திராவிடன்

திராவிடன் வாழ்க தமிழ்!.
அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த சிந்தனைகள்.

05/01/2023
அறிவியல் மாமேதை ஜி.டி நாயுடு நினைவு தின பதிவு! 1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து ந...
04/01/2023

அறிவியல் மாமேதை ஜி.டி நாயுடு நினைவு தின பதிவு!

1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.

அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். அக்கல்லூரி தற்போது அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் (GCT) என அறியப்படுகிறது.
இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார்.
நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.
இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.

தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பயணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார்.

பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.

இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.
மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க (அதிர்வு சோதிப்பான்) Vi****or Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.
புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.

1936ஆம் ஆண்டுஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான பிளேடுக்கு மூன்றாவது பரிசு

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. "பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்". அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’
மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துகொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.
எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.

அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.

விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!

அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.
அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.

டிசம்பர் 27: முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் இன்று ...தாகூர் இயற்றியதே ஜன கண மன என்கிற நம் தேசிய கீதம் .ஐந்து ப...
27/12/2022

டிசம்பர் 27: முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் இன்று ...

தாகூர் இயற்றியதே ஜன கண மன என்கிற நம் தேசிய கீதம் .ஐந்து பத்திகள் கொண்ட இதில் ஒரு பத்தியை மட்டுமே நாம் பாடுகிறோம் .உண்மையில் இதை எழுதிய காலத்தில் வங்கப்பிரிவினை அமலில் இருந்தது .அந்த வலியோடு இந்த தேசம் ஒன்று என வலியுறுத்த தாகூர் இப்பாடலை இயற்றினார்.ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை 'god save the queen' என்கிற பாடலைத்தான் பாடிக்கொண்டு இருந்தார்கள்.

தேசிய கீதம் முதன்முறையாக 1911-ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அந்த மாநாடு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்து இயற்றப்பட்ட பாடல் இது என்கிற கருத்து சில பேரால் சொல்லப்பட்டது உண்மையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ் சவுத்திரி என்பவர் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். அந்தப் பாடலையும் தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளாத
'ஸ்டேட்ஸ்மேன்’, 'இங்கிலிஷ்மேன்’ போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை வாழ்த்திப் பாடியதாக தவறாக தகவல் வெளியிட்டன.

அந்த கூட்டத்தில் தாகூரே கம்பீரமாக அதைப்பாடினார் .(தாகூர் சிறந்த கவிஞர் மட்டும் அல்ல நல்ல இசை வல்லுனரும் கூட !அவரின் பாடல்கள் இன்று வரை ரவீந்திர சங்கீதத்தில் இசைக்க பட்டு வருகின்றன !). அந்த பாடல் வங்காளி மொழியில் எழுதப்பட்டாலும் சாது பாஷா எனும் சமஸ்க்ருத வார்த்தைகள் அதிகம் பயின்று வருகிற நடையில் அப்பாடல் எழுதப்பட்டது .இந்த பாடலை பாடியவாறே விடுதலை போராட்ட வீரர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் ! அதனால் , இந்த பாடலை பாடுவதற்கு ஆங்கிலேய அரசாங்கம் தடை விதித்தது . இந்த பாடலை 1919 இல் ஜேம்ஸ் கசின்ஸ் எனும் ஐரிஷ் கவிஞர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மடனபள்ளி பெசன்ட் தியோசபிக்கல் கல்லூரியில் பாடினார்.அதை தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் பிரார்த்தனை பாடலாக பட ஆரம்பித்து விட,தாகூர் அந்த பாடலை தானே ஆங்கிலத்தில் "The Morning song of india "என்கிற பெயரில் மொழிபெயர்த்து ,ஜேம்ஸ் கசின்சின் மனைவுடன் இணைந்து இசையும் அமைத்தார் .

தாகூரின் ஜன கன மண எனும் இப்பாடல் 1943 இல் நேதாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய படையின் தேசிய பாடலானது .ஜனவரி 24 அன்று 1950 ஆம் வருடம் இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது . இன்று அப்பாடல் நூறு ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நம் தேசபக்தியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது

என் பொன் வங்கமே என்கிற பொருளில் தாகூர் வங்கப்பிரிவினையின் பொழுது எழுதிய அமர் சோனா பங்களா 1971 இல் வங்காளதேசத்தின் தேசிய கீதமானது .

