விடுதலைச் சிறுத்தைகள் - செய்திகள்

விடுதலைச் சிறுத்தைகள் - செய்திகள் இப்போது நாங்கள் ஆடுகளல்ல;
சீறிப்பாயும் விடுதலைச்சிறுத்தைகள்!.

அனைத்து விடுதலைச் சிறுத்தைகள் - செய்திகள் தொடர்பான செய்தி மற்றும் புதுப்பிப்புக்கு இங்கே சே௫ங்கள் இந்த பேஜ் Like பன்னுங்க

29/05/2018

Thol.Thirumavalavan

ஸ்டெர்லைட் ஆலை மூடல்!
தமிழக அரசின் அரசாணை சந்தேகத்தை எழுப்புகிறது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~~~~
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசாணை ஒன்றை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதனடிப்படையில் அந்த ஆலைக்கு பூட்டுப் போட்டு சீல்வைக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும் ஆதாரங்களோ, காரணங்களோ குறிப்பிடப்படாமல் அது வெளியிட்டுள்ள அரசாணை நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 23.5.2018 அன்று அறிவிப்பு செய்திருந்தது. அந்த உத்தரவுக்கு தற்போது தமிழக அரசு ஒப்புதல் வழங்குவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவிர ஆலையை மூடுவதற்கு வேறு எந்த விரிவான காரணமும் அரசாணையில் இல்லை. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் எளிதாகத் தடையாணை பெற்றுவிடும். அதற்கு வழி வகுப்பதாகவே இந்த அரசாணை உள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பிலும் கூட விரிவான காரணங்களையோ ஆலையை மூடுவதற்கான ஆதாரங்களையோ அது அளிக்கவில்லை. இந்நிலையில் அதை அப்படியே ஏற்று ஒப்புதல் அளித்திருப்பது தமிழக அரசின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தான் தமிழக அரசின் நோக்கம் என்றால் அதற்கான விரிவான ஆதாரங்களைக் கொண்ட அரசாணையை அது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது ஏன்?

தமிழக அரசு தற்போது செய்திருப்பது போராட்டக்காரர்களையும் எதிர்கட்சிகளையும் திசை திருப்புவதற்காகவும், வழக்கம்போல ஸ்டெர்லைட்
ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறுவதற்கு வசதி செய்வதற்காகவுமான தந்திரம் என்றே கருதவேண்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர்- தலைவர், விசிக.

17/05/2018

Thol.Thirumavalavan

கர்நாடகாவில் ஜனநாயகப் படுகொலை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்
~~~~~~~~~
ஆட்சி அமைப்பதற்குப் போதுமான பலம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்திருந்தும் எடியூரப்பாவை முதல்வராகப் பதவி ஏற்கச் செய்ததன் மூலம் கர்நாடாகாவில் ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆட்சி அமைப்பதற்கு 112 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு 104 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணிக்கு 117 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த கூட்டணியின் தலைவராக எச்.டி.குமாரசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தன்னை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்களின் பட்டியலையும் கடிதங்களையும் ஆளுநரிடம் அவர் சமர்ப்பித்திருக்கிறார். ஆட்சி அமைப்பதற்கு அவரைத்தான் ஆளுநர் அழைத்திருக்க வேண்டும்; மாறாக எடியூரப்பாவை ஆளுநர் முதலமைச்சராக்கி இருக்கிறார். இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான குற்றமாகும்.

இந்தப் பிரச்சனையை அவசர வழக்காக ஏற்று இன்று அதிகாலை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அந்த அளவுக்கு இதற்கு முக்கியத்துவம் அளித்த உச்சநீதிமன்றத்தை நாம் பாராட்டுகிறோம். சுமார் மூன்று மணி நேரம் பொறுமையாக நீதிபதிகள் வாதங்களை கவனித்துள்ளனர். அதற்காக நன்றி சொல்கிறோம். ஆனால், எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. அது அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் பதவி ஏற்பு நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டதுதான் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருந்தாலும் தன் கண் முன்னால் அரங்கேற்றப்படும் ஒரு அவல நாடகத்தை நீதிமன்றம் தடுக்கத் தவறிவிட்டது என்பதை வேதனையோடு சுட்டிக்காட்டுகிறோம். இதே நிலை 2019 பொதுத் தேர்தலின்போதும் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறோம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை பாஜகவின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடாமல் பாதுகாப்பது அந்த கட்சிகளின் பொறுப்பு மட்டுமல்ல, கர்நாடக மக்களின் கடமையும்கூட. நாளை நடைபெறவுள்ள விசாரணையிலாவது நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கவேண்டும்.

இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்,
விசிக.

04/05/2018

Thol.Thirumavalavan

நீட் தேர்வு குளறுபடி:
நீட் தேர்வு நடத்த சி.பி.எஸ்.இ-யை அனுமதிக்கக் கூடாது
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
~~~~~~~~~~
நீட் தேர்வை நடத்தி வரும் மத்திய அரசின் கல்வி வாரியமான சிபிஎஸ்இ ஒவ்வொரு ஆண்டும் அதில் ஏராளமான குளறுபடிகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மாநிலங்களில் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலையை உருவாக்கி மாணவர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, நீட் தேர்வை நடத்துகிற பொறுப்பை சிபிஎஸ்இக்குத் தரக்கூடாது. அதற்கு தமிழகஅரசு உரியச் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தும் போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டன. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிக எளிதான வினாத்தாள் வழங்கப்பட்டது. இதனால் எழுந்தப் புகார்களின் காரணமாக நாடு முழுவதும் ஒரே விதமான வினாத்தாள் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நீட் தேர்வை நடத்துவதில் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிற்நுட்ப நிறுவனம் ஒன்றை சிபிஎஸ்இ ஈடுபடுத்தியது. அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் முறைகேடாக லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பலரை வெற்றிப்பெறச் செய்தனர் என்பது ஆதாரப்பூர்வமாக அம்பலமானது. அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த காரணங்களால் நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு நாடெங்கிலும் எழுந்தது. அதை மீறி மத்திய அரசு இந்த ஆண்டும் நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை அந்த அமைப்பிடமே கொடுத்திருக்கிறது. அதன் காரணமாகத் தான் தமிழ்நாட்டு மாணவர்கள் கேரளாவிலும் ராஜஸ்தானிலும் தேர்வு எழுதக்கூடிய அநீதி நேர்ந்திருக்கிறது.

