TAMIL தமிழ்

  • Home
  • TAMIL தமிழ்

TAMIL தமிழ் Videos created , all news stories ,comedy ,

23/06/2022

சுத்தமான தூய 100L தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு....
மொத்த விற்பனை விலை - 900/=
தொடர்பிற்கு - 0759570040

புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் அத்தியாவசியப்  பொருட்கள் கொடுக்க இலகுவழி Wh...
13/04/2022

புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி
WhatsApp 0094703723903 jaffna delivery

 #மனைவி  #அமைவதெல்லாம் ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன....!!!அதில் கிடைக்கும் பா...
03/11/2021

#மனைவி #அமைவதெல்லாம்

ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன....!!!

அதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம்.மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.

ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார்.
அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.

அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான்.
அவரும் " இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்" என்று ஆசி கூறினார்.

அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன.

எப்படி நடந்தது என்று தெரியாத படி வருமானம் பெருகியது.

இரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்.

சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது.

திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை.
ஆண்டுகள் ஓடின. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்.

தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை.
மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம்.

இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்.

அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.

அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள்.
அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்.

ஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம்.
காசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே!.இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது.
பழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும் "!.
சபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்.

அவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. அவரைத் தேடி ஓடினான்.ஆனால் அவர் எங்கு எனத் தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள். தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழைய படி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினான்.

அவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள் , "இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க".

அவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. "மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய?!. இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே " என்றான்.

மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். "சரி போ. நடக்கறது நடக்கட்டும் " என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்._*

நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.

மனது கணக்க , கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான். அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்.

குடியானவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை!. அவளாகவே சொன்னாள்.

"கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள் ".போய் பார்த்தான்.

அவன் கண்களையே அவனாலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள்.கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்.

மனைவி சொன்னாள், " எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்?.

அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா? ".

அவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது, புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது.

அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான்.
முன்பை விடப் பெரிய பணக்காரன் ஆனான்.

சில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான். உரிய நேரத்தில் சொல்லும் அறிவுரையை இவளுக்கு என்ன தெரியும் என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.

வாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும்.சிறு விஷயத்தை பூதாகரமாக பார்க்காதீர்கள்.
விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவது இல்லை.

குணவதியின் கரம் பிடித்த எல்லாருமே கோடிஸ்வரர்கள்தான்..!.

பெண்கள் குணவதியாக இருக்க ஆண்களும் காரணம்.....!!!!

குறிப்பு:- இதை படித்துவிட்டு இவனுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது என்று எண்ண வேண்டாம், *படித்ததில் இரசித்தது*

லிட்ரோ நிறுவன சமையல் எரிவாயு விலைகளில் மீண்டும் திருத்தம்- 12.5kg - ரூ. 2,675 (ரூ. 75 குறைப்பு)- 5kg - ரூ. 1,071 (ரூ. 30...
11/10/2021

லிட்ரோ நிறுவன சமையல் எரிவாயு விலைகளில் மீண்டும் திருத்தம்
- 12.5kg - ரூ. 2,675 (ரூ. 75 குறைப்பு)
- 5kg - ரூ. 1,071 (ரூ. 30 குறைப்பு)
- 2.3kg - ரூ. 506 (ரூ. 14 குறைப்பு)

லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,675 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 30 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 14 ரூபாவாலும் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1,071 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 506 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

தகவலை சகலருக்கும் கிடைக்கும் வண்ணம் பகிரவும் .

😃❤🖤உலகின் மிகப்பெரிய அசையும் சொத்தான Ever Ace கொள்கலன் கப்பல் எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பு துறைமுகதில் நங்கூரமிட உள...
03/10/2021

😃❤🖤உலகின் மிகப்பெரிய அசையும் சொத்தான Ever Ace கொள்கலன் கப்பல் எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பு துறைமுகதில் நங்கூரமிட உள்ளது.

400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த மிதக்கும் தீவு 23,992 கொள்கலன்களை சுமந்துகொண்டு நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சுயெஸ் கால்வாயூடாக வந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.

உலகின் 24 துறைமுகங்கள் மட்டுமே இந்தக் கப்பலை கையாள முடியும். அதிலே தெற்காசிய வலயத்தில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே இந்தளவு பிரமாண்டமான கப்பலை அனுமதிக்கும் ஆழமும் கொள்ளளவும் உள்ளது.

சற்று முன் அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை சந்தித்தார். கைதிகள...
16/09/2021

சற்று முன் அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை சந்தித்தார். கைதிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்து அமைச்சரை உடனடியாக சந்திக்க வேண்டும் என நேற்றைய தினம் கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடதக்கது.