முகமது அலி ஜின்னாவின் அரசியல் வாழ்க்கை பிறந்த நாள் சிறப்பு பதிவு!தொகை குறிப்பிடப்படாத செக் ஒன்றை நான் உங்களுக்குத் தருகி...
25/12/2022

முகமது அலி ஜின்னாவின் அரசியல் வாழ்க்கை பிறந்த நாள் சிறப்பு பதிவு!

தொகை குறிப்பிடப்படாத செக் ஒன்றை நான் உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் நிரப்பிக்கொள்ளலாம்’’ - என்று முகமது அலி ஜின்னாவிடம் மகாத்மா காந்தி சொன்னார். ‘‘நான் கேட்பது அந்த செக்-கை விடக் குறைவானதுதான்’’ என்று பதில் அளித்தார் ஜின்னா. காந்தி சொன்னது ஒற்றுமை. ஜின்னா கேட்டது பிரிவினை. ‘‘எனது ரத்தத்தில்தான் பிரிவினை நடக்கும்’’ என்றார் காந்தி. பிரிவினை முடிந்தபிறகு அவரது ரத்தம் காவு வாங்கப்பட்டது. காந்தியின் ரத்தத்துக்கு வலிமை அதிகம். அதனால்தான் ரத்தப் பலிகள் இன்றுவரை தொடர்கின்றன.

முதலாம் உலகப்போர் நடந்தபோது மும்பை கவர்னராக இருந்த வெல்லிங்டன் யுத்த மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் கலந்துகொள்ள பால கங்காதர திலகருக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவரை அவமானப்படுத்தினார் வெல்லிங்டன். அந்த இடத்திலேயே தட்டிக்கேட்ட ஒரே ஆள் முகமது அலி ஜின்னா. ‘‘எனக்குத் தேவை இந்து - முஸ்லிம் ஒற்றுமை. நாம் சண்டை போட்​டால் பகைவனான பிரிட்டிஷ் அரசுக்குத்​தான் லாபம்’’ என்ற தெளிவில் இருந்தவர் முகமது அலி ஜின்னா.

காங்கிரஸ் கட்சியுடன் அதிக நெருக்கம் காட்டிய ஜின்னாவிடம், அன்றைய பிரிட்டிஷ் நிதி அமைச்சர், ‘‘சிலந்தி, உங்களை விழுங்கி ஜீரணித்துவிட்டது. சிலந்திக்கு பசி இருக்​கலாம். பூச்சி ஏன் இரையாக வேண்டும்?’’ என்று கேட்டபோது, ‘‘உங்கள் பக்கம் இருப்பதைவிட அந்தப் பக்கம் இருப்பதால் சங்​கடங்கள் குறைவு’’ என்று தீர்க்கமாய்ச் சொன்னவர் முகமது அலி ஜின்னா. அப்படிப்​பட்ட ஜின்னாவை காங்கிரஸ் தலைவர்கள் ஒதுக்கி​யதால் அவரே ஒதுங்கிப்போனார்.

ஜின்னாவின் தனி பாகிஸ்தான் கோரிக்கைக்கு மொத்த வயதே ஏழுதான். 1940-க்கு முன்புவரை இந்தியாவைப் பிரிக்கும் யோசனையே அவருக்கு இல்லை. தேர்தல் மோகமும், பதவி வேட்டையும் காங்கிரஸ் கட்சியையும் முஸ்லிம் லீக்கையும் எதிரெதிராய் பிரித்து தேசத்தைக் கூறுபோடு​வதில் கொண்டுபோய் விட்டது.

‘சிப்பாய்க் கலகம்’ என்று கொச்சைப்​படுத்தப்​​படும், முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டமான 1857 புரட்சியில் இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்தே போராடினார்கள். இந்தப் போராட்டம் குறித்த தனது ‘எரிமலை’ என்ற நூலில் சாவர்க்கர், இந்துக்களைப்​போலவே முஸ்லிம்களும் எப்படி எல்லாம் போராடினார்கள் என்பதை விலா​வாரியாக விவரித்​துள்ளார். எனவே, இந்த ஒற்றுமையைக் குலைப்பதன் மூலமாக விடுதலைப் போராட்டத்தை நசுக்க முடியும் என்ற சதியின் அடிப்படையில் வங்கப் பிரிவினை செய்யப்பட்டது. நிலத்தைப் பிரிப்பது நடக்காவிட்டாலும் மக்கள் மனதைப் பிரிப்பது அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே நடந்தது.

