Hi - Tech Villupuram

Hi - Tech Villupuram அனைத்து எலெக்ட்ரிக்கல் & பிளமிங் வேல?

24/03/2024
https://www.facebook.com/61557257083202/posts/122112066044241902/
22/03/2024

https://www.facebook.com/61557257083202/posts/122112066044241902/

*🔥🔥 கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா:*

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

இதனை தொடர்ந்து 10ம் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 12ம் தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், ஏப்ரல் 17ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலாவும்
21ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாயம் நடைபெறுகிறது.

22ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் மாலை இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 24ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

https://www.facebook.com/61557257083202/posts/122110175138241902/?app=fbl
20/03/2024

https://www.facebook.com/61557257083202/posts/122110175138241902/?app=fbl

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா ஏப்ரல் 9 -2024 தொடங்குகிறது

அனைத்து பெண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 பெண் உரிமைகள்!  பெண்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க இந்தியாவ...
08/03/2023

அனைத்து பெண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 பெண் உரிமைகள்! பெண்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க இந்தியாவில் பல சட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு உரிமைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அவர்களின் மேம்பாட்டிற்காக செயல்படும் அத்தகைய 5 உரிமைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. சம ஊதிய சட்டம், 1976 : உலகம் முழுவதும் ஊதிய ஏற்றத்தாழ்வு என்ற பிரச்சனையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். கூலி வேலையில் தொடங்கி பல்வேறு வேலைகளிலும் இந்த ஊதிய பிரச்சனைகள் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியத்தை உறுதி செய்யும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 2. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு), 2013 : இந்தச் சட்டத்தின்படி, பணியிடத்தில் ஐந்து வகையான நடத்தைகள் பாலியல் துன்புறுத்தலாக கருதப்படுகின்றன. உடல் ரீதியான தொடர்பு, பாலியல் விருப்பங்களுக்கான கோரிக்கை அல்லது பாலினவாத கருத்துக்களை பேசுதல், ஆபாச படங்களை காட்டுதல் மற்றும் விரும்பத்தகாத உடல், வாய்மொழி அல்லது வாய்மொழி அல்லாத பாலியல் நடத்தை ஆகியவற்றிற்கு தண்டனை வழங்கப்படுகிறது. 3. இந்திய விவாகரத்து சட்டம், 2001 : திருமணமான அல்லது திருமணம் செய்யத் திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய சட்டம். 2001ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் விவகாரத்து பெறுவதை எளிமையாக்குகிறது. இந்து திருமண சட்டம் 1995 பிரிவு 13பி-டின் படி ஆணும், பெண்ணும் பரஸ்பரம் விவாகரத்து கோரினால், அவர்கள் கட்டாயம் ஓராண்டு சேர்ந்து வாழ்த்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்திய விவாகரத்து சட்டம் வழக்கின் சூழலுக்கு ஏற்ப ஓராண்டுகள் இணைந்து வாழாத தம்பதிக்கும் விவாகரத்து வழங்க அனுமதி அளிக்கிறது 4. கர்ப்பத்தின் மருத்துவ முடிவு சட்டம், 1971 : இந்தியாவில் கருக்கலைப்பை சில நேரங்களில் சட்ட ரீதியாக செய்யலாம் . கர்ப்பத்தின் மருத்துவ முடிவு சட்டம் 1971 படி., சட்டரீதியான கருக்கலைப்புகள் சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே செய்யப்படுகின்றன. கர்ப்பத்தின் தொடர்ச்சியானது தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடல் அல்லது மன ஆரோக்கியத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் ஏதேனும் கடுமையான வன்புணர்வு, பாலியல் வன்கொடுமை அல்லது கற்பழிப்பு உள்ளிட்டவை காரணமாக உருவாகும் கர்ப்பங்களை கலைக்க உதவுகிறது.

