TNPF_MPs_Gajendrakumar&Skajendren

TNPF_MPs_Gajendrakumar&Skajendren Two Nation One Country

தமிழ் பொது வேட்பாளர் விடயம் ஏமாற்று நாடகம் - முன்னணி பகிரங்க குற்றச்சாட்டு
04/05/2024

தமிழ் பொது வேட்பாளர் விடயம் ஏமாற்று நாடகம் - முன்னணி பகிரங்க குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக பகிஷ்கரிக்க வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை வி...

13/04/2024

பூபதியம்மாவின் 36 ஆம் ஆண்டின் 26ஆம் நாளில்

09/04/2024

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமிறக்கும் சதிக்கு எதிராக 16 வது நாளாகத் தொடரும் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராக இரவிலும் தொடரும் போராட்டம் 23-03-2024
23/03/2024

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராக இரவிலும் தொடரும் போராட்டம் 23-03-2024

தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கணம் வரை சம்பந்தன் தலை...
12/03/2024

தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கணம் வரை சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவாகவே இயங்கி வருகிறார்கள். இவர்களில் யாரும் இக்கணம் வரை அக்குழுவிலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்குவதாக பாராளுமன்ற சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்திருக்கவில்லை. அவ்வாறான நிலையில் சம்பந்தன் தீர்மானித்து சுமந்திரன் கலந்து கொண்டதென்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களதும் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகவே சர்வதேச சமூகம் கருதும்.

சர்வாதிகார ரணிலுக்கு கூட்டமைப்பு கூட்டாக முண்டு கொடுக்கிறது.

TNPF leader GGPonnambalam MP met with British High Commissioner  in Colombo today
20/02/2024

TNPF leader GGPonnambalam MP met with British High Commissioner in Colombo today

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மாவீர்ர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது  பொசிறீலங்கா பொலிசாரால் கைது செய்யப்...
08/02/2024

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மாவீர்ர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது பொசிறீலங்கா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கொடிய பயங்கரவாத்த் தடைச் சட்டத்தின் கீழ் இரண்டரை மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த எமது கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குக்குமார்ராஜா மற்றும் அவரது மகன் ஜனோஜன் ஆகிய இருவரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

07/02/2024
இந்திய அரசின் பரிபூரண ஓத்துழைப்புடன் சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இனவழிப்பை மேற்கொண்டபோது ஈழத் தமிழரைக் காக்குமாறுகோ...
29/01/2024

இந்திய அரசின் பரிபூரண ஓத்துழைப்புடன் சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இனவழிப்பை மேற்கொண்டபோது
ஈழத் தமிழரைக் காக்குமாறுகோரி தமிழ்நாட்டில் தீக்குளித்து உயிர் துறந்த தூத்துக்குடி முத்தாம் ஈகைப் போராளி முத்துக்குமாரின் 15 வது நினைவு நாள் -29.01.2024

ஈழத்தமிழர் வரலாற்றில் இவன் என்றும் நிலைத்திருப்பான்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் கொண்டுவரப்படவுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதத்தில் கலந்து கொண்டு நாடா...
24/01/2024