நீட் தேர்வே கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடு. அந்த தேர்வு நடத்தப்படும் வரை அதை நடத்தும் பொறுப்பை சிபிஎஸ்இயிடம் கொடுக்கக்கூடாது. அதற்கு மாறாக மாநிலக் கல்வி வாரியங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு ஒன்றிடம் வழங்க வேண்டும். அதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழகஅரசு எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். தற்போது பிற மாநிலங்களில் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கவேண்டும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதே இதற்கு நிரந்தரமான தீர்வு. தமிழ்நாட்டில் இனிமேல் மத்திய அரசின் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்க அனுமதி வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விசிக.

30/04/2018

Thol.Thirumavalavan

வகுப்புவாதத்தை முறியடிக்க
மே தினத்தில் உறுதியேற்போம் !
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~~~~~
உலகத்தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குறிக்கும் மே தினத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகுப்புவாதத்தை முறியடிக்க மே தினத்தில் உறுதியேற்போமென அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு தொழிலாளர் உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து வருகிறது. அதன் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் காரணமாகப் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதாலும், சிறு குறு தொழில்கள் நலிவடைவதாலும் லட்சக் கணக்கானவர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன. இந்தச் சூழலில் நீண்ட நெடும் போராட்டங்களினால் வென்றெடுக்கப்பட்டத் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்.

இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு புரட்சியாளர் அம்பேத்கர் ஆற்றிய பங்கு மகத்தானது 12 மணி நேரம் வேலைசெய்யவேண்டும் என்றிருந்த நிலையை மாற்றி வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைத்தது; ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சம வேலை சம ஊதியம் என்பதைக் கொண்டுவந்தது; 1942 ஆம் ஆண்டு குறைந்தபட்ச கூலி சட்டத்தை இயற்றியது; தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது - இவையெல்லாமே இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு புரட்சியாளர் அம்பேத்கர் அளித்த கொடைகளாகும். அவர் வழியில் பயணிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவரது கருத்தியலின் தொடர்ச்சியாகவே இடதுசாரிகளோடு இணக்கமான நல்லுறவைப் பேணி வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களும் பாட்டாளி வர்க்கமும் ஒன்றிணைவதோடு மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைத்தால்தான் வகுப்புவாத பேராபத்தை முறியடிக்க முடியும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. அதற்காகப் பாடாற்ற இந்த மே தினத்தில் உறுதி ஏற்கிறோம்

இவண்
தொல்.திருமாவளவன்.
நிறுவனர் - தலைவர்,
விசிக.

21/04/2018

Thol.Thirumavalavan

24.4.2018 பனகல் மாளிகை சென்னை சைதாப்பேட்டை கவர்னர் மாளிகையை நோக்கி மாபெரும் மக்கள் பேரணி உச்சநீதிமன்றத்தின் வன்கொடுமையிலிருந்து "வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க" அழைப்பிதழ் BSPமாநில செயலாளர் K.ஆமஸ்ட்ராங் வழங்கினார்

16/04/2018
Thol.Thirumavalavan

Thol.Thirumavalavan

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ....

