Vavuniya News

Vavuniya News உண்மைச் செய்திகளை உடனுக்குடன் வழங்க?
(2)

18/06/2024

வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் ஒர் vibration உணரப்பட்டதாக தகவல் உங்கள் பகுதிகளில் எவ்வாறான நிலமை?

குளம் என பெயர் முடிவடையும் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் 1 அனந்தர்புளியங்குளம்2 அரசடிகுளம்3 அம்மிவைத்த குள...
08/10/2022

குளம் என பெயர் முடிவடையும் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

1 அனந்தர்புளியங்குளம்
2 அரசடிகுளம்
3 அம்மிவைத்த குளம்
4 அலைக்கல்லு போட்டகுளம்
5 ஆசிகுளம்
6 ஆண்டியாபுளியங்குளம்
7 ஆறுமுகத்தான்புதுக்குளம்
8 இளமருதங்குளம்
9 இலுப்பைக்குளம்
10 இரணைஇலுப்பைகுளம்
11 இறம்பைகுளம்
12 இராமமன் கற்குளம்
13 ஈச்சங்குளம்
14 ஈறற்பெரியகுளம்
15 உக்குளாங்குளம்
16 எல்லப்பர்மருதங்குளம்
17 ஒயார்சின்னக்குளம்
18 கங்கன்குளம்
19 கள்ளிக்குளம்
20 கற்குளம்
21 கற்காரங்குளம்
22 கட்டையர் குளம்
23 கருங்காலிக்குளம்
24 கல்வீரான்குளம்
25 கல்நாட்டியகுளம்
26 கல்லாண்டகுளம்
27 கருங்காலிக்குளம்
28 கரும்பிச்சான் குளம்
29 கனகராயன் குளம்
30 கான்சுரம் குளம்
31 காயான்குளம்
32 காக்கையன்குளம்
33 காத்தார் சின்னகுளம்
34 கிறிஸ்தோகுளம்
35 குஞ்சுக்குளம்
36 குருக்கள்புதுக்குளம்
37 குறிசுட்டகுளம்
38 குருவிசுட்ட குளம்
39 கூமாங்குளம்
40 கூழாங்குளம்
41 கொந்தக்காரன்குளம்
42 கொங்கராயன்குளம் (செட்டிக்குளம்)
43 கொம்புவைத்தகுளம்
44 கோவில் புளியங்குளம்
45 கோவில்குளம்
46 கோழியகுளம்
47 கொமரசன்குளம்
48 கோவில் புதுக்குளம்
49 சமளங்குளம்
50 சாலம்பைக்குளம்
51 சாஸ்திரிகூளாங்குளம்
52 சின்னச்சிப்பிக்குளம்
53 சின்னப்பூவரசன்குளம்
54 சின்னபுதுக்குளம்
55 சிதம்பரபுரம்
56 சின்னக்குளம்
57 சூசைப்பிள்ளையார்குளம்
58 செட்டிகுளம்
59 செவிடன்குளம்
60 சேமமடுக்குளம்
61 தவசிக்குளம்
62 தச்சங்குளம்
63 தம்பனை புளியங்குளம்
64 தம்பர்சின்னக்குளம்
65 தலை வேண்டியான்பட்டி குளம்
66 தாண்டிக்குளம்
67 தரணிக்குளம்
68 தாலிக்குளம்
69 திருநாவடக்குளம்
70 துலாவரக்குளம்
71 துவரங்குளம்
72 தெற்கிலுப்பைக்குளம்
73 தேவர்குளம்
74 நாம்பன் குளம்
75 நெடுங்குளம்
76 நாகர்இலுப்பைக்குளம்
77 நித்திக்குளம்
78 நெளுக்குளம்
79 நேரியகுளம்
80 நொச்சிகுளம் ,
81 பரசன்குளம்
82 பட்டடை பிரிந்த குளம்
83 ப்ட்டாணிச்சிபுளியங்குளம்
84 பண்டாரிக்குளம்
85 பறையனாலங்குளம்
86 பன்றிக்கெய்தகுளம்
87 பனைமுறிஞ்சான் குளம்
88 பண்டியீண்டகுளம்
89 பனிசாங்குளம்
90 பயறிக்குளம்
91 பத்தினியார்மகிழங்குளம்
92 பாவற்குளம்
93 பிரமனாலங்குளம்
94 பிளித்தரித்த புளியங்குளம்
95 புதுக்குளம்
96 புதுபுலங்குளம்புளியங்குளம்
97 புதியவேலர்சின்னக்குளம்
98 புளித்தறித்த புளியாங்குளம்
99 பூவரசங்குளம்
100 புளியங்குளம்புளித்தரித்தகுளம்
101 பெரிய குளம்
102 பெரிய உலுக்குளம்
103 பெரியபுளியங்குளம்
104 பெரியார்குளம்
105 பேய்கூப்பிட்டான்குளம் ( இது அனுராதபுரம் மாவட்டமா?)
106 பேயாடி கூழான்குளம்
107 மறவன்குளம்
108 மன்னகுளம்
109 மருதங்குளம்
110 மகாமயிலங்குளம்
111 மகாரம்பைக்குளம்
112 மரக்காரன்பளை
113 மரம்முறிஞ்சான் குளம்
114 மரையடித்த பரசன்குளம் அம்மிவைத்த குளம்
115 மருதங்குளம்
116 மணியர்குளம்
117 மயிலங்குளம்
118 மதவுவைத்தகுளம்
119 மனுக்குலம்
120 மறவன்குளம்
121 மயில் முட்டை இட்ட குளம்
122 மரையடிச்சகுளம்
123 மாடுபாஞ்சான் குளம்
124 மாதர் பனிகர் மகின்குளம்
125 மாங்குளம்
126 மாடுகண்டுபோட்டகுளம்
127 மார இலுப்பைகுளம்
128 முதலியாகுளம்
129 முடவன் குளம்
130 முள்ளிக்குளம்
131 முகத்தான்குளம்
132 ராசேந்திரன்குளம்
133 வணங்குளம்
134 வன்னிவிழாங்குளம்
135 வவுனிக்குளம்
136 வண்ணான்சின்னக்குளம்
137 வாழவைத்தகுளம்
138 வாகைகட்டிய ஒலுக்குளம்
139 விளாத்திகுளம்
140 விளங்குளம்
141 விளக்கு வைத்த குளம்
142 விஞ்ஞானக்குளம்
143 வெங்கலச்செட்டிகுளம்
144 வெள்ளாங்குளம்
145 வெளிக்குளம்
146 வேப்பங்குளம்
147 வேலர் சின்னக்குளம்
148 வைரவபுளியங்குளம்

