Mangaleswaran karththeepan.

Mangaleswaran karththeepan. வேலணை பிரதேசசபை உறுப்பினர் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி)

ஈழத்தின் பிரபல, இளம் பாடகர் வாகீசன் பிரித்தானியா எலிசபெத் மகாராணியின் அரண்மனையில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பாடுவ...
14/01/2026

ஈழத்தின் பிரபல, இளம் பாடகர் வாகீசன் பிரித்தானியா எலிசபெத் மகாராணியின் அரண்மனையில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பாடுவதற்காக லண்டன் சென்றடைந்தார்...

ஈழத்தின் பிரபல, இளம் பாடகர் இணுவையூர் வாகீசன் 2026 ஆம் ஆண்டு பிரித்தானியா எலிசபெத் மகாராணியின் அரண்மனையில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பாடுவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் மேற்படி நிகழ்ச்சிக்காக அவர் தற்போது லண்டன் சென்றடைந்துள்ளார்...

இலங்கையின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவர் டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த, பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை கா...
14/01/2026

இலங்கையின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவர் டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த, பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

Phantom Centenary Edition ரகத்தை சேர்ந்த இந்த கார், ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக தயாரிக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன என்பதும் குறிப்பிடத்தக்கது.

20/01/2026 யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் எழுவைதீவு    j/39 கிராம அலுவலர் பிரிவில் காளாவாடியடைப்பு என...
14/01/2026

20/01/2026 யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் எழுவைதீவு j/39 கிராம அலுவலர் பிரிவில் காளாவாடியடைப்பு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான 2 பரப்பு காணி கடற்படைக்கு சுவீகரிக்கப்படவுள்ளது.

“இலங்கையை மீளமைக்கும் நிதி” க்கு 10 மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கிய தனிநபர்... டிட்வா புயல்  காரணமாக பாதிக்கப்பட்ட...
14/01/2026

“இலங்கையை மீளமைக்கும் நிதி” க்கு 10 மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கிய தனிநபர்...

டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், இந்த இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்கவும் இலங்கை அரசு “இலங்கையை மீளமைக்கும் நிதி”யை நிறுவியது. இந்த தேசிய முயற்சிக்கு ஆதரவாக, திரு. வேலுப்பிள்ளை சிவசுந்தரம் அவர்கள் 10 மில்லியன் ரூபாய் என்ற பெருந்தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இங்கிலாந்தில் செயல்படும் வெஸ்டர்ன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்தின் நிறுவனரும் ஆகிய திரு. சிவசுந்தரம், தனது நன்கொடையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திகா சனத் குமணாயக்க அவர்களிடம் கையளித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையினால் பின்வரும் பதவி வெற்றிடங்கள் கோரப்பட்டுள்ளன.
14/01/2026

இலங்கை போக்குவரத்து சபையினால் பின்வரும் பதவி வெற்றிடங்கள் கோரப்பட்டுள்ளன.

தீவக (மண்டைதீவு) நாட்டுக் கூத்து கலைஞருக்கு அதிஉயர் விருதான கலாபூஷணம் விருது கிடைக்கப்பெற்றது...கலாசார அலுவல்கள் திணைக்க...
13/01/2026

தீவக (மண்டைதீவு) நாட்டுக் கூத்து கலைஞருக்கு அதிஉயர் விருதான கலாபூஷணம் விருது கிடைக்கப்பெற்றது...

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச விருது வழங்கும் நிகழ்வில் அதிஉயர் விருதான கலாபூஷணம் விருது மண்டைதீவினைச் சேர்ந்த சேர்ந்த முதுபெரும் கலைஞர் B. கஸ்பர் (நாட்டுக்கூத்து) அவர்களுக்கு நேற்றைய தினம் (12.01.2026) வழங்கிவைக்கப்பட்டது.

நாட்டுக்கூத்திற்கு தீவகத்திற்கு கிடைத்த இரண்டாவது விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

 #இன்று  #படகுப்  #சேவை  #ஆரம்பம் ...சீரற்றகால நிலைகாரணமாக தடைப்பட்டிருந்த நயினாதீவு - குறிகட்டுவான் இடையேயான தனியார்படக...
11/01/2026

#இன்று #படகுப் #சேவை #ஆரம்பம் ...

சீரற்றகால நிலைகாரணமாக தடைப்பட்டிருந்த நயினாதீவு - குறிகட்டுவான் இடையேயான தனியார்படகுச் சேவை
இன்று(11.01.2026) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது

இன்று நயினாதீவில் இருந்து ஒருமணித்தியாலைய சேவை இடம்பெறும்

நாளை 12.01.2026 திங்கட்கிழமை சேவைகள்
வழமை போன்று அரைமணி நேரத்திற்கு இடம்பெறும்.

இன்று ⬇️ நயினாதீவில் இருந்து
காலை 7:30-மாலை 4:30மணிவரையும்

குறிகட்டுவானில்
காலை-08:30-மாலை 05:30 வரையும் நடைபெறும்

தனியார்
படகு உரிமையாளர்கள் சங்கம்
நயினாதீவு.

10/01/2026
ஒருவரின் உண்மை குணம் எங்கே தெரியும்? ஒருவரின் உண்மை குணம்…பெரிய மேடைகளில் தெரியாது.ஒரு மனிதன்பெரிய நிகழ்ச்சிகளில் இருக்க...
09/01/2026

ஒருவரின் உண்மை குணம் எங்கே தெரியும்?

ஒருவரின் உண்மை குணம்…

பெரிய மேடைகளில் தெரியாது.

