Jaffna Hero .com

Jaffna Hero .com வணக்கம்..!
அன்பான வாசக சொந்தங்களே..! உங்

உயரிய பணியின் வெற்றித்தடம்*****************************யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக பதவியேற்...
05/04/2024

உயரிய பணியின் வெற்றித்தடம்
*****************************

யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின்
மருத்துவ அத்தியட்சகராக பதவியேற்றுள்ள திருமதி.Dr.சுமதி சிவசுதன் அம்மா அவர்களை இந்நன்நாளில் வாழ்த்துவதில் நாமும் பெருமையடைகின்றோம்.

*.மருத்துவ சேவையில் அனைவரினதும் நன் மதிப்பை பெற்றவர்
*.நிர்வாகத்திறன் கொண்டவர்
*.சிறந்த ஆளுமை மிக்கவர்.
*.எல்லோருடனும் உயர்வு தாழ்வின்றி பழகும் பண்பு கொண்டவர்
*.சகல உத்தியோகத்தர்களுடன்
அன்பான வார்த்தைகளினால் அணுக கூடியவர்

*. 29 வருடங்கள் சித்த மருத்துவ துறையில் மருத்துவராக சேவையாற்றி வருகின்றார்.
*.03 வருடங்கள் பம்பை மடு சித்த வைத்தியசாலையில்
மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றினார்.
*.02 வருடங்கள் யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையில் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றினார்.
மீண்டும் யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக பதவியேற்றுள்ளார்.

அவரது உயரிய சேவையை பாராட்டுவதில் நாமும்
பெருமையடைகின்றோம்.

01/04/2024

முன்பெல்லாம் யாழ்ப்பாணத்திலே ஒரு வீட்டிலே பெண் பிள்ளை இருக்கின்றது என்பதை அந்த வீட்டினை சுற்றி,கட்டப்பட்டுள....

நான் ஒரு டிப்பர் சாரதியானால் - டிப்பர் ஓட வேண்டும் என்று கனநாள் ஆசை எனக்கு .....டொக்டர் ஒருத்தரை நேற்றும் ஒருத்தன் டிப்ப...
28/03/2024

நான் ஒரு டிப்பர் சாரதியானால் -

டிப்பர் ஓட வேண்டும் என்று கனநாள் ஆசை எனக்கு .....
டொக்டர் ஒருத்தரை நேற்றும் ஒருத்தன் டிப்பரால போட்டுவிட்டான்...
'பொட்டருக்கு'ப் பயப்படாதவங்கள் கூட டிப்பருக்கு பயப்படுறாங்கள்...
'டக்கருக்கு'ம் இனி றோட்டால போகப் பயமிருக்கும்...
கறுவா லேனசில் காசு கட்டினால் கனக்க கஸ்டப்பட தேவையில்லை..
சுறுக்கா லைசன்ஸ் சுடச்சுட வந்துவிடும்...
அப்புறம் என்ன..ஆரையும் பார்க்கமாட்டன். ஆருக்கும் பயப்பட மாட்டன்
'கிளைச்' எது, 'கியர்' எது 'பிறேக்' எது என்று காலால் தடவத் தேவையில்லை
அட்சிலேட்டரை மட்டும் அமத்தினால் போதும்... றோட்டில நான்தான் 'கீறோ'
ஆரெல்லாம் என்ர எதிரி என்று அமர்ந்திருந்து லிட்ஸ் போடுவன்...
அவனொருத்தன் பேஸ்புக்கில் அடிக்கடி தனகுறவன்..
கைதடி ஒப்பீசுக்குப் போகேக்க நாவக்குழி பாலத்துக்கு அருகில வைச்சு
கைத்தடி ஊன்றி நடக்குறமாதிரி சம்பவம் செய்யனும்..
அதிகாரி(கை)கள் கன பேரால காயப்பட்டுக்கிடக்குது என்ர மனசு...
அதிரடியாக அத்தனை பேரையும் அலங்கோலப்படுத்த வேணும்...
மஞ்சள் பூசி முகம் மினுக்கிய உன்னுடன் வீதியில் நான் வரும் போது
அஞ்சி ஒதுங்கிச் செல்பவர்களை பார்க்கையில் என் நெஞ்சத்தில் இன்பம் ஊஞ்சலாடும்..
கஞ்சாவும் கடத்தலாம்...கிறவல் மண்ணும் கடத்தலாம், மரமும் கடத்தலாம்...
கொஞ்சமும் பொலிசுக்கு அஞ்சுவதில்லை... நீதிக்கும் கட்டுப்படுவதில்லை..
மஞ்சமேறி போருக்கு செல்வது போல் மஞ்சள் மேனியில் நான் ஏறிச் செல்கையில்.....

“கொஞ்சம் ஓவராத்தான் இருக்குது” என்று யோசிக்காதேங்கோ...
நிச்சயம் டிப்பர் சாரதியாக வரத்தான் போறேன்.....

நல்லூர் எசமான் அம்மா சுகிர்தா தேவி குமராதாஸ் மாப்பாணமுதலியார் குகபதமடைந்தார்.
28/01/2024

நல்லூர் எசமான் அம்மா சுகிர்தா தேவி குமராதாஸ் மாப்பாணமுதலியார் குகபதமடைந்தார்.

இணுவில் மூலை வீட்டு முத்திலிங்கத்தாரின் மூத்த பெட்டையின் கலியாணத்தில் நடந்தது என்ன?  https://www.jaffnahero.com/ 2024/01...
18/01/2024

இணுவில் மூலை வீட்டு முத்திலிங்கத்தாரின் மூத்த பெட்டையின் கலியாணத்தில் நடந்தது என்ன? https://www.jaffnahero.com/ 2024/01/blog-post_18.html

வல்வெட்டித்துறை வானில் அலங்கரித்த  இராட்சத  செயற்கை கோள் பட்டம்! முதலிடம் பெற்ற குண்டு போடும் விமானப் பட்டம்!! வீடியோ ht...
16/01/2024

வல்வெட்டித்துறை வானில் அலங்கரித்த இராட்சத செயற்கை கோள் பட்டம்! முதலிடம் பெற்ற குண்டு போடும் விமானப் பட்டம்!! வீடியோ https://www.jaffnahero.com/2024/01/blog-post_45.html

15/01/2024

யாழ்ப்பாணத்தில் செம்மணிப்பகுதியில் உள்ள சுடலை மிகப் புரதான சுடலையாக இருக்கலாம் என எண்ணுகின்றேன். குறித்த சுட...

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் கவனத்திற்கு பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு படித்துக் கொடுங்கள்.சீர...
12/01/2024

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் கவனத்திற்கு பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு படித்துக் கொடுங்கள்.சீருடை, பாதனி இல்லை என்று துரத்தி விடாதீர்கள்.

