தொண்டையில் சிக்கிய நெயில் கட்டர் Sri lanka today news tamil local news India news lat...

09/09/2022
கொடூரமாக கொன்று காட்டில் புதைக்கப்பட்ட சிறுமி
09/09/2022

கொடூரமாக கொன்று காட்டில் புதைக்கப்பட்ட சிறுமி

Sri lanka today news tamil local news India news latest news in Sri Lanka today news ...

தந்தையின் வான் சில்லில் சிக்குண்டு 2 வயது குழந்தை பலி
08/09/2022

தந்தையின் வான் சில்லில் சிக்குண்டு 2 வயது குழந்தை பலி

Trincomalee today news Trincomalee newsதந்தையின் வான் சில்லில் சிக்குண்டு 2 வயது குழந்தை பலிSri lanka today news tamil local news India ...

28/08/2022

*2021 A/L பரீட்சை பெறுபேறுகள் பற்றிய முழு விபரம்..!*

👉 171,497 பேர் (62.9%) பல்கலைக்கு விண்ணப்பிக்க தகுதி.

👉 49 பேரினது பெறுபேறுகள் இடைநிறுத்தம்.

👉2022 பரீட்சைக்கு தோற்ற செப்டெம்பர் 01 - 08 வரை விண்ணப்பிக்க அவகாசம்

2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை பரீட்தத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை, www.doenets.lk அல்லது results.exams.gov.lk அல்லது exams.gov.lk எனும் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளங்களின் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.

கடந்த 2021 இல் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை இவ்வருடம் பெப்ரவரி 07ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 05ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

*பரீட்சைக்கு விண்ணப்பித்தோர்*

இப்பரீட்சைகள் 2,437 நிலையங்களில் இடம்பெற்றதோடு, இதில் 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளிட்ட 345,242 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பத்திருந்தனர்.

*பரீட்சைக்கு தோற்றியோர்*

அதற்கமைய, 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

*62.9% பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி*

பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 149,946 பாடசாலை பரீட்சார்த்திகளும், 21,551 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்கலாக 171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

*பெறுபேறு இடைநிறுத்தம்*

அத்துடன், இப்பரீட்சார்த்திகளில் 37 பாடசாலை பரீட்சார்த்திகளினதும், 12 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்கலாக 49 பேரினது பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

*பெறுபேறுகளை தரவிறக்கம் செய்தல்.*

பெறுபேறுகள் வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்களின் பின்னர் onlineexams.gov.lk/onlineapps/index.php/welcome/online_results எனும் முகவரி ஊடாக பின்வரும் முறையில் பெறுபேறுகளை தரவிறக்கம் செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும், விண்ணப்பங்களை அனுப்பும்போது, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name), கடவுச்சொல் (Password) மூலம், உரிய பாடசாலையின் பெறுபேறுகளை தரவிறக்கி அச்சுப் பிரதியை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பான பயனர்பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) மூலம் குறித்த மாகாண மற்றும் வலய பெறுபேறுகளை தரவிறக்கம் செய்து/ கண்காணிக்க வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும், பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்கி பெறுபேறு அட்டவணையை தரவிறக்க/ கண்காணிப்பதற்கான வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

*இவ்வருடம் மீண்டும் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு.*

இதேவேளை, இம்முறை 2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மீண்டும் 2022 பரீட்சைக்கு தோற்ற செப்டெம்பர் 01 - 08 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பேறுபேறுகளை, மீளாய்வு பெறுபேறுகள் வெளியிட்டதன் பின்னர் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*பெறுபேறுகளின் மீளாய்வு*

க.பொ.த. (உ/த) பரீட்சை மீளாய்வுக்கு ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பிப்பதற்கான திகதி தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார்.

*மேலதிக விபரங்களுக்கு*

*பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு பெறுபேற்று பிரிவு*

☎️011-2784208
☎️011-2784537
☎️011-3188350
☎️011-3140314
☎️011-2786616

*துரித அழைப்பு இலக்கம்: 1911*

*மின்னஞ்சல் முகவரி* [email protected]

*பெறுபேறுகளை கையடக்கத் தொலைபேசி ஊடாக SMS மூலம் பெற*

Exams சுட்டெண்
டைப் செய்து
பின்வரும் இலக்கத்திற்கு SMS செய்யவும்.

👉Airtel - 7545
👉Dialog - 7777
👉Etisalat - 3926
👉Hutch - 8888
👉Mobitel - 8884

27/08/2022

புதிய நீர் கட்டணங்கள் - முழு விபரம்.

நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (26) வௌியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தில் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் புதிய குடிநீர் கட்டண உயர்வு பின்வருமாறு :

அலகுகள் 00-05: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 20 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 300

அலகுகள் 06-10: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 27 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 300

அலகுகள் 11-15: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 34 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 300

அலகுகள் 16-20: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 68 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 300

அலகுகள் 21-25: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 99 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 300

அலகுகள் 26-30: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 150 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 900

அலகுகள் 31-40: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 179 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 900

அலகுகள் 41-50: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 204 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 2,400

அலகுகள் 51-75: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 221 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 2,400

75 அலகுகளுக்கு மேல்: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 238 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 3,500

26/08/2022

ரஞ்சன் ராமநாயக்க விடுதலை....!

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, வெலிகடை சிறைச்சாலையிலிருந்து சற்று முன்னர் வெளியேறினார்

25/08/2022

மீண்டும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து டீசல் மற்றும் பெற்றோல் ஆகிய இரு கையிருப்புகளும் கிடைக்கவில்லை எனவும் இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி. வி. சாந்த சில்வா இன்று (25) தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறையால் பல பெற்றோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் பெற்றோல் நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் சாந்த சில்வா தெரிவித்தார்.

25/08/2022

புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு...!

ஹட்டன் சிங்கமலை சுரங்கத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

உயிரிழந்தவரின் சட்டை பையில் பணம் மத்திரமே இருந்துள்ளதாக தெரிய வருகிறது,

சடலம் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

24/08/2022

விநியோகம் குறைவதால் மீண்டும் எரிபொருள் வரிசை?

நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசையில் நிற்கும் போக்கு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாரந்தோறும் எரிபொருள் விநியோகம் குறைக்கப்படுவதால், எரிபொருளைப் பெறுவதற்கு வரிசைகள் உருவாகி வருவதாகவும் அச்சங்கம் கூறுகிறது.

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எவ்வித பிரச்சினையுமின்றி எரிபொருளை வழங்கக்கூடிய நிலையில், எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மட்டும் எரிபொருள் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, QR முறைமையின் அடிப்படையில் எரிபொருளைப் பெற மக்கள் வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

13/08/2022

#உன்னை நம்பு
பெண்ணை மதி,
நற்சிந்தனையோடு இந்த இரவு மலரட்டும்,

12/08/2022

தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கும் அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியின் அக்ராசன உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்ற போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

10/08/2022

vadivelu best comedy scene
#

"நடக்குறது கூட ஒரு வேலையா இருக்கே"

09/08/2022

best comedy scene

07/08/2022

Don best comedy

06/08/2022

Like 157000
Thanks

Address

Vavuniya

Telephone

+94774759119

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zeestarதமிழ் News - Zeestartamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zeestarதமிழ் News - Zeestartamil:

Videos

Share