Tamil4 News

Tamil4 News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil4 News, News & Media Website, jaffna, Jaffna.

https://youtu.be/t1_giRD02es?si=4wRhHwVsGtjY0jkc
02/01/2024

https://youtu.be/t1_giRD02es?si=4wRhHwVsGtjY0jkc

சுமந்திரன் சிறிதரன் ஒற்றுமையை விரும்பாதவர்கள்.. தமிழரசு தலைமை யார்? கழுவி ஊத்தும் வி....

22/11/2023

யாழில் பெண்களின் குளியல் வீடியோ எடுத்து மிரட்டும் நபர் சிக்கினார்.


யாழ்ப்பானம் நீராவியடி இந்து கல்லூரி அருகாமையில் இரவுநேரங்களில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் கமராமூலம் விடியோக்களை எடுத்து மிரட்டும் மர்பநபரை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்து யாழ்ப்பான பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பிரிவில் பாரபடுத்தி உள்ளனர்

இவருக்கு எதிராக சில பெண்கள் தைரியமாக வந்து சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ள நிலையில் அருகில் உள்ள CCTV கமரா உதவியுடன் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் பாரபடுத்தினர்.

விடையத்தை ஆராய்ந்த மன்று 14நாட்கள் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது .

15/11/2023

யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களின் குத்தாட்டம்..

யாழில் மகன் விஷம் அருந்திய அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு.நேற்றையதினம் மகன் ஒருவர் விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்...
08/11/2023

யாழில் மகன் விஷம் அருந்திய அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு.

நேற்றையதினம் மகன் ஒருவர் விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை உயிரிழந்துள்ளார். சோனெழு, கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த முத்துத்ததம்பி விவேகானந்தம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த நபரின் இரண்டாவது மகன் நேற்றையதினம் விஷம் அருந்தியதனால் அதிர்ச்சியில் தந்தையார் மயங்கி விட்டார். இந்நிலையில் அவரை உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

விஷம் அருந்திய மகன் உயிர் தப்பிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடற் தொழில் மக்களை  சிலர் குழப்ப முயற்சி..சட்டம் உருவாகவில்லை கலந்துரையாடலே இடம்பெற்றது.. அமைச்சர் டக்ளஸ் விளக்கம்.புதிய...
01/11/2023

கடற் தொழில் மக்களை சிலர் குழப்ப முயற்சி..சட்டம் உருவாகவில்லை கலந்துரையாடலே இடம்பெற்றது.. அமைச்சர் டக்ளஸ் விளக்கம்.

புதிய கடற் தொழில் சட்டம் இன்னும் உருவாக்கப்படாத நிலையில் சிலர் கடற் தொழில் மக்களை குழப்பும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

புதிய கடத்தொழில் சட்ட முன்மொழிவு தொடர்பில் பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படுவதாக யாழில் மீனவ சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மீனவர்களை பாதிக்கும் வகையில் எந்த விதமான சட்டங்களும் புதிதாக இயற்றப்படவில்லை.

கடந்த காலங்களை இயற்றப்பட்ட சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மீனவ மாவட்டங்களில் கலந்து உரையாடல்கள் இடம் பெற்றன.

ஆனால் யாழ்ப்பாணத்தில் சிலர் மீனவர்களை பாதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படுவதாகவும் வெளிநாட்டு படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படப்போவதாக கூறியதாக அறிந்தேன்.

மீனவர்களுக்கான புதிய சட்டம் சகல மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்.

அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் விவாதம் இடம்பெற்றதன் பின் திருத்த வேண்டிய விடயங்கள் இருந்தால் திருத்தப்பட்டு சட்டமாக்கப்படும்.

ஆனால் சிலர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெற்று மீனவ சங்கங்களுடன் கலந்து ரையாடல் என்ற போர்வையில் புதிய கடற்தொழில் சட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாக மீனவ சங்கங்களை குழப்பி வருகின்றனர்.

ஆகவே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கினங்க கடற் தொழில் மக்களை பாதிக்காத வகையில் புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.கனடாவ...
01/11/2023

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தின் கூறுகளாக விளங்கும் கவிதை சிறுகதை ஆகிய துறைகளில் கருத்தரங்குகளையும் போட்டிகளையும் நடத்தி வரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழாவின் தொடர்ச்சியாக இந்த வருடத்திற்குரிய விருதுகள் வழங்கும் விழா கடந்த 28-10-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாவீரர்கள் நினைவாகவும்பண்பாட்டின் தொடர்ச்சியைப் பேணிக் கார்த்திகையில் மரம் நடுவோம் - ப...
01/11/2023

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாவீரர்கள் நினைவாகவும்
பண்பாட்டின் தொடர்ச்சியைப் பேணிக் கார்த்திகையில் மரம் நடுவோம் - பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு

இயற்கையைக் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று வகுத்து இயல்பாகவே இயற்கையோடு இசைந்த வாழ்வியலைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். நெருக்கடிகள் மிகுந்த போர்ச் சூழலிற்கூட இயற்கை எனது நண்பன் என்று சொல்லி எமது சூழலைப் பேணி பாதுகாத்த மரபினர் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பண்பாட்டு மரபே காலநிலை மாற்றங்களின் கடுமையான விளைவுகளில் இருந்தும் எம்மைக் காப்பாற்றும். அந்த வகையில் மாவீரர்களைப் போற்றும் இக்கார்த்திகை மாதத்தில் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணி அவர்களின் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாக வடக்கு மாகாண சபையால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலநிலை மாற்றம் மிக மோசமாகத் தனது தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த பூகோளச் சராசரி வெப்பநிலையைக் கொண்ட மாதமாக இந்த ஆண்டின் யூலை மாதம் பதிவாகியுள்ளது. காட்டுத்தீயும் வெப்ப அலைகளும் முன்னெப்போதையும்விட மூர்க்கம் கொண்டு பொசுக்கி வருகிறது.

இந்த ஆண்டில் கனடாவில் மட்டும் காட்டுத்தீ ஒன்றரை இலட்சம் சதுரக் கிலோ மீற்றர்களுக்கும் அதிகமான காட்டுப் பரப்பை சாம்பலாக்கியிருக்கிறது. கடந்த கோடையில் ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலைகள் 61,000க்கும் அதிகமான மக்களைப் பலியெடுத்திருக்கிறது.

இன்னொருபுறம், இந்த ஆண்டு லிபியாவில் கடும்மழை கொட்டித்தீர்த்ததில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதோடு பத்தாயிரத்துக்கும் மேலானோர் காணாமல் போயுள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் தாக்குதல்களுக்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.

பூமி சூடாகுவதால் துருவப் பகுதிகளில் பனிமலைகள் உருகி வருவதன் காரணமாக உயர்ந்து வரும் கடலால் இலங்கையின் கரையோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் மட்ட உயர்வால் யாழ் குடாநாடு ஆனையிறவுப்பகுதியில் கடலால் துண்டிக்கப்பட்டுத் தனித் தீவாக உருவாகும் என் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலகம் இன்று அனுபவிக்கத் தொடங்கியுள்ள இந்த அனர்த்தங்களுக்குக் கரிக்காற்றை உறிஞ்சுகின்ற காடுகளை அளவுகணக்கில்லாமல் கபளீகரம் செய்துவருவதே அடிப்படைக் காரணமாகும். நாமும் யுத்தம் தின்றது போக எஞ்சியிருக்கும் காடுகளையும் அபிவிருத்தியின் பெயரால் அழிக்கத் தலைப்பட்டிருக்கிறோம்.

தமிழின் அடையாளமான பனை மரங்களைக்கூட நாம் விட்டுவைப்பதாக இல்லை.

அமரர் ச.சந்திரகாந்தன் ஞாபகார்த்தமழலைகள் உதைபந்தாட்ட கொண்டாட்ட சுற்றுப்போட்டியில் மயிலங்காடு  ஞானமுருகன்  அக்கடமி அணி வெற...
01/11/2023

அமரர் ச.சந்திரகாந்தன் ஞாபகார்த்த
மழலைகள் உதைபந்தாட்ட கொண்டாட்ட சுற்றுப்போட்டியில்
மயிலங்காடு ஞானமுருகன் அக்கடமி அணி வெற்றி.

அமரர் ச.சந்திரகாந்தனின் நண்பர்களின் நிதி அனுசரணையில் தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமியால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது
இன்று (31) காலை 8.00 மணியளவில் மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இச் சுற்றுப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அமரர் சந்திரகாந்தனின் நண்பனான சட்டத்தரணி ப.ஐங்கரன் அவர்களும் , சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பிரதி அதிபர் வே.சந்திரசேகர் மற்றும் அமரர் சந்திரகாந்தனின் பயிற்றுவிப்பாளர் கு.பிரபாகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வட மாகாணத்தில் 8 வயதிற்குட்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட முதற் சுற்றுப்போட்டியான இப்போட்டியில்
தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமி , மயிலங்காடு ஞானமுருகன் அக்கடமி , கோண்டாவில் றொனால்டோ அக்கடமி , அரியாலை யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட அக்கடமி , மருதனார்மடம் நொதேர்ண் ஸ்போட்ஸ் கொலிச் மற்றும் வேலணை ஐயானார் அக்கடமி ஆகிய 6 அணிகள் பங்கெடுத்திருந்தன.

