மலையோரம் செய்திகள்

மலையோரம் செய்திகள் நம்பகமான செய்திகள்
(1)

அன்புள்ள வாசகர்களே!
நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது மலையோரம் செய்திகள் நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது.அது உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

27/06/2024

நல்ல எண்ணங்களை எப்போதும் நினைப்போம் .எல்லாம் நல்லதாக நடக்கும்

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வரும் பணி புறக்கணிப்பு காரணத்தால்  பொதுமக்கள் அவதி....அத்தியாவசிய  த...
27/06/2024

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வரும் பணி புறக்கணிப்பு காரணத்தால் பொதுமக்கள் அவதி....

அத்தியாவசிய தேவைகளுக்காக கிராம உத்தியோகத்தரின் வதிவிட சான்றிதழ்,ஏனைய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிறமத்துக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த போது, பாடசாலை மாணவனின் வயிற்றில் குத்திய இரண்டடி நீளமுள்ள தடி மீட்கப்பட்டுள்ள சம்பவம...
27/06/2024

பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த போது, பாடசாலை மாணவனின் வயிற்றில் குத்திய இரண்டடி நீளமுள்ள தடி மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது...

கல்முனை வடக்கு ஆதரவைத்த சாலையில் உயிருக்கு போராடிய நிலையில் விபத்தில் சிக்கிய இளைஞன் அவசர சிகிச்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (25) அனுமதிக்கப்பட்டார். பல மணி நேர அவசர சத்திர சிகிச்சையின் பின்னர் குறித்த இளைஞன் உயிர் பிழைத்த சம்பவம் கல்முனையில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கல்முனை நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவன் நுங்கு பறிப்பதற்காக பனை மரத்தில் ஏறிய போது தவறி விழுந்துள்ளான்.

இந்நிலையில் குறித்த இடத்தில் பயற்றை செடிக்கு நாட்டப்பட்டிருந்த கிளிசரியா மரத்தின் கம்பு குறித்த இளைஞரின் குத வழியாக பாய்ந்து சலப்பை, ஈரல், நுரையீரல், பிரிமென்தகடு உட்பட உடலின் முக்கிய பாகங்களாக காணப்படுகின்ற 15 பாகங்களை கிழித்துக் கொண்டு மார்பக பக்கமாக குறித்த தடி வெளியில் தெரிந்துள்ளது.

உயிருக்கு போராடிய மாணவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தை கேள்வியுற்று அவசர சிகிச்சை பிரிவுக்கு விரைந்து சென்ற மருதமுனையை சேர்ந்த பிரபல அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் டொக்டர் ஏ.டபுள்யூ.எம்.சமீம் தலைமையிலான வைத்திய குழுவினர் குறித்த இளைஞரின் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில், பல மணி நேர நீண்ட அறுவை சிகிச்சையின் பின்னர் இரண்டடி நீளமுடைய தடியை வயிற்றுப் பகுதியில் இருந்து வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். தற்போது குறித்த இளைஞன் ஆரோக்கியமான நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட இந்த சத்திர சிகிச்சை குறித்து வைத்திய நிபுணர் ஏ.டப்ளியு.எம்.சமீம், ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“எனது 25 வருட கால அறுவை சத்திர சிகிச்சை வரலாற்றில் இது ஒரு சவாலான அறுவை சிகிச்சையாகும். இதற்கு முன்னர் இது போன்ற ஓர் அறுவை சிகிச்சை இலங்கையில் எங்கும் நடைபெற்றதாக நான் அறியவில்லை. எனது மேலதிகாரியின் ஆலோசனையை பெற்று நம்பிக்கையுடன் இந்த சத்திர சிகிச்சையை முன்னெடுத்தேன் இறைவன் உதவியால் வெற்றிகரமாக செய்ய முடிந்துள்ளது

குறித்த அறுவை சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு என்னுடன் ஒத்துழைப்பு வழங்கிய வைத்திய பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய குழுவினர், அவசர சத்திர சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்” என்றார்

27/06/2024

ஆசிரியர்களின் சம்பளம் 2025ம் ஆண்டே அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க முன்னர் ஏனைய பிரிவுகளின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை மல்வத்து மகாநாயக்க தேரர்களின் ஆசியை பெற சேடர்னா நிலையிலையே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