தவறவிட்ட குளப்பெயர்கள் கொண்ட ஊர்களை கூறுங்களேன்.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 18 பேர் இன்று, (22) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிஙக முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண...
22/07/2022

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 18 பேர் இன்று, (22) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிஙக முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

1. தினேஸ் குணவர்தன- பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

2. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் அமைச்சு

3. சுசில் பிரேமஜயந்த- கல்வி அமைச்சர்

4. பந்துல குணவர்தன- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகம்

5. கெஹேலிய ரம்புக்வெல்ல- சுகாதாரம், நீர் வழங்கல்

6. மஹிந்த அமரவீர- விவசாய, வனஜீவ மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு

7. விஜயதாச ராஜபக்ஷ- நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு

8. ஹரின் பெர்ணான்டோ- சுற்றுலா மற்றும் காணி

9. ரமேஸ் பத்திரன- பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில்

10. பிரசன்ன ரணதுங்க- நகர அபிவிருத்தி

11. அலி சப்ரி- வெளிநாட்டு அலுவல்கள்

12. விதுர விக்ரமநாயக்க- புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரம்

13. காஞ்சன விஜேசேகர- மின்சக்தி மற்றும் எரிசக்தி

14. நசீர் அஹமட்- சுற்றுச்சூழல்

15.ரொஷான் ரணசிங்க- விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்பாசனம்

16. மனுஷ நாணயக்கார- தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

17. டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

18. நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ- வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு

Litro Gas வெளியிட்டுள்ள புதிய விலைப்பட்டியல்.அதிக விலையில் விற்பனை செய்தால் ☎️1311 அழைத்து முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.
29/03/2022

Litro Gas வெளியிட்டுள்ள புதிய விலைப்பட்டியல்.
அதிக விலையில் விற்பனை செய்தால் ☎️1311 அழைத்து முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
07/01/2022

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

2022 இல் நீண்ட விடுமுறை நாட்கள்.. விபரங்கள் வெளியானது...!!!எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை நாட்களைக் கொண்ட ஆண்ட...
28/12/2021

2022 இல் நீண்ட விடுமுறை நாட்கள்.. விபரங்கள் வெளியானது...!!!

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை

நாட்களைக் கொண்ட ஆண்டாக காணப்படுகின்றது.

அதாவது 2022 ஆண்டில் 43 நீண்ட விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன.

எதிர்வரும் ஆண்டிற்கான நாட்காட்டியின்படி, இந்த நீண்ட விடுமுறைகளை தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான நீண்ட விடுமுறை நாட்கள் பின்வருமாறு..

ஜனவரி மாதம் 14,15,16 மற்றும் 17 ஆம் திகதிகளும்

பெப்ரவரி மாதம் 04,05 மற்றும் 06 ஆம் திகதிகள்

மார்ச் மாதம் 17,18,19 மற்றும் 20 ஆம் திகதிகளும்

ஏப்ரல் மாதம் 13, 14, 15, 16, 17 ஆம் திகதிகள்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக 30, 01,02 மற்றும் 03 அம்துடன்,

மே மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளும்

ஜூன் மாதம் 11, 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகள்

ஆகஸ்ட் மாதம் 11,12,13 மற்றும் 14 ஆம் திகதிகள்

ஒக்டோபர் மாதம் 08,09,10 ஆம் திகதிகளும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளும்

நவம்பர் மாதம் 05,06 மற்றும் 07 ஆம் திகதிகள்

டிசம்பர் மாதம் 24,25 மற்றும் 26 ஆம் திகதிகளும் 2022 ஆம் ஆண்டில் நீண்ட விடுமுறை நாட்களாகக் காணப்படுகின்றன.

பிரியந்த கொரோனாவினால் இறந்துவிட்டார் என அம்மாவிடம் தெரிவித்துள்ளோம் - பிரியந்தவின் சகோதரர் கமல்சிறி-எனது சகோதரர் மதநிந்த...
07/12/2021

பிரியந்த கொரோனாவினால் இறந்துவிட்டார் என அம்மாவிடம் தெரிவித்துள்ளோம் - பிரியந்தவின் சகோதரர் கமல்சிறி
-
எனது சகோதரர் மதநிந்தனையில் ஈடுபட்டார் என தெரிவிப்பதன் மூலம் குற்றவாளிகள் தப்ப முயல்கின்றனர்- பிரியந்தவின் சகோதரர் கமல்சிறி

எனது சகோதரர் மதநிந்தனையில் ஈடுபட்டார் என தெரிவிப்பதன் மூலம் குற்றவாளிகள் தப்ப முயல்கின்றனர் என பாக்கிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவத்தனவின் சகோதரர் கமல்சிறி தியவர்த்தன தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரருக்கு வழங்கிய பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

அவர் ஏன் பாக்கிஸ்தான் சென்றார்?