இறுதிப் போட்டியில் மருதனார்மடம் நொதேர்ண் ஸ்போட்ஸ் கொலிச் அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அக்கடமி அணி விளையாடியது. இதில் மயிலங்காடு ஞானமுருகன் அணி 4 : 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

உலக வங்கியின் சுமார் 1கோடி செலவில்..கோப்பாய் வைத்திய நவீனமயப்படுத்தப்பட்டது.உலக வங்கி பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் பா...
31/10/2023

உலக வங்கியின் சுமார் 1கோடி செலவில்..
கோப்பாய் வைத்திய நவீனமயப்படுத்தப்பட்டது.
உலக வங்கி பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் பார்வை

இலங்கைக்கான உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் (செயலாற்று) அனஜெடி தலைமையிலான குழுவினர் நேற்று திங்கட்கிழமை கோபாய் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

வட மாகாணத்தில் உலக வங்கியின் சுமார் 1400 மில்லியன் ரூபா நிதி பங்களிப்புடன் சுமார் 50க்கும் மேற்பட்ட பிரதேச வைத்தியசாலைகளின் தொழில்நுட்ப கூடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டது.

அவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டதில் கோபாய் பிரதேச வைத்தியசாலைக்கு ஆரம்ப சுகாதார அபிவிருத்தி திட்டம் சுமார் ஒரு கோடி நிதி செலவில் ஆய்வுக்கூட உபகரணங்கள், அவசர சிகிச்சை பிரிவு க்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குறித்த பிரதேச வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பு வைத்தியரும் குறித்த திட்டத்தை செயல்படுத்தியவருமான வைத்தியர் மகேந்திரன் கருத்து தெரிவிக்கையில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைப் பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 6 கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து சுமார் 7,144 பேர் உயிர் குருதி அமுக்கம் நீரிழிவு மற்றும் இருதய நோய் தொடர்பான பரிசோதனைகளுக்காக தெரிவு செய்யப்பட்டார்கள் .

அதில் சுமார் 4756 பேருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 446 பேருக்கு நோய் நிலைமை கண்டறியப்பட்டதோடு 94 பேருக்கு இருதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சைகளும் வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்படுவதுடன் மேலதிகா சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களை கோப்பாய் வைத்தியசாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் உயர் மட்ட கலந்துரையாடலும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மத்திய சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் , வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்து சேன, வடமாகாண பதில் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, யாழ் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் , வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், கோபாய் பிரதேச வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பு அதிகாரி வைத்தியர் மகேந்திரன் , கோப்பாய் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் சிவா கோனேசன் ,ஜப்பான் ஜெயிக்கா நிறுவன அதிகாரிகள், உலக வங்கியின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

யாழில் குடைசாய்ந்த தனியார் பேருந்துயாழ் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தனியார் பேருந்து குட...
31/10/2023

யாழில் குடைசாய்ந்த தனியார் பேருந்து
யாழ் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தனியார் பேருந்து குடைசாய்ந்தது.

குறித்த சம்பவம் பருத்தித்துறைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் அதிக வேகம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது..

அரச வைத்தியசாலைகளில் காணப்படும் நாற்றத்தை காணவில்லை.. தனியார் வைத்தியசாலை போல் உள்ளதாம்... வடக்கு ஆளுநர் சாள்ஸ்  இன்று  ...
30/10/2023

அரச வைத்தியசாலைகளில் காணப்படும் நாற்றத்தை காணவில்லை.. தனியார் வைத்தியசாலை போல் உள்ளதாம்... வடக்கு ஆளுநர் சாள்ஸ்

இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெறுகின்ற இலவச கண் புரை சத்திர சிகிச்சை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இன்றைய தினம் வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவுக்கு வருகை தந்த போது வழமையாக அரச வைத்தியசாலைகளில் ஒருவித நாற்றம் காணப்படும் ஆனால் இன்று அதை உணரவில்லை இது ஒரு தனியார் வைத்தியசாலை போல காட்சி அளிக்கின்றது இங்கே அனைத்து விடயங்களும் தனியார் வைத்தியசாலை போல காணப்படுகின்றது இதனை பார்க்கும்போது வியப்பாக இருந்தது எனவே இதனை செயல்படுத்துகின்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பார் மற்றும் கண் சிகிச்சைக்கு பொறுப்பான வைத்திய நிபுணர் மலரவன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்

குருந்தூர் மலை ஆதி சிவன் இருப்பிடம்... கொழும்பு தீர்மானிக்க முடியாது... ரவிகரன் காட்டம்.முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி ...
30/10/2023

குருந்தூர் மலை ஆதி சிவன் இருப்பிடம்... கொழும்பு தீர்மானிக்க முடியாது... ரவிகரன் காட்டம்.

முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தின் இருப்பிடம் தொடர்பில் கொழும்பில் இருந்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தின் பிரதான இருப்பிடம் மலை உச்சியில் இருக்கிறது.

ஆனால் அதனை மாற்றி மலையில் வழிபாட்டு செய்ய விடாமல் தடுப்பதற்காக கொழும்பில் தொல்பொருள் திணைக்களம் , தொல்பொருள் அமைச்சர் மற்றும் முல்லைத்தீவு தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளடங்கலான கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தீர்மானத்தின் பிரகாரம் மலையின் கீழ் பக்கத்தில் இந்துக்களுக்கு ஒரு ஏக்கர்,பெளத்தத்திற்கு ஒரு ஏக்கர் என ஒதுக்கீடு செய்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது குருந்தூர் மலை ஆதி சிவன் ஐய்யனார் ஆலயத்தை சூழ உள்ள 17 கிராமங்கள் மற்றும் ஆலய நிர்வாகம் உள்ள நிலையில் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக கொழும்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆதி சிவனின் அருள் கடாச்சரம் பொழிகின்ற மலை உச்சி இருப்பிடத்தை மாற்றி புறிதொரு இடத்தில் அமைக்க கோருவது முற்றாக ஆதி சிவனின் தனித்துவத்தை மாற்றுவதற்கான முயற்சியாகும்.

