Sirakukal Media

Sirakukal Media independent Media Network from youngsters of Sirakukal Amaiyam. Give the Right News on Right time
(4)

28/11/2023
Internships in Vavuniya!Ideally, we are looking for those who have successfully completed A/L and waiting for University...
18/11/2023

Internships in Vavuniya!

Ideally, we are looking for those who have successfully completed A/L and waiting for University commencement.

Apply Now
www.yarlithub.org/careers

YGC புத்தாக்கத் திருவிழாவில் மாஸ்டர்  வகுப்புக்கள் (Masterclasses)உங்கள் அறிவுத்தேடல்களுக்கு வித்திடும் ஓர் அரிய சந்தர்ப...
02/11/2023

YGC புத்தாக்கத் திருவிழாவில் மாஸ்டர் வகுப்புக்கள்
(Masterclasses)

உங்கள் அறிவுத்தேடல்களுக்கு வித்திடும் ஓர் அரிய சந்தர்ப்பம் இதோ!

YGC புத்தாக்கத் திருவிழாவில் மாஸ்டர் வகுப்புக்கள் மூலம் தற்கால தொழில் உலகிற்கு தேவைப்படும் சில திறன்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

மாஸ்டர் வகுப்புகள் என்றால் என்ன?
தேர்ந்தெடுத்த ஒரு துறையில் வல்லுனராக இருக்கும் வளவாளர்களின் தலைமையில் நாடத்தப்படும் இவ்வகுப்புக்களில் நீங்கள் உங்கள் திறனை மற்றும் அறிவினை அத்துறையில் வளர்த்துக் கொள்ள முடியும்.

YGC புத்தாக்கத் திருவிழாவில் மாஸ்டர் வகுப்புக்களை நாம் ஒழுங்கு செய்ததன் நோக்கம்?
தொடர்கற்றல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இவ்வாறான மாஸ்டர் வகுப்புகள் ஒரு திறவுகோலாக இருக்கும் என்று நாம் பெரிதும் நம்புகின்றோம்.

இவ் மாஸ்டர் வகுப்புக்கள் மூலமாக குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் மற்றும் அனுபவம் வாய்ந்த வளவாளர்களிடம் இருந்து நீங்கள் நேரடியாக கற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
நடைமுறைத் திறன்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
உங்கள் திறன்கள், எல்லைகள் மற்றும் வலையமைப்புக்களை விரிவுபடுத்தக் கூடியதாக இருக்கும்.

இம்முறை இத்திருவிழாவில் நடைபெறவிருக்கும் மாஸ்டர் வகுப்புக்கள்
1. Preparing Pitch Deck and Fundraising: Learn the art of presenting your ideas and securing funds.
2. Demystifying Cybersecurity: Safeguarding the Digital Frontier: Explore the world of cybersecurity.
3. Data Science: Dive deep into the world of data analysis.
4. Creating Compelling Visual Content: Get hands-on with multimedia storytelling and monetization.

📢 மாஸ்டர் வகுப்புக்களுக்கான விண்ணப்படிவங்கள் விரைவில் திறக்கப்படும். ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளபடியால் ஆர்வலர்களை விரைவாக விண்ணப்பிக்க அழைக்கின்றோம்.!

🌠வட மாகாண மரநடுகை மாதம்
01/11/2023

🌠வட மாகாண மரநடுகை மாதம்

01/11/2023

தானியங்கியாக செயற்படும் மணி!

இளம் சிறுவனின் எண்ணத்தின் வடிவம், எம் தேசத்தின் எதிர்காலம்

கொக்குவில் பொது நூலகத்தின் புத்தக கண்காட்சியும் விற்பனையும்
01/11/2023

கொக்குவில் பொது நூலகத்தின் புத்தக கண்காட்சியும் விற்பனையும்

யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டினை முன்னிட்டு நடாத்தப்படும் கல்விக் கண்காட்சி
01/11/2023

யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டினை முன்னிட்டு நடாத்தப்படும் கல்விக் கண்காட்சி

⚗️ chemistry in daily life | அன்றாட வாழ்க்கையில் இரசாயனவியல் இரசாயனவியல்  என்பது ஆய்வகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள...
01/11/2023

⚗️ chemistry in daily life | அன்றாட வாழ்க்கையில் இரசாயனவியல்

இரசாயனவியல் என்பது ஆய்வகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட பாடம் அல்ல; நாம் அடிக்கடி அடையாளம் காணாத வழிகளில் அது நம் அன்றாட வாழ்வில் வேரூன்றியுள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து நாம் சுவாசிக்கும் காற்று, நாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் நம் உடலுக்குள் நடக்கும் எதிர்வினைகள் வரை, இரசாயனவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அனுபவ கற்றல் அமர்வு அன்றாட அனுபவங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் இரசாயனவியலை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது நம் வாழ்வில் இரசாயனவியலின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொள்வதற்கான நடைமுறை அணுகுமுறையை வழங்குகிறது. இந்த அமர்வில் பொது இரசாயனவியல் சார்ந்த பல பரிசோதனைகளும் நடைபெற உள்ளது.

