![மலைக்கோட்டை மாநகரில் மமக-வின் விழா.மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடர்ந்து கிழக்கு மாவட்ட தலைவர் M....](https://img5.medioq.com/596/724/1028507055967241.jpg)
27/01/2025
மலைக்கோட்டை மாநகரில்
மமக-வின் விழா.
மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடர்ந்து கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மமக மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி,தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் M.A. காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி-யின் 17ஆம் ஆண்டு தொடக்கத்தை தொடர்ந்து பிப்ரவரி 07 ஆம் தேதி முதல் திருச்சி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைகள் அனைத்திலும் இரத்த தானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்,கட்சியின் சாதனைகளை கொண்டு பேனர்கள்,கல்வி உதவி,முதியோர் மற்றும் பார்வையற்றோர் இல்லங்களுக்கு உணவளித்தல்,பொதுக்கூட்டங்கள் என பலதரபட்ட நிகழ்வுகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் ஒருங்கிணைத்து நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை,அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றனர்.