எழுமின் செய்திகள்

எழுமின் செய்திகள் wellcome to the official page of the Ezhumin news.

இணைய ஊடகத்தின் இணையில்லா தலைவன்.

உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை எமது எழுமின் செய்திகள் தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

நம்பகமான செய்திகளை நேயர்களுக்கு விரைவாகவும் தெளிவாகவும் கொண்டு சேர்ப்பதே எமது நோக்கம்.

  | வரலாற்று தோல்வியை சந்தித்த இலங்கை அணி!இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுற்றுலா அவுஸ்திரேலிய அணி இன்...
01/02/2025

| வரலாற்று தோல்வியை சந்தித்த இலங்கை அணி!

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுற்றுலா அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

காலியில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று பலோவன் முறைப்படி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 247 ஓட்டஙகளுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் Jeffrey Vandersay அதிகூடுதலாக 53 ஓட்டங்களை பெற்றதுடன் ஏனைய அனைத்து வீரர்களும் அதனை விட குறைந்த ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Matthew Kuhnemann மற்றும் Nathan Lyon ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 06 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பின்னர் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி டெஸ்ட் வரலாற்றில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அடைந்த மிகப்பெரிய தோல்வியாக இந்த போட்டி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்ததே மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.

  | அனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித!பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலன...
01/02/2025

| அனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித!

பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 7 துப்பாக்கிகளில் 5 ஆரம்ப கட்டத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

  | நுவரெலியாவில் மண்சரிவு அபாய எச்சரிக்கைநுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் க...
30/01/2025

| நுவரெலியாவில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று (30) பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன்படி, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தற்போது ஹைபோரஸ்ட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினருக்குத் தேவையான சமைத்த உணவை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

  | அக்கரபத்தனை பிரதேச சபை மற்றும் லிந்துலை MOH ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த Clean Sri Lanka திட்டத்திற்கு அமைய மெர...
30/01/2025

| அக்கரபத்தனை பிரதேச சபை மற்றும் லிந்துலை MOH ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த Clean Sri Lanka திட்டத்திற்கு அமைய மெராயா நகரை சுத்தம் செய்யும் நிகழ்வு கடந்த 28ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் நு/மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தினுடைய மாணவர்கள் பங்கு பற்றி, நகரை சுற்றியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அதை வினைத்திறனாக மாற்றும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். குறித்த இந்நிகழ்வில் தலவாக்கலை - லிந்துலை MOH வைத்திய அதிகாரி Dr. D.ரெய்ஸ்னீ அவர்களும் மெராயா - பொது சுகாதார பரிசோதகர் திரு P.ஸ்ரீகாந்தன் அவர்களும் அகரபத்தனை பிரதேச சபையின் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் எண்ணக்கருவின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் ஊடாக பெண்களினுடைய பங்களிப்பை அதிகரிக்க செய்யும் நோத்க்கத்திலான விழிப்புணர்வு வீதி நாடகம் நவரச நாடக மன்று குழுவினரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மேலும் Clean Sri Lanka திட்டத்திற்கு பங்களிப்பு செய்த மாணவர்களை பாராட்டி கௌரவித்ததோடு குறித்து நிகழ்ச்சி திட்டத்தில் நாடகத்தை அரங்கேற்றிய நாடகக் கலைஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரிக்கப்பட்டது.

- ராசையா கவிஷான் -

  | மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் ஆலோசனை குழுவின் தலைவராக சங்கக்கார தெரிவுலண்டனிலுள்ள மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தினுட...
25/01/2025

| மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் ஆலோசனை குழுவின் தலைவராக சங்கக்கார தெரிவு

லண்டனிலுள்ள மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தினுடைய (MCC) உலக கிரிக்கெட் ஆலோசனை குழுவின் (WCAC) தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் செயலாளரும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தற்போதைய தலைவருமான ஜெய் ஷா குறித்த குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சங்கக்கார இதற்கு முன்னரும் இந்த பதவியை வகித்தவர். 2019 முதல் 2021 வரை குழுவின் தலைவராக குமார் சங்கக்கார பணியாற்றினார்.

2019 ஆம் ஆண்டு இந்தப் பதவியை ஏற்றபோது அந்த பதவியை வகித்த முதல் பிரிட்டன் அல்லாத நபர் என்ற பெருமையையும் சங்கக்கார பெற்றிருந்தார்.

அத்துடன் சவுரவ் கங்குலி, ஆன்ட்ரூ ஸ்ட்ராவுஸ், ஹீதர் நைட் ஆகியோரும் உலக கிரிக்கெட் ஆலோசனை குழுவின் (WCAC) உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, எதிர்வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் குறித்த குழுவின் (WCAC) பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  | உலர்ந்த திராட்சையில் கிடந்த பல்லி!கடையொன்றில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருப்பதைக் காட...
25/01/2025

| உலர்ந்த திராட்சையில் கிடந்த பல்லி!

கடையொன்றில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருப்பதைக் காட்டும் வீடியோ 'அத தெரண'வுக்குக் கிடைத்தது.

இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி கிடந்துள்ளமை தெரியவந்துள்ளது.

  | யோஷித ராஜபக்ஷ கைதுமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து ...
25/01/2025

| யோஷித ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை யோஷித ராஜபக்ஷ செய்ததற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, யோஷித ராஜபக்ஷ தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணியின் உரிமை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த 3ஆம் திகதி யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  | கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரசு பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று மா...
24/01/2025

| கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரசு பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று மாலை 3 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

(மேலதிக விபரங்கள் விரைவில்)

  | மாணவி கடத்தல் - பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்தவுலகல, ஹபுகஹயட பகுதியில் 18 வயது  பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் ...
22/01/2025

| மாணவி கடத்தல் - பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்

தவுலகல, ஹபுகஹயட பகுதியில் 18 வயது பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, அன்றைய தினம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர், கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்திற்கும், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர், வேலம்பொடை பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான உள்ளக பொலிஸ் விசாரணையைத் தொடர்ந்து, மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 19 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் தவுலகல பொலிஸ் பிரிவின் ஹபுகஹயட பகுதியில் இந்த கடத்தல் நடந்தபோது, ​​அந்த இடத்தில் பயணித்ததாக கூறப்படும் கம்பளை பொலிஸில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் அது தொடர்பில் தவுலகல பொலிஸின் செயற்பாட்டு அறைக்கு அறிவித்துள்ளார்.

எனினும் அந்த அறிவிப்பு குறித்து தவுலகல பொலிஸார் உரிய முறையில் செயற்படவில்லை என குற்றச்சாட்டில் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Clean srilanka வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக நு/ மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின்  பெற்றோர்களின் ஒத்துழைப்போடு  வருடத்த...
22/01/2025

Clean srilanka வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக நு/ மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பெற்றோர்களின் ஒத்துழைப்போடு வருடத்தின் முதலாவது சிரமதான நிகழ்வு நடைபெற்று முடிந்ததுள்ளது. இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

- பாடசாலை ஊடகப்பிரிவு-

   | பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையை களவாடி, பொருட்களை வாங்கிய இளைஞன் ஹட்டனில் கைது!பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையைக் ...
20/01/2025

| பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையை களவாடி, பொருட்களை வாங்கிய இளைஞன் ஹட்டனில் கைது!

பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையைக் களவாடி நகை, தொலைபேசி, சப்பாத்து கொள்வனவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாங்கிய நகை 78 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தை சேர்ந்த இளைஞன் ஹட்டனில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடக கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராக தெரிவாகி இருக்கும்  ஹட்டனைச் சேர்ந்த செல்வகுமார் ரினோஷன் அவர்களுக்கு வாழ்த்துக...
19/01/2025

ஊடக கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராக தெரிவாகி இருக்கும் ஹட்டனைச் சேர்ந்த செல்வகுமார் ரினோஷன் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

  | இராகலை, நுவரெலியா பிரதான பாதையில் சென்ஜோன்ஸ் மற்றும் எஸ்கடேல் பகுதியில் பாரிய மண்சரிவு மற்றும் புகை மூட்டம். வாகன போ...
19/01/2025

| இராகலை, நுவரெலியா பிரதான பாதையில் சென்ஜோன்ஸ் மற்றும் எஸ்கடேல் பகுதியில் பாரிய மண்சரிவு மற்றும் புகை மூட்டம். வாகன போக்குவரத்து ஸ்தம்பிதம்.

©️ Jeyakumar

மன்னாரின் சில பகுதிகளுக்கும் வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கைமல்வத்து ஓயா படுகையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்...
19/01/2025

மன்னாரின் சில பகுதிகளுக்கும் வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கை

மல்வத்து ஓயா படுகையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையிலிருந்து கீழ் பகுதிகளில் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை காரணமாக, வெங்கலச்செட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் இந்த நிலை குறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் (17.01.2025) இன்று மீட்கப்பட்டுள்ளது.க.கிஷாந்த...
17/01/2025

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் (17.01.2025) இன்று மீட்கப்பட்டுள்ளது.

க.கிஷாந்தன்

16/01/2025

| 76 வருடமாக நிகழும் பொன்னர் சங்கர் கூத்து கலை

கேம்பிரி மேற் பிரிவு - லிந்துலை

ஊடக அனுசரணை: எழுமின் செய்திகள்

15

15/01/2025

76 வருடமாக நிகழும் கூத்து கலை

ஊடக அனுசரணை: எழுமின் செய்திகள்

15

  | இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையம் ஊடாக வாழ்வாதாரமற்ற எம் தமிழ் உற...
14/01/2025

| இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையம் ஊடாக வாழ்வாதாரமற்ற எம் தமிழ் உறவுகள் மகிழ்சி பொங்க வழங்கும் சக்தி பொங்கல் விழா..!

ஊடக அனுசரணை: எழுமின் செய்திகள்

Address

No 36, Cymbru Upper Division
Lindula

Alerts

Be the first to know and let us send you an email when எழுமின் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to எழுமின் செய்திகள்:

Videos

Share