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் கொண்டுவரப்படவுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவாதம் தொடர்பாக நிலையியற் கட்டளை 50.2 சரத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
அதில் இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அந்த மாற்றங்கள் துறைசார் மேற்பார்வை குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்த குழு அந்த மாற்றங்களை சரியாக ஆய்வு செய்து அதுதொடர்பாக ஒரு அறிக்கை தாயாரிக்கப்பட்டு அந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் எனவும் அந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற வரைக்கும் அந்த சட்டமூலம் தொடர்பாக வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த அறிக்கை என்னும் பெயரில் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அந்த ஆவணம் அறிக்கை அல்ல என்றும் அந்த அறிக்கை 23ம் திகதி ஜனவரி மாதம் 2024 இல் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட அறிக்கை இதுவரைக்கும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப் படாத நிலையில் இன்று இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
வரப்போகும் உண்மையான சட்டத்தில் இருக்கப்போகும் விடயங்கள் எல்லாமே மூடி மறைக்கப்பட்டு ஒரு இருண்ட நிலையில் தான் இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த விவாதம் நடைபெறும் விடயங்கள் தொடர்பான் 56 சரத்துக்களின் 34 சரத்துக்கள் திருத்தப்படவேண்டும் என்று உயர் நீதிமன்ற வழக்குகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக அரசாங்கத்தினுடைய அமைச்சரே நியமித்த நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின் பிரகாரம் மேலதிகமான சரத்துக்களும் திருத்தப்பட்டு 42 சரத்துக்கள் இந்த சட்டமூலத்தில் திருத்தப்பட வேண்டிய நிலையில் அந்தத் திருத்தங்கள் செய்யப்படாமலயே இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
உலகத்தில் மிகமும் மதிக்கப்படுகின்ற ரெக் அமைப்புகளுடைய கூட்டான ஆசிய இணைய குழு சிங்கப்பூரில் உள்ளது.
நேற்று இந்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் அமைச்சர் குறிப்பிடும் போது - ரெக் அமைப்பினுடைய அனுசரணையோடு தான் இந்த சட்டமூலம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அவரது அந்தக் கருத்துக்கு ரெக் அமைப்பு அறிக்கை ஒன்றை விட்டிருக்கிறது.
இந்த சட்டமூலம் இப்போது இருக்கும் வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால் அது பாரிய அளவுக்கு ரெக் அமைப்புக்கள் இலங்கையில் தொடர்பு வைத்திருப்பதைத் தடுக்கும் என்றும்இ இவ்விடயம் கடும் எதிர்ப்பை உருவாக்கும் என்றும் தமது அமைப்பு சமர்ப்பித்த மாற்றங்கள் அனைத்தையும் உள்வாங்கினால் மட்டுமே சர்வதேச மட்டத்தில் இந்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இப்போதைக்கு இருக்கக் கூடிய சட்டமூலத்தை தாங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றும் அந்த அறிக்கை மூலம் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

அப்படியாயின்
ஏற்கனவே 56 சரத்துக்களில் 42 சரத்துக்களை திருத்த வேண்டும் என்ற நிலை இருக்கையில் அதுவும் அமைச்சரே இந்த ரெக் அமைப்பினுடைய குழு வழங்கிய திருத்தங்கள் பெறுமதியானவை என்றும் அந்த சட்டமூலங்கள் எதிர்காலத்தில் திருத்தங்கள் ஊடாகக் கொண்டு வரப்படும் என்றும் தனது உரையில் சொல்லியிருக்கும் நிலையில்
இதில் பாரிய குறைபாடுகள் உள்ளது என்பதையும் அமைச்சரே ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த சட்டமூலம் குறைபாடுடைய சட்டமூலம் என்று அவரே இந்தத் திருத்தங்களைப் பற்றிப் பேசுகிறார்.
அப்படியாயின் இந்த சட்டமூலத்தில் பாரிய குறைபாடுகள் இருக்க இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு என்ன அவசரம் ஏற்பட்டுள்ளது? என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
ஏற்கனவே சர்வதேச மட்டத்தில் உதவியை கேட்டுக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு அந்த சர்வதேச அமைப்புக்களினுடைய உதவிகள் வராமல் பண்ணுவதற்கு வழியேற்படுத்தப்போகின்ற ஆபத்துக்கள் உள்ள நிலையிலும்
இந்த சட்ட மூலத்தை அவசரஅவசரமாக ஏன் நிறைவேற்றுகின்றீர்கள் என்றால் -
இது பாரதூரமான ஜனநாயகத்தை மறுக்கக் கூடிய சட்டமூலம் என்று விமர்சனங்கள் இருக்கக் கூடியதாகவே அவசரமாகவே நிறைவேற்றுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால்
அதற்கு காரணம் -
நீங்கள் அந்த பாரதூரமான ஜனநாயக விரோத செயல்பாடுகளை செயற்படுத்துகின்ற சட்டத்தை தான் நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதேயாகும்.
அப்படிப்பட்ட சட்டமூலத்தைக் கொண்டு வந்தால் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஜனாதிபதியும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அமைச்சரும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள இந்த சபையும் மக்களின் உண்மையான கருத்துக்களை வெளிவராமல் தடுத்து - உண்மையான விவாதங்கள் நடத்துவதற்கு அனுமதிக்காமல் இறுக்கி - அடுத்த தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நினைக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இருண்ட யுகத்தை உருவாக்கி அடுத்த தேர்தலுக்கு முகங்கொடுத்தால் தாங்கள் வெல்லலாம் என்று கருதுகிறீர்கள்.
ஆனால் - அது நிச்சயமாக நடக்காது.

