Cylon BBC

Cylon BBC Cylon bbc news

மண்வெட்டிக்கொத்து
09/11/2020

மண்வெட்டிக்கொத்து

08/05/2020
வவுனியா செட்டிகுளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞரொருவரை கசிப்பு உற்பத்திக்கான பொருட்களுடன் கைது செய்துள்ள...
01/05/2020

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞரொருவரை கசிப்பு உற்பத்திக்கான பொருட்களுடன் கைது செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை செட்டிகுளம் பெரியகுளம் 10 ஆம் கட்டை பகுதியில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரதீப்குமார் தலைமையிலான பொலிஸ்குழு சோதனையில் ஈடுபட்டபோதே சந்தேக நபரையும் பொருட்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது 54ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 3 போத்தல் கசிப்பு மற்றும் பரல்களுடன் வீரபுரத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் தொடர்ந்தும் செட்டிகுளம் பகுதியில் தொடரும் கசிப்பு உற்பத்தியை பொலிஸார் முறியடித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

26/04/2020

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிவித்தல் ஊரடங்கு சட்டம் 28ம் திகதி காலை 5மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது

 #ஒரு__இலட்சத்தை__தாண்டியது_கொரொனா__தொற்றால்_ஏற்பட்ட__உயிரிழப்புஉலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் த...
10/04/2020

#ஒரு__இலட்சத்தை__தாண்டியது_கொரொனா__தொற்றால்_ஏற்பட்ட__உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 1.6 மில்லியனுக்கும் மேலதிகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது அதே வேளை இத் தொற்றால் ஏற்பட்ட இறப்பானது இன்று ஒரு இலட்சத்தை தொட்டிருக்கிது

 #இலங்கையில்_ஏப்ரல்_19_திகதிக்குள்_கொரோனா_தொற்று_முடிவு_வரும்!  #சுகாதார_அமைச்சர்_அறிவிப்பு..உலக மக்களை மிரட்டி வருகின்ற...
10/04/2020

#இலங்கையில்_ஏப்ரல்_19_திகதிக்குள்_கொரோனா_தொற்று_முடிவு_வரும்! #சுகாதார_அமைச்சர்_அறிவிப்பு..

உலக மக்களை மிரட்டி வருகின்ற கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் நாளாந்தம் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஏப்ரல் 19 ஆம் திகதிக்குள் அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளையும் அரசால் அடையாளம் காண முடியும்.

கொரோனா நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 80 பேர் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஏனையோர் இவர்களுடன் நெருக்கமான தொடர்புடையவர்களாவர்.

மார்ச் 19 முதல் ஏப்ரல் 19 வரையிலான 30 நாள் காலத்தில் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளை அரசு கண்டறிந்தே தீரும்” – என்றார்.

 👍👇https://www.facebook.com/Cylon-BBC-108745144101414/இப்ப அனைவருக்கும் உண்மையான கடவுள் இவர்கள்தான் உண்மையானால் ஒரு ஷேர்...
10/04/2020

👍👇
https://www.facebook.com/Cylon-BBC-108745144101414/

இப்ப அனைவருக்கும் உண்மையான கடவுள் இவர்கள்தான் உண்மையானால் ஒரு ஷேர் செய்யவும்

 #உலகளவில்__கொரோனா__மரணங்கள்__குறைந்த__நாடாக__இலங்கை__பதிவு.உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களை கருத்திற் ...
10/04/2020

#உலகளவில்__கொரோனா__மரணங்கள்__குறைந்த__நாடாக__இலங்கை__பதிவு.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களை கருத்திற் கொள்ளும் போது இலங்கை மரணங்கள் குறைவான நாடாக பதிவாகியுள்ளது.

இதுவரையில் இலங்கையில் 190 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 7 மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளது.