டாக்காவைச் சேர்ந்த நவாப் சலீம் உல்லா கான், 1906-ல் அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற கட்சியைத் தொடங்கி, ‘‘மாகாண சட்டமன்றங்களில் முஸ்லிம்களுக்குத் தனியாக தொகுதி வேண்டும்’’ என்றார். மூன்று ஆண்டுகள் கழித்து இது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதுதான் முஸ்லிம் லீக்கின் முதல் வெற்றி. இந்தத் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் ஏற்கவில்லை. ‘‘இது ஏற்றத்தாழ்வான ஏற்பாடு’’ என்று மதன்மோகன் மாளவியா சொன்னார். ‘‘இது நியாயமானது​தான்’’ என்று மத்திய சட்டசபையில் கோபாலகிருஷ்ண கோகலே பேசி இருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில்தான் அரசியலுக்கு ஜின்னா வந்தார். ‘‘காங்கிரஸ் கட்சியும் - முஸ்லிம் லீக்கும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஒற்றுமையால்தான் நம் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும்” என்று சொல்பவராக ஆரம்பத்தில் ஜின்னா இருந்தார். ரௌலட் சட்டம் வந்தபோது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தனது மத்திய சட்டசபை உறுப்பினர் பதவியை ஜின்னா தூக்கி எறிந்தார். மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு திட்டத்தை அவர் ஏற்கவில்லை. அன்றைய காங்கிரஸ் தலைவரான மோதிலால் நேரு சொல்​வதை எல்லாம் வழிமொழிபவராக ஜின்னா இருந்தார். இதற்கு அவரது மத்திய சட்டசபைப் பேச்சுக்களே இன்னும் சாட்சியாக உள்ளன.

1920 வரைக்கும் இதில் எந்தச் சிக்கலும் இல்லை. முஸ்லிம்கள் பெருவாரியாக இருக்கும் மாநிலங்​களைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்று மத்திய சட்டசபையில் தீர்மானம் வந்தபோது ஜின்னாவின் சுயேச்சைகள் கட்சி அதனை ஆதரித்தது. இந்தத் தீர்மானத்தை மாளவியா எதிர்த்தார். விபின் சந்திரபால் ஆதரித்தார். காங்கிரஸ் ஏற்கவில்லை. இதுதான் முதல் மனப்பிளவு.

அடுத்த சில ஆண்டுகளில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் 15 கட்சிகளைச் சேர்ந்த 70 பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். முஸ்லிம்களின் கோரிக்கையாக 5 தீர்மானங்களை ஜின்னா கொடுத்தார். இவை அனைத்துமே மோதிலால் நேருவால் ஏற்கப்படவில்லை. இரண்டாவது மனப்பிளவு இது.

இர்வின் ஒரு மாநாடு கூட்டினார். மோதிலால் நேருவையும், காந்தியையும் அழைத்த இர்வின், அந்த மாநாட்டுக்கு ஜின்னாவையும் அழைத்திருந்தார். ஜின்னா அழைக்கப்பட்டதை மோதிலாலும் காந்தியும் ஏற்கவில்லை. மூன்றாவது மனப்பிளவு இது.

முஸ்லிம்களுக்கு மாகாண சட்டசபைகளில் தனித்தொகுதி வேண்டும் என்ற ஜின்னாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இதனால், முஸ்லிம் லீக் அதிகளவில் வென்றது. 1935 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும் ஜின்னாவுக்கு 22 இடங்களும் கிடைத்தன. ஜின்னா ஆதரவு இல்லாமல் பிரிட்டிஷ் அரசை அச்சுறுத்த முடியாது என்ற சூழ்நிலை காங்கிரஸுக்கு இருந்தது. ஆனாலும் ஜின்னாவுக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. நான்காவது மனப்பிளவு இது.

1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல மாகாணங்​களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முஸ்லிம் லீக்கும் பல தொகுதிகளைக் கைப்பற்றினாலும் ஆட்சி அமைக்கும் பலம் இல்லை. ஐக்கிய மாகாணத்தில் காங்கிரஸ் நினைத்திருந்தால் முஸ்லிம் லீக்குடன் இணைந்து ஆட்சி அமைத்திருக்கலாம். அவர்கள் அதைச் செய்ய முன்வரவில்லை. ஐந்தாவது மனப்பிளவு இது.

இந்தியாவின் பல்வேறு மாகாணங்களில் அமைந்த காங்கிரஸ் கட்சி, இந்து - முஸ்லிம் பிரச்னையைச் சரியாகக் கையாளவில்லை என்று ஜின்னா கண்டித்தார். அப்போது ஜவஹர்லால் நேருவுக்கும் ஜின்னாவுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. அது தோல்வியில் முடிந்தது. பேச்சு வார்த்தை ஏன் தோற்றது என்று நேருவிடம் கேட்டபோது, ‘‘எனக்குப் புரியும்படி சொல்ல ஜின்னாவால் முடியவில்லை’’ என்று கிண்டல் அடித்தார். ஆறாவது மனப்பிளவு இது.