28/03/2018

Thol.Thirumavalavan

ஆணவக் கொலைகள்:
உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வரவேற்கிறோம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~~~~
ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

‘வயதுவந்த இருவர் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தால் அதற்கு குடும்பத்தின் அனுமதியோ, சாதி, சமூகம் ஆகியவற்றின் அனுமதியோ தேவை இல்லை’ எனத் தெளிவாகக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், ஆணவக் கொலையைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றைப் பாராளுமன்றம் இயற்றவேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது. சாதி பஞ்சாயத்துகளைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151ன் கீழ் கைதும் செய்யலாம் எனக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், கலப்பு மணத் தம்பதிகளைப் பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை உள்ளடக்கிய சிறப்புப் பிரிவையும் அந்தத் தம்பதிகள் அச்சமின்றி தங்கியிருக்க பாதுகாப்பு இல்லங்களையும் ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள்மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருப்பதை அனைவரும் அறிவோம். உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கு உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதை மறுக்கமுடியாது. எனவே உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

ஆணவக் குற்றங்களைத் தடுக்கவும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை செயல்படுத்தவும் வலியுறுத்தி அனைத்து சனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரலெழுப்புமாறு தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்

இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

08/03/2018

Thol.Thirumavalavan

மார்ச்-8, உலக மகளிர் நாள்
~~~~~~~~~
பெண்களும் அர்ச்சகராகச் சட்டம் கோரி சேலத்தில் மார்ச் 10 இல் மகளிர்
மாநாடு !
~~~~~~~~~~
தேசம், மதம், சாதி, மொழி, இனம் போன்ற அனைத்து வரம்புகளையும் கடந்து உலகம் முழுவதும் பெண்கள் ஒடுக்கப்பட்டு நீண்ட நெடுங்காலமாக உரிமைகள் இழந்து உழலும் அவலம் இன்னும் தொடர்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலதிகாரம் போன்றவற்றில் உயர்வடைந்துள்ளனர் என்றாலும் மிகப் பெரும்பான்மையான அளவில் புறக்கணிக்கப்படும் நிலையே நடைமுறையாகவுள்ளது. அதற்கு இங்கே நிறுவப்பட்டுள்ள ஆணாதிக்கமும் அதனைச் சார்ந்த கோட்பாடுகளுமே காரணமாகும்.

அத்தகைய கோட்பாடுகளுக்கு எதிரான ஒரு கோட்பாடு தான் ‘சனநாயகம்’ என்பதாகும். சனநாயகம் என்னும் இக்கோட்பாட்டின் அடிப்படையில்தான் மகளிர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் மகளிர் எழுச்சியும் உலக அளவில் உருவாகியுள்ளது. அதன்விளைவாகவே அனைத்துலக மகளிர்நாள் கொண்டாடும் சூழலும் மலர்ந்துள்ளது.

இந்நாளில் மகளிருக்கு வாழ்த்துச் சொல்வது மட்டுமே கடமையல்ல. மகளிர் யாவரும் கல்விபெற, வேலைவாய்ப்புப் பெற, அரசியலதிகாரத்தைப் பெற ஆண்கள் எவ்வகையிலும் இடையூறாக இல்லாமல் அவர்களுக்கு ஊக்கமளிப்பவர்களாக, ஒத்துழைப்பவர்களாக செயல்பட உறுதியேற்க வேண்டும்.

அப்போதுதான் மகளிர்க்கு எதிரான ஒடுக்குமுறைகளைத் தடுக்கமுடியும். குடும்ப வன்முறைகள், ஆணவக்கொலைகள் போன்றவற்றிலிருந்து மகளிர் விடுபடமுடியும். மகளிர் மேம்பாடு என்பது இவ்வாறான கொடுமைகளிலிருந்து விடுபடுவதன்மூலமே உறுதிப்படுத்தப்படும் என்பதைச் சுட்டிக்காட்டி, உழைக்கும் மகளிர் யாவருக்கும், மகளிர் உரிமைகளுக்காகப் போராடும் ஆண்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எமது மகளிர்தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்துடன், உலகமகளிர் நாளை (மார்ச்8)முன்னிட்டு விடுதலைச்சிறுத்தைகளின் மகளிர் அணியான மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில், வரும் மார்ச் 10 அன்று சேலம் மாநகரில் “பெண்களும் அர்ச்சகராகச் சட்டம்” வேண்டுமென வலியுறுத்தி, “ மகளிர் மாநாடு “ ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்வதுடன், இம்மாநாட்டில் மகளிர் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம் .

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விசிக.

29/01/2018
Thol.Thirumavalavan

Thol.Thirumavalavan

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் நடைபெறும் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் ....