கைதிகளை சந்தித்த நாமல் ராஜபக்ச அவர்கள் அவர்களுடைய கவலைகளை கேட்டறிந்ததுடன் அவை தொடர்பாக தீர்வொன்றை பெற்றுத்தரும் நடவடிக்கைகளை தனிபட்ட ரீதியில் தானே முன்னெடுப்பதாகவும் அமைச்சர் அவர்களுக்கு உறுதியளித்தார்

இலங்கையில் மேலும் 136 COVID-19 தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன 🔵76 ஆண்கள் மற்றும் 60 பெண்கள் 🔵60 வயது மற்றும் அதற்கு மே...
15/09/2021

இலங்கையில் மேலும் 136 COVID-19 தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன

🔵76 ஆண்கள் மற்றும் 60 பெண்கள்
🔵60 வயது மற்றும் அதற்கு மேல்: 106 நபர்கள்.

இலங்கையில் இறப்பு எண்ணிக்கை 11,567 ஆக அதிகரித்துள்ளது

நோர்வேயில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த கம்சி குணரட்ணம் (Kamzy Gunaratnam ) நாடாளு...
14/09/2021

நோர்வேயில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த கம்சி குணரட்ணம் (Kamzy Gunaratnam ) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

11மாத குழந்தையொன்றுக்கு தாயாக மாறிய தாதியரின் , பலரின் மனதை நெகிழ வைத்த நிகழ்வுகொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுவர் இ...
14/09/2021

11மாத குழந்தையொன்றுக்கு தாயாக மாறிய தாதியரின் , பலரின் மனதை நெகிழ வைத்த நிகழ்வு

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுவர் இல்லமொன்றில் பெற்றோர்கள் அற்ற நிலையில் வளர்ந்த 11மாத குழந்தையொன்று கந்தளாய் கொவிட் வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,

வைத்தியசாலை தாதியர்கள்
11 மாதம் கடந்த நிலையிலும் அக்குழந்தைக்கு காதுகுத்து நிகழ்வு செய்யப்படவில்லை என்பதை அறிந்து தாங்களே தாய் ஸ்தானத்தில் இருந்து குழந்தைக்கு காதுக்குத்து நிகழ்வை நடத்தி குழந்தையை ஆதரவாக பரமாரித்து வருகின்றமை பலரின் மனதை நெகிழச் செய்துள்ளது.

மடு பிரதேசத்தில் பிள்ளையார் கோவில் ஒன்று அந்தோனியார் தேவாலயமாக இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளதுமடு பரப்புக்கடந்தான் வீதியி...
13/09/2021

மடு பிரதேசத்தில் பிள்ளையார் கோவில் ஒன்று அந்தோனியார் தேவாலயமாக இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளது

மடு பரப்புக்கடந்தான் வீதியில், வீதியோரமாக உள்ள மரமொன்றின் கீழ் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டு , அதனை வீதியால் செல்பவர்கள் வழிபட்டு சென்றனர்.

குறித்த பிள்ளையார் சிலை சுமார் 40 வருடங்களுக்கு மேலாக அவ்விடத்தில் உள்ளதாகவும் , காட்டு பகுதிக்குள் வீதி அமைந்துள்ளதால் , வீதியால் செல்லும் பலரும் மத பேதமின்றி பிள்ளையாரை வழிபட்டு செல்லும் வழக்கம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

❣ சதொச ஊடாக  #உள்ளாடைகள் விற்பனை💢💢🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️ பந்துலவின் அதிரடிக் கருத்து 😱
12/09/2021

❣ சதொச ஊடாக #உள்ளாடைகள் விற்பனை💢💢🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️
பந்துலவின் அதிரடிக் கருத்து 😱

10 கோடி பார்வையாளர்களை    (100 million views) தொட்ட யோஹானி டி சில்வாவின் ‘மெனிகே மகே ஹித்தே” பாடல்இலங்கையின் முன்னணி பாட...
12/09/2021

10 கோடி பார்வையாளர்களை (100 million views) தொட்ட யோஹானி டி சில்வாவின் ‘மெனிகே மகே ஹித்தே” பாடல்

இலங்கையின் முன்னணி பாடகியாக வலம் வந்துக்கொண்டுள்ள யோஹானி டி சில்வாவின் ‘மெனிகே மகே ஹித்தே” பாடல், இலங்கை வரலாற்றில் சர்வதேச ரீதியில் நேற்றைய தினம் (11) புதிய சாதனையொன்றை படைத்துள்ளது.

யூடியூப் காணொளி சமூக வலைத்தளத்தில், நேற்று மாலை 6.30 அளவில், 10 கோடி பார்வையாளர்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ளது.

இலங்கை பாடலொன்றுக்கு, சர்வதேச களத்தில் இவ்வாறான வரவேற்பு இதுவரை கிடைத்திருக்கவில்லை.