குறிப்பாக இறுதியாக ஆசிரியர்களின் சம்பளம் ரூபாய் 7000 – ரூபாய் 17000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்டு வருவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்தோடு கடந்த சில வருடங்களாக சம்பளம் உயர்த்தப்படாத எத்தனையோ அரச நிறுவனங்கள் இருக்கின்றன எனவும் அவர்களின் சம்பளத்தை உயரத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அப்படி ஆசிரியர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டால் அது வேறு பல பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி 2025 ஆகும் பொழுது நிச்சயம் அவர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

27/06/2024

8435 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாக, பொது ஊழியராக, மாற்றீடாக, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிவாரண அடிப்படையில் இருக்கும் ஊழியர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் கூடிய நியமனத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்திருந்தார்.

இதற்கமைய நாடு முழுவதிலுமுள்ள பிரதேச சபை, நகர சபை, மாநகர சபைகளில் குறித்த சேவைகளின் அடிப்படையில் கடமையாற்றும் 8435 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

குறித்த நியமனக் கடிதங்களை உடனடியாக வழங்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அண்மையில் இடம்பெற்றது.

ஜீலை மாதத்தில் இதனை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

27/06/2024

ஆசிரியர்களின் போராட்டத்தில் அரசாங்கம் கேவலமாக நடந்து கொண்டது.ராதாகிருஷ்ணன் எம்.பி கண்டனம்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

அதிபர்,ஆசிரியர்களின் சம்பள பிணக்குகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டுமென ஒன்றிணைந்த அதிபர்,ஆசிரியர்கள் சங்கம் நடத்திய போராட்டத்தில் அரசாங்கம் மிலேச்சு தனமாக செயற்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் உலகத்திலேயே முதலிடம் கொடுக்கப்பட வேண்டியது ஆசிரியர்களுக்கே !மாதா, பிதா குரு, தெய்வம் என கூறுகின்றார்கள். உலகத்தில் படித்த சமூகத்தை உருவாக்குவது ஆசிரியர்களே ஆனால் அவர்களை கண்மூடி தனமாக நீர்தாரை அடித்து தாக்கமுற்பட்டதற்காக அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் போக்கையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!அதிக மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று(27)...
27/06/2024

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!

அதிக மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று(27) திறக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் மேலும் மழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகள் திறக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

27/06/2024

வெலிமடை அம்பகஸ்தோவ பகுதியில் இன்று (27) இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்து வெலிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை அம்பகஸ்தோவ வீதியின் தரகல பகுதியில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து பின்னால் வந்து கொண்டிருந்தமற்றைய பேரூந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில், அம்பகஸ்தோவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ்.கே ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

விசர் நாய் கடிக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயதுச் சிறுமி பலி!யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...
27/06/2024

விசர் நாய் கடிக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயதுச் சிறுமி பலி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசர் நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் (26) உயிரிழந்தார்.

குமாரசாமிபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த நான்கு வயதான சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொசன் போயாவை முன்னிட்டு தலவாக்கலை சுமண மத்திய மகா வித்தியாலய மாணவர்களால் வழங்கப்பட்ட பொசன் பக்தி பாடல் கச்சேரி அண்மையில்...
27/06/2024

பொசன் போயாவை முன்னிட்டு தலவாக்கலை சுமண மத்திய மகா வித்தியாலய மாணவர்களால் வழங்கப்பட்ட பொசன் பக்தி பாடல் கச்சேரி அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.


இந்த பக்திப்பாடல் கச்சேரியை அதிபர், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தலவாக்கலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான சிங்கள, முஸ்லிம் மக்கள் திரண்டிருந்தனர்.


மஸ்கெலியா நிருபர்

27/06/2024

செய்தியால் கிடைத்த பலன்

மஸ்கெலிய சாமிமலை மல்லியப்பு சந்தியில் மரண பீதியை ஏற்படுத்திய பூவரசன் மரம் சம்பந்தமாக கடந்த மாதம் எமது ஊடகத்தின் மூலம் செய்தி வெளியிட்டிருந்ததை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொண்டு இன்று 27 குறித்த மரம் இலங்கை மரக்கூட்டுத்தாபன அதிகாரிகள் மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது

குறித்த மரத்தினால் இப்பகுதியில் வாழும் மக்கள் ஆட்டோ சாரதிகள் வர்த்தக பிரமுகர்கள் பிரயாணிகள் முதலானோர் பெரும் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த நிலையில் எமது மலையோரம் செய்திகள் ஊடகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமக்கு தீர்வு கிடைத்தமைக்கு மலையோரம் செய்தி பிரிவுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளனர்

மஸ்கெலியா நிருபர்.