காரணம் சாப்பாட்டிற்கே தொழில் செய்ய முடியாது.பொருற்களின் விலை அதிகம்.பணம் உள்ளவர்கள் பாதனிவாங்குவார்கள்.மற்றவர்கள் என்ன செய்வது?
அரசாங்கமே பாதனியை கொடுக்காமல் கைவிட்டது பிள்ளைகளுக்கு ஏமாற்றமே..
எனவே பிள்ளைகளின் நலனுக்காக அவர்களின் வீட்டு சூழ்நிலை அறிந்து பிள்ளைகலோடு பேசுங்கள்.

ஒரு சோடி பாதனியின் குறைந்த விலை 4500 ரூபா.5 பிள்ளைக்கும் பாதனிக்காக 5×4500= 22500. இதைவிட கொப்பி பேனை மற்றும் புத்தகப் பை இன் விலை 4000 கற்றல் உபகரணங்களின் விலையை மொத்தமாகக் கூட்டினால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேன்டாம் என மனம் நாடுகிரது.

தொடர விரும்ப வில்லை வேதனையாக இருக்கு நன்றி

நன்றி
சமூகவலைத்தளம்

09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள்.16 வயதில் சுவிஸ் வந்தவள்.மருத்துவர் ஆகப்போறாள்_ தமிழிசைஆர்காவ் மாநில...
11/01/2024

09 வயதில் முள்ளிவாய்க்கால்
பேரவலத்தை கடந்து வந்தவள்.
16 வயதில் சுவிஸ் வந்தவள்.
மருத்துவர் ஆகப்போறாள்_ தமிழிசை
ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற
திரு .திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற
எங்கட பிள்ளையே இத்தகைய சாதனையை படைத்துள்ளார்.
#பதிவு கொஞ்சம் நீளம்தான் ஆனாலும்.
ஒருக்கா வாசித்து பாருங்கோ சிலிர்த்து
போவீர்கள்___
தனது 09வயதில் 2009 முள்ளிவாய்க்கால் இறுதித்தருணம் வரை கடந்து பின்னர்.
க.பொ சாதரண தரம்வரை கொக்குவில் இந்துக்கல்லூரியில் கற்று 8A பெறுபேற்றினை பெற்றிருந்தாள்.
அப்பிடியே தனது 16 வயதில் சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சுமார் ஒரு வருடம் மொழி படித்துக்கொண்டிருந்தபோது அவளது மொழியாற்றலை உணர்ந்த கல்வி நிர்வாகம்
( Gymnasium 🏫) தொடரலாம் என்ற அனுமதியுடன் தொடர்ந்தாள்.
அங்கும் அவள் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்து 06 மாத காலம் ஆசிரியர்துறையை தேர்ந்தெடுத்து கற்றுக்கொண்டிருந்தபோது..
#அவளது மனதில்
மருத்துவத்துறைதான் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது ...
விடவில்லை முயற்சியை தொடர்ந்தாள்.
அவளது மருத்துவத்துறை கனவை நனவாக்கினாள் .
தற்போது பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தை நிறைவு செய்து இரண்டாம் வருடத்தில் கால் பதித்துள்ளாள்.
#அபூர்வம் நடப்பதென்பதன்பது
#உண்மைதான் இது மிக அபூர்வம்.
மிக குறுகிய காலத்தில் மொழி படித்து அதில் அதி திறனாய்வாகி மருத்துவத்துறையில் கால் பதிப்பதென்பது அதுவும் 2009 இல் அந்த முள்ளிவாய்க்காலில் மொத்த வலிகளையும் கண்ணாலே கண்டு வந்த பிள்ளை இந்த சாதனையை படைத்திருக்கிறாள் என்பது பாரட்டத்தக்கது .
#தமிழிசை சிறந்த பாடகி
#இசையும் கற்கிறாள்..
மொழியைக்குறுகிய காலத்தில் படிக்க வேண்டுமென்ற ஓர்மத்துடன்
இருந்த தமிழிசை இசைத்துறையயும்.
சமநேரத்தில் கற்று 04 ஆவது தரத்தில் சித்தியடைந்து 05 தரத்தை நோக்கி நகர்கிறாள்.
#மற்றொரு சிறப்பு__
இவளது தாயார் திருமதி வனஜா தமிழீழ நிழல்
அரசின் மருத்துவப்பிரிவில் இறுதி வரை வைத்தியராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#இதிலிருந்து என்ன புரிகிறதென்றால்..
" விதைத்துக்கொண்டிரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம் " என்பதை எங்கள்.
தலைவன் செய்தது இன்று உரமாகிறது.
எம் தேசத்திற்கு அது வரமாகிறது..
இவளது தந்தையார் சிறந்த பண்பாளன் கடந்த மாதம் கூட ஊரி மாநிலத்தில் கண்டு கதைத்தேன். இது குறித்து எதுவும் பேசவில்லை .
ஆனால் கடந்த எழுச்சிக்குயில்
போட்டியில் " தமிழிசையைக்காணவில்லை என்று அவர்களது குடும்ப நண்பரிடம் கேட்டபோதுதான் அவர் சொன்ன தகவல்தான்.
அப்பிடியா ? தமிழிசை டொக்டரக்கு படிக்கிறாளா ? இப்ப வந்த பிள்ளையல்லவா ? என்று திகைப்புடன் கேட்டேன்..
அன்பானவர்களே ! இப்பதிவை
இங்கு பதிவிடுவது தமிழிசைக்காக மட்டுமல்ல
ஒரு குறிப்பிட்ட வயதில் வருகின்ற பிள்ளைகள்
தொழிற்கல்வியைத்தேர்ந்தெடுப்பதுதான் சிறந்த வழி உயர்கல்வி சாத்தியமற்றது என்று நினைப்பவர்களுக்கானதும். முடிந்தால் விரும்பினால் அதிகம் பகிருங்கள்.
#ஒரு மட்டற்ற மகிழ்ச்சி என்பது யாதெனில்.
ஒரு பாடகியாக அறிமுகமாகிய எங்கள்.
தமிழிசையை சில வருடங்களில் பின்
Dr_ கலைச்செழியன் தமிழிசை என்று பார்க்க போகிறோம்.என்கிறபோது உள்ளமெல்லாம் புளகாங்கிதம் பூத்துக்குலுங்குறது..
" எங்கட எங்கட என்று சொல்லி
கொண்டாடி தீர்க்கும் ஒவ்வொன்றிலும்.
தமிழ்த்தேசியம் வலுப்பெற்று நிற்கும்.
ஆதலால் எங்கட தமிழிசைக்கு
பலகோடி வாழ்த்துக்கள்.
" முயற்சி மெய்வருத்தக்கூலிதரும் என்பதை நன்குணர்ந்தவள் போலும் தமிழிசை..
நன்றி: .எஸ்.கவிதரன் Selva Kavitharan

பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் போது பெரும்பாலான பெற்றோரின் ஆய்வு பெரும்பாலும் அங்குள்ள ஆசிரியர்களின் பக்கமே காணப்படும...
11/01/2024

பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் போது பெரும்பாலான பெற்றோரின் ஆய்வு பெரும்பாலும் அங்குள்ள ஆசிரியர்களின் பக்கமே காணப்படும். ஆனால் பிரபல பாடசாலைகளுக்கு இது விதிவிலக்காக இருக்கும்,,,,,, என்றாலும் அதனை ஆய்வுக்குட்படுத்தும் தர்க்க ரீதியான, விஞ்ஞான பூர்வமான பெற்றோர் தற்போதும் இருக்கிறார்கள் என்பது உண்மை. அவ்வாறு எனது மகனை 2019 இல் தரம் ஒன்றில் இணைப்பதற்காக பிரபல பாடசாலைகளில் இணைக்கும் வாய்ப்பு எனக்கிருந்தது… எனது விருப்பம் அருகிலுள்ள ஊர்ப்பாடசாலையில் இணைத்தல் என இருப்பினும், அயலில் ஊர்ப்பாடசாலையிலுள்ள அரசியல் காரணமாக தயங்கிநின்றேன். எமது குடும்பத்திற்கும் அப்பாடசாலைக்குமுள்ள உணர்வுப்பெறுமதியான விடயம் காரணமாக குடும்பத்தினர் விடாப்பிடியாக நின்றதால் ஊர்ப்பாடசாலையில் தயங்கி ஆனால் அவதானமாக சேர்த்தேன். மிக அவதானமாக விடயங்களை நுணுகி ஆராய்ந்தேன்… வகுப்பறை துப்பரவு என்ற போர்வையில் பாடசாலைக்குள் என்னை உட்செலுத்தி விடயங்களை ஆய்வுக்குட்படுத்தத் தொடங்கினேன். சிறு வயது முதல் கல்வி அதிகாரிகள் மீதுள்ள விமர்சனம் காரணமாக இன்னும் அவதானமாக இருந்தேன். அபிவிருத்திச்சங்கத்தின் நிர்வாகத்தில் இடம்பெறாது பாதுகாப்பாக வெளியில் நின்றேன். ஒத்துழைப்பு வழங்கினேன். இதன்போது நான் அவதானித்த விடயங்கள் ஏராளம் என்றாலும் எனது மகனின் கல்வியின் மீது நேரடித் தாக்கம் செலுத்தும் ஆசிரியர்கள் மீதே அதிக அவநானம் இருந்தது. பல ஆசிரியரைப்பார்த்த அனுபவம் எனக்கு கிட்டியபடியால் கண்துடைப்புக்கு அரச ஆசிரியர் ஒருவர் கடமையாற்றுவார், நாம்தான் கற்பிக்க வேணும் என்ற சாதாரண பெற்றோரின் மனநிலையில் நான் இருக்கவில்லை. அரச பாடசாலை ஆசிரியர் மட்டும்தான் திறமையாக மாணவர் மீது மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென முழுமையாக நம்பினேன். என்னைப்போன்றே அங்கு பிள்ளைகளை இணைத்த இருபது வரையிலான பெற்றோரும் ஆசிரியர்களை நம்பியது அதிசயமான உண்மை. அந்த நம்பிக்கைப்படியே அவர்கள் பாடசாலைக்கு ஒத்துழைத்தனர். கிராம்ப்புறத்தில் வசதிகளற்று இருப்பினும் ஆசிரியர்களின் தரம் பிரபல பாடசாலைகளுக்கு நிகராக இருந்தது. கற்பிக்கும் நுட்பம் சிறுவர் உளவியலை அடியொற்றி ஒவ்வொரு மாணவனின் இயலுமை இயலாமை கண்டறிந்து தக்கவாறு தரம்பிரித்து கற்பிக்கப்பட்டதை கண்ணால் நேரடியாக பார்த்தேன். ஒழுக்கம், பண்பாடு விழுமியங்களை இம்மியளவும் பிசகாமல் கடைப்பிடிக்க வைத்ததை அவதானித்தேன். போட்டிகளில் மாணவர்களை கலந்து கொள்ளச்செய்யு முன் தெரிவிற்கான நியம்ம் கடைப்பிடிக்கப்பட்டதை ,திறமைக்கு முதலிடம் வழங்கப்பட்டதை அவதானித்தேன். எந்தப்பாகுபாடுமின்றி மாணவர்கள் தரம் 1, தரம் 2 ஆகிய வகுப்புகளில் நடாத்தப்பட்டார்கள். எழுத்து தெரியாத மாணவர்கள் நிறுத்தி வைத்து எழுதக்கற்றுக் கொடுக்கப்பட்டார்கள். சகல மாணவர்களையும் செயற்பாடுகளில் ஈடுபட ஊக்கமளித்து செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பெற்றோருக்கு பிள்ளைகளின் முன்னேற்றம் முன்னேற்றமின்மை பற்றி கிரம்மாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் வைபர் குழும்ம் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக தொடர்ச்சியாக சிறு சிறு வீடியோக்கள் கையால் எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டன. செயலட்டைகள், வீட்டு வேலைகள் வழங்கப்பட்டன. வீடுகளுக்கு கொப்பிகள் எடுக்கப்பட்டு திருத்தப்பட்டன. தொலைபேசிகளூடாக நலம் விசாரிக்கப்பட்டது. தரம் 3 இல் சிறு இடைவெளிகள் ஏற்பட்டாலும் அது பிற்காலப்பகுதியில் புதிய அதிபரின் மாறுதலோடு நிவர்த்தியாக்கப்பட்டது. தரம் 5 இல் பாடசாலை மிக மிக கவனமெடுத்து 2.30 வரை மேலதிகமாக வகுப்புக்கள், தொடர் பரீட்சைகள் என வைக்கப்பட்டு கல்வியூட்டப்பட்டது. எந்த எதிர்பார்ப்புமின்றி, எந்த வியாபார நோக்கமுமின்றி பிள்ளைகள், பிள்ளைகள், பிள்ளைகள் என்று தங்கள் பிள்ளைகளாக அக்கறையாக, பணியில் பிடிப்புள்ளவர்காக ஈடுபாடு காட்டி வளர்த்துவிட்டார்கள் அப்பாடசாலை ஆசிரியர்கள்.
அப்பாடசாலை யா/கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம்.
எனது மகனுக்கு நேரடியாக கற்பித்த இப்பாடசாலை ஆசிரியர்கள் திருமதி.கிரேதாகரன் வசந்தமாலினி, திருமதி. லோ. சிறீகாந்தன், திரு. நிக்கலஸ் ரொசான், ஆங்கில ஆசிரியை திருமதி. திலகா ஆகியோரை என்னால் மறக்க முடியாது என்றால் என் மகன் எவ்வளவு நேசித்திருப்பான். இவர்களை விட்டு வேறு பாடசாலை போகிறதை எனது மகன் விரும்பவில்லை; கவலையுற்று இருப்பதை அவதானித்திருக்கிறேன். அப்பாடசாலையில் இரண்டு வகுப்பு பிரிவுகள் இருந்தன. மற்றய வகுப்பில் கற்பித்த ஆசிரியரகளான செல்வி பெருமாள்பிள்ளை (ஓய்வுநிலை) , திருமதி. ம. பரமானந்தம் மேலே குறித்த மூன்று ஆசிரியர்களுக்கும், தற்போதைய அதிபர் திருமதி சிவரஞ்சினி கணேசானந்தன் அவர்களுக்கும் அவர்களது அர்ப்பணிப்பான சேவையினைப்பாராட்டி சிறு கௌரவிப்பினை செய்வதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும். விரும்பிய பெற்றோர் நாம் இணைந்து கௌரவித்து மகிழ்ந்தோம்.
இது பிரதி செய்யப்பட்ட பதிவு