காலம் வெள்ளிக்கிழமை மாலை 2.00 - 5.00 மணி
இடம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையம்

வளவாளர்கள்
Dr. Sivanayani Selvakumar (Senior Lecturer, Department of Chemistry, Faculty of science ,University of Jaffna)

31/10/2023

இலங்கை அதிபர் சேவை III இற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு – 2023

மத்திய கல்வி அமைச்சினால் இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 401 நியமனதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2023.11.04 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளமையினால் நியமனம் செய்யப்படவுள்ள நியமனதாரிகள் காலை 08.00 மணிக்கு பிந்தாமல் உரிய முறையில் வருகைதரல் வேண்டும்.

தெரிவு செய்யப்பட்ட நியமனதாரர்கள் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் மூலம் தமது ஆளடையாளத்தினை உறுதிப்படுத்தி நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் நியமனதாரர்;கள் தவிர்ந்த எவரும் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் அறியத்தருகின்றேன்.

தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தொடர்பிலக்கத்தினைக் குறித்துக் கொள்வது தங்களுக்கான ஆசனங்களை இனங்காண்பதற்கு இலகுவாய் அமையும்.

List of Officers Selected for Recruitment to Grade III of the Sri Lanka Principal Service -

🚀 காலநிலை மாற்றமும் அதற்கான  தலைமைத்துவமும் காலம் :  4th of November  2.00pm to  5.00pm இடம் : யாழ்ப்பாண கலாச்சார மத்திய...
31/10/2023

🚀 காலநிலை மாற்றமும் அதற்கான தலைமைத்துவமும்

காலம் : 4th of November 2.00pm to 5.00pm
இடம் : யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையம்

நோக்கங்கள் :
- காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களை புரிந்துகொள்ளல் மற்றும் எதிர்கொள்ளல்
- உள்ளூர் மற்றும் உலகளாவிய சமூகங்களுக்கு இடையே உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளல்
- சமூக அளவிலான காலநிலை மாற்றத் திட்டங்களில் பணியாற்றுவதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளல்

வளவாளர்கள் :
- Prof.K.Gajapathy (Professor, Department of Zoology, Faculty of Science, University of Jaffna)
- Dr.Mrs.T.Suvanthini(Senior Lecturer, Department of Agricultural Biology, Faculty of Agriculture, University of Jaffna)

ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள படியால் மாணவர்களை விரைவாக விண்ணப்பிக்க அழைக்கின்றோம்

விண்ணப்பத்திற்கு : https://forms.gle/naEFDuV1ya62MEDh9

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான சூழல் பொது அறிவுப் பரீட்சை 2023 -                  🥇🥈🥉பசு...
08/10/2023

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான சூழல் பொது அறிவுப் பரீட்சை 2023 -
🥇🥈🥉பசுமை அமைதி விருதுகள் 🥇🥈🥉

பரீட்சை விண்ணப்ப முடிவு 15.10.2023

தரம் 9 தொடக்கம் 13 வரையான மாணவர்கள் பங்கெடுக்கலாம்.

🖥️பரீட்சை இணையவழியில் இடம்பெறும்.

சூழலியல் ஆசான் க.சி.குகதாசன் ஞாபகார்த்த தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்படும்.

பரீட்சைக்கு விண்ணப்பிக்க www.tamilnationalgreen.org

மாணவர்களைப் பங்கெடுக்க உறுதி செய்யுங்கள்.

மன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையகம் 200 மலையக எழுச்சிப் பயணத்திற்கு வலுச்சேர்கும் வகையில் களனி தோட்டம் முதல் கிரிப்போ...
12/08/2023

மன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையகம் 200 மலையக எழுச்சிப் பயணத்திற்கு வலுச்சேர்கும் வகையில் களனி தோட்டம் முதல் கிரிப்போருவ தோட்டம் வரையிலான நடைப்பயணம் 2023.08.12 அன்று காலை இடம்பெற்றது.