‘‘முஸ்லிம்களின் பிரதிநிதியாக என்னை அங்கீகரிக்க வேண்டும்’’ என்றார் ஜின்னா. இந்தக் கோரிக்கையை காந்தி ஏற்கவில்லை. ‘‘முஸ்லிம்களுக்காக மௌலானா அபுல்கலாம் ஆசாத் பேசட்டும்’’ என்றார் காந்தி. ஏழாவது மனப்பிளவு இது.

1939-ல் காங்கிரஸ் அமைச்சரவை பல்வேறு மாநிலங்​களில் பதவி விலகியபோது, ‘‘இது முஸ்லிம்களுக்கு விமோசன தினம்’’ என்று கருத்துக் கூறினார் ஜின்னா. இந்தியர்கள் மத்தியில் பிரிவை அதிகப்படுத்துவதாக ஜின்னா மீது ஆசாத் குற்றம்சாட்டி​னார். தனக்கு எதிராக காங்கிரஸ் ஆசாத்தைக் கொண்டுவந்து நிறுத்துகிறது என்று ஜின்னா நினைத்தார். எட்டாவது பிளவு இது.

‘‘காங்கிரஸ் கட்சி அனைவருக்கும் பொது​வான கட்சி அல்ல. அது இந்துக்களுக்​கான கட்சி’’ என்று சொன்னார் ஜின்னா. ‘‘இது இந்துக்களின் கட்சியாக இருந்தால், ஆசாத்தை எப்படித் தலைவராக வைத்திருப்போம்’’ என்று கேட்டார் காந்தி. ஒன்பதாவது மனப்பிளவு இது.

காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் சேர்ந்து ஓர் இடைக்கால அரசை அமைக்​கலாம் என்ற ஒப்பந்தத்தை புலாபாய் தேசாயும், லியாகத் அலிகானும் நிறைவேற்றினார்கள். இந்த ஒப்பந்தத்தை காந்தியும் ஜின்னாவும் ஏற்றுக்​கொண்டார்கள். ஆனால், புலாபாய் தேசாய்க்கு, காங்கிரஸில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த ஒப்பந்தம் செல்லாது என்றது காங்கிரஸ் கட்சி. ஜின்னா மனதில் ஏற்பட்ட 10-வது மனப்பிளவு இது. பாகிஸ்தான் பிரிவினைக்கு அடித்தளம் அமைத்​தவை இந்த 10 நிகழ்வுகள்!

இந்து - முஸ்லிம் என்ற மதவாத மனோபாவம் இதற்குப் பின்னணியில் இருந்த அடிப்படைக் காரணமாக இருந்தாலும் இரண்டு தரப்பிலுமே இருந்த தன்முனைப்பு கலந்த தனிமனித வெறுப்பு அரசியலே கூடுதலாக அமைந்து நாட்டையும் பிரித்தது. பல்லாயிரக்கணக்​கானவர் உயிரையும் பறித்தது. இந்தக் கெட்ட பாடம் ஒரு முறை போதும். ‘‘இந்து - முஸ்லிம் ஒற்றுமை பேரம் பேசிப் பெறுவதல்ல. ஓர் இந்துவோ, முஸ்லிமோ அடுத்தவர்க்கு செய்யும் கொடுமை ஓர் இந்தியன் சக இந்தியனுக்குச் செய்யும் கொடுமையே’’ என்றார் காந்தி. ‘‘நாம் வாழ்வதாக நாம் கருதிக்​கொண்டிருக்​கிறோம். ஆனால், ஒற்றுமையின்மை சாவைவிட மோசமானதாகும்’’ என்று சொன்னவரும் அவர்தான். இந்த ஒற்றுமை காப்பாற்றப்பட வேண்டும். எதனால் அல்லது யாரால் இந்த ஒற்றுமையைக் காப்பாற்ற முடியும்?