அதற்கமைய ஏற்பட்ட மரணங்களுக்கமைய அது நூற்றுக்கு 3.6 வீதமாகும். அது இதுவரையில் உலகளவில் மரணங்கள் பதிவாகிய நாடுகளில் மிகக்குறைந்த வீதமாகும்.

இத்தாலியில் கொரோனா மரணங்களை ஒப்பிடும் போது அதன் எண்ணிக்கை நூற்றுக்கு 12.7 வீதமாகும். பிரான்ஸில் 10.3 வீதமாக மரணங்கள் பதிவாகியுள்ளது.

இலங்கை இதுவரையில் 190 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 50 பேர் குணமடைந்துள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் மரணம் த...
10/04/2020

காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்திய காலி நகர திடீர் மரண விசாரணை அதிகாரி, உயிரிழந்தவரின் சடலத்தை முத்திரையிட்டு, பொது சுகாதார பணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ், சர்வதேச தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய 24 மணி நேரததிற்குள் தகனம் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் மகன் தென் கொரியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதுடன் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையை பார்க்க வந்து சென்றுள்ளார். இதனால், தந்தைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அப்போது அவருக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லை.

எனினும் உயிரிழந்த நபரின் சளியை பரிசோதனை செய்வற்காக அதனை விசேட சட்ட வைத்திய அதிகாரி யு.சீ.பி. பெரேரா பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரியுடன் கலந்துரையாடிய சட்ட வைத்திய அதிகாரி, உயிரிழந்தவரின் சடலத்தை சர்வதேச தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைய மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் சடலம் இன்று முற்பகல் காலி தெடெல்ல மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி மஹேஷ் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.காரப்பிட்டிய வைத்தியசாலையின் 37 வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

WHO நியதியின் படி உடல்களை அடக்கம்செய்ய அனுமதிக்க சஜித் வலியுறுத்து - விமல், கம்மன்பில எதிர்ப்புஉலக சுகாதார நிறுவனத்தின் ...
10/04/2020

WHO நியதியின் படி உடல்களை அடக்கம்செய்ய அனுமதிக்க சஜித் வலியுறுத்து - விமல், கம்மன்பில எதிர்ப்பு

உலக சுகாதார நிறுவனத்தின் நியதிகளின் படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், அரச தரப்பினருக்கும் இடையே நேற்று முன்தினம் (6) நடைபெற்ற பேச்சுக்களின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

எனினும் குறித்த சந்திப்பில் பங்கேற்ற விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, ஒருபோதும் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது.

அமுலில் உள்ள சுற்றுநிருபத்தின் படி, கொரோனாவினால் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய முடியாது, எரிக்கவே வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

சந்திப்பில் பங்கேற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

08/04/2020

வவுனியாவில் அடையாள அட்டை முறைகேடு தொடர்பில் இடமாற்றம் பெற்று பிரதேச செயலகத்திற்கு மாறிய பின்னரும் முன்னர் கடமையாற்றிய கிராம நிர்வாக நடவடிக்கைளில் கிராம அலுவலர் ஒருவர் தலையிடுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் கிராமத்தில் முன்னர் பணியாற்றிய நிலையில் அக் கிராம மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில் கிராம அலுவலர் ஒருவருக்கு பிரதேச செயலகத்திற்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த இடமாற்றம் பெற்ற கிராம அலுவலர் மீண்டும் பண்டாரிக்குளம் கிராம நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதாக அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், தமது பிழைகளை மறைக்க மக்களை தமக்கேற்ற வகையில் திசை திருப்ப முற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.

04/04/2020

நாயை கட்டி வைத்ததால் இளைஞன் உயிர் பறிபோனது
👇👇👇👇👇👇👇👇
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

நேற்றுமுன்தினம்(02.04.2020) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற நிலையில் குறித்த நாயை அந்த வீட்டில் வசித்த இளைஞன் கட்டி வைத்து இருக்கின்றார்.