இந்தியாவில் இந்த பாடல் பிரபல்யமடைந்தமையே, இந்த வரவேற்பு அதிகரிப்பதற்கான ஒரே காரணம் என கூறப்படுகின்றது.

கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய களனி பாலத்தில் பொருத்தப்பட்ட வண்ண மின் விளக்குகள் நேற்று இரவு ஒளிரச் செய்யப்பட்டனஇத...
12/09/2021

கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய களனி பாலத்தில் பொருத்தப்பட்ட வண்ண மின் விளக்குகள் நேற்று இரவு ஒளிரச் செய்யப்பட்டன

இது கொழும்பில் அழகான மற்றொரு சின்னமான கட்டமைப்பாக மிளிர்கிறது. இது இலங்கையில் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் பாலமாகும். Lanka's

ஆடைகளுக்கான இறக்குமதி வரி விதிப்பின் பின்னர் இலங்கை மக்கள்🌿🌿🌿🌿🌿☘️🍀🌱🌱🌱☘️🍀☘️
11/09/2021

ஆடைகளுக்கான இறக்குமதி வரி விதிப்பின் பின்னர் இலங்கை மக்கள்🌿🌿🌿🌿🌿☘️🍀🌱🌱🌱☘️🍀☘️

சர்வதேச சந்தையில் இருந்து 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற எரிசக்தி அமைச்சகம் முடிவுஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்...
11/09/2021

சர்வதேச சந்தையில் இருந்து 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற எரிசக்தி அமைச்சகம் முடிவு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சந்தையில் இருந்து 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட கொன்செப்ட் குளோபல் என்ற நிதி நிறுவனத்திடமிருந்து கடன் பெற அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடனுக்கு 2 வருட சலுகைக் காலமும், திருப்பிச் செலுத்தும் காலம் 12 வருடங்களும் ஆகும்.

எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த கடன் விரைவில் 3 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தில் பெறப்படும்.

பெற்றோலியக் கூட்டுத்தபானம் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு சுமார் 330 மில்லியன் டொலர் கடன்பட்டிருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இரு அரச வங்கிகளுக்கிடையே நிலுவையில் உள்ள கடன் கடிதங்களை தீர்க்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சங்குப்பிட்டி பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய பாதிப்புக்களை சீர் செய்யும் பணிகள் ஆரம்பம்.சங்குப்பிட்டி பாலத்தில் உவர் காற்றி...
11/09/2021

சங்குப்பிட்டி பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய பாதிப்புக்களை சீர் செய்யும் பணிகள் ஆரம்பம்.

சங்குப்பிட்டி பாலத்தில் உவர் காற்றின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யும் பணிகளை வீதி அபிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 01ம் திகதி, இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் செயலாளர் குலேந்திரன் சிவராம், வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப்பணிப்பாளர் திரு. வசந்தகுமார், வட மாகாண பணிப்பாளர் திரு. குரூஸ், உள்ளிட்டோர் பாலத்தின் நிலவரம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.

அதன்போது, கொவிட் 19 காரணமாக இப்பணிகள் தாமதடைவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இப்பணிகள் முழுவீச்சில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

11/09/2021

🔴 காரைநகர் பகுதியில் ஊரடங்கு வேளையில் திருமண நிகழ்வை நடத்திய நிலையில் திருமணத்தில் கலந்து கொண்ட 13 சிறுவர்கள் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி, அத்துடன் பொது சுகாதார பரிசோதகரை தாக்க முற்பட்டதாக குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் ஊரடங்கு வேளையில் திருமண நிகழ்வை நடத்திய நிலையில் திருமணத்தில் கலந்து கொண்ட 13 சிறுவர்கள் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.
காரைநகர் பகுதியில் கடந்த 1ஆம் திகதி , ஊரடங்கு அமுலில் உள்ள வேளை பந்தல் அமைந்தது திருமண நிகழ்வு நடைபெற்றது. குறித்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சுகாதார விதிமுறைகளை பேணாது நடந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை திருமணத்தில் எடுத்துக்கொண்ட குழு புகைப்படங்கள் உள்ளிட்ட படங்களையும் முகநூலில் அன்றைய தினமே திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் பகிர்ந்து கொண்டனர்.

அதில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காது பலர் திருமணத்தில் கலந்து கொண்டமை உறுதியானதை அடுத்து சுகாதார பிரிவினர் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் திருமணத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினர்.

அதேவேளை ஊரடங்கு அமுலில் உள்ள வேளை சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் நடாத்தப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்தனர்,

அதன் அடிப்படையில் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் 5 வயது தொடக்கம் 15 வயதுக்கு உட்பட 13 சிறுவர்கள் உள்ளடங்கலாக 35 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முயன்ற போது . சுகாதார வைத்திய அதிகாரி , பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரை தாக்க முற்பட்டு அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் 03 பேர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when TAMIL தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share