நேற்று முன்தினம் ஒரு ஆய்வு மையம் நடத்திய ஒரு கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன். அங்கே அரச தரப்பின் முக்கியஸ்தர்களும் எதிர்கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கூட வந்திருந்தனர்.
அங்கே நாட்டு மக்கள் மிகப் பெருமளவில் மதிக்கின்ற கல்விமான்கள் அதில் பங்கேற்றிருந்தனர். அந்த சிவில் சமூகத் தலைவர்கள் எக்காரணம் கொண்டும் தீவிரவாதப் போக்குடையவர்களோ அல்லது பொறுப்பற்றவர்களோ அல்லது குழப்பவாதிகளோ என்று சொல்லக்கூடியவர்கள் அல்ல. மாறாக - மிக நிதானமாகவே தமது கருத்துக்களை தெரிவிப்பவர்கள்.
எக்காரணம் கொண்டும் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக செயற்படுபவர்கள் அல்ல. எக்காரணம் கொண்டும் தேர்தல் அரசியலிலோ கட்சி அரசியலிலோ ஈடுபடுபவர்களும் அல்ல. அப்படிப்பட்டவர்களே - இன்றைக்கு இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை திட்டமிட்டு மறுதலிக்கின்ற மற்றும் இல்லாமல் செய்கின்ற செயற்பாடுகள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று சொல்கிறார்கள். அதனுடைய முக்கியமான விடயமாகவே இந்த நிகழ்நிலைக் காப்பு சட்டமூலமும் அமைந்துள்ளது என்று தெரிவிக்கிறார்கள்.
ஆகவே - இவ்வளவு தூரத்துக்கு கண்டனங்கள் உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தின் உதவிகள் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் அதே சர்வதேச சமூகத்தைப் பகைக்கின்ற வகையில் இந்த சட்டமூலத்தை திருத்தாமல் நிறைவேற்றுவது அனைத்துமே -
இந்த அரசாங்கம் தன்னுடைய இருப்பையும் தன்னுடைய நலன்களையும் மட்டுமே பார்க்கிறதேயொழிய மக்களின் உண்மையான குரல்கள் கருத்துக்களுக்கு பயப்படுகின்றார்கள் என்பதையே காட்டுகின்றது. மிகவும் இருண்ட யுகத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்துகின்ற வகையில் இவர்கள் செயற்படப் போகின்றார்கள் என்பதே இதன் மூலம் நிரூபிக்கப்படுகின்றது. ஆனால் மக்கள் அனைத்து செயற்பாடுகளுக்கும் தக்க பாடங்களை இவர்களுக்கு வழங்குவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு...
16/01/2024

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு இனிய அகவைநாள் வாழ்த்துக்கள்.
2009 அதே 18 ன் பின்னர் தமிழ் மக்களது அரசியல் உரிமைகளுக்காக தமிழ்த் தேசத்தின் இருப்புக்காக உண்மையுடனும் நேர்மையுடனும் அற்பணிப்புடனும் குரல் கொடுத்துவரும் தலைவன்.

13/01/2024
11-01-2024 பாராளுமன்ற உரையில்
13/01/2024

11-01-2024 பாராளுமன்ற உரையில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மறைந்த உறுப்பினர் கலாநிதி கெனடி அவர்களது நினைவு நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்...
10/01/2024

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மறைந்த உறுப்பினர் கலாநிதி கெனடி அவர்களது நினைவு நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் நினைவுகூரப்பட்டது.