குருந்தூர் மலையில் நீதி மன்ற உத்தரவை மீறி பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் எமது மத பாரம்பரியங்களை அவ்விடத்தில் விட்டு பிறிதொரு இடத்துக்கு மாற்ற முடியாது.

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்துக்காக முன்று கொடுக்கும் நிலையில் நீதிமன்றம் ஆதி சிவனின் வழிபாட்டை உறுதிப்படுத்தும் முகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆகவே எமது ஆதி சிவன் ஐயனாரை மாற்றுவதற்கோ அல்லது வழிபாடுகளை நிறுத்துவதற்கோ யாருக்கும் உரிமையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்

புதிய கடற்தொழில் சட்ட முன்மொழிவு... வெளிநாட்டு படகுகள் வருகையை சட்டபூர்வமாக்கும். சுபஸ்திகா அருலிங்கம் தெரிவிப்பு.இலங்கை...
30/10/2023

புதிய கடற்தொழில் சட்ட முன்மொழிவு... வெளிநாட்டு படகுகள் வருகையை சட்டபூர்வமாக்கும். சுபஸ்திகா அருலிங்கம் தெரிவிப்பு.

இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கடற் தொழில் திருத்தச் சட்ட முன்மொழிவு இலங்கைக் கடற்பரப்பில் வெளிநாட்டு படகுகளின் வருகையை சட்டபூர்வமாக்கும் என சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுபஸ்திகா அரு லிங்கம் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை யாழ் தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் புதிய கடற்தொழில் திருத்த முன்மொழிவின் சாதக பாதகங்கள் தொடர்பில் வடமாகாண மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 1996 ஆம் ஆண்டு கடற் தொழில் நீரியல் வளச் சட்டத்தை நீக்கி புதிய கடற் தொழில் சட்டத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதைய அரசாங்கத்தின் எந்த நேரத்திலும் முன்மொழிவுகள் சட்டமாக பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படலாம் .

புதிய கடற் தொழில் திருத்த முன்மொழிகள் பாரம்பரிய மீனவர்களுக்களை கடற் தொழிலில் இருந்து அப்புறப்படுத்துவதோடு வெளிநாட்டு படகுகளின் வருகையை சட்ட நீதியாக்கும்.

புதிய கடற் தொழில் சட்டம் பிரிவு (156) ன் பிரகாரம் இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு படகுகள் சுதந்திரமாக தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வெளிநாட்டு படகு இலங்கை கடற்பரப்பில் பிடிக்கப்படுமானால் பிணை வைத்து விட்டு உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஏற்பாடும் இடம்பெற்றுள்ளது.

அது மட்டும் அல்லாது பிரிவு(144) ன் பிரகாரம் வெளிநாட்டு படகில் வருபவர் இலங்கை கடற்பரப்பில் குற்ற செயலில் ஈடுபட்டால் அவரை இலங்கை சிறையில் அடைக்க வேண்டுமானால் ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் கைச் சாத்திடாமல் தடுத்து வைத்திருக்க முடியாது.

குறித்த முன்மொழிவானது சட்டமாக்கப்படுமானால் இலங்கை மீனவர்கள் தமது தொழில் செய்யும் இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும் நிலை உருவாகுவதோடு கடற் தொழிலில் ஈடுபடுபவர்களை அடையாளப்படுத்தும் அதிகாரமும் கடற்தொழில் நீதியால்வளத் திணைக்களப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே குறித்த சட்ட திருத்தத்தின் பாதகம் தொடர்பில் அனைத்து மீனவ சமூகங்களும் வெளிப்படைந்து அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு ஆளுநர் வியாபாரத்துக்காக.. வடக்கு மீனவர்களை அடகுவைக்க வேண்டாம்..கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தியாவி...
30/10/2023

கிழக்கு ஆளுநர் வியாபாரத்துக்காக.. வடக்கு மீனவர்களை அடகுவைக்க வேண்டாம்..

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தியாவில் தனது வியாபாரத்தை தக்க வைக்க வடபகுதி மீனவர்களை அடகு வைக்க வேண்டாம் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கு ஆளுநர் செந்தில் இந்திய தொலைக்காட்சி எமது வட மாகாண கடற் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் செவியொன்று வழங்கியுள்ளார்.

அதாவது இந்தியா கடத்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரவில்லை எனவும் மீன்களை பிடிக்கும் போது தற்செயலாக இலங்கை கடற்பரப்புக்குள் சென்று விடுகிறார்கள் என அவர்களின் வருகையை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்திருந்தார்.

