29/01/2022
குப்பையுண்ணும் யானைகள் 🐘
இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள, ஒலுவில் பள்ளக்காடு எனும் பிரசேத்தில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கில் யானைகள் பிளாஸ்டிக், பொலிதீன் போன்ற குப்பைகளை உண்டு வருவதாக ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவூட் நடிகர் லியோனார்டோ டிகெப்ரியோ தனது Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திற்கு இலங்கை ஊடகவியலாளர் அச்சலா புஸ்ஸல்ல அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையொன்றினை இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடுவீட் செய்துள்மை குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 ஆண்டுகளில் மாத்திரம் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்டு 20 இற்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டிருந்தாலும், இப்பிரச்சினையினை முழுமையாக தீர்ப்பதற்கு முறையான தீர்வுகளை முன்னெடுக்கப்பட வேண்டுமென அக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குப்பையுண்ணும் யானைகள் பற்றி உள்ளுர் புகைப்படப்பிடிப்பாளரான தர்மபாலன் திலக்ஷன் அவர்கள் கடந்த 2020ம் ஆண்டு தமது புகைப்படங்கள் மூலம் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தியிருந்தார்.
Namal Rajapaksa Gotabaya Rajapaksa
வனவிவசாயி, வனப்பாதுகாவலன், வனத்தின் தந்தை என பலவக இருக்கும் யானைகள் புகைப்படமாக மட்டுமே மிஞ்சும் தினம் வந்தால....