2010 இல் அவர் பைசலாபாத்தில் தொழிற்சாலையொன்றில் பணிபுரிய சென்றார்- அதன் பின்னர் அவர் இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்தில் இணைந்துகொண்டார்- அவர் அந்த நிறுவனத்தின் முழு நடவடிக்கைகளிற்கும் பொறுப்பாக விளங்கினார் – முகாமையாளராக செயற்பட்டார்,
உரிமையாளருக்கு அடுத்த நிலையில் அவர் காணப்பட்டார்,அவர் அங்கு பணிபுரிய ஆரம்பித்தவேளை 500 இயந்திரங்கள் காணப்பட்டன தற்போது அந்த தொழிற்சாலை 1500 இயந்திரங்களை கொண்டதாக விரிவடைந்துள்ளது.
பேராதனை பல்கலைகழகத்தில் தான் கற்றுக்கொண்ட கைத்தொழில்துறை பொறியியலை பயன்படுத்தி பிரியந்தவே அந்த தொழிற்சாலையை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்சென்றார்.
அந்த தொழிற்சாலைகள் பழைய முறையில் இயஙகின அவற்றிற்கு புதிய கைத்தொழில்துறை பொறியியல் தொழில்நுட்பங்கள் புதிய விடயமாக காணப்பட்டன
பிரியந்த இலங்கை வந்து தனது குடும்பத்தினருடன் வாழ விரும்பிய போதிலும் உரிமையாளர் அவர் தன்னுடன் இருக்கவேண்டும் என விரும்பினார்.

கேள்வி – நீங்கள் மாத்திரம் அவரது சகோதரரா?

பதில் - இல்லை எனது மூத்த சகோதரர் கராச்சியில் இருக்கின்றார், எங்களிற்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர்- நான் நான்காவது பிள்ளை அதன் பின்னர் சகோதரி ஒருவரும் இருக்கின்றார் பிரியந்த கடைசிப்பிள்ளை.

கேள்வி – அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஆடைத்தொழிற்சாலைகளிலேயே பணியாற்றினாரா?

பதில்-ஆம் ஆரம்பத்தில் அவர் பிரன்டிக்சில் தொழில்புரிந்தார், அதன் பின்னர் பாக்கிஸ்தான் சென்றார், அவ்வப்போது வந்து தனது குடும்பத்தை பார்த்துவிட்டு செல்வார், 2019 இல் அவர் இறுதியாக இலங்கை வந்தார், கொரோனாவால் அவரால் அதன் பின்னர் வரமுடியவில்லை.

கேள்வி – அவரது குடும்பத்தினர் அவரை சென்று பார்த்தனரா?

பதில்-நானும் எனது மூத்தசகோதரரும் அங்கு தொழில்புரிந்தோம் ஆனால் அவரது பிள்ளைகளின் பாடசாலை கல்வி காரணமாக மனைவியும் பிள்ளைகளும் அங்கு செல்லவில்லை.
கேள்வி- அவர் குடும்பத்துடன் தொடர்பிலிருந்தாரா?
பதில்- ஆம் அவர் அடிக்கடி தொடர்பிலிருந்தார்.

கேள்வி- அவர் தான் அங்கு எதிர்கொண்டுள்ள விடயங்கள் குறித்து ஏதாவது தெரிவித்தாரா?

பதில்- இல்லை - இந்த தொழிற்சாலைகளில் அடிக்கடி வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறும், அங்கு சங்கங்களும் ஏனைய குழுக்களும் உள்ளன, ஆனால் அவர்களிடம் முன்கூட்டிய திட்டம் இல்லை,அனைவரும் மசூதிக்கு செல்வதால் வழமையாக வெள்ளிக்கிழமைகளில் அவர்கள் பணிபகிஸ்கரிப்பை ஏற்பாடு செய்வார்கள் .அதன் பின்னர் வீதிகளில் உள்ளவர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் இணைந்துகொள்வார்கள்.

கேள்வி - இந்த சம்பவத்திற்கான காரணம் என்னவென்பது தெரியுமா,
எனக்கு கிடைத்த தகவலின்படி மக்கள் மசூதிக்கு சென்றுகொண்டிருக்கின்ற தருணத்திலேயே இந்த வன்முறை வெடித்துள்ளது, ஊழியர்கள் தங்களின் சம்பளம் குறித்து நிர்வாகத்துடன் பேசுவதற்கு முயன்றுள்ளனர்,ஆனால் முகாமைத்து பணிப்பாளர் அவ்வேளை நாட்டில் இருக்கவி;ல்லை.
இதன் காரணமாக தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வெளியே திரண்டு கோசங்களை எழுப்பியுள்ளனர்,
இந்த குழப்பநிலையின் போது யாராவது பேசுவதில் பயனில்லை என தெரிவித்திருக்கலாம் அவரை அலுவலகத்திலிருந்து வெளியே இழுத்து ஆடைகளை அகற்றி தலையில் அடித்திருக்கலாம்,அதன் பின்னர் அவர்கள் அவரின் உடலை தீயிட்டிருக்கலாம்,பொலிஸார் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என சிலர் தெரிவிக்கின்றனர் ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது எங்களிற்கு தெரியாது.

கேள்வி- தீவிரவாத இஸ்லாமிய குழுவின் சுவரொட்டியை கிழித்தமையினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது என ஊடகங்கள் ஏன் தெரிவிக்கின்றன?

பதில்- இது பிழையான குற்றச்சாட்டு- அவர்கள் முஸ்லீம் அல்லாத ஒருவரை கொலை செய்தால் அந்த நபர் மதநிந்தனையில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டுகின்றனர்.
அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக அதனை பயன்படுத்துகின்றனர்.
ஏனென்றால் இந்த நாடுகளில் நபர் ஒருவர் மதநிந்தனையில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டால் நீதிமன்றங்கள் பொலிஸார் கூட மௌனமாகிவிடுகின்றனர்.அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தால் கூட யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
பிரியந்த பத்து வருடம் பணிபுரிந்துள்ளார் அன்றுதான் அவர் சுவரொட்டியை கிழித்தாரா?
மேலும் அவர்கள் அந்த சுவரொட்டிகளை அராபிய மொழியில் எழுதுகின்றனர் அதில் என்ன எழுதியுள்ளது என்பது யாருக்கு விளங்கும்?
தொழிற்சாலைக்குள் இந்த சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு அனுமதியும் இல்லை.
நாங்கள் முஸ்லீம் நாட்டில் இருக்கின்றோம் என்பது தெரியும் ஏன் நாங்கள் சுவரொட்டிகளை கிழிக்கவேண்டும்?
எங்களுடன் தொடர்பிலிருந்தவர்களை நாங்கள் கேட்டபோது இது சம்பளப்பிரச்சினை என்றே அவர்கள் தெரிவித்தனர்?