யாழ் பல்கலைக்கழக மாணவியின் உயிரை காவு கொண்ட டெங்கு.யாழ் பல்கலைக்கழக கலைக்கூட உறுதியாண்டு மாணவியின் உயிரை டெங்கு காவுகொண்...
24/12/2023

யாழ் பல்கலைக்கழக மாணவியின் உயிரை காவு கொண்ட டெங்கு.

யாழ் பல்கலைக்கழக கலைக்கூட உறுதியாண்டு மாணவியின் உயிரை டெங்கு காவுகொண்டுள்ளது.

யாழ் அளவெட்டியைச் சேர்ந்த குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

குறித்த மாணவியின் மரணம் டெங்கு காய்ச்சல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டிக் டாக் பேஸ்புக் வீராங்கனை அல்ல இவர்கள் உண்மையிலேயே அனைவரும் மதிக்கக் கூடியவர்கள் இது போன்றவர்களை கண்டால் அவர்களிடத்தி...
23/12/2023

டிக் டாக் பேஸ்புக் வீராங்கனை
அல்ல இவர்கள் உண்மையிலேயே
அனைவரும் மதிக்கக் கூடியவர்கள் இது போன்றவர்களை கண்டால் அவர்களிடத்திலும் பொருட்களை வாங்குவோம்...👍❤

அரிய புகைப்படம்இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியின் முதலாவது பேரவை.சேர்.பொன்.இராமநாதன் அவர்களும் சேர்.பொன் அருணாசலம் அவர்களு...
22/12/2023

அரிய புகைப்படம்
இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியின் முதலாவது பேரவை.
சேர்.பொன்.இராமநாதன் அவர்களும் சேர்.பொன் அருணாசலம் அவர்களும் உறுப்பினர்களாக விளங்கியுள்ளனர்.

யாழில் மருத்துவத்துறைக்கு தனது உடலை கொடுக்க சொல்லி உயிர்விட்ட பெரியவர்!! நாவற்குழியை பிறப்பிடமாகவும் நுணாவிலை வசிப்பிடமா...
21/12/2023

யாழில் மருத்துவத்துறைக்கு தனது உடலை கொடுக்க சொல்லி உயிர்விட்ட பெரியவர்!!

நாவற்குழியை பிறப்பிடமாகவும் நுணாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தம்பிராசா இயற்கையிலேயே பார்வையை இழந்த ஒருவர். இருப்பினும் தனது அயராத முயற்சியால் சுய தொழில் முனைவராக தன்னுடைய இறுதிக் காலம் வரை வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்திலிருந்து முதன் முதலாக சீதுவைக்குச் சென்று பார்வையற்றவர்களுக்காக நடத்தப்பட்ட கதிரை பின்னும் பயிற்சி நெறியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்து கதிரை பின்னும் தொழிலை ஆரம்பித்ததோடு மட்டுமல்லாது இங்கிருந்த பல பார்வையற்ற இளைஞர்களுக்கு கதிரை பின்னும் தொழிலினை பயிற்றுவித்து அவர்களையும் தொழில் முனைவோராக உருவாக்கிய பெருமை இவரை சாரும்.

யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமன்றி ஆரம்ப காலங்களில் இருந்தே தென்மராட்சியில் தமிழரசு கட்சியின் பிரச்சார நிகழ்வுகளில் இவர் இல்லாத மேடைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழரசு கட்சியின் அர்ப்பணிப்பு உள்ள ஒரு பிரச்சாரியாக இருந்துள்ளார்.

மிகுந்த இறை நம்பிக்கையும் கர்நாடக இசை மீது அதீத கேள்வி ஞானத்தோடு கூடிய ஈடுபாடும் உடைய தம்பிராசா இப்பொழுது அருகி வருகின்ற ஓதுவார் எனப்படுகின்ற பணியினையும் தன் இறுதிக் காலம் வரை செய்து வந்த இவர் தனது 93 வயதில் 19.12.2023 அன்று வினாசித்தம்பி வீதி சாவகச்சேரியிலுள்ள அவரது மகனின் இல்லத்தில் இறையடி சேர்ந்துள்ளார்.

அவர் தன் சுய விருப்பின் பேரில் தனது உடலை மருத்துவ மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தானமாக வழங்கியுள்ளார். அவரது உடல் அன்றே யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தன்னுடைய பிறப்பிற்கான பலனாக தனக்கு தெரிந்த அறிவையும் , ஞானத்தையும் தன்னோடு வைத்திருக்காது மற்றவருக்கு புகட்டும் ஆசானாகவும், ஆலயமெங்கும் இறை புகழை பாடும் ஒரு தொண்டனாகவும் , இறக்கும் வரையிலும் தன் மீது கொண்ட அதீத நம்பிக்கையோடு என் வேலைகள் அனைத்தும் நானே செய்வேன் என்ற ஓர்மத்தோடும் வாழ்ந்து சென்றுள்ளார் தம்பிராசா..