கல்வி சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் முயற்சியில் நடைபயணம் ஒழுங்கமைக்கப்பட்டது.

மலையகம் 200இரண்டாம் நாள்
30/07/2023

மலையகம் 200
இரண்டாம் நாள்

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணத்தின் முதலாம் நாள் பதிவுகள். தலைமன்னார் - பேசாலை
30/07/2023

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணத்தின் முதலாம் நாள் பதிவுகள்.

தலைமன்னார் - பேசாலை

மலையக மக்களின் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களது வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் தலைமன்னார் முதல் மாத்தளை ...
30/07/2023

மலையக மக்களின் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களது வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணத்தின் முதலாவது நாளன்று பங்கெடுத்திருக்கும் ஒருவர்.

மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக நினைவுத்தூபி தலைமன்னாரில் நிறுவப்பட்டு அஞ்சல...
29/07/2023

மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக நினைவுத்தூபி தலைமன்னாரில் நிறுவப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற்காக இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துவரப்பட்ட மக்களின் தடங்களை நினைவுகூருவதற்கும் வேர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் “வேர்களை மீட்டு உரிமை வென்றிட…” என்ற தொனிப்பொருளில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை ஜூலை 28 இலிருந்து ஆகஸ்ட் 12 வரையான நடைபயண ஆரம்ப நிகழ்வின்போது நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்துவதன் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது.

மாண்புமிகு மலையக எழுச்சி நடைபயணம் - மலையகம் 200தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரையான நடை பயணத்தின் முதல் நாள் நிகழ்வாக நினை...
28/07/2023

மாண்புமிகு மலையக எழுச்சி நடைபயணம் - மலையகம் 200

தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரையான நடை பயணத்தின் முதல் நாள் நிகழ்வாக நினைவுத்தூபி தலைமன்னார் கடற்கரையில் இன்று (28.07.2023) திறந்து வைக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூரும...
28/07/2023

தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில், மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 4 மணிக்கு மன்னாரில் ஆரம்பிக்கும் 252 கிலோமீற்றர் வரையான நடைபயணம் எதிர்வரும் ஒகஸ்ட் 12ம் திகதி மாத்தளையில் நிறைவு பெறவுள்ளது.

பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தமிழகத்தில் இருந்து மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.

மன்னாரில் தரையிறங்கிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து மாத்தளை வரை கால்நடையாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இதனை நினைவுபடுத்தும் வகையில், மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, சிவில் அமைப்பு என்பன இணைந்து மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த நடைபயணயத்தில் 11 கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மலையக வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல். ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகரித்தல்.

தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக மலையக சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை.

வாழ்விற்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம்.

வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்காக, பாதுகாப்பான உரிமைக் காலத்துடனான காணி உரிமை. பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட 11 கோரிக்கைகள் இந்த நடை பயணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நடைபயணத்தில் நேரில் கலந்துகொள்ள இயலாதோர், தங்கள் பிரதேசங்களிலேயே செயற்பாடுகளை முன்னெடுக்கவும், ஓவியங்கள், எழுத்துகள், பாடல்கள், காணொளிகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் மூலம் ஆக்கப்பூர்வமாக ஆதரவளிக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய்ப் புதைகுழியில் இறந்தோருக்கு நீதி கோரிய ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவுமுல்ல...
27/07/2023

கொக்குத்தொடுவாய்ப் புதைகுழியில் இறந்தோருக்கு நீதி கோரிய ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்குப் பின்னணியாக இருந்த சம்பவம் என்ன? அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித‌ எச்சங்கள், உடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் யாருடையவை? என்பன‌ குறித்துப் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கு முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28 ஜூலை 2023 அன்று) ஒரு ஹர்த்தாலினை நடாத்துவதற்கு வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதே தினத்திலே வட்டுவாகல் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட‌ செயலகத்தினை சென்றடையும் வகையிலான‌ ஒரு பேரணியும் இடம்பெறவுள்ளது. இந்த ஹர்த்தாலுக்கும், பேரணிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முழுமையான ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் வழங்குகிறது.

