15/01/2024
ONLINE LOAN மூலம் கடன் பெற்றவர்களுக்கு..
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தெஹிவளையில் உள்ள இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றை சுற்றிவளைத்து, ஐந்து சீனப் பிரஜைகளையும் ஒரு இலங்கையரையும் கைது செயதுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (15) ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 6 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டனர். குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான 8 கணனிகள், 13 மடிக்கணினி வகை கணனிகள் மற்றும் 49 கையடக்க தொலைபேசிகள்
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் போது, கடனாளியின் மொபைல் போனின் தனிப்பட்ட தகவல்களை, ஓடிபி எண் மூலம் பெற்று, சமூகத்தில் சில தகவல்களை பரப்பி மிரட்டி, உரிய பணத்தை பெற்றுக் கொண்டது தொடர்பில் விசாணை மேற்க்கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணைகள் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனிப் புலனாய்வுப் பிரிவினருக்கோ தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
"நம்பத்தகாத அமைப்புகளுடன் இதுபோன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடாதீர்கள்..." என்று பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் விப் லோன், கேமல் ஷிப் லோன், ரோஸர் லோன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் தர்ஷிகா குமாரி தெரிவித்துள்ளார்.
மேலும், 5,000 முதல் 2 லட்சம் வரை கடன் தருவதாகவும், கடனை அடைக்க சிரமப்படும் போது, கடன் வாங்கியவரின் தனிப்பட்ட தகவல்களை சொசைட்டியில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.