இந்நிலையில் அயல் வீட்டவர்களும் நாயின் உரிமையாளர்களும் சென்று குறித்த இளைஞருடன் வாக்குவாத பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறிய நிலையில் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதனால்இந்நிலையில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு (03.04.2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்ததை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் முல்லைத்தீவு பொலிசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

Photo 1st comment

04/04/2020

3 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவா😰😰

தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நாடு முழுவதும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டொக்டர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்துரைத்த அவர்,

நாட்டில் கொரோனா தொற்றானது குறிப்பிடத்தக்களவு மேலும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டால் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு நாடு முடக்கப்படுவது கடினம் எனில், குறைந்ததது ஒரு மாதத்திற்காவது ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இல்லை எனில் நிலைமை மோசமாகிவிடும்.

அதேபோன்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில், இருந்து அடுத்த கட்டத்திற்கு கொரோனா வைரஸ் விரிவடையும் அபாயத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

04/04/2020

#5வது_மரணம்
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது.

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இத்தாலியில் இருந்து வந்தவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்

26ஆம் திகதி குறித்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபருக்கு வேறு எவ்விதமாக நோய்களும் காணப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

குறித்த நபர் ஆரம்பத்திலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவரது உடலுக்கு வைரஸ் தீவிரமாக நுழைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரணம் மிகவும் வருத்தமளிப்பதாக அவர் தற்போது தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

04/04/2020

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இவவாறு உயிரிழந்துள்ளார்.

அதன்படி ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக காணப்படும் நிலையில் இன்று காலை மேலும் ஒரு நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

எத்தன பேர் கொள்ளையடிச்சானுவளோ
03/04/2020

எத்தன பேர் கொள்ளையடிச்சானுவளோ

இந்து மதத்தை பற்றி தவறாக பேசியும் மதவாதத்தை தூண்டும் விதத்தில் செயற்படும் இவனை Report அடிச்சி கழுவி ஊத்தவும்https://www....
03/04/2020

இந்து மதத்தை பற்றி தவறாக பேசியும் மதவாதத்தை தூண்டும் விதத்தில் செயற்படும் இவனை Report அடிச்சி கழுவி ஊத்தவும்https://www.facebook.com/mathuran.selvakumar

02/04/2020

#4வது_மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் ஒரு நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில், 962,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 151 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

02/04/2020

சுவிஸ் பாஸ்ரரின் மதமாற்றும் மற்றுமொரு வீடியோ... அவரின் பேச்சு கோபத்தை தூண்டும் அளவிற்கு உள்ளது.
இது எந்த ஊர் என்று தெரியவில்லை அங்கு நின்ற அனைத்து மக்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்
விரைவாக செயார் செய்யவும்

 #வவுனியாவில் இறந்த பெண்ணிற்கு கொரோனாவா!வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக நேற்று (01.04.2020) அனுமதிக்கப்பட்ட வய...
02/04/2020

#வவுனியாவில் இறந்த பெண்ணிற்கு கொரோனாவா!
வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக நேற்று (01.04.2020) அனுமதிக்கப்பட்ட வயோதிபப் பெண் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததை அடுத்து அவரின் இரத்தமாதிரி அனுராதபுரம் கொரோனா தடுப்பு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்திருப்பதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

வவுனியா சேர்ந்த அருட்செல்வன் கலாராணி (வயது 56 ) வயோதிபப் பெண்மணி ஒருவர் இரண்டு வாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகத் தெரிவித்து உறவினர்களால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதித்தவர்களிடம் மருத்துவர்கள் விசாரித்ததன் அடிப்படையில், இரண்டு வாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

அவரின் நோய் அறிகுறிகளை விசாரித்த மருத்துவர்கள் கொரொனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பு விடுதிக்கு அவரை மாற்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றதுமே மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் தெரியவரும் என்றும் வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தன.

01/04/2020

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது இன்று (01) சற்றுமுன் மூன்றாவது நபரும் பலி.