இலங்கையில் சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்திலே பல்வேறு மனிதப் புதைகுழிகள் சூரியக்கந்த, செம்மணி, யாழ்ப்பாணத்தின் துரையப்பா விளையாட்டரங்கு, மாத்தளை, களுவாஞ்சிக்குடி மற்றும் மன்னார் போன்ற இடங்களிலே கண்டுபிடிக்கப்பட்டன‌. இலங்கையினை ஆட்சி செய்த‌ அரசாங்கங்கள் இன ரீதியாகவும், மத ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் மேற்கொண்ட அடக்குமுறைகளுக்கு எதிராக வெவ்வேறு சந்தர்ப்பங்களிலே போராடிய பல்வேறு இயக்கங்களையும், அமைப்புக்களையும் சேர்ந்தோர் நீதிக்குப் புறம்பான முறையிலே, இராணுவமயமாக்கப்பட்ட சூழலிலே படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் மனித உரிமைகளை முன்னிறுத்திச் செயற்பட்ட செயற்பாட்டாளர்களும், பத்திரிகையாளர்களும், மாற்றுக் கருத்தினைக் கொண்டிருந்த வெவ்வேறு போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கூட‌ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலை இன்று வரை நீடிக்கிறது.

இவ்வாறு போராட்டங்களிலே ஈடுபட்டுவர்களினதும், செயற்பாட்டளர்களினதும், பொதுமக்களினதும் உடலங்களின் எச்சங்களே இந்தப் புதைகுழிகளிலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. நாட்டிலே இடம்பெற்ற வன்முறைகளிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உடலங்களே இந்தப் புதைகுழிகளிலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா என்ற பயம் அவர்களின் உறவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது. இந்தப் புதைகுழிகள் பற்றி முறையான விசாரணைகளை முன்னெடுத்து நீதியினைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கையினை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நம்பகமான எந்தச் செயன்முறையிலும் ஈடுபடவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் வேதனையினை அனுபவித்து வருவதுடன், கடுமையான‌ பொருளாதாரச் சுமையினையும், அரசின் அச்சுறுத்தல்களையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்ப் புதைகுழியிலே கண்டுபிடிக்கப்பட்ட உடைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடைகளாக இருக்கின்றன. சரணடைந்த‌, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியினை முன்வைத்து, நீதி கோரும் வகையில், அவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் பல வருடங்களாகத் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலே பயத்தினையும், வேதனையினையும் அவர்களின் குடும்பத்தவர் மத்தியிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் ஏற்படுத்தியிருக்கிறது.

வெள்ளிக்கிழமை இடம்பெறும் ஹர்த்தாலும், பேரணியும் கொக்குத்தொடுவாயிலே கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி குறித்து நாட்டினதும், உலகினதும் கவனத்தினையும் ஈர்க்கும் வகையிலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன; இலங்கை அரசிலே வேரூன்றிப் போயிருக்கும் நீதிக்குப் புறம்பான கொலை செய்யும் கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையிலே அமைகின்றன. எனவே இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்களும், தொழிற்சங்கங்களும், பொது அமைப்புக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

கொக்குத்தொடுவாய்ப் புதைகுழி குறித்தும், நாட்டிலே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய புதைகுழிகள் குறித்தும் முறையான, நேர்மையான‌ விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தப் புதைகுழிகளுக்குப் பின்னணியாக இருந்த வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அத்துடன் வடக்குக் கிழக்கிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் உடனடியாக மக்களுக்குப் பொறுப்புக் கூறுவதுடன், அவர்களிற்கான நீதியும் கிடைப்பதற்கு வழி செய்யப்படல் வேண்டும். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெள்ளிக்கிழமை இடம்பெறும் ஹர்த்தாலுக்கும், பேரணிக்கும் தனது பூரண‌ ஆதரவினை வழங்குகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
26 ஜூலை 2023

வடகிழக்குத் தழுவிய பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு
27/07/2023

வடகிழக்குத் தழுவிய பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ்  மறை மாவட்ட ஒரு முதல்வரும் மேலும் ஒரு குருவும்  நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு ...
25/07/2023

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர்.

அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள்

அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று கந்தனை தரிசித்திருந்தனர்.

நெகிழி பிரச்சினையும் சவால்களும்
25/06/2023

நெகிழி பிரச்சினையும் சவால்களும்

வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா 2023
23/06/2023

வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா 2023

வவுனியாவில் புத்தக சேகரிப்பு
22/06/2023

வவுனியாவில் புத்தக சேகரிப்பு

உலக மழைக்காடுகள் நாள்
22/06/2023

உலக மழைக்காடுகள் நாள்

We are delighted to invite you to the upcoming Regional Tech Summit 2023 - Northern Chapter, which is being organized by...
20/06/2023

We are delighted to invite you to the upcoming Regional Tech Summit 2023 - Northern Chapter, which is being organized by ICTA in collaboration with USAID-funded Palladium and the Northern Chamber of Information Technology (NCIT). This mega event promises to be insightful, informative, and full of opportunities for growth and development in the IT-BPM industry.