அவரின் கருத்தை கண்டிப்பதோடு கிழக்கு ஆளுநருக்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறோம் நீங்கள் இந்தியாவை சேர்ந்தவர் என்பதை சொல்லாமல் சொல்லுகிறீர்கள்.

இந்தியாவில் உங்களுக்கு பல வியாபாரங்கள் உள்ள நிலையில் ஊடக நிறுவனங்களுக்கும் முதலீடு செய்து உள்ளீர்கள் என அறியக் கிடைக்கும் நிலையில் உங்கள் வியாபாரத்தை பாதுகாப்பதற்காக எமது மீனவர்களை அடகு வைக்க வேண்டாம்.

இந்தியா எல்லை தாண்டிய மீனவர் பிரச்சனை சுமார் 12 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் கிழக்கு ஆளுநர் செந்தில் ஒரு நாளில் எனும் எமது மீனவர்களின் பிரச்சனை என்ன என கேட்டிருக்க மாட்டார்.

முடிந்தால் அவருக்கு நாங்கள் ஒன்றை கூறுகிறோம் முதலில் யாழ்ப்பாணம் வாருங்கள் எமது மீனவர்களை அழைத்து உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என கேளுங்கள் முடிந்தால் அதனை தீர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்.

அதை விடுத்து உங்கள் வியாபாரங்களை தொடர்ந்து இந்தியாவில் மேற்கொள்வதற்கு எமது மீனவர்களை பலிக்கடா ஆக்க வேண்டாம் என்ற செய்தியை அவருக்கு கூற விரும்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்

பருத்தித்துறையில் 50 கிலோ கஞ்சா மீட்பு.பருத்தித் துறை கடலில் இன்று அதிகாலை சுமார் 50 கிலோ கஞ்சா இராணுவப் புலனாய்வு பிரிவ...
30/10/2023

பருத்தித்துறையில் 50 கிலோ கஞ்சா மீட்பு.

பருத்தித் துறை கடலில் இன்று அதிகாலை சுமார் 50 கிலோ கஞ்சா இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது பருத்தித் துறை வல்வட்டித் துறை கடற் பரப்பில் கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக வல்வட்டித் துறை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

விரைந்து செயல்பட்ட இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சுமார் 50 கிலோ எடை கொண்ட குறித்த கஞ்சா பொதியை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் எவரம் கைது செய்யப்படாத நிலையில் பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

29/10/2023

சற்று முன் யாழ் பண்ணைப் பாலத்தில் தடம்புரண்ட முச்சக்கர வண்டிகள் மூவர் காயம்

29/10/2023

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்திய வியாபாரி..மீனவர் பிரச்சினைபற்றி பேச அருகதையில்லை.

#ஆளுநர்
#செந்தில்தொண்டமான் #இந்தியா

ஜனாதிபதி மாளிகை விவகாரம்மெளனம் காத்த கயேந்திரகுமார் எம்பியாழ் வலி வடக்கு ஜனாதிபதி மாளிகை தொடர்பாக  யாழ் மாவட்ட அபிவிருத்...
28/10/2023

ஜனாதிபதி மாளிகை விவகாரம்
மெளனம் காத்த கயேந்திரகுமார் எம்பி

யாழ் வலி வடக்கு ஜனாதிபதி மாளிகை தொடர்பாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் காரசாரமான கருத்துக்களை முன்வைத்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டும் அமைதியாக இருந்தார்.

நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது வலி வடக்கு ஜனாதிபதி மாளிகை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளான சிவஞானம் சிறிதரன் அங்கஜன் இராமநாதன் எம்ஏ சுமத்திரன் மற்றும் வட மாகாண சபை அவரைத் தலைவர் சிவிகே சிவஞானம் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

ஜனாதிபதி மாளிகை அதனைச் சூழவுள்ள காணிகளைச் சேர்ந்த தனியார் காணிகள் முழுமையாக அளவீடு செய்யப்படவில்லை.

அளவீடு செய்யப்படாமல் அரசாங்கம் எவ்வாறு சுவீகரிக்க முடியும் அத்தோடு இழப்பீடுகளை வழங்காமல் எவ்வாறு தனியார் நிறுவனத்திற்கு வழங்கலாம் என பல கேள்விகளை எழுப்பினர்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டும் ஜனாதிபதி மாளிகை தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.

கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஏன் அமைதியாக இருந்தார் என கூட்டத்தில் பங்கு பங்குபற்றிய சில அதிகாரிகள் முனுமுனுத்தமையை அவதானிக்க முடிந்தது.

எனினும் வலி வடக்கில் தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பொலிஸார் உயிரை பணயம் வைத்து செயற்படுவதாவது..நகைப்புக்குரிய விடையம்..ரவிகரன் தெரிவிப்பு.வடக்கு கிழக்கில் உள்ள பொலிஸார் மக...
28/10/2023

பொலிஸார் உயிரை பணயம் வைத்து செயற்படுவதாவது..நகைப்புக்குரிய விடையம்..ரவிகரன் தெரிவிப்பு.