கடல் பல கடந்து,படை பல நடத்தி,இமயம் வென்று,ஈழம் அடைந்து,கலிங்கம் வீழ்த்திகடாரம் கொண்டமாபெரும் பேரரசர் #ஸ்ரீராஜராஜ_சோழனின்...
02/11/2022

கடல் பல கடந்து,
படை பல நடத்தி,
இமயம் வென்று,
ஈழம் அடைந்து,
கலிங்கம் வீழ்த்தி
கடாரம் கொண்ட
மாபெரும் பேரரசர்

#ஸ்ரீராஜராஜ_சோழனின்
1037-வது ிழா

1000 ஆண்டுகளை கடந்து
கம்பீரமாக நிற்கும் நமது
#தஞ்சை_பெரிய_கோவிலை கட்டிய #சோழ_மன்னன்_ராஜராஜ_
#சோழனின்_அகவை_திருநாள்
புகழ் வணக்கம்🙏🙏

*💥சவாலில் வென்று ஒரு நாள் தலைமையாசிரியரான மாணவி* !விழுப்புரம் திரு.வி.க. வீதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப...
28/10/2022

*💥சவாலில் வென்று ஒரு நாள் தலைமையாசிரியரான மாணவி* !

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சசிகலா காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்பு பள்ளியில் நடந்த இறைவணக்க கூட்டத்தின்போது, காலாண்டு தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று காத்திருப்பதாகவும் மாணவிகள் அனைவரும் நல்லமுறையில் படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன் பேரில் மாணவிகள் காலாண்டு தேர்விற்கு போட்டி போட்டு கொண்டு தயாராகி தேர்வு எழுதிய நிலையில், காலாண்டு தேர்வில் 12ம் வகுப்பில் 600-க்கு 581 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி எஸ்.லோகிதாவை வந்துள்ளார்.

இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் மாணவியை அமர வைத்து அவருக்கு கிரீடம் சூட்டி ஒரு நாள் தலைமை ஆசிரியர் பதவி வழங்கி அழகு பார்த்துள்ளனர்.💐💐💐

அணைவரும் வருக இறையருள் பெறுக
08/06/2022

அணைவரும் வருக இறையருள் பெறுக

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் ஒன்றான திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் ஆலய மகா ...
27/05/2022

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் ஒன்றான திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக அழைப்பிதழ் அனைவரும் வருக இறையருள் பெறுக ஓம் நமசிவாய வாழ்க

13/05/2022

https://youtu.be/6ScOzKHM5q0 #உலகின்_மிக_உயரமான 146 #அடி #கொண்ட_ஶ்ரீ_முத்துமலை_முருகன் #சிலை, #திருக்கோவில்

#சேலம் - #சென்னை_நான்கு_வழி #சாலை , #புத்திரகவுண்டன்பாளையம் ( ஆத்தூர்)

மிக பிரம்மாண்டமான, ஆச்சரியங்கள் நிறைந்த, பிரம்மிப்பூட்டும் ஸ்ரீ முத்துமலை முருகன் சிலை மிகவும் அதிசயமானதே...

👉 முருகனின் திருமுகத்தை சில அடி தூரத்தில் நின்று பார்த்து தரிசிக்க லிப்ட் வசதி

👉 முருகனின் வயிற்றுப்பகுதியில் அனைவரும் அமர்ந்து தியானம் செய்ய தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது

👉 முருகனின் வயிற்றுப்பகுதியில் உள்புறமாக இருந்த தொப்புள் பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னல் மூலம் பார்த்தால் மலைப்பகுதியில் உள்ள மலைகளில் முருகனின் திரு உருவம் போன்றே சிறப்பாக தெரியும்படி அமைத்துள்ளனர்.

👉 முருகனின் திருவுருவச்சிலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள colour paints பத்து வருடத்திற்கு பெயிண்ட் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளனர்

👉 2014 ல் கோயில் கட்டுவதற்கு, சிலை அமைப்பதற்கு திருப்பணி தொடங்கி 2022 இல் முடிவடைந்துள்ளது.

👉 மலேசியாவில் உள்ள பத்துமலை முருகனின் திரு உருவச் சிலைக்கும், சேலத்தில் அமைந்துள்ள முத்துமலை முருகன் திருவுருவச் சிலைக்கும், நிறைய வித்தியாசங்கள், அதிசயங்கள் நிறைந்து காணப்படுகின்றன

👉 திருவாரூர் ..தியாகராஜன் அவர்கள் மலேசியாவில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்துள்ளார் ..அவரே முத்துமலை முருகன் சிலையையும் வடிவமைத்துள்ளார்

👉 கோயிலை கட்ட வேண்டும் என்று தொடங்கியவர் திரு முத்து நடராஜன் அவர்கள் ..அவர் மறைவுக்கு பிறகு, அவருடைய புதல்வர் திரு ஸ்ரீதர் ஐயா அவர்கள் திருப்பணி முழுவதையும் முடித்து தற்போது பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்துள்ளார்.