கேள்வி? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?

பதில்- ஜனாதிபதி ஊடக பிரிவு சமீபத்தில் என்னை தொடர்புகொண்டது- பாக்கிஸ்தான் பிரதமர் மிகவும் திறமைசாலியொருவரை இழந்துவிட்டோம் என தெரிவித்தார் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் எனது சகோதரர் மீது மதநிந்தனை குற்றச்சாட்டை முன்வைத்து சட்டத்திலிருந்து தப்ப முயல்கின்றனர்.
இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பாக்கிஸ்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கி;ன்றேன்.
நாங்கள் எங்கள் சகோதரரை இழந்துவிட்டோம் அவர் இனி திரும்பிவரப்போவதில்லை அங்கு சில வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர் அரசாங்கம் குற்றவாளிகளிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்,அங்குள்ள ஏனைய இலங்கையர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்

கேள்வி- இந்த சம்பவத்தின் பின்னர் உங்கள்குடும்பத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா?

பதில் - எங்களை வன்முறை கும்பல் தேடியதாக தகவல் கிடைத்தது,எனதுமூத்த சகோதரர் சியால்கோட்டிலிருந்து வெளியேறினார் ஆனால் அதிகாரிகள் நிலைமை சரியில்லை என தெரிவித்து லாகூரில் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.
அவர் மீண்டும் கராச்சிக்கு வந்துள்ளார் ஆனால் பழைய இடத்திலிருந்து வெளியேறியுள்ளார்,அவரது தொழிற்சாலை நிர்வாகம் அவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளது.

கேள்வி
இந்த சம்பவத்தை குடும்பம் எவ்வாறு எதிர்கொண்டது?

பதில் நாங்கள் அதிர்ச்சியிலிருக்கின்றோம் நாங்கள் எங்கள் தாயாருக்கு இது குறித்து இன்னமும் அறிவிக்கவில்லை அவர் தனது இளைய மகன் குறித்து எப்போதும் விசாரிப்பார்,கொவிட்டினால் அவர் உயிரிழந்துவிட்டார் உடலை மூடிதான் கொண்டுவருவார்கள் என தெரிவித்துள்ளோம்.

இரண்டு கிழமைக்கு ஒருமுறை அவர் அம்மாவை தொடர்புகொள்வார் அவர் தொலைபேசி எடுக்காவிட்டால் சுதுமாத்தையா ஏன் தொலைபேசி எடுக்கவில்லை என அவர் கேட்பார்.

02/12/2021

வவுனியா சின்னச்சிப்பிக்குளம் கிராமத்திலும் கேஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு
உயிர்ச்சேதங்கள் இல்லை

09/09/2021

உங்கள் ஊரில் புதிய விலையில் அரிசி, சீனி கிடைக்கின்றதா?
நண்பர்களே

விலை - இடம் என்பவற்றை பதிவிடுங்கள்👇

03/09/2021

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

 #சீனி மற்றும் உள்நாட்டு  #அரிசியின் விலைகளில்  இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம்! #வெள்ளைச் சீனிபொதி செய்யப்ப...
02/09/2021

#சீனி மற்றும் உள்நாட்டு #அரிசியின் விலைகளில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம்!

#வெள்ளைச் சீனி
பொதி செய்யப்பட்டது : ரூ. 125/-
பொதி செய்யப்படாதது: ரூ. 122/-

#சிவப்பு சீனி
பொதி செய்யப்பட்டது : ரூ. 128/-
பொதி செய்யப்படாதது: ரூ. 125/-

வெள்ளை/சிவப்பு சம்பா: ரூ 103/-
வெள்ளை/சிவப்பு நாடு : ரூ 98/-
வெள்ளை/சிவப்பு பச்சை அரிசி: ரூ 95/

27/08/2021

செப்டம்பர் 6 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது

 #கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு ஒருவருக்கு தலா ரூபா 1000 வீதம் 2.5 கோடி ரூபாய்...
26/08/2021

#கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு ஒருவருக்கு தலா ரூபா 1000 வீதம் 2.5 கோடி ரூபாய்களை கம்பஹாவைச் சேர்ந்த மஞ்சுல பெரேரா எனும் கோடீஸ்வரர் வாரி வழங்கியுள்ளார். உண்மையில் அவரை பாராட்டியேயாக வேண்டும்.

சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே, மதத் தலைவர்களே, நண்பர்களே, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி ...
20/08/2021

சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே,
மதத் தலைவர்களே,
நண்பர்களே,

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனால் தான், இலங்கைக்குத் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்காக, கடந்த காலங்களில் நான் விசேட ஆர்வம் காட்டியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்களுடன், இது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் உரையாடினேன். மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களுக்கு, நான் தனிப்பட்ட ரீதியில் கடிதங்களை அனுப்பினேன்.

தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் நாடுகளுடன், நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாகவும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும் கலந்துரையாடினோம். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை, எமது அதிகாரிகள் நேரடியாகத் தொடர்புகொண்டனர்.
எமது நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென்ற என்னுடைய தேவையின் காரணமாகவே, இந்த அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டேன்.