மதமா, கடவுளா, தலைவர்களா, ஆட்சியா, கட்சியா, சட்டமா, பணமா, பட்டமா, பதவியா, அதிகாரமா, அடக்குமுறையா, போரா, போராட்டமா, அன்னிய நாடா, ஐ.நா. சபையா? - யார் இந்த ஒற்றுமையை ஏற்படுத்துவது? காந்தி ஒரே ஒரு சொல்லைப் பதிலாக்கிவிட்டுச் செத்துப் போய்விட்டார். ‘‘நீங்கள், நீங்களாக ஒற்றுமைப்பட மறுத்தால், இயற்கை நிச்சயம் ஒற்றுமைப்​படுத்தும்’’ என்பதுதான் அந்த மந்திரச்சொல்.
#திராவிடன்

ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கிய கைத்தடி” - தந்தை பெரியார் நினைவு தின சிறப்பு பகிர்வு!  தந்தை பெரியார் - வஞ்சிக...
24/12/2022

ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கிய கைத்தடி” - தந்தை பெரியார் நினைவு தின சிறப்பு பகிர்வு!

தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!

* தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்து வைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ‘ணா’, ‘லை’ என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்கு இருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத்தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 1942 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன் ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத்ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரது சேகரிப்பில் நயாபைசா கூட அவரது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!

* 'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!

* அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!

* 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன்முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை - வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!

* 95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டங்களில் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

நன்றி : விகடன்
-மணி நெல்லை
#திராவிடன்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அதுமுடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் -என்று ‘தெய்வத்தாய்' படத்தில் பாடிய எம்.ஜி.ஆர் ...
24/12/2022

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அது
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் -

என்று ‘தெய்வத்தாய்' படத்தில் பாடிய எம்.ஜி.ஆர் தனது மூச்சை நிறுத்திய பிறகும் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என்று நம்பும் மக்கள் நம்நாட்டில் உண்டு.

‘‘அந்த மகராசனுக்கு சாவு இல்லை’’ என்று கும்பிடும் மக்கள் நாட்டில் உண்டு. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது அதுபற்றி செய்தியாக்க வந்த அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் ஒரு கூலித் தொழிலாளி சொன்னார்: ‘‘என் நெஞ்சைக் கிழிச்சுப் பாருங்க சார். உள்ள வாத்தியார் இருப்பார்’’ என்று. கிராமத்துப் பெண்களில் சிலர், எம்.ஜி.ஆர் படத்து சுவரொட்டிகளை விரித்துப் படுத்துக்கொள்வதாக அந்தப் பத்திரிகையாளரே எழுதினார். எம்.ஜி.ஆருக்கு முன்னும் பின்னும் எந்த முகமும் அந்த ஈர்ப்பை அடைந்தது இல்லை. சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் சேர்ந்து குழைத்த தேகத்தால் மக்களை மயக்கி வைத்திருந்தார் மெனகத் கோபால மேனன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்.!

மெனகத் என்பது இவர்களது குடும்பப் பெயர். பாலக்காடு மாவட்டம் சொல்லெங்கோடு அருகே நல்லேபள்ளி கிராமத்தில் மெனகத் கோபால மேனன் பிறந்தார். வடவனூர் சத்யபாமாவை திருமணம் செய்துகொண்டு மருதூர் வீட்டில் வாழ்ந்தார்கள். இவர்கள் இருவரும் இலங்கை கண்டிக்கு அருகில் வாழ்ந்த போது பிறந்தவர் ராம்சந்தர். இரண்டு வயதில் தாயகம் திரும்பியது கோபால மேனன் குடும்பம். குடியேறியது கும்பகோணத்தில். தம்பி ராம்சந்தரையும் அண்ணன் சக்ரபாணியையும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற நாடக நிறுவனத்தில் சேர்த்தார்கள். வாரத்துக்கு நாலரை ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தவர்தான் தொடர்ந்து மூன்று முறை வென்று நாடாண்ட எம்.ஜி.ஆர்.!

பி.யூ.சின்னப்பா ஆண் வேடமான ராஜபார்ட் போட்டால், பெண்ணைப் போல நளினமாகவும் சிவந்தும் ஈர்ப்பாகவும் இருக்கக் கூடிய ராம்சந்தருக்கு ஸ்திரீ பார்ட் வேடம் தரப்படும். 30-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த எம்.ஜி.ஆர் சென்னைக்கு வந்து சென்ட்ரல் அருகில் உள்ள வால்டாக்ஸ் ரோட்டில் குடியேறினார். இவரது நடிப்பைப் பார்த்து உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியினர் இவரை இழுத்துச் சென்றார்கள். இந்தக் காலத்தில் சாஃப்ட்வேர் கம்பெனிகள் பார்க்கும் வேலையை அந்தக் காலத்தில் நாடகக் கம்பெனிகள் பார்த்து உள்ளன.