Pallavamஆரம்பகாலத்தில் சிங்களம் என்னும் சொல் தென்னிலங்கையில் வசித்து வந்த ஒரு குழுவினரையே குறித்தது என R.A.L.H குணவர்த்த...
15/12/2023

Pallavam
ஆரம்பகாலத்தில் சிங்களம் என்னும் சொல் தென்னிலங்கையில் வசித்து வந்த ஒரு குழுவினரையே குறித்தது என R.A.L.H குணவர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய மற்ற குழுவாக தமிழர்கள் தென்னிலங்கையில் வாழ்ந்திருந்தனர். (அநுராதபுரி) ஆனுர்புரி என்றால் நந்திக்கொடி பறக்கும் நகர் (குடுமியான்மலை கல்வெட்டு.
அநுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்களே யார் மன்னனாக வரவேண்டும் என்பதனை தீர்மானித்ததாகச் சூளவம்சம் கூறுகிறது. தமிழர்கள் பெரும்பான்மை யாகவும் பலத்துடனும் வாழ்ந்திருந்ததால் அவ்வாறு செய்ய முடிந்துள்ளது. அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட மண்படை ஆராய்ச்சிமுதல் மண்படை கி.மு. 4500 ஆண்டுக்குரிய செயற்கை நீர்த்தேக்கம் இருந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. அக்காலத்தில் அங்கே தமிழர் ஆட்சி நிலவியுள்ளது. கி.மு1000 ஆண்டில் அநுராதபுரத்தில் கதம்பநதிக் கரையில் தமிழ் நாகர்களின் தலைநகர் இருந்துள்ளது. அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (A).
அதுமுந்திய அசுரபுரி என்ற தலைநகர் தொடர்ச்சியாக கி.மு 4500 முதல் தமிழர் ஆட்சிஇடம் பெற்றிருந்ததை இது காட்டுகிறது. கிபி 6ம் நூற்றாண்டிற்குரிய அனுராதபுர சைவத் தமிழ் சாசனம்கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்துள்ளதைக் காட்டுகின்றது. கிபி 1679ல் றோபேட்நொக்ஸ் என்றஒல்லாந்தபடை அதிகாரிகண்டி அரசனின் சிறையில் 18 வருடம் இருந்து தப்பி ஓடி வந்த வேளையில், அநுராதபுரத்தில் சிங்களத்தில் அவன் உரையாடியபொழுது அங்கிருந்தவர்களினால் அதைவிளங்கிக்கொள்ளமுடியவில்லை. அவர்கள் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட இனத்தவர்களாக காணப்பட்டார்கள். அவர்களின் தாய் மொழியாக தமிழ்மொழி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே 17ம் நூறாறானடில் அனுராதபுரியில் தமிழ் மக்களே வாழ்ந்துள்ளனர். 18ம் 19ம் நூற்றாண்டில் குலசேகரம். வைரமுத்து வன்னி அரசர்களால் நுவரகலாவிய என்ற அநுராதபுர பிரதேசம் ஆட்சி செய்யப்பட்டது.
சத்தாதீசனின் தமிழ்க் கல்வெட்டு பொன்னன் வெளியில் காணப்பட்ட தீர்த்தக்குளம் திகவாபி ஆக மாற்றப்பட்டுள்ளது. பட்டிப்பளை ஆறு கல்லோயா ஆகமாற்றப்பட்டு. சிங்களக் குடியேற்றத் திட்டம் உருவாக்கப்பட்ட போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியைப் பிரித்து அம்பாறை மாவட்டம் என பெயரிடப்பட்டது.
தமிழில் வாவி என்னும் சொல்லே சிங்களத்தில் வாபி என்றும், வேவ என்றும் அழைக்கப் படுகிறது. இது நடுக்காடுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்கு தொன்று தொட்டு தமிழர்களே விவசாயம் செய்து வந்தனர்.
1952ல் நிகழ்ந்த பெளத்த, முஸ்லிம் கலவரத்தினால் தமிழர்களும் வெளியேற நேர்ந்தது. கொண்ட வெட்டுவானில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய தமிழ்ப்பிராமிக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டள்ளது. துட்டகாமினி தம்பியான சத்ததீசனால் தமிழில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு இதுவாகும். துட்ட கைமுனுவும். சத்ததீசனும் தமிழர்கள் என்பது இதனால் தெரிகின்றது.
கலிங்கர் வருகை இந்தியாவில் குப்தவம்ச அரசன் காலமான கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் பெளத்தர்கள் கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், கொடுமை.
குரூரங்களுக்கு ஆளாக்கப்பட்டு மிலேச்சத்தனமாக ஆங்காங்கே பழிவாங்கப்பட்டபோது. உயிருக்கு அஞ்சி. பல்லாயிரக்கணக்கான பெளத்தர்கள் வட இந்தியாவிலிருந்து தெற்கே தப்பி வந்தனர். பீகார், ஒரிசா வங்காளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த பெளத்தர்கள் பயந்து, கலவரமடைந்து ஒழிந்து. உயிரைக் காப்பாற்றி இலங்கையில் வந்து குடியேறினர் என்று ம.க. அந்தனிசில் (13.12.1998 வீரகேசரி) தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் வடக்கிலும், கிழக்கிலும் வாழ்ந்த தமிழ்ப் பெளத்தர்களின் வரலாற்றை இருட்டடிப்புச் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மகாவம்சத்தை எழுதிய மாநாம தேரரும் அப்பொழுது தப்பிவந்த ஒருவரே.
அவர்களுக்கு இந்தியாவில் இழைக்கப்பட்ட கொடுமையான. குரூரமான சித்திரவதைகளின் வேதனைகள் அவர்களின் மனதில் உறைந்து போய்விட்டது. முதலில் இக்காலத்தில் தான் பெளத்தர்கள் கதியற்றவர்களாக ஒளிவுமறைவாக வந்து களவாகக் குடியேறினார்கள். அதனால் தானோ என்னவோ மாநாமரின் எழுத்துக்களிலும் கொடுமையான குரூரமான சிந்தனைகள் இழையோடிக் காணப்படுகிறது. மீண்டும் கி.பி. 10ம், 11ம். 12ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியர்கள் படை எடுத்து வந்து கலிங்கம், மகதம், வங்காளத்தில் பெளத்தத்தை பெருமளவில் சிதைத்தனர். பெளத்த மடாலயங்களும் அழித்து நிர்மூலமாக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான பெளத்த குருமார்கள் அவர்களது மடாலயங்களில் வைத்துக் கொலை செய்யப்பட்டார்கள். பலர் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். பெளத்தப் பள்ளிகள் சூறையாடப்பட்டன.
பீகார் ஆயிரமாண்டுகளுக்கு மேலாக பெளத்தமதக் கல்வியையும் பெளத்த கலாசாரத்தினையும் போதித்து வந்ததாகும், ஒரேசமயத்தில் 40000 மாணவர்களைக் கொண்டிருந்த உலகின் மிகப்பெரிய நாலந்தா பல்கலைக்கழகம் 197ல் முஸ்லிம்களினால் அழிக்கப்பட்டது. விலைமதிக்க முடியாத இலக்கிய செல்வங்களான நூல்களும் அழிக்கப்பட்டன. உலகத்திற்கு பேரிழப்பாகும் என டாக்டர் எஸ் தியாகராசா (வீரகேசரி 24.8.05) தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் கொடுமை கொலை குரூரங்களைத் தாங்க முடியாத நிலையில் உயிரைக்காப்பாற்றி கொள்வதற்காக கலிங்கத்தினிலிருந்து பெளத்த குருமார்கள். கலிங்க அரசர்கள்.
அரச வம்சத்தவர்கள் எல்லாவற்றையும் இழந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு களவாக தோணிகளில் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர். இது இரண்டாம் வருகையாகும்.
ஏற்கனவே தப்பிவந்தவர்கள் இங்கு பாதுகாப்பாக வாழ்ந்ததால், அவர்களும் கதியற்றவர்களாக இங்கு வந்தனர். இங்குள்ள பெளத்த பிக்குமாரும் பெளத்தர்களுமாக வந்தேறுகுடிகளை ஆதரித்தனர்.
இலங்கையர் பலர் இருந்தபோதும் பெளத்த குருமார் பெளத்தமத வளர்ச்சிக்காகவே இந்தியாவிலிருந்து வந்த கலிங்கர்களை தென் இலங்கையில் அரசராக்கினர்.
மேலும் கலிங்கர்களான பெளத்த குருமார்.
தமது பாதுகாப்பிற்காகவும் கலிங்கர்கள் அரசராவது நல்லது என எண்ணியே அவ்வாறு செய்தனர்.
தென்னிலங்கையில் சிங்கள அரசவம்சம் ஒன்று இல்லாதகாரணத்தினால் அந்நிய நாட்டவரான கலிங்கர்கள் அரசர் ஆக வரமுடிந்துள்ளது. தென்னிலங்கையில் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலங்களில் (10-12 நூற்றாண்டு கலிங்கர்களும், மகதர்களும் இலங்கைக்கு வந்தனர். கலிங்க மன்னர்களின் விபரம். மகிந்தன் 956 - 972 ஆண்டு வரை விஜயபாகு கி.பி.1055 - 1110 ஆண்டு வரை விக்கிரமபாகு கி.பி 16 - 1137 ஆண்டு வரை நிசங்கமல்ல கி.பி 1187 - 1196 ஆண்டு வரை விக்கிரமபாகு 1196 - 12OO தென்னிலங்கையில் ஆட்சிசெய்தனர்.
மேலும் கல்யாணவதி வீரபாகு, சோடகங்கன் ஆகியோர் படையெடுப்பின் காரணமாக வந்தனர். இதனால் கலிங்கப் பெயர்களான நிசங்க, விஜய, மகிந்த, விக்கிரம, திரிலோக சுந்தரி, லீலாவதி. சுந்தரி ஆகிய பெயர்கள் சிங்களவர் மத்தியில் நிலை கொண்டுள்ளன.
கலிங்கர்கள் இந்திய திராவிட இனத்தவர் ஆவர். கி.பி. 956ல் வந்த கலிங்க இளவரசன் மகிந்தன் பெளத்த சமயத்தை இங்கு பரப்பினான். கி.பி.1055ல் வந்த விஜய என்ற கலிங்க மன்னன் இங்கு அரசனானான்.
விஜய மகதத்திலிருந்து வந்தவன் என்றும் வேறு கருத்து உண்டு. சிங்களவர் என்று பூரண அடையாளம் பெறத் தொடங்கியது கி.பி.1200 அளவில் தான் என்று பேராசிரியர் இந்திரபாலா தெரிவித்துள்ளார்.
அழகேசுவரனின் அழகேசுவரன் கோட்டை என்பது கோட்டை இராசதானியாகும்.