இந்த முயற்சிகளின் பலனாகவே, தற்போது ஒவ்வொரு மாதமும், எமக்குத் தேவையான தடுப்பூசிகள், பாரியளவில் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன.
எமக்கு முதன் முதலாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியே கிடைக்கப்பெற்றது.
அதன் பின்னர், சீனா உற்பத்தி செய்த சினோஃபாம் தடுப்பூசி எமக்குக் கிடைக்கப்பெற்றாலும், அந்தத் தடுப்பூசிக்கு, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) அனுமதி கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பொதுமக்களுக்கு அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்கும் பணி, சுமார் ஒரு மாதகாலம் தாமதமானது.

எவ்வாறெனினும், இவ்வாண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல், சினோஃபாம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. தவிர, அமெரிக்காவிடம் இருந்து ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளும் ஜப்பானிலிருந்து அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளும், ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதால், தடுப்பூசி ஏற்றும் நாடுகளின் பட்டியலில், நாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம்.

இம்மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், ஒரு கோடியே இருபது இலட்சத்து பத்தொன்பது ஆயிரத்து நூற்று தொண்ணூற்று மூன்று (12,019,193) பேருக்கு, முதலாவது அலகு தடுப்பூசியை வழங்கியுள்ளோம்.

அதேவேளை, ஐம்பத்து ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரத்து நூற்று எண்பத்தைந்து (5,124,185) பேருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்கியுள்ளோம். தவிர, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்காக, மேலும் சுமார் மூன்று மில்லியன் தடுப்பூசிகள், கைவசம் எம்மிடம் இருக்கின்றன. இன்னும் மேலதிகமாக மூன்று மில்லியன் தடுப்பூசிகள், இம்மாத இறுதியில் கிடைக்கவுள்ளன.

இது வரையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதோடு, அவர்களில் 43 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குள், 81 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையும் உள்ளது. செப்டெம்பர் 10ஆம் திகதிக்குள், 100 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்க முடியும்.

அந்த நிலைமையுடன், தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைவடையும்.
நாட்டிலுள்ள முன்வரிசைச் சுகாதார ஊழியர்கள், துறைமுகம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவையாளர்கள், பாதுகாப்புத் தரப்பினர், தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் நாம் தடுப்பூசி ஏற்றியுள்ளோம். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கூட, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றியுள்ளோம்.

இதற்கு மேலதிகமாக, 30 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு மில்லியன் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் தடுப்பூசி பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.
நாடு முழுவதிலும் மகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், கிராம சேவகர் பிரிவுகளைத் தனிமைப்படுத்தல், ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தல், அரச சேவையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைத்தல், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தடுத்தல், சில வர்த்தக நடவடிக்கைகளை மூடிவிடல், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை நிறுத்துதல், மதஸ்தலங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தடுத்தல் போன்ற கட்டுப்பாட்டு முறைமைகளைத் தொடர்ந்தும் நாம் அமுல்படுத்தி வருகின்றோம்.

கொவிட் 19 தொற்றுப் பரவல் முதலாம் அலையின் போது நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அதனை வெற்றிகரமாக முறியடிக்க எம்மால் முடிந்தது. அப்போதைய சந்தர்ப்பத்தில், அது தவிர வேறு வழிகள் இருக்காத பட்சத்திலேயே, அவ்வாறான தீர்க்கமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டது.

அதனால், நாட்டை சில மாதங்களுக்கு முழுமையாக மூட நேர்ந்தது. அவ்வாறான நடவடிக்கைகள் மூலம், முதலாவது அலையைக் கட்டுப்படுத்த முடிந்தது.
நாட்டை நாம் அடிக்கடி மூட நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கொரோனா முதலாவது அலை ஏற்பட்ட காலப்பகுதியானது, இந்நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் காண்பித்த காலப்பகுதியாகும்.
விசேடமாக, இலங்கைக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருமானமாக ஈட்டித்தந்த ஆடைத் தொழிற்றுறையானது, இதனால் மிகப்பெரிய நட்டத்தை எதிர்கொண்டது.

அவர்களுக்கான ஏற்றுமதிக் கட்டளைகள் நிறுத்தப்பட்டன. இதனால், பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. ஏற்றுமதி வருமானம் இழக்கப்பட்டது.
4.5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருமானமாகக் கொண்டிருந்த சுமார் 3 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த சுற்றுலாத்துறையும் முழுமையாக ஸ்தம்பித்தது.

இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் இதனால் இழக்கப்பட்டன.
அடிக்கடி முன்னெடுக்கப்பட்ட நாட்டை முடக்கும் செயற்பாடுகள் காரணமாக, நிர்மாணத்துறைத் தொழிற்றுறைகளுக்கும் பாரிய அடி விழுந்தது. அவர்களுக்குத் தேவையானளவில் ஊழியர்களை வரவழைத்து வேலைகளை முன்னெடுக்க முடியாமல் போனது. தேவையான சந்தர்ப்பத்தில், மூலப்பொருட்களைத் தருவித்துக்கொள்ள முடியாமல் போனது.

இந்தத் துறைக்காக நாம் எதிர்பார்த்திருந்த தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் அனைத்தும், கடந்த சுமார் ஒன்றரை வருடக் காலப்பகுதியில் இழக்க நேரிட்டது.
எமது தேசிய பொருளாதாரத்துக்கு மேலுமொரு உந்துசக்தியாக, சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் காணப்படுகின்றன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களும், இந்தக் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தடைகள் ஏற்படுத்தப்பட்ட காரணத்தால், அந்த நிறுவனங்களுக்கான வருமானங்கள் இழக்கப்பட்டு, அவற்றை நடத்துவதற்காக எடுக்கப்பட்ட கடன்களையும் ஊழியர்களுக்கான ஊதியத்தையும் வழங்க முடியாமல், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. லீஸிங் முறைமையில் வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்களால் அதனைச் செலுத்த முடியாமல் போனது. வீட்டுக் கடன் பெற்றவர்களால், அதனையும் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது.

