Jaffna news

Jaffna news செய்திகள், பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள எமது பக்கத்தில் இணைந்துகொள்ளுங்கள்.

26/09/2023
26/09/2023

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

YouTube channel subscribe செய்து ஆதரவு தாருங்கள்
03/03/2023

YouTube channel subscribe செய்து ஆதரவு தாருங்கள்

சுயதொழில் புரட்சி. நலிவுற்ற எமது வாழ்வாதாரத்தை சுயதொழில் மூலம் தன்நிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி கட்டியெழுப்....

04/02/2023

யாழில் நிகழ்ந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு. பல்வேறு தரப்பினரிடமும் இருந்து குவியும் வாழ்த்துக்கள்

நல்லுர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கஜமுக சூர சம்ஹார திருவிழாவில் சிவன் வேடத்தில் சிறுவன் .
28/12/2022

நல்லுர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கஜமுக சூர சம்ஹார திருவிழாவில் சிவன் வேடத்தில் சிறுவன் .

சாரதிகளின் போட்டியால்  துண்டிக்கப்பட்டது சிறுவனின் கை, பஸ்ஸில் பயணிக்க அச்சப்படும் பயணிகள்!
24/12/2022

சாரதிகளின் போட்டியால் துண்டிக்கப்பட்டது சிறுவனின் கை, பஸ்ஸில் பயணிக்க அச்சப்படும் பயணிகள்!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு ஊடாக  திருகோணமலை- செல்லும் பேருந்து  தடம் புரண்டதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 15 ...
21/12/2022

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை- செல்லும் பேருந்து தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 15 பேருக்கு மேல், காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன."

08/12/2022

சீரற்ற காலநிலை காரணமாக நாளை (09/12/2022) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.-
கல்வி அமைச்சு

08/12/2022

கவனமாக இருங்கள்!

வட மாகாணத்தில் பலத்த மழை மற்றும் காற்று வீசி வருகின்றது இதனால், மின் வடங்கள், கரண்ட் கம்பிகள் அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும். எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு
ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
Jaffna 0212222609
Thirunelveli Kondavil 0212222498
Chunnakam 0212240301
Chavakachcheri 0212270040
Point Pedro 0212263257
Vaddukoddai 0212250855
Velanai 0212211525
Kankesanthurai 0212245400

08/12/2022

யாழ் இந்துக் கல்லூரியின் முன்மாதிரியான செயற்பாடு. மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். பகிர்ந்து கொள்ளுங்கள்.
07/12/2022

யாழ் இந்துக் கல்லூரியின் முன்மாதிரியான செயற்பாடு. மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். பகிர்ந்து கொள்ளுங்கள்.

 #நல்லூர் கந்தசுவாமி கோவில் திருகார்த்திகை. குமாராலயதீபம்
06/12/2022

#நல்லூர் கந்தசுவாமி கோவில் திருகார்த்திகை. குமாராலயதீபம்

06/12/2022

Tamil Biggboss6janani

கொழும்பில்  இருந்து யாழ் நோக்கி பயணித்த  சொகுசு பேருந்து கிளிநொச்சி 155 ம் கட்டையில்  குடைசாய்ந்ததில் 20 க்கும் அதிகமானோ...
05/12/2022

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து கிளிநொச்சி 155 ம் கட்டையில் குடைசாய்ந்ததில் 20 க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

25/11/2022

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் 20வது கிலோமீற்றர் பகுதியில் வறுமை காரணமாக மண்வெட்டிபிடி வெட்டுவதற்க்காக காட்டிற்க்கு சென்றவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் வசித்து வருகின்ற பச்சைமுத்து-புலேந்திரன் (வயது48) என்பவர் உயிரிழந்துள்ளார்.

கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  சாவகச்சேரியை சேர்ந்த நபர் மரணம்அண்மையில் கப்பல்...
24/11/2022

கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாவகச்சேரியை சேர்ந்த நபர் மரணம்

அண்மையில் கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருப்பதாக வியட்னாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது,
சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான
இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர வழியறியாது குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்

வவுனியா கனகராஜன்குளத்தில் கோர விபத்து!10 பேருக்கு காயம்.
24/11/2022

வவுனியா கனகராஜன்குளத்தில் கோர விபத்து!
10 பேருக்கு காயம்.