ஒரு மனிதன்
பெரிய நிகழ்ச்சிகளில் இருக்கும்போது…

• நல்ல வார்த்தைகள் பேசலாம்
• பணிவாக நடிக்கலாம்
• பொறுப்புள்ளவனாக தோன்றலாம்
• எல்லாரிடமும் இனிமையாக பழகலாம்

👉 அது கடினம் அல்ல.

ஏனெனில்
அங்கே பார்வைகள் கூடுதலாக இருக்கின்றது.

ஆனால்… உண்மை எங்கே வெளிப்படுகின்றது தெரியுமா?

👉 யாரும் கவனிக்காத தருணங்களில்தான்.

• வேலை சிறியதாக இருக்கும் போது
யாரும் பாராட்டப் போவதில்லை என்று தெரிந்த போது.

• அதிகாரம் இல்லாத ஒருவரிடம் பேசும் போது.

• தனியாக இருக்கும்போது.

• அவசரத்தில், சோர்வில், கோபத்தில்.

👉 அங்கே தான்
மனிதன் நடிக்க முடியாமல்
இருப்பான்.

🧠 ஒரு சின்ன உதாரணம்

ஒருவர்
பெரிய உதவி செய்யும்போது
மகத்தானவனாக தோன்றலாம்.

ஆனால்…

👉 ஒரு waiter-கிட்ட
👉 ஒரு office boy-கிட்ட
👉 ஒரு junior-கிட்ட

அவன் எப்படி நடக்கின்றான்?

👉 அதுதான்
அவனது உண்மை குணம்.

இன்னொரு உண்மை (சற்று கடினம்)

முட்டாள் கூட
சில நேரங்களில்
மிக நல்லவன் போல நடிக்க முடியும்.

ஆனா…

👉 மிகச் சாதாரணச் செயல்களில்
எப்போதும் நல்லவனாக
இருப்பது தான் கடினம்.

அங்கே
பயிற்சி தேவை.
சுய ஒழுக்கம் தேவை.
நற் குணம் தேவை.

அதனால் தான் கர்மயோகம் மௌனமாக சொல்கிறது.

👉 ஒருவரின் மதிப்பு
அவன் செய்த
மிகப்பெரிய காரியங்களில் இல்லை.

👉 அவன் செய்த
மிகச் சாதாரண செயல்களில் தான்.

இப்போ ஒரு நிமிடம்

உங்களை நீங்களே கேளுங்கள்…

• யாரும் பார்க்காத போது
நான் எப்படி இருக்கிறேன்?

• யாரிடமும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற போது
நான் என்ன செய்கிறேன்?

👉 அந்த பதில்தான்
உங்கள் குணத்தின் உண்மை.

❤️ முடிவில் ஒரு கேள்வி:

“பெரிய நிகழ்ச்சிகளில் அல்ல,
சின்னச் செயல்களில் தான்
உண்மை குணம் தெரியும்”

இவ் வரி
உண்மையா?

👉 “உண்மை”
என்றால் கருத்தை பதிவு செய்யுங்கள்.

படித்ததில் பிடித்தது ...

09/01/2026

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய  வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற...
08/01/2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது...

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (08.01.2026) காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு இ. நாகராஜன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.

தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இலங்கை இந்திய பக்தர்கள் கலந்து கொள்ளும் பெரும் திருவிழாவாக முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய கடற்படை மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டதுடன், கடந்த வருடம் 9,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இந்தியாவிருந்து 4364 பக்தர்கள் உள்ளடங்கலாக 7,464 பக்தர்கள் வரை கலந்துகொண்டார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், கச்சத்தீவு மனிதர்கள் இல்லாத தனித்தீவாக இருப்பதனால் சகல ஏற்பாடுகளுடன் நடப்பாண்டு திருவிழா கடந்த ஆண்டு திருவிழா ஒழுங்கமைப்பினைக் காட்டிலும் மேலும் புனிதமாக சிறப்பாக நடைபெற வேண்டும் எனவும், கடந்த ஆண்டு ஏதாவது சில குறைபாடுகள் இருப்பின் அதனை இக் கலந்துரையாடலில் தெரிவித்து, அவை குறித்து அதிக கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இது அமையவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், திருவிழாவுக்கு சகலரது ஒத்துழைப்பு பிரதானமானதென சுட்டிக்காட்டியத்துடன், இத் திருவிழா சிறப்புற நடைபெற அனைவரும் கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சிறப்பான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இந்திய மற்றும் இலங்கை பக்தர்களின் வசதிக்காக வினைத்திறனுடன் பணியாற்ற வேண்டுமென அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி - ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின் கட்டண நிர்ணயம், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேற்படி கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் பிரதானமாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1.இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்குமென 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான வசதிகளை மேற்கொள்ளுதல்.

2.குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1200.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், குறிகட்டுவானிலிருந்து 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

3.போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேரூந்துகளும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் 27 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் பி. ப 01.00 மணி வரை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்துக்கள் புறப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

4.பக்தர்களுக்கு 28 ஆம் திகதி காலை உணவு இலவசமாக வழங்குவகும் தீர்மானிக்கப்பட்டது.

5.கடற்படையினரின் ஒழுங்கமைப்பில் கச்சதீவில் ஒரு அம்புலன்ஸ் படகும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஒழுங்கமைப்பில் 02 அம்புலன்ஸ் வண்டிகள் குறிகட்டுவானிலும் தயார் நிலையில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர், மேலதிக அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பாதுகாப்பு படைகளின் அதிகாரி, யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், படகு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Address

Jaffna
4000

Telephone

+94775506972

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mangaleswaran karththeepan. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mangaleswaran karththeepan.:

Share