மொய்தீன் நாடகக் கம்பெனியில் நாடகம் போட ரங்கூன் போனவர், மீண்டும் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கே வந்தார். ராம்சந்தர் வளர்ந்து விட்டார். பெண்ணின் நளினமான குரல் உடைந்து விட்டது. அப்போதெல்லாம் பின்பாட்டு கிடையாது. நடிகர், நடிகைகளே பாட வேண்டும். எம்.ஜி.ஆரின் குரல் உடைந்ததால் ஸ்திரீபார்ட்டுக்கு அவர் பொருந்தவில்லை. உடனே உஷாரான
எம்.ஜி.ஆர் வீர விளையாட்டுக்களைக் கற்றுக்கொண்டு ராஜபார்ட்டுக்கு தயார் ஆனார். நாடகங்கள் எல்லாம் சினிமாவாக பரிணாமம் பெறத் தொடங்கிய காலகட்டம் அது.

முதல் படம் கிடைத்தது, ‘சதிலீலாவதி'. அடுத்தடுத்து இரு சகோதரர்கள், மாய மச்சீந்திரா, அரிச்சந்திரா, பிரகலாதன், மீரா, ஸ்ரீமுருகன்... எனப் பல படங்கள். ஆனால் அனைத்திலும் சிறுசிறு வேடங்கள். அவருக்கு ராஜகளையைக் கொண்டு வந்தது, ‘ராஜகுமாரி'. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக மகுடம் சூட்டிக்கொண்ட இந்தப் படத்துக்கு கதை வசனம் கருணாநிதி. 1947 ஏப்ரல் 11-ம் நாள் இந்தப் படம் வெளியானது. எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' 1936-ல் வெளியானது. கதாநாயகன் ஆக எம்.ஜி.ஆருக்கு 11 ஆண்டுகள் பிடித்தன. ஆனால், 30 ஆண்டுகள் அதைத் தக்க வைத்திருந்தார்.

அடுத்த படமே மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் வெளியானது. கதாநாயகனாக அவர் நடித்த ‘மருதநாட்டு இளவரசி' படத்துக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் ஏக பந்தம் உண்டு. எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும், ஜானகி கதாநாயகியாகவும் நடித்த இந்தப் படத்துக்கு கதை வசனம் கருணாநிதி. தமிழகத்தின் மூன்று முதலமைச்சர்கள் 1950-ல் இந்தப் படத்தில் இருந்துதான் முகிழ்த்து எழுந்தார்கள்.

‘மர்மயோகி' படத்தில் ஸ்டைலால் ஈர்த்தார். ‘என் தங்கை' படத்தில் பெண்களை வசப்படுத்தினார். ‘மலைக்கள்ளன்' படம் ஸ்டார் ஆக்கியது. ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படத்தில் ஆச்சர்யப்பட வைத்தார். 25 வாரங்கள் ஓடி சூப்பர் ஸ்டாராக மகுடம் கட்டியது ‘மதுரை வீரன்'. ‘வென்றால் மன்னன்... தோற்றால் நாடோடி' என்று எம்.ஜி.ஆரே பயந்த ‘நாடோடி மன்னன்' அவரைத் திரையுலக மன்னன் ஆக்கியது. ‘மன்னாதி மன்னன்' படத்தில் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா' பாடலே இவரை ‘மன்னாதி மன்னனாகத்' தூக்கியது. ‘திருடாதே'-யும் ‘தாய் சொல்லைத் தட்டாதே'-யும் குடும்பங்களுக்குள் அவரைக் கொண்டுபோனது. 1963-ல் ஒரே ஆண்டில் 9 படங்கள். கருணாநிதியின் வசனத்தில் வெளியான காஞ்சித்தலைவன், எம்.ஜி.ஆரையும் தி.மு.க தலைவர்களுள் ஒருவராய் ஆக்கியது. 1965-ல் வெளியான ‘எங்கள் வீட்டுப்பிள்ளை' தமிழ்நாட்டுப் பிள்ளையாக அவரை ஆக்கியது.

சென்னை பிராட்வே, மேகலா, மதுரை - சென்ட்ரல், கோவை ராயல், தஞ்சை யாகப்பா ஆகிய ஐந்து ஊர்களிலும் 175 நாட்கள் ஓடியது இந்தப் படம். சென்னை காசினோவில் 211 நாட்கள் ஓடியது. திருச்சி ஜூபிடரில் 236 நாட்கள் ஓடியது. ‘‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ஏழைகள் வேதனைப் படமாட்டார்'’ என்ற கனவு நாயகனாக எம்.ஜி.ஆரை கொண்டு போய் நிறுத்தியது இந்தப் படம்.

ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் ஓராயிரம் பேரை ஈர்த்துக்கொண்டு இருந்தார் எம்.ஜி.ஆர். விபூதி பட்டை, சந்தனம், குங்குமம் என நெற்றி நிறையப் பூசியும் - கழுத்தில் துளசி மாலையும், ருத்ராட்ச மாலையும் அணிந்து நாடகக் கம்பெனியில் இருந்து சினிமா கம்பெனிக்கு வந்த எம்.ஜி.ஆர்., சில ஆண்டுகளிலேயே ஒவ்வொன்றாக விடுத்து கறுப்புத் துண்டை தோளில் போட ஆரம்பித்தார். அதற்குக் காரணம் கருணாநிதி. திராவிட இயக்கத்தவராய் வலம்வந்த கருணாநிதியும் தேசிய இயக்க ஈடுபாடும் தெய்விக நம்பிக்கையும் கொண்ட எம்.ஜி.ஆரும் ஒன்றாகத் திரைப் பயணத்தில் இணைந்து அரசியல் பயணத்திலும் கை கோத்தார்கள்.

1952-ல் தி.மு.க-வில் சேர்ந்தார் எம்.ஜி.ஆர். கோயிலுக்குப் போவதை நிறுத்தினார். நடிப்புக்காகக்கூட நெற்றியில் விபூதி பூசுவதை விடுத்தார். புராணப் படங்களே அதிகமாகத் தயாரிக்கப்பட்ட காலத்தில் புராணப் படங்களை தவிர்த்தார். ‘காத்தவராயன்' படத்தில் நடிக்க மறுத்தார். ‘இன்பக் கனவு' படத்தில், ‘‘தி.மு.க பிரசாரத்தைப் புகுத்த வாய்ப்பளித்தால்தான் நடிக்க முடியும்’’ என்றார். படப்பிடிப்புக்காக எங்கு சென்றாலும் அருகில் உள்ள ஊரில் தி.மு.க கூட்டத்தில் பேசுவார். தி.மு.க மாநாட்டில் நாடகங்களில் பங்கேற்பார். தன்னோடு நடிப்பவர்களிடம், ‘நீங்கள், தி.மு.க உறுப்பினர்கள் ஆகிவிட்டீர்களா... இல்லையா?' என்று கேட்பார். இவரை சபாக்காரர்கள் ஒதுக்கினார்கள். கவலைப்பட வில்லை. வானொலி புறக்கணித்தது. இவர் வருத்தப்படவில்லை. ஒரு கூட்டம் புறக்கணிக்க இன்னொரு கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது. சின்ன நெல்லிக்காயைக்கூட நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அண்ணா, எம்.ஜி.ஆர் என்ற மாங்கனியை விடுவாரா? ‘இதயக் கனி' என்று எடுத்து வைத்துக்கொண்டார்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்த 1967 தேர்தலில் நூற்றுக்கணக்கான பேச்சாளர்கள், தலைவர்கள் அந்தக் கட்சிக்காக இரவு பகல் பார்க்காமல் பிரசாரம் செய்தார்கள்.

1967-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் நாள் மாலை 5 மணிக்கு சென்னை ராமாபுரத்தில் இருந்த எம்.ஜி.ஆரின் தோட்டத்தில் நிஜக்குண்டு வெடித்தது. எம்.ஜி.ஆரின் இடதுபுற காது வழியாகப் பாய்ந்த குண்டு கன்னத்தில் பாய்ந்தது. எம்.ஆர்.ராதாவின் நெற்றியில் இருந்து ரத்தம் பாய்ந்தது. இரண்டு பேருமே இதற்கான உண்மையான காரணத்தைச் சொல்லவில்லை. ‘‘சிலர் கையில கம்பு வெச்சி சண்டை போடுவாங்க. நாங்க துப்பாக்கி வெச்சிருந்தோம்’ என்று சாதாரணமாகச் சொன்னார் எம்.ஆர்.ராதா. ‘‘ரெண்டு பேருமே சாகலை. என்னடா துப்பாக்கி கண்டுபிடிக்கிறாங்க... யூஸ்லெஸ் ஃபெலோஸ்’ என்றும் கிண்டல் அடித்தார் ராதா. சிறைக்குப் போய் வெளியில் வந்த பிறகும் அவர் காரணம் சொல்லவில்லை.