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.வீ...
23/11/2022

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நிலையில், கோப்பாய் துயிலும் இல்ல பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வீதிச்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் எதிர்வரும் 26ஆம் திகதியும் மாவீரர் நாள் மறுநாள் 27ஆம் திகதியுமாகும்.

மாவீரம் போற்றுவோம்!யாழ் பல்கலை.
21/11/2022

மாவீரம் போற்றுவோம்!
யாழ் பல்கலை.

உரிமையாளரை தேடி பொலிஸ் நிலையம் சென்ற நாய். வீடொன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தேடி ...
20/11/2022

உரிமையாளரை தேடி பொலிஸ் நிலையம் சென்ற நாய்.

வீடொன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தேடி அவர் வளர்த்த நாய் பொலிஸ் நிலையம் சென்று தடுத்து வைக்கப்பட்ட சிறை கூண்டின் முன்படுத்திருந்தது.
இச்சம்பவம் புலத்சிங்கள, மொல்காவவில் இடம்பெற்றுள்ளது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, பொலிஸார் சிறைக்கூண்டின் அருகே ஒரு நாய் கிடப்பதைக் கண்டு நாயை விரட்ட முயன்றனர், ஆனால் நாய் மீண்டும் மீண்டும் அறைக்கு சென்று பதுங்கியிருந்தது.

பின்னர் நடத்திய விசாரணையில், பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட புலத்சிங்கல மொல்காவ வீதியிலுள்ள வீடொன்றில் வசிப்பவர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் என பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட போது ஒரு கிலோமீற்றருக்கும் மேலாக ஜீப்பைப் பின்தொடர்ந்து சென்ற இந்த நாய், சிறைச்சாலைக்கு முன்னால் காத்திருந்தது பொலிஸ் அதிகாரிகளின் நெஞ்சில் சற்றே வேதனையை வரவழைத்ததுடன், இரும்புக் கம்பிகள் வழியாக எஜமானனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

பொலிஸ் அதிகாரிகள் நாய்க்கு பல்வேறு உணவுகளை வழங்கவும் ஏற்பாடு செய்தனர்.

இதனை கவனித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த சில்வா அலுவலகத்திற்கு வந்து, பொலிஸ் அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறையின் கதவை திறந்தவுடன், நாய் உடனடியாக தனது உரிமையாளரிடம் ஓடிச்சென்று தனது முன் பாதங்களை வைத்தது. உரிமையாளர் நாயினை அரவணைத்தார்.

இதனையடுத்து அந்த நபரை வீட்டில் பிரச்சினை ஏற்படுத்வேண்டாம் என கடுமையாக எச்சரித்த நிலைய பொலிஸ் அதிகாரி பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

😍❤️ இந்த சகோதரியின் ஓவியத்திறமைக்கு பாராட்டுக்கள் 😍❤️                     
16/11/2022

😍❤️ இந்த சகோதரியின் ஓவியத்திறமைக்கு பாராட்டுக்கள் 😍❤️


மீட்கப்பட்டவர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்..!சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் ...
09/11/2022

மீட்கப்பட்டவர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்..!

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் மலேசியாவுக்கு சென்று அங்கிருந்து படகில் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாமில் உள்ள வுங் தாவோ துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இந்து கற்கைகள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக சமஸ்கிருதத்துறை தலைவர் பிரம்மஶ்ரீ ச.பத்மநாபன் ஏகமனத...
09/11/2022

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இந்து கற்கைகள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக சமஸ்கிருதத்துறை தலைவர் பிரம்மஶ்ரீ ச.பத்மநாபன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 06.11.2022 முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் பீடாதிபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

09/11/2022

வடக்கு ஆளுநரிடம் கோவில் பிரச்சனை தொடர்பில் எடுத்துரைத்த ஆஸ்திரேலியா பிரஜை மீது இன்று காலை வாள்வெட்டு!

