தமிழ்மதி

தமிழ்மதி Journalist, news presenter
(4)

15/12/2024

எலிக்காய்ச்சலில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் கரவெட்டியில் துயரம் !

சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் அவரின் உடலில் நோய் அதிகாரிக்க யாழ் போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர் நேற்றிரவு சனிக்கிழமை 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் கரவெட்டி தல்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

14/12/2024
தீபங்கள் பேசும்.. இது கார்த்திகை மாதம் ❤️
14/12/2024

தீபங்கள் பேசும்..
இது கார்த்திகை மாதம் ❤️

சிட்டி விளக்குகள் ❤️
14/12/2024

சிட்டி விளக்குகள் ❤️

13/12/2024

பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் வெளிக்கண்டல் பாலத்தில் வேகக்கட்டுபாட்டை இழந்த வாகனம் விபத்து!

இது இரும்பு பாலம் என்பதால் மழை மற்றும் பனி நேரத்தில் வாகனங்கள் வழுக்கி பல விபத்துகள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

💯
11/12/2024

💯

11/12/2024

யாழில் இன்று முழுவதும் மழையுடன் கூடிய வானிலையே நிலவும் 🌧️

10.12.2024 செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணி. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நன்கம...
10/12/2024

10.12.2024 செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணி.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்து (Well Marked Low Pressure System) தற்போது மட்டக்களப்பிலிருந்து கிழக்காக 325 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து (அதன் உள் வளையம் வடக்கு மாகாணத்தினை உள்ளடக்கியதாக நகர்ந்து) மன்னார் வளைகுடாவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது ( நகர்வுப் பாதை மாற்றத்திற்கு உட்படும்)

இதன் உள் வளையத்தின் தென்னரைப்பகுதி வடக்கு மாகாணத்தினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை இரவு முதல்(11.12.2024) எதிர்வரும் 14.12.2024 வரை நாம் அனைவரும் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

நாம் எச்சரிக்கையாக இருந்து பாதிப்புக்கள் இல்லை என்றால் நாம் இழக்கப்போவது எதுவுமில்லை. ஆனால் அசட்டையாக இருந்து பாதிப்புக்கள் இருந்தால் அதனை இலகுவாக நிவர்த்திக்க முடியாது.

நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால் அலட்சியமாக இருக்காது சற்று அவதானமாக இருப்பது அவசியம்.

இது மழைக்காலம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இன்று வரை வடக்கு மாகாணத்தின் ஆண்டுச் சராசரியான 1240 மி.மீ. இனை விட 705 மி.மீ. அதிகமாகக் கிடைத்து உள்ளது. கிழக்கு மாகாண ஆண்டுச் சராசரியான 1850 மி.மீ. இனை விட 580 மி.மீ. கூடுதலாக கிடைத்துள்ளது. இதனால் இனி 24 மணித்தியாலத்தில் 100 மி.மீ. இற்கு மேல் மழை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அது யாழ்ப்பாண நகரம், கிளிநொச்சி நகரம், மன்னார் தீவு போன்ற தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினை உருவாக்கும்.

பொதுவாக விளக்கீட்டு காலப்பகுதியில்( கார்த்திகை தீபம்) நிச்சயமாக மழை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இம்முறையும் அந்த நம்பிக்கை உண்மையாகும்.

இதன் காரணமாக இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடங்கியுள்ள மழை எதிர்வரும் 14.12.2024 வரை தொடரும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பரவலாக கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை பகுதிகளுக்கு கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு (யாழ்ப்பாணம்), கிழக்கு(கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை), வட மேற்கு (மன்னார், புத்தளம்) தென்கிழக்கு(அம்பாந்தோட்டை ) கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக் காரணம் கொண்டும் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.

இன்று இரவு முதல் திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. இனை விட அதிகமாக இருக்ககூடும்.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையின் கரையைக் கடக்கும் இடம் தெளிவாக அறிந்த பின் மேலதிக விபரங்கள் இற்றைப்படுத்தப்படும்.

- நாகமுத்து பிரதீபராஜா-

பூநகரியில் விபத்து!இந்த இலக்கமுடைய வாகனத்தில் வந்த நபர் காயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...
10/12/2024

பூநகரியில் விபத்து!

இந்த இலக்கமுடைய வாகனத்தில் வந்த நபர் காயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரைப்பற்றிய விபரம் தெரிந்தவர்கள் பூநகரி வைத்தியசாலையை தொடர்புகொள்ளவும்

அண்மையில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்துவரப்பட்ட வெடிபொருட்கள்!இடம் - முள்ளிவாய்க்கால்
09/12/2024

அண்மையில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்துவரப்பட்ட வெடிபொருட்கள்!

இடம் - முள்ளிவாய்க்கால்

❤️
08/12/2024

❤️

வவுனியாவில் சில நாட்களின் முன்னர் காணப்பட்ட பனிமூட்டமான காலநிலை!
07/12/2024

வவுனியாவில் சில நாட்களின் முன்னர் காணப்பட்ட பனிமூட்டமான காலநிலை!

மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கற்கோவளம் இராணுவ படைத்தளத்தை கைவிட இராணுவம் பின்னடிப்பு!
07/12/2024

மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கற்கோவளம் இராணுவ படைத்தளத்தை கைவிட இராணுவம் பின்னடிப்பு!

நெற்பயிர்களை காப்பாற்றுங்கள் - வயலுக்குள் இறங்கிப்போராடிய தென்மராட்சி வரணி பகுதி விவசாயிகள்!
05/12/2024

நெற்பயிர்களை காப்பாற்றுங்கள் - வயலுக்குள் இறங்கிப்போராடிய தென்மராட்சி வரணி பகுதி விவசாயிகள்!

வல்லை ❤️
05/12/2024

வல்லை ❤️

04/12/2024

ரி.ஐ.டியால் கைதான யாழ். இளைஞன் பிணையில் விடைதலை .

எகிறும் தேங்காயின் விலை! 🥲
03/12/2024

எகிறும் தேங்காயின் விலை! 🥲

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்மதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share