இவை தவிர, 4.5 மில்லியனுக்கும் அதிகமான சுய தொழில்கள் மற்றும் நாளாந்தம் வருமானத்தைப் பெறுவோரின் வருமான வழிகள் என்பன முழுமையாக இல்லாமல் போயின. இதனால், அவர்களது வாழ்க்கை நிர்க்கதி நிலைமைக்குத் தள்ளப்பட்டது.
இந்த அனைத்துவிதத் தடைகளுக்கு மத்தியிலும், மக்களை வாழ வைப்பதற்கான பொறுப்பு எமக்கு இருந்தது. அந்தப் பொறுப்பை நாம் தட்டிக்கழிக்கவில்லை.

கொரோனா காரணமாக நாட்டை முடக்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாளாந்த வருமானத்தை இழந்து நிர்க்கதிக்கு ஆளான மக்களுக்கு, 5,000 ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்குவதற்காக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 30 பில்லியன் ரூபாயைச் செலவிட்டிருக்கிறோம். இதுவரையில், பல தடவைகள் இந்தச் செலவை அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களின் செலவுகளுக்கு மேலதிகமாக, தத்ததமது வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு, இரண்டு வாரக் காலத்துக்குத் தேவையான சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொதிகளை வழங்கி வருகிறோம்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், 1.4 மில்லியனாகக் காணப்படும் அரச ஊழியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கவோ கொடுப்பனவுகளைக் கழிக்கவோ இல்லை.
எமக்கான அந்நியச் செலாவணி வருமானம் குறைந்த போதிலும், கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த அரசாங்கம் தவறவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் எடுக்கப்பட்டிருந்த கடன்கள் காரணமாக, வருடமொன்றுக்கு நாம், 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் தவணையாகச் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். அவற்றை, உரிய காலத்தில் செலுத்தியும் வருகின்றோம்.

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல. விசேடமாக, ஏற்றுமதித் தொழிற்றுறையில் ஈடுபட்டிருக்கும் ஆடைத் தொழிற்றுறைக்கு, பாரியளவு ஏற்றுமதிக் கட்டளைகள் கிடைத்துள்ளன. அந்தக் கட்டளைகளை உரிய நேர காலத்துக்கு வழங்க முடியாது போனால், பாரியளவு அந்நியச் செலாவணியை நாம் இழங்க வேண்டிய ஏற்படும்.

அதேபோன்று, வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பவும் நாம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இப்போதைய நிலைமையில், நாளாந்தம் சுமார் 200 சுற்றுலாப் பயணிகள், நாட்டுக்கு வருகை தரும் நிலைமை உருவாகியுள்ளது. நாட்டை முடக்கினால், சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதை, மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டி ஏற்படும்.
அதேபோன்று, நாளாந்த வருமானம் பெறுவோர், சிறு மற்றும் மத்தியதர வர்த்தக நடவடிக்கைகள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு, நாட்டை மூடுவதால் வழங்க வேண்டிய நிவாரணங்களை வழங்குவதிலும், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகச் சிக்கல் ஏற்படும்.

இந்த நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று இந்த உலகில் காணப்படும் ஒரு சில நாடுகளைத் தவிர்ந்த, பொருளாதார ரீதியாக வல்லரசுகளாக இருக்கும் நாடுகள் கூட, நாட்டைத் திறந்தே வைத்திருக்கின்றன.
உலகின் சுற்றுலாத்துறை, படிப்படையாக வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. நாடுகளைத் திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. சிறிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் எமது நாடும், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, மீண்டும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகச் சரிவடையச் செய்யும் நிலைமைக்குச் செல்ல முடியாது.

இது, மாற்றுக் கருத்தாளர்கள், தொழிற்சங்கங்கள், வைத்தியர்கள், ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெறும் போட்டியோ மோதலோ அல்ல. நாம் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது, இந்த முழு உலகமும் எதிர்கொண்டுள்ள தீவிரமான பிரச்சினையாகும். இன்று ஒவ்வொரு நாடும், புதிய பொதுமைப்படுத்தல் முறைமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் சரியாக எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஒட்சிசன் விநியோகம், இடைநிலை சிகிச்சை நிலையங்களை உருவாக்கல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செய்கின்ற போதிலும், நோயாளிகளை நிர்வகிப்பதென்பது, மருத்துவர்களின் பொறுப்பில் இருக்கின்றது. அதேபோன்று, இதுவரை காலமும் தமது உயிர்களைப் பணயம் வைத்துச் செயற்பட்டு வரும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரச் சேவை ஊழியர்களதும் சேவையை, நான் மனதாரப் பாராட்டுகின்றேன். அத்துடன், தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்துள்ள சுகாதாரத் துறையின் அனைத்துத் தரநிலை அதிகாரிகளுக்கும், நான் எனது மரியாதையைச் செலுத்துகின்றேன்.

இது, வேலைநிறுத்தம், போராட்டங்களுக்கான காலம் அல்லவென்பது தெளிவாகிறது. நாட்டை அராஜக நிலைமைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்.
சுகாதாரத் துறையானது இப்பிரச்சினையை ஒரு கோணத்தில் மாத்திரம் பார்க்கின்ற போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில் நாம், வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தல், ஊதியம் வழங்கல், நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை ஒரு குறையும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதற்காக, நமது நாட்டின் சிறு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிலும் பலர், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். அதேபோன்று, தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வாறான நாட்பட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவுடன், உரிய மருத்துவச் சிகிச்சைகளுக்கு உள்ளாக வேண்டும்.