கம்பளை மன்னன் விக்கிரமபாகுவின் இனத்தவனும், கம்பளை அரசில் படைத்தலைவனாகவும், மந்திரியாகவும் இருந்தவனுமான அழகக்கோன் அல்லது அழகேசுவரன் என்பனை மன்னனாக்குவதற்காக கி.பி 1406) கோட்டை ராச்சியம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து செண்பகப்பெருமாள் போன்ற அரசர்களல் ஆட்சிசெய்யப்பட்டு வந்தது. சுனித்திராதேவி தமிழரசி மருமகள் தமிழரசி, பேத்தி தமிழரசி என்று தமிழர்களின் ஆட்சியிலிருந்த காரணத்தினால் கோட்டை இராசதானியில் தமிழ் அரச மொழியாக இருந்துள்ளது. H.W. கொட்றிங்ரன்"சிலோன் என்றநூலில் கோட்டை அரசினை ஆண்டமன்னர்களது அரசமொழியாக தமிழ் மொழியே இருந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அழகக்கோன் முதலாக தருமபாலன் வரை கோட்டையை ஆண்ட மன்னர்கள் எல்லோரும் தமிழர்களே. அழகக்கோன்கோட்டை அமைந்த இடம் ஜெயவர்த்தன புரமாகும். இலங்கையில் அகழ்வாராச்சிகளில் தென்கரை வளவகங்கை பகுதி, கிழக்குக் கரை கதிரவெளி, மேற்குக்கரை பொன்பரிப்பு மாதோட்டம் மாந்தை, வடக்குக்கரை வல்லிபுரம், மத்திய இலங்கையின் வவுனியா, அநுராதபுரம், முதலிய இடங்களில்தமிழர்களின் ஈமச்சின்னங்களாகிய முதுமக்கட்தாழிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கோட்டகம சங்கிலிக்கான தரவை. பாண்டுவாசநகர். மாத்தளை, கந்தப்பளை, புதுமட்டவாவி, முதலிய தென்னிலங்கை ஊர்களில் பழைய தமிழ் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மற்றும் வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்ட சிவாலய இருப்பிடங்களையும். அவற்றின் பின்னைய வரலாற்றினையும் ஆராயு மிடத்து இந்நாடு தமிழ் இலங்கையான சிவபூமியே என்று தி.க.இராசேசுவரன் (5ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர்) தெரிவித்துள்ளார். கி.பி. 13ம் - நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வீரசோழியம் என்ற தமிழ் இலக்கணநூல் இந்திய தமிழ் பெளத்த பிக்கு மூலம் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சித்தசங்கராவ என்ற பெயரில் சிங்களமொழி இலக்கணமாக உள்ளது தமிழ் வைத்திய சிந்தாமணி என்ற நூலை செயசிங்கம் என்ற தமிழ் வைத்தியர் சிங்களத்தில் மொழிபெயர்த்து சிங்கள வைத்திய நூலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதாரம் #பல்லவராச்சியம்
Pratheepa Sivanantham

கிராம பாடசாலையான கிளி/கறுக்காய்த்தீவு மகாவித்தியாலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் தடவையாக  #கிருஸ்னகுமார்_அனுசாந்தன்...
02/12/2023

கிராம பாடசாலையான கிளி/கறுக்காய்த்தீவு மகாவித்தியாலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் தடவையாக #கிருஸ்னகுமார்_அனுசாந்தன் இனால் அனைத்து பாடங்களிலும் விசேடசித்தி (9A) பெறப்பட்டுள்ளது மாணவனை வழிப்படுத்திய பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது கிராமம் சார்பான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வாழ்த்துக்கள்