சிங்கத்தின் குகையில் உறுமிய புலி அஞ்சாத்தமிழன் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24ஆம் ஆண்டு நினைவு நாள். சந்திரிகா அரசினா...
05/01/2024

சிங்கத்தின் குகையில் உறுமிய புலி அஞ்சாத்தமிழன் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24ஆம் ஆண்டு நினைவு நாள்.
சந்திரிகா அரசினால் 2000ல் மேற்கொள்ளப்பட்ட படுகொலை

அனுரதபுரம் சிறைச்சாலையில் கடந்த 12-9-2021 திகதியன்று தமிழ் அரசியல் கைதிகளது தலையில் இராஜாங்க அமைச்சர் துப்பாக்கியை வைத்த...
04/01/2024

அனுரதபுரம் சிறைச்சாலையில் கடந்த 12-9-2021 திகதியன்று தமிழ் அரசியல் கைதிகளது தலையில் இராஜாங்க அமைச்சர் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கு இன்று அனுரதபுரம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தவர்களான
பூபாலசிங்கம் சூரியபாலன் மற்றும் மதியரசன் சுலக்சன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.

29-12-2023தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரங்கல் செய்திஈழத் தமிழர்களை ஆழமாக நேசித்த விஜயகாந்த் அவர்களது  மறைவு ஈழத் தமிழ் ...
29/12/2023

29-12-2023

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரங்கல் செய்தி

ஈழத் தமிழர்களை ஆழமாக நேசித்த விஜயகாந்த் அவர்களது மறைவு ஈழத் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பு

தமிழ் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவரும், தமிழக தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும் முன்னைநாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பெருமதிப்பிற்குரிய விஜயகாந் அவர்கள் - சுகயீனம் காரணமாக மறைந்த செய்தி உலகத் தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீதும், தேசியத் தலைமை மீதும் மிகுந்த அன்பும் - மரியாதையும் - பற்றும் கொண்டு, தனது இறுதிக்காலம் வரை விஜயகாந்த் அவர்கள் வாழ்ந்திருந்தார். ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகத்தமிழர்களின் மனங்களிலும் உயரிய மரியாதைக்குரியவராக விஜயகாந்த் நிறைந்திருந்தார்.
அவரது மறைவானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையிலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு - அவரது இழப்பிலும் அவரது குடும்பத்தின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்வதோடு - எமது ஆழமான வருத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்

செ.கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
பொதுச் செயலாளர்

தையிட்டி
25/12/2023

தையிட்டி

07\12\2023 வெளிவிவகார அமைச்சு மிதான விவாதத்தின் போது கஜந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்திற்குப் பதிலளிக்கும்போது இராசாங...
08/12/2023

07\12\2023 வெளிவிவகார அமைச்சு மிதான விவாதத்தின் போது கஜந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்திற்குப் பதிலளிக்கும்போது இராசாங்க அமைச்சர் தாரக பாலசூரிய

23/11/2023

பாதீட்டில் இனவழிப்பு இராணுவ ஒதுக்கீட்டிற்கு எதிராக த.தே.ம.முன்னணி வாக்களித்தது

14/11/2023

இலட்சிய உறுதிமிக்க உன்னதமான மனிதனை எமது கட்சியும் தேசமும் இழந்துவிட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைமாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் அண்ணை உடல்நலக்குறைவால் இன்று காலை சாவடைந்துள்ளார் என்ற பெரும் துயரச்செய்தி பேரிடியாய் வந்துள்ளது.
ஆழ்ந்த இரங்கல்கள்.

12/11/2023

அன்பான தமிழ்ச் சொந்தங்களே

இன்றைய நாள் புனிதநாள். தமிழர் நம் முப்பாட்டன் ஆரிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எம்மினத்தின் இருப்பைக் காக்கப் போராடிய மாவீரன் நரகா அரசனை நினைவிற்கொள்ளும் நாள்.
இந்நன்நாளில் தங்களை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்.

கஜன்

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டக்களத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. 27-10...
27/10/2023

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டக்களத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. 27-10-2023

06/10/2023

HUMAN RIGHTS COUNCIL Delivered by:- Gajendrakumar Ponnambalam
54th Session
ITEM 8 – General Debate on 05-10-2023

Mr. President,
The VDPA in its 27th paragraph states, “institutions concerned with the administration of justice should be properly funded, and an increased level of both technical and financial assistance should be provided by the international community”.

However in Sri Lanka just last week we had a Tamil Judge Mr. T. Saravanarajah, resigning from all his official duties and fleeing the country because “due to threat of my life and due to lot of stress.” The stress included being allegedly pressured by the Attorney General of the country to change an order that he had made which had annoyed the Buddhist extremists and racist elements within the Sinhala majority.