The Regional Tech Summit 2023 - Northern Chapter is a two-day event scheduled tentatively for the 23rd and 24th of June. This event offers,

IT MSME Training and knowledge-sharing sessions
Networking with investors and leaders
Meetings with local and multinational IT companies and Expatriate Groups
Connections with local/international Associations
Increase access and availability of finance
Job Fair with spot recruitment drives and special discounts on ICT-related Certifications

We are confident that the Regional Tech Summit 2023 - Northern Chapter will provide a unique opportunity for all the participants to learn, network, and grow. The event offers a limited number of free seats on a first-come, first-serve basis.Register now to secure your spot and grow with us.

Please share this information among your colleagues in IT-BPM industry (Jaffna Region).

Registration Link
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdR30AyDWNHN8x_FmZZWRJgDlPYdi07O0SO0z8XkgZ_U3MEng/viewform

திசையறி 2023இவ்வருடம்  O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல்பாடநூல் கல்வியைத் தாண்டிய, எதிர்கால இலக்க...
17/06/2023

திசையறி 2023

இவ்வருடம் O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல்

பாடநூல் கல்வியைத் தாண்டிய, எதிர்கால இலக்குகளை இனங்காண்பதற்கான இணையவழி வழிகாட்டல்.

பதிவுகளை மேற்கொள்ள : https://www.sirakukal.live/home
https://forms.gle/ai9tfcre81dXax9c8

விண்ணப்ப இறுதித் திகதி : 18.06.2023

1.மாணவர்களை உயர்தரம் பயிலும் போதே இலக்கு நோக்கிய கற்றலுக்கு வழிப்படுத்துதல்.
2. மாணவர் திறன் விருத்திக்கான செயல்திட்டம்
3. சான்றிதழ்களுடன் கூடிய நிகழ்ச்சித்திட்டம்.

---அறிவியல், கலை, சட்டம், விவசாயம், இயற்கை, தொழில்நுட்பம், ஆளுமைவிருத்தி, தலைமைத்துவம், சுற்றுச்சூழல், பொருளாதரம், போட்டிப்பரீட்சைகள், க.பொ.த உயர்தர பாடத்தெரிவுகள் உள்ளிட்ட பலதுறை சார்ந்த இலக்கு நோக்கிய வழிகாட்டல்கள்.

விபரம் அறிய https://chat.whatsapp.com/LvxcNztv7Cv6KJBhXpmomY

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 71வது நிகழ்வாக "இலங்கை மலையகத்தமிழர் மரபும், ஆற...
16/06/2023

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 71வது நிகழ்வாக "இலங்கை மலையகத்தமிழர் மரபும், ஆற்றுகை முறைமையும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் ஆய்வு வரிசையில் இருபத்தோராவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை முனியாண்டி காளிதாஸ் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

திகதி- 17.06.2023 சனிக்கிழமை
நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்)
இணைப்பு - https://us02web.zoom.us/j/81415584070

12/06/2023

கா பொ த சதாரண தர பரீட்சையை முடித்த மாணவர்களுக்காக ஒரு செயல‌மர்வு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அவர்களுக்கு தேவையான சமூகம், அறிவியல், அரசியல், தொழில்நுட்பம் சுற்றுசூழல் போன்ற சிலவற்றை தெளிவுபடுத்த உள்ளோம். இந்த செயற்பாடுகளுக்கு பொருத்தமான தலைப்பு ஒன்றை பரிந்துரைக்கவும்

சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 சில சிறுதானியங்களும் 100 g தானியத்திலுள்ள உயிர்ச்சத்துக்கள், சிறப்பம்சங்கள் மற்றும் அவற்றால...
19/05/2023

சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023

சில சிறுதானியங்களும்
100 g தானியத்திலுள்ள உயிர்ச்சத்துக்கள்,
சிறப்பம்சங்கள் மற்றும் அவற்றால் தயாரிக்கப்படும் உணவுகளும்

"லண்டனில் இருந்து விமல்" எனும் தலைப்பினாலான நூல் அறிமுக விழா இடம்பெறவுள்ளது. காலம்-20.05.23 சனிக்கிழமைபி.ப 4.00இடம்-நூலக...
16/05/2023

"லண்டனில் இருந்து விமல்" எனும் தலைப்பினாலான நூல் அறிமுக விழா இடம்பெறவுள்ளது.