வடக்கு கிழக்கில் உள்ள பொலிஸார் மக்களுக்காக உயிரை பணயம் வைத்து செயல்படுவது என்பது நகைப்பிற்குரிய விடயம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் அனுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பும் போது நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது குற்றங்களை தடுப்பதற்காக தமது உயிர்களை பணயம் வைத்து செயல்படுவதாக பொலிஸார் கூறுய கருத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதன் போது பதில் அளித்த ரவிகரன் வடக்கு கிழக்கில் உள்ள பொலிசார் தமது உயிர்களை பணயம் வைத்து பௌத்தத்தைக் காப்பாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதே உண்மை.

உதாரணமாக கூறின் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இடம்பெற்ற சம்பவங்களில் பௌத்தத்துக்கு சார்பாக பொலிஸ் செயற்பட்டமையும் நீதி கேட்பவர்களை கைது செய்த சந்தர்பங்களையும் அறிந்திருப்பீர்கள்.

அதுமட்டுமல்லாது நாங்கள் வழக்கு போடச் செல்லும்போது எமது முறைப்பாடுகளை ஏற்பதற்கு பின்னிப்பதும் எமக்கு எதிராக தேரர்கள் முறைப்பாடு செய்தால் உடனடியாக எம்மை கைது செய்கிறார்கள்.

வடக்கு கிழக்கில் ஜனநாயக நீதியில் இடம்பெறும் போராட்டங்களில் தாக்குதல்களை மேற்கொள்வதும் புலனாய்வாளர்களை வைத்து அச்சுறுத்தும் சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன

ஆகவே வடக்கு கிழக்கில் மக்களுக்காக பொலிசார் தமது உயிர்களைப் பணயம் வைத்து செயல்படுவது என்பது எவ்வாறு நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் என அவர் மேலும் தெரிவித்தார் பொலிஸார் உயிரை பணயம் வைத்து செயற்படுவதாவது..நகைப்புக்குரிய விடையம்..ரவிகரன் தெரிவிப்பு.

வடக்கு கிழக்கில் உள்ள பொலிஸார் மக்களுக்காக உயிரை பணயம் வைத்து செயல்படுவது என்பது நகைப்பிற்குரிய விடயம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் அனுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பும் போது நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது குற்றங்களை தடுப்பதற்காக தமது உயிர்களை பணயம் வைத்து செயல்படுவதாக பொலிஸார் கூறுய கருத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதன் போது பதில் அளித்த ரவிகரன் வடக்கு கிழக்கில் உள்ள பொலிசார் தமது உயிர்களை பணயம் வைத்து பௌத்தத்தைக் காப்பாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதே உண்மை.

உதாரணமாக கூறின் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இடம்பெற்ற சம்பவங்களில் பௌத்தத்துக்கு சார்பாக பொலிஸ் செயற்பட்டமையும் நீதி கேட்பவர்களை கைது செய்த சந்தர்பங்களையும் அறிந்திருப்பீர்கள்.

அதுமட்டுமல்லாது நாங்கள் வழக்கு போடச் செல்லும்போது எமது முறைப்பாடுகளை ஏற்பதற்கு பின்னிப்பதும் எமக்கு எதிராக தேரர்கள் முறைப்பாடு செய்தால் உடனடியாக எம்மை கைது செய்கிறார்கள்.

வடக்கு கிழக்கில் ஜனநாயக நீதியில் இடம்பெறும் போராட்டங்களில் தாக்குதல்களை மேற்கொள்வதும் புலனாய்வாளர்களை வைத்து அச்சுறுத்தும் சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன

ஆகவே வடக்கு கிழக்கில் மக்களுக்காக பொலிசார் தமது உயிர்களைப் பணயம் வைத்து செயல்படுவது என்பது எவ்வாறு நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்

யாழில் குற்றங்களைத் தடுக்காத பொலிஸார்   இராணுவ இருப்பை தக்கவைக்கவா முயற்சி... சிறிதரன் எம்பி கேள்வி.யாழ் மாவட்டத்தில் இட...
27/10/2023

யாழில் குற்றங்களைத் தடுக்காத பொலிஸார் இராணுவ இருப்பை தக்கவைக்கவா முயற்சி... சிறிதரன் எம்பி கேள்வி.

யாழ் மாவட்டத்தில் இடம் பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொலிசார் பின்னிப்பது இராணுவத்தின் இருப்பை தக்க வைக்கவா என்ற சந்தேகம் வலுப்பதாக சிறிதரன் எம்பி கேள்வி எழுப்பினார்.

நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் கலந்துரையாடலின் போது சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விவாதத்தின் போது பொலிஸ் உயர் அதிகாரியிடம் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் பொலிசாரின் செயற்பாடுகள் மந்தகதியில் இடம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

பொலிசாரின் இத்தகைய செயற்பாடு யார் மாவட்டத்தில் இராணுவத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீட்டை ஊக்குவிப்பதாக என்னத் தோன்றுகிறது.