அத்துடன், இவ்வாறான நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரை, வாரத்துக்கு ஒரு முறையேனும் அன்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.
இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறான முக்கியமான தருணத்தில், நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும், இந்தத் தீர்மானமிக்க நிலைமையைப் புரிந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். அதனால், ஒரு குழுவாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைந்துப் பணியாற்ற முன்வருமாறு, அனைவரிடமும் நான் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும்,
மும்மணிகளின் ஆசிகள்..!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021 - 08 - 20

ஒரு மானின் ஓட்ட வேகம் மணிக்கு 70-80 கிலோ மீற்றர் என்றும் ஒரு புலியின் வேகம் மணிக்கு 50-60 கிலோ மீற்றர் என்றும் சொல்லப்பட...
11/08/2021

ஒரு மானின் ஓட்ட வேகம் மணிக்கு 70-80 கிலோ மீற்றர் என்றும் ஒரு புலியின் வேகம் மணிக்கு 50-60 கிலோ மீற்றர் என்றும் சொல்லப்படுகிறது. புலியோடு ஒப்பிடுகின்ற போது மானின் வேகம் அதிகமானது. புலியால் மானைப்போல நெடுந்தூரம் ஓடவும் முடியாது. என்றாலும் புலி மானை வேட்டையாடுகிறது.

தன்னை விட புலி பலம் பொருந்தியது என்ற மானின் மனதிலுள்ள அச்சமும் பவீனமும்தான் அது விரண்டு ஓடுகின்றபோது அடிக்கடி புலியை திரும்பி பார்க்கத் தூண்டுவதோடு அதனை தளர்வடையவும் செய்கிறது. அதன் காரணமாகவே புலியால் மானை இலகுவில் வீழ்த்த முடிகிறது.

அது போலத்தான் மனிதனின் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும்; வைரஸ்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. ஆனால் மனிதனின் மனதிலுள்ள அச்சமும் பலவீனமுமே அதனை தணித்து விடுகிறது. இதனாலேயே பலர் நோய்வாய்ப்பட்டு இறந்து போகவும் நேரிடுகிறது. எந்த நோயையும் வெற்றிகொள்ளும் தைரியத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அவ்வாறான நம்பிக்கையுடனும் தளராத முயற்சியுடனும் மகிழ்ச்சியாக இருப்பதுமே ஒருவரது உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வைத்து அவனுக்கு நோயற்ற வாழ்வையும் தருகிறது.

எனவே, மனதை தளரவிடாது பொறுமையாக கொஞ்ச காலம் வைத்திய ஆலோசனைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக நடந்துகொள்வதன் மூலம் எமதும் எமது அன்புக்கு உரியவர்களதும் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுப்போமாக!

அத்துடன்,

அளவுக்கு மீறிய அதீத நம்பிக்கையுடன் கவனமில்லாமல் கண்ட கண்ட இடங்களுக் கெல்லாம் மேயப் போய் பாய்வதற்கென்றே பதுங்கியிருகின்ற புலிகளிடம் மாட்டிக் கொண்டால் கிளை கிளையாக கூரிய கொம்பிருந்தும் பயனில்லை என்பதையும் அந்த மான்கள் அறிந்து கொள்ளட்டுமாக!

தென்னை மரம் தறிப்பதற்கு இனிமேல் கிராம சேவகரின் அனுமதி பெற வேண்டும்!-விசேட வர்த்தமானி வெளியீடுமரம் கட்டுப்பாட்டுச் சட்டத்...
20/06/2021

தென்னை மரம் தறிப்பதற்கு இனிமேல் கிராம சேவகரின் அனுமதி பெற வேண்டும்!
-விசேட வர்த்தமானி வெளியீடு

மரம் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தென்னை மரங்கள் வெட்டுவதை அரசாங்கம் தடைசெய்துள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜுன்-17ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அரசினால் வெளியிடப்பட்ட 2232/33ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில், வெட்டுவதற்கு தடைசெய்யப்பட்ட மரங்களின் பட்டியலில் தென்னை மரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, எதிர்காலத்தில் தென்னை மரங்களை வெட்டுவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
20.06.2021

மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு பொருப்பேற்று அமைச்சர் உதயகம்மன்பில பதவி விலகவேண்டும் - பொத...
12/06/2021

மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு பொருப்பேற்று அமைச்சர் உதயகம்மன்பில பதவி விலகவேண்டும் - பொதுஜனபெரமுன

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு பொறுப்பேற்று அமைச்சர் உதயகம்மன்பில் பதவி விலகவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொது செயலாளர் சாகல காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு  - ஒக்டேன் 92 ரக பெற்றோல் 157 ரூபாய் (+20), ஒக்டேன் 95 பெற்றோல் 184 ரூபாய...
11/06/2021

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஒக்டேன் 92 ரக பெற்றோல் 157 ரூபாய் (+20),

ஒக்டேன் 95 பெற்றோல் 184 ரூபாய் (+23),

ஒட்டோ டீசல் 111 ரூபாய் (+7),

சுப்பர் டீசல் 144 ரூபாய் (+12)

Breaking News - பயணத்தடை 14 ஆம் திகதி தளர்வடையாது!    21 ஆம் திகதி வரை நீடிக்க அரசு தீர்மானம்!
11/06/2021

Breaking News - பயணத்தடை 14 ஆம் திகதி தளர்வடையாது!

21 ஆம் திகதி வரை நீடிக்க அரசு தீர்மானம்!

ஒரே தடவையில் பத்து பிள்ளைகள் :ஒரே தடவையில் 10 பிள்ளைகளைப் பெற்று தென் ஆபிரிக்க பெண் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். 37 வ...
09/06/2021

ஒரே தடவையில் பத்து பிள்ளைகள் :

ஒரே தடவையில் 10 பிள்ளைகளைப் பெற்று தென் ஆபிரிக்க பெண் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

37 வயதான இந்தப் பெண், ஏழு ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண் பிள்ளைகளையும் ஒரே தடவையில் பெற்றெடுத்துள்ளார்.

இதுவரை ஒரே தடவையில் 9 பிள்ளைகளைப் பெற்றமையே உலக சாதனையாக இருந்தது.

02/06/2021

எதிர்வரும் 14ஆம் திகதி வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

பொலிதீன் உரையில் சென்ற ஒரு இளைஞனின் இறுதிப் பயணம்.ஒரு வைத்தியரின் நாட்குறிப்பு( மொழிபெயர்க்கப்பட்டது )18 நாட்களுக்கு முன...
06/05/2021

பொலிதீன் உரையில் சென்ற
ஒரு இளைஞனின் இறுதிப் பயணம்.