காதல் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்ட  05 பாடசாலை மாணவர்கள் கைது!     கண்டி – திகன பிரதேசத்தில் காதல் உறவில் ஏற்பட்ட தகராறி...
27/06/2024

காதல் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்ட 05 பாடசாலை மாணவர்கள் கைது!



கண்டி – திகன பிரதேசத்தில் காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் 16-18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 25ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் திகன ரஜவெல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்துடன், மெனிக்கின்ன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் எம்.டி.சந்திரபால தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

27/06/2024

மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவு பகுதிகளான நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கனத்த மழை பெய்தது வருகிறது.

இதனால் நீரேந்து பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது கொண்டு உள்ளது.

குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட இன்னும் 24 அங்குலமே உள்ளது.

கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து இன்னும் 6 அங்குலமே உள்ளது.

இதே போல விமலசுரேந்திர, மேல் கொத்மலை, லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டிய வண்ணம் உள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக வெளியேற்றப்படும் ஆகையால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கனத்த மழை காரணமாக காட்மோர் நீர் வீழ்ச்சி,மறே நீர் வீழ்ச்சி , மற்றும் ஏனைய நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் அதிகமான மக்கள் நீர் வீழ்ச்சியை பார்க்க படை எடுத்து வருகின்றனர் இந்த கொட்டும் மழையிலும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பண்ணையாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க பட்டு உள்ளது.

மஸ்கெலியா நிருபர்.

27/06/2024

நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ச்சியாக 12 வருடங்களுக்கு ஆட்சி பொறுப்பை வழங்கினால் ஆசியாவிலேயே பலம் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவார்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலி, ரத்கம தொகுதியின் கட்சியின் பிரதான அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஒரு நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டால், அந்த நாடு மீண்டும் வழமைக்கு திரும்புவதற்கு குறைந்தது 07 முதல 10 வருடங்களாவது தேவைப்படும். ஆனால், ஜனாதிபதி இரண்டு வருடங்களுக்குள் நிலைமை தீவிரமடைந்திருந்த சந்தர்ப்பத்திலும் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு 15 ஆயிரம் ரூபா பணத்தை வைப்பிலிட நடவடிக்கை எடுத்தார்

மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் - இந்திய உயர்ஸ்தானிகரிடம் மலையக மாணவர்களுக்காக   மனு  ஒன்றை ஒப்படைத்துள்ள...
27/06/2024

மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் - இந்திய உயர்ஸ்தானிகரிடம் மலையக மாணவர்களுக்காக மனு ஒன்றை ஒப்படைத்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குமாறு மற்றும் இந்தியா புலமைப் பரிசில் விண்ணப்பத்தின் போது மலையக மாணவர்களின் விண்ணப்ப படிவத்தில் சில தோட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தாமல் இருப்பதாகவும் அதனால் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக இவ்விண்ணப்ப படிவத்தை உறுதிப்படுத்திக்கொண்டு மலையக மாணவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

27/06/2024
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பீடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.நேற்று புதன...
27/06/2024

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பீடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும் இன்றைய தினம் (27) ஆரியபுர பொகவந்தலாவையை சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.

மலசல கூடத்தில் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.

நேற்றைய தினம் மலசல கூடத்தில் இருந்த முதியவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நுவரெலியா மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலங்கலாக மீட்கப்பட்டவர்கள் மலசல கூடத்தில் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நானு ஒயா நிருபர்

27/06/2024

கொழும்பில் இடம்பெற்ற ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது இதை கண்டிக்கும் வகையில் இன்றைய தினம் தலவாக்கலை பிரதான பஸ் நிலையம் முன்பாக அதிபர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

27/06/2024

அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் இன்றும் (27.06.2024) தொடர்கிறது!

அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, தமக்கு கிடைக்கவேண்டியதை கேட்கும் அதிபர், ஆசிரியர்களின் ஜனநாயகரீதியான நேற்றைய போராட்டத்தை நசுக்க, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, அதிபர், ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடாத்திய ரணில்- ராஜபக்ஸ அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து இன்றைய தினம் 27 ம் திகதியும் அதிபர், ஆசிரியர்களின் சகயீன விடுமுறைப் போராட்டம் தொடரவுள்ளது. அதிபர்கள் ஆசிரியர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டிக்கும் விதமாக நேற்று போல் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இன்றைய தினமும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

ஆ.தீபன் திலீசன்,
உப தலைவர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்

27/06/2024

திருமணம் முடிக்கவுள்ளவர்களுக்கு ஒரு சோகமான செய்தி

பல பிரச்சினைகளின் அடிப்படையில், நாடளாவிய ரீதியில் பதிவாளர் சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையைப் புகாரளிப்பதற்கான தொழில்சார் நடவடிக்கையொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

பதிவாளர் நாயகம் துறை பதிவாளர் சேவை அலுவலர் சங்கத்தின் செயலாளர் பிரபாத் என் இந்த திணைக்களத்திற்கு முறையான சேவை அரசியலமைப்பு அல்லது ஆட்சேர்ப்பு நடைமுறை எதுவும் இல்லை என்று குணவர்தன கூறுகிறார்.

2016ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 8 வருடங்களாக பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை திருப்திகரமான பதில் கிடைக்காததால் அதற்கு எதிராக தொழில் ரீதியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

27/06/2024
26/06/2024

மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் - இந்திய உயர்ஸ்தானிகரிடம் மலையக மக்களுக்காக மனு ஒன்றை ஒப்படைத்துள்ளார்.

26/06/2024

நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் நாளை (27) வழமைப்போன்று இயங்கும் - கல்வி அமைச்சு சற்று முன் அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் சாரம்சம்
26/06/2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் சாரம்சம்

மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி!புதுக்குடியிருப்பு நகர பக...
26/06/2024

மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் கம்பனி ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது .

வேணாவில் மற்றும் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 20 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் .

புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குறித்த கம்பனியின் தண்ணீர் தொட்டியினை சுத்திகரிக்க கட்டட மேல்பகுதிக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.

மேலே சென்றவரை காணவில்லை என அருகில் உள்ள பலசரக்கு கடையில் பணிபுரியும் ஊழியர் கட்டட மேற்பகுதிக்கு சென்றபோது குறித்த இளைஞனுக்கும் மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து தூக்கி கீழே வீசப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

26/06/2024

அதிபர் ஆசிரியர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக நாளையும் தொடரும் என அதிபர் ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது

கம்பளை பிரதேசத்தில் உயர்தரப் பாடசாலை மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன...
26/06/2024

கம்பளை பிரதேசத்தில் உயர்தரப் பாடசாலை மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் தனது அறையின் கதவைப் பூட்டிவிட்டு துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை ஹெத்கால பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த கே.எம்.பி.ஆர்.ஜி. குலசேகர என்ற 18 வயது மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இவர் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணிதப்பிரிவில் பயின்று வந்துள்ளார்.

இவரது தாய் ஆசிரியை எனவும், தந்தை வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது தனியார் நிறுவன ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சகோதரன் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், ஒரே சகோதரி குருநாகல் போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராகவும் கடமையாற்றுகின்றனர்.

தந்தை மறைத்து வைத்திந்த அவரது துப்பாக்கியை கண்டு பிடித்த மாணவன், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பளை சர்வதேச பாடசாலையில் கல்வி பயின்ற இந்த மாணவன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 08 ஏ சித்தி மற்றும் B சித்தியுடன் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இணைந்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னதாகவே உயர்தரத்துக்குத் தயாராகிய இவர், பரீட்சை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழியில் பாடங்களைச் கற்றுள்ளதோடு, கணினி மற்றும் கைத்தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

SMT கல்லூரியின் (டயகம) பழைய மாணவர் சங்க உபதலைவராகிய புஸ்பநாதன் பிரதீப் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலைய...
26/06/2024

SMT கல்லூரியின் (டயகம) பழைய மாணவர் சங்க உபதலைவராகிய புஸ்பநாதன் பிரதீப் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அகில இலங்கை சமாதாண நீதவானாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

மலையோரம் செய்திகள் சார்பாக வாழ்த்துக்கள்

Address

Nuwara Eliya

Website

Alerts

Be the first to know and let us send you an email when மலையோரம் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மலையோரம் செய்திகள்:

Videos

Share