ஏனெனில் அண்மையில் யாழ் பேருந்து நிலையத்தில் ரவுடிகள் கேக் வெட்டி கொண்டாடியமை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படும் உடனடியாக பொலிஸ் நடவடிக்கை எடுக்க வில்லை என பலரும் குற்றச்சாட்டுகின்றனர்.

நீதிபதி யாழ் பேருந்து நிலைத்தில் இடம்பெற்ற கேக் வெட்டும் கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதம்விதமாக செயல்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுப் இதுவரை முழுமையான கைது இடம் பெறவில்லை.

யாழ் மாவட்டத்தில் உள்ள குற்றச்சாட்டு உள்ளவர்களை கைது செய்ய முடியாவிட்டால் பொலிஸ் அதிகாரத்தை மாகாணத்திடம் கொடுத்து விடுங்கள் அபிவிருத்தி குழு தலைவரும் அதனையே கேட்கிறார்.

மேலும் யாழ் மாவட்டத்தில் சில இடங்களில் இராணுவ இருப்பு வேண்டுமென சிலர் மட்டைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்துகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது போலீசார் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தாது பின்னிப்பதும் இராணுவத்தை அழைத்து சட்டவிரோத செயற்பாடுகளை இராணுவ இருப்பின் அவசியத்தை வெளியில் காட்டுவதாக அமைகிறது.

ஆகவே பொலிசார் தமது கடமைகளை ஒழுங்காக செய்தால் சட்ட ஒழுங்கை சரியாக நடைமுறைப்படுத்தலாம் என்றார்.

பொன்னம்பலத்தின் பேரனும் ஈபிடிபி யின் நிலைப்பாட்டில் உள்ளார்.. அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு .மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி...
27/10/2023

பொன்னம்பலத்தின் பேரனும்
ஈபிடிபி யின் நிலைப்பாட்டில் உள்ளார்.. அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு .

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாட்டை பொன்னம்பலத்தின் பேரனும் ஆதரிக்கிறார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் யதார்த்தமான நடைமுறை சாத்தியமான விடயங்களையே முன்னகர்த்தி வருகிறது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது இன்று நேற்று நாம் வலியுறுத்திய விடையம் அல்ல ஜிஜி பொன்னம்பலத்தின் பேரனும் அதை நிலைப்பாட்டை வலியுறுத்துவது வரவேற்கத்தக்க விடையம்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இரண்டு போராட்டங்களுக்கான அழைப்பை தமிழ் கட்சிகள் சில வெளியிட்டன.

இரண்டு போராட்டங்களும் பிசுபிசுத்து போன நிலையில் இது எமது மக்களின் எதிர்காலத்தை பின்னோக்கி நகர்த்துவதாக அமைந்துவிட்டது.

போராட்டங்கள் மனித குலத்திற்கு அவசியமான நிலையில் நன்மைகளை வரவேற்று தீமைகளை எதிர்க்க போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் தேவை .

அதற்கு தமிழ் பேசும் சமூகம் விதிவிலக்கல்ல .தமிழ் மக்கள் சார்ந்து இரண்டு விடயத்தை சொல்லலாம் .கடைசியாக நடந்த கதவடைப்பு மனித சங்கிலியினை கூறலாம் .

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈபிடிபி தேசிய நீரோட்டத்தில் இணைந்தது.அதன் அடிப்படையில் போராட்டம் தேவையற்றது என்று இல்லை தேவையேற்பட்டால் போராட்டம் செய்ய தான் வேண்டும் .

கதவடையிப்பிற்கு எதிராக எமது உறுப்பினர்கள் முகநூலில் எதிர்பினை வெளியிட்டுள்ளார்கள் ஆனால் நான் எனது முகநூலில் எழுதியிருந்தால் அது 100 இருநூறு விகிதம் உண்மையானது.ஆகவே என்னுடைய முகநூலில் வரும் கருத்துகளே அதிகாரபூர்வமானது.

ஆகவே மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என கூறும் தமிழ் கட்சி உண்மையான நிலைப்பாட்டை கூறினாலும் அக் கட்சியிடம் கொள்கை இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை தனியாருக்கு!அளவீடு முடியாமல் எவ்வாறு வழங்க முடியும்.. அபிவிருத்தி குழுவில் எம்.பிக்கள் காரசாரம்.வலி வடக்...
27/10/2023

ஜனாதிபதி மாளிகை தனியாருக்கு!
அளவீடு முடியாமல் எவ்வாறு வழங்க முடியும்.. அபிவிருத்தி குழுவில் எம்.பிக்கள் காரசாரம்.