31/03/2020

நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

64 வயதான இந்த நபர் வெளிநாடு சென்று திரும்பியவர் அல்ல எனவும், அவரது குடும்பத்தினரோ உறவினர்களோ அண்மைய காலத்தில் வெளிநாடு சென்று திரும்பியமைக்காக தகவல்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்த நபர் 20 நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்துள்ளார். அதன் பின்னர் வீட்டில் இருந்து வெளியில் எங்கும் செல்லவில்லை.

இந்த நிலையில் உயிரிழந்த நபரின் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 16 பேரும் வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபர், தனக்கு ஏற்பட்ட சுவாச கோளாறு காரணமாக நீர்கொழும்பில் உள்ள இரண்டு தனியார் மருத்துவ நிலையங்களில் நெபியூலைய்சர் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்து மருத்துவ நிலையங்களில் கடமையாற்றிய வந்த மருத்துவ ஊழியர்கள் 30 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அந்த நபர் சிகிச்சை பெற சென்றிருந்த நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனையும் தற்போது மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 #யாழில்_திகில்கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் அங்கியிருந்த இடங்கள் முற்றுகையிடும் நடவடிக்க...
31/03/2020

#யாழில்_திகில்

கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் அங்கியிருந்த இடங்கள் முற்றுகையிடும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக யாழ்.நகரை அண்மித்த ஜந்து சந்திப் பகுதியே இவ்வாறு சுகாதார துறையினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர் கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஜந்து சந்தியில் நடந்த திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கான கடந்த 7ம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த நிலையில், மீண்டும் நீர்கொழும்பு சென்றுள்ளார்.
நீர்கொழும்பு சென்ற அவர் கடந்த 16ம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
பின்னர் நோய் தீவிரமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கியிருந்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற் பதற்குச் சென்றுள்ளார்.அங்கு இரு நாள்கள் தங்கியிருந்த பின்னர் நீர்கொ ழும்பு திரும்பியுள்ளார். இந்நிலையில் குறித்த நபருடைய நடமாட்டங்கள், பழகிய, சந்தித்த நபர்கள் குறித்த விசாரணையை
குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கையில் உள்ள சகல புலனாய்வு கட்டமைப்புக்களும் நேற்று மாலையே ஆரம்பித்திருக்கின்றன.

இதன்படி யாழ்.மாவட்டத்திலும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பதுடன், யாழ்ப்பாணத்தில் அவர் தங்கியிருந்த இடம், சந்தித்த நபர்கள், திருமண வீட்டில் கலந்து கொண்டவர்கள், என சுமார் 120 பேருடைய பெயர் பட்டியல் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டு அவர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊர‌ட‌ங்கில் பொலிஸுக்கு ப‌ய‌ந்து வ‌ய‌லால் வாக‌ன‌ம் ஓடிய‌வ‌ரின் நில‌மை
31/03/2020

ஊர‌ட‌ங்கில் பொலிஸுக்கு ப‌ய‌ந்து வ‌ய‌லால் வாக‌ன‌ம் ஓடிய‌வ‌ரின் நில‌மை

31/03/2020

கொழும்பு, கம்பாஹா, புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற பகுதிகளில் நாளை (01) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்று வெளியான அறிவிப்பில் நாளை ஊரடங்கு சட்டம் காலை 06 மணிக்கு தளர்த்தப்படும் என தெரிவித்திருந்தபோதும் மீண்டும் எப்போது ஊரடங்கு அமுலாகும் என குறிப்பிடப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளதோடு எவரும் இந்த கிராமங்களுக்கு நுழைவதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது

31/03/2020

பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து சிலர் இன்று வெளியேறினர்

30/03/2020

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 36,205 ஆக அதிகரிப்பு.

30/03/2020

இலங்கையில் கொரோனா தொற்றால் இரண்டாவது நபர் மரணமடைந்துள்ளார்.

நவலோகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஒருவரே (வயது 64) இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த நபர் நீர்கொழும்பு – பேருதொட்ட பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் மூவர் இன்று (30) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்படி தொற்று...
30/03/2020

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் மூவர் இன்று (30) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கண்டறியப்பட்ட மூவருடன் இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க

வவுனியா மாடசாமி கோவில் வீதியில் இன்று (30.03.2020) காலை 10.00 மணியளவில் வீடோன்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியதினால் பல ...
30/03/2020

வவுனியா மாடசாமி கோவில் வீதியில் இன்று (30.03.2020) காலை 10.00 மணியளவில் வீடோன்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியதினால் பல லட்சம் பெறுமதியான உடமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
வவுனியா, மாடசாமி கோவில் வீதியில் உள்ள அரைநிரந்தர வீடு ஒன்றில் வசித்து வந்த குடும்பத்தினர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொருட்கொள்வனவுக்காக வெளியில் சென்ற நிலையில் வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனை அவதானித்த அயலவர்கள் வீட்டு உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதுடன் தீயிணை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், வீட்டில் இருந்த இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

தீ விபத்துக்குரிய காரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

டயலொக் நிறுவனம் தற்போது பெரும் கேவலமான செயற்பாட்டை தனது வாடிக்கையாளர்கள் மீது மேற்கொண்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் கடும் ...
30/03/2020

டயலொக் நிறுவனம் தற்போது பெரும் கேவலமான செயற்பாட்டை தனது வாடிக்கையாளர்கள் மீது மேற்கொண்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

குறித்த நிறுவனத்தின் றவுட்டர்களை வாங்கி இணைய இணைப்புக்களை பெற்ற வாடிக்கையாளர்களுக்கு டயலொக் நிறுவனம் திருவிளையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. டயலொக் றவுட்டர்கள் தற்போது பெருமளவான சந்தர்ப்பத்தில் தொழிற்படாது விடுவதுடன் சில நேரங்களில் மிகவும் வேகம் குறைந்தே இணைய சேவையை செய்கின்றது.

டயலொக் றவுட்டர்கள் தற்போது பெருமளவான சந்தர்ப்பத்தில் தொழிற்படாது விடுவதுடன் சில நேரங்களில் மிகவும் வேகம் குறைந்தே இணைய சேவையை செய்கின்றது.
டயலொக் றவுட்டர்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் டேட்டாக்கள் விலை குறைவாக இருப்பதால் டயலொக் நிறுவனம் கைத்தொலைபேசி டேட்டாக்களை வாடிக்கையாளர்கள் விலைகூடவாகப் பெற்று பயன்படுத்துவதற்கே இந்தத் திருவிளையாடல்களை டயலொக் நிறுவனம் மேற்கொள்ளுவதாக அதிர்ச்சித் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த டயலொக் நிறுவனத்திற்கு யாழ்ப்பாணம் வவுனியா உட்பட வடபகுதியைச் சேர்ந்தவர்களே பெருமளவான வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும் அத்துடன் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் பணவசதி கொண்டவர்கள் என அறிந்த டயலொக் இவ்வாறான திருவிளையாடல்களை மேற்கொண்டு வடபகுதி மக்களின் பணத்தை சுரண்டி வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் பெரும் விசனம் வாடிக்கையாளர்களால் தெரிவிக்கப்படுகி

கிளிநொச்சி பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஸ்ரர் ஒருவரினால் பெண் தலைமைத்துவத்தை உடைய இந்து சமயத்தவரின் வீட்டில...
30/03/2020

கிளிநொச்சி பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஸ்ரர் ஒருவரினால் பெண் தலைமைத்துவத்தை உடைய இந்து சமயத்தவரின் வீட்டில் உள்ள சாமி படங்கள் சிலைகள் உடைக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தோம் அச்சம்பவத்துடன் தொடர்புடைய பாஸ்ரர் இவர்தான்

Address

Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cylon BBC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share