Source.. ஶ்ரீதர் ஐயா அவர்கள்.
திருக்கோயில் கட்டியவர்.

🕉️🕉️நவநீதபுரம் (எ )திருவெண்ணைநல்லூர் ஸ்ரீ ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவில் 🛕🛕அஷ்டபந்தன மகா கும்பாபிஷ...
11/05/2022

🕉️🕉️நவநீதபுரம் (எ )திருவெண்ணைநல்லூர் ஸ்ரீ ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவில் 🛕🛕அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சுபகிருது வருஷம் சித்திரை மாதம் 30-ந் தேதி வெள்ளிக்கிழமை மே மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

ஸ்ரீ நவநீதபுர க்ஷேத்திரம்' - நவநீதம் என்றால் வெண்ணை .. இது திருவெண்ணைநல்லூர் - இங்குள்ள பல நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீவைகுண்டவாசப்பெருமாள் கோவில் உள்ளது

ச்ரிய பதியாய் அவாப்த சமஸ்த காமனாய் சர்வ மங்கள குண ஸ்வரூபனாய் நித்ய முக்தானு பாவணாய் நிரதிசயானந்த யுக்தனாய் எழுந்தருளியிருக்கும் சர்வேஸ்வரானாகிய பகவான், சௌண்டல்ய மஹரிஷியின் ஸ்ரீ வைகுண்ட தபஸை ஏற்று வைகுண்டத்திலிருந்து ஏள்ளியதால் வைகுண்ட வாசனாகவும், பரமபத நாதனாகவும் உற்சவமூர்த்தி பிரியோக நாதனாகவும் மேலும் க்ஷேத்ர பாலனாக நவநீதகிருஷ்ணன் எழுந்தருளியதால் நவநீதபுரம் (எ) திருவெண்ணெய்நல்லூர் மாநகரில் அனேக காலமாய் பக்தபாகவத உத்தமர்களை அருள்பாலித்துவரும் ஸ்ரீ ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் தேவஸ்தானத்தில் ஜீர்ணோத்தாரணம் செய்வித்து புனரமைத்து ஸ்ரீ ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாளுக்கு அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் பகவான் அனுகிரஹத்தாலும், ஸ்ரீஅஹோபிலமடம் ஆதீன பரம்பரை மிராஸை சேர்ந்த ஆதீன தர்மகர்த்தா 46-ம் பட்ட ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் ஸ்வாமி ஆசீர்வாதத்தாலும், ஜீயர் ஸ்வாமி நியமனப்படி நாளது மங்களகரமான சுபகிருது வருடம், சித்திரை மாதம், 30-ந் தேதி (13-05-2022)வெள்ளிக்கிழமை, ஹஸ்த நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை 8.00 மணிக்குமேல் 9.30 மணிக்குள், மிதுன லக்னத்தில் 46-ம் பட்ட ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் ஸ்வாமி முன்னிலையில் நடைபெற இருப்பதால், பக்த பாகவத உத்தமர்கள், நகர பொதுமக்கள் மற்றும் க்ராமவாசிகள் எம்பெருமானின் கிருபா கடாக்ஷத்தை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்து ஆன்மீக அன்பர்கள் உன் வருக வைகுண்டவாசப் பெருமானின் திருவருளைப் பெருக 🙏🙏

ஓம் நமோ நாராயணா 🌹🌹🌹

02/05/2022

நான் விளக்காக இருப்பேன் !
நான் படகாக இருப்பேன் !
நான் ஏணியாக இருப்பேன்!
அடுத்தவரின் துன்பத்தை துடைப்பேன்
மனநிறைவோடு வாழ்வேன் 💓💓💓

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2022 ஞாயிற்றுகிழமை  நடைபெறும்  கிராம சபை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று..தங்கள் ...
30/04/2022

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2022 ஞாயிற்றுகிழமை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று..தங்கள் கிராமத்தின் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றுவோம்...

29/04/2022

தனக்கு கிடைக்காத படிப்பை தன் பிள்ளைக்கு எப்படியாவது கொடுக்க உழைக்கும் அப்பாக்களும் கடவுள்கள் தான் 🙏🙏🙏

Address

Villupuram
605602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hi - Tech Villupuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hi - Tech Villupuram:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Villupuram

Show All

You may also like