வலி வடக்கில் அமைந்துள்ள ஜனா திபதி மாளிகை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளின் அளவீட்டு பணிகள் முடிவுறாத நிலையில் தனியாருக்கு எவ்வாறு வழங்க முடியும் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது வலி வடக்கு ஜனாதிபதி மாளிகை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன் சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோர் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி மாளிகை வளாகம் தனியார் உடைய காணிகளும் உள்ளடங்குகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் தனியார் காணிகளை சுபிகரிப்பதற்கு விசேட வர்த்தகமானி போட முடியாது.

அதுமட்டுமல்லாது குறித்த காணிகள் ஒழுங்கான முறையில் அரச உடமை ஆக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனியார் முதலீடுகளை நாம் வரவேற்கிறோம்.

திட்டத்துக்காக தனியார் காணிகளைப் பெறுவதாயின் தனியார் காணிகள் அளவீடு செய்யப்பட்டு அவர்களுக்கான உரிய இழப்பு வீடு வழங்கப்பட்டதன் பின் ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாது குறித்த இடத்தில் என்ன திட்டம் இடம்பெறப் போகிறது என்பது தொடர்பில் திட்ட முன்மொழிவுகள் மாவட்அபிவிருத்தி குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

திட்டங்களை ஆராய்ந்த பின்னர் உரிய நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி பெறப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

அங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடந்த காலங்களில் ஆராயாமல் பல காணிகளை வழங்கி பல்வேறு நெருக்கடிகளை நாம் சந்தித்துள்ளோம்.

அதேபோல வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை என்ன நோக்கத்துக்கு என ஆராயாமல் வழங்கக்கூடாது என தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த திட்டம் தொடர்பில் மூவரடங்கிய குழு ஒன்றை நியமித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு தெரிவித்தார்.

தனியார் காணிகளும் இருக்கா? வடக்கு ஆளுநருக்கு எழுந்த சந்தேகம்.வலி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை உள்ளடக்...
27/10/2023

தனியார் காணிகளும் இருக்கா? வடக்கு ஆளுநருக்கு எழுந்த சந்தேகம்.

வலி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை உள்ளடக்கிய கணிகளுள் தனியாருக்கு சொந்தமான காணிகளும் இருக்கா? என வடமாகாண ஆளுநர் பிஎச்எம் சாள்ஸ் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினார்.

நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போது இணை தலைவராக பங்கேற்ற வடமாகாண ஆளுநர் ஜனாதிபதி மாளிகை காணி விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி மாளிகை காணி வெளிநாட்டு தனியார் ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டமை தொடர்பில் வாத பிரதிவாதங்கள் எழுந்தது.

நிகழ்வில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த காணியை எவ்வாறு அளவீடு செய்யாமல் வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன் காணிய இழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கிய பின்னரே திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது குறிப்பிட்ட ஆளுநர் குறித்த ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி அரச காணி தானே அதை வழங்குவதற்கு தடை ஏதும் இருக்காது என தெரிவித்தார்.

இதன்போது குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள விடுவிக்கப்படாத பகுதியில் பலருடைய தனியார் காணிகள் இருப்பதாக தெரிவித்தார்.

குறுக்கீடு செய்த ஆளுநர் தெல்லிப்பழை பிரதேச செயலாளரை இது தொடர்பில் விளக்கப்படுத்துமாறு கூறினார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் ஜனாதிபதி மாளிகைக்காக 61 ஏக்கர் காணி கேட்கப்பட்ட நிலையில் சுமார் 29 ஏக்கர் கையகப்படுதப்பட்டுள்ளது.

குறித்த ஜனாதிபதி மாளிகை தொடர்பான விடய தானங்கள் எமது பொறுப்பிலிருந்து நிலையில் பொது நிர்வாக அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் நகர அபி விருத்தி அதிகார சபையிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்தார்.

17/10/2023

வலி #வடக்கு #ஜனாதிபதிமாளிகை தமிழர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி பெரும்பான்மையினத்தவர்களுக்கு குத்தகைக்கு...காணி இழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்குவது யார்?

மருமகனுடன் துவிச்சக்கர வண்டியில் சென்ற மாமன் நிலத்தில் விழுந்ததில்  மரணம்.வைத்தியசாலைக்கு, மருமகனுடன் சைக்கிளின் பின்னால...
12/10/2023

மருமகனுடன் துவிச்சக்கர வண்டியில் சென்ற மாமன் நிலத்தில் விழுந்ததில் மரணம்.

வைத்தியசாலைக்கு, மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற ஆணெருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வெளிச்சவீடு வீதி, பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு இராஜசிங்கம் (வயது 52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 7ஆம் திகதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக மந்திகை வைத்தியசாலைக்கு, தனது மருமகனின் சைக்கிளின் பின்னால் இருந்து சென்றுள்ளார். இந்நிலையில் இடைவழியில் அவர் கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் அவர் முச்சக்கர வண்டி மூலம் மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் 10ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் நேற்றையதினம் ஒப்படைக்கப்பட்டது.

Address

Jaffna
Jaffna
40000

Telephone

+94776160256

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil4 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil4 News:

Videos

Share


Other News & Media Websites in Jaffna

Show All