967 ஆண்டு உருவாக்கப்பட்ட  கிராமப்புற பாடசாலையான கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி செல்லியாதீவு அ. த. க பாடசாலையில் படசாலை வ...
02/12/2023

967 ஆண்டு உருவாக்கப்பட்ட கிராமப்புற பாடசாலையான கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி செல்லியாதீவு அ. த. க பாடசாலையில் படசாலை வரலாற்றில் முதல் முறையாக 2022 சாதாரணப் பரீட்சையில் சதீசன் சரண்யா சகல பாடங்களிலும் 9A தர சித்தி பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கிராமப்புறத்தில் வசித்து வரும் இந்த மாணவியின் வரலாற்றுச் சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்

*என்னா அடி ? 🤣🤣🤣🤣*அக்காலத்தில் நாம் வாங்கிய அடிகளின் லிஸ்ட் !* 👇இன்னிக்கு இருக்கும் சின்ன பசங்களுக்கு எங்க காலத்தில எதுக...
02/12/2023

*என்னா அடி ? 🤣🤣🤣🤣*

அக்காலத்தில் நாம் வாங்கிய அடிகளின் லிஸ்ட் !* 👇

இன்னிக்கு இருக்கும் சின்ன பசங்களுக்கு எங்க காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு தெரிய வாய்ப்பில்லை.

ஆனால், வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆச்சு என்பது தான் இங்க மேட்டர்.

1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா, மறுபடியும் அடி!

2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால், எவ்வளவு நெஞ்சழுத்தம்னு மறுபடியும் அடி.

3. அடி வாங்காமலேயே அழுதா, நடிக்கிறயான்னு விழும் அடி.

4. பெரியவங்க உட்கார்ந்திருக்கர இடத்தில நின்னுட்டு இருந்தா அடி.

5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உட்கார்ந்திட்டே இருந்தா அடி.

6. பெரியவங்க உட்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தா அடி.

7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டா அடி.

8. தட்ல சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.

9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா, எங்க சுத்திட்டு வர்ரேன்னு ஒரு மொத்து.

10. அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு விட்டு வந்தா அடி.

11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.

12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி.

13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோத்தா அடி.

14. சின்னப் பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டேன்னு கூவினா அடி.

15.ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி.

16.அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாலும் அடி.

17. காணாதது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.

18. தட்ல போட்டதை முழுக்க சாப்பிடாம இருந்தால் அடி.

19.சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி,

20. பேசிட்டே சாப்பிட்டா அடி.

21.பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி.

22.விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி.

23. தடுமாறி நடந்து விழுந்தா உதை.

24. பெரியவங்களை முறச்சு பார்த்தா அடி.

25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி.

26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி.

27. பெரியவங்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி.

28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி.

29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உட்க்கார்ந்திருந்தாலும் அடி.

30. சாப்பிட்ட பின், தட்டை அலம்பலேன்னா அடி.

31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி.

32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டா அடி.

33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி.

34.நகத்தைக் கடிச்சா அடி.

34..குளிக்காட்டி ஒரே அடி.

35.காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல ஒரு அடி.

36. பாத்ரூம் உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா, வெளில வந்தவுடன் அடி.

37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி.

38.தெருல போர கார் உரசிட்டு போச்சுன்னா, ஏண்டா கார் கிட்ட போனேன்னு சொல்லி அடி.

39. வண்டியில அடிபட்டு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும், அஜாக்கிரதைக்கு நாலு அடி.

40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி

41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி.

42 லேட்டா கோவிலுக்கு போனா அடி.

43. பிரெண்ட்ஸ்கிட்டே இருந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி. ...சர்ட் வாங்கி போட்டாலும் அடி

44.அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னு சொன்னா அடி.

45. கடைல choose செய்து ஷர்ட்டை எடுக்க நேரம் பண்ணினா, இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி

46. வாத்தியார் சொல்லிக் குடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரீட்சைல எழுதினா அதே வாத்தியார் ”சொந்தமா என்னடா ரீல் விட்றயா”ன்னு சொல்லி அடிக்கும் அடி...

இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம். ஆனால், கிட்டத் தட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள், பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில், இவ்வடிகள் வாங்கித்தான் பலர் பெரிய மனுஷனாக உசந்தாங்கன்னு சொல்ல முடியுமோ இல்லியோ, *எங்களில் பலருக்கு இந்த இளமையில் வாங்கிய அடிகள், வாழ்வில் முன்னேற உதவின என உறுதியாக சொல்ல முடியும்...பெருமையாகவும் சொல்ல முடியும்

*வாழ்க இந்திய பெற்றோர்களும்.....
ஆசிரியர்களும்.......

அடிகள் எம் வாழ்வின் படிகள்.

*அப்பப்பப்பா என்னா அடி ?*

இனியவாழ்வு இல்லத்தில் தங்கி வள்ளிபுனம் பாடசாலையில் கல்வி கற்ற 3 மாணவர்களும் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றி மூவருமே ...
01/12/2023

இனியவாழ்வு இல்லத்தில் தங்கி வள்ளிபுனம் பாடசாலையில் கல்வி கற்ற 3 மாணவர்களும் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றி மூவருமே சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் விழிப்புலன், செவிப்புலன் குன்றிய மாணவர்கள். வாழ்த்துக்கள்.

இவர்களின் சாதனை ஏனைய மாணவர்களையும் ஊக்குவிக்கும் என்பதற்காகவே இப்பதிவு.

கிராம அலுவலர் பரீட்சைக்குரிய மாதிரி வினாக்களும்& விடைகளும். (பொதுஅறிவு)
01/12/2023

கிராம அலுவலர் பரீட்சைக்குரிய மாதிரி வினாக்களும்& விடைகளும். (பொதுஅறிவு)

பாடம்!நீண்ட காலத்திற்கு முன்பு, விலங்குகளின் ராஜ்ஜியத்தில், ஒரு செம்மறி ஆடு சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கூண்டுக்கு...
01/12/2023

பாடம்!

நீண்ட காலத்திற்கு முன்பு, விலங்குகளின் ராஜ்ஜியத்தில், ஒரு செம்மறி ஆடு சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கூண்டுக்குள் சிங்கம் அழுவதைக் கண்டது, சிங்கம் "நான் உன்னை கொன்று சாப்பிட மாட்டேன்" என்று உறுதியளித்து., ஆட்டிடம் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சியது,

ஆனால், செம்மறி ஆடு மறுத்துவிட்டது. சிங்கம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திய பிறகு, அதன் வார்த்தையை நம்பி செம்மறி ஆடு சிங்கத்தின் கூண்டைத் திறந்தது.