29/01/2018

Thol.Thirumavalavan

பேருந்து கட்டண உயர்வை முழுமையாகத் திரும்ப பெற வலியுறுத்தி சைதாபேட்டையில் தற்போது மறியல் போராட்டம் நடத்தி கைதாகி ஒய்எம்சிஎ திடலில்...

27/01/2018
Thol.Thirumavalavan

Thol.Thirumavalavan

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் .....

16/01/2018

Thol.Thirumavalavan

தோழர் ஜிக்னேஷ்மேவானியுடன் கலந்துரையாடல்..

14/01/2018

சொந்த மண்ணில்
30 ஆண்டுகளுக்கு பிறகு
தை திருநாளை கொண்டாடியபோது..

08/01/2018

Thol.Thirumavalavan

போலி வாக்குறுதிகள்! பொய்யான தகவல்கள் !!
ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~~~~
புதிய ஆளுநரின் உரை போலி வாக்குறுதிகளும், பொய்யான தகவல்களும் கொண்டதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில் ‘ஏமாற்றம் அளிக்கும் உரை’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட்டு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சட்டப்பேரவையில் ஆற்றிய உரை மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் வணிகர்கள் மட்டுமின்றி, வருவாய் குறைந்து மாநில அரசும் விழிபிதுங்கி நிற்கும் வேளையில் அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக ஆளுநர் பாராட்டியிருப்பது வெந்த புண்ணில் விரல்விட்டு ஆட்டுவதைப்போல இருக்கிறது.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைத் தமிழக அரசு முடிவுக்குக் கொண்டுவராமல் இழுத்தடிப்பதால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் சொல்லமுடியாத துன்பத்துக்கு ஆளாகிவருகின்றனர். பல மாதங்களாக நீடித்துவரும் அவர்களது பிரச்சனை குறித்து ஆளுநர் மௌனம் சாதித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு முதலானவை குறித்து வழக்கம்போல சடங்குத்தனமான கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. படிப்படியாக டாஸ்மாக கடைகள் மூடப்படும் என மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. அதைப்பற்றி ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நிறுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சரே அறிவித்துவிட்ட நிலையில் இன்னும் தேடும் பணி நடப்பதாக ஆளுநர் குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதுபோலவே தமிழக மீனவர்கள்மீதான் இலங்கைக் கடற்படையின் தாக்குதல் குறைந்துவிட்டதாகம் கூறப்பட்டுள்ளது. உண்மைக்கு மாறான இத்தகைய தகவல்களை அவையில் ஆளுநர் தெரிவிப்பது அவை மரபை மீறிய செயலாகாதா என்பதை பேரவைத் தலைவர் விளக்கவேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிப்பதைப்பற்றி ஆளுநர் உரையில் எதுவுமே இல்லை. மாறாக அங்கே பிரதமர் வந்து பார்வையிட்டதைப் பாராட்டியிருக்கிறார்.

மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு நன்றி சொல்லவும், பிரதமரைப் பாராட்டவுமே இந்த உரையை ஆளுநர் பயன்படுத்திக்கொண்டுள்ளார். அத்துடன் செல்வி ஜெயலலிதா அறிவித்த மதுவிலக்கு திட்டத்தைப் புறக்கணித்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற கேள்வியே எழுகிறது.

ஒட்டுமொத்தத்தில் போலி வாக்குறுதிகளும் பொய்த் தகவல்களும் கொண்ட பயனற்ற உரையாகவே ஆளுநர் உரை அமைந்துள்ளது.

இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விசிக.

13/12/2017
Thol.Thirumavalavan

Thol.Thirumavalavan

குமரி மாவட்டம் நாகர்கோவில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ....

10/12/2017
Thol.Thirumavalavan

Thol.Thirumavalavan

தற்போது வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 'வேலூர் மாவட்டத்தில் எழுச்சித்தமிழர் கால் பதித்த கால் நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம்'

04/12/2017

Thol.Thirumavalavan

ஒகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று புயல் பாதித்த இடங்களுக்குச் சென்று மக்களை சந்தித்த போது...

04/12/2017
Thol.Thirumavalavan

Thol.Thirumavalavan

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்து ஆறுதல் கூறிய போது...

04/12/2017

Thol.Thirumavalavan

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊட்டு, வாழ்மடம்,கருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்து ஆறுதல் கூறிய போது...

Address

22/6 Type1 Camp1 Thoothukudi-6
Tuticorin(Thoothukudi)
628006

Telephone

7667450228

Website

Alerts

Be the first to know and let us send you an email when விடுதலைச் சிறுத்தைகள் - செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to விடுதலைச் சிறுத்தைகள் - செய்திகள்:

Share

Category

Nearby media companies