அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடைய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.
2013 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் டுவிட்டர் வலைப்பின்னல் மூலமாக மாவனல்லை மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் நாம் மாவனல்லை நியூஸ் இணையத்தளத்திநூடகவும் எம் சேவையை தொடரும் ஒரு முயற்சியாக இவ்வினையத்தளத்தினை ஆரம்பித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்
மாவனல்லை குறித்த செய்திகள், தகவல்கள், நிகழ்வுகள் மற்றும் அதனுடன் இணைந்த விவகாரங்களை
யும் உலகிற்கு எடுத்தியம்பவும் வளர்ந்து வரும் ஊடகத்துறை சார் இளம் சமுதாயத்தினரின் திறமைகளை வெளிபடுத்த ஒரு தளமாகவும் செயற்படுவதே எமது நோக்கமாகும்.
சமூக நலனை முற்படுத்தி உள்ளூர் அரசியல் மற்றும் இயக்க செயற்பாடுகளுள் சிக்காது நடுநிலையாகவும் தெளிவாகவும் செய்திகளை வழங்குவது எமது கடமையாகும்.
இங்கு பதிவிடப்படும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பாகும் என்பதோடு அவ் ஆக்கங்களுக்காக பதியப்படும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் வாசகர் கருத்துக்களுக்கும் குறிப்பிட்ட வாசகர்களே பொறுப்பாகும் என்பதனையும் குறிப்பிட விரும்புகிறோம்.
சமூக ஒற்றுமைக்கு எதிராகவும் தனி நபர் மனம் புண்படும்படியான செய்திகளையோ ஆக்கங்களையோ இங்கு நாம் பதிவேற்றம் செய்யமாட்டோம் என்பதனையும் இறுதியாக குறிப்பிட விரும்புகின்றோம்.
எமது இந்த முயற்சிக்கு தங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் நாம் உங்களிடமிருந்து வரவேற்கிறோம். தொடர்புகளுக்கு
யா அல்லாஹ் எமது நேர்மையான நோக்கத்தை ஏற்றுக்கொள்வாயாக.
நிர்வாகம்