சிங்கம் உணவு இல்லாமல் பல நாட்கள் கூண்டில் இருந்ததால் மிகவும் பசியுடன் இருந்தது.
அது செம்மறி ஆட்டை கொன்று சாப்பிடுவதற்காக எட்டிப் பிடித்தது, ஆனால், செம்மறி ஆடு சிங்கத்தின் வாக்குறுதியை நினைவுபடுத்தியது. மற்ற விலங்குகள் அவ்வழியாக கடந்து போகையில், சிங்கம் மற்றும் ஆட்டின் வாக்குவாதத்தை பார்த்து என்ன நடந்தது என்பதை அறிய முற்பட்டன.

சிங்கமும், செம்மறி ஆடும் என்ன? நடந்தது என்பதை விவரித்தன.
ஆனால், சிங்கத்தின் மேல் உள்ள பயத்தால் மற்ற விலங்குகள், நாங்கள் ஏதும் சொல்ல முடியாது என்று நழுவின. ஆனால், ஆமையைத் தவிர அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் பக்கம் சாய்ந்தன. ஆமை மட்டும் ஆட்டை காப்பற்ற முற்பட்டது.

அப்போது ஆமை சிங்கத்திடம், செம்மறி ஆடு உன்னைக் காப்பாற்றுவதற்கு முன்பு, நீ இருந்த இடத்தைக் காட்டு என்று கேட்டது. சிங்கம் அந்த கூண்டைக் காட்டியது. ஆமை கேட்டது, ஆடு வந்தபோது நீ உள்ளே இருந்தாயா? வெளியில் இருந்தாயா? என்று கேட்டது.

சிங்கம் தான் உள்ளே இருந்ததாகச் சொன்னது. ஆமையோ "சரி, உள்ளே நுழையுங்கள், உண்மையில் சிரமத்தில் இருந்தீர்களா? என்று பார்ப்போம்" என்றது. சிங்கம் உள்ளே நுழைந்தது.. அடுத்த கணம் ஆமை சிங்கத்தின் கூண்டைப் பூட்டியது.

ஆச்சரியத்துடன், மற்ற விலங்குகள் ஆமையிடம் "ஏன் இப்படி செய்தாய்?என்று கேட்டன.
அதற்கு ஆமை "இன்று இந்த ஆட்டை காப்பாற்றாமல் சாப்பிட அனுமதித்தால், நாளையும் சிங்கம் பசியுடன் இருக்கும். நாளை நம்மில் ஒருவரை சாப்பிடும் என்று ஏன்?உங்களுக்கு புரியவில்லை.

இன்று அவனுக்குத்தானே பிரச்னை என்று கடந்து சென்றால், அது.. விரைவில் உங்களிடம் வரும்.
"மற்றவர்களை ஒரு பிரச்னையில் இருந்து காப்பாற்றினால், நாளை நாமும் காப்பற்றப்படுவோம்". இது இயற்கையின் நியதி என்றது ஆமை.

ஆம்.. நட்புகளே!

இன்று நீங்கள் தீமையை ஆதரிக்காதீர்கள்,. ஏனென்றால், இன்று..
அது உங்களை நேரடியாக பாதிக்காது, ஆனால், நாளை அது உங்களிடம் வரலாம்.
(ப.பி)

கனடா என்றாலும் அது நம்மூர் போல் அழகாக இருக்குமா?  தென்மராட்சிThanks : FB
25/11/2023

கனடா என்றாலும் அது நம்மூர் போல் அழகாக இருக்குமா? தென்மராட்சி
Thanks : FB

நயினாதீவு நாகபூஷணி அம்மன் துறைமுகத்தில் இன்று காட்சி கொடுத்த  #நாகம்மாளாச்சி🙏🙏🙏
25/11/2023

நயினாதீவு நாகபூஷணி அம்மன் துறைமுகத்தில் இன்று காட்சி கொடுத்த #நாகம்மாளாச்சி🙏🙏🙏

24/11/2023
*தமிழுக்கு  தேன்  என்றொரு பெயர் உண்டு.**காரணம் ஏன் தெரியுமா?**தேன்* கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவர...
24/11/2023

*தமிழுக்கு தேன் என்றொரு பெயர் உண்டு.*

*காரணம் ஏன் தெரியுமா?*

*தேன்* கொண்டு வந்தவரைப் பார்த்து,

நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார்.

அதற்கு அவர் கூறியது...

ஐயா நீங்கள்
கூறியதை நினைத் *தேன்*

கொல்லிமலைக்கு நடந் *தேன்*

பல இடங்களில் அலைந் *தேன்*

ஓரிடத்தில் பார்த் *தேன்*

உயரத்தில் பாறைத் *தேன்*

எப்படி எடுப்பதென்று மலைத் *தேன்*

கொம் பொன்று ஒடித் *தேன்*

ஒரு கொடியைப் பிடித் *தேன்*

ஏறிச்சென்று கலைத் *தேன்*

பாத்திரத்தில் பிழிந் *தேன்*

வீட்டுக்கு வந் *தேன்*

கொண்டு வந்ததை வடித் *தேன்*

கண்டு நான் மகிழ்ந் *தேன்*

ஆசையால் சிறிது குடித் *தேன்*

மீண்டும் சுவைத் *தேன்*

உள்ளம் களித் *தேன்*

உடல் களைத் *தேன்*

உடனே படுத் *தேன்*

கண் அயர்ந் *தேன்*

அதனால் மறந் *தேன்*

காலையில் கண்விழித் *தேன்*

அப்படியே எழுந் *தேன்*

உங்களை நினைத் *தேன்*

தேனை எடுத் *தேன்*

அங்கிருந்து விரைந் *தேன்*

வேகமாக நடந் *தேன்*

இவ்விடம் சேர்ந் *தேன்*

தங்கள் வீட்டை அடைந் *தேன்*

உங்களிடம் கொடுத் *தேன்*

என் பணியை முடித் *தேன்*

என்றார்..!

அதற்கு ...*தேன்* பெற்றவர்
தேனினும், இனிமையாக உள்ளது உமது விடை..

இதனால் தான்
நம் முன்னோர்கள் தமிழைத்
தமிழ்த் *தேன்* என்று உரைத்தரோ... எனக் கூறி மகிழ்ந் *தேன்* என்றார்.

படித் *தேன்..*

படித்ததில் சுவைத் *தேன்* தமிழை♡

குழுவில் பகிர்ந்*தேன்*

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியானார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்மணி ஒருவர்வட மாகாணம் யாழ்.மாவட...
23/11/2023

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியானார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்மணி ஒருவர்

வட மாகாணம் யாழ்.மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி மாதுரி நிரோசன் எதிர்வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 31வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

தமிழ் நீதிபதிகள்
யாழ்.வரலாற்றில் ஓர் இளம் நீதிபதியாக மாதுரி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். அதேவேளை தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ளது.

இந்நிலையில் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், மாதுரி அகில இலங்கை ரீதியில் இவர் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

Address

Jaffna
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Hero .com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Jaffna

Show All