காலம்-20.05.23 சனிக்கிழமை
பி.ப 4.00
இடம்-நூலக கேட்போர் கூடம் யாழ் பல்கலைக்கழகம்

10/05/2023

சிறகுகள் - கொழும்பு சந்திப்பு

சிறகுகள் அமைய கொழும்பு பிராந்திய செயற்பாட்டாளர்களுக்கான சந்திப்பு 14-05-2023 ஞாயிறு அன்று காலை 10.00மணிக்கு விக்ரோறியா பூங்காவில் இடம்பெறும்.

புதிதாக இணைந்து செயற்பட ஆர்வம் உடையவர்களை அழைக்கின்றோம்.
வரவினை 0760352168 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உறுதி செய்யுங்கள்.

10/05/2023

#மலையகம்200
தொடர் 04 |

"வரலாற்று விம்பங்களும் மலையக வாழ்வியலும்"

• தலைப்பு - மலையக மக்கள், முன்னெடுக்க வேண்டிய அரசியல் தீர்வுகள்

• வளவாளர் - இரா. சடகோபன்,
சட்டத்தரணி, தலைவர் மலையக மக்கள் ஆய்வு அபிவிருத்தி மன்றம்.

14.05.2023 ஞாயிறு | இரவு 8.00 மணி

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/83809250355?pwd=VGhIem5YWTY0aXVRcjFoMDA4bEN2Zz09

Meeting ID: 838 0925 0355
Passcode: 2023

10/05/2023

சிறகுகள் அமையம் - வன்னி பிராந்தியம் - வழிநடத்தல் குழு 2023/24

வழிநடத்தல் குழுவின் தெரிவு நிகழ்வு 2023.05.01 ஆம் திகதி சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பணிமனையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் சிறகுகள் வவுனியா - மன்னார் பிராந்தியம் *வன்னி பிராந்தியம்* என அழைக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

வழிநடத்தல் குழுவானது அமையத்தின் வன்னி பிராந்திய செயற்பாடுகளை நெறிப்படுத்துவதுடன், அமையத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவாகவும் செயற்படும்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் : சரணிகா சண்முகராசா

செயலாளர் - நிர்வாகப் பிரிவு : சரண்ஜா நல்லதம்பி

செயலாளர் - செயற்பாட்டு பிரிவு : தர்ஷாயனி மோகன்

நிதியியலாளர் : துளசிகா இரவீந்திரன்

++++++++++++++++++++

பிராந்தியப் பொறுப்பாளர்

படிப்பகம் : விதுஷா தங்கவேல்

சுற்றுச்சூழல் பிரிவு : பாக்கியநாதன். பிறேம் சஜித் அர்ஜூன்

தமிழர் கல்வி மதியுரையகம் : இளங்கீரன் தனுஜன்

மகளிர் பிரிவு : சஜிந்தா.கமலேஸ்வரன்

ஆய்வியல் பிரிவு : பவித்திரா சிவபாலன்

ஊடகப் பிரிவு : மதுஷா வசந்தகுமார்

விளையாட்டுப் பிரிவு : தேவராசா கபிலேசன்

கலை பண்பாட்டுப் பிரிவு : இராஜேந்திரன் சோபிகா

தகவல் தொழில்நுட்பப் பிரிவு : சிவமோகநாதன் கிருஷான்

06/05/2023

விளக்கு - ஆசிரியர்களுக்கான இணையவழி செயலமர்வுகள்

தொடர் 03 - Word Processing (MS Word, Google Docs)

06.05.2023சனிக்கிழமை இரவு 8.00 மணி

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/3393749987?pwd=blE5YkRuT01pMHJ0SE1IZFRCT2hkQT09

Meeting ID: 339 374 9987
Passcode: 2023

29/04/2023

சிறகுகள் - கொழும்பு சந்திப்பு

சிறகுகள் அமைய கொழும்பு பிராந்திய செயற்பாட்டாளர்களுக்கான சந்திப்பு 01-05-2023 திங்கள் அன்று காலை 10.00மணிக்கு விக்ரோறியா பூங்காவில் இடம்பெறும்.

புதிதாக இணைந்து செயற்பட ஆர்வம் உடையவர்களை அழைக்கின்றோம்.
வராவினை 0760352168 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உறுதி செய்யுங்கள்.

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Sirakukal Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Jaffna

Show All