A government MP and a suspected War Criminal, who has frequented this very Council, openly threatened the said Judge in Parliament, warning him that Sri Lanka was a Sinhala Buddhist country and that a Tamil judge must know his place. That MP is the current Chair of the Parliamentary Sectoral Oversight Committee on National Security.

My colleague MP Selverajah Kajendren was brutally assaulted by government backed thugs when taking part in a memorialisation event. The police who looked on, came under pressure to take action and eventually arrested 6 individuals, only for them to move court the very next day to release the suspects on bail to prevent “ethnic riots”.

Funding a State with a broken Administration of Justice System like in Sri Lanka, without insisting on verified reforms, is to entrench institutional injustice.

https://fb.watch/nui971cAYm/?mibextid=Nif5oz

06/10/2023

சீர்குலைந்த நீதி நிர்வாக முறைமையைக்கொண்ட இலங்கைக்கு நிதியளிப்பதானது அநீதியை மேலோங்கச்செய்யும் - கஜேந்திரகு.....

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 வது அமர்வில் விடயம் 8 இன் பொது விவாதத்தில்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பா...
06/10/2023

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 வது அமர்வில் விடயம் 8 இன் பொது விவாதத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று 05-10-2023 ஆற்றிய உரை:

தலைவர் அவர்களே!,
வியன்ன பிரகடன மும் அதன் செயல் முறைகளும் தொடர்பாக 27வது பத்தி கூறுகிறது,

"நீதி நிர்வாகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறையாக நிதியளிக்கப்பட வேண்டும், மேலும் சர்வதேச சமூகத்தால் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளின் அதிகரித்த அளவு வழங்கப்பட வேண்டும்."

எவ்வாறாயினும், கடந்த வாரம் இலங்கையில் தமிழ் நீதிபதி திரு. ரி. சரவணராஜா, "எனது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக" தனது அனைத்து உத்தியோகபூர்வ பணிகளையும் ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.

சிங்கள பெரும்பான்மையினருக்குள் உள்ள பௌத்த தீவிர போக்குக் கொண்ட மதவாத, இனவாத சக்திகளை எரிச்சலூட்டுவதாக கூறி அவர் பிறப்பித்த உத்தர வை மாற்றுமாறு நாட்டின் சட்டமா அதிபரால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அழுத்தமும் இதில் அடங்கும்.

போர்க்குற்றவாளி என சந்தேகிக்கப்படும் அரசாங்க எம்.பி ஒருவர், உயரிய சபையில் அடிக்கடி
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்றும், தமிழ் நீதிபதி தனது இடத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்து, பாராளுமன்றத்தில் மேற்படி நீதிபதியை வெளிப்படையாவே மிரட்டினார்.
அதே பாராளுமன்ற உறுப்பினர் தேசிய பாதுகாப்பு துறை தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட எனது சக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அரசாங்க ஆதரவு குண்டர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.

இது நடைபெற்ற போது பொலிசார் அங்கு பார்த்துக் கொண்டிருந்தனர். பொலிசார் நடவடிக்கை எடுக் காமல் இருந்த நிலையில், பின்னர் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, இறுதியில் 6 பேரைக் கைது செய்து, அடுத்தடுத்த நாட்களில் நீதிமன்றத்திற்கு சென்று "இனக் கலவரங்களை" தடு ப்பதற்கு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று காரணம் காட்டி விடுவித்திருந்தனர்.

சரியான சீர்திருத்தங்களை உறுதிப்படுத்தாமல், உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதாகவே அமையும்.

நல்லாட்சியில் இதயத்தால் இணைந்தோம்
02/10/2023

நல்லாட்சியில் இதயத்தால் இணைந்தோம்

Address

Manaltharai Lane, Kandarmadam
Jaffna
JA40000

Opening Hours

09:00 - 17:00

Telephone

+94773024316

Alerts

Be the first to know and let us send you an email when TNPF_MPs_Gajendrakumar&Skajendren posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TNPF_MPs_Gajendrakumar&Skajendren:

Videos

Share


Other Social Media Agencies in Jaffna

Show All