அந்தத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதி தி.மு.க வேட்பாளராக எம்.ஜி.ஆர் அறிவிக்கப்பட்டு இருந்தார். எம்.ஆர்.ராதா அப்போது திராவிடர் கழகத்தில் இருந்தார். திராவிடர் கழகத் தலைவர் பெரியார், அப்போது காங்கிரஸை ஆதரித்து வந்தார். எனவே, இது காங்கிரஸின் சதி என்று பிரசாரம் செய்யப்பட்டது. ‘‘இல்லை, இது சினிமா சம்பந்தப்பட்ட பிரச்னை’’ என்று சொல்லப்பட்ட விளக்கம் எடுபடவில்லை. கழுத்தில் குண்டு பாய்ந்ததால் தோளைச் சுற்றிலும் பேன்டேஜ் போடப்பட்டு உடம்பில் சட்டை இல்லாமல் மன்னாதி மன்னன், நாடாடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை உட்கார்ந்து இருந்ததைப் பார்த்து மக்கள் கண்ணீர் வடித்தார்கள். ‘‘சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீர்கள்’’ என்று காமராஜர் சொல்லிப் பார்த்தார். ‘‘சினிமா டிக்கெட் கொடுத்து ஓட்டு வாங்கப் பார்க்கிறார்கள்’’ என்று கக்கன் சொல்லிப் பார்த்தார். ‘‘ஆமாம்! அதற்கு என்ன?” என்று திருப்பிக் கேட்ட மக்கள், காங்கிரஸுக்கு எதிராய் குத்தினார்கள்.

பிரசாரம் போகாமலேயே மருத்துவமனையில் இருந்தபடியே வாக்குகளை வாங்கிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். ‘எங்க மகராசனுக்கா இப்படி நடந்தது?’ என்று பொதுமக்களைச் சீற வைத்தது கழுத்தில் கட்டு போடப்பட்ட அந்தப் படம்.

அண்ணாவை மேடையில் வைத்துக் கொண்டே எம்.ஜி.ஆர் பேசினார். “மகாபாரதத்தில் யுத்தம் தொடங்குவதற்கு முன் யாரேனும் ஒருவர் பலியாக வேண்டும் என்று சொன்னார்கள். அர்ச்சுனன், பீமனைக் காட்டிலும் பலசாலியான அரவானைப் பலி கொடுத்தார்கள். பாண்டவர்கள் கட்சி வெற்றி பெற, அரவான் பலியானதைப் போல நான் பலியாகத் தயார்’’ என்று எம்.ஜி.ஆர் கர்ஜித்தார். அப்போதுதான் அண்ணா, “உயிரைத் தர வேண்டாம். முகத்தைக் காட்டினால் போதும்’’ என்றார்.

எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து முகம் காட்டியதும், தி.மு.க என்ற மூன்றெழுத்து எழுந்து நின்றது. எம்.ஜி.ஆர் சூரியனை மலர வைத்த சந்திரன்.
-நன்றி விகடன்
#திராவிடன்

எளிமைக்கு உதாரணாமாய் திகழ்ந்த  #கக்கனின் நினைவு தினம் - சிறப்பு பகிர்வுடிசம்பர் 23: கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசிய...
23/12/2022

எளிமைக்கு உதாரணாமாய் திகழ்ந்த #கக்கனின் நினைவு தினம் - சிறப்பு பகிர்வு

டிசம்பர் 23: கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர் மறைந்த தினம்...

தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தைதான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி,சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது.

பள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய் உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார். பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர். 1932லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.

வைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார். ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார். 1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்,சட்ட சபை உறுப்பினர்,அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர், காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் அமைச்சரவையில் பொறுப்பேற்று கொண்ட துறைகள் என்னென்ன தெரியுமா ? அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி. உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியன !

அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார். அவரின் தம்பி விசுவநாதன் வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர். அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள். இப்படி ஒரு இடம் தேவையா ?" எனக்கேட்டார். விசுவநாதனுக்கு காவல் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால்தான் கிடைத்தது என்பார்கள் ! இந்த வேலைக்கு இவன் வேண்டாம் “ என்று தடுத்துவிட்டார்.

இவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்,லஞ்ச ஒழிப்பு துறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே ! கலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார்.

அரசு விடுதியில் தங்கபோனார் கக்கன். அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார். ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார். அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார்.

தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார்.

சொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ?” என்று கேட்டார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார்

முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.

சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் நினைவு தினமின்று.

Address

Building No 25, 2 Floor, Room No 4, 1 Street, Block 10 Near Salmiya Gardan
Salmiya
20010

Telephone

+96550524297

Website

Alerts

Be the first to know and let us send you an email when திராவிடன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to திராவிடன்:

Videos

Share

Category