ஒரு வைத்தியரின் நாட்குறிப்பு
( மொழிபெயர்க்கப்பட்டது )

18 நாட்களுக்கு முன்னர் PCR Positive ஆனதனால் மூச்சு எடுப்பதற்கு ஏற்பட்ட
சிரமம் காரணமாக அந்த 33 வயது இளைஞன்
Covid ICU விற்கு உட்படுத்தப்படுகிறான்.

ஓரிரு நாட்களில் சாதாரன வாட்டிற்கு கொண்டு
வந்துவிடமுடியும் என்று நாம் அனைவரும்
நம்பினோம்.

"எனக்கு அவசராமாக வீட்டிற்கு செல்ல முடியும்தானே " என்று அடிக்கடி கேட்பதுடன்
அவன் இல்லாவிட்டால் அவனது அன்பு மனைவியினதும்,ஒரே மகனினதும் எதிர்காலம்
என்ன ஆகும் என்பதையும் ஞாபகப்படுத்திக்
கொண்டே இருந்தான்.

சகல சிகிச்சைகளும் குறை எதுவுமில்லாமல்
நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
Ventilator Support இல்லாமல் மூச்ச எடுக்க
முடியாத நிலைக்கு தல்லப்பட்டுக் கொண்டு
இருக்கும் பொழுதுகூட ஓரிரு இரு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக போட்டுக் கொண்டு இருக்க முடியாத தலை இருகும் வரை
கடிடனமான Ventilator CPAP Mask கை அந்த இளைஞன் தொடர்ச்சியாக 48 மணி நேரங்கள்
போட்டுக் கொண்டு இருந்ததற்குக் காரணம்
மூச்சு நின்றுவிடும் என்ற அச்சம் காரணமாக
இருக்கலாம்.

இன்னும் ஒரு நாள் அந்த இளைஞனின் நிலமை
இருந்ததைவிட மோசமாகிக் கொண்டு இருந்தது.
கண்ணீருக்கு மத்தியில் மிகக் கடினமாக மூச்சு
எடுப்பதை நாம் உணர்ந்தோம்.

பின்னர் கடைசி முயற்சியாக Intubate செய்வதற்கு தயாராகினோம்.
அந்த நேரத்தில் அந்த இளைஞன் கண்ணை
மூடும் பொழுது அவனது உணர்வுகள் எப்படி
இருந்து இருக்கும்...

இன்னும் மூன்று நாட்கள் மருத்துவ உபகரணங்களின் உதவியிடன்
உயிருக்குப் போரடினான். ஆனால் அந்த மூன்றாவது நாள் எமது முயற்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில் அந்த இளைஞன்
இந்த உலகைவிட்டுப் பிரிந்துவிட்டான்.

அந்த நேரத்தில் கடமையில் இருந்த நம்
அனைவரதும் கண்களில் கண்ணீர் கொட்டிக்
கொண்டு இருந்தது. அவனுக்காக நாம் செய்த
எதுவுமே கடைசியில் பலநளிக்கவில்லை.

அவனது மனைவியின் அழுகுரல் எமக்கு இன்னும்
கேட்டுக் கொண்டு இருக்கிறது...
அவனது மகன் தந்தை வரும்வரை எதிர்பார்த்துக்
காத்திருகக்கூடும்.

அந்த இளைஞனுக்குப்போலவே
நம் யாரை வேண்டுமானாலும் இந்த
கொரோனா வந்து தாக்கலாம்.

உங்களது அன்புக்குறியவர்களை நினைத்தேனும்
கவனமாக இருக்கும்.

நம் அனைவருக்கும் இறைவன் துனைபுரியட்டும்.

AL பொது சாதாரண பரீட்சையில் 30 புள்ளி பெறவில்லையா?நீங்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தவற வேண்டாம்.AL பரீட்சையி...
06/05/2021

AL பொது சாதாரண பரீட்சையில் 30 புள்ளி பெறவில்லையா?

நீங்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தவற வேண்டாம்.

AL பரீட்சையில் 3 பிரதான பாடங்களிலும் உயர் சித்தி பெற்று 'பொது சாதாரண பரீட்சையில்' (CGT) குறைந்தது 30 புள்ளிகள் பெறா விட்டாலும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும்.

வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதும் தெரிவு செய்யப்பட்ட கற்கை நெறி மற்றும் பல்கலைக்கழகம் குறித்து 'பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்' (UGC) அறிவிக்கப்படும்.

எனினும் பல்கலைக்கழக அனுமதிக்குப் பதிவு செய்து கொள்ள முடியாது. அதன் பின்னர் வரும் AL பரீட்சையில் பொது சாதாரண பரீட்சையில் குறைந்தது 30 புள்ளிகளைப் பெற்றதும் அதுகுறித்து உடனடியாக ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதன் மூலம் விரைவாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

3 தடவையிலான AL பரீட்சையொன்றில் பொது சாதாரண பரீட்சையில் குறைந்தது 30 புள்ளிகள் பெற்றால் போதுமானது. 2019 இல் இவ்விதம் கற்கை நெறிக்குத் தெரிவு செய்யப்பட்டுக் காத்திருப்போர் இப்போதைய 2020 பரீட்சைப் பெறுபேற்றின்படி 30 புள்ளிகளேனும் பெற்றுக் கொண்டிருந்தால் இப்போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும்.

மாறாக AL பரீட்சையின் 3 பிரதான பாடங்களுடன் பொது சாதாரண பரீட்சைப் புள்ளியும் ஒரே பெறுபேறாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இந்த விடயம் ஆணைக்குழு விண்ணப்பம் கோரும் சகல கற்கை நெறிகளுக்கும் பொருந்தும்.

- முகுசீன் றயீசுத்தீன் MEd.

Address

Vavuniya
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vavuniya News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share