பண்டத்தரிப்பு முருகன் ஆலய நிர்வாகத்தில் பிரச்சனை இடம்பெற்று வருவதாக அவுஸ்திலேரியாவில் இருந்துவருகை தந்துள்ள பண்டத்தரிப்பை சேர்ந்த கோயிலுக்கு நிதி பந்தளிப்பை தொடர்ச்சியாக வழங்கி வரும் நபர் ஒருவர் குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரை அண்மையில் சந்தித்து ஆலய நிர்வாக ஊழல் மோசடி தொடர்பில் தீர்வு பெற்று தருமாறு கோரிய நிலையில்

இன்று காலை அவுஸ்திலேரியாவில் இருந்து வருகை தந்தவரின் வீட்டிற்கு வெகுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளே சென்ற மூவர்அடங்கிய குழு இனிமேல் ஆலய நிர்வாகத்தில் தலையிடுவியா எனகேட்டு அவர் மீதுசரமாரியான வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

09/11/2022

யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரம் களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி,சிவபரன் தெரிவித்தார்

09/11/2022

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூன்று
குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக
இன்று காலை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

இதன்காரணமாக மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஜே/298 மறவன்புலவு, ஜே/339 வரணி வடக்கு, ஜே/145 வடலியடைப்பு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலேயே குறித்த பாதிப்புக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

09/11/2022

குரங்கு அம்மை தொற்று உறுதியான இரண்டாவது நபர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளார்!
டுபாயில் இருந்து வந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதி!

🚨வியட்நாம் கடற்பரப்பில் சிக்கியிருந்த 303 இலங்கையர்கள் ஜப்பானிய கப்பல் மூலம் மீட்கப்பட்டனர்ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு (Sprat...
08/11/2022

🚨வியட்நாம் கடற்பரப்பில் சிக்கியிருந்த 303 இலங்கையர்கள் ஜப்பானிய கப்பல் மூலம் மீட்கப்பட்டனர்

ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு (Spratly Islands)அப்பால் கடலில் மீன்பிடி கப்பலில் சென்ற 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கப்பல் சேதமடைந்து தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டனர், என வியட்நாம் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது

வியட்நாம் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று, மியான்மர் கொடியுடன் 303 இலங்கையர்களுடன் கனடாவுக்குச் செல்வதாக சந்தேகிக்கப்படும் லேடி R3 கப்பல் சிக்கலில் இருப்பதாக ஏஜென்சிக்கு செய்தி கிடைத்தது.

நவம்பர் 5 ஆம் திகதி, தெற்கு கடற்கரையில் உள்ள Vung Tau வில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, ​​அதன் இன்ஜின் அறையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது கடல் சீற்றமாக இருந்தது.

மையம் பின்னர் கப்பலை தொடர்பு கொள்ள முயன்றது மற்றும் அருகிலுள்ள மற்ற கப்பல்களுக்கு அவசர சமிக்ஞைகளை ஒளிபரப்பியது.

திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஜப்பானியக் கொடியுடன் கூடிய ஹீலியோஸ் லீடர் கப்பல் அந்தப் பகுதியில் இருப்பதைக் கண்டறிந்து, லேடி R3 கப்பலில் இருந்தவர்களை ஒரு மாற்றுப்பாதையில் சென்று மீட்கும்படி கேட்டுக் கொண்டது.

ஜப்பானிய கப்பலால் பாதிக்கப்பட்ட படகை அடைய முடிந்தது, அதன் பணியாளர்கள் பீதியில் இருந்தனர்.

பின்னர் பயணிகளை மீட்டதுடன், தேவையானவர்களுக்கு மருத்துவ உதவியும் அளித்தது.

மீட்புமையம் மேலும் ஐந்து கப்பல்களைத் திரட்டி, தேவைப்பட்டால் ஆதரவை வழங்குவதற்காக அந்தப் பகுதியை வட்டமிடச் சொன்னது.

264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் செவ்வாய்கிழமைக்குள் Vung Tau ஐ அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தெற்கு வியட்நாமில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும்.

இதேவேளை கப்பல் ஆபத்தான நிலையில் இருந்த போது படகில் இருந்த இலங்கை பிரஜை ஒருவர் கடற்படையை தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும் இதையடுத்து கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை இலங்கை கடற்படை நாடியது.

படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கிச் செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள் பின்னர் இலங்கைக்கு அறிவித்ததாக கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா நேற்று தெரிவித்திருந்தார்.

- பிரதி -

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Jaffna

Show All